.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, February 1, 2009

பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வினாடி வினா போட்டி - தடுத்து நிறுத்திய தமுமுக

பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும்

வினாடி வினா போட்டி - தடுத்து நிறுத்திய தமுமுக


-புகாரியின் புதல்வன்

கடந்த பாஜகவின் ஆட்சியின் பொழுது பாடப் புத்தகங்களில் காவி கலந்தது. இதனால் இந்திய மதச்சார்பின்மைக் கொள்கையில் விரிசல் ஏற்பட்டது. கல்வித் துறையே காவி மயமாக்கப்பட்டது.

''வரலாற்றையே மாற்றி எழுதுவது என்பது வருங்கால சந்ததியினருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்''. இதனை செய்வதில் சங்பரிவாரத்தினர் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றுள்ளனர். கல்வித்துறையில் காவி கலக்கும் பொழுதெல்லாம் போர்க்குரல் தொடுத்து அதனை வென்றெடுப்பதில் தமுமுக முதலில் நிற்கும்.

கடந்த 24.01.09 சனிக்கிழமை அன்று ஸ்ரீ கலைவாணி ஆன்மீகம் மற்றும் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை என்ற அமைப்பு பள்ளி மாணவ மாணவியர் களுக்கு ஆன்மீக வினாடி வினா போட்டி நடத்துவதற்காக சென்னையி லுள்ள பெரும்பான்மையான பள்ளிகளில் வினாடி வினா மாதிரிப் படிவங்களை அனுப்பியது.

கேள்வி: ஆலயங்களை சூறையாடிய இஸ்லாமிய கொள்ளையர்களின் நோக்கம் என்ன?

பதில்: இந்து மதத்தை அழிப்பதும், பொருள்களை கொள்ளையடிப்பதும் அவர்களின் நோக்கமாக இருந்தது.

கேள்வி: இந்தியா சுதந்திரம் அடைந்ததும் முதன் முத­ல் நடை பெற்ற கோயில் திருப்பணி எது?

பதில்: குஜராத் மாநிலத்தில் முஸ்­ம் கொள்ளையர்களால் சூறையாடப்பட்ட சோமநாதர் ஆலயத்தை செப்பனிட்டு இந்தியாவில் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் கும்பாபிஷேகம் நடத்தினார்.

இவையெல்லாம் அந்த வினாடி வினாப் படிவத்தில் உள்ள சாம்பிள் கேள்விகள் தான்?

அந்த வினாடி வினாப் படிவங்களின் மாதிரிகள் அனைத்திலுமே முஸ்­ம், கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மையின மக்களை கொச்சைப் படுத்தும் வகையில் கேள்விகளை வடிவமைத்திருந்தனர். இதன் மூலம் இளம் பிஞ்சுகளின் உள்ளங்களின் காவி விஷத்தை கலப்பதே இவர்களின் எண்ணம்.

இந்நிலையில் அந்த வினாடி வினாப் படிவத்தை கண்டதும் தி. நகர் பகுதியைச் சேர்ந்த தென் சென்னை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கோரி (எ) அபூ பக்கர் மற்றும் தி. நகர் பொருளாளர் கே. நாசர் உடனே அதனை தென் சென்னை மாவட்ட தமுமுகவிற்கு கொண்டு சென்றனர். தென் சென்னை மாவட்ட தலைவர் சீனி முகம்மது தலைமையில் மாவட்டப் பொருளாளர் கே. அப்துல் சலாம், மாவட்ட துணைச் செயலாளர் ஏ. முகம்மது யூசுப் மற்றும் பகுதி நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும் உடனடியாக வினா விடை தாளை வெளி யிட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்க காவல் துறையிலும், கல்வித் துறையிலும் புகார் அளித்தனர்.

இதனை உடனே பரிசீலனை செய்த காவல்துறையும், கல்வித்துறையும் நடைபெற இருந்த காவி வினாடி வினாப் போட்டியை உடனே தடை செய்தனர்.

24.01.09 அன்று வினாடி வினாவிற்கு கலந்து கொள்ள சில குழந்தைகள் பெற் றோர்களுடன் வரவே வினாடி வினா போட்டி தடை செய்யப்பட்ட விஷயத்தை சொல்ல அவர்களும் கலைந்து சென்றனர்.

பள்ளி, கல்லூரிகளில் வரலாற்றை திரித்தும் காவியை புகுத்தும் நிறுவனங் களின் உரிமத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது மட்டுமே அவை மீண்டும் தலையெடுப்பதை தவிர்க்க முடியும். இவற்றால் மட்டுமே இந்திய மதச்சார்பின்மையில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய முடியும்.

Source: தமுமுக இணையதளம்

No comments: