.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, May 11, 2009

ரியாத் இந்திய பன்னாட்டுப் பள்ளியின் சேர்மனாக தமிழர் தேர்வு.

ரியாத் இந்திய பன்னாட்டுப் பள்ளியின் சேர்மனாக தமிழர் தேர்வு.

அண்ணன் இம்தியாஸ் அவர்களின் பனி சிறக்க பிரார்த்தனைகளுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- எம். ஹூஸைன் கனி
************************
************************
சவுதி அரேபியா ரியாத் மாநகரில் கடந்த 26 ஆண்டுகாலமாக செயல்பட்டு வரும் இந்திய பன்னாட்டுப் பள்ளியில் முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இந்தியத் தூதர் மேதகு M.O.H பாரூக் அவர்களால் திருச்சியைச் சேர்ந்த அஹமது இம்தியாஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 26 ஆண்டு காலமாக ரியாத்தில் செயல்பட்டு வரும் பன்னாட்டு பள்ளியில் ஒரு தமிழர் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

திருச்சியைச் சேர்ந்த அஹமது இம்தியாஸ் அவர்கள் ரியாத் நகரில் பலராலும் அறியப்பட்டவர் அண்ணா பல்கலைகழகத்தில் B.A. Economics முடித்து, மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் M.B.A பட்டம் பெற்றவர். 1985 முதல் சவுதி அரேபியாவில் பல்வேறு முன்னனி நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் இவர் பல்வேறு பொதுநல அமைப்புகளில் நிர்வாகியாகவும் பொருப்பு வகித்துவருபவர் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் அதன் பொதுச் செயலாளரும் ஆவார். 2000க்கும் அதிகமாக உறுப்பினர்களைக் கொண்ட வுயஅடை குiநெ யுசவள புசழரி (TAFAREG) தஃப்ரஜ் குழுமத்திற்கு தலைவராகவும் பொருப்பு வகித்து வருகிறார் பல்வேறு பொது நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளராகவும் சில நேரங்களில் த.மு.மு.கவின் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளராகவும் சிறப்பாக சேவையாற்றியுள்ளார்.

அவரது சேவைகள் இந்தியச் சமூகத்திற்கு குறிப்பாக நமது தமிழ்ச் சமூகத்திற்கு பயனுள்ளதாகவும் சிறப்பாகவும் அமைய இறைவனிடம் பிரார்த்திப்பதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

No comments: