.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label த.மு.மு.க. Show all posts
Showing posts with label த.மு.மு.க. Show all posts

Tuesday, June 22, 2010

600 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்க... தமுமுக கோரிக்கை


தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

தமிழக அரசின் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் ஜூன் 27 வரை ஐந்து நாட்கள் கோவையில் நடைபெற உள்ள நிலையில் மிகமுக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு வைக்கின்றோம்.

தமிழக சிறைகளில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.

1968ல் அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின்போது ஆயுள் தண்டனைக் கைதிகள் முன்விடுதலை செய்யப்பட்டார்கள்.

அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இப்போது நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி 51 முஸ்லிம் கைதிகள் உட்பட 600 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டுமென கோருகிறோம்.

அரசு சார்பில் விமர்சையோடு நடைபெறும் செம்மொழி மாநாட்டு மூலமாக இவர்கள் விடுதலையானால், மனிதநேயம் கொண்டோர் அனைவரும் தமிழக முதல்வரை வாழ்த்துவார்கள் என்பதையும் இத்தருணத்தில் கூறிக்கொள்கிறோம்.

Friday, May 14, 2010

கணினி தமிழ் முன்னோடி உமர் தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் அளிக்க வேண்டும் தமுமுக கோரிக்கை

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கணினி தமிழின் முன்னோடியான உமர் தம்பிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டி தமிழக முதல்வர் அவர்களுக்கு தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கடிதம் எழுதியுள்ளார். அதன் விபரம் வருமாறு.


உமர் தம்பி
ஓலைச் சுவடிகளில் உறைந்து கிடந்த தமிழ், பின் படிப்படியாக புத்தகங்களாக, பின்னர் கணினி மூலம் உலகெங்கும் வியாபித்திருக்கிறது. அதற்காக உழைத்த உமர் தம்பிக்காக இக்கோரிக்கை இக்கடிதம்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராமப்பட்டிணத்தில் ஜீன் 15, 1953ல் அப்துல் ஹமீது, ரொக்கையாவுக்கு மகனாய் பிறந்தவர் உமர் தம்பி.

முறையாக எந்த கல்லூரியிலும் கணினி தொழில் நுட்பத்தை பயிலாத உமர் அவர்கள், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார். 2001 ஆம் ஆண்டு துபாயில் இருந்து பணியில் விருப்ப ஓய்வு பெற்று தாயகம் வந்தார். தமிழகம் வந்து மென்பொருட்கள் தயாரித்துக் கொடுக்கும் பணியை செய்தார். பின்னர் தமிழ் கூறும் நல்லுலகம் கணினியிலும் தடம் பதிக்க ஆரம்பித்த அக்காலத்தில் தன்னையும் அதனுடன் இணைத்துக் கொண்டார்.

தேனீ இயங்கு எழுத்துரு

உலாவிகளில் ((Browser) செயல்படும் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பமான (WEFT) வெஃப்ட்-ஐ முதன் முதலாகத் தமிழில் அறிமுகம் செய்தார். அதைக் கொண்டு, தமிழ் எழுத்துரு கணினியில் நிறுவப்படாத போதும் கூடத் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களால் அமைந்த இணையத்தளங்களை மைக்ரோசாஃப்ட் உலாவிகளில் படிக்கும் வசதியை ஏற்படுத்த முடிந்தது.

தேனீ எழுத்துருவை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றி பல்வேறு இணையத் தளங்களில் அதை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார். இன்று தமிழிணைய உலகில் அனேகம் பேர் அந்த எழுத்துருவைப் பயன்படுத்தி வலைப்பதிவு செய்து வருகிறார்கள்.

உதாரணத்திற்கு www.murasoli.in முரசொலி இணையதளத்தை கணிணியில் வாசிப்பதென்றால் முரசொலி இணையதளத்தில் நிறுவப்பட்டிருக்கும் (Tamil Font) தமிழ் எழுத்துருவை பதிவிறக்கம் செய்த பின்னரே வாசிக்க முடியும். ஆனால் உமருடைய தேனி தமிழ் எழுத்துருவை பயன்படுத்தி எந்த இணையதளமாக இருந்தாலும் தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்தாமல் வாசிக்கலாம்.

தமிழ் இணைய அகராதி

கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து தமிழ் இணைய அகராதியைக் கொண்டு வந்தார் உமர் தம்பி.

உமர் தம்பி உருவாக்கிய செயலிகளும் கருவிகளும் :
1. AWC Phonetic Unicode Writer
2. Online RSS creator – can be used in offline as well
3. RSS செய்தியோடை உருவாக்கி
4. எண்களாக தெரியும் ஒருங்குறி எழுத்துக்களை படிப்பதற்கான செயலி
5. தமிழை ASCII வடிவில் டேட்டாபேஸில் சேமிக்கும் கருவி
6. எல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி
7. ஒருங்குறி மாற்றி
8. க்னூ (Linex) பொதுமக்கள் உரிம அடிப்படையில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள்
9. தேனீ ஒருங்குறி எழுத்துரு
10. வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு
11. வைகை இயங்கு எழுத்துரு
12. தமிழ் மின்னஞ்சல்
13. தமிழ் ஒருங்குறி Toolbar for உலாவி
14. Uniwriter (உலாவியில் Tools மெனுவில் சேர்க்கப்படும்)
15. தமிழா-எ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார்.

உமருக்கு ஏன் அங்கீகாரம்

சொற்ப பலன்களைக் கொண்ட மென்பொருள் நிரலிகளை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் யுனிகோட் எழுத்துருக்களும், பல மென்பொருள் நிரலிகளையும் உருவாக்கி எவ்வித பொருளாதார எதிர்ப்பார்ப்புமின்றி பொதுப் பயன்பாட்டுக்கு வைத்தவர் உமர் தம்பி. இளம் வயதிலிருந்து தம் தாய்மொழி தமிழ் மீது நல்ல பற்றுள்ளவராக இருந்து வந்துள்ளார் உமர். உமர் மறைந்தது, 2006 ஆம் ஆண்டு ஜூலை 12. மண்ணில் மறைந்தாலும் தமிழ்க் கணினி உலகம் இருக்கும் வரை பெருங்கொடையினை அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார், உமர்.

இணையத்தில் விரைவாக தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று உமர் எடுத்த முதல் முயற்சி தான் இன்று பல வகையான தமிழ் வலைப்பூ பதிவுகளுக்கும், தமிழ் கணினி தொழில் நுட்பத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை இணையப் பயன்பாட்டாளர்களாலும் தமிழ் இணைய அறிஞர்களாலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.

கணினியில் தமிழ் மொழி அதிவிரைவில் வளர்ச்சியடைவதற்கு உமர் தம்பி போன்றவர்களின் பங்களிப்பு மிக முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது. அதுபோல் உமரின் எழுத்துருக்கள், செயலிகள், கட்டுரைகள், கருத்துப் பரிமாற்றங்கள், அறிவுரைகள் அன்றும் இன்றும் தமிழ் இணையப் பயனார்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.

உமருக்கு உரிய அங்கீகாரம் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கிடைக்கப் பெற்றால் முதலில் மகிழ்ச்சி அடையப் போவது இணையத் தமிழ் மக்கள் தான்.

உமருக்கு அங்கீகாரம் கிடைக்கப்பட்டால், அது கணினித் தமிழில் சாதனைப் படைக்க எந்த அரசாங்கத்தின் உதவியின்றி தமிழுக்காக தன்னலமற்ற சேவைகள் செய்துவரும், செய்ய துடிக்கும் எத்தனையோ உமர் தம்பிகளை இவ்வுலகம் காணும். தமிழ் இணையத்தில் தனக்கேன்று தனித்துவத்துடன் திகழும், மென்மேலும் வளர்ச்சியடையும்.

நம் தாய்மொழி தமிழ்ச் செம்மொழியாக மட்டும் இல்லாமல், அதற்கு மேலும் இவ்வுலகில் பல அங்கீகாரங்களை பெறும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

அரசு உதவியின்றி தம் தாய்மொழி தமிழின் வளர்ச்சிக்கு பாடுபட்ட உமர் தம்பி போன்ற எண்ணற்ற தன்னார்வத் தமிழ் கணினி தொண்டர்களை கண்டறியப்பட வேண்டும், அவர்களுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

உமர் தம்பி பெயரில் விருதோ அல்லது உமர் தம்பி பெயரில் தமிழில் கணினி ஆய்வு செய்வோருக்கு கல்வி உதவித் தொகையோ அல்லது கணினித் தமிழ் ஆராய்ச்சி குழுவுக்கு பெயரோ அல்லது தமிழ்க் கணினி சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு துறைக்கு உமரின் பெயரையோ சூட்டினால், அது அவருக்கு செய்யும் கௌரவமாக இருக்கும்.

கோவையில் ஜீன் 23 முதல் தொடங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடைபெறவுள்ளது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் உமர் தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க செய்ய முத்தமிழறிர் ஆகிய நீங்கள் ஆணை பிறப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இணையக்கடலில் தமிழை மிகச் சுலபமாக பயணம் செய்ய உதவியவர்களில் முன்னணியில் இருந்த உமர் தம்பிக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகாரம் தர வேண்டும் என்பதே இன்று இணையத் தமிழர்களின் விலை மதிக்க முடியாத விருப்பமாக உள்ளது.

அப்படி ஓர் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றால், பெருமையடையப் போவது உமர் தம்பியல்ல... இணையத் தமிழே! இச்சாதனைக்கு வழிவகுத்திடுமாறு மீண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேற்கண்டவாறு தமுமுக தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Thursday, April 22, 2010

''அரசு கொடுத்த பரிசு...!'' குணங்குடி அனீபா குமுறல்

கடந்த 13 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார் குணங்குடி அனீபா. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிறுவனர், பா.ம.க-வின் முன்னாள் பொருளாளர், ஜிஹாத் கமிட்டி தலைவர் என்று பல பொறுப்புகளை வகித்தவர் குணங்குடி அனீபா. ரயில் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக பூந்தமல்லி கோர்ட்டில் கடந்த வாரம் ஆஜரான அனீபாவிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

? ''13 வருட சிறை அனுபங்கள் எப்படி இருக்கு?''

''நீதிமன்றக் காவலில் எனக்கு இன்பமும் துன்பமும் சேர்ந்தே கிடைத்தன. நல்ல ஆரோக்கியமாக இருந்த நான், சிறைக்கு வந்த பிறகு கண்பார்வைக் குறைவு, ரத்தக்கொதிப்பு, இதய வலி, நீரிழிவு, முதுகுதண்டுத் தேய்மானம் என்று பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டேன். அதன் விளைவு... இப்போது ஊன்றுகோலுடன் நடமாடும் நிலை எனக்கு! சிறையில் நான் பராமரிக்கும் செடி கொடிகள்தான் எனக்கு நண்பர்கள். 33 வருடங்களுக்கு முன்பு என் திருமணம் நடந்தது. மூன்று மகன்கள், ஒரு மகள், இரண்டு பேத்திகள், ஒரு பேரனோடு எனது தாய் தந்தையரும் இருக்கிறார்கள். அவர்களோடு எனது கடைசி காலத்தை கழிக்கவேண்டும் என்பதுதான் இப்போதைய என் ஆசை!''

? ''உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் நிலை இப்போது என்ன...?''

''மறைந்த தமிழ்ப் புலவர் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் குடும்பத்தைச் சேர்ந் தவன் நான். த.மு.மு.க., பா.ம.க., ஜிஹாத் கமிட்டி என்று பொறுப்புகள்

வகித்தபோது மக்கள் பிரச்னைக்காகவும் இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டும் போராட்டங்கள் நடத்தியிருக்கிறேன். எனது சமூகப் பணிகளை விரும்பாத சிலர் தவறான தகவல்களை அரசிடம் கொடுத்தார்கள். அதைத் தொடர்ந்து கோவை குண்டு வெடிப்பை காரணம் காட்டி, ஜிஹாத் கமிட்டியை தமிழக அரசு தடை செய்தது. தேவகோட்டை அனுமந்தக்குடியில் என் மகளின் திருமணம் நடந்துகொண்டிருந்த போது, என்னை போலீஸ் கைது செய்தது. சிறையில் அடைக்கப்பட்ட பிறகு என் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நான் இன்றைக்கு சிறையில் இருப்ப தற்கு காரணமானவர்கள், பணியில் இருந்தே ஓய்வு பெற்றுவிட்டனர். அவர்கள் நேர்வழி பெற இறைவனிடம் வேண்டுகிறேன். 6.12.97-ல் நடைபெற்ற ரயில் குண்டு வெடிப்பு சதி வழக்கு தவிர, எல்லா வழக்குகளிலும் எனக்கு விடுதலை கிடைத்துள்ளது. இறைவன் சித்தம் இருந்தால் இதிலும் விடுதலை கிடைக்கும்!''

? ''நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்கிறீர்களா..?''

''வன்முறையை இஸ்லாம் ஒருபோதும் போதிக்க வில்லை. யாருடைய உயிரையும் பறிக்கவும் யாருக்கும் உரிமை கிடையாது. பல அமைப்புகளில் இருந்தபோதும், நான் துளிகூட தீவிரவாதத்தை ஆதரித்ததில்லை. நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. அதற்கு நானே ஓர் உதாரணம். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் நிரபராதி. எந்த மதத்துக்கும் நான் எதிரானவன் கிடையாது. 1987-ல் வட தமிழகத்தில் வன்னியர்களுக்கும் ஆதிதிராவிடர்களுக்கும் மோதல் ஏற்பட்டபோது, அந்தப் பகுதிக்கு சென்று அமைதி ஏற்பட பாடுபட்டேன். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியபோது, நானும் கலந்துகொண்டேன். 97-ம் ஆண்டு தென் தமிழகத்தில் சாதி மோதல் வெடித்தபோதும் அமைதிக்காகப் பாடுபட்டேன். அப்போது முதல்வர் கலைஞர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்துகொண்டு ஒற்றுமைக்காகப் பாடுபட்டவன் நான்!''

?''தற்போதைய தி.மு.க. ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''1991 முதல் 1996 வரையில் கலைஞர் தலைமையில் ஏழு கட்சிகள் கூட்டணி இருந்தபோது, அந்த கூட்டணியில் ஆலோசனைக் கூட்டம் சுமார் 25 முறை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் நான் தொடர்ந்து கலந்துகொண்டு வந்தேன். கலைஞரே என்னுடைய பெயரை சொல்லி அழைக்கும் அளவுக்கு இருந்தேன். ஆனால், அதன்பிறகு நிலைமை மாறியது. கடந்த காலங்களில் தி.மு.க. அரசால்தான் நானும் என் குடும்பமும் இஸ்லாமிய மக்களும் நேரடியாக பாதிக்கப்பட்டோம். போராளி பழனிபாபா, கோவை முஸ்லிம்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோவையில் சொத்துகள் அழிக்கப்பட்டன. தி.மு.க-வின் வளர்ச்சிக்கும் ஆட்சியில் அது அமர்வதற்கும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வந்த முஸ்லிம் களுக்கு தி.மு.க. கொடுத்த பரிசுதான் அடக்குமுறை.

எங்களின் மனவேதனை தீரவேண்டுமென்றால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மத்திய அரசில் முஸ்லிம்களுக்கு பத்து சதவிகிதமும் மாநிலத்தில் ஐந்து சதவிகிமும் இடஒதுக்கீட்டை தி.மு.க. அரசு பெற்றுத் தரவேண்டும். முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கிய கலைஞரால்தான் இதையும் செய்ய முடியும்...'' என்றவர்,

''ஜூ.வி. மூலம் அரசுக்கு ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்...'' என்றபடி இதையும் சொன்னார்-

''மத்திய-மாநில காவல் துறை விசாரணை செய்து, அந்த வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று பொதுமன்னிப்பு பொருந்தாமல் தமிழகச் சிறை களில் உள்ள கோவை பாட்ஷா உட்பட ஐம்பது முஸ்லிம்கள் மற்றும் நளினி, முருகன் உட்பட அனைத்து சமூகங்களையும் சேர்ந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் வரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையட்டி தமிழக முதல்வர் மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்ய உதவிட வேண்டும்!''

புதிய குற்றச்சாட்டுகள்...

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6-ம் தேதி திருச்சி, ஈரோடு, திருச்சூர் ரயில் நிலையங்களில் குண்டுகள் வெடித்தன. இது நடந்தது 1997-ம் ஆண்டு. இந்த வழக்கில் அனீபா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. 'விசாரணை முடிந்து கடந்த 31-ம் தேதி தீர்ப்பு கூறப்படும்' என்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அனீபாவின் வழக்கறிஞர் சிவபெருமாள், ''வழக்கின் நடைமுறைகள் எல்லாம் முடிந்து தீர்ப்பு தேதியும் குறிக்கப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போடப்பட்ட 'பொதுச் சொத்துகள் சேதம் விளைவித்தல் சட்டம்' பிரிவு 4, இந்திய ரயில்வே சட்டம் 151 ஆகிய பிரிவுகளை நீதிமன்றம் நீக்கிவிட்டு, இந்திய தண்டனை சட்டம் 109 பிரிவை புதுசாக சேர்த்துக் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டன. குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்து புதிதாக நீதிமன்றம் சேர்த்திருப்பது தவறு என்று நீதிமன்றத்திலும் வாதாடினோம். அரசு தரப்பு வழக்கறிஞர்கள்கூட எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை...'' என்றார்.


நன்றி: ஜூவி
- எம்.தமிழ்செழியன்
படங்கள்: எம்.உசேன்

Thursday, April 1, 2010

அயோத்திக்கு போனேன்! மனம் கலங்கினேன்! பாபர் மஸ்ஜித் நிலத்தில் தமுமுக தலைவர்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த வாரம் உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் கடந்த மார்ச் 19, 20 மற்றும் 21 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் 21வது பொதுக் குழுவில் அவர் கலந்து கொண்டார். பிறகு மார்ச் 22 அன்று அயோத்திக்கும் மார்ச் 23 அன்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கும் மார்ச் 24 மற்றும் 25 அன்று டெல்லிக்கும் சென்று விட்டு தமிழகம் திரும்பினார். தமுமுக தலைவர் தனது வட இந்திய பயணம் குறித்து மக்கள் உரிமைக்கு அளித்த சிறப்பு பேட்டி:

மக்கள் உரிமை: அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் 21வது பொதுக்குழு எப்படி அமைந்திருந்தது?

பேராசிரியர்: அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொது குழுக்கூட்டம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. இந்த அமர்வில் நிர்வாகிகள் தேர்வு மற்றும் புதிய உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் தனியார் சட்ட வாரியத்தின் பல்வேறு குழுக்களின் செயற்பாடுகள் குறித்த அறிக்கைகள் பற்றிய விவாதம் முதலிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த முறை முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுக்குழு லக்னோவில் உள்ள புகழ்பெற்ற தாருல் உலூம் நத்வத்துல் உலமா என்னும் நத்வா பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் நடைபெற்றது. லக்னோ நகரம் முழுவதும் இதற்காக விழா கோலம் பூண்டிருந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாரியத்தின் கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்களை வரவேற்க வரவேற்பு வளைவுகளும், தட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. நத்வாவில் உள்ள மாணவர் தங்கும் விடுதிகளில் வாரிய உறுப்பினர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனக்கு சுலைமானிய விடுதியில் அறை ஓதுக்கப்பட்டிருந்தது. ஒரு நவீன பல்கலைகழகத்திற்கு இணையாக பல்வேறு துறைகளுக்கு தனித்தனி கட்டிடங்கள், நூலகத்திற்கு என்று தனி கட்டிடம், புல்வெளித் தோட்டம், கூட்ட அரங்கம், வளாகத்தின் நடுவில் கம்பீரமாக பள்ளிவாசல் என்று பிரமாண்டமாக இருந்தது நூற்றாண்டு கண்ட நத்வா வளாகம். நத்வா மாணவர்கள் மிக இனிமையாக சேவை மனப்பான்மையுடன் விருந்தினர்களை உபசரித்தார்கள்.

கேள்வி: அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?
பதில்: இந்த கூட்டத்தில் மத்திய அரசு வகுப்பு கலவர தடுப்புச் சட்டம் 2009-ஐ தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது. லிபரான் ஆணைய அறிக்கை தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நடவடிக்கை அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளுக்கு வகுப்பு கலவர தடுப்புச் சட்டத்தின் மூலம் பரிந்துரை காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டம் காவல்துறைக்கும், மாநில அரசுக்கும் மிதமிஞ்சிய அதிகாரம் அளிக்கும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. இச்சட்டம் இல்லாத நிலையிலேயே குஜராத் கலவரம் நடைபெற்றிருக்கும் போது இச்சட்டம் அமுலுக்கு வந்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இச்சட்டத்தை தற்போதைய வடிவத்தில் கொண்டு வரவேண்டாம் என்று பிரதமரிடம் வலியுறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் புரிந்து வரும் அராஜகத்தை தடுத்து நிறுத்த இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மாணிக்கப்பட்டது. இஸ்ரேலின் உளவுப்படையான மோசாதுடன் இந்திய உளவுப்பிரிவு நெருங்கிய உறவு கொண்டிருப்பதையும், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்த விஷயத்தில் இந்தியா அடிபணிவதும் கண்டிக்கப்பட்டது. நேரு காலத்திய வெளியுறவு கொள்கையின் அடிப்படையில் இஸ்ரேலுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

லிபரான் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ள 68 நபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மாணிக்கப்பட்டது. பாபரி மஸ்ஜித் தொடர்பான வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரிப்பது ஒட்டுமொத்த நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. அப்பாவி இளைஞர்கள் சிறையில் வாடுவதும், போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப் படுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தீர்மானிக் கப்பட்டது.

திருமணங்களின் போது ஆடம்பரங்களை தவிர்த்து எளிமையாக நடத்த வேண்டும் என்றும் வரதட்சணை இல்லாமல் திருமணங்கள் நடத்தப்பட வேண்டும் என்று முஸ்லிம் சமூகத்தை அறிவுறுத்தியும், சிறிய பிணக்கு களுக்காக திருமணத்தை முறித்துக் கொள்வதை தவிர்க்குமாறும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இந்த பொது அமர்வின் போது 5 பெண்கள் உட்பட 50 பேர் கொண்ட வாரியத்தின் செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.எம்.ஹாசிமும் இவர்களில் ஒருவர்.

இந்த அமர்வின் போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள கட்டாய திருமண பதிவுச் சட்டம் குறித்தும் அது குறித்த தமிழக முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பு குறித்தும், இது தொடர்பாக தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகனுடன் நடத்திய பேச்சு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பொது அமர்வின் தீர்மானங்களை விளக்கி லக்னோ ஈத்காவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள்.

கேள்வி: தங்களின் அயோத்தி பயணம் குறித்து சொல்லுங்களேன்...!

பேராசிரியர்: பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பு 1980-களில் சென்றிருக்கிறேன். இப்போது மீண்டும் இடிப்பிற்கு பிறகு சென்றேன். பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் உள்ளது உள்ளபடியே உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக நீதிமன்றம் நியமித்துள்ளவர்களில் ஒருவரான பைசாபாத்தைச் சேர்ந்த காலிக் அஹ்மது என்னை ‘சர்ச்சைக்குரிய” பகுதிக்கு அழைத்துச் சென்றார். அவர் நான் வருவது குறித்து முன்கூட்டியே காவல்துறைக்கு தகவல் கொடுத்திருந்தார். செல் போன், கேமரா, பேனா, காகிதம் என்று எதுவும் எடுத்துச் செல்லாமல் சென்றோம்.

பல இடங்களில் பலத்த சோதனைக்குப் பிறகு இரும்பு வேலிகளுக்கு நடுவே நடந்து 450 ஆண்டு காலம் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமாக இருந்த பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தை நெஞ்சில் பெரும் துயரத்தை சுமந்தவனாக பார்த்தேன். நீதிமன்றத் தீர்ப்பு விரைவில் வர உள்ளது என்றும் பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை நடத்தும் வழக்குரைஞர் ஜபர்யாப் ஜெய்லானி லக்னோவில் என்னிடம் சொல்லியிருந்தார்.

தீர்ப்பு சாதகமாக அமைந்து அடுத்த முறை பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ஏக இறைவனை தொழும் வாய்ப்பு எனக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்த வண்ணமாக அந்த இடத்தை பார்த்தேன். நானும் என்னுடன் லக்னோவில் இருந்து வந்த எனது நண்பர் மட்டுமே அங்கு தாடியுடன் இருந்தோம். பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தில் அமைந்திருந்த தற்காலிக கோயில் அருகே நடுநிலையுடன் இருக்க வேண்டிய காவல்துறையினர் ராம் லாலாவை தரிசனம் செய்யுங்கள் என்று அனைவரையும் பார்த்து (எங்களையும் சேர்த்து தான்) கூறிக் கொண்டிருந்தனர். மொத்த இடத்தையும் பார்ப்பதற்கு அரை மணிநேரம் எடுத்தது. தற்போது போடப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு டிசம்பர் 6, 1992-க்கு முன்பு போடப்பட்டிருந்தால் பள்ளிவாசலை காப்பாற்றியிருக்கலாம். குதிரைகள் லாயத்தை விட்டு தப்பிய பிறகு லாயத்தை பூட்டி என்ன பலன் என்ற சிந்தனை திரும்ப திரும்ப வந்துக் கொண்டிருந்தது. அயோத்தி பண்டையக் காலங்களில் புத்தர்களின் வழிப்பாட்டு தலமாக, இந்துக்களின் வழிப்பாட்டுத் தலமாக இருந்தது போல் அது முஸ்லிம்களின் நகரமாக இருந்தது என்பதற்கான தடயங்கள் அங்கு ஏராளமாக உள்ளதை நேரில் பார்க்க முடிந்தது. அயோத்தியை சுற்றிய 12 கி.மீ. சுற்றுப்பரப்பில் பல பள்ளிவாசல்கள் உள்ளன. இது தவிர இரட்டை நகரமான பைசாபாத் மற்றும் அயோத்தியை இணைக்கும் சாலையின் இரு புறத்திலும் ஏராளமான பள்ளிவாசல்களும் முஸ்லிம் அடக்கத்தலங்ளையும் பார்க்க முடிந்தது.

அயோத்தியின் மக்கள் தொகையான ஒன்னரை லட்சத்தில் 6 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் ஆவர். இங்கு 35 பள்ளிவாசல்கள் உள்ளன. இவற்றில் ஐவேளை தொழுகையும் நடைபெற்று வருகின்றது. பாபரி மஸ்ஜிதை சுற்றி அரசு கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தை சுற்றியும் பள்ளிவாசல்களை பார்க்க முடிந்தது. அனுமன்கிரி கோயிலிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் 40 ஏக்கர் பரப்பளவு உள்ள முஸ்லிம் அடக்கத்தலம் உள்ளது. இங்கு 12 அடி நீளமுள்ள ஒரு அடக்கவிடம் (கப்ரு) உள்ளது. இது முதல் மனிதர் நபி ஆதமிற்கு பிறகு வந்த நபி ஷீத் அவர்களுடையது என்று உள்ளூர் முஸ்லிம்கள் நம்பி வருகின்றனர். (இங்கு படம் எடுத்துக் கொண்டோம்)

இன்னும் பல அடக்கவிடங்கள் உள்ளன. பாரசீக மொழியிலான கல்வெட்டுகளும் அதில் உள்ளன. இவையெல்லாம் அயோத்தி முஸ்லிம்களின் நகரமாகவும் தொன்மை தொட்டு விளங்கி யுள்ளது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளன.

இறுதியாக பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கின் முதல் மனுதாரர் ஹாசிம் அன்சாரியை அவரது இல்லத்தில் சந்தித்தேன். இவருக்கு வயது 92. பாபரி மஸ்ஜித் பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இவர் தான் அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி. (பள்ளிவாசல் நிர்வாக குழு தலைவர்). 1949ம் ஆண்டு டிசம்பர் 22 வரை பாபர் பள்ளிவாசலில் இரவு தொழுகை வரை நடை பெற்றது. பிறகு நள்ளிரவில் தான் பள்ளிவாசலுக்குள் ஸ்ரீராமர், லட்சுமணர், சீதை, ஹனுமான் சிலைகள் வைக்கப்பட்டன. அன்று முதல் இவர் வழக்காடிவருகிறார். காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடுகிறார்.

காங்கிரஸ் ஆதரவு முஸ்லிம் தலைவர்களையும் இவர் வன்மையாக கண்டித்தார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது பூட்டா சிங் பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுக்குமாறும் அதற்காக 3 கோடி ரூபாயும், பெட்ரோல் பங்கும், இவரது மகனுக்கு அரசு வேலையும் தருவதாக ஆசைவார்த்தை காட்டியதாகவும், ‘எடு பழைய செருப்பை' என்று கூறி அவரை விரட்டியதையும் ஆவேசத்துடன் என்னிடம் பகிர்ந்து கொண்டார். தென் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் பாபரி பள்ளிவாசலுக்காக காட்டும் ஆர்வம் தன்னை நெகிழ வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

என்னை அயோத்திக்கு அழைத்துச் சென்ற நண்பர் காலிக்கிடம் என்னைப் போல் சாதாரண முஸ்லிம்கள் பாபரி வளாகத்திற்குள் சென்று பார்க்கலாமா என்று கேட்டேன். அது இயலாத காரியம் என்று அவர் பதிலளித்தார். முஸ்லிம்கள் வந்தால் அவர்கள் கடுமையாக சோதிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டு பிறகு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார். மேலும் தென் இந்திய முஸ்லிம் தலைவர்களில் நீங்கள் தான் முதன் முதலாக இங்கே உள்ளே சென்று பார்த்து உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.

பாபரி மஸ்ஜித் பற்றியும் அயோத்திப் பற்றியும் ஆய்வு செய் வதற்காக ஒரு ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார் நண்பர் காலிக். பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்கள் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அயோத்தியில் வக்ப் செய்யப்பட்ட இடங்களை, கப்ருஸ் தான்களை சில சுயநலமிகள் விலைக்கு விற்கும் அவலமும் நடைபெற்று வருகின்றது என்று அவர் தெரிவித்தார். என்னுடன் லக்னோவில் இருந்து கார் ஒட்டி வந்த இளைஞர் சில மாதங்களுக்கு முன்பு தான் பார்த்தபோது கப்ருஸ்தானாக இருந்த இடம், தற்போது கட்டிடமாக கட்டப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.

இறுதியாக அயோத்தி ரயில் நிலையத்தில் அலிகர் செல்வதற்காக கைபியத் எக்ஸ்பிரஸ் பிடிப்பதற்காக நின்ற போது லக்னோவில் இருந்து என்னுடன் வந்திருந்த எனது நண்பர் டாக்டர் அனீஸ் சொன்ன சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் வளாகத்தில் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கரசேவை என்ற பெயரில் பாபர் பள்ளிவாசலை இடிப்பதற்கு கரசேவகர்கள் ரெயில் மூலம் தான் அயோத்திக்கு வந்தார்கள். அப்போது நரசிம்மராவ் அமைச்சரவையில் ரெயில்வே அமைச்சராக இருந்தவர் சி.கே. ஜாபர் ஷரீப். இவர் அயோத்திக்கு செல்லும் ரெயில்களை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிறுத்தியிருந்தால் ஆயிரக்கணக்கில் கரசேவகர்கள் அயோத்திக்கு வந்திருக்க முடியாது.

இதேபோல் அவர் சொன்ன இன்னொரு செய்தி என்னை உறைய வைத்தது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அன்று பிரதமரை சந்தித்த குழுவில் நானும் இடம் பெற்றேன். அதற்கு முன்பு சுலைமான் சேட் சாஹிப் அவர்கள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விடுவோம் என்று ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். ஆனால் அவரது ஆலோசனையை சையத் சகாபுதீன், ஜாபர் ஷரீப் உள்ளிட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் கேட்க மறுத்துவிட்டார்கள். இதைக் கேட்ட நான், சமூக நலனை விட பதவி பெரிது என்று இந்த இருவரும் எண்ணியதால் அதன் பிறகு அவர்கள் எம்.பி.களாக ஆகவே முடியவில்லை என்று நான் சொல்லிக் கொண்டிருந்த போது கைபியத் எக்ஸ்பிரஸ் நிலையத்திற்குள் வந்து விட்டது.


கேள்வி: அலிகர் பயணம் எப்படி அமைந்திருந்தது?
பேராசிரியர்: அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் எனது நண்பர்கள் பலரை சந்தித்தேன். அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் பி.கே. அப்துல் அஜீஸ் அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு பதிலளிக்கும் போது நாங்கள் சேர்ப்பதற்கு தயார்.
இந்த முறை தமிழ் நாளிதழ்களில் கூட விளம்பரங்கள் பிரசுரித்திருந்தோம். ஆனால் தமிழக மாணவர்கள் விண்ணப்பம் செய்வதில்லை என்றார். மருத்துவம், பொறியியல், மேலாண்மையியல், இதழியல் உள்பட பல்வேறு பாடங்களை குறைந்த செலவில் படிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் தமிழக மாணவர்கள் இங்கே வருவதில்லை என்று அங்கு சந்தித்த காரைக்காலை சேர்ந்த முனை வர் பட்ட ஆய்வு மாணவர் ஜக்கரியா குறைபட்டுக் கொண்டார். இவர் இங்கு முதுகலை அரபி படித்து விட்டு தற்போது இஸ்லாமிய அறிவியல் துறையில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துக் கொண்டிருக்கிறார். அன்று மாலை அலிகர் ஜமாஅத்தே இஸ்லாமி வட்டம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் உரையாற்றினேன். தமிழகத்தில் தமுமுக ஆற்றி வரும் பணிகளை அறிந்து அலிகர் மக்கள் வியந்து போனார்கள்.

கேள்வி: டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு எப்படி இருந்தது?

பேராசிரியர்: சிறுபான்மை அமைச்சக கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் உள்ள தமிழக செய்தியாளர்களை தமிழக இல்லத்தில் சந்தித்தேன். அப்போது அவர்களிடம் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அவசியம் என்ற தமுமுகவின் நிலைப்பாட்டை எடுத்துச் சொன்னேன். சமூக நீதிக்கு குரல் கொடுக்க வேண்டிய திராவிட கட்சிகள் தங்கள் கடமையை மறந்து விட்ட நிலையில் வட இந்தியாவில் சமூக நீதிக்காக குரல் கொடுத்து வரும் லாலு பிரசாத் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோரை சென்னைக்கு அழைத்து பெரும் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதையும் அதற்காக நான் டெல்லியில் நடத்திய சந்திப்புகளையும் பகிர்ந்து கொண்டேன். அப்போது ஒரு முக்கிய தமிழ் நாளிதழின் டெல்லி செய்தியாளர் மார்ச் 7, 2007ல் நீங்கள் டெல்லியில் நடத்திய பேரணியில் காணப்பட்டது போல் மக்கள் திரளும் ஒழுங்கும் நிறைந்த பேரணியை நான் இதுவரை பார்க்கவில்லை என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.

சமீபத்தில் விலைவாசி உயர்வு தொடர்பாக இடதுசாரிகள் நடத்திய பேரணியையும், சில முஸ்லிம் அமைப்புகள் மிஸ்ரா ஆணையம் தொடர்பாக நடத்திய பேரணியையும் தமுமுக நடத்திய பேரணியுடன் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது என்று குறிப்பிட்டார்.

இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் சுலைமானும் இதே கருத்தை என்னிடம் லக்னோவில் பதிவுச் செய்ததை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். டெல்லியிலும் நீங்கள் அவ்வப்போது போராட்டம் நடத்த வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நன்றி: www.tmmk.in

Wednesday, February 17, 2010

போரூரில் உடலை தோண்டிய விவகாரம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தமுமுக போராட்டம்




போரூரில் அமைந்துள்ளது சேக்மானிய பள்ளிவாசல். இந்த பள்ளிவாசலுக்குட்பட்ட, வக்ஃப் போர்டுக்கு சொந்தமான 500 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. இந்த சொத்து என்னுடையது தான் என்று ஒருவர் உரிமை கொண்டாடி வருகிறார். இந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 13-2-2010 அன்று இறந்த முஸ்லிம் பெண்மணியின் உடலை ஜமாத்தார்கள் அடக்கம் செய்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.



காவல்துறையினர் முஸ்லிம் அமைப்பினரிடம் நாங்கள், அடக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். ஆனால் கொடுத்த வாக்குறுதியை மீறி கடந்த 15-2-2010 அன்று காலை 5 மணியளவில் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அம்பத்தூர் தாசில்தார் முன்னிலையிலும், அப்பகுதி முஸ்­ம் ஜமாஅத்தார் அனுமதியின்றி அடக்கப்பட்டிருந்த பெண்மணியின் உடலை தோண்டி எடுத்து வேறு ஒரு பள்ளிவாசல் அடக்கத்தலத்தில் அடக்கம் செய்துள்ளனர்.




திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் இந்த அத்துமீறிய செயலைக் கண்டித்தும், வரம்பு மீறி செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், சேக் மாணியம் வக்ஃபு சொத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும் தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று 17-02-2010 காலை 11 மணிக்கு தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.







தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி­ தலைமையில் பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ப. அப்துல் சமது, மாநிலச் செயலாளர்கள் ஏ.எஸ். எம். ஜுனைத், பி.எஸ். ஹமீது, துணைச் செயலாளர் பி.எல்.எம். யாசின், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத், வட சென்னை மாவட்ட தமுமுக தலைவர் உஸ்மான், தென் சென்னை மாவட்ட தலைவர் சீனி முகம்மது, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கமருதீன், காஞ்சி மாவட்ட தலைவர் மீரான் முஹைதீன் ஆகியோர் உட்பட ஏராளமான தமுமுக தொண்டர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டுச் சென்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.





Thursday, February 4, 2010

உருது ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி தமுமுக மறியல்

வேலூர், பிப். 2: வேலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 5 பெண்கள் உள்பட 450 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

வேலூரில் உள்ள அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளிக்கு 12 ஆண்டுகளாக 10 உருது ஆசிரியர்கள் நிரப்பப்படாமல் இருப்பதையொட்டி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டு தமுமுக மாநிலத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேசியது:

வேலூரில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டுகளைக் கடந்து விட்டது. உருது வழியில் போதனை செய்ய இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்த அரசுப் பள்ளியுடன் சேர்த்து தமிழகத்தில் 3 உருது பள்ளிகள் மட்டுமே தற்போது உள்ளன.

தஞ்சாவூர், மதுரையில் இயங்கி வந்த உருது பள்ளிகள் மூடப்பட்டுள்ளனன.

காலிப் பணியிடங்களை நிரப்பாமல் 12 ஆண்டுகளாக பள்ளி நடைபெற்று வருவது வருத்தமளிக்கிறது. உருதுப் பள்ளிகள் காப்பாற்றப்பட வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வரிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.

இந்தப் பள்ளியில் 1,400 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இதில் 800 பேர் உருது பயில்கின்றனர். இவர்களுக்கு 7 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். தமிழ்வழி, ஆங்கில வழி பயிலும் 600 மாணவ, மாணவிகளுக்கு 32 ஆசிரியர்கள் உள்ளனர். ஆகவே காலியாக உள்ள 10 உருது ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்றார் அவர்.

மறியல் போராட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி ரிஷாதி, மாநில துணைச் செயலாளர் தருமபுரி ஒய்.சாதிக்பாஷா, மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.நாஸிர் உமரி, வேலூர் மாநகரத் தலைவர் கே.எம்.சதகத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறியலில் பங்கேற்ற 5 பெண்கள் உள்ளிட்ட 450 பேரையும் போலீஸப்ர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

Monday, January 4, 2010

ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று தானா? மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் கருத்திற்கு தமுமுக தலைவர் கண்டன கடிதம்

புதுடெல்யில் கடந்த டிசம்பர் 23 அன்று நடைபெற்ற மத்திய உளவுத்துறையின் 22வது ஐ.பி. என்டோமென்ட் சொற்பொழிவின் போது மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஜிஹாதை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு உரையாற்றினார். இந்த உரையை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எழுதிய கடிதம்:

சமீபத்தில் மத்திய உளவுத்துறை (ஐ.பி.) கூட்டத்தில் வெறுக்கத்தக்க தீவிரவாதத்தை புனித ஜிஹாதிற்கு இணையானது என்று தாங்கள் பேசியதாக வெளிவந்துள்ள செய்தி சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மிக மோசமாக புண்படுத்தியுள்ளது. ஜிஹாத் என்பது ஒரு போராட்டம் தான். ஆனால் அது யாருக்கு எதிராக எந்த நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து உங்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஜிஹாத் என்பது பொய்மைக்கும் அநீதிக்கும் எதிராக தொடுக்கப்படும் போராட்டம் ஆகும். ஆனால் இந்த போராட்டம் வன்முறை வாயிலாக மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று சொல்வது வடிகட்டிய பொய்யாகும்.

உங்கள் உரையில் சிலுவை யுத்தங்களை பாரம்பரிய போர்கள் என்றும் ஜிஹாதை நம்பிக்கையற்றோர் மீது தொடுக்கப்படும் யுத்தம் என்றும் நீங்கள் வேறுபடுத்தி பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது உண்மைக்கு புறம்பான கருத்து என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன். சிலுவை யுத்தங்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்கள் ஆகிய இரு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு அரசுகளுக்கு இடையே அச்சமூகங்களின் ஆட்சியாளர்கள் தலைமையில் நடைபெற்ற முழுமையான யுத்தங்களாகும். முஸ்லிம்கள் இது போன்ற நிலையில் நடைபெறும் யுத்தங்களில் பங்குக் கொள்ளும் போது தான் அதனை ஜிஹாத் என்றழைக்க இயலும். இது போன்ற யுத்தங்களில் பங்குக் கொள்ளும் நிலையிலும் கூட முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், மதகுருமார்கள் மட்டுமல்லாது வழிப்பாட்டு ஸ்தலங்கள், நீர்நிலைகள், பயன் தரும் தாவரங்களை கூட எந்த காரணத்திற்காகவும் தாக்கக் கூடாது என்று இஸ்லாம் தெளிவான போர் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது.

இறைவனோ அவனது இறுதித்துப்தர் முஹம்மது (ஸல்) அவர்களோ பயங்கரவாதச் செயல் ஈடுபடுமாறு முஸ்லிம்களுக்கு கட்டளையிடவில்லை. உண்மையில் போர் நடைபெறும் நிலையில் கூட அதில் ஈடுபடாத அப்பாவி மக்களுக்கு எவ்வித துன்பமும் விளைவிக்க கூடாது உட்பட எவ்வித பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுவடுவதையும் இஸ்லாம் தடைச் செய்துள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் உரையில் ஜிஹாதை பயங்கரவாதத்துடன் நீங்கள் ஒப்பிட்டுள்ளது மூலம் இஸ்லாம் கூறும் ஜிஹாத் கோட்பாடு குறித்த உங்கள் மனநிலை தெளிவற்றது என்பது வெளிச்சமாகியுள்ளது. எவ்வித தயக்கமும் இல்லாமல் ஆனால் முழு பொறுப்புடன் நான் ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். பயங்கரவாதச் செயல் ஈடுபடும் முஸ்லிம் ஒருவரை முஸ்லிம் என்றே சொல்ல இயலாது. எனெனில் அமைதியை நிலைநாட்டும் மார்க்கமாக இஸ்லாம் விளங்குகின்றது.. அதன் பொருளும் அமைதி என்பதாகவே அமைந்துள்ளது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் முஸ்லிம் கும்பல்களுக்கு தாங்கள் ஜிஹாதில் ஈடுபட்டுள்ளதாக கூறிக் கொள்ள எவ்வித உரிமையும் கிடையாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீவிரப்போக்கை கைவிடுமாறு போதித்துள்ளார்கள். தீவிர போக்குத் தான் கடந்த கால சமூகங்கள் அழிந்ததற்கான கரணமாக இருந்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சில முஸ்லிம் கும்பல்கள் தீவிரவாதச் செயல் ஈடுபட்டால் அவர்கள் இறைவனது உத்தரவிற்கு முரணான செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்றே கருதப்படும். இத்தகைய போக்கை நியாயப்படுத்துபவர்கள் தோல்வியை தான் சந்திப்பார்கள். எனெனில் இவை இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளுக்கு முரணாகவும் வெறுக்கத்தக்க பாவங்களாகவும் அமைந்துள்ளன. நீதியின் அடிப்படையிலும், பொறுமையுடனும். நிலைகுலையா தன்மையுடனும் நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ளுமாறு திருக்குர்ஆன் வழிகாட்டியுள்ளது.. நியாயமாக ஒரு மனிதரை கொலைச் செய்வது முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு இணையானது என்று திருக்குர்ஆன் வயுறுத்துகின்றது. மனித உயிர் மிக புனிதமானது என்ற இஸ்லாத்தின் இந்த அடிப்படை தத்துவத்தை புரியாத நிலையில் தான் பயங்கரவாதிகள் தங்கள் செயல்களை அமைத்துக் கொள்கிறார்கள். அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் பயங்ரவாதச் செயல்களை மிக வெறுக்கத்தக்கது என்றும் அதில் ஈடுபடுபவர்களை மிக மோசமான குற்றவாளிகள் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.

எதார்த்தமான உண்மைகள் இப்படியிருக்க நீங்கள் ஐ.பி. அதிகாரிகள் கூட்டத்தில் ஆற்றிய உரை எங்கள் சமூகத்திற்கு பெரும் மன உளைச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது முஸ்லிம் சமூகத்திற்கும் மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சிக்கும் இடையிலான உறவையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இச்சூழல் நீங்கள் வெளிப்படுத்திய உண்மைக்கு புறம்பான கருத்தை நீங்கள் திரும்பப் பெற்று நீங்கள் நியாயவான் என்பதை உறுதி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், ஜமாஅத்தே இஸ்லாமி, 'ஷரிஅத் பாதுகாப்பு குழு போன்ற முஸ்லிம் அமைப்புகளும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

Sunday, November 8, 2009

ரியாத் மண்டல த.மு.மு.க நிர்வாகிகள் தேர்வு


தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மக்கள் பணியை தமிழகத்தில் மிகச் சிறப்பாக செய்து வரும் அதே வேலையில், கடல்கடந்தும் தமது மனிதநேயப் பணிகளை பரந்து விரிந்து செய்து வருகின்றன. அயல் தேசங்களில் பணியாற்றும் நமது சகோதரர்கள் தமது சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கரையின் காரணமாக தான் பாணியாற்றும் தேசங்களில் இருந்துகொண்டே மனிதநேயப்பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். நமது இரு கண்களும் ஒன்றோடு ஒன்று சந்தித்ததில்லை ஆனால் தனது கடமையிலிருந்து ஒரு போதும் தவறியதில்லை. தமுமுக தலைமையின் வழிகாட்டுதலில் அயல் நாடுகளிலும் தமுமுகவின் கிளைகள் பரந்து விரிந்து செயல்பட்டு மனிதநேயப் பணிகளில் முத்திரை பதித்து வருகின்றன.
அந்த வகையில் சவூதி அரேபிய – தலைநகர் ரியாத் மத்திய மண்டல த.மு.மு.கவின் பொதுக்குழு கடந்த 06-11-2009 அன்று கிழக்கு மண்டலத் தலைவர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மௌலவி ஜமால் உமரி அவர்கள் கிராஅத் ஓத, மவுலவி ஜமால் முஹம்மது பாசில் பாகவி அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.

முதலாக மண்டல நிர்வாகத்தின் கணக்குகள் வாசிக்கப்பட்டு புதிய நிர்வாகம் தேர்வு செய்யவிருப்பதை முன்னிட்டு பொருப்பிலிருந்த மண்டல நிர்வாகிகள் தமது பொருப்புகளிலிருந்து ராஜினாமா செய்து விடுப்புப் பெற்றனர்.


உணவு இடைவேளைக்குப் பின், கிழக்கு மண்டலத்திலிருந்து பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் அவர்களின் தலைமையில் தேர்தல் அதிகாரிகளாக வருகை தந்திருந்த மவுலவி அலாவுதீன் பாகவி, சகோதரர் அப்துல் காதர், சகோ இஸ்மாயில், சகோ நூருதீன் ஆகியோரின் முன்னிலையில் மத்திய மண்டல த.மு.மு.கவிற்கான தேர்தல் நடைபெற்றது.

பொதுக்குழுவிற்கு வருகை தந்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் மத்திய மண்டல நிர்வாகிகளை தேர்தல் முறையில் தேர்வு செய்தார்கள். அதில் மண்டலத் தலைவராக மதுரை மாவட்டம் தொட்டப்பநாயக்கனுரைச் சேர்ந்த மவுலவி ஜமால் முஹம்மது பாசில் பாகவி அவர்கள் மண்டலத் தலைவராகவும். இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலைச் சேர்ந்த எம். முஹம்மது ஹூஸைன் கனி அவர்கள் மண்டல பொதுச் செயலாளராகவும். நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த சகோ ஜர்ஜிஸ் அஹமது அவர்கள் பொருளாளராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் ஆலோசனையில் மத்திய மண்டலத்தின் துணைத் தலைவராக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கே. பி. முஹம்மது அவர்களையும், துணைச் செயலாளராக புதுக்கோட்டை மாவட்டம் மீ-மீசலைச் சேர்ந்த சகோ. நூர் முஹம்மது அவர்களையும் தேர்வு செய்தனர்.

அல் கஸ்ஸாவிலிருந்து வருகைபுரிந்திருந்த சிறப்புப் பேச்சாளர் மவுலவி அலாவுதீன் பாகவி அவர்களின் உரைக்குப் பின் தாயகத்திலிருந்து த.மு.மு.கவின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி அவர்களும் இணையம் வழியாக வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சிறப்புரையாற்றினார்கள் தங்களது உரையில் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து தொடர்ந்து மக்கள் பணியில் சிறப்பாக ஈடுபடவும் அதற்கு உறுதுணையாக மற்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களும் சிறப்பான முறையில் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளின் ஏற்புரைக்குப்பின், பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு கிழக்கு மண்டல த.மு.மு.க தலைவர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் பதில் அளித்தார்கள். இறுதியாக சகோ. நூர் முஹம்மது நன்றி உரையாற்ற பொதுக்குழு இனிதே நிறைவுற்றது.

இப்பொதுக்குழுவில் நூற்றி ஜம்பதிற்கும் மேற்பட்ட த.மு.மு.க உறுப்பினர்கள் மற்றும் இருபதிற்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். இப்பொதுக் குழுவை த.மு.மு.க மத்திய மண்டல தொண்டரணியினர் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

வந்திருந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகத்தின் பணிகள் சிறக்க துவாச் செய்தவர்களாக தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சமுதாயப் பணியின் கடமைகளை உணர்ந்தவர்களாக விட்டபணிகளைத் தொடர வெற்றிக்களிப்புடன் களைந்து சென்றார்கள்...

Saturday, October 10, 2009

மனிதநேய மக்கள் கட்சிக்கு முதல் வெற்றி

தென்காசி, அக். 9: தென்காசி நகராட்சி 16-வார்டுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வெற்றிபெற்றுள்ளது. தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றியாகும் இது.

அந்தக் கட்சியின் வேட்பாளர் முகமது அலி தமக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் தமீம் இப்ராஹிமை 200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

வாக்குகள் விவரம்:

மொத்த வாக்குகள் : 1441

பதிவானவை : 881

முகமது அலி (மமக) : 414

தமீம் இப்ராஹிம்(அதிமுக) : 214

முகமது அலி : 206 (முஸ்லீம் லீக்)
வெற்றிபெற்ற வேட்பாளருக்கு எமது வாழ்த்துக்கள்.

Saturday, June 13, 2009

த.மு.மு.க தலைவரின் லண்டன் பயணம்

லண்டனில் த.மு.மு.க தலைவரின் உரை
லண்டனில் உள்ள இஸ்லாமிய அழைப்பு பணி மையம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இஸ்லாம் கூறும் மனித உரிமைகள் என்ற தலைப்பில் இன்ஷா அல்லாஹ் நாளை 13-06-2009 மாலை 7 மணியாளவில் உரையாற்றவுள்ளார்கள்.


தமிழகத்தில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று மாநிலத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் சேவைகள் செய்து வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இந்திய எல்லையைத் தாண்டி வெளிநாட்டின் பல பகுதிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிரிட்டன் பயணம் செய்துள்ள தமுமுக தலைவர் முனைவர் ஜவஹிருல்லாஹ் அவர்கள் லண்டனில் வசிக்கும் நமது சமுதாயத்தவர்கள் ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அமைப்பின் கிளை துவக்குவது சம்மந்தமாக பல்வேறு அமர்வுகளில் மக்களை சந்தித்து ஆலோசனை செய்துவருகின்றார்.

Monday, May 11, 2009

மே 13 முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்!

மே 13 முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்!
- அபூ அப்தில்லாஹ்.
2009 மே 13 புதன்கிழமையன்று தமிழகம்; 39 புதுவை 1 ஆக 40 தொகுதிகளுக்குரிய மக் கள் சபை உறுப்பினர்களை (M.P.) தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதில் இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் தவறாது கலந்து தங்களின் விலை மதிப்பற்ற வாக்குகளை முறையாகப் பதிவு செய்வதே கடமையாகும். இந்த மண்ணின் மைந்தர்கள்- வந்தேறிகள் அல்ல என்பதை நிலை நாட்டுவதாகும்.
சில முஸ்லிம்கள் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பதோ, வாக்களிப்பதோ ஹராம்-கூடாது, தாக்கூத்திற்கு(ஷைத்தானுக்கு) துணை புரிவதாகும் எனக் கூறி முஸ்லிம்களை தவறான வழியில் இட்டுச் செல்ல முயல்கிறார்கள். அவர்கள் தங்களின் இந்த வாதத்தில் உண்மையாளர் களானால், இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுபட்டு நடப்பது, பல வகையான வரிகள் கட்டுவது, அரசு உறுதி அளித்து வெளியிடும் ரூபாய் நோட்டுகளை ஏற்று அவற்றைக் கொண்டு தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது, பல வகையான அரசு உரிமங்களைப் பெறுவது, வெளிநாடு செல்ல கடவுச் சீட்டு (Passport) பெறுவது இவை அனைத்தும் ஹராம் - கூடாது, தாக்கூத்திற்குத் துணை போகும் செயல்கள் எனக் கூற வேண்டும். ஆம்! அவர்களது கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் இந்த நாட்டில் இருக்கக் கூடாது. அவர்கள் கூறும் இறையாட்சி நடக்கும் இடம் தேடிச் சென்றுவிட வேண்டும். இது அவர்களால் முடியுமா? இறை யாட்சி நடக்கும் ஒரு நாடு உண்டா? இல்லையே!

முஸ்லிம்கள் முதலில் தங்கள் அளவில் இறையாட்சியை நிலைநாட்டி, 3:103 இறைக் கட்டளைப்படி அல்குர்ஆனை ஒன்றிணைந்து வலுவாகப் பற்றிப் பிடித்து ஓரணியில் இல்லை. இறைவனின் நேரடியான கட்டளைகளைப் புறக் கணித்து, மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு மக்களை வழி கெடுக்கும் புரோகித மவ்லவி களைப் பற்றிப் பிடித்து, அவர்களின் சுயநலக் கற்பனைகளை இறைவாக்காக ஏற்று நடக்கும் பரிதாப நிலையில் இருக்கிறார்கள் முஸ்லிம்கள். அதன் காரணமாக எண்ணற்றப் பிரிவுகளில் சிக்கிச் சீரழிகிறார்கள்.

முஸ்லிம்களின் சுய வாழ்க்கையிலேயே இறையாட்சி இல்லாத நிலையில், நாட்டில் இறையாட்சியை எப்படி ஏற்படுத்த முடியும்? 24:55ல் அல்லாஹ் கட்டளையிடுவது போல் புரோகித மவ்லவிகளைப் புறந்தள்ளி அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து முஸ்லிம்கள் ஒன்றுபடட்டும். ஆட்சி அதிகாரத்தை அல்லாஹ் நிச்சயம் தருவதாக வாக்களிக்கிறான்.

அதுவரை, மேலே சுட்டிக் காட்டிய அனைத் திலும்; நிர்பந்த நிலையில் முஸ்லிம்கள் செயலாற் றுவது போல், தேர்தலிலும் வேட்பாளர்களாக நிற்பதும், வாக்களிப்பதும் நிர்பந்த நிலையில் அவசியமாகும். அது கொண்டே முஸ்லிம்கள் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள், நாட்டுபற்று மிக்கவர்கள் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். சில பொறுப்பற்ற முஸ்லிம்கள், வாக்களிப்பது, வேட்பாளர்களாக நிற்பது ஹராம்-கூடாது, தாக்கூத்திற்கு (ஷைத்தானுக்கு) துணை போவதாகும் என்று பிதற்றித் திரிவதால்தான், காவி வகையறாக்கள் முஸ்லிம்கள் தேசப்பற்று அற்றவர்கள், பாகிஸ்தான் போன்ற அயல் முஸ்லிம் நாடுகளை நேசிப்பவர்கள் என பொய் யான செய்திகளை நாடு முழுவதும் பரப்ப வழி ஏற்படுகிறது. எனவே இப்படிப்பட்டவர்கள் தங்களில் இறையாட்சி ஏற்பட்டு, அல்குர்ஆனை பற்றிப் பிடித்து முஸ்லிம்கள் ஒன்றுபடுவதற்குரிய முயற்சிகளில் தீவிரமாக இறங்கட்டும். இப்படிப் பட்ட அர்த்தமற்ற பிதற்றல்களை விட்டுத் தள்ளட்டும்.

ஆயினும் வாக்களிக்கும் அனைத்து முஸ்லிம் களும், வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம்களும் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று செயல்பட்டு 3:110-ல் அல்லாஹ் கூறுவதுபோல் மாற்றாருக்கு நேர்வழிகாட்ட வேண்டும். வாக்களிக்கும் முஸ்லிம் கள் தங்களின் பொன்னான விலை மதிப்பற்ற வாக்குகளை 1000-க்கும் 5000-க்கும் விற்க ஒரு போதும் துணியக் கூடாது. அப்படி மக்களுக்குப் பணம் கொடுத்து அதன் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்கள், தாங்கள் செலவழித்ததைப் பன் மடங்காக பெருக்கி கோடி கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கத் துணிவார்களே அல்லாமல், மக்களுக்குத் தொண்டு செய்யவோ, சேவை செய்யவோ, முன்வரமாட்டார்கள் என்பதை முஸ்லிம் ஆண்களும், பெண்களும் மனதில் இருத் திக் கொள்ள வேண்டும். எனவே தங்கள் வாக்கு களை ஒருபோதும் பணத்திற்கு விற்கக் கூடாது.

அடுத்து வெற்றி பெறுபவருக்கே நமது வாக்கையும் அளிக்க வேண்டும் என்ற மூட எண்ணமும் கூடாது. பணம் கொடுத்து வாக்குகளை வாங்காமல், தொண்டு செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்களுக்கே முஸ்லிம்கள் தங்கள் வாக்கை அளிக்க வேண்டும். நாம் வாக்களிக்கும் வேட்பாளர் தோற்றாலும் பரவாயில்லை ; அதனால் மக்களுக்குத் தொண்டு செய்வதை விட்டு விட மாட்டார் என்ற அடிப்படையில் நல்லவர்களுக்கே, தொண்டு செய்பவர்களுக்கே நமது வாக்குகளை அளிக்க வேண்டும். தோற்பவர்களுக்கு வாக்களிக்க லாம். ஆனால் தொண்டைத் தொழிலாக்கிக் கோடிகோடியாக சுருட்டுகிறவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்க கூடாது.

நாம் வாக்களித்து அதன் மூலம் வெற்றி பெற்றுப் போகிறவர்கள் செய்யும் அநியாயங்கள், அட்டூழியங்கள் அனைத்திற்கும் நாமும் துணை போன குற்றத்திற்கு ஆளாக நேரிடும். அதனால் வாக்களிக்காமல் இருப்பதே சிறந்தது என சிலர் வாதிடலாம். இந்த எண்ணத்தில் நாம் வாக்களிக் கத் தவறினால், நமது வாக்கு கள்ள வாக்காக மாறி நிற்பவர்களில் ஆகக் கொடியவர்கள் தேர்வு பெறக்காரணமாகலாம். அதனால் வாக்களிக்காமல் இருந்து எந்தப் பாவத்தைத் தவிர்க்க எண்ணினோமோ அதை விடப் பெரும் பாவத்தை இரட்டிப் பாக அடைய நேரிடும் என்பதை இப்படிப்பட்ட எண்ணமுடையவர்கள் உணர வேண்டும்.

எனவே நிற்பவர்களில் குறைந்த தவறுடைய வர்களைப் பார்த்து நமது வாக்கைப் பதிவு செய்யலாம். அப்படிப்பட்டவர்களும் வேட்பாளர் களில் தென்படாவிட்டால், தேர்தல் அதிகாரியிடம் கூறி அதற்குரிய படிவத்தைப் பெற்று, வேட்பாளர் களில் யாரும் தகுதியானவர்கள் இல்லை. எனவே எனது வாக்கை யாருக்கும் அளிக்கவில்லை என பூர்த்தி செய்து கொடுத்து, முஸ்லிம்களின் வாக்குகள் கள்ள வாக்குகளாக மாறுவதைத் தடுக்கலாம். ஆக முஸ்லிம்கள் 100மூ தவறாது ஒவ்வொரு தொகுதியிலும் வாக்களித்துள்ளார் கள் என்ற சாதனையின் மூலம் ஆட்சியாளர்களின், அதிகாரிகளின் கவனத்தை முஸ்லிம் சமுதாயத் தின் பக்கம் திருப்ப முடியும். இது முஸ்லிம் ஆண், பெண் வாக்காளர்களின் கடமையாகும்.

அடுத்து முஸ்லிம் வேட்பாளர்கள், ஜாதி, மதம், இனம் என வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் தொண்டு, சேவை செய்யும் எண்ணத்துடனும், முஸ்லிம்களின் உரிமைகளை கட்டிக்காக்கும் குறிக்கோளுடனும், வேட்பாளர்களாக நிற்க வேண்டும். இன்று அரசியலைவிட ஆதாயம் தரும் வியாபாரம் வேறு ஒன்றுமில்லை; முதல் இல்லாமலேயே கோடி கோடியாகப் பொருள் ஈட்ட முடியும் என்ற தீய நோக்குடன் வேட்பாளர்களாக ஒரு போதும் நிற்கக் கூடாது. அற்ப உலக ஆதாயம் கருதி தொண்டைத் தொழிலாக்கி மக்கள் பணத்தை லஞ்சம் போன்ற தவறான வழிகளில் சுருட்ட முற்படுகிறவர்கள், தூய மார்க்கத்தை மதமாக்கி தொண்டைத் தொழிலாகக் கொண்ட புரோகித மவ்லவிகள் தங்கள் வயிறுகளில் நரக நெருப்பை நிரப்பிக் கொள்வது போல், இவர்களும் நரக நெருப்பையே தங்கள் வயிறுகளில் நிரப்பிக் கொள்கிறார்கள் (பார்க்க 2:174).

அது வட்டி, பன்றிக் கறி சாப்பிடுவதை விட மிகக் கொடிய ஹராம் என்பதை நினைத்து சதா அஞ்சிக் கொள்வார்களாக. ஆயினும் அன்று ஆட்சி செய்த கலீஃபாக்கள், கவர்னர்கள் அரசிடமிருந்து ஊதியம் பெற்றது போல், இவர் கள் அரசு கொடுக்கும் ஊதியத்தை அடைவதில் தவறில்லை. சேவை செய்யும் தூய நோக்குடன் மட்டுமே வேட்பாளர்களாக நிற்க வேண்டும்.

மக்களுக்கு உண்மையிலேயே சேவை மனப்பான்மையுடன் தொண்டு செய்தவர்கள் பிரபல கட்சிகளை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிவாகை சூடிய வரலாறெல் லாம் தமிழகத்தில் உண்டு. இதை முஸ்லிம் வேட்பாளர்கள் முன்மாதியாகக் கொள்ள வேண்டும்.

மற்ற வேட்பாளர்கள் கடைபிடிக்கும் சிலை களுக்கெல்லாம் மாலையிடுதல், கோவில், சர்ச், தர்கா, பள்ளி என ஏறி இறங்குவது, கண்டவர் களுக்கெல்லாம் கூழைக் கும்பிடு போடுதல், வணக்கம் செலுத்துவது, ஆரத்தி எடுக்க அனுமதிப்பது, பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது, இல்லாத சிறப்புகள் இருப்பதாக மற்றவர்கள் தங்களை புகழ்ந்து பேச வைப்பது, தேர்தல் வேலை செய்பவர்களுக்கு ஹராமான மது, சாராயம், கள்ளசாராயம் என வாங்கிக் கொடுத்து வேலை வாங்குவது, வாக்காளர் களுக்குப் பணம் கொடுப்பது இத்தியாதி, இத்தி யாதி செயல்களை ஒருபோதும் செய்ய முற்படக் கூடாது. மற்ற வேட்பாளர்களுக்கு 3:110 இறைக் கட்டளைப்படி ஓர் அழகிய முன்மாதிரியாகத் திகழ வேண்டும். மற்ற வேட்பாளர்கள் இவர்களைப் பார்த்து வெட்கித் தலை குனிய வேண்டும். இவர்களே உண்மையிலேயே தொண்டு செய்யும் உள்ளம் படைத்தவர்கள் என அவர்களின் உள் மனம் அவர்களை எச்சரிக்கும் நிலையில் முஸ்லிம் வேட்பாளர்கள் செயல்பட வேண்டும்.

தொண்டு செய்வது கொண்டு மட்டுமே, தொகுதி மக்களின் ஆகுமான தேவைகளை எவ்வித சுயலாபத்தையும் எதிர்பாராமல் செய்து கொடுப்பது கொண்டு மட்டுமே அந்த தொகுதி மக்களின் உள்ளங்களில் இடம் பிடிக்க வேண்டும். அந்த மக்கள் விரும்பியே இவரை முனைந்து வேட்பாளராக நிற்க வைக்கவும், வேலை செய்து வெற்றி பெறச் செய்யவும் கூடிய நிலையில் இவர்களின் சேவைகள் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் இஸ்லாமிய நெறி முறைகளை முறிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது. இப்படிப் பட்ட தூய எண்ணத்தோடு முஸ்லிம் வேட்பாளர் கள் செயல்பட்டால், முஸ்லிம்கள் மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாத தொகுதி மக்களும், தங்கள் இன வேட்பாளரை விட இவரை விரும்பி தேர்ந் தெடுக்கும் நிலை கண்டிப்பாக உண்டாகவே செய்யும்.

முஸ்லிம் வேட்பாளர்கள் மற்ற கட்சிகளில் இணைந்து அந்தக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படுவதின் மூலம் முஸ்லிம்களுக்கு சேவையாற்ற முடியும் என்பது அப்பட்டமான பொய்யே ஆகும். சுதந்திரம் கிடைத்த 1947-லிலிருந்து கடந்த 62 ஆண்டுகளாக முஸ்லிம்கள் பிற கட்சிகளால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதும், முஸ்லிம்கள் ஏமாந்த சோனகிரிகளாக இருக்கிறார்கள் என்பதுமே உண்மையாகும். அதற்காக அக்கட்சிகளை குறை சொல்லவும் முடியாது. நமது நாட்டில் ஜனநாயக ஆட்சிமுறை இருப்பதால் சிறுபான்மையினருக்கு நல்லது செய்து, அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வெறுப்புக்கும், கோபத்திற்கும் ஆளாகி, அதன் மூலம் அவர்களின் வாக்குகளை இழப்பதற்கு எந்தக் கட்சியும் முன் வருமா? ஒரு போதும் முன் வராது. வாய் இனிக்கப் பேசி முஸ்லிம்களை ஏமாற்றவும், அவர்களின் ஒற்றுமையை குலைக் கவும் சதி செய்வார்களே அல்லாமல், ஒரு போதும் முஸ்லிம்களுக்கு நல்லது செய்து, அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் ஆதரவை இழக்கத் துணிய மாட்டார்கள். அதுவும் முஸ்லிம்களைப் பற்றிய வெறுப்புணர்வு நாட்டு மக்களிடையே இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதி என தொடர்ந்து அவதூறுகள் பரப்பி வளர்க்கப் பட்டு வருவதால், எந்தக் கட்சியும் முஸ்லிம் களுக்கு நல்லது செய்ய ஒருபோதும் துணியாது. எனவே “தன் கையே தனக்குதவி” என்ற அடிப் படையில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து தனித்து நின்று தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதுவே முஸ்லிம்களின் நலனுக்கு நல்லது.

யாரெல்லாமோ, எந்த உருப்படியான கொள்கையோ, இலட்சியமோ இல்லாமல், வெறும் சீட்டுகளுக்காக மட்டும் கூட்டணி அமைக்கும் போது, ஒரே இறைவனையும், ஒரே தூதரையும், ஒரே குர்ஆனையும், தௌ;ளத் தெளிவான ஓரிறைக் கொள்கையையும், தௌ;ளத் தெளிவான வழிகாட்டலையும் பெற்றுள்ள, முஸ்லிம்கள் ஓரணியில் ஒன்றுபடுவதில் தயக்கம் ஏன்? அற்ப உலக ஆதாயமும், சுயநலமும் மட்டுமே ஒன்று சேரத் தடையாக இருக்கிறது. தங்களுடைய அற்ப உலக ஆதாயங்களையும், சுய நலப்; போக்கை யும் தலைவர்கள் தியாகம் செய்ய முன் வந்தால் முஸ்லிம் சமுதாய ஒற்றுமை எளிதாக ஏற்பட்டு விடும். மார்க்க விஷயத்தில், கொள்கைகளில் வேறுபட்டாலும் அவற்றின் உண்மை நிலையை நாளை மறுமையில் அவரவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அவற்றை காரணம் காட்டி சமுதாயத்தை இவ்வுலகில் பிளவு படுத்துவது கூடாது. அல்லாஹ்வே தனது தீர்ப்பளிக்கும் அதி காரத்தை மறுமைக்கென்று ஒத்தி வைத்;திருக்கும் நிலையில், அதைத் தங்கள் கையில் இவ்வுலகி லேயே எடுத்துக் கொள்வதைவிட கொடிய ஷிர்க், இணை வைக்கும் பாவச் செயல் பிறிதொன்று இல்லை என்பதை முஸ்லிம்களும், முஸ்லிம் அறி ஞர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். 21:92, 23:52 இறைக் கட்டளைகள்படி சமுதாய ஒற்றுமை காக்க முன் வந்தால் சமுதாய ஒற்றுமைக்கு வழி பிறக்கும்.

அந்த அடிப்படையில் பிரிந்து கிடக்கும் முஸ்லிம் கட்சிகள், கழகங்கள் அனைத்தும் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்பட்டால், குறைந்தது 5 அல்லது 4 தொகுதிகளை பிற கட்சிகளிடம் பேரம் பேசி பெற முடியும் என சென்ற இதழில் எழுதி இருந் தோம். முஸ்லிம் கட்சிகள், கழகங்கள் அப்படி யொரு தேர்தல் கூட்டணி அமைக்க முன் வர வில்லை. அதனால் 4,5 சீட்டுகள் கிடைப்பதற்குப் பதிலாக ஒரேயொரு சீடடு அதுவும் அவர்களின் சின்னத்திலேயே அவர்களின் கட்சியில் ஒருவராக போட்டியிட மட்டுமே வாய்ப்புக் கிட்டியது.

வெற்றி பெற்றாலும் அவரால் முஸ்லிம் சமுதாயத்திற்கு குறிப்பிடும் அளவுக்கு பலன் கிடைக்கப் போவதில்லை. சமுதாயப் பிரச்சினை களை துணிந்து மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் வாய்ப்பு இல்லை. அடக்கி மட்டுமே வாசிக்க முடியும். பிற கட்சிகள் மூலம் போட்டி யிட்டு தேர்ந்தெடுக்கப்படும் எந்த முஸ்லிமின் நிலையும் இதுதான். எனவே அவர்களுக்காக பெரும் பாடுபட்டு முஸ்லிம்கள் அவர்களை வெற்றி பெறச் செய்தாலும், முஸ்லிம் சமுதாயம் அத னால் பெரும் பலன் அடையப் போவதில்லை.

அதனால், பிற கட்சிகள் பின்னால் செல்லும் அவல நிலை மாற வேண்டும். “தன் கையே தனக்குதவி” என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி பாடுபட்டு அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். முஸ்லிம்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அனைத்தும் அப்படிப்பட்ட வேட்பாளர் களுக்கு விழுமானால் சில தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற முடியும். எக்காரணத்தைக் கொண்டும் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறக் கூடாது. ஒட்டுமொத்தமாக அந்த வேட்பாளர்களுக்கே விழ வேண்டும்.

ஆயினும் பிற கட்சிகள் முஸ்லிம்களின் இந்த ஒற்றுமையைக் குலைத்து சிதறச் செய்யவே பெரும்பாடு படுவார்கள். இதற்காக அவர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்களின் சமூக, கட்சி ஆதாயத்திற்காக அப்படிச் செயல்படு கிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் ஆசை வார்த் தைகளில் மயங்கி, கொடுக்கும் அற்பப் பதவி களுக்கு ஆசைப்பட்டு சமுதாயத்தைப் பிளவு படுத்த முற்படும் முஸ்லிம் பெயர் தாங்கிகளே குற்றவாளிகள். அவர்களுக்கு சமுதாய நலனை விட, அவர்களின் அற்ப உலக ஆதாயமே பெரிதாகத் தெரிகிறது. அப்படிப்பட்டவர்களாலேயே முஸ்லிம் சமுதாயம் அன்றிலிருந்து இன்று வரை சீரழிந்து வருகிறது. அவர்கள் சமுதாய தலைவர்களாக இருப்பதற்கே தகுதியற்றவர்கள். அப்படிப்பட்ட சுயநலப் பேர்வழிகளை தலைவர்களாக ஏற்று அவர்களுக்கு வெண் சாமரம் வீசும் போக்கை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். அவர்கள் பின்னால் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சுயநலத்திற்கும், அற்ப உலக ஆதாயத்திற்கும் முதலிடம் கொடுக்காமல், சமுதாய ஒற்றுமையையும், சமுதாய நலனையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்களை மட்டுமே வழிகாட்டிகளாக முஸ்லிம் சமுதாயம் ஏற்க வேண்டும்.

அப்போதே சமுதாயம் உருப்படும், மேம்படும். இவ்வுலக இன்னல்கள் மட்டுமாவது நீங்கும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் பிளவு படாமல் ஒன்றுபட்டு, பிற கட்சிகளில் நிற்பவர்களை ஓரங் கட்டி, முஸ்லிம் சமுதாயத்திற்கென்றே நிற்கும் முஸ்லிம்களுக்கே வாக்களிக்க வேண்டும். அவர்கள் சில சமயம் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், முஸ்லிம்கள் அனைவருடைய வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் 100மூ விழுவதால், தேர்தல் கமிஷனிடம் கட்சி அங்கீகார மும், குறிப்பிட்ட சின்னமும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்வரும் தேர்தலில் தவறாது தங்கள் வாக்குகளைச் செலுத்துவதோடு, நடக்க முடியாதவர்களையும் தூக்கிச் சென்று வாக்க ளிக்க உதவுமாறு கோரிக்கை வைக்கிறோம். முஸ்லிம்களின் 100% வாக்கும் பதிவாக வேண்டும். அதற்குரிய தீவிர முயற்சிகளில் முஸ்லிம்கள் முனைந்து ஈடுபட வேண்டும்.

கடந்த தேர்தலில் உயிரைக் கொடுத்துப் பாடுபட்டு, அம்மாவை ஆட்சியில் அமர்த்தப் போவதாக சூளுரைத்த ததஜ தலைமைப் புரோகிதர் இத்தேர்தலில் உயிரைக் கொடுத்து பாடுபட்டு முஸ்லிம்களுக்காக நிற்கும் முஸ்லிம் வேட்பாளர்களை டிபாஸிட் இழக்கச்செய்யப் போவதாக சூளுரைத்துள்ளார். சமுதாய நலனில் அக்கறை யுள்ள எந்த ஒரு முஸ்லிமும் இப்படி சூளுரைக்க முடியாது. அதற்காகக் கூறும் காரணமோ அதை விட நகைப்புக்குரியது. சுனாமி பணத்தை சுருட்டி விட்டார்களாம். இன்னும் பல மோசடிகளைச் செய்தார்களாம். கூறுவது யார்? உலக மகா பொய்யர் வாயிலிருந்து வெளி வருவது அனைத் தும் பொய்களே என்பதை 29.3.2009 தொண்டி விவாதத்திற்குப் பின்னர் அவர் பரப்பிவிட்ட பொய்களே போதிய சான்று. அது மட்டுமா? தமுமுக கழகத்திற்கென்று நன்கொடை கொடுப்பவர்கள் அதற்காகவே கொடுங்கள் என்று இவர் கைப்பட எழுதிய கடிதமே ஆதாரமாகவே இருக்கும் போது, அப்படிக் கூறி வசூலித்த நிதியிலிருந்து வாங்கிய கட்டிடங்களையும், உணர்வு வார இதழையும் சுருட்டிக் கொண்ட மகா யோக்கியர் இப்படிக் கூறுகிறார். ததஜ அமைப்புக்காக ஒருவர் கொடுத்த பெரும் மதிப் புள்ள சொத்தை, தனது பெயரிலேயே பதிவு செய்து கொண்ட இவர், நாளை ததஜவை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால், ததஜவுக்குரிய அந்தச் சொத்தை சுருட்ட மாட்டார் என்பது என்ன நிச்சயம்? அப்படிப்பட்ட யோக்கியர் இப்படிக் கூறுகிறார். இதே நபர் உணர்வு உரிமை 05 குரல் 06, அக். 20-26,2000 இதழின் 12-ம் பக் கம் கூறியுள்ளதைப் பாருங்கள்.

தமுமுக எனும் சமுதாயப் பேரியக்கம் இன்று அவசியத்திலும் அவசியம் என்பதை உங்களை விட நான் அதிகமாகவே நம்புகிறேன். இந்தக் கழகம் சிதறுண்டுவிட்டால் மீண்டும் இந்தச் சமுதாயத்தை ஒன்று திரட்டுவதற்கு எத்தனையோ ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் இக்கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நான் விலகுவதாக இல்லை.

தமுமுகவின் இன்றைய தலைமை நிர்வாகிகள் மீது நான் அதிருப்தியடைந்து ஒதுங்குவதாகவும் யாரும் நினைத்து விட வேண்டாம். இன்று இருக்கின்ற தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் உறுப்பினராக நான் இருப்பதே இதற்குச் சான்று.

மறுமையை முன்னிறுத்தி சமுதாயச் சீர்திருத் தத்துக்காக நானும் சேர்ந்து உருவாக்கிய தவ்ஹீது இயக்கத்தில் கூட, சுயநலனையும், பதவி மோகத்தையும், பணம் திரட்டும் குறிக் கோளையும் நான் காண்கிறேன். சம்பளம் இல்லாவிட்டால் அவர்கள் இப்பணியைச் செய்ய மாட்டார்கள் என்பதையும் உணர்கிறேன்.

ஆனால் உலகில் அடைய வேண்டிய உரிமைகளுக்காகத் துவக்கப்பட்ட தமுமுகவின் தலைமை நிர்வாகிகளிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நிலையை நான் காணவில்லை.

தமுமுகவின் தலைமை நிர்வாகிகளில் எவருக்கும் இப்பொறுப்பைச் செய்வதற்காக மாத ஊதியம் இல்லை.

கூட்டங்களில் பேசச் சென்றால் அதற்காகக் கட்டணம் கேட்பதில்லை.

எந்த நேரத்தில் கதவைத் தட்டினாலும் சொந்த வேலையைப் புறந்தள்ளிவிட்டு பிரச்சினைகளைத் தீர்க்கும் தியாக மனப் பான்மை.

எந்தப் பிரச்சனையை யாருக்கு முடித்துக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து எந்தப் பிரதி பலனையும் எதிர்பாராத தன்மை.

எத்தகைய மிரட்டலுக்கும் அடக்கு முறை களுக்கும் அஞ்சாத துணிவு.

கலவரத்தீ மூண்ட நேரத்திலும் உயிரைப் பணயம் வைத்துச் சென்று களப்பணியாற்றும் பாங்கு.

தங்களை முன்னிறுத்தாமல் கழகத்தை முன்னிறுத்தும் அடக்கம்.

எந்தவொரு பிரச்சனை குறித்தும் கலந்து ஆலோசித்து அல்லாஹ்வின் திருப்தியையே குறிக்கோளாகக் கொண்டு முடிவெடுத்தல்.

சிறை செல்லும் நிலை ஏற்பட்டால் தங்களை முதலில் நிறுத்திக் கொள்ளக் கூடிய பொறுப்புணர்வு.

உணர்வுகளைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்காமல் சமுதாயத்தால் தாங்கிக் கொள்ளக் கூடிய முடிவுகளை மேற்கொள்ளுதல்.

இப்படிச் சரியான தலைமைக்கு உரிய எல்லா பண்புகளையும் மாநில தலைமை நிர்வாகிகளிடம் நான் காண்கிறேன். தன்னலமற்ற இந்தத் தலைவர்களை வழங்கியதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.

இதன் பிறகும் வேறு காரணங்களை யாரேனும் கற்பித்தால் மறுமை நாளில் அவர் களுக்கு எதிராக நான் அல்லாஹ்விடம் முறையி டுவேன். உணர்வு அக்.20-262000 பக்கம் 12.

இப்போது, அன்று பீ.ஜை. சொன்னதை ஏற்பதா? அல்லது இன்று அவர் சொல்வதை ஏற்பதா? அதுவும் தமுமுகவின் மாநில அமைப்பாளர் மற்றும் அனைத்துப் பொறுப்புளிலிருந்தும் விலகும்போது, “மனம் திறந்த மடல்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆக்கத்திலுள்ள வரிகள் இவை. தமுமுக தலைவர்களைப் பற்றி யாரும் குறை கூறினால் நாளை மறுமையில் அல்லாஹ் விடம் முறையிடுவதாகவும் கூறியுள்ளார். அப்படியானால் நாளை மறுமையில் இவரைப் பற்றி இவரே அல்லாஹ்விடம் முறையிடப் போகிறாரா?

ஆம்! பீ.ஜை. கூறும் அனைத்திற்கும் ஆமாம் சாமி போட்டால், அளவுக்கு மீறிய மிதமிஞ்சிய தங்களிடமில்லாத சிறப்புகள் நிறைந்த வஞ்சகப் புகழுரைகள் எல்லாம் கிடைக்கும். அவரது வழிகெட்ட கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்தால், மறுப்புத் தெரிவிப்பவர்களுக்கு எதிராக அவர் களிடமில்லாத இழிகுணங்ளும், ஒழுக்கக் கேடுகளும் இருப்பதாக ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்களும், அவதூறுகளும் அரங்கேறும். இதுவே பீ.ஜையின் இரண்டு கோர முகங்கள்.

குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பது போல் பீ.ஜையின் பேச்சுக்களையும் கணக்கில் கொள்ளவே முடியாது; கூடாது. “இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று உலகம் முழுவதும்; உலா வரும் ஊனுயைப் பார்ப்பவர் கள், இவரது முன்னுக்குப் பின் முரணான பேச்சுக்களையும், மரத்துக்கு மரம் தாவும் குரங்குப் புத்தியையும், இதுவரை அடித்துள்ள அந்தர் பல்டிகளையும் தெரிந்து கொள்ள முடியும். இவரைவிட மானங்கெட்ட ஒருவர் இருக்க முடியாது என்பதும் தெரிய வரும். அவரது அறிவுரைகளை இறைவாக்காக எடுத்து நடப்பவர்கள் இவ்வுலகிலும் கேட்டை அனுபவிப் பார்கள். நாளை மறுமையிலும் நரகையே சென்றடைவார்கள் என்பதை 7:3, 33:21,36,66,67,68 இறை வக்குகளை சுயமாக நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் மறுக்க முடியாது.

இதுவரை நூற்றுக் கணக்கானவர் மீது அப்பட் டமான பொய்களையும், அவதூறுகளையும், அவரும், அவரது கைத்தடிகள், பக்தர்கள் மூலமும் உலகம் முழுவதும் பரப்பி இருக்கிறாரே, அவற்றில் ஒன்றையாவது உரிய ஆதாரங்களை எடுத்துக் காட்டி முறைப்படி நிரூபித்திருக்கிறாரா? இல்லையே! அவர் ஜமுக்காளத்தில் வடித் தெடுத்த பொய்யர், அயோக்கியர் எனும் போது முஸ்லிம் வேட்பாளர்களைப் பற்றி அவர் சொல்லுவதை எப்படி ஏற்பது?

ஒரு வாதத்திற்கு அவரது இந்தப் பொய்க் கூற்றை ஏற்பதாக இருந்தாலும், அவரது நடத்தை எப்படி இருக்க வேண்டும்? போட்டியிடும் எந்த வேட்பாளரையும் ஆதரித்து பிரசாரம் செய்யக் கூடாது. இவர் பிரசாரம் செய்ய களம் இறங்கும் வேட்பாளர்கள் அனைவரும், இவர் முஸ்லிம் வேட்பாளர்கள் பற்றி கூறும் குறைகளை விட்டும் தூய்மையாளர்களா? குறைகளைப் பட்டியலிட்டால் அனைத்திலும் முஸ்லிம் வேட்பாளர்களைவிட பல படிகள் மேலே அல்லவா அவர்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருவரையாவது முஸ்லிம் வேட்பாளர் களைவிட நல்லவர்கள் என பீ.ஜை.யால் நிலை நாட்ட முடியுமா? பின்னர் எந்த முகத்தோடு தேர்தல் பிரசார களத்தில் இறங்கி முஸ்லிம் சமுதாய முஸ்லிம் வேட்பாளர்களைத் தோற்கடிக்கப் போகிறார்? விளக்க முடியுமா? ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் அல்லாஹ்வையும், மறுமையையும், கேள்வி கணக்கையும் நம்புகிறவர்கள். அவர்கள் வாக்ளித்தபடி அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்யாமல், மக்கள் பணத்தை சுருட்டினால், இங்கு தப்பினாலும் அங்கு தப்ப முடியுமா? அவர் களை அல்லாஹ்வின் முன்னால் நிறுத்தி குற்றப்படுத்தி நட்ட ஈடாக அவர்களின் தொழுகை, நோன்பு, ஜகாத், நற்செயல்களில் ஈடு வாங்கிக் கொள்ள முடியுமே. அதற்கு மாறாக பீ.ஜை. முஸ்லிம் வேட்பாளர்களை தோற்கடிக்க களத்தில் இறங்கி பிரசாரம் செய்து மாற்றாரை வெற்றி பெறச் செய்தால், அவர்கள் பதவியில் செய்யும் அட்டூழியங்களுக்கு நாளை மறுமையில் நட்ட ஈடு பெற முடியுமா? வழி இருக்கிறதா? இல்லையே! அவர்களது சுமையின் ஒரு பங்கை இவரல்லவா சுமக்க வேண்டும்.

பின் எப்படி முஸ்லிம் சமுதாயத்திற்காக வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம்களை கடும் பிரசாரம் செய்து தோற்கடிப்பதாக பொதுக் குழுவில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். பீ.ஜை.யின் அற்ப உலக ஆதாய, சுயநல கோர முகம் தெரிகிறதா? இல்லையா?

ஆக, ததஜ தலைமைப் புரோகிதர் பீ.ஜை. யின் இப்படிப்பட்ட உளறல்களை குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்ற அடிப்படையில் தூக்கி குப்பைத் தொட்டிகளில் எறிந்துவிட்டு, பீ.ஜை.யின் கைத்தடிகளும், பக்தர்களும் முஸ்லிம் சமுதாயத்தின் நலனையே குறிக் கோளாகக் கொண்டு (பீ,ஜையின் நலனை அல்ல) 62 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத் தில் முதல் முதலாக முஸ்லிம் சமுதாயத் திற்கென்றே வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம் களை முழுமையாக ஆதரித்து தங்களின் பொன்னான வாக்குகளைச் செலுத்துவதோடு, முஸ்லிம்கள் அனைவரும் ஒருவர் கூட விடுபடா மல் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க முழு மூச்சாகப் பாடுபடுவதே அவர்களுக்கு அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுத் தரும். முஸ்லிம் சமுதாயத்திற்கு நலன் ஏற்பட்டு இழந்த உரிமைகளை மீட்கவும், இருக்கும் உரிமைகளை காக்கவும் வழி ஏற்படும் என்பதை உணர்வில் கொள்வார்களாக. பீ.ஜை.யின் சொந்த நலனை விட முஸ்லிம் சமுதாய நலன் கோடி கோடி மடங்கு மேலானது என்பதை அவரது ஆதர வாளர்கள் உணர்வார்களாக.

எனவே முஸ்லிம் சமுதாய மக்களே உங்களது மார்க்கக் கொள்கை கோட்பாடுகளை அல்லாஹ்வின் மறுமைத் தீர்;ப்புக்கென்று ஒத்தி வைத்துவிட்டு, இவ்வுலகில் மட்டிலுமாவது ஏற்றம் பெற, முஸ்லிம்களின் உரிமைகள் காக்கப்பட சிந்தாமல் சிதறாமல் முஸ்லிம் வாக்குகள் அனைத் தும் முஸ்லிம் சமுதாயத்திற் கென்றே நிற்கும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே கிடைக்க முழு மூச்சாகப் பாடுபடுங்கள். முஸ்லிம்கள் ஒன்று பட்டால் அல்லாஹ் வெற்றியைத் தருவான்.

அந்நஜாத் இதழிலிருந்து வாசகர்: இக்பால்
நன்றி :சத்தியமார்க்கம்.காம்

Friday, May 8, 2009

பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க சகோதரர்கள் விபத்தில் சிக்கினர். 2 பேருக்கு காயம்!

மயிலாடுதுறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க சகோதரர்கள் விபத்தில் சிக்கினர். 2 பேருக்கு காயம்!


மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு ஆதரவாக ம.ம.க., த.மு.மு.க., தொண்டர்கள் உற்சாகத்தோடு களப்பணி ஆற்றி வருகின்றனர். இன்று நோட்டீஸ் வினியோகம் செய்வதற்காக துண்டு பிரசுரங்களோடு 4 மணி அளவில் ம.ம.க சகோதரர்கள் ஆட்டோவில் கும்பகோணத்திலிருந்து சோழபுரம் சென்று கொண்டிருந்தனர். மாணிக்க நாச்சியார் கோவில் என்ற இடமருகே சென்று கொண்டிருதபோது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதனால் ஆட்டோவில் இருந்த சகோதரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சோழபுரத்தை சேர்ந்த தஞ்சை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சகோ. யாசர் என்பவரின் கால் நரம்பு துண்டாகி பெரும் காயம் ஏற்பட்டது. சோழபுரம் கிளை த.மு.மு.க செயலாளர் பக்ருதீனுக்கு கையில் காயம் ஏற்பட்டது.


தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தமுமுகவினர் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றர்.


சகோ. யாசர் ஏற்கெனவே ஒரு கால் ஊனமானவர் அவருக்கு தற்போது மற்றொரு காலிலும் அடிபட்டதால் 5 மணிநேரம் ஆப்ரேசன் செய்ய வேண்டியுள்ளது என மருத்துவர்கள் கூறி விட்டனர். இன்று இரவு ஆப்ரேஷன் நடக்க உள்ளது. காயமடைந்த சகோதரர்களை ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளர் ஜைனுல் ஆபிதின் மற்றும் மற்றும் த.மு.மு.க லி ம.ம.க மாவட்ட நிர்வாகிகள் சென்று நலம் விசாரித்து தேவையான மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்து தந்து வருகின்றனர்.


காயமடைந்த நிலையிலும் தேர்தல் பணிகள் எங்களால் பாதிக்கப்பட்டு விட்டதே என்று அந்த சகோதரர்கள் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. சகோதரர்கள் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.


சகோதர்களின் நலன் விசாரிக்க


9894131996(நசீர்) 9629339953 (சபீர்)

Tuesday, March 3, 2009

மனித நேய மக்கள் கட்சி 6தொகுதிகளில் போட்டி

மனித நேய மக்கள் கட்சி 6தொகுதிகளில் போட்டி
த மு மு க மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் அறிவிப்பு



கோவை-மார்ச்-3
மனித நேய மக்கள் கட்சி வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆறு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர்அலி, மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் அப்துல் சமத், பொருளாளர் ஹாரூண் ரஷீத் ஆகியோர் இன்று கோவையில் நிருபர்களிடம் கூறினார்கள்.

மனித நேய மக்கள் கட்சி பிப்ரவரி 7ம் தேதி துவங்கப்பட்டது. முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுக் கட்சியாக இருந்தாலும், த.மு.மு.க.வின் முழுக் கட்டுபாட்டில் இயங்கும். மனித நேய மக்கள் கட்சிக்கு மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதற்காக தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகிறது.

முதல் கட்டமாக தஞ்சை, மதுரை, மண்டலங்களில் கலந்தாய்வு முடிந்து விட்டது. இன்று கோவையில் நடைபெற்றது. நாளை சென்னை மண்டலத்தில் கலந்தாய்வு நடைபெறும். இன்னும் ஓரிரு நாட்களில் 32 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை, வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சை, திருநெல்வேலி அல்லது தென்காசி தனி ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். ஏதேனும் அரசியல் கட்சிகள் சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எழுத்துப் பூர்வமாக வாக்குறுதி அளித்தால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம்.

இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி நிலவரம் மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

சென்னை உயர்நீதிமன்றம் மோதல் சம்பவம் துர்பாக்கியமான செயல். அப்பாவி மக்கள், காவல்துறையையும், நீதித்துறையையும் நம்பித்தான் இருக்கிறார்கள். அவர்களே பகிங்கரமாக மோதிக் கொள்வது வேதனையானது. மருத்துவனை நோயாளிக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் மறுத்தது போல் இச்செயல்கள் உள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ராணுவ நடவடிக்கையின் மூலம், இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. இவ்வாறாகக் கூறினார்கள். இந்த பேட்டியின் போது மாநிலச் செயலாளர், கோவை உம்மர், மாவட்டத் தலைவர் பஷீர், மாவட்டச் செயலாளர் அமீர், மாவட்ட பொருளாளர் கபீர் ஆகியோர் உடனிருந்தார்கள். பின்னர், த.மு.மு.க. மர்க்கஸில் இன்று பகல் 12.00 மணியளவில் மனித நேய மக்கள் கட்சியின் மேற்கு மண்டலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழுவில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை நியமித்தல் சம்பந்தமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார்கள்.

செய்தி.புகைப்படம்: கோவை தங்கப்பா

Thursday, August 16, 2007

தமிழக முதல்வருக்கு தமுமுக அவசரக் கடிதம்!

தமிழக முதல்வருக்கு தமுமுக அவசரக் கடிதம்

தென்காசி டி.எஸ்.பி. மற்றும் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்

தமிழக முதல்வருக்கு தமுமுக தலைவர் அவசரக் கடிதம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தமிழக முதல்வருக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
''நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று காலையில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த ஆறு நபர்கள் உயிர் இழந்தது மிகுந்த வேதனையைத் தருகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் குமாரபாண்டியனைக் கொலை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டவர்களும், கடந்த மார்ச் மாதம் தமுமுக மாவட்டத் தலைவர் சேட் கானை கொலை செய்யும் நோக்கில் பயங்கரமாக தாக்கியவர்களும் சமீபத்தில் நிபந்தனை பிணையில் விடுதலையாகி வெüயே வந்துள்ளார்கள்.
சாதாரணமாக இதுபோல் நிபந்தனை பிணையில் வெüவருபவர்களுக்கு வெü மாவட்டங்கüல் தான் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்படும். தென்காசியில் தமுமுக மாவட்டத் தலைவர் தாக்கப்பட்ட பிறகு தென்காசியில் நடைபெற்ற சிறுசிறு சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கும் திருச்சியில்தான் நிபந்தனை பிணையில் கையொப்பமிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் குமாரபாண்டியன் கொலை மற்றும் சேட்கான் கொலை முயற்சியில் கைதாகி நிபந்தனைப் பிணையில் விடுதலை செய்யப் பட்டவர்களுக்கு மட்டும் தென்காசியில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து சேட்கானை தாக்கி பிணையில் வெüயில் வந்தவர்கள் தொடர்ந்து முஸ்லிம்களை பல்வேறு வகையில் வீதிகளில் வைத்து மிரட்டி வந்தனர். மாலை நேரங்கüல் சில முஸ்லிம் வீடுகள் மீது கல்வீச்சிலும் இறங்கினர். இவ்வாறு அவர்கள் தென்காசியில் தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்தி வருவது குறித்து நாங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு அவ்வப்போது புகார் களை அüத்து வந்துள்ளோம்.
நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் சேட்கானை மீண்டும் தாக்கி கொலை செய்வோம் என்று அவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மிரட்டி வருவது குறித்தும் காவல்துறையிடம் புகார் தெரிவித்தோம், இருதரப்பிலும் கைதாகி விடுதலை ஆனவர்கள் தொடர்ந்து தென்காசியில் இருப்பது சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் என்பதையும் நாம் முன்கூட்டியே தெரிவித்திருந்தோம், தென்காசி டி.,எஸ்,பி.யாக இருக்கும் மயில்வாகனனும், ஆய்வாளர் சந்திரசேகரனும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களது செயல்பாடுகüனால் பதட்டம் அதிகரிக்க காரணமாகவும் செயல்பட்டனர் என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
தென்காசியில் அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தென்காசியில் தொடர்ந்து அமைதி நிலவ தன்னாலான அனைத்து ஒத்துழைப்பு களையும் அரசுக்கு தரும் என்று உறுதி அüக்கிறோம்.
இக்கோஷ்டி மோதலுக்கு வித்திட்ட தென்காசி டி.எஸ்.பி. மயில்வாகனன் மற்றும் ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநேரத்தில் விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை தென்காசியில் பணியில் அமர்த்த வேண்டும். உயிரிழந்த முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அன்புடன் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.''