.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Saturday, May 30, 2009

சென்னை மக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!

சென்னை மக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!
"வெளியூர் சென்றால், காவல் நிலையங்களில் தெரிவித்து விட்டு செல்லுங்கள்"


சென்னை, மே.30- சென்னை மக்களுக்கு காவல்துறை நேற்று முக்கியமான வேண்டுகோள் விடுத்தனர்.கோடை விடுமுறையை கொண்டாட வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள், அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

காவலாளி முகவரி
சென்னையில் நேற்று ஜெயின் கோவிலில் நடந்த கொள்ளை வழக்கில் காவலாளியே முக்கிய குற்றவாளி என்று தெரிய வந்துள்ளது. காவலாளியை கைது செய்ய காவல்துறைக்கு கோவில் நிர்வாகம் எந்தவித தகவல்களையும் சரிவர கூறவில்லை. காவலாளியின் பெயரை மட்டுமே சொன்னார்கள். அவரது வீட்டு முகவரி போன்ற எந்த தகவலும் அவர்களால் கூற முடிய வில்லை. விலை உயர்ந்த நகைகள் உள்ள கோவிலுக்கு காவலாளியாக ஒருவரை நியமிக்கும் போது, அவரை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் நேற்று இரவு வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

தனியார் நிறுவனங்கள், கோவில் நிர்வாகத்தினர் பாதுகாவலர்களை நியமிக்கும் போது, அவர்களை பற்றிய தகவல்களை தெரிந்து கொண்ட பிறகுதான், அவர்களை வேலைக்கு சேர்க்க வேண்டும். உரிய தகவல்களை தெரிந்து கொள்ள அருகில் உள்ள காவல் நிலையங்களை அணுகலாம். இதற்கு காவல் நிலையங்களுக்கு தனியாக கட்டணம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.

காவல் நிலையத்தில்

இதேபோல கோடை விடுமுறையை கொண்டாட, தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள், அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திரும்பி வரும்வரை பூட்டியுள்ள வீடுகள் உள்ள பகுதிகளில் போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும். பொது மக்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments: