.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, November 22, 2007

HAJ: ஹஜ் யாத்திரைக்கு விளம்பரம் தேவையா?

HAJ: ஹஜ் யாத்திரைக்கு விளம்பரம் தேவையா?



இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமை இறைவனை துதிப்பதற்கான ஒன்றாகவே இருந்து வருகிறது. முன்பெல்லாம் ஹஜ் யாத்தி ரைக்குச் செல்வோர் விருந்தோம்பலை நடத்தி, உறவினர்களுக்கும், ஊர்க்காரர் களுக்கும் பயண செய்தியை தெரிவிப்பார்கள். பகையாளிகளை கூட சந்தித்து தங்கள் பயணத்திற்காக பிரார்த்திக்க சொல்வார்கள்.





ஆனால், இப்போதெல்லாம் ஹஜ் பயணத்தை ஒரு விளம்பரமாகவும், புகழுக் கான ஒன்றாகவும் சிலர் பயன்படுத்துவது வருத்தத்திற்குரிய செய்தியாகும். இதனால் தூய எண்ணங்களோடு ஹஜ்ஜுக்குப் புறப்படும் ஹாஜிகளுக்கும் மரியாதைக் குறைவு ஏற்படுகிறது.





பள்ளிவாசல்களில் ஜும்மா தொழு கைக்குப் பிறகு பயண செய்தியை அறிவிப்பது விருந்தோம்பல் செய்வது இவையெல்லாம் குற்றமாக பார்க்கப் படுவதில்லை. யாரும் இதை விமர்சிக்கவும் மாட்டார்கள். ஆனால் சமீப வருடங் களாக நிலை மாறி வருகிறது. அரசியல் வாதிகளை அழைத்து வாழ்த் தரங்கம் நடத்துவது, ராட்சத டிஜிட்டல் பேனர்கள், சுவர் விளம்பரங்கள், ஆள் உயர போஸ்டரில் ஹஜ் பயணியின் சிரிக்கும் படம், வாழ்த்து சுவரோட்டிகள் என 'அரசியல்' வாடை வீசத் தொடங்கி யுள்ளது.





இவையெல்லாம் முற்றிலும் மார்க்கத் திற்கு விரோத மான செயல்களாகும் இப்படியெல்லாம் செய்து ஹஜ் யாத்தி ரைக்கு செல்வது அதன் நோக்கத்தை சிதைப்பதாகும். இதையெல்லாம் செய் பவர்கள் யார் என்பதை கவனித்தால் அவர்கள் இதற்கு முன்பு மார்க்கத்தை சரிவர பின்பற்றாமல் ஜும்மாவுக்கு மட்டுமே பள்ளிவாசலுக்கு வருகை தருபவர்களாக இருப்பவர்கள் என்பது தான்!





பொதுவாக ஐவேளை தொழுகைப் பேணுபவர்களும், மார்க்ககத் தின்பால் ஈடுபாடு உடையவர்களும் இதுபோன்ற 'அரசியல்' கூத்துகளை நடத்துவதில்லை. சிறிய விருந்துடன் பயண செய்தியை கூறிவிட்டு புறப்படுகிறார்கள். அவர் களை ஊர் மக்களும், ஜமாத்தோடு கூடி வழியனுப்பி வைக்கி றார்கள்.





இப்படிப்பட்ட உண்மையான ஹஜ் யாத்திரீகள் பெருமைக்கும், புகழுக்கும் விளம்பரம் செய்து ஹஜ்ஜுக்கு புறப்படும் நபர் களால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். முன்பெல்லாம் மாற்றுமத நண்பர்களும் கூட, மக்காவுக்கு செல்வதை மரியாதை யுடன் நோக்குவார்கள். அவர்களும் தங்கள் முஸ்லிம் நண்பர்களை வழிய னுப்ப பழங்களோடும், இனிப்புகளோடும் வருவார்கள். இப்போதும் வருகிறார்கள்.





அவர்களும் கூட இத்தகைய விளம்பர பிரியர்களின் நடவடிக்கைகளினால், ஹஜ் பயணத்தின் நோக்கத்தைப் பற்றி தவறாக புரிந்து கொள்ளும் சூழல் உருவாகிறது. இதெல்லாம் குர்ஆன் ஹதீஸ் நெறிமுறைகளுக்கு எதிரானவை என்பதை அவர்களுக்கு இதை சுட்டிக் காட்டுவது நமது கடமையாகும்.
இந்நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உலமாக்கள் இது குறித்து ஜும்ஆ பிரசங்கத்தில் அறிவுறுத்த வேண்டும். ஜமாத் தலைவர்கள் இதற்கு துணை புரிய வேண்டும்.





இல்லையெனில் புனிதமான ஹஜ் யாத்திரை எதிர்காலத்தில் கேலிக்குரிய தாக மாறிவிடும். இதை தடுக்காதவர்கள், நாளை மறுமையில் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.





இதை படிக்கும் சகோதரர்கள் துண்டு பிரசுரங்கள் மூலமாகவோ, பிரதி எடுத்தோ வினியோகித்து சமூகத்தில் தீமைகள் பரவாமல் தடுத்து நிறுத்த உதவ வேண்டும். செய்வீர்களா??

Saturday, November 17, 2007

சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன நீதிபதிகளின் ஆதிக்கம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன நீதிபதிகளின் ஆதிக்கம் 45 நீதிபதிகளில் 5 பார்ப்பனர்கள்; மேலும் இரு பார்ப்பன நீதிபதிகளா?

நன்றி: விடுதலை


உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி தேவை, தேவை!


நவம்பர் 20 அன்று காலை சென்னையில் ஆர்ப்பாட்டம்
தி.க தலைவர் விடுத்துள்ள அறிக்கை

சென்னை - உயர்நீதிமன்றத்தில் தற்போது 45 நீதிபதிகள் உள்ளனர். இந்த நிலையில், மேலும் இரு பார்ப்பனர் நியமனம் செய்யப்பட உள்ளனர்; இதனை எதிர்த்தும், நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி கோரியும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளது. இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை - உயர்நீதிமன்றத்திற்கும், மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கும் சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 49 ஆகும்.
இதில் தற்போது (புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 நீதிபதிகளை யும் சேர்த்து) உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 45 ஆக உள்ளது. இன்னும் 4 நீதிபதிகளின் இடங்கள் காலியாக உள்ளன.

நீதிபதிகளைத் தேர்வு செய்யும் முறை

உயர்நீதிமன்ற நீதிபதிகளை, தற்போது எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்றால், கொலிஜியம் (Colligium) என்று முதல் மூன்று நீதிபதிகளே முடிவு செய்து, மாநில அரசுகளையோ, மத்திய அரசினையோ கருத்து ஏதும் கேட்காமலேயே (நிதி வேண்டுமானால் அதற்கு மட்டும் மாநிலத்தின் முதலமைச்சர், நிதியமைச்சர், சட்ட அமைச்சர் மற்றும் அரசுக்கு நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்து, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைப் பெறுகிறார்கள்) உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்து அனுப்புகின்றனர்!

அப்படி நீதிபதிகளாகத் தேர்வு செய்யப்படுகிறவர்கள் எந்தெந்த விதிகள் - தகுதிகள் காரணமாக (Norms) பரிந்துரைக்கப்படுகின் றனர் என்பதை எளிதில் எவராலும் வரையறுத்துச் சொல்ல இயலாது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லர்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த கொலிஜியம் என்ற மூத்த நீதியரசர்கள் மூவரில், ஒருவர்கூட தமிழ்நாட்டுக்காரர் அல்லர். தமிழ்நாட்டு மக்களின் - மண்ணின் மனோபாவத்தையே முற்றிலும் அறிந்துகொள்ள வாய்ப்பற்றவர்களும்கூட!

முதலாவதாக உள்ள தலைமை நீதிபதி அவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தவர்.
அடுத்தவர் (பார்ப்பனர்) பிகார் மாநிலத்தினைச் சார்ந்தவர்.மூன்றாவது (பார்ப்பனர்) ஒரிசா மாநிலத்தவர்.தமிழ் தெரிந்தவர்களாகவோ, தமிழ்நாட்டையோ, அதன் சமூக நீதி வரலாற்றையோ தெரிந்தவர்களோ உள்ளவர்களும் அல்லர் இவர்கள்; தனிப்பட்ட முறையில் அந்த மூவர் மீது நமக்கு எந்த வெறுப்பும், காழ்ப்பும் கிடையாது.. அவர்களை நேரில் ஒருமுறை பார்த்ததுகூட கிடையாது!

மேலும் மேலும் பார்ப்பன நீதிபதிகளா?

அவர்கள் சமூகநீதியைப்பற்றியோ, மண்ணின் மனோபாவம் (Soil Psychology) பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாமல் பரிந்துரை செய்தனர் - செய்கின்றனர்!

காந்தியாரைக் கொன்ற - கோட்சேவுக்குப் பயிற்சி அளித்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஷாகாவில் அரைக்கால் சட்டையோடு பயிற்சி பெற்ற ஒரு பார்ப்பன வழக்குரைஞர் - நீதிபதியாக்கப்பட பரிந்துரைக்கப்பட்டு, அது இழுபறியாக இன்னமும் இருக்கிறது - நாம் முன்பே இதுபற்றி சுட்டிக்காட்டி எழுதியிருந்தோம்.

இந்த 45 பேரில் ஏற்கனவே 5 பார்ப்பனர்கள் - அவர்கள் விகிதாச் சாரத்திற்கு இரட்டிப்பு மடங்குக்குமேல் நீதிபதிகளாக உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு பார்ப்பனப் பெண் வழக்குரைஞரும் மற்றும் ஒரு பார்ப்பனரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனராம் இந்த கொலிஜியத்தால்!

பெண் வழக்குரைஞர்களில் பார்ப்பனரல்லாத, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களே கிட்ட வில்லையா?இன்னமும் ஒடுக்கப்பட்ட சமு தாயங்களைச் சார்ந்த திறமைமிகு, வருமான வரி அதிகம் கட்டும் அனுபவமிக்க வழக்கறிஞர்கள் (பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் இருந்தும்கூட) உள்ளனரே - அவர்கள் ஏனோ பரிந்துரைப்போர் பார்வையில் படுவதே இல்லை!

பார்ப்பனர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் ஒரே பார்வையில் பார்க்கலாமா?

என்ன மீண்டும் மீண்டும் பார்ப்பனர்களையே பரிந்துரை செய் கிறீர்களே என்று எவராவது கேட்டால், அதற்கு வரும் பதில் என்ன தெரியுமா?
ஏன், எஸ்.சி.,யில் இத்தனை நீதிபதிகள் (சுமார் 10 நீதிபதிகள்) இருக்கையில், பிராமணர்கள் வரக்கூடாதா என்று சொல்லுகிறார் கள் என்ற தகவல்கள் கசிகின்றன!

என்னே கொடுமை! காலங்காலமாக அழுத்தி வைக்கப்பட்ட மக்களும், அவர்கள்மீது ஏறி இன்றளவும் குதிரைச் சவாரி செய்பவர்களும் ஒரே மாதிரி பார்க்கப்படவேண்டியவர்களா? ஒரே அளவுகோலால் அளக்கப்படவேண்டியவர்களா?

இம்மாதிரி நீதிபதிகளுக்கான பெயர்களை, அதில் உள்ளூர் மக்களை அறிந்த நீதிபதிகளுடைய கருத்தையாவது குறைந்தபட்சம் இந்த கொலிஜியம் (மூவர் குழு) தேர்வுக்குழு கேட்டறிய வேண் டாமா?அரசியல் சட்டத்தில் வற்புறுத்தப்பட்ட, சமூகநீதி வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?
இதைவிட வேதனையும் வெட்கக்கேடும் வேறு உண்டா?

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்கும் முறை
உச்சநீதிமன்றத்திற்குரிய நீதிபதிகளை, குறிப்பிட்ட மாநிலத்தி லிருந்து தேர்வுக்குழு பரிந்துரை செய்யும்போது, எந்த மாநிலத்திலிருந்து தேர்வு செய்கிறார்களோ அந்த மாநிலத்தினைச் சார்ந்த நீதிபதியை (அங்கே நீதிபதியாக உள்ளவரை) (உயர்நீதி மன்ற நீதிபதிகள் நியமனங்களில்கூட) அழைத்து கருத்துரை கேட்டு, அதற்கேற்ப பட்டியலைத் தயாரிக்கும் முறை உள்ளதாகத் தெரிகிறது.

அதையாவது இங்கே பின்பற்ற வேண்டாமா?

கண்டதே காட்சி, கொண்டதே கோலமா?

உச்சநீதிமன்றத்தில்கூட ஒரே ஒரு தமிழ்நாட்டுக்காரர்தான் தற்போது நீதிபதியாக உள்ளார். மற்ற பல மாநிலங்களிலிருந்து, 2 அல்லது மூன்று பேர் உள்ளனர். எனவே, தமிழ்நாட்டுப் பிரதிநிதி களாக உரிய தகுதியோடு உள்ள ஒடுக்கப்பட்ட சிறுபான்மைச் சமுதாய நீதிபதிகளுக்கு அங்கும் வாய்ப்பளித்தால்தானே சமூகநீதி கிடைக்கும்.

சமூகநீதி கோரி 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

இவற்றை வலியுறுத்தியும், ஏராளமான பார்ப்பன, ஆண் - பெண் நீதிபதிகளை நியமனம் செய்யப்படுவதைக் கண்டித்தும் வரும் 20.11.2007 அன்று செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகத்தால் நடத்தப்பட உள்ளது.. ஒத்தக் கருத்துள்ள சமூகநீதியாளர்களும் கலந்துகொள்ளலாம் - கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

சென்னை 17.11.2007

தலைவர், திராவிடர் கழகம்.

Friday, October 26, 2007

ரத்த வெறிபிடித்த அத்வானி மற்றும் மோடி ஆகிய இருவரையும் கைது செய்வது எப்பொழுது?

குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ
ரத்த வெறிபிடித்த அத்வானி மற்றும் மோடி ஆகிய இருவரையும் கைது செய்வது எப்பொழுது?

அகமதாபாத்: குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார்.

இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது.ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர்.தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.
வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..
கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார். மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் கொலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.
போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...

விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்கள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.
பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....
பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார்.மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார்.

இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன.

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரகாஷ் ரத்தோட் என்பவர் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ மாயா பென் வீதி வீதியாக சென்று முஸ்லீம்களை விரைவாக கொல்லுங்கள், யாரையும் விடாதீர்கள் என்று வேகப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், போலீஸார் எங்களை அழைத்து சில இடங்களை சுட்டிக் காட்டி இங்கு முஸ்லீம்கள் சிலர் ஒளிந்துள்ளனர். அவர்களை விடாதீர்கள் என்று எங்களுக்கு வழி காட்டினர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று வெளியிலிருந்து கதவுகளை மூடி உள்ளேயே வைத்து அவர்களை எரித்துக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ரமேஷ் தவே கூறுகையில், இதை நாங்கள் இப்போது செய்யவில்லை. கடந்த 20, 25 வருடங்களாகவே எங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் (முஸ்லீம்கள்) கொன்று குவித்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவே.அரசு, நீதித்துறை, காவல்துறையின் கூட்டுச் சதி:குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில்,கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார்.முஸ்லீம்களைக் கொன்ற தினத்தை ஆண்டுதோறும் இந்துக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதே சமயம் அவர்களைக் கொல்வதை விட நசுக்குவதுதான் மிகவும் சிறந்தது. இதன் மூலம் முஸ்லீம்கள் காலம் பூராவும் இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள்.முஸ்லீம்களைக் கொல்வதைப் போல அவர்கள் மீது பொருளாதார நெருக்கடியைத் திணிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாண்ட்யா இதை விட பயங்கரமாக, இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஷா கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டன பாஜக மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், நீதிபதி நானாவதியுடன் கூட்டாக விசாரித்த கே.ஜி.ஷா (இவர்தான் கமிஷனின் தலைவர்) ஒரு பாஜக அனுதாபி என்றும் கூறியுள்ளார் பாண்ட்யா.வி.எச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்கு சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக அவர்கள் வாதாடினர் என்றார்.
குஜராத்தில் கலவரத்தை தூண்டிவிட்டு ஏராளமான பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான பா.ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர், குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம், கோபத்தால் ஏற்பட்டதல்ல.முதலமைச்சர் மோடியின் ஒப்புதலோடு மாநில அரசு அதிகாரிகள் மற்றும் சங்க் பரிவார் அமைப்பின் உயர்மட்ட தலைவர்களால் திட்டமிட்டே அந்த கலவரம் நடத்தப்பட்டது.
இதற்கு (ரகசிய காமிராவால் படம்பிடிக்கப்பட்ட)மறுக்க முடியாத ஆதாரம் தங்களிடம் உள்ளது என பிரபல ஆங்கில வார இதழான 'தெகல்கா' நேற்று தெரிவித்திருந்தது. 'தெகல்கா' வின் இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும், ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், 'தெகல்கா' கூறியுள்ளதை சுட்டிக்காட்டி, அத்வானி மற்றும் மோடி ஆகிய இரண்டு பேரையுமே உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், குஜராத் கலவரத்திற்கு யார் காரணம் என்பது தற்போது மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது என்றார்.
மோடிக்கு பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியின் ஆதரவு தொடர்ந்து இருந்து வந்ததால், குஜராத் படுகொலைக்கு காரணமான குற்றச்சாட்டிலிருந்து அவர் (அத்வானி) தப்ப முடியாது.குஜராத் கலவரத்திற்கு மோடிக்கு எந்த அளவிற்கு பங்கிருக்கிறதோ அதே அளவு பங்கு அப்போது பிரதமராக இருந்தவருக்கும், உளதுறை அமைச்சராக இருந்த அத்வானிக்கும் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் உள்ளது.
மோடி மற்றும் அத்வானி ஆகிய இருவர் மீதும் உடனடியாக கிரிமினல் வழக்குப் பதிவு செய்து அவர்களை சிறையிலடைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதே காரணத்திற்காக அத்வானி மற்றும் மோடி ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
More Report From TEHELKA.COM.Please Click link

இராமாயணத்தில் கூறப்படுவது இந்த இலங்கை அல்ல

இராமாயணத்தில் கூறப்படுவது இந்த இலங்கை அல்ல (2)

மஞ்சை வசந்தன்

காலால் நடந்துதான் செல்லவேண்டும் என்ற சூழலில், காட்டில் திரிந்த இராமன், இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை.மேலும், இந்தியாவில் பல அரசுகள், பல மன்னர்களால் ஒவ்வொரு பகுதியும் ஆளப் பட்டு அந்தக் காலத்தில், ஒரு நாட்டைவிட்டு, மற்றொரு நாட்டிற்கு இராமன் முதலா னோர் வர வாய்ப்பும் இல்லை; வரவேண்டிய கட்டாயமும் இல்லை; வருவதும் கடினம். எனவே, அயோத்தியின் ஆளு கைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த காட்டில்தான் அவர் கள் வாழ்ந்திருக்க முடியும்.

5. பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்துவிட்டு வா! என்பதுதான் தசரதனின் கட் டளை. ஒரு அரசன் காட்டுக் குப் போ என்று கட்டளையிட்டால் என்ன அர்த்தம்? அவனது ஆளுகைக்கு உட் பட்ட காட்டுக்குப் போ என் பதுதானே? ஒரு அரசு - நாடு, காடு என்ற இருபெரும் பகுதி களை உடையது. மன்னர்கள் காடுகளுக்குச் சென்று வேட் டையாடுவர். முனிவர்கள் காடுகளுக்குச் சென்று தவம் மேற்கொள்வர் என்பதே மர பாகச் சொல்லப்படும் செய்தி. அதன் வழி நோக்கின், தசர தனின் ஆளுகைக்கு உட்பட்ட, அவனது நாட்டை ஒட்டியுள்ள காட்டிற்கு மரவுரி போன்ற தவக்கோலத்துடன் இராமன் சென்றான் என்பதுதானே பொருள். அப்படியாயின் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள தமிழகத்திற்கு எப்படி வரமுடியும்? ஏன் வரவேண் டும்? எனவே, இராமாயணத்தில் சொல்லப்படும் இலங்கை தென்னிலங்கை அல்ல அது வடக்கேயுள்ள இலங்கை என் பது உறுதி செய்யப்படுகிறது.

6. இராமாயணத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்களாகச் சொல்லப்படும் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன், மண்டோதரி, இந்திரஜித், சூர்ப்பநகா போன்ற பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் அல்ல. வட இலங்கையில் வாழ்ந்தவர்கள் என்பதாலே அவர்களுக்கு இப் பெயர்கள் இருந்தன. தென்னி லங்கையைச் சேர்ந்தவர்களா யின் அவர்கள் பெயர் தமிழில் இருந்திருக்கும். இதன் வழி நோக்கினும் இந்த இலங்கை யல்ல என்பது உறுதி.

7. காட்டில் இராமன் இருக்கும் இடத்திற்கு சூர்ப்பநகா சென்றாள், என்று இராமாயணத்தில் கூறப்படுகிறது. தென்னிலங்கையிலிருந்த சூர்ப் பநகா வடநாட்டிலுள்ள இராமனை எவ்வாறு அறிந் தாள்? எதற்காக வடநாட்டிற் குச் சென்றாள்? காரணமே இல்லை. அப்படியிருக்க தென் னிலங்கையிலிருந்து சூர்ப்பநகா சென்றதாகக் கூறுவது முற் றிலும் தவறு.

மேலும், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் பேசிய மொழி தமிழ். அப்படியிருக்க இவள் எப்படி வடநாட்டு இராமனுடன், லட்சுமணனுடன் பேசியிருக்க முடியும்? சவால் விட்டு வந்திருக்க முடி யும்? இராமன் லட்சுமணன் தமிழ் தெரியாதவர்களாயிற்றே! சுருக்கமாகச் சொன்னால் ஆயி ரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள இராமனைப் பற்றி சூர்ப்பநகா கேள்விப்பட் டிருக்கக் கூட வாய்ப்பில்லை!

8. வடநாட்டில் உள்ள காட் டில் மூக்கறு பட்டு மார்பறு பட்டு மீண்டும் தென்னிலங் கைக்கு வர எத்தனை மாதங்கள் ஆகும். தன் அண்ணன் இராவ ணனிடம் நடந்ததைச் சொல்லி, இராவணன் சீதையைக் கவர்ந்து வர வடநாட்டிற்குச் செல்ல எத்தனை மாதங்கள் ஆகியிருக்கும். பல மாதங்க ளுக்குப் பிறகே இராவணன் வடநாட்டைச் சென்றடைந்தி ருக்க முடியும். அந்த கால இடைவெளியில் இராமன், இலட்சுமணன், சீதை ஆகிய மூவரும் காட்டில் வேறு பகு திக்குச் சென்றிருப்பர். அப்படி யிருக்கையில் இராவணன் சீதையைக் கண்டு பிடித்து எப் படி தூக்கி வந்திருக்க முடியும்?

இவ்வளவும் நடக்க வேண்டும் என்றால், அயோத்திக்கு அருகில் அயல்நாடாயிருந்த வட இலங்கையில்தான் இவை நடந்திருக்க முடியும்.

சூர்ப்பநகை ராமனை அறி யவும், அவள் அவமானப்பட வும், அண்ணனிடம் உடனே வந்து சொல்லவும், அண்ணன் இராவணன் உடனே புறப் பட்டு போய் சீதையைக் கொண்டு வரவும், இராமன் உடனே தூது அனுப்பி விடுவிக்கக் கேட்டுக் கொள்ளவும் அருகிலுள்ள இலங்கையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம். தென்னிலங்கையிலிருந்து இத்தனை முறை போய்வர வாய்ப்பே இல்லை. எனவே, இராமாயணத்தில் சொல்லப் படுவது தென்னிலங்கையல்ல. என்பது உறுதியாகிறது.

9. சீதையைத் தூக்கிச் சென்ற இராவணன் வான்வழி யாகச் சென்றான், ஜடாயு எதிர்த்துப் போரிட்டது என் றெல்லாம் இராமாயணத்தில் சொல்லப்படுகிறது. அப்படி யாயின் அந்தக் காலத்திலே விமானம் இருந்திருந்தால், இராமன் இலங்கைக்குச் செல் லுகையில் விமானத்திலே சென் றிருக்கலாமே. ஏன் பாலம் கட்ட வேண்டும்?

அதுமட்டுமல்ல, இலங்கை யில் போர் முடிந்து இராமன் திரும்பும்போது அயோத்தியில் விமானத்தில் வந்தான் என்று சொல்லப்படுகிறது. அப்படி யாயின் போகும் போது விமா னத்தில்தானே போயிருக்க வேண்டும்? ஏன் பாலம் கட்ட வேண்டும்? அப்படியாயின் இராமர் பாலம் என்பதே கட்டுக்கதை அல்லவா?

10. சஞ்சீவி மலையையே தூக்கி வரக்கூடிய வலுப் படைத்த அனுமான் இருக்கும் போது இவர்கள் ஏன் பாலம் கட்ட வேண்டும்? இராமன், இலட்சுமணன் இவர்களை பல்லக்கில் அமரச் செய்து அப்படியே அலேக்காசு தூக்கிச் சென்று அனுமார் இலங்கையில் விட்டிருப்பாரே. அப்படியிருக்க பாலம் கட்டி னார்கள் என்றால், முட்டா ளைத் தவிர எவன் நம்புவான்?

11. இராமர் பாலங்கட்டிய போது குரங்குகள் மலை களைச் சுமந்து சென்று போட்டதாக இராமாயணம் சொல்கிறது. அப்படியாயின் இலங்கைக்கு எதிரிலுள்ள தமிழகக் கடலோரப் பகுதியில் அதாவது இராமேஸ்வரம் பகுதியில் மலைகள் இருக்க வேண்டும். ஆனால் இல் லையே! அப்படியிருக்க எப் படி மலைகளை பாறைகளை எடுத்துச் சென்று போட்டி ருக்க முடியும்?
எனவே, மலை சூழ்ந்த வட இந்தியாவிலுள்ள இலங்கை யில்தான் அது சாத்தியம். எனவே இராமாயணத்தில் குறிக்கப்படுவது இந்த இலங்கை அல்ல!

12. இராவணன் கைலாய மலையைத் தூக்கினான் என்று அவனது வல்லமையைப் பற்றிச் சொல்லப்படுகிறது. அப்படி யாயின் இராவணன் வட இந் தியாவில் வாழ்ந்தவன் என்பது உறுதியாகிறது. அப்படியாயின் இராமாயணத்தில் வருவது வட இந்தியாவிலுள்ள இலங்கை யேயன்றி தென்னிலங்கையல்ல!

13. மேலும் சேதுக் கால் வாய்ப் பகுதியிலுள்ள மணல் திட்டை தோண்டிப் பார்த்தால் 20 மீட்டர்களுக்கு மேல் மணலே செல்கிறது. பாறை களைக் கொண்டு பாலம் அமைந்திருந்தால் பாறைகள் அல்லவா வரவேண்டும். எனவே, இது இயற்கையான மணல் மேடு என்பது மலை மேல் விளக்காக விளங்குகிறது.

14. வால்மீகி இராமாய ணத்தில், இலங்கையில் போர் முடிந்த பின் நாடு திரும்பிய இராமன், தான் கட்டிய (பாலத்தை) அணையைத் தானே அழித்துவிட்டுச் சென் றதாகச் சொல்லப்படுகிறது. அப்படியிருக்க இராமன் கட் டிய பாலம் இன்னமும் இருக் கிறது என்பது மோசடியல் லவா?

இராமாயணத்தையும், இராமனையும் மக்கள் நம்புகி றார்கள் என்றால், இராமர் பாலமும் இன்னமும் இருக் கிறது என்று கூறுவது மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது அல் லவா? அப்படியாயின் இராமர் பாலம் இருக்கிறது; அதை இடிக்கக்கூடாது என்பவர்கள் தானே இராமனுக்கு எதிரான வர்கள்? விந்திய மலைப் பகுதி அல்லது மஹாநதிப் பகுதி களை ஆய்வு செய்தால், இராமாயணத்தில் குறிக்கப் படும் இலங்கையை அடை யாளங்காண முடியும். அமர்க் கண்ட் அல்லது சோட்டா நாக் பூர் பகுதியில்தான் இலங்கை இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் பலன் கூறுகின் றனர்.

அதுமட்டுமல்ல, கடல் பகுதியில் இராமர் பாலம் அமைக்கப்பட்டதாக இராமா யணம் அறிவிக்கவில்லை. கடல் பகுதியில் பாலம் அமைக்கவும் இயலாது.
எனவே, அயோத்தியின் ஆளுகைக்கு உட்பட்ட நாட் டின் அண்டை நாடாகவே இலங்கை இருந்திருக்க முடி யும். மாறாக, இந்தியாவின் தென்கோடியில் உள்ள தென் இலங்கையாக இருக்க வாய்ப்பே இல்லை.

மேற்கண்ட தடயங்களை ஒரு முறைக்கு பல முறை படித்தால் யாரும் இவ்வுண் மையை அய்யமற அறிந்து தெளிய முடியும்.

அப்படியிருக்க சம்பந்தமில் லாத தென் இலங்கையோடு இராமாயணத்தை முடிச்சுப் போட்டு, இயற்கையான மணல் திட்டை இராமர் பாலம் என்று வீண்சிக்கலை உருவாக்குவது, சுயநலமிகள் மற்றும் மத வெறியை ஊட்டி, மக்களை உசுப்பி, அதை வாக்காக மாற்றி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று அலையும் ஆதிக்கக் கூட்டத்தினரின் அடா வடிச் செயல்பாடாகும். இதற்கு உச்ச நீதிமன்றம் உடந்தையாகக் கூடாது என்பதே நீதியாளர் களின் எண்ணம். நாட்டின் நலன் விரும்புவோரின் நாட்ட மும் அதுவேயாகும்.

இல்லாத ஒரு கற்பனைக் காரணத்திற்காக ஒரு இணையற்ற திட்டத்தை முடக்காமல், தடை ஆணை விரைவில் நீக்கப்பட்டு, திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட அனைத்து மக்களும் துணை நிற்க வேண் டும். அதற்கு இக்கருத்துகள் தீவிரமாகப் பரப்பட்டு மக்க ளுக்கு தெளிவு உண்டாக்கப்பட வேண்டும் உண்மை விளக்கப் பட வேண்டும்.

நன்றி : விடுதலை
(நிறைவு)

Thursday, October 25, 2007

''பூமாதேவி என்பது கோடானுகோடி மக்களின் நம்பிக்கை. எனவே, அதில் துளைபோட்டு குழாயை விடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை கொடுக்குமா?

இராமாயணத்தில் கூறப்படுவது இந்த இலங்கை அல்ல

  • ''பூமாதேவி என்பது கோடானுகோடி மக்களின் நம்பிக்கை. எனவே, அதில் துளைபோட்டு குழாயை விடக்கூடாது என்று கூறமுடியுமா? அந்த நம்பிக்கையைத் தகர்த் துத்தானே பூமாதேவியைக் குடைகிறார்கள்! பூமாதேவி கோடிக்கணக்கானோரின் நம்பிக்கை. அது பூமி தெய்வம். எனவே, அதில் ஓட்டை போடக்கூடாது என்று ஒருவர் வழக்குப் போட்டால், உச்ச நீதிமன்றம் தடை கொடுக்குமா?''

மஞ்சை வசந்தன்


சேதுக் கால்வாய்த் திட்டம் நீண்ட நாளைய முயற்சி. செயல் திட்டம் கூடிவரும் வேளையில் மதவெறிக்கூட்டமும், சுயநலக் கூட்டமும் எதையெதையோ சொல்லி, எப்படியெப்படியோ எதிர்த்து, இறுதியில் அவர் களின் கடைசிப் புகலிடமாக உச்சநீதிமன்றத்தில் நின்று உருக்குலைக்கப்பார்க்கிறார்கள்.


இதற்கு, இராமர் பாலம் என்ற இல்லாத கற்பனை அவர்களின் கையாயுதம்; இரா மாயணம் அவர்களின் கவசம்; நம்பிக்கை என்று வாதிடுவது அவர்களின் வலிமை. நம்பிக்கை என்பது ஒரு வரின் தனிப்பட்டக் கருத்து அது உண்மையை உறுதி செய்ய உதவாது. அவன்தான் கொலை செய்தான் என்று ஒருவருக்கு நம்பிக்கையிருக் கலாம். அவரது நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தண்டனை வழங்க முடியுமா? என்று கேட்டால், பெருவாரியான மக்கள் நம்புகிறார்கள் - என்ற வாடிக்கையான வாதத்தை வைப்பார்கள். நாவரசு என்ற, அண்ணா மலைப் பல்கலைக் கழக மருத் துவ மாணவரை, ஜான் டேவிட் என்பவன்தான் கொலை செய் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை அனைவரும் நம்பினர். ஆனால், ஆதாரம் இல்லையென்று நீதி மன்றம் ஜான் டேவிட்டை விடுதலை செய்துவிட்டதே! அப்படியென்றால் நீதிமன்றத்திற்குத் தேவை ஆதாரமே யன்றி, நம்பிக்கையல்ல.


ஆனால் அவாள் வழக்கு என்று வந்துவிட்டால், ஆதாரம் எதுவும் தேவையில்லை சட்டம், நடைமுறை, விதிமுறை எதுவும் வேண்டாம்! மனுதர்ம காலந்தொட்டு, மக்களாட்சிக் காலம் வரை இதுதான் நிலை!


செத்துப்போன பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி (பெரியவாள்) கோமா நிலையில் இருந்தபோது நடந்த கனகாபிஷேகத்திற்கு வெளி நாட்டிலிருந்து தங்கம் வந்த போது அப்பெட்டியை எச் சோதனையும் செய்யாமல் அப்படியே அனுப்ப வேண்டு மென்று சுங்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இன்றளவும் அத்தங்கத்திற்கு கணக்கில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு இது தெரிந்தாலும் அது கண்டு கொள்ளாது. காரணம் இது அவாள் சமாச்சாரம்! ஆனால், குப்பனும் சுப்பனும் அரை பவுன் எடுத்து வந்தால், சுங்கத் துறை சுற்றி வளைத்து அவனைப் பங்கம் செய்து பத்திப் பத்தியாய் செய்தி வெளியிட்டு விடும்.


மசூதி இருக்கும் இடத்தில் தான் இராமர் பிறந்த இடம் இருக்கிறது என்பர். ஆதாரம் என்னவென்று கேட்டால், அது இந்துக்களின் நம்பிக்கை என்பர். மதுராவில் உள்ள மசூதியை இடிக்க வேண்டும் என்பர். ஏன் என்று கேட்டால், கண்ணன் பிறந்த சரியான இடம் மசூதிக் குள்தான் உள்ளது என்று காரணம் கூறுவார்கள். ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டால், ஆதாரம் எல்லாம் எதுவும் இல்லை, எங்கள் நம்பிக்கை என்பர்.


பாமர மனிதன்கூடப் பட் டென்று சொல்வான். இது பச்சை அயோக்கியத்தனம் என்று. ஆனால், நீதிமன்றங்களுக்கு மட்டும் அது நியாயமாகவே படுகிறது!
சிவபெருமான் தலையில் நிலவு இருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை. சிவன் இந்திய நாட்டுக் கடவுள், எனவே, நிலவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறினால், அமெரிக்கா, இரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒத்துக் கொள்ளுமா?


இந்திய நாட்டுக் கடவுள் திருமால், பூமியை ஒரு காலால் அளந்து தனக்கு உரிமை யாக்கிக் கொண்டார். ஆகாயத்தை இன்னொரு காலால் அளந்து உரிமையாக்கிக் கொண்டார். எனவே, ஆகாயம், பூமி இரண்டுமே இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தம், அதுவும் வைணவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடினால், உலக நாடுகள் ஒத்துக் கொள்ளுமா? குறிப்பாக சிவனை வணங்குகிறவர்கள் ஒத்துக் கொள்வார்களா?


பூமாதேவி என்பது கோடானுகோடி மக்களின் நம்பிக்கை. எனவே, அதில் துளைபோட்டு குழாயை விடக்கூடாது என்று கூறமுடியுமா? அந்த நம்பிக்கையைத் தகர்த் துத்தானே பூமாதேவியைக் குடைகிறார்கள்! பூமாதேவி கோடிக்கணக்கானோரின் நம்பிக்கை. அது பூமி தெய்வம். எனவே, அதில் ஓட்டை போடக்கூடாது என்று ஒருவர் வழக்குப் போட்டால், உச்ச நீதிமன்றம் தடை கொடுக்குமா?


இவையெல்லாம் பைத்தியக் காரத்தனம் என்றால், இராமர் பாலம் என்பது வெறும் நம்பிக் கையின் அடிப் படையிலானது, அதுவும், புதிதாய்ப்புனையப்பட்ட நம்பிக்கையிலானது என்னும் போது, அதற்கு மட்டும் என்ன தடையாணை? எந்த அடிப்படையில் தடை யாணை வழங்கப்படுகிறது?
அப்படியே நம்பிக்கை யென்று கொண்டாலும், இராமர் பாலம் என்பதும் இலங் கையென்பதும் வடஇந்தியா விலுள்ளதா? தென்னிந்தியா விலுள்ளதா? அதையே விளங் கிக் கொள்ளாமல் ஆர்ப்பாட்டம், அடாவடித்தனம் அன்றாடம் அரங்கேற்றுவது அசல் மோசடித்தனமல்லவா? இந்த இலங்கையா?
1. வடபுலத்தில் உள்ளது போலவே தென்புலத்திலும் (தமிழகத்திலும்) நகரங்கள் உண்டு.


  • வடக்கே காசி - தெற்கேயுள்ளது தென்காசி
    வடக்கேயுள்ளது மதுரை - தெற்கேயுள்ளது தென்மதுரை.
    வடக்கேயுள்ளது தான் இலங்கை- தெற்கேயுள்ளது தென்னிலங்கை.
    தற்போது ஸ்ரீலங்கா என்று அழைக்கப்படும் பகுதிக்கு, தென்னிலங்கை என்றுதான் பெயரேதவிர இலங்கை என்பது அல்ல.
    தமிழகத்தில் உள்ள மதுரை தென்மதுரைதான். மதுரை என்பது கண்ணன் பிறந்த பகுதிதான்.


தெற்கத்திக் கள்ளனடா தென்மதுரைப் பாண்டியன் டா என்ற திரைப்படப் பாடல் கூட இவ்வழக்கத்தை; இவ்வுண்மையை உறுதி செய்யப் போதிய சான்றாகும்.


அதுபோல்தான், நமக்கு அருகிலுள்ள இலங்கை தென்னிலங்கை என்றே நீண்ட நெடுங்காலமாக அழைக்கப் பட்டு வருகிறது.


இது தென்னிலங்கை என்றால், வடக்கேயுள்ளது இலங்கை என்பது உறுதியாகிறது.எனவே, இராமாயணத்தில் சொல்லப்படுவது வட இந்தியாவில் உள்ள இலங்கையே தவிர, இந்த இலங்கை இல்லை.

2. இலங்கைத் தீவு பின்னால் உருவானது.


இராமாயணம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இலங்கை தனித்தீவாக இல்லை. அது தமிழ்நாட்டைச் சேர்ந்த நிலப்பகுதியாகவே இருந்தது.
தாமிரபரணி ஆறு தென்னிலங்கை வரை ஓடியதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. இந்த இலங்கை யின் பழைய பெயர் தாமிரபரணி என்பதேயாகும். அசோகர் கல்வெட்டில் இந்த இலங்கையானது தாமிரபரணி என்றே குறிக்கப்பட்டுள்ளது. கிரேக்க மொழியில் அதை தாப்ரோபேன் என்று அழைத்தனர்.


ஆறு எங்குச் சென்று முடிகிறதோ அந்த இடத்தை வைத்து அந்த ஆற்றை அழைப்பது வழக்கில் உள்ளது. சிதம்பரம் வட்டத்தில், ஒரு வாய்க்கால் உடையூர் என்ற ஊரில் சென்று முடிவடைவதால் அதற்கு உடையூர் வாய்க்கால் என்றே பெயர் வழங்குகிறது.அதைப்போல், மற்றொரு வாய்க்கால் அரியகோஷ்டி என்ற ஊரில் சென்று முடி வடைவதால் அதற்கு அரிய கோஷ்டி வாய்க்கால் என்று பெயர் வழங்குகிறது.


அவ்வாறு தான், தாமிரபரணி என்ற பகுதியில் சென்று முடிவடைந்ததால் அந்த ஆறு தாமிரபரணி ஆறு என்று அழைக்கப்பட்டது. இலங்கையின் பழைய பெயர், தாமிரபரணி என்பதுதான் - என்பதை தாமிரபரணி ஆற்றின் பெயரே அய்யமின்றி விளக்கிக் கொண்டு இருக்கிறது. இலங்கை அப்போது தனித்தீவாக இல்லை யென்பதற்கும் இது அசைக்க முடியாத சான்றாகும்.


3. இராமாயணம் நடந்த தாகக் கூறப்படும் காலத்தில் இலங்கை, தமிழகத் தோடுதான் சேர்ந்திருந்தது என்கின்ற போது, குறுக்கே கடல் இருக்க வாய்ப்பில்லை. அதனால், அணைகட்ட (பாலங்கட்ட) வேண்டிய அவசியம் இல்லை. அணை கட்டியதாக இராமா யணம் கூறுவதால், இராமாய ணத்தில் கூறப்படும் இலங்கை இதுவல்ல் வடக்கே அணை கட்ட வேண்டிய அவசியச் சூழலில் இருந்த, வட இந்தியா வில் உள்ளது இலங்கை தான் என்பது உறுதியாகிறது.


4. இராமன் பிறந்த இடம் வடநாட்டில் உள்ள அயோத்தி என்னும்போது, இராமன் பாலம் அமைத்ததாகக் கூறப் படும் இலங்கை, வட இந்தியா வில் உள்ள இலங்கைதான் என்பது உறுதியாகிறது.

தொடரும்.....

நன்றி : விடுதலை 24-10-2007

Monday, August 20, 2007

அமெரிக்கப் படையெடுப்பும் ஆயிரக்கணக்கான ஈராக் விதவைகளும்!

அமெரிக்கப் படையெடுப்பைத் தொடர்ந்து ஈராக்கில் நாள்தோறும் நடக்கும் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் தொடர்கதையாய் இருக்க அதனால் ஆண்கள் கூட்டம் கூட்டமாய் செத்துமடிய, உயிருக்குப் போராடும் பிள்ளைகளைக் காக்க விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படும் ஈராக்கியப் பெண்களின் நிலை கல்நெஞ்சையும் உருக்கும் வகையில் இருக்கிறது. இச்செய்தியை நமக்கு அளித்த கட்டுரையாசிரியர் இதனை எழுதும் போது தன் கண்ணீரைப் பலமுறை அடக்க முயன்று தோற்று நெஞ்சடைக்க எழுதியதாகத் தெரிவித்திருந்தார். - சத்தியமார்க்கம்.காம்

கடந்த வருடம் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய கொடூரமான ஆயுதத்தாக்குதலில் தன் கணவரைப் பறிகொடுத்த ராணா ஜலீல் என்ற 38 வயது பெண், தன் குழந்தைகளைக் காப்பாற்ற தான் விபசாரியாக்கப்படுவோம் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.


நான்கு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண் தன் குடும்பத்தின் உயிர் பிழைக்க ஒரு வேலை தேடி, கடந்த ஒருவருடமாக கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பின் நடைப்பிணங்கள் நடமாடும் சுடுகாடாய் காட்சியளிக்கும் ஈராக்கில் நிர்க்கதியான பெண்கள் அதிகரித்து வருவதால் வேலை வாய்ப்புக்கள் பெருமளவு குறைந்து விட்டது.


பசியால் துடிக்கும் தன் பிள்ளைகளைக் காப்பாற்ற எத்தகைய கடுமையானதொரு வேலையையும் செய்ய, தான் தயாரான போதிலும் வேலை கிடைக்காத ஒரே காரணத்தினால் பிச்சை எடுக்கும் கேவல நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் இவருக்குப் பிச்சையிட்டவர்கள் கூட இவரை நடத்திய விதம் மோசமானதாகவே இருந்தது. இவருக்கு வேலை தருவதாகவும் உதவி செய்வதாகவும், போலிவேஷம் போட்டு முன்வந்தவர்கள் மனதில் கீழ்த்தர எண்ணங்களே மிகைத்திருந்தன என்கிறார் இவர்.


சம்பாதித்துக் கொண்டிருந்த கணவர் இறந்த சில வாரங்களிலிலேயே இவரது குழந்தைகளின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதற்கு ஒரே காரணம் - பசியும் பட்டினியும் என்பதால் செய்வதறியாது மருத்துவர்கள் திருப்பியனுப்பி விட்டனர்.


நம்பிக்கையை முற்றிலும் இழந்த நிலையில் செய்வதறியாது விக்கித்து நின்ற நிலையில் தான் மிக மோசமான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த நாட்களை நினைவு கூர்ந்து கண்களில் நீர் பனிக்க அவர் கூறுகிறார்: ஆரம்பத்தில் இவை என் வாழ்க்கையின் மிகப் பயங்கரமான நாட்களாக இருந்தது. என்... என்... குழந்தைகள் பசியின் காரணத்தால் உயிருக்குப் போராடுவதைக் கண்டும் என்னால் இதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை"


இறை விசுவாசத்தையும், துடிக்கும் தன்மான உணர்வுகளையும் மீறி மனதில் ஏற்படுத்திய இரணத்தின் காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறினேன். அருகிலுள்ள சந்தைப் பகுதிக்கு சென்றேன். நான் இயற்கையாகவே அழகிய உருவம் கொண்டுள்ளதால் எனக்கு சிரமம் ஏதும் ஏற்படவில்லை. என்னுடன் ஒப்புக்கொண்ட நபருடன் நான் தனியறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது திடும் என்று அடி மனதில் எழுந்த அச்சத்தினால் அலறி ஓட முயன்றேன். ஆனால், அந்த நபர் என்னை விடவில்லை. பலவந்தப்படுத்தி என் கற்பை சூறையாடிவிட்டார். அவர் வீசி எறிந்த காசைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு நேராக கடைக்கு ஓடினேன்.
அவசரமாக உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினேன். என் கையில் உணவைப் பார்த்த போது என் குழந்தைகள் சந்தோஷத்தில் கத்திய குரல் என் காதில் இன்னும் ஒலிக்கிறது. பசிக்கொடுமையின் காரணத்தால் நான் கேட்டிருந்த என் குழந்தைகளின் மரண ஓலத்தை விட எனது மானம் எனக்குப் பெரிதாக தெரியவில்லை.


நம்பிக்கையிழந்த ஈராக்கிய விதவைகள்


ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பிற்குப் பிறகு பெருமளவில் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தில் பொதுமக்கள் அழிந்து கொண்டு வருகின்றனர். கடைவீதியில், பொதுவிடங்களில், பொதுமக்கள் குழுமியிருக்கும் இடங்களில் குண்டு வெடித்துக் கொண்டு இருப்பதனால் தினசரி எழுபது, எண்பது பேர் இறந்தனர் என்ற செய்தி எல்லாம் இப்போது வெகு இயல்பாக, கேட்டுக்கேட்டுப் பழகிப்போன சர்வ சாதாரண செய்தியாய் மாறிவருவதை எவரும் மறுக்க இயலாது.


அமெரிக்கப்படை ஈராக்கினுள் கால் வைப்பதற்கு முன்னர் வரை ஈராக்கில் விதவைப் பெண்களுக்கு, குறிப்பாக ஈரான் - ஈராக் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு அப்போதைய ஈராக்கிய அரசு வீடு, இலவசக் கல்வி, மற்றும் உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதனை முறையாகவும் கொடுத்து வந்திருந்தது.


அத்தகைய எவ்வித உதவியும் தற்போதைய பொம்மை அரசு வழங்குவதில்லை என்பதும் கொடுத்து வந்த உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஓரளவு வசதி வாய்ந்த விதவைகள் இதில் விதிவிலக்காக தப்பித்துக்கொள்கிறார்கள்.


பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் அரசு சாரா அமைப்பான OWFI சமர்ப்பித்துள்ள புள்ளி விபரப்படி, அமெரிக்க அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட ஈராக்கிய விதவைகளில் 15 % பெண்கள் தங்களின் குடும்பத்தினருக்காக வேலை தேடிப் போராடி வருவதாகவும், தற்காலிக திருமணமோ, விபச்சாரமோ செய்யும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.


OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் என்ற பெண்மணி அல்ஜஸீராவிற்கு அளித்த பேட்டியில், "ஈராக்கிய விதவைகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தே இதற்கான தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். ஆனால் குறுகிய காலகட்டத்திலேயே இப்பெண்களின் பரிதாப நிலைமையின் பயங்கரம் முகத்தில் அறைய ஆரம்பித்து விட்டது. எங்களால் விவரிக்க இயலாத அளவிற்கு இப்பிரச்னை பூதாகரமாக உருவாகியிருக்கிறது. ஈராக்கிய தெருக்களில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான விதவைகள் வேலை தேடியும், பிச்சை கேட்டும் அலைகின்றனர்.


கடந்த 2003ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நுழைந்த பிறகு, அங்கே நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும் அதில் 20% பெண்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல்கள் என்றும், NGO நிறுவனம் இத்தகவலை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார்.


பெரும்பாலான பெண்கள் ஈராக்கிற்கு வெளியில் கடத்திச் செல்லப்பட்டும் விபச்சார விடுதிகளில் விற்கப்பட்டும் இருக்கலாம் என்று OWFI நம்புவதாகக் கூறியுள்ளார்.


அமெரிக்காவின் மனிதத்தன்மையற்ற தாக்குதலில் கணவர்களை இழந்து பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள் (ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் மட்டும்) 350,000 விதவைப் பெண்கள் என்றும், நாட்டில் மொத்த விதவைகள் மட்டும் எட்டு மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர் என்றும் ஈராக்கின் பெண்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தெரிவிக்கிறது.


துயரமான வியாபாரம்


விதவைகளாக உள்ள இளம் வயது ஈராக்கிய பெண்கள் நிலை இப்படி எனில் அமெரிக்க அராஜகத்தில் உடல் உறுப்புக்களை இழந்து நடைப்பிணமாக வாழ்ந்து வரும் ஏழைக்குடும்பங்கள் தங்களுக்கான வாழ்வாதாரம் ஏதுமற்று தங்களது மகள்களையே விபச்சாரத்திற்காக சந்தையில் விற்கும் மிகக் கொடூரமான இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கொடுமை எத்தனை பேர் அறிவர்?

ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான அபூ அஹ்மத் என்பவர் குண்டுவீச்சில் தன் மனைவியை இழந்து தானும் ஊனமுடைந்தவர். தன்னுடைய குழந்தைகளுக்கு உணவளிக்கத் திறனற்று, கடும் அவதியுற்று, வெளிநாடுகளிலிருந்து விபச்சாரத்திற்காக பெண்களை விலைக்கு வாங்க வந்திருந்த நபர்களிடம், லினா என்ற தன் சொந்த மகளையே விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.


என் மகள் லினாவிற்காக விபச்சார விடுதியினர் கொடுத்த தொகையைக் கொண்டு என் மற்ற மூன்று மகள்களையும் ஒரு மகனையும் ஒரு வேளை உணவாவது சிரமமின்றி உண்ண வைக்க முடியும் என்று அல்ஜஸீரா நிரூபர்களுக்கு கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.


அபூ அஹ்மத்தின் சூழலைக் கண்டு பரிதாபப்பட்டு(?) தாமே அவரை வற்புறுத்தி அணுகி உதவியதாக ஷாதா என்கின்ற விபச்சார விடுதியைச் சேர்ந்த தரகுப்பெண் அல்ஜஸீராவிற்கு பேட்டியளித்துள்ளார். இளம் விதவைகளை இனம் கண்டு அவர்களது ஏழ்மையை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி வருவதாகக் கூறும் இவர் இளம் பெண்கள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு மிக அதிக விலைக்கு சந்தையில் விற்கப்படும் பெரும் வியாபாரம் பற்றி விளக்கினார்.
"ஒருவேளை கூட சாப்பிட முடியாத நிலையில் உள்ள இவர்களுக்கு குறைந்தது பத்து அமெரிக்க டாலர் பெற்றுத்தருகிறோம். அதற்காக அப்பெண் குறைந்த பட்சமாக ஒருநாளைக்கு இரண்டு வாடிக்கையாளர்களுடன் 'இருந்தால்' போதும்" என்கிறார் சர்வ சாதாரணமாக.


வெளிநாடுகளுக்கு பலவந்தமாகக் கடத்தபடும் ஈராக்கிய பெண்கள்


OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் மேலும் கூறுகையில் லினாவைப் போன்ற அபலைப் பெண்கள் வறுமையின் காரணமாக ஐநூறு அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறார்கள்.


தந்தையை இழந்ததினால் தன் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகிப் போன சுஹா எனும் 17 வயது இளம்பெண், தன்னுடைய பெற்ற தாயினாலேயே விபச்சார விடுதியில் விற்கப்பட்டார். சுஹாவிடம் பேட்டி கண்ட அல்ஜஸீராவிடம் அவர் கூறியது:


தான் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு ஏமாற்றி விற்கப்பட்டதாகவும் சிரியா மற்றும் ஜோர்டானின் தலைநகரான அம்மானில் உள்ள பெரும்புள்ளி விலங்குகளுக்கு தினசரி உணவாவதாகவும் கூறியது உருக்கமாக இருந்தது. விபச்சாரக் கொடுமை தாங்கமுடியாமல் ஒரு நாள் விடுதியிலிருந்து தப்பித்து ஓடி சிரியாவிலுள்ள ஈராக்கிய தூதரகத்தில் தஞ்சம் புகுந்ததாகவும் கூறினார். தற்போது தனது அத்தையின் வீட்டில் பாதுகாப்பாய் தங்கியிருக்கும் சுஹா, சிரியாவின் விபச்சார விடுதியில் இருந்து தான் தப்பித்து ஈராக் திரும்பும் வரை தனக்கு உதவிய ஒரு ஈராக்கிய குடும்பத்திற்கு தான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் நினைவுகூர்ந்தார். தன்னைப் போன்றே பலப்பல பெண்கள் இத்துயரத்தில் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


பாக்தாத்தின் பெண்ணுரிமைச் சங்கத்தின் (WRA) செய்தித் தொடர்பாளரான மயாதா ஜூஹைர் என்ற பெண் பேசுகையில் ஈராக்கிய அரசு மற்றும் அரசு சாரா (NGO) அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து இளம் பெண்களைக் கடத்துவதையும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதையும் தடுக்க முயன்று வருகிறோம். அமெரிக்கப் படையெடுப்பினால் நாசமாகிப் போய் இருக்கும் ஈராக்கில், வறுமையில் நிர்க்கதியாய் நிற்கும் விதவைகளும், இளம் பெண்களும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவிலான உதவியும் போதுமான அளவிற்கு நிதியுதவியும், மனித வளமும் இல்லாமல் இப்பிரச்னையை எளிதாக தீர்க்க முடியாது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம்.


தனது மார்க்கத்திற்கு முரணான காரியங்களை செய்து கொண்டிருப்பதை, தான் நன்கு உணர்வதாகக் கூறுகிறார், தன் கணவரை ஒரு வெடி விபத்தில் இழந்திருக்கும் நிர்மீன் லத்தீஃப் என்ற 27 வயதான விதவைப் பெண். தனது நிலையை எடுத்துக்கூறி பொருளாதார உதவி செய்யுமாறு தனது உறவினர்களை எவ்வளவு வேண்டிக் கொண்டும் பலனின்றிப் போகவே, வேறு வழியே இன்றி விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் கூறியவை:


"எனக்குத் தெரிவதெல்லாம் பசியினால் என் கண்முன்னே துடித்து இறந்து கொண்டிருக்கும் என் குழந்தைகள்; என் குழந்தைகள் மட்டுமே!" என்கிறார் வெறித்த பார்வையுடன்.


அகத்தில் இறைநம்பிக்கையின் விளிம்பில் நின்றுகொண்டு மனதோடு கடும் போர் நடத்திக்கொண்டும், புறத்தில் வாழ வழியின்றித் துடிக்கும் இவரைப் போன்ற இலட்சக்கணக்கான பெண்களின் இந்த இழிநிலைக்கு, சர்வதேச அளவில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் இஸ்லாமிய சமுதாயம் என்ன பதில் வைத்திருக்கிறது?

- அபூ ஸாலிஹா

இந்தச் செய்திக்கட்டுரையை நாம் பதிக்கும் வேளையில் நேற்று (15-08-2007) நடந்த ஒரு குண்டுவெடிப்பில் 175 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறி இறந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

Thursday, August 16, 2007

தென்காசி கொலை: இந்து முண்ணனி தலைவர் கைது.. தென்காசி கலவரத்திற்கு மதசாயம் பூசுவோர் மீது நடவடிக்கை: த.மு.மு.க. வற்புறுத்தல்

தென்காசியில் 6 பேர் கொலை இந்து முன்னணி தலைவர் கைது: மேலும் 3 பேர் சிக்கினர்

  • கைது செய்யப்பட்ட சக்திபாண்டியன் தென்காசி நகர இந்து முன்னணி தலைவராக உள்ளார்.

  • தென்காசி கலவரத்திற்கு மதசாயம் பூசுவோர் மீது நடவடிக்கை: த.மு.மு.க. வற்புறுத்தல்
தென்காசி சம்பவத்திற்கு மதசாயம் பூசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று த.மு.மு.க. வற்புறுத்தி உள்ளது.

த.மு.மு.க. மாநில செயலாளர் ஜெ.எஸ். ரிபாயி நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்காசியில் நடைபெற்ற படுகொலைகள் மத மோதல்கள் இல்லை. இதற்கு மத சாயம் பூசப்படுவதை த.மு.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருசாரர்களும் ஆயுதம் வைத்திருப்பதாக கூறும் காவல்துறை அவர்களை கடுமையான ஆயுதங்களோடு கையும் களவுமாக பிடித்து முன்எச்சரிக்கை கைது செய்யாமல் அவர்களை வெற்று காகிதத்தில் எழுதிதரகூறி மன்னித்து அனுப்பியதால்தான் இது போன்று பகிரங்கமாக பட்டப்பகலில் படுகொலை நடக்க ஊக்கமளித்து இருக்கிறது. காவல் துறையின் மெத்தனப் போக்கே கொலைகளுக்குக் காரணம்.

இருதரப்பும் பகிரங்கமாக மோதிக்கொள்ளும் சூழல் ஏற்படுவதற்கு காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் ஒரே நேரத்தில் இரு தரப்பையும் கையெழுத்திட செய்தது நீதித்துறை சரியான கருத்தில் பார்க்கவில்லை என குற்றம் சாட்டுகிறோம்.

சம்பவம் நடைபெற்ற பின்னர் காவல்துறையின் நடவடிக்கை சிறப்பாக இருந் தாலும் கைது நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது பொய்வழக்கு போட்டுவிடக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு அப்பாவிகள் கைது செய்யப்பட்டால் த.மு.மு.க. போராட தயங்காது.
தென்காசி பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இயல்பு நிலை திரும்பியது: தென்காசியில் இன்று கடைகள் திறக்கப்பட்டன
6 பேர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து தென்காசியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. கடந்த 2 தினங்களாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. பாதுகாப்புடன் குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டன.

அசம்பாவிதத்தை தடுக்க நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சோகமும், பீதியும் கவ்வியிருந்த தென்காசியில் இப்பொழுது சற்று இயல்பு நிலை திரும்பி உள்ளது. இன்று கடைகள் திறக்கப்பட்டன. பஜாரில் மக்கள் கூட்டம் மிதமாக காணப்பட்டது. பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் வழக்கம் போல் சென்றனர். வேன், ஆட்டோக்களும் இயங்க தொடங்கின.

எனினும் ஒருவித அச்ச உணர்வு தென்காசி பகுதி மக்களிடையே தொற்றியுள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தென்காசியில் சகஜநிலை திரும்புவதற்கு அரசுடன் இணைந்து த.மு.மு.க வீரியமாக களப்பணியாற்றிவருகிறது.

தமிழக முதல்வருக்கு தமுமுக அவசரக் கடிதம்!

தமிழக முதல்வருக்கு தமுமுக அவசரக் கடிதம்

தென்காசி டி.எஸ்.பி. மற்றும் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்

தமிழக முதல்வருக்கு தமுமுக தலைவர் அவசரக் கடிதம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தமிழக முதல்வருக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
''நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று காலையில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த ஆறு நபர்கள் உயிர் இழந்தது மிகுந்த வேதனையைத் தருகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் குமாரபாண்டியனைக் கொலை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டவர்களும், கடந்த மார்ச் மாதம் தமுமுக மாவட்டத் தலைவர் சேட் கானை கொலை செய்யும் நோக்கில் பயங்கரமாக தாக்கியவர்களும் சமீபத்தில் நிபந்தனை பிணையில் விடுதலையாகி வெüயே வந்துள்ளார்கள்.
சாதாரணமாக இதுபோல் நிபந்தனை பிணையில் வெüவருபவர்களுக்கு வெü மாவட்டங்கüல் தான் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்படும். தென்காசியில் தமுமுக மாவட்டத் தலைவர் தாக்கப்பட்ட பிறகு தென்காசியில் நடைபெற்ற சிறுசிறு சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கும் திருச்சியில்தான் நிபந்தனை பிணையில் கையொப்பமிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் குமாரபாண்டியன் கொலை மற்றும் சேட்கான் கொலை முயற்சியில் கைதாகி நிபந்தனைப் பிணையில் விடுதலை செய்யப் பட்டவர்களுக்கு மட்டும் தென்காசியில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து சேட்கானை தாக்கி பிணையில் வெüயில் வந்தவர்கள் தொடர்ந்து முஸ்லிம்களை பல்வேறு வகையில் வீதிகளில் வைத்து மிரட்டி வந்தனர். மாலை நேரங்கüல் சில முஸ்லிம் வீடுகள் மீது கல்வீச்சிலும் இறங்கினர். இவ்வாறு அவர்கள் தென்காசியில் தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்தி வருவது குறித்து நாங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு அவ்வப்போது புகார் களை அüத்து வந்துள்ளோம்.
நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் சேட்கானை மீண்டும் தாக்கி கொலை செய்வோம் என்று அவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மிரட்டி வருவது குறித்தும் காவல்துறையிடம் புகார் தெரிவித்தோம், இருதரப்பிலும் கைதாகி விடுதலை ஆனவர்கள் தொடர்ந்து தென்காசியில் இருப்பது சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் என்பதையும் நாம் முன்கூட்டியே தெரிவித்திருந்தோம், தென்காசி டி.,எஸ்,பி.யாக இருக்கும் மயில்வாகனனும், ஆய்வாளர் சந்திரசேகரனும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களது செயல்பாடுகüனால் பதட்டம் அதிகரிக்க காரணமாகவும் செயல்பட்டனர் என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
தென்காசியில் அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தென்காசியில் தொடர்ந்து அமைதி நிலவ தன்னாலான அனைத்து ஒத்துழைப்பு களையும் அரசுக்கு தரும் என்று உறுதி அüக்கிறோம்.
இக்கோஷ்டி மோதலுக்கு வித்திட்ட தென்காசி டி.எஸ்.பி. மயில்வாகனன் மற்றும் ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநேரத்தில் விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை தென்காசியில் பணியில் அமர்த்த வேண்டும். உயிரிழந்த முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அன்புடன் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.''

தென்காசியில் தாக்குதல் நடந்தது ஏன் - எப்படி?

தென்காசியில் தாக்குதல் நடந்தது ஏன் - எப்படி?
தென்காசியில் கடந்த டிசம்பர் மாதம் இந்து முன்னணியைச் சேர்ந்த குமார பாண்டியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குமார பாண்டியன் கொலைக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கும் பங்குண்டு சிலர் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டதால் இந்து முன்னணியினர் தமுமுகவின் நெல்லை மாவட்டத் தலைவர் தென்காசி மைதீன் சேட்கான் மீது கடந்த மார்ச் 2ம் தேதி கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் மயிரிழையில் மைதீன் சேட்கான் உயிர் தப்பினார். இத்தாக்குதலில் தொடர்புடையோர் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர்.

இச்சூழ்நிலையில் குமாரன் பாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் களும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். குமாரபாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் தென்காசியில் தங்கியிருந்து காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீனில் வெளியே வந்த முஸ்லிம்களை அடிக்கடி இந்து முன்னணியினர் தாங்கள் அவர்களை கொலை செய்வது உறுதி என மிரட்டி வந்துள்ளனர். இக்கொலை மிரட்டல் குறித்து முஸ்லிம்கள் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரனிடமும், தென்காசி டி.எஸ்.பி. மயில்வாகனத்திடமும் புகார் செய்தனர். இப்புகார் மீது காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சூழ்நிலையில் 14.8.2007 அன்று காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக சென்ற 10 பேர் டாடா சுமோ காரில் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு துணையாக சிலர் இரண்டு ஆட்டோக்களில் வந்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே திட்டமிட்டபடி இவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்த இந்து முன்னணியைச் சுமார் 40 பேர் கொண்ட கும்பல் பொதுமக்கள் அதிகளவில் புழங்கும் கூலைக்கடை மார்க்கெட்டில் உள்ள கன்னிமாரன்கோவிலும், மார்க்கெட்டில் வேறு சில பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருந்தது.

காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு மார்க்கெட் வழியாக திரும்பிக் கொண்டிருந்தவர்களின் ஆட்டோவை ஏற்கனவே திட்டமிட்டபடி தயாராக இருந்த இந்து முன்னணியைச் சேர்ந்த இருவர் இருசக்கர வாகனம் மூலம் மறித்தனர்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு தயாராக இருந்த மற்ற இந்து முன்னணியினர் முஸ்லிம்கள் சுதாரிப்பதற்குள் அவர்கள் மீது தாங்கள் நடத்த வைத்திருந்த அரிவாள்களைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் பஷீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே எதிர்தரப்பில் ஓரிருவர் தாங்கள் தற்காப்பிற்காக வைத்திருந்த ஆயுதங்கள் மூலம் பதிலடி தந்துள்ளனர். இதில் இந்து முன்னணியைச் சேர்ந்த சுரேந்திரன், செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோருக்கு வெட்டுக்காயம் விழுந்துள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் நாகூர் மீரான் உயிரிழக்க, மருத்துவமனையில் ஹஸன் கனி (எ) ராஜன் உயிரிழந்துள்ளனர். இந்து முன்னணி தரப்பில் கபிலன், ரவி ஆகியோர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

பாளையங்கோட்டை மருத்துவமனையில் இந்து முன்னணியினரும், ஹை கிரவுண்டு மருத்துவமனையில் மற்றொரு தரப்பும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உயிரிழந்த பஷீர், நாகூர் மீரான், ஹஸன் கனி ஆகியோரின் ஜனாஸாக்கள் நடுப்பேட்டை கபரஸ்தானில் செவ்வாய் இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் தமுமுக மாநிலச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி தலைமையில் நெல்லை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் தென்காசியில் முகாமிட்டுள்ளனர். கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் தென்காசியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி கோஷ்டி மோதலை தென்காசி டி.எஸ்.பி. மயில்வாகனனும், தென்காசி காவல் ஆய்வாளர் சந்திரசேகரனும் தடுத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அசட்டையாக இருந்ததன் காரணமாக இத்தாக்குதல் நடைபெறுவதற்கும், ஆறு பேர் உயிரிழப்பதற்கும் காரணமாக இருந்துள்ளனர். எனவே இவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் (கடித விவரம் தனியாக உள்ளது).

இச்சம்பவம் காரணமாக தென்காசியில் பதட்டம் நிலவுவதால் தென்காசி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. தென்காசிக்கு செல்லும் அனைத்தும் பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Thursday, June 21, 2007

10 வது படிக்கும் மகனை அறுவைசிகிச்சை செய்யவைத்த மருத்துவர்!

10 வது படிக்கும் மகனை அறுவைசிகிச்சை செய்யவைத்த மருத்துவர்!
-கர்ப்பிணிகளின் உயிரைப் பணயம் வைத்து சாதனை படைக்க முயன்ற கொடூரம்!!

பத்து மாதம் பொத்திப் பொத்தி வைத்துப் பாதுகாத்த கர்ப்பம்... பிரசவ வலி ஏற்படுகிறது... மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார் அந்த கர்ப்பிணிப் பெண். இயற்கையான முறையில் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளச் சம்மதித்து, கையெழுத்துப் போட்டு விட்டு ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே டென்ஷனோடு காத்திருக்கிறார் கணவர்.

'சும்மாவா?... பிரசவம்ங்கிறது ஒரு பொண்ணுக்கு மறுஜென்மம் மாதிரி...' என்று வெளியில் காத்திருக்கும் பாட்டிகள், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அந்த ஆபரேஷன் தியேட்டருக்குள்... தன்னை நம்பி இரண்டு உயிர்களை ஒப்படைத்த குடும்பத்துக்கு அந்த டாக்டர் எந்தளவுக்கு உண்மையாக இருக்கிறார் என்பது தெரியுமா? தெரியாதுதான் என்றாலும், கடவுள் மேல் வைக்கும் நம்பிக்கைபோல் டாக்டர்கள் மீதும் நம்பிக்கை வைக்கிறார்கள் மக்கள்.
ஆனால், அந்த ஒரு சம்பவத்தில், குறிப்பிட்ட அந்த டாக்டர் என்ன செய்தார் தெரியுமா? தான் தள்ளி நின்று கொண்டு பத்தாவது படிக்கும் தனது மகனை விட்டு அந்த அறுவை சிகிச்சையைச் செய்ய வைத்தார். செய்ய வைத்தது மட்டுமன்றி, அதனை வீடியோ எடுத்து வைத்தும் பெருமைப்பட்டிருக்கிறார் அந்த டாக்டர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்த இந்தச் சம்பவம்தான், திருச்சி வட்டார மருத்துவர்களிடையே (மிக ரகசியமாக விவாதிக்கப்படும்) தற்போதைய ஹாட் டாபிக்.

கடந்த மே மாதம் ஆறாம்தேதி மணப்பாறையில் ஐ.எம்.ஏ.வின் (இந்திய மருத்துவச் சங்கம்) கூட்டம் நடந்தது. வழக்கமாக நடக்கும் இது போன்ற கூட்டங்களில் பக்கத்து மாவட்டங்களில் இருந்து அல்லது பெரிய நகரங்களில் இருந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் டாக்டர்கள் வந்து, தங்கள் துறை ரீதியாக கெஸ்ட் லெக்சர் கொடுப்பார்கள். தாங்கள் சந்தித்த வித்தியாசமான மற்றும் சிக்கலான கேஸ்கள், அவை தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் போன்றவற்றையும் காட்டி விளக்குவார்கள். அதே போல், அந்தப் பகுதியில் இருக்கும் டாக்டர்களும் தாங்கள் சந்தித்த சிக்கலான கேஸ்கள் பற்றி அங்கே பேசுவார்கள். இது, மருத்துவர்கள் புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கும் துறை ரீதியான தங்களின் அறிவை மேலும் விரிவுபடுத்தி மக்களுக்குச் சேவை செய்யவும் நடக்கும் வழக்கமான ஒரு நிகழ்வு.

அன்று நடந்த கூட்டத்திலும் டாக்டர் கோவிந்தராஜ் என்ற யூராலஜிஸ்ட்டும், டாக்டர் ஜெய்கிஷ் என்பவரும் உரையாற்ற வந்திருந்தார்கள். அதற்கு முன்னதாக, மணப்பாறையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன் என்பவர் தானும் ஒரு சி.டி.யைக் போட்டுக் காட்ட விரும்புவதாகத் தெரிவிக்கவே, அவர் சந்தித்த ஏதோ ஒரு புதிய கேஸ் போலும் என்று டாக்டர்கள் அனுமதித்தனர். வீடியோவும் ஓடியது.

காட்சியில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு கிழிக்கப்பட்டு, குழந்தை வெளியே எடுக்கப்பட்ட பின்னர், மீண்டும் கர்ப்பப்பை உள்ளே வைக்கப்பட்டு வயிறு தைத்து மூடப்படுகிறது. தொடர்ந்து இதைப் பார்த்த டாக்டர்களுக்கு ஒரே குழப்பம். 'இது மாதிரியான சிசேரியன்களை டாக்டர்கள் சாதாரணமாகச் செய்வார்களே, இதிலென்ன அதிசயம்?' என்ற கேள்வியோடு ஒருவரையருவர் பார்த்துக் கொண்டனர்.
அப்போது டாக்டர் முருகேசன் 'ஏதாவது வித்தியாசமாகத் தெரிந்ததா?' என்று கேட்க, 'இல்லையே டாக்டர்' என்றனர். 'அந்த அறுவைச் சிகிச்சையைச் செய்தது பத்தாவது வகுப்பு படிக்கும் என் மகன் திலீபன்' என்று அவர் பெருமையாகச் சொன்னபோது, அங்கிருந்த டாக்டர்களுக்கு அதிர்ச்சியோ, அதிர்ச்சி!

இது சரியா?, சாதனை என்று நினைத்துக் கொண்டு இவர் செய்த இந்தச் செயலுக்கு சட்ட ரீதியாக என்ன தண்டனைகள் கிடைக்கும்? கணவன், மனைவி இருவருமே டாக்டர்களாக இருந்தும் இவருக்கு ஏன் புத்தி இப்படிப் போகிறது? அறுவை சிகிச்சை நிபுணரான இவர் எப்படி மயக்க மருந்து கொடுக்கலாம்? அப்படிச் செய்ததோடு மட்டுமல்லாமல், தான் செய்ததை வீடியோ எடுத்துக் கொண்டு வந்து போட்டுக் காட்டும் இவர், என்ன மாதிரியான ஆள்? இவருக்கு சித்தம் கலங்கிப் போய்விட்டதா? என்று பலருக்கும் பல்லாயிரம் கேள்விகள். அதனால் எழுந்த சலசலப்பு அடங்கியதும், இது தவறு என்று டாக்டர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

அவர்கள் கண்டித்ததும் கடுங்கோபம் கொண்டார் முருகேசன். 'உங்களுக்கெல்லாம் பொறாமை. ஒரு சின்னப் பையன் சிசேரியன் செஞ்சுருக்கானேன்னு பாராட்டாமல் இப்படிப் பேசுறீங்களே? நான் என் பையனை கின்னஸ் சாதனைக்கு அனுப்பப் போறேன். நீங்கள்லாம் என்ன பண்றீங்கன்னு தெரியாதா? திருச்சியில இருக்குற டாக்டர்களில் எத்தனை பேர் இண்டர்நேஷனல் கிரிமினல்ஸ்னு எனக்குத் தெரியாதா? நான் ஐ.எம்.ஏ. (மணப் பாறை) மேலேயே கேஸ் போடப் போறேன்' என்று ஆரம்பித்து கத்தித் தீர்த்து விட்டார்.

ஒரு வழியாக பிரச்னை ஓய்ந்து, கெஸ்ட் லெக்சர் கொடுக்க வந்தவர்கள் கிளம்பிப் போனாலும் முருகேசனின் பேச்சு மணப்பாறையில் உள்ள மருத்துவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. அவருக்கு அறிவுரை சொல்லும் நிலையில் உள்ள அவரது நண்பர்கள், சீனியர்கள் மூலம் 'மூவ்' செய்தும் முருகேசன் எந்தவித வருத்தமும் தெரிவிக்காமல் தொடர்ந்து மணப்பாறை ஐ.எம்.ஏ.வை தாக்கி வந்திருக்கிறார். அதனால் மணப்பாறை ஐ.எம்.ஏ. 11.05.07 அன்று தனது அவசரக் கூட்டத்தை நடத்தி முருகேசன் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி, அதை சென்னையில் உள்ள ஐ.எம்.ஏ.வுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

'மதி சர்ஜிகல் அண்ட் மகப்பேறு மருத்துவமனை' என்ற பெயரில் சுமார் பத்து வருடங்களாக மணப்பாறையில் மருத்துவம் செய்து வருகிறார் டாக்டர் முருகேசன். இவரது மனைவியான காந்திமதியும் ஒரு மகப்பேறு மருத்துவ நிபுணர். இருவரும் ஒரே கட்டடத்திலேயே நர்ஸிங் ஹோம் நடத்த, அதன் மாடியிலேயே வீடு என்பதால், முழுநேரமும் தொழிலைக் கவனிக்க முடிந்திருக்கிறது. இவர்களுக்கு திலீபன்ராஜ் என்ற ஒரே மகன். தற்போது பத்தாவது முடித்திருக்கும் இவனுக்குத்தான் பயிற்சி கொடுத்து சிசேரியன் செய்ய வைத்து அதனை வீடியோ எடுத்திருக்கிறார் முருகேசன்.
பொதுவாக மருத்துவர்கள் தங்களது சிகிச்சையில் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால், ஒருவரையருவர் காட்டிக் கொடுப்பதில்லை. காரணம், தாங்கள் ஒரே துறையைச் சார்ந்தவர்கள் என்பது மட்டுமன்றி இந்தத் தொழில் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கெட்டுப் போய்விடக் கூடாது என்பதுதான். அதையும் மீறி இந்த விஷயம் கண்டனக் கடிதம் எழுதுமளவுக்குப் போனது எப்படி என்று மணப்பாறை ஐ.எம்.ஏ. உறுப்பினர்களாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சில மருத்துவர்களிடம் கேட்டோம். சி.டி.யில் தாங்கள் பார்த்ததை எல்லோருமே ஒப்புக் கொண்டனர். 'நாங்கள் ஏதாவது பேசினால் தொழில் போட்டியாலும் பொறாமையாலும் இப்படிப் பேசுகிறான் என்று சண்டைக்கு வருவார். அதனால் எங்க பேரைப் போடாதீங்க. விஷயத்தை மட்டும் கேளுங்க'' என்ற கண்டிஷனோடு சில மருத்துவர்கள் பேசினர்.
'அந்த மீட்டிங்கில் அவர் சி.டி. போட்டுக் காட்டியது உண்மை. அதைப் பார்த்து நாங்கள் அவரைக் கண்டிச்சதும் உண்மை. அதுக்கு அவர் கோபப்பட்டதும் உண்மை. முதலில் அவரைக் கண்டிச்சு விட்டுடலாம்னுதான் நெனைச்சோம். இவர் மேல நடவடிக்கை எடுத்தால் அது அந்தப் பையனோட எதிர்காலத்தையும் பாழாக்கிடும் என்பதாலேயே இனிமேல் இதுமாதிரி செய்யாதீங்கன்னு சொன்னோம். அதுக்கு அவர் 'நான் என்ன புளூஃபிலிம் சி.டி.யா காட்டினேன்? என் பையன் சிசேரியன் பண்ணுனதைத்தானே சிடியில காட்டுனேன்'னு சொல்லிட்டார்.
மணப்பாறை ஐ.எம்.ஏ. தலைவர் டாக்டர் நசுருதீன் போனில் பேசுனப்போ, அவரை கம்யூனலா சில வார்த்தைகள் சொல்லி முருகேசன் பேசிட்டார். 'இந்த ஆர்கனைசேஷனைப் பத்தி நான் கவலைப்படவில்லை. நான் ஐ.எம்.ஏ.வை நம்பி இல்லை'ன்னு சொல்லிட்டார். இத்தனைக்கும் அந்த முருகேசனே ஐ.எம்.ஏ.வோட முன்னாள் செயலாளர்தான். அதனால் அவரைக் கண்டித்துத் தீர்மானம் போட்டு, மேல் நடவடிக்கைக்காக சென்னையில் உள்ள ஐ.எம்.ஏ சென்ட்ரல் கமிட்டிக்கு அனுப்பிட்டோம்'' என்ற அவர்கள், தங்களின் பெயரை வெளியிட வேண்டாம் என மீண்டும் கேட்டுக் கொண்டனர்.
திருச்சியின் பிரபல மருத்துவரும் ஐ.எம்.ஏ.யின் முன்னாள் மாநிலத் தலைவருமான டாக்டர் அஷ்ரப்பிடம் இது பற்றிக் கேட்டோம். 'இந்தச் சம்பவம் பற்றி நானும் கேள்விப்பட்டேன். இதைக் கேட்கவே ரொம்ப ஷாக்கா இருக்கு. இது நூறு சதவிகிதம் தவறான செயல். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், ஐ.எம்.ஏ.ங்கிறது ரோட்டரி, லயன்ஸ் மாதிரி ஒரு அமைப்புத்தான். அதனால இந்த விஷயத்துல ஐ.எம்.ஏ. நடவடிக்கை எடுக்க முடியாது. தற்போது மெடிக்கல் கவுன்சில் இருக்கு. அவங்கதான் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கணும். அவர் செஞ்சது சரியா தப்பான்னு முடிவு பண்ணணும்.

மிகச் சிறந்த மருத்துவர்கள்கூட எல்லா ஆபரேஷன்களையும் வெற்றிகரமாக முடிப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதிலும் ஃபெயிலியர்கள் இருக்கும். எல்லா மனிதர்களுக்கும் எல்லா உறுப்புகளும் ஒரே மாதிரி அமைவதில்லை. அப்படியிருக்கும்போது ஆபரேஷன் பண்ணும்போது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதை ஒரு சின்னப் பையன் எப்படிச் சமாளிக்க முடியும்? அதுவும் மயக்க மருந்து நிபுணர் இல்லாமலே ஓர் அறுவை சிகிச்சை நடப்பதும் தவறு. தாய், குழந்தை இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்? அடுத்தவர்களின் உயிர்களை ஆபத்துக்கு உள்ளாக்கி சிறுவனுக்கு ட்ரெயினிங் கொடுக்கும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தாங்க? எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் சர்ஜரி பண்ணலாம். ஆனால், அவர்கள் செய்வதில்லை. அதற்கென உள்ள எக்ஸ்பர்ட்ஸ்தான் பண்றாங்க. மெடிக்கல் கவுன்சிலுக்குப் போனா இதனுடைய விளைவுகள் மிக மோசமாக இருக்கும்'' என்றார் நம்மிடம்.

சரி! இந்தப் பிரச்னை பற்றி முருகேசன் என்னதான் சொல்கிறார் என்று தெரிந்து கொள்ள அவரைச் சந்தித்தோம். இரண்டு நாட்கள் அலைச்சலுக்குப் பின்னர் மணப்பாறையில் உள்ள மாண்ட்போர்ட் பள்ளியில் தனது மகன் திலீபன்ராஜை ப்ளஸ் ஒன் சேர்த்து விட்டு வந்த அவரைப் பிடித்தோம். 'இங்க லோக்கல்ல உள்ள ஐ.எம்.ஏ. மெம்பர்கள் பதவிப் போட்டியில் இப்படி என் மேல குறை சொல்லுறாங்க. நான் என் மகனுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே ட்ரெயினிங் குடுத்திருக்கேன். சாதனை பண்றதா நெனச்சுத்தான் பண்ணுனேன். லோக்கல் ஐ.எம்.ஏ.யில உள்ளவங்களுக்கு என் டெவலப்மெண்ட்டுல விருப்பம் இல்ல. பத்து வயசுப் பையன் கார் ஓட்டுறான். அமெரிக்காவுல பதினைந்து வயசுப் பையன் டாக்டர் பட்டம் வாங்குறான். பொதுமக்கள், மருத்துவ அமைப்புகள் ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்காட்டியும் நான் என் மகனுக்கு ட்ரெயினிங் குடுத்திருக்கேன். அவன் சிசேரியன் செய்யும் திறமையுள்ளவன் என்பது உண்மைதான்.

சிலர் இது தவறுன்னு சொல்லுவாங்க. சிலர் இது சரின்னு சொல்லுவாங்க. அதைப்பத்தி நான் கவலைப்படலை. என்கிட்டயும் ஐ.எம்.ஏ. அனுப்புன அந்த லெட்டர் வந்தது; விளக்கம் கேட்டிருந்தாங்க. நான் என் சீனியர் ஒருத்தர்கிட்ட டிஸ்கஸ் பண்ணுனேன். அவர் 'இப்படிச் சொல்லாதீங்க. நான்தான் சர்ஜரி பண்ணுனேன். என் மகன் பக்கத்துல நின்னான். இன்ஃபெக்ஷன் ஏதும் ஆகக் கூடாதுன்னுதான் அவனுக்கும் க்ளவுஸ் போட்டிருந்தேன்னு சொல்லிடுங்'கன்னு சொன்னாரு. சிடி என்கிட்டதானே இருக்கு. நானா பார்த்துக் குடுத்தாத்தானே. அதுனால பிரச்னை தீர இப்படி எழுதிக் குடுத்துட்டேன். ஐ.எம்.ஏ. ஒண்ணும் ஆத்தரஸைடு பாடி கெடையாது. அதுக்கு ஒரு டாக்டரை கண்ட்ரோல் பண்ண பவர் கெடையாது.
ஒவ்வொரு ஆஸ்பத்திரியில ஆயாதான் டெலிவரியே பாக்குது. நான் ஸ்வீப்பரைக் கூட்டியாந்து ட்ரெயினிங் குடுக்கலை. எல்லாம் ஓர் அதிர்ஷ்டத்துல நடக்குது. நல்லாப் படிக்கிற என் மகனுக்குத்தான் ட்ரெயினிங் குடுத்தேன். எல்லாரும் ஒரு ஆஸ்பத்திரி கட்டிட்டு, தான் டாக்டரா ப்ராக்டிஸ் பண்ணிட்டு தன் புள்ளையையும் டாக்டராக்கி பின்னாளில் தனக்கு ஒரு வாரிசை உருவாக்குறாங்க. நான் அதைச் செய்யக் கூடாதா? நான் மணப்பாறையிலேயே ஹார்ட் ஆபரேஷன் பண்ணுனவன்'' என்றார் அதிரடியாக.

நல்லமுறையில் மகப்பேறு முடியும் என்று நம்பி, இவரைத் தேடி வந்தவர்களுக்கு ஒரு கத்துக்குட்டிப் பையனை வைத்து இவர் சிசேரியன்கள் செய்தது அந்த கர்ப்பிணிகளுக்கும், உறவினர்களுக்கும் தெரிந்தால் என்ன நடக்கும்? மற்றவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சாதனைகள் செய்யப் போக, இவரோ மற்றவர்களின் உயிரைப் பணயம் வைத்து தன் மகனை சாதனையாளராக்கி இருக்கிறார். அந்த நிலையில் ஓர் அசாதாரண சூழ்நிலை உருவாகி, தாயின் உயிருக்கோ அல்லது குழந்தையின் உயிருக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருந்தால், இவரும் சர்வ சாதாரணமாக பில்லைப் போட்டு பணத்தை வாங்கிக் கொண்டு பிணத்தை ஒப்படைத்திருப்பார். சம்பந்தப்பட்ட உறவினர்களும் 'டாக்டர் நல்ல டாக்டர்தான், விதி முடிஞ்சு போச்சு. என்ன பண்றது?'' என்று புலம்பிக் கொண்டே வீட்டுக்குப் போயிருப்பார்கள். இது போன்ற டாக்டர்களை என்ன செய்வது?
நன்றி : ரிப்போர்ட்டர்
படங்கள் : சன் தொலைக்காட்சியிலிருந்து

Thursday, June 14, 2007

Dark Underside of Iraqi Refugee Crisis

Dark Underside of Iraqi Refugee Crisis


REGIONAL - The dark underside of the world’s fastest growing refugee crisis is the indelible scarring of millions of Iraqi children, alarming numbers of whom have witnessed gruesome violence and have had close family members murdered, a new report from World Vision finds.



The dark underside of the world's fastest growing refugee crisis is the indelible scarring of millions of Iraqi children, alarming numbers of whom have witnessed gruesome violence and have had close family members murdered, a new report from World Vision finds.The report, Trapped! The Disappearing Hopes of Iraqi Refugee Children, found 43 per cent of children surveyed in Amman, Jordan witnessed violence in Iraq, and 39 per cent said they lost someone close through violence.

Tragically, both children in Iraq and refugee children in neighbouring countries do not receive basic medical care, not to mention specialized support to deal with trauma.

But the structured classroom environment is a powerful place for helping children work out stress and trauma, a major point of the report that calls for immediate access to education for all of the 200,000 Iraqi refugee children in Jordan.

'These children have been kidnapped and held for ransom, witnessed brutal home invasions, suicide bombings and murders. Now refugee life offers them little option but to go to work as child labourers, exposing them to the threat of deportation,' said Ashley Clements, author of the report.Understandably, 25 per cent of the Iraqi refugee children World Vision surveyed did not feel safe in their Jordanian homes. This is a combination of past experiences, lack of refugee status, which leaves the entire family unsure, and the absence of healthy routines like going to school, the report says.

World Vision was told only 14,000 to 20,000 of Iraqi children in Jordan attend schools. Most families fled with little or nothing and while they were solid middle class at home, in Jordan they don't have enough to feed themselves let alone pay private school fees. With no official refugee status, their children have no right to attend Jordanian schools.Schools and other infrastructure in Jordan are already overburdened.

Declaring the nearly 2 million Iraqis in Jordan as official refugees would require provision of services the government cannot possibly manage. 'Two months ago the UNHCR Geneva conference called on the international community to address the crisis of the 2 million Iraqi refugees. The response of the nations has been a deafening silence,' said Clements.'An entire generation of Iraqi children is now trapped in one debilitating limbo or another, either refugee life outside Iraq without the official status to ensure critical services or caught in the crossfire of carnage inside their country,' he said.'These children, hundreds of thousands of them, require immediate access to education and adequate healthcare. We need to start rebuilding their ability to hope, to find reasons to work for their own futures,' he concluded.The report, Trapped! The Disappearing Hopes of Iraqi Refugee Children, builds upon the findings of an earlier report released by World Vision in April 2007.UNHCR says the combined number of internally and externally displaced Iraqi children is 2 million.

For interviews please contact Ashley Clements mob: +962 79 639 4916

கொலைநகரமாகும் தலைநகரம்!

கொலைநகரமாகும் தலைநகரம் சென்னை எஸ்.ஐ.மகன் விரட்டிக் கொலை

ஜூன் 11, 2007
பழிக்குப் பழி வாங்க சப் இன்ஸ்பெக்டரின் மகனை ஓட ஓட விரட்டிக் கொன்றது ஒரு கும்பல். சென்னை நகரில் ஒரிரு நாட்களில் மட்டும் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதால் கொலைநகரமா அல்லது தலைநகரமா என்ற பீதியில் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.

சென்னை நகரில் கடந்த சில நாட்களாக படுகொலைகள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. ஓரிரு நாட்களில் மட்டும் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் 24 மணி நேரத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் டி.பி.சத்திரம் பகுதியில், நேற்று சப் இன்ஸ்பெக்டரின் மகனை பட்டப் பகலில் நடு ரோட்டில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்துள்ளனர்.

டி.பி.சத்திரம் பரமேஸ்வரன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரன். இவர் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஆவார். தனது மகன் முருகன், 6 மகள்களுடன் அடுக்கு மாடிக் குடியிருப்பைக் கட்டி அதில் வசித்து வருகிறார்.
முருகனின் மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு சந்தோஷ், ஆகாஷ் என இரு மகன்கள் உள்ளனர். முருகனுக்கு பல சமூக விரோதிகளுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவரைப் பழி வாங்க பலரும் அப்பகுதியில் காத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இப்பகுதியில் முன்பு நடந்த ஒரு ரவுடி கொலையில் முருகனுக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் வெள்ளை ரவி என்பவர் கொல்லப்பட்டார். அவர், முருகனின் நண்பர் எனக் கூறப்படுகிறது. இதற்குப் பழி வாங்கும் விதமாக பிரேம்குமார் என்பவர் கடத்திச் சென்று கொல்லப்பட்டார்.

பிரேம்குமார் கொலைக்கு முருகன்தான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரைப் பழிவாங்க பிரேம்குமாரின் கூட்டாளிகள் முயற்சித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை தனது பைக்கில் வீட்டிலிருந்து கிளம்பினார் முருகன். அப்போது நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல் முருகனை சுற்றி வளைத்தது. இதையடுத்து பைக்கை விட்டு இறங்கி ஓடினார் முருகன். ஆனால் அந்தக் கும்பல் விடாமல் துரத்திச் சென்றது.

மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் பட்டப் பகலில் ரவுடிக் கும்பல் முருகனைத் துரத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முருகனை சுற்றி வளைத்து சரமாரியாக அந்தக் கும்பல் வெட்டித் தள்ளியது. இதில் முருகன் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

தனது தந்தை வெட்டிக் கொல்லப்பட்டதை முருகனின் மகன் ஆகாஷ் நேரில் பார்த்து விட்டு கூச்சல் போட்டுள்ளான். இதையடுத்து முருகனின் தாயார் பூபதி வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்தார்.

போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். முருகன் கொலையைத் தொடர்ந்து அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. பரபரப்பு நிலவியது.

கொலையாளிகளில் நரேஷ், சரவணன் ஆகியோரது அடையாளங்கள் தெரிய வந்துள்ளன. இவர்களும் இதே பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். மற்ற இருவரும் யார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர்களும் இதே பகுதியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

முருகனைக் கொன்றவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
2 நாள்களுக்கு முன்தான் ரவுடிகள் வேட்டையை சென்னை காவல்துறை தொடங்கியது. ஆனால் தொடங்கிய நாளிலேயே ஒரு படுகொலை நடந்துள்ளது சென்னை போலீஸாருக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.

தொடரும் படுகொலைகளால் சென்னை நகர மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

4 தொகுதிகளில் வேட்பு மனு! ஜெ மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!

4 தொகுதிகளில் வேட்பு மனு!
ஜெ மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக பொதுச் செயாளர் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை, புவனகிரி, தர்மபுரி ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா.

இதுகுறித்து திமுக எம்பி குப்புசாமி தேர்தல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டபடி ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக் கூடாது. ஆனால் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை, புவனகிரி, தர்மபுரி ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தாம் ஏற்கனவே 2 தொகுதிகளில் போட்டியிடுவதை மறைத்துவிட்டுத் தான் 2 தொகுதிகளில் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் குப்புசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தை அனுகினார். அங்கு தாக்கல் செய்த மனுவில், நான் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

குப்புசாமியின் இந்த மனு 4 ஆண்டுகளாக நிலுவையிலிருந்தது. இதன் பின்னர் நீதிபதிகள் தர்மராவ், பழனிவேலு ஆகியோரை கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குப்புசாமி சார்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஜெயலலிதா சார்பில் ஜோதி, தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ராஜகோபால் ஆகியோர் ஆஜராயினர்.

இன்று இந்த வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. சட்டம் ஏழைக்களுக்கு மட்டுமல்ல சமுதாயத்திலுள்ள உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

இந்த வழக்கில் சட்டம் பொதுவானது என்ற கொள்கையை விட்டு விலகிச் சென்றுள்ளதாக தெரிகிறது.

2 தொகுதிகளுக்கு மேல் மனு தாக்கல் செய்த ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க மனுதாரர் புகார் கொடுத்துள்ளார். இந்த மனு மீதான குற்றசாட்டில் அடிப்படை முகாந்திரம் உள்ளது. 2 தொகுதிகளில் மனு தாக்கல் செய்ததை மறைத்து 4 தொகுதிகளில் மனு தாக்கல் செய்துள்ளது, சட்ட விதிகளை மீறுவதாக உள்ளது.

தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் கண்டும் காணாதது போல் வருத்தத்திற்குரியது. ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க கோரும் குப்புசாமி மனு மீது தேர்தல் ஆணையம் 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தனர்.

ஜெபத்தின் பெயரில் விபச்சாரமா?

ஜெபத்தின் பெயரில் விபச்சாரமா?
"டவுட்'டைக் கிளப்பும் மைத்துனர்!

கம்ப்யூட்டர் மயமான இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது.
கோவை, பாப்பநாயக்கன்பாளையம், அன்னை இந்திரா நகரில், சொகுசு பங்களாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் மதபோதகர் சார்லஸ். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சேர்ந்த இவர், மின்சாரத்துறையில் உதவிப் பொறியாளராகப் பணிக்குச் சேர்ந்தார். பிறகு குறி, ஜெபம் என்று தன்னை மதபோதகராகக்; காட்டிக் கொண்டதில் கையில் காசு புரண்டது. எனவே அரசுப் பணியை உதறினார்.

சார்லஸின் பேச்சில் மயங்கிய பலரும் அவரோடு ஊழியத்தில் (ஜெபத்தில்) இணைந்துகொள்ள, கார் பங்களா என தனது வசதிகளைப் பெருக்கிக்கொண்டார். எப்போதும் தனது காரில் குட்டி, புட்டிகளுடன் வலம் வந்தார்.

இந்நிலையில்தான் கடந்த புதனன்று, சார்லஸின் சகோதரர் செல்வக்குமாரின் மனைவி அனுராதா, கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்தார்.

அன்று இரவே அதிரடியாக சார்லஸின் வீட்டுக்குள் நுழைந்து மாடியில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த போலீஸôர் அதிர்ச்சியில் நிலை குலைந்து போயினர். அங்கே அறை முழுவதும் புழுக்கள் நெளிய, சிதைந்த எலும்புக் கூடாக ஒரு ஆண் சடலம். அது தனது கணவர் செல்வக்குமார்தான் என அனுராதா அடையாளம் காட்ட பரபரப்பு மேலும் கூடியது.

"என்ன நடந்தது?' என்பதை செல்வக்குமாரின் மனைவி அனுராதாவே நம்மிடம் விவரித்தார்.

""இனி என்னத்த சொல்றது? அண்ணனைப் பார்த்துட்டு வர்றேன்னு போன ஏப்ரல் 2-ஆம் தேதி எங்களை விட்டு வந்தவரு, இப்ப என்னையும் எனது குழந்தைகளையும் அநாதையாக்கிட்டு போய்ட்டாரே'' எனக் கதறியவரை நாம் சமாதானப்படுத்திப் பேச வைத்தோம்.

""என் புருஷன் கொஞ்சம் பயந்த சுபாவம். மூனு மாசத்துக்கு முன்னாடி நைட்டு எதையோ பார்த்துட்டு பயந்தவர், வீட்டில் யாருகிட்டேயும் எதுவும் பேசாமல் இருந்தார். அப்பதான், அண்ணனை போய் பார்த்தா சரியாகிடும்னு எங்ககிட்ட சொல்லிட்டு கோயம்புத்தூர் வந்துட்டாரு. அவுங்க அண்ணன் சார்லஸ் ஊழியத்தில் இருக்கிறதால் குணப்படுத்தி விடுவார்னு நம்பிக்கையில அவரை அனுப்பி வச்சோம்.

ஆனா மூனு மாசமாக என் புருஷனை பத்தி எந்தத் தகவலும் இல்லை. அவுங்க அண்ணன் சார்லஸýக்கு ஃபோன் பண்ணி என் கணவரைப் பத்திக் கேட்டா, வெளியூர் போயிருக்கான், ஒரு ஊழியத்துல இருக்கான்னு சொல்லியே எங்களை சமாளிச்சுட்டு வந்தாரு.

இதனால எங்களுக்கு சந்தேகம் வந்து, போன புதன்கிழமை உறவினர்களோடு கோவை வந்தேன். சார்லஸ் வீட்டுக்கு போனப்ப வீடு பூட்டிக் கிடந்தது. கீழ் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் வின்சென்ட், அக்கம் பக்கத்துல கேட்டப்ப யாரும் எந்த பதிலும் சொல்லலை. அப்ப நான் மாடிக்கு போனேன்.

அங்கே ஒரு விதமான வாடை வீசியது. சந்தேகமடைந்து போலீஸுக்குச் சொன்னோம். அவுங்களும் வந்து கதவை உடைச்சு பார்த்தப்போ சார்லஸ் தனது மனைவி, குழந்தைகளுடன் கட்டில் அருகில் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார். எனது கணவர் செல்வக்குமார் கட்டிலில் உடல் அழுகி இறந்து கிடந்தார். பாவிப்பய ஊழியம் செய்யுறேன்னு சொல்லி என் புருஷனை கொன்னுட்டான்'' எனக் கதறினார் அனுராதா.

இதையடுத்து அருகிலிருந்த செல்வக்குமாரின் மைத்துனர் சாமுவேல் துரைராஜ் நம்மிடம், ""ஊழியம் பண்றேன், ஜெபம் பண்றேன்னு சொல்லிட்டு மக்களை ஏமாற்றி காசு வாங்குறதுதான் சார்லஸ்சோட வேலையே...! குடும்பப் பிரச்சினைன்னு சொல்லி யாராவது இவன்கிட்ட வந்தாங்கன்னா குடும்பத்தை நிரந்தரமா பிரிப்பதோடு, பொம்பளைகளை தன் பக்கம் சேர்த்துக்குவான். அப்புறம் அவுங்களை தன்னோட "ஊழியத்துக்கு' பயன்படுத்திக்குவான். எப்பவுமே சார்லúஸôட ஐந்து, ஆறு பொண்ணுங்க இருப்பாங்க.

அவுங்களை எங்க எங்கேயோ கூட்டிட்டுப் போவான். ஜெபம் என்ற பெயர்ல இவன் விபச்சாரத் தொழில் செய்றானோன்னு சந்தேகம் எங்களுக்கு இருக்கு. ஏன்னா இவனோட கௌரி, இந்திரான்னு ரெண்டு பொம்பளைங்க எப்பவும் கூடவே இருப்பாங்க. இவங்களோட மோசமான தொழில் பற்றி அந்த ஏரியாவுக்கே தெரியும். இவங்களை புடிச்சு போலீஸ் விசாரிச்சா எல்லா உண்மையும் தெரிஞ்சிடும்...

போலீஸ் சொல்ற மாதிரி இவன் சைக்கோவெல்லாம் கிடையாது. கிரிமினல்... மச்சான் தூக்குப்போட்டு தற்கொலை செய்யுற அளவுக்கு கோழை அல்ல, அவரை கொலை பண்ணியிருப்பாங்களோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு... இந்த சார்லஸ் பத்தின முழு விவரத்தையும் போலீஸ் விசாரிக்கணும். அப்பதான் உண்மை தெரியும்'' என்றார்.

இதற்கிடையே போலீஸ் பிடியில் இருந்த மதபோதகர் சார்லஸ் தனது வாக்கு மூலத்தில், ""ஏப்ரல் 6-ஆம் தேதி பிரார்த்தனைக்காக நான் வெளியூர் போய்ட்டேன். அப்ப வீட்டில் தனியா இருந்த என் தம்பி செல்வக்குமார் மனபயத்தால் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை என் மனைவி எனக்குச் சொன்னார். இயேசுவின் ஆணையின் பேரில் அவர் மீண்டும் உயிர்த் தெழுவார் என்ற நம்பிக்கையில் இறந்த எனது தம்பியை மீண்டும் உயிர்ப்பிக்க ஜெபம் செய்தோம். 90 நாட்களில் தம்பியை உயிர்ப்பித்து இருப்பேன். உடல் அசைந்து தம்பி உயிர்த் தெழுவதற்கான காலகட்டம் வந்த நிலையில்தான் போலீஸôரும், தம்பி குடும்பத்தினரும் கெடுத்து விட்டனர். தம்பியின் ஆவியுடன் பேசியதில் அவனது கை, கால்களில் அசைவு தெரியத் துவங்கியது. அதற்குள் அவனை உயிர்ப்பிக்க முடியாமல் சாகடித்துவிட்டனர்'' என கேஷுவலாக சொல்ல போலீஸôரே அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

இந்நிலையில் அறுபது நாட்களாக பிண வாடை அக்கம் பக்கம் தெரியாமல் இருக்க, கெமிக்கல்களையும், அறையில் காற்று புகாத வண்ணம் அடைப்புகளையும் ஏற்படுத்தி யாருக்கும் சந்தேகம் வராமல் செய்திருக்கிறார் சார்லஸ். தற்போது சுகாதார சீர்கேடு விளைவித்தல், இறப்பு பற்றி போலீஸுக்கு தகவல் கொடுக்காமல் மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் மத போதகர் சார்லஸ், அவரது மனைவி சாந்தி, வின்சென்ட், அவரது மனைவி ஜெயசீலி, உறவினர் ஜான்சன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்துள்ள போலீஸ் இவர்களின் பின்னணி பற்றியும் தீவிரமாக விசாரித்து வருகிறது.
நன்றி தமிழன் எக்பிரஸ்

Friday, June 8, 2007

தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இலங்கை அரசின் பயங்கரவாதம்!

தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இலங்கை அரசின் பயங்கரவாதம்!

தமிழக மீனவர்களை சிறைபிடிப்பதும், அவர்களது உடமை உயிர்களுக்கு சேதம் எற்படுத்துவதுமாய் இருந்த இலங்கை அரசின் அத்து மீறல்கள் இப்போது வெளிநாட்டிலிருந்து இலங்கை வழியாக வந்துள்ள தமிழர்கள் மீது தனது மனித உரிமை மீறல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது.


ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தின் மூலம் தாயகம் சென்றுள்ள நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரை கொழும்பு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.


நாகை மாவட்டம் இருக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (41). இவர் உள்பட 130 பயணிகள் கொழும்பிலிருந்து திருச்சி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று பயணித்துள்ளனர்.


விமானம் நேற்று காலை 7.30 மணிக்குப் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கிளம்புவது தாமதமானது. அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் கிளம்பியது.


ஆனால் கிளம்பிய சில விநாடிகளிலேயே விமானம் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தனர்.


பின்னர் பயணிகளை தரை இறக்கிய ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விமான நிலையத்திலேயே காத்திருக்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் 11 மணிக்கு பயணிகளை விமானத்தில் ஏறுமாறு கூறினர். இன்னும் அரை மணி நேரத்தில் விமானம் கிளம்பும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


ஆனால் விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்த பின்னர் மீண்டும் அனைவரையும் கீழே இறங்கி விமான நிலையத்தில் அமருமாறு ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த பயணிகள் என்ன பிரச்சினை என்று ஆவேசமாக கேட்டனர்.


அப்போது ஜாகிர் உசேன், சற்று கோபமாக, வேறு ஏதாவது ஏற்பாடு செய்யக் கூடாதா என்று கேட்டுள்ளார்.ஆனால் அதைக் கண்டுகொள்ளாத ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள், பயணிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்கியுள்ளனர்.


ஆனால் ஜாகிர் உசேனை மட்டும் இறங்க விடாமல் தடுத்த பாதுகாவலர்கள் அவரை விமானத்திலேயே அமர வைத்தனர். பின்னர் கைவிலங்கிட்டு புகைப்படம் எடுத்தனர். பிறகு சரமாரியாக அடித்து உதைக்க ஆரம்பித்தனர்.
வலி தாங்க முடியாமல் ஜாகிர் உசேன் போட்ட கூச்சலால், கீழே இறங்கிக் கொண்டிருந்த சக பயணிகள் வேகமாக விமானத்திற்குள் வந்தனர்.

அனைவரும் பாதுகாவலர்களைத் தடுத்து நிறுத்தி ஜாகிர் உசேனைக் காப்பாற்றி கீழே அழைத்துச் சென்றனர்.


இப்படியாக அடி உதை வாங்கி அலைக்கழிக்கப்பட்ட பயணிகள் ஒரு வழியாக திருச்சி வந்து சேர்ந்துள்ளனர்.


இது போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடும்படும் இலங்கை அரசின் அராஜகப்போக்கை தமிழக அரசும் மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது ஏன்?


வெளிநாடுகளிலிருந்து இலங்கை வழியாக வரும் பயனிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்வது எப்பொழுது?


தொடர்ந்து தமிழர்கள் மீது காழ்ப்புணர்வுகொண்டு தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசின் மனித உரிமை மீறலைகண்டிப்பதோடு தமிழஅரசின் நடவடிக்கையையும் எதிர்பார்கிறோம்.

நாகூரில் நாதியற்றுக் கிடந்த நடிகை! இளமை இதோ இதோ என்றவர் எய்ட்ஸ் நோயில் சிக்கிய பரிதாபம்.

நாகூரில் நாதியற்றுக் கிடந்த நடிகை! இளமை இதோ இதோ என்றவர் எய்ட்ஸ் நோயில் சிக்கிய பரிதாபம்.
எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்!’’ _ சினிமா நகைச்சுவைக் காட்சியன்றில் எய்ட்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் விவேக், இப்படி சிரிப்பைச் சிந்த விடுவார். அந்த வசனம், ஒரு சினிமா நடிகைக்கு மிகச் சரியாகப் பொருந்தி விட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்பு மொய்க்கக் கிடந்த அவரை, யாரும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அப்படியே ஆறுநாட்கள் அனாதையாகக் கிடந்தார் அந்த நடிகை. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்த நடிகை நிஷா என்கிற நூருன்னிசா.
‘இளமை இதோ இதோ’, ‘முயலுக்கு மூணுகால்,’ ‘மானாமதுரை மல்லி’, ‘எனக்காகக் காத்திரு’ போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்த நிஷாவின் பிறந்த ஊரே நாகூர்தான் என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தி. அவரது அப்பா, பெரியப்பா, அத்தை என ஓர் உறவினர் பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது, அதைவிட அதிர்ச்சியான செய்தி.
ஒரு முஸ்லிம் அமைப்பு மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நடைப்பிணமாக, ஒரு கட்டிலில் கிடந்த நடிகை நிஷாவை நாம் சந்தித்தோம். இளமைக் காலங்களில் நடித்த நிஷாவா இவர் என திகைக்கும் வண்ணம் காய்ந்த கருவாடாக கட்டிலில் கிடந்தார். நாம் குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து வருகிறோம் என்றதும் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்ட அவர், ‘‘சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாற்றுங்க சார். நான் மறுபடியும் நடிக்கணும்!’’ என்று கதறினார்.
சினிமா ஸ்பாட் லைட்களின் ஒளிவெள்ளத்தில் குளித்த ஒருவர், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சியது நம்மை உறுத்தியது.
நிஷாவிடம் பேசினோம். என்னதான் எலும்பும் தோலுமாக இருந்தாலும் அவரது பேச்சில் ஒரு நடிகைக்குரிய நளினம் குறையவில்லை. கூடவே குரலில் சோகத்தைக் கொட்டிக் குழைத்து நம்மிடம் பேசினார்.
‘‘எனக்குச் சொந்த ஊர் நாகூர்தான். அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவரது முதல் மனைவி பேபிக்குப் பிறந்த பெண்தான் நான். குழந்தையாக நான் இருந்த போது அப்பாகிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்திட்டாங்க. என்னை வளர்த்து, சினிமாவில் நடிக்க வச்சாங்க.
பல படங்களில் ஹீரோயினா நடித்தேன். நடிகர் கமலோடு ‘டிக்...டிக்....டிக்’, ரஜினி சாரோட ‘ஸ்ரீராகவேந்திரர்’, பாலசந்தர் சாரோட ‘கல்யாண அகதிகள்’ இன்னும் விசு சார், சந்திரசேகர் சார் டைரக்ஷனில் கூட நடிச்சிருக்கேன்’’ என்றவர் தொடர்ந்தார்.

‘‘அம்மா இறந்த பிறகு அந்த துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் மெலிந்து விட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்ச பணமெல்லாம் கரைஞ்சு போச்சி. எனக்கு சென்னையில் உறவுன்னு சொல்லிக்கொள்ள ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருந்த எனக்கு உதவி செய்யவும் ஆளில்லை.
நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒருமுறை உதவி கேட்டுப் போனேன். ‘உனக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா, டி.வி.யில் நடிக்க வேண்டியது தானே’ன்னு சொல்லி, என்னை வெறும் கையோட திருப்பியனுப்பிவிட்டார்.

நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ!’’ என்றார் கண்ணீருடன்.

‘உங்கள் அப்பா மற்றும் உறவுகள் உங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?’ என்று கேட்டோம்.

அதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா, ‘‘நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக்கொண்ட அவர்கள், இப்போது என்னைக் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். என் பெரியப்பா அப்துல் ஹமீதுவின் மகள் நிக்காவின்போது, தாலிக்கு நான் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தேன். அதை அவர்கள் மறந்து விட்டார்கள். சொந்த ஊரில்... பெற்ற தந்தையின் கண்முன்பே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடந்த நிலைமை என்னைத் தவிர, வேறு யாருக்கும் வராது’’ என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார்.

அதன் பிறகு, ‘‘சார் தப்பா நினைக்காதீங்க. கையில் சுத்தமாக காசே இல்லை. ஒரு முட்டை புரோட்டா சாப்பிடணும்போல ஆசையாக இருக்கு! ஒண்ணு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன், ப்ளீஸ்!’’ என்று கெஞ்சினார். நம்முடன் வந்திருந்த நண்பரொருவர் ஓடிச்சென்று அவர் கேட்டதை வாங்கிக் கொடுத்தார்.
நிஷா, சென்னை பல்லாவரத்தில் அவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்த மகியம்மா என்பவரிடம் அலிபாய், ரபீர் என்பவர்கள் மூலமாக நகை மற்றும் பணத்தைக் கொடுத்து வைத்திருப்பதாகவும், நகையன்றை அடகு வைத்து அந்தப் பணத்தில் வாடகைக் கார் பிடித்து அலிபாய் மூலம்தான் நாகூர் வந்து சேர்ந்ததாகவும் நிஷா நம்மிடம் விவரித்தார். தந்தை மற்றும் உறவினர்கள் ஏற்க மறுத்து விட்ட நிலையில், நாகூர் தர்கா அருகே அவர் அனாதையாக விடப்பட்டிருக்கிறார்.

நடிகை நிஷாவிடம் நாம் பேசிக் கொண்டிருந்தபோது, நர்ஸ் ஒருவர் விடுவிடென்று வந்து நம்மை, அப்பால் அழைத்துச் சென்றார். ‘‘அந்தம்மாவுக்கு ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ்னு ரிசல்ட் வந்திருக்கு. அவங்களை தாம்பரத்திலுள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரிக்கு அனுப்ப நீங்கள் ஏற்பாடு செய்யுங்களேன்!’’ என்றார் இரக்கக் குரலில். நடிகை நிஷா தன்னை எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இன்னும் இருக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்கியது.
நாகூரில் வசிக்கும் நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரைச் சந்தித்தோம். ‘‘நிஷா எனக்குப் பிறந்தவள்தான். அவளோட அம்மா பேபியை நான் லவ் பண்ணி திருமணம் செய்ததால், பெற்றோர் என்னை வீட்டை விட்டு விரட்டிட்டாங்க. அப்ப பிறந்தவதான் நிஷா. ‘கொஞ்ச நாள் பொறு’ன்னு நான் சொன்னதைக் கேட்காமல், குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராவோட ராவா பேபி சென்னைக்கு ஓடிப் போயிட்டா.

அதன் பிறகு, பேபியைத் தேடியலைஞ்சு கோடம்பாக்கத்தில் கண்டுபிடித்தேன். எனக்குத் தெரியாமல் அடிக்கடி அவள் வீடு மாற ஆரம்பிச்சா. தான் ஜலீல்னு ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டதாகச் சொன்னாள். நிஷாவை என் கண்ணில் காட்டாமல் மறைச்சிட்டாள்.

பேபிக்கு பலபேரோட தவறான தொடர்பிருந்தது. நிஷாவை சினிமாவில் நடிக்க வைத்ததால் பணம் வர ஆரம்பித்தது. அதனால், ‘‘உனக்கு ஊரில் பல பொம்பிளைகளோடு தொடர்பிருக்கு. இனிமே இங்கே வராதேன்னு என்னை விரட்டிட்டா’’ என்றார்.
‘உங்களுக்கு எத்தனை மனைவிகள்?’ என்று ஜப்பாரிடம் கேட்டோம். ‘‘மனைவி என்றால் அது பேபி மட்டும்தான். ஆனால் நாலைந்து பெண்களோடு தொடர்பு உண்டு. எனக்கும் ஓர் இந்துப் பெண்ணுக்கும் பிறந்த பையனை முஸ்லிமாக மாத்தி ஷாகுல் அமீதுன்னு பெயர் வைத்து வளர்க்கிறேன்’’ என்றார்.
மீண்டும் தொடர்ந்த அவர், ‘‘பேபி இறந்தபோது எனக்கு தகவல் சொல்லவில்லை. என் அண்ணன் அங்கே போனபோது, ‘எனக்கு அப்பாவே வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம் பெரியப்பா எதுக்கு?’ன்னு கேட்டு, நிஷா அவரை விரட்டியிருக்கா. இப்ப நோய் வந்து, சொந்தம் கொண்டாட வந்தா அவளை யார் ஏற்பார்கள்? நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன். இதில் அவளையும் வச்சி எப்படிக் காப்பாத்த முடியும்?’’ என்றார் அப்துல் ஜப்பார்.
நிஷாவின் பெரியப்பா அப்துல் ஹமீதைச் சந்தித்தோம். ‘‘சென்னை சாந்தோமில் மலாக்கா சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கிற முகமது அலியும், ரபீக்கும் அவளை ஆண்டு அனுபவிச்சிட்டு, இப்போ அவங்க பாட்டுக்கு இங்கே விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது’’ என்றார் போட்டோவுக்கு மறுத்தபடி.

நாகூர் ஜமாத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நிஜாமுதீனுடன் பேசினோம்.

‘‘ஒரு நடிகை எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணம் இந்த நிஷா. இப்போ வருத்தப்பட்டு எந்தப் புண்ணியமும் இல்லை’’ என்று முடித்துக்கொண்டார்.

அடுத்து நாகை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகியும், பொதுநல ஆர்வலருமான நாகூர் பாரி, ‘‘நலிந்த கலைஞர்களுக்குக் கிடைக்கும் உதவி நிஷாவுக்குக் கிடைத்தால் நல்லது! திரையுலகைச் சேர்ந்தவர்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்’’ என்றார்.

‘சென்னை சாந்தோமில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் அலிபாய் என்கிற முகமது அலியை கடைசியாகத் தொடர்பு கொண்டு கேட்டோம்.

‘‘அந்தப் பொண்ணும் அவங்க அம்மாவும் இங்கே அனாதைகளாக இருந்தபோது உதவினோம். நிஷாவின் அம்மா இறந்தபோது கூட உறவுக்காரங்க யாரும் வரவில்லை. இவர்களுக்கு உதவப்போய் இப்போது எங்களுக்குக் கெட்ட பெயர்.

உடல்நிலை சரியில்லாத நிஷா, அவரது நகை ஒன்றை அடகு வைத்தார். அந்தப் பணத்தில்தான் கார் ஒன்றை வைத்து அவரைக் கொண்டு போய் நாகூரில் விட்டுவரச் சொல்லி ஏற்பாடு செய்தோம். நிஷாவை உறவினர்கள் ஏற்க மறுத்ததால், நாகூர் தர்காவில் தன்னை விடச்சொல்லி நிஷாவே சொன்னதால்தான் அங்கே விட்டு விட்டு வந்தோம்.

நிஷா பல்லாவரத்தில் அவரது எதிர் வீட்டில் குடியிருந்த மகியம்மாவிடம்தான் மீதி நகைகளைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்’’ என்றவர், அதைத் தொடர்ந்து நாம் கேட்ட சில கேள்விகளால் கோபமடைந்து மிரட்டலுடன் போன் தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்.

அடுத்த சில மணி நேரத்தில் முகமது அலியின் செல்போன் மூலம் மகியம்மா என்பவர் நம்மிடம் பேசினார்.

‘‘என்னிடம் மொத்தம் மூணு பவுன் நகையைத்தான் நிஷா கொடுத்தார். அதற்கு பதினான்காயிரம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டேன். நகைக்கு அது சரியாப் போச்சு. நிஷா இருபத்து நான்கு புடைவை கொடுத்தார். அதில் இருபது புடைவைகளை தலா நூறு ரூபாய்க்கு விற்று அவரிடம் காசு கொடுத்துவிட்டேன். மீதமிருப்பது நான்கு புடைவைகள்தான்’’ என்றார்.
‘‘முகமது அலிக்கும் நிஷாவுக்கும் நீண்டகாலமாகத் தொடர்புண்டு’’ என்று அவர் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அந்த செல்போனைப் பிடுங்கிய முகமது அலி, ‘‘நிஷா இந்தப் பகுதிக்கு வந்த பிறகுதான் அவரை எனக்குத் தெரியும். அவரோடு எனக்கு முப்பது வருஷப் பழக்கம் என்பதெல்லாம் பொய்!’’ என்றார் கோபத்தோடு.

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி அப்துல் ஜப்பாரின் மகன் ஷாகுல்அமீது, ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவை சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் அட்மிட் செய்ததாக நமக்குத் தெரிய வந்தது.

நிஷா குறித்து ஃபிலிம்நியூஸ் ஆனந்தனிடம் பேசினோம். அவரது நிலை பற்றி மிகவும் வருத்தப்பட்ட அவர், ‘‘அவ தைரியமான பொண்ணு. ஒருமுறை இன்கம்டாக்ஸ் ஆபீஸர்னு சொல்லி போலி ரெய்டுக்கு வந்து பிளாக்மெயில் செய்ய முயன்ற ஒரு படத் தயாரிப்பாளரை, அவளே போலீஸ§க்கு போன் பண்ணிப் பிடித்துக்கொடுத்தாள். அப்படிப்பட்டவளுக்கா இப்படியரு நிலைமை?’’ என்றார் நிஜமான வருத்தத்தோடு.
நன்றி : குமுதம் ரிப்போர்டர்.