


கேள்வி: தங்களின் அயோத்தி பயணம் குறித்து சொல்லுங்களேன்...!



கேள்வி: டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு எப்படி இருந்தது?






பாகம் - 1
சமீபத்தில் சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் போலிச் சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகளை வெளியிட்டுப் போலிச் சாமியார்களின் லீலைகளை வெளிச்சமிட்ட சன் தொலைக்காட்சியே இந்த ஒரு மணி நேரம் அடங்கிய வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகம் - 2
"நிஜம்" என்ற தன்னுடைய நிகழ்ச்சி ஒன்றில் கல்கி ஆசிரமத்தினுள் பக்தியின் பெயரால் நடக்கும் போதையாட்டத்தைத் தத்ரூபமாக சன் தொலைக்காட்சி படம்பிடித்து வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஆண்களும் பெண்களும் போதை பொருள் உட்கொண்டவர்களைப் போன்று சிரித்தும் அழுதும் தரையில் கிடந்து அழுது புரண்டும் நிர்வாணமாகவும் போதையாட்டம் போடும் காட்சிகள், மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
பாகம் - 3



கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி! வட்டிக்குப் பதிலாக மகளையே தூக்கிச்சென்று சீரழித்த கொடூரம்!! தடுத்து நிறுத்த முன் வருமா தமிழக அரசு!!! நன்றி: ஜூவி நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி விபரீதத்தால், கடந்த வாரம் பள்ளிப்பாளையம் ஏரியாவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்! பள்ளிப்பாளையம் பகுதியில் தறி ஓட்டும் தொழிலாளர்கள் அதிகம். ஏழ்மையில் இருக்கும் இவர்கள், கந்து வட்டிக்கு பணம் வாங்குவது சகஜம். அப்படிப் பணம் வாங்கிய ஒரு பெண்மணி தவணையை ஒழுங்காகக் கட்ட முடியாமல் போக... அவரது வயதுக்கு வந்த மகளையே வட்டிக்கு பதிலாகத் தூக்கிச்சென்றிருக்கிறார்கள்! அந்தப் பெண்ணை சீரழித்ததோடு, அதை வீடியோவாகவும் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டு காசு பார்த்தும் இருக்கிறார்கள். சினிமா வில்லத்தனத்தையே ஜுஜுபி ஆக்கும் இந்தக் கொடூரர்களைத் தட்டிக் கேட்கப் போய்த்தான் பரிதாபமாகக் கொலையானார் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் தோழரான வேலுச்சாமி. தட்டிக் கேட்க ஆளில்லாமல் கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் கந்து வட்டிக் கொடுமைகளைப் பற்றி விசாரிக்கப் புறப்பட்டபோது தலை சுற்றியது. முன்பு, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதற்கு எதிராகப் போட்ட சட்டம் சுத்தமாக செத்துப் போய்விட்டதையும் புரிந்துகொள்ள முடிந்தது. அரசியல் செல்வாக்கில் ஈரோடு..! ஈரோடு மாவட்டம் சத்தியமங்க லத்தைச் சேர்ந்த கிரிகோரி என்பவர், அபராத வட்டி.. செடி வேர் அடி..! கடம்பூர், தாளவாடி போன்ற மலைகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுப்பதற்கென்றே கோவை, நீலகிரியைச் சேர்ந்த ஒரு டீம் இருக்கிறது. சந்தை கூடும் நாட்களில் பணத்தைக் கொடுத்துவிட்டு, அடுத்த சந்தையன்று வட்டியை வசூலிக்க வருவார்கள். இரண்டு மூன்று தவணைகள் வட்டி தவறினால், அபராத வட்டி போடுவதுடன், கடன் வாங்கியவரின் முதுகில் காட்டுச் செடி வேரினால் அடிக்கும் காட்டுமிராண்டித்தனங்களும் நடக்கிறதாம்! ராத்திரி நேரம்... நடு வீட்டில்... சேலம் மார்க்கெட் ஏரியா கந்து வட்டி கொடூரங்கள் ரொம்ப கொடுமை..! ''காலையில 1,000 ரூவா கொடுப்பாங்க. சாயந்திரம் வீட்டுக்குப் போறப்ப 1,100 ரூவாயா திருப்பிக் கொடுக்கணும். ஒருநாள் லேட்டானாலும் அந்த 100 ''சேலம் மாநகராட்சியில வேலை பார்க்குற துப்புரவு தொழிலாளர்களை மட்டுமே குறிவச்சு ஒரு கும்பல் செயல்படுது. வட்டிக்குப் பணம் கொடுத்துட்டு, அவங்களோட ஏ.டி.எம். கார்டை வாங்கிக்குவாங்க. ஒவ்வொரு மாசமும் சம்பளம் போட்டதும் வட்டிப் பணத்தை எடுத்துக்கிட்டு அக்கவுன்ட்ல மிச்சம் பணம் இருந்தா... அதை சம்பந்தப்பட்டவங்களுக்கு எடுத்துக் கொடுப்பாங்க. கார்டு அவங்க கையிலதான்!'' என்றார் ஒரு மாநகராட்சி ஊழியர். கொள்ளை போகும் பொருட்கள்..! கேரளா, குஜராத், உ.பி., என்று மற்ற மாநிலத்த வரும், நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டினரும்கூட வாழும் திருப்பூர் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமை இன்னும் அதிகம். ''தெரு முனையில நின்னுகிட்டு பணம் கொடுக்கிற கந்து வட்டிக்காரனுங்க எண்ணிக்கைதான் இங்கே அதிகம். எந்த டாக்குமென்ட்டும், ஆதாரமும் இல்லாம பணம் தர்றதால இவர்களை கடவுளா நினைக் குறாங்க பாவப்பட்ட மக்கள். பனியன் பிசினஸ்ல பணப்பட்டுவாடா ஒழுங்கா நடக்காம எங்கேயாச்சும் சிக்கிடுச்சுன்னா... நிலையை சமாளிக்க வட்டிக்கு கடன் வாங்கித்தான் ஆகணும்... வட்டியும், அசலும் தவறுனா வீட்டுக்கு வந்து டி.வி., பைக்குன்னு கண்ல பட்டதை தூக்கிட்டுப் போயிருவாங்க...'' என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த மணி. தொடர்கதையாகும் கொடுமைகள்..! கந்து வட்டி கொடுமையை எதிர்த்து தொடர்ந்து போராடிவரும் குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் வழக்கறிஞர் தமயந்தி, ''ராசிபுரத்துல ஒரு கும்பல் வட்டிக்கு கொடுமைகள் குறைஞ்சிருக்காம்..! ''மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அரசிடமிருந்து தாராளமான நிதி உதவி கிடைப்பதால், கந்து வட்டி கொடுமைகள் இங்கே மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது!''- என்று தான் கலந்துகொள்ளும் விழாக்களில் சொல்லி பெருமைப்படும்நாமக்கல் தொகுதி எம்.பி-யும் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சருமான காந்திசெல்வனை தொடர்பு கொண்டோம். ''நான் பர்சனலா இந்த விவகாரத்தைப் பற்றி கேட்டுத் தெரிஞ்சு விசாரிச்சுட்டுத்தான் பேசுறேனே தவிர, மேடை அலங்காரத்துக்காக எதையும் பேசல. பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு ஏரியாக்கள்ல ஒரு காலத்துல கொடிகட்டிப் பறந்த கந்து வட்டி பிசினஸ், இப்போ ஒடுங்கி இருக்குது. இதுக்கு முக்கியக் காரணம்... கடந்த நாலஞ்சு வருஷங்கள்ல தமிழக அரசு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வெகுவான நிதிஉதவி வழங்கி ஊக்குவிச்சு இருப்பதுதான்...'' என்றார் அவர்! விஷச் செடி... மூலிகைச் செடி..! மேற்கு மண்டல ஐ.ஜி-யான சிவனாண் டியிடம் பேசினோம். ''சமீபத்துலதான் இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கேன். இதில் ஈடுபட்டிருக்கிற கிரிமினல்களை கூடிய சீக்கிரமே ஒழிச்சுக் கட்டுவேன். அதோடு, ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்யக்கூடிய திட்டங்களையும் இங்கே செயல்படுத்தி வருகிறோம். அடுத்த தலைமுறையாவது நல்ல கல்வியோடு நிமிரும்போது, கந்துவட்டி போன்ற ஆபத்தான வலையில் விழாமல் இருப்பார்கள். அதோடு, நல்ல தொரு வேலையில் அமர்ந்து தங்கள் குடும்பத்தை இன்னல்கள் இல்லாமல் காப்பாற்றுவார்கள். ஒரு விஷச் செடி யைப் பிடுங்குகிற அதேசமயம், ஒரு நல்ல மூலிகைச் செடியை வைக்கிற மாதிரி, ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ வசதியுள்ளவர்கள் தாராளமாக முன்வரவேண்டும்'' என்று தொலைநோக்கோடு பேசினார் ஐ.ஜி. அனைத்துக்கும் மேலாக, 'இரக்கமற்ற கந்து வட்டிக் கும்பல்களுக்கு அடைக் கலம் தரக்கூடாது என்று' அரசியல் கட்சித் தலைவர்கள் ஆணை போடுவது முக்கியம்! ஒளிய இடம் இல்லாவிட்டால் விஷப் பாம்புகளை அடித்துப் போடுவது காவல் துறைக்குப் பெரிய வேலையாக இருக்காது! நன்றி: ஜூவி | |
|
அன்புள்ள ஜெ
கீழ்க்கண்ட சுட்டியைப் பார்க்கவும். அடுத்தது யார் அ.மார்க்ஸா?
ஜடாயு

சைவத்தில் இருந்து இஸ்லாத்திற்கு… (மக்கள் உரிமைக்கு பெரியார் தாசன் அளித்த பேட்டி)
பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்
அன்புள்ள ஜடாயு,
தன் ஆன்மீக ஈடேற்றத்துக்காக ஒருவர் எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளலம். அது வரவேற்கத்தக்கது.
நான் பேரா. பெரியார்தாசன் அவர்களை நேரில் அறிவேன். இனிய எளிய மனிதர். இம்மானுவேல் கான்ட் மீது பிடிப்பும் பற்றும் கொண்டவர். என் நண்பர் செந்தூரம் ஜெகதீஷுக்கும் அவருக்கும் நெருக்கம் உன்டு. என்னுடன் ஒரு கூட்டத்திலும் கலந்துகோன்டிருக்கிறார். கான்ட் குறித்து அவரிடம் விவாதித்திருக்கிறேன்.
அ.மார்க்ஸைப் பொறுத்தவரை அவரும் இப்படி ஓர் முடிவை எடுக்கும் நிலையில் தயங்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் நான் கேள்விப்படுகிறேன். அதுவும்கூட நல்லதே.
எந்த மதமும் தன்னளவில் மேம்பட்டதோ குறைவனதோ அல்ல. எனக்கு ஒரு வழி ஏற்புடையதாக இருக்கிறது. பிறிதொருவருக்கு அவரது இயல்புகளின் அடிப்படையில் இன்னொரு மதம் ஏற்புடையதாகிறது. ஒருவருக்கு கண்டிப்பான அப்பா தேவைப்படலாம். ஒருவருக்கு நல்லாசிரியனாக மட்டுமே இருக்கும் அப்பா தேவைபப்டலாம். ஒருவருக்கு பாசமே உருவான அப்பா தேவைப்படலாம்.
இஸ்லாம் உறுதியான் பதில்களைச் சொல்லி அறுதியான விசுவாசத்தை எதிர்பார்க்கும் மதம். அந்த விசுவாசமும் கட்டுப்பாடும் அப்துல்லா அவர்களுக்கு சாத்தியமாக்வேன்டுமென்றும், அது அவரை முழுமையும் நிறைவும் கொள்ளச் செய்யுமென்றும் நம்புகிறேன்.
அப்துல்லா அவர்களுக்கு என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.
ஜெ
Source: http://www.jeyamohan.in/?p=6795
''நித்யானந்தாவுடன் உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது? அவருடைய பெரிய விசிறியாக நீங்கள் மாறியது எப்படி?'' ''அவர் எழுதிய 600 பக்கங்களுக்கும் மேலான ஆங்கிலப் புத்தகம் ஒண்ணு எனக்கு கிடைச்சது. அதை வாசிச்ச மாத்திரத்திலேயே நான் திகைச்சுப் போயிட்டேன். 35 வருஷ காலமாக எழுத்துலகத்தில இருக்கிறவன் நான். என்னை அந்த எழுத்துகள் உலுக்கிப் போட்டிடுச்சு. ஓஷோ, புத்தா போன்றவங்களோட கருத்துகளை எல்லாம் விஞ்சத்தக்க விஷயங்களை நித்யானந்தர் அந்தப் புத்தகத்தில சொல்லி இருந்தார். சாதாரண ஆட்கள் இத்தகைய கருத்துகளைச் சொல்ல வாய்ப்பே இல்லை. என்னோட மனசுல ஏற்பட்ட இந்த வியப்பை அப்படியே என்னோட இணையத்தில எழுதினேன். அதைப் பார்த்த நடிகை ராகசுதா என்னை போன்ல கான்டக்ட் பண்ணி, 'சுவாமியைப் பார்க்க வாங்களேன்...'னு கூப்பிட்டாங்க. பொண்ணுங்க கூப்பிட்டாலே நமக்கு சபலம் தட்ட ஆரம்பிச் சிடுமில்ல... அதனால 'அவசியம் வரேன்'னு சொன்னேன். இந்த இடத்திலதான் நீங்க இன்னொரு ஆச்சர்யத்தைக் கேட்கணும்... அப்போ நான் புதுச்சேரியில இருந்து சென்னைக்கு வந்துக்கிட்டு இருந்தேன். எதிரில் நித்யானந்தா ஒரு ஜீப்ல போய்க்கிட்டு இருக்கார். என்னோட நண்பரும் அதைப் பார்த்தார். ''நித்யானந்தர் மாய மந்திரம் செய்ததை எல்லாம் ஒரு பெரியாரிஸ்ட்டான நீங்கள் எப்படி நம்பினீர் கள்?'' ''நான் யாரையும் அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும். என்னோட மனைவிக்கு கடுமையான கால் வலி. எத்தனையோ இடங்கள்ல காட்டியும் அவளோட கால் வலி தீரலை. ஆனா நித்யானந்தர் அவளோட காலை ஒரு தடவை தான் தொட்டார். அடுத்த நிமிஷமே அவளோட வலி சரியாகிடிச்சு. இதே மாதிரி எத்தனையோபேரோட வியாதிகளை அவர் குணப்படுத்தியதை என் கண்ணால பார்த்திருக்கேன். தன் மனைவியை வியாதியிலேர்ந்து மீட்டதுக்காக ஒரு மூத்த நடிகர் நித்யானந்தரோட கால்களை கட்டிப் பிடிச்சு அழுதார். இது மட்டுமில்லை... ரெண்டாயிரம் பக்கங்கள் கொண்ட 300 புத்தகங்களை நித்யானந்தர் எழுதி இருக்கார். அத்தனையும் ஞானத்தை கரைச்சு குடிச்ச எழுத்துகள். அதோட உலகத்திலேயே மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தில இருக்கிற ஒரு லட்சம் சுலோகங்களையும் அட்சரம் பிசகாமல் சொல்றவர் அவர். பர்ட்டிக்குலரா எந்த சுலோகத்தை குறிப்பிட்டுக் கேட்டாலும் டாண்ணு சொல்லுவார். 32 வயசுக்குள்ள இதெல்லாம் சாத்தியமே இல்லாததுதானே... அந்தளவுக்கு சக்தி படைச்சவன் (இதுவரை 'ர்' போட்டவர் சற்றே கோபமாகி 'ன்'னுக்குத் தாவியதை என்னவென்று சொல்ல!) வயாக்ரா மாத்திரையைப் போட்டுகிட்டு அசிங்கமான காரியங்கள் செய்வதை எங்கே போய்ச் சொல்றது? உனக்கிருக்கிற அசாத்திய சக்தியை நடிகைகிட்டே காண்பிக்கிறயே... நீயா சாமியாரு?'' ''ரஞ்சிதாவை நீங்கள் நித்யானந்தரோடு பார்த்திருக் கிறீர்களா?'' ''நடிகர் விஜய்யோட அம்மா ஷோபா, கோவை சரளா, நடிகர் அர்ஜுன் போன்றவர்கள் எல்லாம் சாமியாருக்கு பெரிய விசிறிங்க... ஏன் பாலிவுட் ஸ்டாரான விவேக் ஓபராய்கூட மாசத்துக்கு ஒரு தடவை சாமியாரை சுத்தி வந்திடுவார். இதோடு, பல முன்னாள் செக்ஸ் நடிகைகளையும் நான் சாமியாரோட பார்த்திருக்கேன். நைட் முழுக்க ஹோட்டல், பார்னு கூத்தடிக்கிற ஒரு கவர்ச்சி நடிகை ஆசிரமத்தில ஹீலிங் பயிற்சி பண்ணிக்கிட்டு இருப்பார். அதையெல்லாம் பார்க்குறப்பவே ஏதோ தப்புத்தண்டா நடக்குதுன்னு மனசுக்குள்ள தோணினச்சு. இருந்தாலும் நித்யானந்தாவோட எழுத்தும் பேச்சும் அபூர்வ சக்தியும் என்னைய நம்ப வெச்சிடிச்சு.'' ''நித்யானந்தர் - ரஞ்சிதா சி.டி. காட்சிகள் உண்மை தானா?'' ''அப்பட்டமான உண்மைதான். அந்தக் காட்சி களைப் பார்த்துப் பார்த்து நான் ரொம்பக் கடுப்பில இருக்கேன். 'ஏன் நீ பெரிய யோக்கியனா'ன்னு நீங்க கேட்கலாம். அவன் பண்ணக்கூடாத அந்தத் தப்பை நான் பண்ணலாம். ஏன்னா 'நானொரு உமனைசர்'னு பகிரங்கமாவே சொல்லி இருக்கேன். ஆனா நீ... பிரமச் சர்யத்தை போதிச்சிட்டு நடிகையோடு கும்மாளம் போடுறியே? இந்த சாமியார்கள் விஷயத்தில எனக்கு ஒண்ணு மட்டும் விளங்கவே மாட் டேங்குது. செக்ஸுக்கும் ஆன்மிகத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு பகிரங்கமா சொல்லிட்டு இவனுங்க ஆசிரமம் தொடங்கினா யாரும் வெட்டவா போறாங்க? இந்த சாமியாரும் நிஜமான அந்த விஷயத்தை முதலி லேயே சொல்லிட்டு செஞ்சிருந்தா... இன்னிக்கு ரஞ்சி தாவோடு கொஞ்சிக் குலாவுறதை யாரும் தப்புன்னு சொல்ல முடியுமா? அந்த சி.டி பதிவு இப்போ எடுக்கப்பட்டதே இல்லை. குறைஞ்சது நாலு வருஷத்துக்கு முன்னாலதான் அந்தக் காட்சி பதிவு பண்ணப்பட்டிருக்கு. இதுக்குப் பின்னால பெரிய அரசியலே ஒளிஞ்சிருக்கு. போன மாசம்கூட நான் ரஞ்சிதாவை சாமியாரோட பார்த்தேன். அதனால தான் இந்த உண்மையை இவ்வளவு அழுத்தமா சொல்றேன்.'' ''நீங்கள் சாமியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் புகழ் புராணம் பாடியதாகவும், இப்போது அதை மறைப்பதற்காக சாமியார் மீது வழக்குப் போடப் போவதாகவும் சொல்லப்படுகிறதே?'' ''பணம் சம்பாரிக்கணும்னா நான் எப்படி வேணும் னாலும் சம்பாரிச்சிருப்பேன். எவ்வளவு வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன். சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு பல தடவை அவனுக்கு நான்தான் தண்டம் அழுதிருக்கேன். புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்கு பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு. இதுக்கிடையில கும்ப மேளாவுக்கு போறதுக்காக என் மனைவி ஒரு லட்ச ரூபாயை அவன்கிட்ட கொடுத்திருக்கா. அதையெல்லாம் திருப்பித் தரச் சொல்லித்தான் அவன் மேல நான் வழக்குப் போடப் போறேன். மத்தபடி சில மாமா பயலுக கிளப்பிவிடுற கதைக்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்!'' | |
|

அதேசமயம், பல அறக் கட்டளை அமைப்புகள், இந்த சட்டத்தை தளர்த்தி வரி விலக்கு கொடுக்குமாறு கேட்டு வருகின்றன. இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு 10 லட்சத்துக்கு உட்பட்டு வருமானம் பெறும் அறக்கட்டளைகள் இனி வரிவிலக்கை பெறலாம்!'' என்று அறிவித்தார்.
இப்படி, மத்திய நிதி அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்த மறுநாளே, அந்த பகீர் விஷயத்தை டெல்லி போலீஸார் வெளிச்சத்துக் கொண்டு வந்தனர். ஆன்மிகத்தின் பெயரில் ஆஸ்ரமம் உருவாக்கி வரிவிலக்கு பெற்ற ஒரு ஆள், விபசார இடைத்தரகராகவும் கொடிகட்டிப் பறந்த விவகாரம் அது..!
வெப்-சைட் மூலம் விபசாரம் நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், டெல்லி போலீஸார் கடந்த சில மாதங் களாகவே ஒரு கும்பலை கண்காணித்து வந்தனர். அந்த கும்பல் கடந்த 26-ம் தேதி சிக்கியது. அதில் சிக்கிய முக்கியப் புள்ளி டெல்லியில் ஆஸ்ரமம், சாய்பாபா கோயில் என்று நடத்திய தோடு, ஆன்மிகப் பிரசாரப் புள்ளியாக இருப்பதும் தெரிந்தது. அவன் பெயர் ஷிவ் முராத் திவிவேதி!
'விபசார சாமியார்' திவிவேதி பற்றி டெல்லி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.
''திவிவேதி தன்னை 'இச்சாதாரி' சாது என்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறான். இச்சாதாரி சாது என்றால், இவன் கழுத்தில் பாம்பு (விஷப்பல்
பிடுக்கப்பட்டதுதான்..!) ஒன்று இருக்கும். பொதுவாக நாகதேவதை, மனிதனின் உருவம் எடுக்கும் என்றும் தன்னைக் கொன்றவரை பழி வாங்கும் என்றும் நிறைய சினிமா கதைகளை நம்பும் பொது ஜனங்களை ஈர்க்கவே கூடுதல் அட்ராக்ஷனாக தன் கழுத்தில் எப்போதும் பாம்பை வைத்துக்கொண்டான் இந்த ஷிவ் முராத் சாமியார். ஒருபக்கம் ஷிர்டி ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர், சாது, ஆன்மிக குரு, பிரசாரகர், மெடிட்டேஷன், மருத்துவம் என மான் தோல் போர்த்திய புலியாக பகலில் ஆன்மிகத் தொண்டு செய்துவந்த இந்த சாமியார்... இரவுகளில் பல வி.ஐ.பி-க்களின் இச்சையைத் தணிக்கும் கேவலமான 'நெட்வொர்க்'கையும் நடத்தி வந்தான். அதுவும் நாடு முழுக்க நடத்தியிருக்கிறான் இந்த கில்லாடி வேஷதாரி...'' என்று முன்னோட்டம் தந்தவர்கள், சாமியாரின் பூர்வாசிரமத்தை சொல்லத் தொடங்கினார்கள்.
''32 வயதான ஷிவ் முராத் சாமியாருக்கு சொந்த ஊர், அலகாபாத் அருகில் இருக்கும் சித்ரகூட்! அயோத்தி யிலிருந்து வெளியேறிய ராமர், லட்சுமணர் மற்றும் சீதை ஆகியோர் முதன் முதலில் தங்கியிருந்ததாகக் கூறப்படுவது இந்த சித்ரகூட்தான். துளசிதாஸர் தனது 'ராம் சரித் மானஸ்' எழுதியதும் இந்த ஊரில்தான். இங்கிருந்து இப்படியரு அசிங்கம் பிடித்த ஆள் கிளம்பி வந்திருப்பது கொடுமைதான்.
ஒன்பதாம் வகுப்பு வரை படித்த ஷிவ் முராத், டெல்லிக்கு வேலை தேடி வந்து 'பார்க் ராயல்' நட்சத்திர ஹோட்டலில் செக்யூரிட்டி வேலையில் சேர்ந்திருக்கிறான். பின்னர் டெல்லி லாஜ்பத் நகரில் மசாஜ் வேலையை தொடர... அப்போதே அவனுக்கு விபசார புரோக்கர்கள் மூலம் தொடர்பு ஏற்பட்டது. அந்த தொழிலில் ஈடுபட்டபோது... 1997-ல் போலீஸில் மாட்டிக்கொண்டு ஜெயிலுக்கு சென்றான். அதன்பிறகு தன் தொழிலை மீண்டும் 1998-ல் தொடங்கி, இன்னும் இன்னும் ஹைடெக்காகப் போய்... 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கைதாகியுள்ளான்!

விபசாரத் தொழிலைத் தொய்வின்றியும் பயமின்றியும் தொடர இவன் போட்டுக்கொண்ட சாமர்த்தியமான திரைதான் ஆன்மிக வேஷம்! இந்த கபட சாமி இரவில் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து, இடைத்தரகர் அவதாரம் எடுப்பான். முன்னாள் விபசார புரோக்கர் என்றாலும், சாமியார் போர்வையில் காவி உடுத்தி, தாடியில் பிரசங் கம் செய்த இவனை பக்தர்களாகப் பார்க்க வந்த பல போலீஸ் அதிகாரிகளுக்கும் இவன் மீது சந்தேகம் வர வில்லை. கடந்த மூன்று மாதங்களாக இவன் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை தொலைத் தொடர்புகள் மூலம் ரகசியமாக கண்காணித்து வந்தபோதுதான்... 'ஓ அவனா நீ!' என்று உஷாரானார்கள் போலீஸார்.
தனக்கு நன்றாக நம்பிக்கை வந்த பிறகுதான் குறிப்பிட்ட வாடிக்கையாளார்களுக்கு பெண்களை சப்ளை செய் வான் இந்த ஆ'சாமி'! அப்படி நம்பிக்கை பெற்ற ஒரு வாடிக்கையாளரை மிரட்டி தங்களுக்கு ஒத்துழைக்க வைத்த போலீஸார், தாங்களே
நட்சத்திர ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கி, புதிய வாடிக்கையாளராக நடித்து விபசாரத்துக்குப் பெண்களைக் கேட்டு... கையும் களவுமாக இவனைப் பிடித்தார்கள். அப்படி கைதானபோதும்கூட, கருமம் பிடித்த இந்த கும்பல் காவி நிற துணியால் முகத்தை மறைத்துக்கொண்டதுதான் கொடுமை!
இவனை போலீஸ் பிடித்தபோது ஐந்து இளம் பெண் களும் சிக்கினார்கள். இதில் விமானப் பணிப் பெண், டெல்லி பல்கலைக்கழகக் கல்லூரியில் நிர்வாக இயல் படிக்கும் பெண், சினிமா பயிற்சிக் கல்லூரியில் படிக்கும் பெண் என்று உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்கள்! சினிமா பயிற்சிக் கல்லூரிப் பெண், மும்பையைச் சேர்ந்த ஒரு சுங்க இலாகா அதிகாரியின் மகள் என்று 19 முதல் 22 வயசு பெண்கள்! இப்படி உயர் குடும்பத்துப் பெண்கள், பணத்துக்குப் பஞ்சமில்லாதவர்கள் எப்படி இந்த பகீர் சாமியாரிடம் மடங்கினார்கள் என்பதுதான் பெரிய அதிர்ச்சி!'' என்றார்கள்.
போலீஸ் அதிகாரி பங்கஜ் சிங்கிடம் பேசினோம். ''இந்த போலி சாமி தன் வாடிக்கையாளர்களுக்கு விபசார பெண்களை தேடுவதற்கு வசதியான வழியாகத்தான் ஆன்மிகத்தை தேர்ந்தெடுத்திருக்கிறான். அதை எல்லோ ரும் நம்புவதற்காக, முறைப்படி ஆன்மிக விஷயங்களை ஓரளவு கற்றுக்கொண்டதுதான் இவனுடைய கிரிமினல்தனத்தின் உச்சம்! மத்திய பிரதேசத்தில் ஒரு மடத்தில் சேர்ந்து ஆன்மிகத்தில் சில விஷயங் களைக் கற்றிருக்கிறான். அங்கே இரண்டு வருட பயிற்சிக்குப் பின்னர் தன்னை ஸ்ரீசாய்பாபா பக்தராகவும், அற்புத சக்திகள் கொண்ட அசாத்திய துறவியாகவும் காட்டிக் கொண்டு முழு வீச்சில் இறங்கிவிட்டான். இதன் விளைவாக, பக்தர்களின் எண்ணிக்கை கூடியது. பாபா கான்பூர், சுவாமி பீமானந்த் மகாராஜ், இச்சாதாரி சாது என்று ஏராளமான பட்டப் பெயர்களில் பக்தர்கள் சிலிர்த்துக்கொண்டு இவனைத் தேடி வந்தார்கள்.
டெல்லிக்குள் இருக்கும் கான்பூர் என்கிற பகுதியில் தான் ஆன்மிகத்துக்கான அஸ்திவாரத்தை போட்டான். அங்கே பக்தி மணம் கமழும் கோயிலை கட்டி, பெண்களை தன்னுடைய வலையில் சிக்க வைக்கத் தொடங்கினான். ஒன்பதாம் வகுப்பே படித்த இவன் சொற்பொழிவுகளில் பொளந்து கட்டினான். லட்சக் கணக்கான பக்தர்கள் வந்தனர். ஏக பத்தினி விரதனான ராமனின் அவதார கதைகளையும், பல ஆன்மிக கதை களையும் சொல்லி பிரமிக்க வைக்கும் ஸ்டைல்தான் இவனது ஸ்பெஷாலிட்டி..!'' என்று சொல்லி, சாமியார் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ சி.டி-யை நம்மிடம் கொடுத்தார். அதில் உள்ள சொற்பொழிவுக் காட்சிகளைப் பார்த்தால், சத்தியமாக இது டுபாகூர் ஆசாமி என்று சந்தேகமே வராது போலிருந்தது. தொடர்ந்து பேசிய போலீஸ் அதிகாரி பங்கஜ், ''பெரிய பெரிய துறவிகளுக்குக் கொடுக்கப்படும் மரியாதைகளைப் போன்று, இவன் நடந்து வரும்போது மலர்களை தூவுவது, முற்றும் துறந்த முனிவர்களுக்கு இணையாக தனியான இருக்கையில் அமரவைப்பது, இவன் கழுத்தில் பாம்பு நெளிவதற்கான செட்-அப்களைச் செய்வது என்று ஊதியத்துக்கு நிறையவே அடியாட்கள் வைத்திருந்தான். அவர்களையே ராத்திரியில் பெண்கள் சப்ளைக்கு பாதுகாவலர்களாக வைத்துக்கொண்டானா என்றும் விசாரித்து வருகிறோம்.
மெடிட்டேஷன் பற்றி பகலில் இவன் எடுக்கும் வகுப்புகளுக்கு டெல்லியின் மிகப் பெரிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். தான் குறிவைக்கும் பெண்களை தானே நேரடியாக டீல் செய்திருக்கிறான். அவர்களைப் பேசிப் பேசி மயக்கி, பணத்தையும் விட்டெறிந்துதான் அந்தப் பெண்களின் கற்பை விலைக்கு வாங்கியிருக்கிறது இந்தத் திமிங்கிலம். வீட்டுப் பெண்கள், கல்லூரி மாணவிகள், விடுதி மாணவிகள், வேலை தேடும் பெண்கள், நடிப்பாசை, மாடலிங் ஆசை கொண்ட பெண்கள் என்று மட்டுமின்றி, உச்சகட்டமாக பள்ளிச் சிறுமிகள் வரை தனது தொழிலுக்கு வலை வீசியிருக்கிறான். தான் அனுப்பிய இடங்களுக்குப் போகும் பெண்களில் சிலருக்கு ஐயாயிரம் பத்தாயிரம் என்று பணம் கொடுத்திருக்கிறான். பெரிய இடத்துப் பெண்களுக்கு
வேறு ஏதேதோ வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறான். அதெல்லாம் என்னவென்று விசாரித்து வருகிறோம். அதோடு, இவனிடம் வாடிக்கை யாளர்களாக இருந்தவர்களில் அதிகார சக்தி மிக்கவர்களும் உண்டா என்று விசாரித்து வருகிறோம்...'' என்றார். அரசு மையங்களில் பெரிய வேலைகளை முடிப்பதற்காக பெண்களை ஒரு கருவியாக இந்த ஏடாகூட சாமியார் பயன்படுத்தியதுண்டா என்பது போலீஸின் ஒரு சந்தேகம்.
லோக்கல் ஸ்டேஷன் போலீஸாருக்கு இந்த சாமியின் தில்லுமுல்லுகள் அரசல் புரசலாகத் தெரிந்தே இருந்தும் இத்தனை நாளாகக் கண்டு கொள்ளவில்லையாம். சிறப்பு போலீஸ் அதிகாரிகள்தான் கண்ணி வைத்து வளைத்தனர்.
''டெல்லியில் மட்டுமல்லாது, தனது சொந்த ஊருக்குப் பக்கத்தில் சம்ராவு என்ற கிராமத்திலும் அறக்கட்டளை தொடங்கி, ஆஸ்ரமம் கட்டி சாய்பாபா கோயிலையும் உருவாக்கினான் இந்த ஆள். அவற்றில் பணமும், நன்கொடைகளும் கொட்டியது. இதற்காக 'திவிவேதி டிரஸ்ட்' தொடங்கினான். மேலும் டெல்லியிலும் தனது சொந்த ஊரான சித்ரகூட்டிலும் ஏராளமான சொத்து களை வாங்கிக் குவித்திருக்கிறான். டெல்லியில் மூன்று இடங்களில் ஜம்மென்று பில்டிங், நிலம் எல்லாம் உள்ளது. சொந்த ஊரில் 200 படுக்கை கொண்ட ஒரு மருத்துவமனையையும் கட்டி வருகிறான். இவனது சகோதரர் ஒரு டாக்டர்... அவருக்காகத்தான் இந்த மருத்துவமனையை கட்டி யிருக்கிறான்'' என்று தகவல் சொல்லுகிறார்கள் போலீஸ் துறைக் குள்ளேயே!
சாமியாரின் சாய்பாபா கோயில் மூன்று மாடிக் கட்டடத்தில் உள்ளது. இதன் கீழ்ப்பகுதி யிலும் முதல் மாடியிலும் சாய்பாபாவின் சிலைகளும் பூஜைகளுக்கான
பொருட்களும் இருக்கும். இதே கோயிலில் ஜம்மு வைஷ்ணவா தேவியின் குகைக்கோயில் அமைப்பையும் உருவாக்கி வைத்துள்ளான். இவன் கைதான பிறகும் அந்தக் கோயிலில் தினமும் காலையிலும் மாலையிலும் ஆரத்திகள் நடக்கிறது. பக்தர்களும் வந்தபடிதான் இருக்கிறார்கள்..!
ஆஸ்ரமத்திலிருந்து ஏராள மான டைரிகளும் வங்கிக் கணக்குகளும் போலீஸாரின் சோதனையில் கிடைத்துள்ளது. இதில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்களின் தொடர்புகளோடு கடந்த 10 வருட வங்கிக் கணக்கு களும் பிரமிக்கவைக்கும்படி உள்ளது. உள் நாட்டு முதலீடு தவிர, வெளிநாட்டுக்கும் இந்த சாமியார் பணம் அனுப்பிய தகவலும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது!
விசாரணையின்போது, ''எத்தனை நாள்தான் இந்தத் 'தொழி லையே' பார்ப்பது? நீங்கள் வந்து என்னைப் பிடிக்காவிட்டாலும் நானே எல்லாவற்றையும் ஏறக் கட்டிவச்சிட்டு, ஊரில் உள்ள ஆஸ்பத்திரியை கட்டி முடித்த கையோடு வெளிநாட்டில் செட்டில் ஆக இருந்தேன். அதற் குள் அவசரப்பட்டு(?) வளைத்து விட்டீர்கள்'' என்று சாமியாரின் திருவாய் மலர்ந்ததாம்! ''அரசு குடியிருப்பில் இடம் கேட்டு அவன வனும் அல்லாடிக் கொண்டிருக்க... டெல்லியில் மூன்று அரசாங்க வீடுகளை வாடகைக்கு எடுத்து, அங்கு 50 பெண்களை தங்கவைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியிருக்கான் இந்த சாமியார். இவனோடு தொடர்புடைய 200 விபசார பெண்களில், ரஷ்யாவை சேர்ந்த பெண்களும்கூட அடக்கம்! இந்த ஆள் கைதான அடுத்த நிமிடமே எல்லோரும் பறந்துவிட்டனர். இவனுக்கு டெல்லி தவிர மற்ற மெட்ரோ நகரங்களில் உள்ள நெட்வொர்க் பற்றி விசாரிக்கிறோம்'' என்று பிரமிப்போடு சொல்லும் போலீஸார், மூன்று கட்டடங்கள், இருபது ஏக்கர் நிலம், கடைகள், சொகுசு கார்கள், சி.டி. தயாரிக்கும் நிறுவனம், பத்திரிகை இதழ் அச்சகம் என்று சொத்துப் பட்டியலைச் சொல்லி வாய் பிளக்க வைக்கிறார்கள்.
இரண்டு பக்தி தொலைக் காட்சிகள் மேற்படியாரின் ஆன்மிக சொற்பொழிவுகளை 'பிரைம் டைமி'ல் தினந்தோறும் ஒளிபரப்பி வந்த காமெடியை என்ன சொல்ல! இதைவிட உச்ச கட்ட அநியாயமும் உண்டு. அதாவது, இந்த ஆளின் ஆன்மிக பக்தி சொற் பொழிவு டி.வி.டி-யில் இரண்டு மொபைல் எண்களும் வெப்சைட் விலாசமும் தரப்பட்டுள்ளது. இந்த மொபைல் எண்ணை 'கூகிள் சர்ச்'சில் போட்டுப் பார்த் தால்... இவர் நடத்தும் ராத்திரி நெட்வொர்க்கான 'ஜெய் மேத்தா' விபசார விளம்பர வெப்-சைட் வரும். இதில் வரிசையாக பெண்களின் ஆல்பமும் இருக்குமாம்!
காவியை வைத்தே ஜாலி பண்ணிக் கொண்டிருந்த இந்த நபரின் கைதுக்கு அரசியல் சாயம் கொடுக்கிற வேலைகளும் ஆரம்பமாகிவிட்டன! ''பெட்ரோல் டீசல் விலையையட்டி, எதிர்க்கட்சிகள் காட்டிவந்த எதிர்ப்புகளை கலகலக்க வைக்கவே இந்த போலி சாமியார் விவகாரத்தை இந்த நேரம் பார்த்து டெல்லியை ஆளும் அரசு கையில் எடுத்தது'' என்பதே அந்தப் பேச்சு.
''இந்த விவகாரத்தில் முன்னாள் பி.ஜே.பி. எம்.பி-க்கள் சிலரும், தற்போதைய சமாஜ்வாடி எம்.பி-க்கள் சிலரும்கூட சிக்கக் கூடும்'' என்று ஹேஷ்யம் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
தன்னை உலுக்கி எடுத்து விசாரிக்கும் போலீஸாரிடம், 'உடல் பசியைத் தீர்ப்பதும்கூட ஒருவகை ஆன்மிகம்தான். அதற்கு உதவுவது தவறில்லை'' என்று ஒரு தத்துவத்தை இந்த டுபாகூர் அவிழ்த்துவிட... விசாரணை போலீஸார் கொதித்துப் போய் மூலையில் தள்ளி மொக்கினார்களாம்!
!
பல அரசியல் பிரமுகர்களும் இவனது பகல் நேர ஆன்மிக சொற்பொழிவுக்கு அடிமை. ராஷ்டிரபதி பவனையட்டியுள்ள டெல்லி நார்த் பிளாக்கில் இவனது சொற்பொழிவு இரண்டு வருடம் முன்பு நடந்தது. இதை ஏற்பாடு செய்தவர்கள், பி.ஜே.பி-யைச் சேர்ந்த எம்.பி-க்கள். இதில் மறைந்த கிஷண்லால், விஜயகுமார் மல்ஹோத்ரா மற்றும் (கிரிக்கெட் வீரர்) கீர்த்தி ஆஸாத் போன்ற எம்.பி-க்களோடு... பி.ஜே.பி-யின் சில எம்.எல்.ஏ-க்களும் கலந்துகொண்டு மெய்சிலிர்த்தார்களாம். சமாஜ்வாடி எம்.பி-யான ஆர்.கே.சிங் மற்றும் ஹரிஷ்குமார் என்கிற மாவட்ட கலெக்டர் ஒருவரும்கூட இவரது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களாம்! |
படத்தைப் பார்த்தால், 'காஞ்சிபுரம் தேவநாத குருக் கள் விவகாரம் போலவோ' என்ற அலறல் எழுவது நியாயமே! ஆனால், இது கோவை மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்திருக்கும் மலையோர கிராமமான குப்பனூர் கோயில் திருவிழாவில், பலர் பார்க்க 'பாரம்பரிய தாசர்கள்' அரங்கேற்றும் பக்திக் காட்சி! வருடந்தோறும் மாசி மகத்தன்று கோயில்களில் வழிபாடு நடத்திய பின்னர், 'கவாள வீதியுலா' நடைபெறுவது வழக்கம். சாமியாடியபடி வீதியுலா வரும் பாரம்பரிய தாசர்கள், வாழைப்பழங்களை தங்களது வாயில் கவ்விக் கொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் மண்டியிடுகிறார்கள் பெண் பக்தைகள். திடீரென ஆக்ரோஷமாக சாமியாடும் தாசர்கள், வாயில் கவ்வி வைத்திருக்கும் வாழைப்பழத்தை, அந்தப் பெண் பக்தைகளின் வாயில் திணிக் கிறார்கள். சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி நிற்கும் பொதுமக்கள், படபடவென கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். இந்த மாதிரி தாசர்களிடம் இருந்து பழம் பெறும் பெண்கள் பெரும்பாலும் குழந்தை வரம் கேட்டு வருபவர்களாம். இந்தப் பழப் பரிமாற்றத்துக்குப் பிறகு பலருக்கு குழந்தை பிறந்துள்ளதாக அந்த ஏரியாவாசிகள் சொல்கிறார்கள்! 6 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் காரமடை அரங்கநாதர் கோயில் திருவிழாவிலும், இந்த கவாள வீதி உலா நடந்திருக்கிறது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, அங்கு கவாளம் கொடுப்பது நிறுத்தப்பட்டு, குப்பனூர் அளவில் சுருங்கிவிட்டது! - அ.சுப்புராஜ் |