அதிமுக சார்பில் சவூதி அரேபியா - ரியாத் நகரில் முப்பெரும்விழா நடைபெற்றது. அதிமுகவின் அம்மா பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த விழா, மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற முதல்வருக்கு பாராட்டு விழா – தேர்தல் வெற்றி விழா – வாக்காளருகளுக்கு நன்றி அறிவிப்பு விழா என முப்பெரும் விழா கடந்த 10-06-2011 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ரியாத் நகர் பத்தாவிலுள்ள கிளாசிக் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது
இவ்விழாவிற்கு கொரடாச்சேரி கோவி. சந்துரு (இணைச்செயலாளர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) தலைமை தாங்கினார். காட்டுமள்ளுர் கோயில் அன்பு என்கிற அன்பழகன் (தலைவர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) முன்னிலை வகித்தார். முகவை ராஜன் என்கிற ராஜேந்திரன் வரவேற்புரை வழங்க, கடையநல்லூர் SM.மைதீன் (செயலாளர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் கூட்டணி கட்சி என்ற வகையில் சிறப்பு விருந்தினார்களாக மனித நேய மக்கள் கட்சியின் தாய்க்கழகமான தமுமுக நிர்வாகிகள் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். ரியாத் மத்திய மண்டல பொதுச் செயலாளர் ஹூசைன் கனி மற்றும் ரியாத் மத்திய மண்டல துணைப் பொதுச் செயலாளர் மீமிசல் OMS. நூர் முஹம்மது ஆகியோர் சமுதாயத்தின் கோரிக்கைகளான இடஒதுக்கீட்டை அதிகரிப்பது, திமுக அரசினால் கொண்டு வரப்பட்ட கட்டாயத் திருமணச் சட்டத்தில் உள்ள குளறுபடிகள் மேலும் முஸ்லிம்கள் காலம் காலமாக முஸ்லிம் ஜமாஅத்களில் நடத்தி வரும் திருமணங்களை அரசு அங்கீகரித்து ஜமாஅத் அல்லது காஜியின் பதிவேட்டை அரசு பதிவாக ஏற்று முஸ்லிம்களின் திருமண நடைமுறைகளில் அரசு அதிகாரிகள் தலையிடுவதை அடியோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என அதிமுக அரசை இந்த சமுதாயத்தின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மனிதநேய மக்கள் கட்சி மற்றும் அஇஅதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றிக்கு உடலாலும் பொருளாலும் உழைத்திட்ட வாக்களர்களுக்கும், கட்சியினர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக தமுமுக நிர்வாகிகளால் கொண்டுவரப்பட்ட கோரிக்கைகளையும் தங்களின் முப்பெரும் விழா தீர்மானத்தில் இணைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
------------
சவூதி அரேபியா - ரியாத்தில் உள்ள இந்தியத்தூதரகத்தில் வடநாடு மற்றும் தமிழகத்தின் அன்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் பணியாற்றுகிறார்கள், தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்கள் தங்களது குறைகள் மற்றும தேவைகள் சம்பந்தமாக தூதரகத்தை தொடர்பு கொண்டால் மொழிப் பிரச்சனையால் தமிழர்களின் குறைகளும் தேவைகளும் தீர்த்து வைக்கப்படுவதில்லை. அயல்நாட்டுக்கு பிழைப்புத் தேடிவரும் தமிழர்கள் அனைவரும் படித்த பட்டாதாரிகளோ அல்லது பல மொழிகளை கற்றுத் தேர்ந்தவர்களோ கிடையாது. தமிழத்தை தவிர வேறொன்றும் தெரியத நிலையில் அவர்களின் குறைகளை தூதரகங்களில் முறையாக எடுத்துச் சொல்லி தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தமிழர்களுக்கென்று ஒரு தனிப்பிரிவு உறுவாக்கவும் தமிழகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்கவும் அதிமுக அரசை வலியுருத்திக் கேட்டுக் கொள்வதோடு, வட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைகளை களைவதற்கும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு செல்லும் பொதுமக்களிடம் அரசு அலுவலர்கள் நடந்து கொள்ளும் அலட்சியப் போக்குகளை களைந்து நீதமுடன் அரசு அலுவலர்கள் நடந்து கொள்ள ஆவன செய்யவேண்டும் என்று இந்த அரசை வலியுருத்திக் கேட்டுக் கொள்கிறோம் இவ்வறு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.
No comments:
Post a Comment