.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, December 22, 2011

நிடாகத் விழிப்புணர்வு முகாம்



சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் அந்நாட்டின் மைந்தர்களை குறிப்பிட்ட சதவிகிதம் வேலைக்கு அமர்த்த கட்டாயப்படுத்தும் சட்டமே "நிடாகத் திட்டம்" சவூதிஅரேபியாவின் தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயல் திட்டம் கடந்த 26-11-2011 முதல் கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெருகி வரும் தனது நாட்டு மக்களின் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழிலாளர் மற்றும் சமூக நல விவகார அமைச்சர் ஆதில் ஃபக்கிஹ் அவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.


இச்செயல் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் அமைச்சகம் வணிக துறைகளில் இந்நாட்டினரை சதவிகித அடிப்படையில் பணியில் அமர்த்த உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் சவூதியில் உள்ள நிறுவனங்கள் வண்ணங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன நான்கு விதமான வண்ணங்களில் அதாவது சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் (பிளாட்டினம்) மிகச் சிறந்த என நிர்ணயித்துள்ளது. இதில் சிவப்பு நிற அந்தஸ்தில் உள்ளகம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளார்கள்.

இந்தத்திட்டத்தின் கீழ் பாதிப்புக்குள்ளகி இருக்கும் இந்தியர்கள் அவர்களின் நிலையை அறிந்து கொள்ளும்வகையில் அவர்களின் (இக்காமா) குடியுரிமை அடையாள அட்டை எண் மூலம் தொழிலாளர் அமைச்சக இணையத்தளத்தின் உதவியுடன் அவர்களுக்கு விளக்கம் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகமாக நிடாகத் விழிப்புணர்வு முகாம் 5 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் இந் நிகழ்ச்சியில் பலதரப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர் தொடர்ந்து எதிர்வரும் 24-12-2011ம் தேதி வரை நடைபெரும் இந்த முகாமில் பல லட்சம் தொழிளாலர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியாத் நகரில் உள்ள நெஸ்டோ ஹைப்பர் மார்க்கெட்டில் அந்நிறுவனத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்ச்சியை ரியாத் மண்டலத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், Pleaceindia மற்றும் Sauditimes Magazines ஒறுங்கிணைத்து மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது.

Tuesday, September 6, 2011

ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை தேதி நிர்ணயிக்கப்பட்டது தான் தாமதம்; இனப்படுகொலைக்கு எதிரான போராட்ட சீசன் முடிந்த களைப்பில் இருந்தவர்கள் எல்லாம் கொதித்து எழுந்து, மரண தண்டனைக்கு எதிராக களமிறங்கிவிட்டனர்.

செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர்; இலங்கைப் பிரச்னையை குத்தகைக்கு எடுத்துள்ள வைகோ, நெடுமாறன் மற்றும் சீமான்கள் அனல் கக்குகின்றனர். இவர்கள் அத்தனை பேரும், இத்தனை நாளாய் எங்கிருந்தனர்? முருகனும், சாந்தனும், பேரறிவாளனும் இன்று தான் கொலையாளிகள். சம்பவம் நடந்தபோது அவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. அன்று ஏன் இவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை. இன்று ஐகோர்ட் வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும், வீதியில் இறங்கிப் போராடி, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்கின்றனர். ஆனால், கொலை நடந்த கொஞ்ச நாளில், இதே நால்வருக்காக வழக்கறிஞர்கள் கூட ஆஜராக மறுத்தது, இவர்களுக்குத் தெரியுமா? அவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் துரைசாமியின் வீட்டுக்கு எதிரே, வழக்கறிஞர்களே ஆர்ப்பாட்டம் நடத்தியதை மறந்துவிட முடியுமா?இதிலிருந்து என்ன தெரிகிறது?

இவையெல்லாம் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு நடத்தப்படும் போராட்டங்கள். சிந்தித்து, விஷயத்தின் வீரியத்தைச் சீர்தூக்கிப் பார்த்து நடத்தப்படுபவை அல்ல. மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், தமிழர்கள் என ஒரு கோஷ்டி கோஷம் போடுகிறது. ராஜிவோடு இறந்தவர்கள் மட்டுமென்ன, சிங்களவர்களா? இப்படி குற்றவாளிகளை குற்றவாளிகளாகப் பார்க்காமல், ஒவ்வொருவருக்கும் ஜாதி, மத, இன அடையாளங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தால், ஒருத்தரையும் தண்டிக்க முடியாது.

ஆட்டோ சங்கர் கூட தமிழன் தான். ஏன், "வீரப்பர்' கூட, திடீரென தமிழர்களுக்காக குரல் கொடுத்தார். தமிழர் என்பதற்காக முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுவித்தால், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று இளம்பிஞ்சுகளை நெருப்பில் பொசுக்கிய நெடுஞ்செழியன், முனியப்பன், மாது ஆகிய மூவரும் கூட தமிழர்கள் தான். ராமதாசைக் கேட்டால், "அவர்கள் வன்னிய சொந்தங்கள்' என, இன்னும் நெருக்கம் காட்டுவார். அவர்களையும் விடுவித்துவிட வேண்டியது தானா?
தமிழர்களுக்காக ஒரு குழு, சீக்கியர்களுக்காக ஒரு குழு, தெலுங்கர்களுக்காக ஒரு குழுவெனக் கிளம்பிக் கொண்டிருந்தால், இந்த நாட்டில் சட்டம் எதற்கு, காவல் துறை எதற்கு, நீதிமன்றங்கள் எதற்கு? அத்தனையையும் கலைத்துவிட்டு, வலுவான குழு சொல்வதே வேதாந்தம் என்றாக்கிவிட வேண்டியது தானே."குற்றம் நிரூபிக்கப்பட்ட மூவரின் கருணை மனுவைப் பரிசீலிப்பதில் கடுமையான தாமதம் ஏற்பட்டுவிட்டது; இது அரசியல் சாசனத்துக்கு புறம்பானது; நியாயமற்றது' என, சட்டத்தைக் கரைத்துக் குடித்த ராம் ஜெத்மலானி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர். மூவர் தரப்பிலும் வாதாடிய வழக்கறிஞர்கள் வைத்த வாதம், காலதாமதம் மட்டுமே.

இதே 11 ஆண்டுகள் நான்கு மாத தாமதத்தோடு, "உங்கள் கருணை மனு ஏற்கப்படுகிறது; நீங்கள் விடுவிக்கப்படுகிறீர்கள்' என ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தால், "அதெல்லாம் கிடையாது; நீங்கள் ரொம்ப தாமதமாக முடிவெடுத்துவிட்டீர்கள்; நாங்கள் சிறையில் தான் இருப்போம்' என, சொல்லியிருப்பார்களா?

கருணை மனுவை பரிசீலிப்பதற்கு கவர்னருக்கோ, ஜனாதிபதிக்கோ காலக்கெடு எதுவும் சட்டத்தில் விதிக்கப்படவில்லை. சீக்கிரமாக பரிசீலிக்கச் சொல்லி கேட்டுக்கொள்ளலாம்; அவ்வளவே. கேபினட்டை யாரும் நிர்பந்திக்க முடியாது.காலாகாலத்தில் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றங்கள் தான் வலியுறுத்தி வருகின்றன. அதே நீதிமன்றங்களில் கூட, 25 ஆண்டுக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் இருப்பதை மறந்துவிடுவதற்கில்லை. உணர்ச்சிகளின் உந்துதலில் தீர்ப்புகள் திருத்தப்படுமானால், குற்றங்களின் எண்ணிக்கை ஒருக்காலும் குறையப்போவதில்லை!


அரசியல்வாதிகளின் போட்டா போட்டி!
மூவரின் மரண தண்டனையை மாற்ற வேண்டும் என்பதில், அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் போட்டா போட்டி அலாதியானது. இதற்காகவே கட்சி நடத்தும் வைகோ, ராமதாஸ், நெடுமாறன், திருமாவளவன் மற்றும் சீமான் போன்றவர்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. எந்தப் பிரச்னை பற்றி எரியுமோ, அந்தப் பிரச்னை மீது, முடிந்த வரை எண்ணெய் ஊற்றுவர். தீர ஆராய்ந்து உண்மையை உணரும் நோக்கமில்லாமல், செங்கொடிக்கு சிலை வைக்கும் வரை சென்றுவிட்ட பிறகு, சொல்வதற்கு எதுவும் இல்லை.

தமிழ், தமிழர் பற்றிய அரசியல் எனும்போது, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பங்களிப்பு இல்லாமல் எப்படி? "ஆயுள் முழுவதும் தங்கள் தவறை எண்ணி வருந்தும் விதமாகத் தான் தண்டனை இருக்க வேண்டும்; அதனால், மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்' என, முதல் நாள், கருணை மனு விடுத்தார். மறுநாள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அ.தி.மு.க., அந்தப் பெயரைத் தட்டிச் சென்றுவிடுமோ என்றஞ்சி, "அவர்கள் மூவரையும் விடுதலையே செய்துவிட வேண்டும்' என, ஒரே போடாக போட்டுவிட்டார். தூக்குக் கயிறை எதிர்நோக்கியிருக்கும் முருகன் கூட இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை.

கொண்ட கொள்கையில் உடும்புப் பிடியாக இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட சலனப்பட்டுவிட்டது அதிசயம் தான். முதல் நாள், "எனக்கெல்லாம் அந்த அதிகாரம் கிடையாது' என்றவர், மறுநாளே, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்.


காங்கிரசின் பெயரைச் சொல்லி, அதன் கொடி நிறத்திலேயே, "சேனல்' நடத்துபவர்கள் கூட, இந்தப் பிரச்னையில் தலையிடவில்லை. ராஜிவ் கொலையை நினைவுபடுத்துவதை விட, "ராத்திரி நேரத்து பூஜையில்' பாணி பாடல்கள் தான் கல்லா கட்ட உதவும் என தீர்மானித்துவிட்ட

னர் போல. எல்லாம் ஓட்டு படுத்தும் பாடு. ஆனால், இது ஓட்டாக மாறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.ஏனெனில், நான்கு பேர் கூடி நின்று கோஷம் போடுவதெல்லாம், மக்கள் கருத்தாகிவிடாது என்பதற்கு, கடந்த தேர்தல் முடிவுகளே சாட்சி.


ராஜிவுடன் இறந்தவர்கள் எத்தனை பேர்?கடந்த 1991ம் ஆண்டு, மே 21 இரவு, 10 மணி 18 நிமிடங்களில் வெடித்தது அந்த மனித வெடிகுண்டு. அதில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் குழப்பம் தொடர்கிறது; காரணம் சுலபமானது. இறந்தவர்களை தனித்தனியாக வகைப்படுத்தினால், குழப்பம் தீர்ந்துவிடும்.

மனித வெடிகுண்டின் இலக்கு ராஜிவ். அவரோடு இறந்த ஒரே அரசியல்வாதி லீக் முனுசாமி என்ற காங்கிரஸ் பிரமுகர். இவர்கள் தவிர, ராஜிவின் தனிப் பாதுகாப்பு அதிகாரி பி.கே.குப்தா, எஸ்.பி., முகமது இக்பால், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்டு ஜோசப், சப் - இன்ஸ்பெக்டர் எத்திராஜு, கான்ஸ்டபிள்கள் முருகன், தர்மன், பெண் கா

ன்ஸ்டபிள் சந்திரா, கமாண்டோ வீரர் ரவிச்சந்திரன் என ஒன்பது பேர் பலியாகினர்.இவர்களைத் தவிர, லதா கண்ணன், கோகிலவாணி, சந்தா

னி பேகம், சரோஜாதேவி, டேனியல் பீட்டர் என மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இவர்கள், லதா கண்ணனின் தலைமையில், காங்கிரஸ் பிரமுகர் மரகதம் சந்திரசேகருக்காக பணியாற்ற வந்தவர்கள்.மேற்சொன்ன ஐந்து பேர் தவிர, மனித வெடிகுண்டான தானுவும், அவர்களால் புகைப்படம் எடுக்க நியமிக்கப்பட்ட அரிபாபுவும் உயிரிழந்தனர். ஆக மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 18. இவர்களில் அப்பாவிகள் 16 பேர்; சதித் திட்டத்தில் பங்கு பெற்றவர்கள் இருவர்.


மரண தண்டனையும், மனிதநேயமும்:"இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், 21ம் நூற்றாண்டைப் போன்ற நாகரிக காலத்தில் மரண தண்டனை என்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனம்' என்பது, கொலையாளிகளுக்கு ஆதரவாக கிளம்பியுள்ளவர்களின் வாதம்.


கூர்ந்து கவனித்தால் தான் தெரியும், இவர்களது நோக்கம் மரண தண்டனையை ரத்து செய்வது அல்ல; இந்த மூவரை மட்டும் விடுவிப்பது தான் என்று. ஒருவேளை, அவர்களது வாதம், ஒட்டுமொத்த மரண தண்டனைக்கே எதிரானது தான் என்றால், பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கும், மும்பையைச் சிதறடித்த அஜ்மல் கசாப்புக்கும் கூட மரண தண்டனை கூடாது என்பார்களா?


இந்தக் கேள்வியை, ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, பகிரங்கமாகவே கேட்டுவிட்டார். மரண தண்டனைக்கு எதிராக சண்டமாருதம் செய்தவர்கள் யாரும் சத்தமே காட்டவில்லை. இப்படி ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனையை ரத்து செய்து கொண்டிருந்தால், இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்காது; சட்டாம்பிள்ளைகளின் ஆட்சி தான் நடக்கும். உண்மையான காட்டாட்சியை அப்போது தான் காணமுடியும்.


மரண தண்டனை வரை விதிக்கப்படலாம் என்கிறபோதே அஞ்சாமல், படுபாதகச் செயல்களைச் செய்யத் தயங்காதவர்கள், அதை ரத்தும் செய்துவிட்டால், நெஞ்சுரம் கொண்டுவிட மாட்டார்களா? எந்த அட்டூழியத்தையும் செய்யத் துணிந்துவிட மாட்டார்களா?


"உலகின் 130 நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுவிட்டது; 80 நாடுகளில் மரண தண்டனை இருந்தாலும், அது நிறைவேற்றப்படுவதில்லை' என, புதிதாக முளைத்த சில, "புத்தர்கள்' புள்ளிவிவரம் அளிக்கின்றனர். அதன் பிறகு, அந்த, 210 நாடுகளிலும் கொலைகள் நடப்பதில்லையா, கற்பழிப்புகள் குறைந்துவிட்டனவா, மக்கள் ஞானமடைந்துவிட்டனரா என்பன போன்ற கேள்விகளுக்கு, இவர்கள் பதில் அளிப்பதில்லை.


இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் எல்லா கொலைக் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவதில்லை. அரிதினும் அரிதான வழக்குகளிலேயே அவ்வாறு வழங்கப்படுகிறது. ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரையே கொன்று வீசியது, அரிதான வழக்கில்லை எனில், வேறென்ன?


தவறு செய்பவர்களே இல்லாத நாட்டுக்கு தண்டனைகள் தேவையில்லை; பிஞ்சுக் குழந்தை என்று கூட பார்க்காத காமுகர்களுக்கும், காது தோட்டுக்காக கழுத்தையே அறுக்கும் கிராதகர்களுக்கும், குடிபோதையில் உயிர் பறிக்கும் கொலைகாரர்களுக்கும், குருவியைச் சுடுவது போல சுட்டுத்தள்ளும் கசாப்களுக்கும், பார்லிமென்டையே பதம் பார்க்கத் துணிந்த அப்சல்களுக்கும் மரண தண்டனை அன்றி, வேறென்ன தண்டனை தருவது?


அவர்கள் வாதத்துக்கே வருவோம்... பயங்கரவாதிகளைப் பழிவாங்குவதாகச் சொல்லி, ஒட்டுமொத்த இனத்தையே கொன்று குவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளாரே, இலங்கை அதிபர் ராஜபக்ஷே; ஒருவேளை, அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, சர்வதேச நீதிமன்றம், ஆறு மாத சிறைத் தண்டனையும், 600 ரூபாய் அபராதமும் விதித்தால், இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? நடுரோட்டில் தூக்கில் தொங்கவிட வேண்டும் என கொக்கரிக்க மாட்டார்களா?


தண்டனைக்கு உள்ளானவர்களை, மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்று ஒரு தரப்பு கொடி பிடிக்கத் துவங்கியுள்ளது. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ, போதையின் பிடியிலோ இல்லாமல், நன்கு திட்டமிட்டு, ஒரு முறைக்கு இரு முறை ஒத்திகை பார்த்து நடத்தப்பட்டது தான் ராஜிவ் படுகொலை. இறந்தது அவர் மட்டுமல்ல; அவரது தொண்டர்கள்; பாதுகாப்புக்கு நின்றவர்கள் என மேலும் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு குடும்பம், குட்டி, அக்கா, தங்கை, அம்மா, அப்பா யாரும் இல்லையா? அவர்களுக்கு மட்டும் மனிதாபிமானம் காட்டப்பட்டிருக்க வேண்டாமா?இப்படி எல்லாம் கேட்டுக்கொண்டே போனால், அவற்றுக்கு ஒருக்காலும் தீர்வு கிடைக்காது. ஒரே வரியில் சொல்வதானால், மனிதாபிமானம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே காட்டப்பட வேண்டியது!


சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்: ராஜிவுடன் கொலையுண்ட ஒரே அரசியல்வாதி, லீக் முனுசாமி, 65, காங்கிரசின் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவான தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் லீகின் பொதுச் செயலராக இருந்தவர். அதனாலேயே லீக் முனுசாமி என்றழைக்கப்பட்டவர். இவரது மகன் , 61, இன்றளவும் தந்தையின் பட்டத்தையும், துக்கத்தையும் சுமந்துகொண்டு இருக்கிறார்.


சம்பவம் நடந்தபோது ஏற்பட்ட சோகத்தையும், தற்போதைய நிகழ்வுகளையும் பற்றி அவர் கூறியதாவது:ராஜிவ் கொல்லப்பட்ட அதே இரவில், மயிலை மாங்கொல்லையில் ஒரு பொதுக்கூட்டத்தில் இருந்தேன். தொலைத்தொடர்புத் துறையில் பணிபுரிந்த, குடும்பத் தோழி ஒருவர், எங்கள் வீட்டுக்கு போன் செய்து, "ராஜிவ் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன; உங்கள் தந்தை எங்கே?' என விசாரித்தார்.தேர்தல் பணிக்காக, எங்கள் தந்தை ஒரு வாரமாக அங்கே தான் முகாமிட்டிருந்தார். பதறியடித்து, போளூர் வரதன் வீட்டுக்குச் சென்றோம். அவர், உண்மையைச் சொல்லத் தயங்கி, "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்றார்.எந்த மருத்துவமனை எனத் தெரியவில்லை. சாலையெங்கும் நெருப்புக் கோளம். திரும்பிய இடமெல்லாம் கலவரக் காட்சி. அரை கிலோ மீட்டர் தூரம் கடக்க, அரை மணி நேரம். காரின் முகப்பில் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க., கொடிகளைக் கட்டி, அப்பல்லோ, அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் என, அந்த நள்ளிரவு நேரத்தில் ஒவ்வொரு மருத்துவமனையாக ஓடினோம்.


அதிகாலை 3 மணிக்கு, வீட்டிலிருந்து ஒரு செய்தி வந்தது. "வானொலியில், ராஜிவோடு இறந்தவர்களின் பட்டியலில், முனுசாமி என்ற பெயரையும் சொல்கின்றனர். அது நம் தந்தையாக இருக்குமோ' என, கதறினர்.அப்படியே ஸ்ரீபெரும்புதூருக்குத் திருப்பினோம். அங்கிருந்த ஒரு போலீஸ் அதிகாரி, உள்ளூர் மருத்துவமனையில் தந்தையின் உடல் - ஆம், உடல் - இருப்பதாகக் கூறினார். தந்தையைப் பார்த்ததும், வெடித்துப் பிளிறினோம். கை துண்டாகியிருந்தது. வயிறு கிழிந்திருந்தது.


"ஒருவன் கூட உயிர் பிழைக்கக் கூடாது; பிழைத்தவனும் ஒழுங்காக நடமாடக் கூடாது' என்ற நோக்கத்தில், வெடிகுண்டில், ஆணிகளைச் செருகியிருப்பர் போல. தந்தையின் உடலெங்கும் இரும்புத் துகள்கள் துளைத்திருந்தன. ஒவ்வொன்றாய் அகற்ற அகற்ற, பச்சை ரத்தம் பாய்ந்தது.எங்கள் குடும்பத்துக்கு முகவரியாய், முழுமதியாய் இருந்தவர் அப்பா தான். மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என, அவருக்கு ஆறு பிள்ளைகள். இருவருக்குத் தான் திருமணமாகியிருந்தது. இன்னும் நாலு பேரை கரையேற்ற வேண்டியிருந்த நேரத்தில், இந்த சதிக்கு இரையானார்.


இப்படி எத்தனையோ குடும்பங்கள்; எத்தனையோ துயரங்கள். அத்தனையையும் மறந்துவிட்டு, திடீரென கிளம்பியிருக்கிறது மனிதாபிமான கோஷம். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம், நியாயம் கிடைத்திருக்கிறது என நினைத்திருந்த நேரத்தில், அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும் என ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கிறது.


தமிழக வரலாற்றில் ஆறாத வடுவாய்ப் போன ராஜிவ் கொலை வழக்கை, இம்மண்ணின் மக்களால் ஒருக்காலும் மறக்கவும் முடியாது; மன்னிக்கவும் முடியாது. உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்துவிட்டவர்களுக்கோ, அடிதடி முற்றி மரணம் ஏற்பட்டிருந்தாலோ மன்னிப்பு வழங்கலாம். இது, திட்டமிட்ட படுகொலை. பிரதமர் வி.பி.சிங் கூட்டத்திலேயே ஒத்திகை பார்க்கப்பட்ட படுபாதகம். அன்னிய நாட்டு சதியோடு நடந்த கொடூரம்.


ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரையே கொன்றவர்களை, சாதாரண கொலையாளிகளோடு கூட ஒப்பிடக் கூடாது. சட்டம் எல்லாருக்கும் சமம் என்று சொல்லிவிட்டு, இவர்களை மட்டும் மன்னிப்பது நியாயமில்லை. அப்படியானால், ராஜாவையும், கனிமொழியையும், கல்மாடியையும் கைது செய்வது எதற்காக? ஊழல் செய்தவர்களுக்கே தண்டனை எனும்போது, உயிரைக் குடித்தவர்களை எப்படி விட்டுவைக்கலாம்?


தமிழக முதல்வருக்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்... 1991க்கு முன்பு இருந்ததைப் போல, தமிழகத்தில் மீண்டும் விடுதலைப் புலிகளின் ஆதரவுக் கூட்டம், பல பெயர்களில், பல போர்வையில் புற்றீசல் போல முளைக்கத் தொடங்கியிருக்கிறது. இவற்றை முளையிலேயே கிள்ளி எறியவில்லை என்றால், தேசத் தலைவர்களின் இழப்பைத் தடுக்கவே முடியாது போகும்.இவ்வாறு குமுறி முடித்தார், லீக் மோகன்.


அதே சம்பவத்தில் பலியான இன்னொருவர், இளையான்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட எஸ்.பி., முகமது இக்பால். அவரது மகன் ஜாவித் இக்பாலுக்கும் ஆவேசம் அடங்கவில்லை.


"தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்களாம். நாங்கள் மட்டுமென்ன ஜப்பானியர்களா? இவர்கள் கொலை பண்ணிக்கொண்டே இருப்பர்; நாம் மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?""எங்கள் தந்தைமார்களை இழந்து, நாங்கள் அனாதையாக நடுத்தெருவில் நின்றோமே. எங்களுக்கெல்லாம் குடும்பம், குட்டி இல்லையா? முருகனுக்கும், சாந்தனுக்கும் மட்டும் தான் இருக்கிறதா?


""இந்தக் கொலையாளிகளுக்கு விரைவாக தண்டனை கொடுக்க வேண்டும் என கேட்காதது தான் நாங்கள் செய்த குற்றமா?'' என கொதித்தெழுந்தவர், வீட்டுக்கு அழைத்துச் செல்லத் தயங்கினார்.""அப்பாவின் மரணம் பற்றி பேசினாலே அம்மா கதறத் தொடங்கிவிடுகிறார்,'' என காரணம் சொன்னார். ""எங்கள் குடும்பத்துக்கு நடந்த, "துன்பியல் சம்பவம்' கொலையாளிகள் குடும்பத்துக்கு ஏன் நடக்கக் கூடாது?'' என, அவர் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.

நமது சிறப்பு நிருபர்

நன்றி: தினமலர்.

Sunday, September 4, 2011

சவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு...

- ஹூஸைன்கனி


சவூதியில் "ஹுரூப்" "Run away " "هرب" என்ற விதியை இந்தியர்கள் மீது வழுக்கட்டாயமாக திணித்து அவர்கள் பாதிக்கப்படுவதை ரத்துசெய்யும் பணியில், இந்திய வெளியுறவு துறை, இந்திய ஜனாதிபதி, இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை, சவூதி மன்னரின் தனிப்பிரிவு போன்ற துறைகளின் தனிக்கவனத்திற்கு கொண்டு சென்று 'ஹுரூப்' என்று சொல்லக்கூடிய அந்த கொடிய சட்டம் எந்த காரணமுமின்றி இந்தியர்கள் மீது பாயாமல் தடைசெய்ய, சவூதி அரேபியா மத்திய மண்டல தமுமுக மற்றும் கேரளா அசோஸியேஷன் இணைந்து கூட்டுநடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கின்றன. அதற்கான அனைத்து சட்டப்பூர்வ ஆலோசனைகளும் பெற்றப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். இது சம்பந்தமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி அவர்களிடம் கேரளா அசோசியேசன் நிர்வாகிகள் மூலம் நேரடியாக பேசப்பட்டுள்ளது. சவூதி வாழ் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதென்ன சட்டம்... "ஹூரூப்"...?

"ஹூரூப்" என்று சொல்லக்கூடிய இந்த சட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், உதாரணமாக ஒருவரிடம் 15 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர் தனது பணியை முடித்துக் கொண்டு தாயகம் திரும்ப முடிவெடுக்கிறார் என்றால் அவர் பணியாற்றிய அந்த 15 ஆண்டுகளின் சர்வீஸ் பணம் வழங்க வேண்டும். அதை வழங்காமல் அவரது பாஸ்போர்ட்டை 'ஜவாஸாத்தில்' (பாஸ்போர்ட் அலுவலகத்தில்) ஒப்படைத்து இவர் ஓடி விட்டார் என்று அவரின் ஸ்பான்சர் புகார் செய்தால் எந்த கேள்வி கணக்குமின்றி அவர் குற்றாவாளி பட்டியலில் சேர்ந்து விடுகிறார். ஏற்கனவே அவரின் கைரேகைகள் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் அதன் பின் அவர் எந்த நிலையிலும் சவூதி மற்றுமின்றி வலைகுடாவின் எந்தப் பகுதிக்கும் வர முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

இந்தச் சட்டத்திலிருந்து நமது நாட்டினரை பாதுகாக்க நமது தூதரகத்திற்கு அதிகாரம் உயர்த்தப்பட வேண்டும். ஒரு இந்தியர் ஹுரூப் சட்டத்தின் கீழ் வந்தால் தூதரகம் தலையிட்டு உண்மைநிலையை கண்டறிந்து உடனடியாக அவருக்கு நீதி கிடைக்க முன்வரவேண்டும் அதற்கு இந்தியத் தூதரகத்தின் தரம் உயர்த்தப்பட்டு சவூதி வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
வழக்கின் முக்கிய நோக்கம்:

சவூதியில் செயல்படும் இந்திய தூதரகத்திற்கு போதிய அதிகாரம் இல்லாததால்... சவூதி அரேபியாவிற்கு பணிக்கு வரும் பணியாளர்களை அவர்களின் ஸ்பான்சர்கள் கொத்தடிமைபோல் நடத்தும் அவல நிலை, வேலைக்கு தகுந்த ஊதியமின்மை, உரிய நேரத்தில் சம்பளம் கொடுக்காதது, வாகன ஓட்டுனர்களுக்கு- குறிப்பாக வீட்டு வாகன ஓட்டுனர்களுக்கு அவர்களின் இக்காமா, வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விபத்து காப்பீடு போன்ற அடிப்படை உரிமைகள் கூட வழங்க மறுப்பது, விபத்துகள் ஏற்பட்டால் தொழிலாளியின் ஊதியத்தில் பிடித்தம் செய்வது, வீட்டுப் பணிப்பெண்கள் படும் சொல்லொன்னாத் துயரங்கள்... போன்ற அவலநிலை நிலவுகிறது.

இதுபோன்ற செயல்களை கண்டிக்கும் உரிமையைும் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு அவர்களுக்குரிய உரிமையை உரிய நேரத்தில் பெற்றுக் கொடுக்கும் புதிய முறையை கொண்டு வர சட்ட ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளும் இந்திய தூதரகத்தின் அதிகாரம் உயர்த்தப்பட வேண்டும். இந்திய தூதரகத்தில் சவூதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் காவலாளிகள் நியமிக்கப்படவேண்டும். 24 மணிநேரமும் அவசர உதவிக்கு தொடர்பில் இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து பணிக்கு வரும் ஒவ்வொரு பணியாளருக்கும் வேலை ஒப்பந்த படிவத்தில் தூதரக மேற்பார்வையுடனான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இது போன்ற அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

பிற தூதரகங்களுக்கு உள்ள உரிமை போன்று...

சவூதி அரேபியாவில் செயல்படும் ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் தற்போது (சில மாதங்களுக்கு முன்) இலங்கை போன்ற தூதரகங்கள் தங்களின் முழு அதிகாரத்தை பயன்படுத்தி தன் நாட்டு குடிமக்களுக்கு நிவாரணமும் அவசர உதவிகளும் செய்து வருவது போல், 20 இலட்சத்திற்கும் அதிகமாக பணியாற்றும் இந்திய மக்களுக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சவூதி தொழிலாளர் நல அமைச்சகத்திடம் முறையிட்ட போது அதன் அதிகாரி...

'முதன் முதலாக ஒரு இந்தியர் தனது மக்களுக்காக முறையிடும் முதல் புகாராக உள்ளது (!?)' என்று வியந்து பாராட்டினார். 'இன்ஷாஅல்லாஹ் அனைத்து உரிமைகளுக்கும் நாம் உதவிகள் செய்வோம்' என்று சொல்லிய அமைச்சகம் 'முதலில் உங்களின் கோரிக்கையை இந்திய உச்ச நீதி மன்றத்திலும் பாராளுமன்றத்திலும் ஒலிக்கச் செய்யுங்கள்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இன்று செப்டம்பர் 3-ம் தேதி தற்போதுள்ள இந்தியத் தூதர் Mr.Talmiz Ahmad தனது பணிக்காலம் முடித்து திரும்பிச் செல்கிறார். புதிய தூதர் Mr.Hamid Ali Rao எதிர்வரும் 15-ம் தேதி பொறுப்பெடுக்க உள்ளார். புதிய தூதர் UN-ல் பணியாற்றிய IAS அதிகாரி என்று அறிந்துள்ளோம். அவர் பொறுப்பிற்கு வரும் முன் வேண்டிய தகவல்கள் சேகரித்து இன்ஷா அல்லாஹ் கோரிக்கைகள் முன் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

அதனடிப்படையில் http://www.hurub.com/ என்ற இணையம் கேரளா அசோசியேசன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உள்ள மனு படிவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முழுத்தகவல்களையும் உள்ளீடு செய்யவும். இதில் உள்ளீடு செய்யும் புகார்கள் அனைத்தும் உடனடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதி மற்றும் வெளியுறவுத்துறை போன்ற துறைகளுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சவூதியில் 2 லட்சம் இந்தியர்கள் பாதிக்கபட்டு சட்ட உதவிகளின் தேவை உள்ளவர்களானக இருக்கிறார்கள் என்ற தகவல் நம்மை பெரும் துயரில் ஆழத்தி உள்ளது. அதிகாரப்பூர்வமான புகார்கள் முறையான வகையில் சென்றால்தான் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் ஆகவே இந்த இணையத்தில் உள்ள படிவத்தில் தங்கள் (சவூதி அரேபியாவில்) பகுதியில் பதிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தகவல்களை உள்ளீடு செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம்.


சவூதியில் உள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வளர்களும் உங்களுக்குத் தெரிந்த பாதிக்கப்பட்டவர்களின் முழுத்தகவல்களையும் மேலே குறிப்பிட்டுள்ள http://www.hurub.com/ இந்த இணைய முகவரியில் உள்ள மனு படிவத்தில் பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக தமுமுக அனைத்து மண்டல, கிளை நிர்வாகிகளும் இந்த பணியை மேற்கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம். சவூதி வாழ் இந்தியர்கள் எதற்கும் அந்த வலைப்பக்கத்தை புக்மார்க்கில்/ஃபேவொரைடில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். யாருக்கேனும் உபயோகப்படலாம்.

குறிப்பு:- இந்த மின்அஞ்சலை அனைத்து சகோதரர்களுக்கும் அனுப்பி வைக்கவும்..! முடிந்தால் நீங்கள் அறிந்த இந்திய பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்து அனைவரையும் சென்றடையச் செய்யவும்..! 20 இலட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு நடவடிக்கையில் தாங்களும் பங்கெடுக்கும் படி அழைக்கின்றோம்..!

Thursday, July 7, 2011

யார் சுனாமி திருடர்கள் என்று மக்கள் தீர்மானிக்கட்டும்.

சமீப நாட்களாக சுனாமி திருடர்கள், சுனாமி திருடர்கள் என்று ஒரு திருட்டுக் கூட்டம் பிதற்றிக் கொண்டு திரிகிறது. அதாவது திருவிழாவில் திருடிய திருடன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள திருடன் திருடன் ‍என்று கத்திக் கொண்டு போவது போல் திருட்டுக் கூட்டம் அடுத்தவர்களைப் பார்த்து திருடன் என்று கூறுகிறது.

யார் சுனாமி திருடர்கள் என்று மக்கள் தீர்மானிக்கட்டும்.

கடற்கரையே இல்லாதா வேலூர் மாவட்டத்திற்கு கணக்கு எழுதியவர்கள் இவர்கள் இதோ ஆதாரங்கள்.

மார்ச் 17 - 23, 2006 உணர்வு இதழில் வெளிவந்த கணக்குகள்.

சுனாமியின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணம் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கே கொடுக்கப்பட்டது என்றும் அதிலிருந்து எதையும் அவர்கள் தொட்டதில்லை என்றும் பீற்றிக் கொள்ளும் ததஜவினரே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? இதோ உங்கள் தலைமை வெளியிட்ட கணக்குகள்.

1. சுனாமி ரசீது பிரிண்டிங் செலவு 9,000. இது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய்ச் சேர்ந்த செலவு அல்ல. இந்தச் செலவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியான எந்த பயனும் இல்லை. எந்த பிரிண்டிங் வேலையாக இருந்தாலும் அது பி.ஜே. மைத்துனன் ஷம்சு மூலமோ இன்னொரு மைத்துனன் இதாயதுல்லாஹ் மூலமோதான் நடந்தாக வேண்டும். சிவகாசிக்கு போய் பிரிண்ட் செய்யப்பட வேண்டியதாக இருந்தாலும் சரி. இது த.த.ஜ.வில் எழுதப்படாத விதியாக உள்ளது. ஆக இந்த பிரிண்டிங் செலவு மூலம் இலாபமாக குறைந்தது கால் சதவீதம் பி.ஜே. குடும்பத்திற்குத்தான் சேர்ந்துள்ளது.

2. பாலிதீன் பைகள் 1,500. இந்தச் செலவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர்ந்தது அல்ல.

3. நிவாரணப் பணியாளர்கள் பனியன் தொப்பி 20,000. திடீரென வந்ததுதான் சுனாமி. அது வந்தவுடன் காப்பாற்ற சென்றவர்களுக்குப் பெயர்தான் நிவாரணப் பணியாளர்கள். முதலிலேயே தங்களுக்கு பனியன் தொப்பி வாங்கச் சென்றால் அவர்கள் சுனாமி நிவாரணப் பணியாளர்களா? சுனாமி கொள்ளையர்களா? அது வரை பனியன் தொப்பிக்கு கூடவா வக்கற்று இருந்திருக்கிறார்கள்? அவர்கள் 20,000க்கு வாங்கியதாகக் காட்டும் பனியன் தொப்பிகளில் டி.என்.டி.ஜே. கொடியுடன் கூடிய கலரில் உள்ளது. சுனாமி வந்தது 2004 டிசம்பரில். ஐ.ஜே.பி.யின் கொடியை திருடி த.த.ஜ.வால் முடிவு செய்யப்பட்ட கொடி என்ற பொய்யை அறிவித்தது. 2005 மார்ச்சில். 2005 மார்ச்சுக்குப் பிறகு வாங்கிய த.த.ஜ. பனியன் தொப்பிகளை சுனாமி கணக்கில் சேர்த்துள்ளார்கள். ஆக த.த.ஜ. பனியன் தொப்பி போட்டுத் திரிபவர்களைக் கண்டால் சுனாமி திருடர்கள் என எளிதில் அடையாளம் காணலாம். இதுவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய் சேர்ந்த செலவு அல்ல. இந்த பனியன் தொப்பி வாங்கியதில் உள்ள லபாமும் பி.ஜே. குடும்பத்திற்கே போய் சேர்ந்துள்ளது.

4. டி.ஏ. 5,260. இந்த டி.ஏ. யாருக்கு? சுனாமி நிவாரணப் பணியாளர்கள் போர்வையில் வந்த சுனாமி கொள்ளையர்களான த.த.ஜ.வினருக்குத்தான். இதுவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய் சேர்ந்த செலவு அல்ல.

5. டெம்போ ஆட்டோ வகை 235.

6. டீ செலவு 30.

7. நிவாரணப் பொருட்கள் பாதுகாக்க இரவு வாட்சுமேன் 30. த.த.ஜ.வின் சுனாமி நிவாரணப் பொருட்களை பாதுகாக்க இரவு வாட்சுமேனாக யார் இருந்திருப்பார்கள். த.த.ஜ.காரன்தான் இருந்திருப்பான். கூலி வாங்கும் இவனுக்குப் பெயர் நிவாரணப் பணியாளனா? த.த.ஜ. காரன் இல்லை என்ற வாதம் வைப்பார்கள். ஒரு இரவு கூட வாட்சுமேனாக இருக்க த.த.ஜ.வில் ஆள் இல்லையா?

8. ஆட்டோ கூலி 50.

9. நபர் கூலி 50. நபர் கூலி எதற்கு என்ற விபரம் இல்லை. இந்த வேலையை கூட கூலி கொடுக்காமல் செய்ய த.த.ஜ.வில் ஆள் இல்லை. ஒரு நபர் கூட இல்லை.

10. ஈரோடு அரிசி இறக்க 80. அரிசியை கூட கூலி இன்றி இறக்க த.த.ஜ.வில் ஆள் இல்லை. அதுவும் மாநில தலைமையின் லட்சணம் இது. ஆக த.த.ஜ.வே கூலிப்படைதான் என்பதற்கு இது ஆதாரம்.

11. கூரியர் 309.

12. போட்டோ 250. த.த.ஜ.வினர் கூலி வாங்கி விட்டு செய்த வேலையை சேவையாகக் காட்ட எடுக்கப்பட்ட போட்டோக்கள் செலவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தலையில். பத்திரிக்கை என்ற முறையில் உணர்வில் கேமரா இருந்துமா இந்த உணர்வற்ற இரக்கமற்ற ஈனச் செயல். உணர்வு கேமராவில் எடுத்து விட்டு எழுதப்பட்ட மோசடி கள்ளக் கணக்குதான் இது. பள்ளிக் கணக்கிலேயே கள்ளக் கணக்கு எழுத ஆலோசனை கூறிய மகான் ஆயிற்றே அண்ணன் பி.ஜே.

http://mdfazlulilahi.blogspot.com/2002/08/13-2.html

13. ஆட்டோ 97.

14. கடிதம் தபால் தலை 474.

15. ஜெராக்ஸ் 100. த.த.ஜ. தலைமையில், உணர்வில் ஜெராக்ஸ் மிஷின் இல்லையா? இதுவும் உணர்வில் எடுத்து விட்டு எழுதப்பட்ட மோசடி கள்ளக் கணக்குதான்.

16. போக்கு வரத்து 7725.

17. உணர்வு 2,00,000.

18. இரண்டு மாத தல ஒளிப்பதிவு கேமரா வாடகை 60,000.

19. ஒளிப்பதிவுக் குழு உணவு மற்றும் பிரயாணம் 60 நாள் 12,000. சுனாமி பெயரால் ஒளிப்பதிவுக் குழு மட்டும் இரண்டு மாதம் தின்று உள்ள தொகை மட்டும் 12,000. த.த.ஜ.வின் விளம்பரத்துக்கு எடுக்கப்பட்ட எல்லா வீடியோ செலவையும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர வேண்டிய பணத்திலிருந்து எடுத்து விட்டார்கள்.

20. நிதி உதவி கோரி விளம்பரம் 180 நாள். 50,000. த.மு.மு.க.வின் தஞ்சைப் பேரணிக்கு பாக்கர் அல்லாஹ்வுக்காக இலவசமாக விளம்பரம் செய்தார் என்று கூறி பி.ஜே. நீலிக் கண்ணீர் வடித்தார். அது பொய் என சான்று பகிர்கின்றது இந்த சுனாமி கொள்ளை. இதில் விளம்பர கமிஷனில் பி.ஜே.க்கு போனது எவ்வளவு என்பது பாக்கருக்கு மட்டுமே தெரியும்.

21. எடிட்டிங் கன்வேஷன் மற்றும் ஒளிபரப்புச் செலவு 78,000. அந்த நேரத்தில் டாண் டி.வி. எடிட்டிங் வகைக்கு என பிஜே மகன் முஹம்மதுக்கு மாதம் 75 வரை சவூதியிருந்து வர வகை செய்தவர் பி.ஜே. சுனாமி எடிட்டிங்கிலாவது விட்டுக் கொடுத்து இருக்கலாம்.

22. தலைமை மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கல்வி உதவிக்காக நேரடியாக செலவு செய்யப்பட்டது 44,200.

தலைமை மூலம் நேரடியாக செலவு செய்யப்பட்ட சுனாமி செலவு வகை விபரங்கள் என்று தலைப்பிட்டு அவர்கள் 22 வகையான செலவுகளை எழுதியுள்ளனர். இதில் 21 வகையான செலவுகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக போய் சேர்ந்த செலவுகள் அல்ல. சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக எந்த பயனும் இல்லை. இதை அவர்களே 22வது செலவில் குறிப்பிட்டும் காட்டி உள்ளார்கள்.

சுனாமியில் பாதிக்கப்பட்ட உணர்வு பத்திரிக்கைக்கு 2 லட்சம் ரூபாயாம்.

சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களை படம்பிடித்த வகையில் கேமரா வாடகை 60,000 ரூபாயாம்.


அந்தக் கேமராவை சுமந்து சென்றவர்களுக்கும், அவர்கள் உணவு சாப்பிடுவதற்கும் 12,000 ரூபாயாம்.


விண் டி.வி.யில் ''சுனாமி நிதி அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டதற்கு 50,000 ரூபாயாம்.


அதை எடிட்டிங் செய்ததற்கு 78,000 ரூபாயாம்.


கடற்கரையே இல்லாத வேலூர் மாவட்டத்திற்கு 60,000 ரூபாயாம்.


பாதிப்பே இல்லாத இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 30,000 ரூபாயாம்


சுனாமி பாதிப்பிற்கு 8 மாத காலத்திற்குப் பின் போடப்பட்ட பனியன், தொப்பிக்கு 20,000 ரூபாயாம்

இப்படியாக நீண்டுக் கொண்டே போகிறது கள்ளக் கணக்கு. இவர்களை நம்பி நிதி அனுப்பிய சமுதாய சொந்தங்களே... பாருங்கள் மேற்கண்ட பட்டியலை. இந்த செலவினங்களுக்காகத்தான் உங்கள் வியர்வையை சிந்தி சிறுகச் சிறுகச் சேமித்த உங்களது பணத்தை அனுப்பி வைத்தீர்களா?

இதற்கிடையில் தமுமுகவின் உணர்வு பத்திரிக்கையையும் அதன் உடமையையும் திருடியவர்கள் இப்போது அதை அவர்கள் திருடிவிட்டார்களாம்!?

மக்களே யார் திருடர்கள் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்....

Monday, June 13, 2011

வளைகுடா வாழ் தமிழர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் ரியாத் மாநகரில் நடைபெற்ற அதிமுக முப்பெரும் விழாவில் தமுமுக கோரிக்கை.


அதிமுக சார்பில் சவூதி அரேபியா - ரியாத் நகரில் முப்பெரும்விழா நடைபெற்றது. அதிமுகவின் அம்மா பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த விழா, மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற முதல்வருக்கு பாராட்டு விழா – தேர்தல் வெற்றி விழா – வாக்காளருகளுக்கு நன்றி அறிவிப்பு விழா என முப்பெரும் விழா கடந்த 10-06-2011 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ரியாத் நகர் பத்தாவிலுள்ள கிளாசிக் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது

இவ்விழாவிற்கு கொரடாச்சேரி கோவி. சந்துரு (இணைச்செயலாளர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) தலைமை தாங்கினார். காட்டுமள்ளுர் கோயில் அன்பு என்கிற அன்பழகன் (தலைவர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) முன்னிலை வகித்தார். முகவை ராஜன் என்கிற ராஜேந்திரன் வரவேற்புரை வழங்க, கடையநல்லூர் SM.மைதீன் (செயலாளர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் கூட்டணி கட்சி என்ற வகையில் சிறப்பு விருந்தினார்களாக மனித நேய மக்கள் கட்சியின் தாய்க்கழகமான தமுமுக நிர்வாகிகள் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். ரியாத் மத்திய மண்டல பொதுச் செயலாளர் ஹூசைன் கனி மற்றும் ரியாத் மத்திய மண்டல துணைப் பொதுச் செயலாளர் மீமிசல் OMS. நூர் முஹம்மது ஆகியோர் சமுதாயத்தின் கோரிக்கைகளான இடஒதுக்கீட்டை அதிகரிப்பது, திமுக அரசினால் கொண்டு வரப்பட்ட கட்டாயத் திருமணச் சட்டத்தில் உள்ள குளறுபடிகள் மேலும் முஸ்லிம்கள் காலம் காலமாக முஸ்லிம் ஜமாஅத்களில் நடத்தி வரும் திருமணங்களை அரசு அங்கீகரித்து ஜமாஅத் அல்லது காஜியின் பதிவேட்டை அரசு பதிவாக ஏற்று முஸ்லிம்களின் திருமண நடைமுறைகளில் அரசு அதிகாரிகள் தலையிடுவதை அடியோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என அதிமுக அரசை இந்த சமுதாயத்தின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் அஇஅதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றிக்கு உடலாலும் பொருளாலும் உழைத்திட்ட வாக்களர்களுக்கும், கட்சியினர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக தமுமுக நிர்வாகிகளால் கொண்டுவரப்பட்ட கோரிக்கைகளையும் தங்களின் முப்பெரும் விழா தீர்மானத்தில் இணைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


------------

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது தமுமுக மண்டலப் பொதுச் செயலாளர் ஹூசைன் கனி கூறியதாவது
சவூதி அரேபியா - ரியாத்தில் உள்ள இந்தியத்தூதரகத்தில் வடநாடு மற்றும் தமிழகத்தின் அன்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் பணியாற்றுகிறார்கள், தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்கள் தங்களது குறைகள் மற்றும தேவைகள் சம்பந்தமாக தூதரகத்தை தொடர்பு கொண்டால் மொழிப் பிரச்சனையால் தமிழர்களின் குறைகளும் தேவைகளும் தீர்த்து வைக்கப்படுவதில்லை. அயல்நாட்டுக்கு பிழைப்புத் தேடிவரும் தமிழர்கள் அனைவரும் படித்த பட்டாதாரிகளோ அல்லது பல மொழிகளை கற்றுத் தேர்ந்தவர்களோ கிடையாது. தமிழத்தை தவிர வேறொன்றும் தெரியத நிலையில் அவர்களின் குறைகளை தூதரகங்களில் முறையாக எடுத்துச் சொல்லி தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தமிழர்களுக்கென்று ஒரு தனிப்பிரிவு உறுவாக்கவும் தமிழகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்கவும் அதிமுக அரசை வலியுருத்திக் கேட்டுக் கொள்வதோடு, வட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைகளை களைவதற்கும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு செல்லும் பொதுமக்களிடம் அரசு அலுவலர்கள் நடந்து கொள்ளும் அலட்சியப் போக்குகளை களைந்து நீதமுடன் அரசு அலுவலர்கள் நடந்து கொள்ள ஆவன செய்யவேண்டும் என்று இந்த அரசை வலியுருத்திக் கேட்டுக் கொள்கிறோம் இவ்வறு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

Wednesday, June 8, 2011

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே!

"சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பிஜேயின் கும்பல்" என்று இன்று காலை ஒரு பதிவு வெளியிட்டிருந்தோம். அதற்கு முகநூலில் பதிலளித்திருக்கும் பிஜேயின் ரசிகர்பட்டாளங்கள், தலைவன் எவ்வழியோ அவ்வழியை தவறாமல் கடைப்பிடிக்கும் தொண்டன்கள் அல்லவா? இந்த ரசிகர்கள் கூடட்டம். கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுடன் அர்ச்சனை செய்துள்ளார்கள்.

அவர்கள் நினைத்திருக்கக்கூடும் இதைப்பார்த்தவுடன் அவர்களின் அளவுக்கு அதே டென்சனில் பதில்வரும் என்று... அதுததான் இல்லை! அவர்களை பயிற்றுவித்தவரிடம் சில காலம் இருந்திருந்தாலும் நல்ல தலைவர்களின் வழிகாட்டலின் பாசரையில் பயின்றவர்கள் நாம். மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம். கிரிமினல், திருட்டு, குறுக்குவழி போன்ற கீழ்த்தரமான சிந்தனைகள் நமக்குக்கிடையாது.

அந்த அர்ச்சனைகளைப் படித்தவுடன் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். காரணம்.... நன்மைகள் என்பது அவ்வளவு எளிதாக கிடைக்கக்கூடியவை அல்ல. அவர்களின் கீழ்த்தரமான வார்த்தைகளுக்குப் பகரமாக நமக்கு மறுமையில் நன்மையாக மாறும் என்பதில் எள்முனையளவும் சந்தேகம் இல்லை. அல்லாஹ்வின் அருளால் நான் ஒரு முஸ்லிமாக நிச்சயமாக அவர்களை நான் மறுமையில் சந்திப்பேன் அப்போது என்னைப் பற்றிய கீழ்த்தரமான வார்த்தைக்கு இன்ஷா அல்லாஹ் கணக்குத் தீர்த்துக் கொள்வேன்.

நாம் எடுத்து வைத்துள்ள நியாயமான கேள்விக்கு அவர்களின் பதிலை பாருங்கள்... அதுவும் மனிதநேயர் மக்கள் கட்சி என்ற பெயரில் ID

பெரிதாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும்.

அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்கும் போது தனது அமைப்பையோ தன்னைப் பற்றிய அடையாளமோ தெரியாமல் போலி பெயர்களில் விமர்சியுங்கள் என்று அனுமதி அளித்து TNTJ தலைமை தனது கிளைகளுக்கு எழுதிய கடிதம் உங்களின் பார்வைக்கு.....

பாருங்கள் இவர்களின் அயோக்கியத்தனத்தை....

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே!

சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பிஜேயின் கும்பல்.

சமுதாயச் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


தமுமுக மற்றும் மமகவின் மீது சேற்றை வாரி இறைப்பதையே தனது முழு நேரப்பணியாக செய்துவரும் பிஜே அவர்கள் சமீத்தில் "வடமரைக்காயர் அலுவலகம் யாருக்குச் சொந்தம்? நடந்தது என்ன? சட்டமன்ற போராட்டம் ஏன்?" என்றும் அதற்கு பல காரணங்களையும் கூறி முஸ்லிம்களை முஸ்லிம்களோடு மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் கீழ்த்தரமான யூத பாசிச வேலையை மீண்டும் ஆரம்பித்துள்ளார். வழக்கம் போல் இவரின் பிதற்றல்களுக்கு அமைதியாக இருப்பது போல் இருந்து விட்டோம். ஆனால் தனது ரசிகர் பட்டாளத்தின் மூலம் ஒரு அப்பட்டமான பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி உண்மை போல் சித்தரிக்க முயலுவதால் இந்த பதிவு இடவேண்டிய கட்டயத்திற்கு நம்மை தள்ளிவிட்டார்.

கடந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி ரியாத் மத்திய மண்டல தமுமுக அலுவலகத்தில் சவூதி அரேபியா அணைத்து மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது அதில் தமுமுக நிர்வாகத்திற்கு நிரந்தர வருமானம் மற்றும் சொந்த அலுவலகம் பற்றி ஆலோசனைகள் செய்து ஒட்டு மொத்த வளைகுடா மண்டலங்களும் சேர்ந்து அதற்கான நிதிகளை வளைகுடாவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த நமது சமுதாய மக்களிடம் வசூலித்து மேற்றகண்ட திட்டங்களை நிறைவேற்றுவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தமுமுகவின் நிரந்தர வருமானத்திற்காக வசூலித்து வாங்கிய சொத்துக்களில் 7 வடமரைக்காயர் அலுவலகமும் அடங்கும்.

அன்றைய காலகட்டத்தில் தமுமுகவிற்கு அரசு தரப்பிலிருந்து பல்வேறு நெருக்கடிகள் இருந்து வந்தன. திமுகவின் ஆட்சி காலம் அது, முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட காலகட்டம். வீரியமாக பல போராட்டக்களங்களை தமுமுக முன்னெடுத்துச் சென்ற நேரம் அது. அதன் எதிரொலியாக தமுமுக தடைசெய்யப்பட்டுவிடுமோ எனும் அளவிற்கு அரசின் நெருக்கடிகள் இருந்தநேரம் அது.

தமுமுகவிற்கு வாங்கும் சொத்துக்களை தமுமுகவின் பெயரில் பதிவு செய்யாமல் ஒரு அறக்கட்டளை உறுவாக்கி அந்த அறக்கட்டளைக்கு அப்போது தமுமுக வின் மாநில அமைப்பாளராக பொருப்புவகித்த தொண்டியைச் சேர்ந்த பீர்முஹம்மது மகன் ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படிடையில் அவரை சேர்மனாக நியமித்து சொத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமுமுகவை விட்டு வெளியேறி விட்டார். அவர் வெளியேறும் போது தமுமுகவின் சொத்துக்களில் சிலவற்றையும் தமுமுகவின் செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக உறுவாக்கப்பட்ட உணர்வு வார இதழையும் கலவாடிச் சென்றுவிட்டார்.

ஆண்டுகள் பல ஆனபிறகும் திருந்துவார் என்பதற்காக சில ஆதாரங்களை கண்ணியம் கருதி வெளியிடாமல் இருந்தோம். இப்போது வேதாளம் மீண்டும் முருங்கமரத்தில் ஏறிவுள்ளது.

பீர் முஹம்மது மகன் ஜெய்னுல் ஆபிதீன் தன் நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால்...
  • *வளைகுடா நிர்வாகிகளால் வசூலித்த பொருளாதாரத்திலிருந்து தான் அந்தச் சொத்துக்கள் வாங்கப்பட்டன.
  • *தமுமுகவின் பெயரைச் சொல்லி தமுமுகவிற்காக மட்டுமே வசூலித்த ஆதாரங்களை வெளியிடுவோம். அவரது உரைகள் உட்பட.
( இவர் மார்க்க பிரச்சாரம் செய்யும் பேச்சாளர் என்ற காரணத்தால் இவரது அயோக்கியத்தனம் மேலும் வெளியில் தெரிந்தால் மார்க்கத்திற்கு இழுக்கு வந்துவிடுமே என்ற உயர்ந்த நோக்கில் இது வரை மக்கள் மத்தியில் வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது) இப்பவும் நாம் பொறுமை காக்கிறோம்.

SM பாக்கரின் INTJ என்ற பெயரை நீதிமன்றம் மூலம் ஆக்கிரமிப்பு செய்தது போல் இந்த உலகத்தில் வேண்டுமானால் தனது கிரிமினல் புத்தியாலும் நாவன்மையாலும் வேஷம் போட்டு தப்பி விடலாம் நாளை மறுமையில் ஏகஇறைவனின் நீதிமன்னறத்தில் இறைவனின் பிடி கடுமையாக இருக்கும் என்பதை எச்சரிக்கிறோம்...

Saturday, April 2, 2011

அரசியலை மாற்றுவார்களா..? இந்த அறிவுஜீவிகள்....

இவர்களாவது அரசியலை மாற்றுவார்களா..?

தேர்தல் களத்தில் அறிவுஜீவிகள்

தேர்தல் என்றாலே படிக்காதவர்களும், சினிமாக்காரர்களும், அடாவடிப் பேர்வழிகளும்தான் களம் இறங்குவார்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால், இந்தத் தேர்தலில் விவரமானவர்களும் நிற்கிறார்கள். இவர்கள்தான் களம் காணும் சில அறிவுஜீவிகள்...

ரவிக்குமார்: 'விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அறிவுத் தூண்’ என்று கருதப்படுகிறவர். இளநிலை சட்டம் படித்துவிட்டு, சிண்டிகேட் வங்கியில் 23 ஆண்டுகள் பணியாற்றி, அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவர். சமீபத்தில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'சங்க காலத்தில் அதிகார உறவுகள்’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிவு செய்துள்ளார்.

''அரசியல் என்பது முன்பு உள்ளூர் சார்ந்ததாக இருந்தது. இப்போதோ, உலக அரசியல் வரை தெரிந்திருக்கவேண்டும். பொருளாதாரம், விவசாயம் என மக்கள் சார்ந்த எல்லாவற்றைப்பற்றியும் கூர்ந்த கவனிப்புத் தேவை. என்னைப் பொறுத்த வரை, நல வாரியங்கள் அமைப்பது, நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவது, ஈழத் தமிழ் அகதிகளின் பிரச்னைகள் என தொகுதி சார்ந்த மற்றும் பொதுப் பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து இருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளைத் தொகுத்து, 'சொல்லும் செயலே’ என்கிற தலைப்பில் புத்தகம் கொண்டுவந்துள்ளேன்!'' என்கிற ரவிக்குமார், 'நிறப்பிரிகை’ பத்திரிகையின் ஆசிரியராகவும், மக்கள் சிவில் உரிமைக் கழக மாநிலத் தலைவராகவும் இருந்தவர். 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

பழ. கருப்பையா: அ.தி.மு.க​-வின் இலக்கிய அணித் தலைவர். தமிழகத்தில் கருணாநிதியை விமர்சிப்பவர்களில் முதன்மை​யானவர். 'கருணாநிதி என்ன கடவுளா?’ என்பது இவரது சமீபத்திய புத்தகம். திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர். காங்கிரஸ் கட்சியில் இருந்து அ.தி.மு.க-வுக்கு வந்தவர்.

''ஒரு நாட்டின் முதலமைச்சரால் மரியாதை செய்யப்படுவதைவிட, ஓர் எழுத்தாளனுக்கு என்ன பெருமை கிடைக்கும்? செம்மொழி மாநாட்டுச் சமயத்தில், 'தமிழ்த் தாய் வர மாட்டாள்’ என்று நான் எழுதிய கட்டுரைக்காக, அடியாட்​களை அனுப்பி என் வீட்டைச் சேதப்படுத்தி, காலை உடைத்தார்கள். காவல் துறைக்கு அடித்தவர்களைத் தெரியும். அடிக்கச் சொன்னவர்களையும் தெரியும். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை!

அரசியல் வாழ்வில் போராட்டம்​தான் உயிர்நாடி! ஈழத் தமிழர்களின் விடுதலை போன்ற பல போராட்டங்​களை செய்திருந்தாலும், கடந்த பத்து ஆண்டுகளாக, கருணாநிதி எனும் தீய சக்தியை எதிர்த்துப் போராடி வருவதும் முக்கியமானது!'' என்கிறார் பழ.கருப்பையா.

'மாஃபா’ பாண்டியராஜன்: தே.மு.தி.க-வின் விருதுநகர் வேட்பாளர். மனித வளத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் 'மாஃபா ரான்ட்ஸடட்’ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர். பொறியியல் படித்து, எம்.பி.ஏ. முடித்தவர்.

'மாஃபா’ அறக்கட்டளை மூலம் சென்னை, விருதுநகர், மதுரை மாவட்டங்​களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளிக் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறார். ''குழந்தைத் தொழிலாளி​யாக இருந்து, தீப்பெட்டி கம்பெனிகளில் வேலை செய்து,


பெற்ற கூலியைக்கொண்டு படித்தவன் நான். இன்று தேர்தல் என்பதே முதலீடாகிவிட்டது. இவ்வளவு போட்டுவிட்டு, பல மடங்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் அள்ளிவிட நினைக்கின்றனர். இதை மாற்றினால்தான் அரசியல் உருப்படும், நாடும் உயரும்...'' என்கிற இவர், 'யூ ஆர் அப்பாயின்டட்!’, 'ஆயிரத்தில் ஒருவன்’ என இரண்டு சுய முன்னேற்ற நூல்கள் எழுதியுள்ளார்.

கவிதைப் பித்தன்: தி.மு.க-வின் கந்தர்வக்கோட்டை தனித் தொகுதி வேட்பாளர். கவிஞர். ''பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே இலக்கிய ஈடுபாடு. 12 வயதில் இருந்தே கவிதை எழுதுவேன். 'முரசொலி’யில் 25 ஆண்டுகளாக எழுதுகிறேன். 1982-ல் பேராசிரியர் அன்பழகனிடம் 'கவிச்சுடர்’ பட்டம் பெற்றேன். அந்தப் பெயரிலேயே 'கவிச்சுடர் கவிதைகள்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளியிட்டேன்.

1981-ல் புதுவை அரசாங்கம் பாரதி நூற்றாண்டு விழாவில், நடத்திய கவிதைப் போட்டியில் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அதில் முதல் பரிசு வென்றேன். 1990-ல் தமிழக அரசு எனக்கு 'பாரதிதாசன்’ விருதும், 2006-ல் தமிழக அரசு, சமூக நீதிக்கான பெரியார் விருதும் வழங்கின!'' என்றார் கவிதைப்பித்தன்.

வைகைச் செல்வன்: அ.தி.மு.க-வின் அருப்புக்​கோட்டை தொகுதி வேட்பாளர். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலை முடித்தவர். சட்டமும் படித்​துள்ளார். சென்​னைப் பல்கலைக்​கழகத்தில் 'இணைய இதழியல்’ என்ற தலைப்பில், முனைவர் பட்ட ஆய்வேடு அளித்துள்ளார்.

''15 நூல்கள் எழுதியுள்ளேன். 'காதல் மனப்பாடப் பகுதி’ என்ற புத்தகம் 2001-ல் ஆனந்த விகடனில், எழுத்தாளர் சுஜாதாவால் சிறந்த புத்தகமாகத் தேர்வானது. 'சில்லுக்கருப்பட்டி’ என்ற என் நூல் சாகித்ய அகாடமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. திரைப்படப் பாடல்களும் எழுதியுள்ளேன்!'' என்கிறார் வைகைச் செல்வன்.

உஞ்சை அரசன்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காரர். தலித் இலக்கியத்தின் முன்னோடிகளாக அறியப்படும் 10 பேரில் ஒருவர். இவர் தொடங்கிய 'மனுசங்க’ இதழ், மிகப் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது.

''2002-ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்​தேன். 30 வருடங்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினேன். தலைமை ஆசிரியராகவும் 10 வருடங்கள். 2004-ல் பணியைவிட்டு, அரசியலில் பங்கெடுத்தேன். 2006-ல் சீர்காழி தொகுதியில் 3,000 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றேன். மீண்டும் இந்த முறை இதே தொகுதியில் நிற்கிறேன்! ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்கு அரசியல் மூலம் மட்டும்தான் நல்ல வழி பிறக்கும் என்பது எனது நம்பிக்கை!'' என்கிற இவர், 'எகிறு’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார்.

ஜவாஹிருல்லா: அ.தி.மு.க. கூட்டணியில் ராமநாத​புரம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார். எம்.பி.ஏ. படித்தவர். இணையம் இந்தியாவில் அறிமுகமான காலகட்டத்தில், 'இணைய விளம்பரங்கள்’ குறித்து ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்.

''25 ஆண்டுகள் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தேன். 1990-ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தேன். ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் கலந்துகொண்டு, சிறுபான்மையினர் உரிமைகள் பற்றி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தேன். அரசியலில் இருந்தால்தான், மக்களுக்கு நல்ல சேவைகளைத் தர முடியும்!'' என்கிற இவர் எழுதிய நூல்களில், 'பாலஸ்தீன வரலாறு’ முக்கியமானது.

பால் பாஸ்கர்: பா.ம.க-வின் தற்போதைய திண்டுக்கல் வேட்பாளர். ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். 'சுற்றுச்சூழல் கல்வி’ தொடர்பாகத் தற்போது காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார். 'சுற்றுச்சூழல் புதிய கல்வி’ மாத இதழின் ஆசிரியர். 'சுற்றுச்சூழல் வழக்குகள்’, 'உச்ச நீதிமன்றத்தின் முற்போக்குத் தீர்ப்புகள்’ ஆகியவை இவரின் குறிப்பிடத்தகுந்த நூல்கள்.

''குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக 'அமைதி தொழிற்பள்ளி’ என்று ஒரு பள்ளியை நடத்தி வருகிறேன். 'அமைதி கல்வியியல் கல்லூரி’ ஒன்றையும் நடத்தி வருகிறேன். 'பசுமை இயக்கம்’ என்ற 18 மணி நேர வானொலிச் சேவையும் செய்து வருகிறேன். 18 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். 4 ஆங்கிலப் புத்தகங்கள்'' என்கிறார்.

அசன் முகம்மது ஜின்னா: ஸ்டாலின் தொடர்ந்து வெற்றி பெற்ற ஆயிரம் விளக்கு தொகுதியில் இப்போது தி.மு.க. வேட்பாளர் அசன் முகம்மது ஜின்னா. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பி.எல். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. படித்தவர். ஸ்டாலினுக்காக ஒரு இணையத்தளம் உருவாக்கியதில் முக்கியப்பங்கு இவருக்கு இருந்தது. ஈவ் டீசிங்கில் கொல்லப்பட்ட சரிகாஷா வழக்கில் குற்றவாளிகளுக்கு பத்தாண்டு தண்டனை வாங்கிக் கொடுத்தது அரசு வழக்கறிஞராக இவரை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. தகவல் தொழில்நுட்பம், அறிவியல், சட்டம் போன்றவை குறித்து நிறைய கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார்.

2004-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் நல்லுறவுக்குழு சார்பில் அமெரிக்கத் தேர்தலைப் பார்வையிடச் சென்றது. இந்தியா சார்பில் சென்ற இவர், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த காலின் பவுலிடம், 'இந்தியாவை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் சேர்க்க அமெரிக்க்கா உதவ வேண்டும்’ என்று நேரடியாக இவர் கோரிக்கை வைக்க... ''இந்த இளைஞரின் துணிச்சலைப் பாராட்டுகிறேன்!'' என்றாராம் அவர்!

இவர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் தேர்த​லுக்குப் பின் பார்ப்போம்!

- ந.வினோத்குமார்

Tuesday, February 22, 2011

மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன்?

அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட்சி

அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட்சி

Source: www.tmmk.in

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக முஸ்லிம் அரங்கில் எழுச்சி!மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் சொந்த சின்னத்தில் போட்டியிட மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராட்டுகள், வாழ்த்துகள் வரும் வேளையில் ஒரு சிலர் விமர்சனங்களையும் முன் வைக்கின்றனர். பலர் எங்களிடம் அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்ட கேள்விகளைத் தொகுத்து, அதற்கான விளக்கங்களை அளிக்கின்றோம்.

கேள்வி: மாற்று அரசியலுக்கான முன்முயற்சி என்ற பெயரில் மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்குகிறீர்கள். கூடுதல் தொகுதிகளை பெறுவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளீர்கள். ஏன்?

பதில்: சமுதாயத்தின் அரசியல் தலை நிமிர்வுக்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம். அதில் நாங்கள் சமரசம் செய்துகொள்வதில்லை. இப்போது 3 தொகுதிகள் குறித்து ஒரு சிலர் விமர்சிக்கிறார்கள். அதேசமயம் 90 சதவீதம் பேர் பாராட்டுகிறார்கள் என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம். எனினும் விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் என்று சிறு கூட்டமாக இருந்தாலும் அவர்களுக்கும் விளக்கமளிப்பது எமக்கு கடமையாகிறது.

“ஏதோ கொடுத்ததை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்கள்” என்பதுபோல அந்த சிலர் விமர்சிக்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறித்து அதிமுக குழுவுடன் மமக குழு 5 முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்துவிட்டு, அதில் 12 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் 12ல் இருந்து ஏழு தொகுதிகள் என்ற நிலைக்கு வந்தோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் 5 தொகுதிகள் என்ற நிலையில் இதற்கு மேல் எங்களால் இறங்கி வரமுடியாது என கூறிவிட்டோம். பிப்ரவரி 18&ம் தேதி அதிமுக குழுவிடம் எங்களின் நிலைபாட்டை உறுதிபட தெரிவித்துவிட்டோம். அதனாலேயே ஒப்பந்தம் போடுவது ஒத்திப்போய்க் கொண்டிருந்தது. அதிமுக குழு பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறி மூன்று தொகுதிகள் தான் என்ற எண்ணிக்கையை ஏற்கக் கூறி வேண்டிக் கொண்டிருந்தது. ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தார்.

நாம் கடைசியாக 4 தொகுதிகளும், புதுச்சேரி மாநிலத்தில் 1 தொகுதியும் ஒதுக்க வேண்டும் என்று உறுதி காட்டினோம். இதனிடையே மமக மல்லுக்கட்டுவது குறித்து நக்கீரன் உள்ளிட்ட ஏடுகள் செய்தி வெளியிட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே ஜமாஅத்துகள், உலமாக்கள், சமுதாய ஆர்வலர்கள், சமுதாய அறிவுஜீவிகள் என பலதரப்பும் நமக்கு அன்பான வேண்டுகோளை விடுத்தனர். போனமுறை திமுகவிடம் மல்லுகட்டியது போல் வேண்டாம். இம்முறை நமது பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்ற அளவில் சிந்தியுங்கள். கூடுதல் தொகுதிகளை அடுத்தடுத்த தேர்தல்களில் வற்புறுத்துங்கள் என கருத்து தெரிவித்தனர்.

இதே கருத்தை பிப்ரவரி 19 அன்று பல மாவட்ட நிர்வாகிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் நம்மிடம் வலியுறுத்தினர். சமுதாயத்திற்காகத்தான், நாம் கட்சி ஆரம்பித்தோம். சமுதாயத்தின் கூடுதல் பிரதிநிதித்துவத்திற்காகத்தான் போராடுகிறோம். எந்த சமுதாயத்திற்காகப் போராடுகிறோமோ அந்த சமுதாயத்தின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் ஏற்றுக்கொள்வது கட்டாயமாகிறது.

அந்த அடிப்படையில் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைகளுடன் அதிமுக தர முன் வந்த மூன்று தொகுதிகளை இப்போதைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்வது என்றும், மூன்று தொகுதிகளில் வெற்றி வாகை சூடிய பிறகு கூடுதல் தொகுதிகள் என்ற லட்சியத்தை அடுத்தடுத்த தேர்தல்களில் முன்வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கேள்வி: நீங்கள் அதிமுக குழுவுடன் பெரும் போராட்டம் நடத்தியது, விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். உங்களை விமர்சிப்பவர்கள் அதை ஏற்க மாட்டார்களே..?


பதில்: நாங்கள் கூடுதல் தொகுதிகளுக்காகப் போராடியது வேறு யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, இறைவனுக்குத் தெரியும். கடைசியாக நான்கு தொகுதிகளையாவது பெற்றுவிட வேண்டும் என்று உறுதிகாட்டினோம். ஆனால் இறைவன் நாடவில்லை. சமுதாயத்தின் தலை நிமிர்வுக்காக நாங்கள் போராடியதற்கான கூலி இறைவனிடத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளோம். எங்களை விமர்சிப்பவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

கேள்வி: அதிக தொகுதிகள் எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ளீர்கள். அதை ஈடுகட்டும் வகையில் சமுதாயத்தின் நலன் காக்கும் வேறு கோரிக்கைகளை வைத்திருக்கீறீர்களா?

பதில்: செல்வி ஜெயலலிதாவை சந்தித்தபோது பொதுக்குழுவின் தீர்மானப்படி இடஒதுக்கீடு குறித்தும் விரிவாகப் பேசியுள்ளோம். கல்வி முறையில் உருது, அரபி உட்பட சிறுபான்மை மொழிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாராபட்ச போக்கு குறித்தும், திருமண பதிவுச்சட்டத்தில் உள்ள சிக்கல்கள் குறித்தும், பல்வேறு சமுதாய கோரிக்கைகள் குறித்தும் அவரிடம் பேசியுள்ளோம். எல்லாம் நல்லபடியாக நடைபெற அனைவரும் துவா செய்வோம்.

கேள்வி: இந்த மூன்று தொகுதிகளும், புதுச்சேரியில் ஒன்றும் தருவதாக கூறியிருக்கும் ஒரு தொகுதியும் ஒரு வகையில் சாதனைதான் என சமுதாய அரசியல்வாதிகள் பாராட்டுகிறார்களே..

பதில்: உண்மைதான்! 1991-க்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம்கள் நடத்தும் அரசியல் கட்சிக்கு சொந்த சின்னத்தில் மூன்று தொகுதிகளை திராவிடக் கட்சிகள் ஒதுக்கியது இப்போதுதான்! இக்காலக்கட்டத்தில் அப்துல் லத்தீப் அவர்கள் ஒருமுறை 5 தொகுதிகளை திமுகவிடம் பெற்றார். ஆனால் உதயசூரியனில் தான் அனைவரும் போட்டியிட்டார்கள்.

அப்துல்சமது அவர்கள் முஸ்லிம் லீக்கிற்கு அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்களைப் பெற்றார். ஆனால் அவர்களும் இரட்டை இலையில்தான் போட்டியிட்டார்கள்.

ஆனால், அப்துல் சமது, அப்துல் லத்தீப், ஆகியோர் செல்வாக்கோடு இருந்த 1991லிருந்து இப்போதைய 2011 வரை உள்ள இருபது வருடத்தில் தமிழகத்தில் மூன்று தொகுதிகளை சொந்தச் சின்னத்தில் பெற்று, மனிதநேய மக்கள் கட்சி முதல்கட்டமாக நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

கேள்வி: நீங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக, சொல்லி இருந்தால் நிச்சயம் 12 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றும், முழு தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றும் பலரும் வருத்தப்படுகிறார்களே..

பதில்: உண்மைதான். ஆனால் சமுதாயத்தின் தனித்தன்மையும், அரசியல் உரிமைகளும், சுதந்திரப் பேச்சுகளும் முடக்கப்பட்டிருக்கும்.

எந்த பெரிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டோமோ அக்கட்சியின் கொறடா அனுமதியில்லாமல், நமது எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் சுதந்திரமாகப் பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். கடந்த காலத்தில் காயிதே மில்லத்திற்கு பிறகு பல முஸ்லிம் அமைப்புகள் செய்த தவறுகளை நாமும் செய்ய விரும்பவில்லை.

கூடுதல் தொகுதிகளுக்காகவும், தேர்தல் செலவுகளுக்காகவும் நமது உரிமைகளை முடக்க நாங்கள் விரும்பவில்லை. குறைவான தொகுதிகளாக இருந்தாலும், அவை தனித்தன்மையோடும் தன்மானத்தோடும் இருக்க வேண்டும் என்பதால்தான் மூன்று தொகுதிகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: அதிமுக கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளை ஒப்பிடும்போது மமகவுக்கு 3 தொகுதிகள் கிடைத்திருப்பது பரவாயில்லை என பல பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்களே...

பதில்: விபரம் அறிந்தவர்களுக்கு அந்த உண்மை புரியும், போனமுறை அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகளைப் பெற்ற வைகோ அவர்களுக்கு இம்முறை 15 தொகுதிகள் பேசப்படுவதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றது. 80 தொகுதிகள் கேட்ட விஜயகாந்துக்கு 41 தொகுதிகள் பேசப்படுவதாக மீடியாக்கள் தெரிவிக்கின்றன.

முன்பு 2001ல் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட வலுவான கட்சியான புதிய தமிழகத்துக்கு இப்போது அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தேவர் சமுதாயக் கட்சியான: மக்கள் அறிமுகம் கொண்ட, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கும், நாடார் சமுதாயப் பின்னணி கொண்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கும் புதிய தமிழகத்தின் எண்ணிக்கைகள் தான் பேசப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு லட்சத்துக்கும் அதிகமாக ஓட்டு வாங்கிய கொங்கு முன்னேற்றக் கழகத்துக்கு இரண்டு கூட்டணியிலுமே நான்கு தொகுதிகள்தான் பேசப்படுவதாக செய்திகள் வருகின்றன. அது மட்டுமல்ல, மேற்கண்ட அனைவருக்கும் சொந்தச் சின்னங்களில் போட்டியிட அனுமதி கிடைக்குமா? தெரியவில்லை.

இதையெல்லாம் ஒப்பிடும்போது மமகவுக்கு தமிழகத்தில் மூன்று தொகுதிகள் சொந்தச் சின்னத்தில் அளிக்கப்பட்டிருப்பதும், புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொகுதி தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருப்பதும் நல்ல மரியாதையான தொடக்கம் என்பதை பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கேள்வி: இப்போது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு காய் நகர்த்தும் நீங்கள், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தர முன்வந்த ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டிருக்கலாமே...


பதில்: அன்றைய அரசியல் சூழலில், எடுக்கப்பட்ட முடிவு அது. 2004&ல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் 2009&ல் திமுக கூட்டணியில் இல்லை. அவர்கள் விட்டுச் சென்ற 14 தொகுதிகள் உபரியாக இருந்தது.

வட மாவட்டங்களில் மட்டுமே உறுதியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அப்போது இரண்டு தொகுதிகளை கொடுத்து, தமிழகம் முழுக்க செயல்படும் நமக்கு ஒரு தொகுதியை மட்டுமே தருவோம் என்று அரசியல் பாரபட்சத்தை திமுக தலைமை வெளிக்காட்டியது.

அவர்கள் தர முன்வந்த ஒரு தொகுதியை கூட, எங்களுடன் கலந்து பேசி தரவில்லை. நாம் விரும்பிய வேலூரை கவனத்தில் கொள்ளாமல், அவர்களாகவே ராமநாதபுரத்தை முடிவு செய்தார்கள். இரண்டும் நமக்கு பலமானவைதான் என்றாலும், ராமநாதபுரம் அழகிரியின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய தொகுதி.

அந்த நேரத்தில் வக்பு வாரியக் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக நமக்கும், அழகிரிக்கும் கடும் கருத்து வேறுபாடு இருந்தது. இது திமுக தலைமைக்கு நன்றாகத் தெரியும்.
ஒருவேளை ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டு ராமநாதபுரத்தில் போட்டியிட்டு இருந்தால், அழகிரியின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆட்சியில் பங்கு கேட்டதற்காக கூட்டணியில் வைத்தே தங்கபாலுவும், இ.வி.கே.எஸ். இளங்கோவனும் தோற்கடிக்கப்பட்டது போல ‘உள்குத்து’ வேலைதான் நடந்திருக்கும். எது எப்படியோ, கடந்து போன அந்த அரசியல் நிகழ்வுகளை நாம் பெரிதாக்க விரும்பவில்லை. அவற்றை அரசியல் அனுபவங்களில் ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறோம்.

இத்தருணத்தில் ஒரு ஹதீஸை இங்கே நினைவூட்டுகிறோம்.

பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விட சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவரும் ஆவார். இறை நம்பிக்கையாளர் அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்கு பயன்தரும் காரியங்களை அடைய ஆர்வம் கொள். முடியாது என்று எண்ணிவிடாதே. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை. இப்படிச் செய்திருந்தால் அப்படி நடந்திருக்குமே என்று கூறாதே. காரணம் “இப்படிச் செய்திருந்தால்” என்ற வாசகம் ஷைத்தானின் செயலுக்கு வழிவகுக்கும். அல்லாஹ் விதித்தான். அவன் நாடியதை செய்கின்றான் என்று கூறு. (நபிமொழி)

அறிவிப்பாளர்: அபுஹூரைரா ரலி நூல் : முஸ்லிம் (6945)


கேள்வி: என்னதான் நீங்கள் தெளிவாக விளக்கினாலும், ஒரு சிலர் உங்களை விமர்சித்துக் கொண்டே இருப்பார்களே... என்ன செய்யப் போகிறீர்கள்?

பதில்: அவர்களெல்லாம் யார் என்று சமுதாயத்திற்கும், பொதுமக்களுக்கும் தெரியும். சமுதாயத்தில் பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி சுயநலத்திற்காக செயல்படுபவர்கள்: இயக்கம் ஒன்றை உருவாக்கி தலைமையேற்க தகுதியில்லாதவர்கள் தற்போது செயல்படும் இயக்கங்களை வலுவூட்டி, சமுதாயத்திற்கு நலன்களைப் பெற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்டாதவர்கள்: தங்கள் இயக்கத்தின் சார்பாக அரசியல் கட்சியை உருவாக்க முடியவில்லையே என பொறாமைப்படுபவர்கள்: சொந்தச் சின்னத்தில் ஒரு தொகுதியைக் கூட பெற வழியில்லாதவர்கள்: அடுத்தவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் எதையாவது பரபரப்புக்காகவும், புகழுக்காகவும் எழுதுபவர்கள்: & இப்படி இவர்களின் பட்டியல் நீளும்.

அவர்களைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை. காரணம், முன்பு நாம் தனித்து நின்றபோது இவர்களெல்லாம் நம்மை ஏன் ஆதரிக்கவில்லை. அப்போது எங்கே தொலைந்தார்கள்?

ஒருவேளை மூன்று தொகுதிகளை வாங்காமல், நாம் வெளியே வந்திருந்தால், கொடுத்ததை ஏன் மறுத்தீர்கள் என விமர்சிப்பார்கள். வாங்கிய பிறகு, மூன்று தொகுதிகளை வாங்கியது ஏன் என விமர்சிப்பார்கள்.

ஒரு நிலைப்பாடு எடுத்து அதில் வெற்றி பெற்றால் ஒரு மாதிரி பேசுவார்கள். தோல்வியடைந்தால் உடனே மாற்றி பேசுவார்கள்.

ஒரு வேளை கூடுதலாக மூன்று தொகுதிகளை பெற்றிருந்தால், அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வது போல பேசும் இவர்களெல்லாம்: நாம் சந்தியில் நிற்க வேண்டும் என விரும்பும் நரிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய “விமர்சகர்களின்” முகமும், முதுகும் எப்படிப்பட்டது என்று நமக்கு தெரியும். இவர்களால் எந்த நன்மையும் நமக்கு இல்லை.

நமக்கு சமுதாய மக்களும், இயக்கவாதிகளும்தான் முக்கியம். அவர்களது புரிதல்களும், ஆதரவும், அல்லாஹ்வின் அருளும் இருக்கும்போது நாம் எதைப்பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.