.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, February 3, 2009

தமுமுக பேராதரவுடன் துவங்குகிறது மனிதநேய மக்கள் கட்சி!

பிப்ரவரி 7ல் துவங்குகிறது தமுமுக பேராதரவுடன்

மனிதநேய மக்கள் கட்சி!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர்

எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் இன்று சென்னையில் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

“தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பேராதரவுடன் தேர்தல் ஆணையத்தில் பதிவுச் செய்யப்பட்ட அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் தொடக்கவிழா மாநாடு வரும் பிப்ரவரி 7 அன்று சென்னை அருகே தாம்பரத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து சமூக சேவை அமைப்பாக செயல்படும்.

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது பொருளாளர் மற்றும் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது (வலமிருந்து இடம்)

புதிதாக தொடங்கப்படவுள்ள மனிதநேய மக்கள் கட்சி சிறுபான்மையினர் மட்டும் அல்லது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் உட்பட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் வலிமையாக பாடுபடும் அமைப்பாக செயல்படும். இந்த அமைப்பில் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் உறுப்பினர்களாகவும் நிர்வாகிகளாகவும் செயல்படலாம், அரசியல்தளத்தில் புறக்கணிக்கப்படும் ஒழுக்க நெறிகளை கட்டிக்காக்கும் வகையில் மனிதநேய மக்கள் கட்சி செயல்படும். அரசியல் வாழ்வில் தூய்மையான நெறிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு தூய்மையான சேவையை ஆற்ற இயலும் என்பதை எடுத்துக் காட்டும் வகையிலும் மனிதநேய மக்கள் கட்சி இயங்கும்.

தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நடைபெறும் மாநாட்டின் ஒரு பகுதியாக காலையில் சமுக நீதி கருத்தரங்கம் நடைபெறுகின்றது. இந்த கருத்தரங்கில் பேராசிரியர் மார்க்ஸ், விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் தஸ்தகிர், அருட்திரு ஆனந்த், கஜேந்திரன் மற்றூம் தேவநேயன் ஆகியோர் பங்கு கொள்கிறார்கள்.

மாலை 4 மணிக்கு துவங்கும் மாநாட்டில் மாநாட்டு திடலில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியை தமுமுகவின் நிறுவனர்களில் ஒருவரும் முன்னாள் பொருளாளருமான சையத் நிஸார் அஹ்மது அவர்கள் கொடியேற்றுவார். அதனைத் தொடர்ந்து நடைபெறும் முதல் அரங்கில் தமுமுகவின் துணைச் செயலாளர்கள் மற்றும் அணி செயலாளர்கள் மாநாட்டின் தீர்மானங்கள் முன்மொழிந்து உரை நிகழ்த்துகின்றனர். பின்னர் நடைபெறும் வாழ்த்தரங்கில் மவ்லவி டி.ஜே.எம். சலாஹுத்தீன், பேராயர் எஸ்றா சற்குணம், எஸ்.என். நடராஜன், திரு. வீரபாண்டியன், முனைவர் தவத்திரு சங்கர் சுவாமி காணி, மவ்லவி முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் புதிய அரசியல் கட்சியை வாழ்த்தி உரையாற்றுகிறார்கள். பிறகு நடைபெறும் அரங்கில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே. எஸ். ரிபாயி, செயலாளர்கள் அன்சாரி, உமர், ஜுனைத், முஹம்மது கவுஸ், நாசர் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது தலைமையில் மாநாடு நடைபெறுகின்றது. மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது முதல் அமர்வுக்கு தலைமை தாங்குகிறார்.

மாநாட்டின் மேடை டெல்லி செங்கோட்டை வடிவத்தில் தயாராகி வருகின்றது. தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இருந்து லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்த மாநாட்டில் பங்குகொள்ள இருக்கிறார்கள்.’’
பேட்டியின் போது தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, மாநிலச் செயலாளர்கள் பி. அப்துஸ் ஸமது, எம். தமிமுன் அன்சாரி, மௌலா நாசர், துணைச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத், டி.ஏ. இஸ்மாயில் ஆகியோர் உடனிருந்தனர்.

படங்கள் உடந்தை சஃபி

நன்றி: www.tmmk.in

No comments: