கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி! வட்டிக்குப் பதிலாக மகளையே தூக்கிச்சென்று சீரழித்த கொடூரம்!! தடுத்து நிறுத்த முன் வருமா தமிழக அரசு!!! நன்றி: ஜூவி நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி விபரீதத்தால், கடந்த வாரம் பள்ளிப்பாளையம் ஏரியாவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்! பள்ளிப்பாளையம் பகுதியில் தறி ஓட்டும் தொழிலாளர்கள் அதிகம். ஏழ்மையில் இருக்கும் இவர்கள், கந்து வட்டிக்கு பணம் வாங்குவது சகஜம். அப்படிப் பணம் வாங்கிய ஒரு பெண்மணி தவணையை ஒழுங்காகக் கட்ட முடியாமல் போக... அவரது வயதுக்கு வந்த மகளையே வட்டிக்கு பதிலாகத் தூக்கிச்சென்றிருக்கிறார்கள்! அந்தப் பெண்ணை சீரழித்ததோடு, அதை வீடியோவாகவும் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டு காசு பார்த்தும் இருக்கிறார்கள். சினிமா வில்லத்தனத்தையே ஜுஜுபி ஆக்கும் இந்தக் கொடூரர்களைத் தட்டிக் கேட்கப் போய்த்தான் பரிதாபமாகக் கொலையானார் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் தோழரான வேலுச்சாமி. தட்டிக் கேட்க ஆளில்லாமல் கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் கந்து வட்டிக் கொடுமைகளைப் பற்றி விசாரிக்கப் புறப்பட்டபோது தலை சுற்றியது. முன்பு, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதற்கு எதிராகப் போட்ட சட்டம் சுத்தமாக செத்துப் போய்விட்டதையும் புரிந்துகொள்ள முடிந்தது. அரசியல் செல்வாக்கில் ஈரோடு..! ஈரோடு மாவட்டம் சத்தியமங்க லத்தைச் சேர்ந்த கிரிகோரி என்பவர், அபராத வட்டி.. செடி வேர் அடி..! கடம்பூர், தாளவாடி போன்ற மலைகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுப்பதற்கென்றே கோவை, நீலகிரியைச் சேர்ந்த ஒரு டீம் இருக்கிறது. சந்தை கூடும் நாட்களில் பணத்தைக் கொடுத்துவிட்டு, அடுத்த சந்தையன்று வட்டியை வசூலிக்க வருவார்கள். இரண்டு மூன்று தவணைகள் வட்டி தவறினால், அபராத வட்டி போடுவதுடன், கடன் வாங்கியவரின் முதுகில் காட்டுச் செடி வேரினால் அடிக்கும் காட்டுமிராண்டித்தனங்களும் நடக்கிறதாம்! ராத்திரி நேரம்... நடு வீட்டில்... சேலம் மார்க்கெட் ஏரியா கந்து வட்டி கொடூரங்கள் ரொம்ப கொடுமை..! ''காலையில 1,000 ரூவா கொடுப்பாங்க. சாயந்திரம் வீட்டுக்குப் போறப்ப 1,100 ரூவாயா திருப்பிக் கொடுக்கணும். ஒருநாள் லேட்டானாலும் அந்த 100 ''சேலம் மாநகராட்சியில வேலை பார்க்குற துப்புரவு தொழிலாளர்களை மட்டுமே குறிவச்சு ஒரு கும்பல் செயல்படுது. வட்டிக்குப் பணம் கொடுத்துட்டு, அவங்களோட ஏ.டி.எம். கார்டை வாங்கிக்குவாங்க. ஒவ்வொரு மாசமும் சம்பளம் போட்டதும் வட்டிப் பணத்தை எடுத்துக்கிட்டு அக்கவுன்ட்ல மிச்சம் பணம் இருந்தா... அதை சம்பந்தப்பட்டவங்களுக்கு எடுத்துக் கொடுப்பாங்க. கார்டு அவங்க கையிலதான்!'' என்றார் ஒரு மாநகராட்சி ஊழியர். கொள்ளை போகும் பொருட்கள்..! கேரளா, குஜராத், உ.பி., என்று மற்ற மாநிலத்த வரும், நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டினரும்கூட வாழும் திருப்பூர் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமை இன்னும் அதிகம். ''தெரு முனையில நின்னுகிட்டு பணம் கொடுக்கிற கந்து வட்டிக்காரனுங்க எண்ணிக்கைதான் இங்கே அதிகம். எந்த டாக்குமென்ட்டும், ஆதாரமும் இல்லாம பணம் தர்றதால இவர்களை கடவுளா நினைக் குறாங்க பாவப்பட்ட மக்கள். பனியன் பிசினஸ்ல பணப்பட்டுவாடா ஒழுங்கா நடக்காம எங்கேயாச்சும் சிக்கிடுச்சுன்னா... நிலையை சமாளிக்க வட்டிக்கு கடன் வாங்கித்தான் ஆகணும்... வட்டியும், அசலும் தவறுனா வீட்டுக்கு வந்து டி.வி., பைக்குன்னு கண்ல பட்டதை தூக்கிட்டுப் போயிருவாங்க...'' என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த மணி. தொடர்கதையாகும் கொடுமைகள்..! கந்து வட்டி கொடுமையை எதிர்த்து தொடர்ந்து போராடிவரும் குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் வழக்கறிஞர் தமயந்தி, ''ராசிபுரத்துல ஒரு கும்பல் வட்டிக்கு கொடுமைகள் குறைஞ்சிருக்காம்..! ''மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அரசிடமிருந்து தாராளமான நிதி உதவி கிடைப்பதால், கந்து வட்டி கொடுமைகள் இங்கே மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது!''- என்று தான் கலந்துகொள்ளும் விழாக்களில் சொல்லி பெருமைப்படும்நாமக்கல் தொகுதி எம்.பி-யும் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சருமான காந்திசெல்வனை தொடர்பு கொண்டோம். ''நான் பர்சனலா இந்த விவகாரத்தைப் பற்றி கேட்டுத் தெரிஞ்சு விசாரிச்சுட்டுத்தான் பேசுறேனே தவிர, மேடை அலங்காரத்துக்காக எதையும் பேசல. பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு ஏரியாக்கள்ல ஒரு காலத்துல கொடிகட்டிப் பறந்த கந்து வட்டி பிசினஸ், இப்போ ஒடுங்கி இருக்குது. இதுக்கு முக்கியக் காரணம்... கடந்த நாலஞ்சு வருஷங்கள்ல தமிழக அரசு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வெகுவான நிதிஉதவி வழங்கி ஊக்குவிச்சு இருப்பதுதான்...'' என்றார் அவர்! விஷச் செடி... மூலிகைச் செடி..! மேற்கு மண்டல ஐ.ஜி-யான சிவனாண் டியிடம் பேசினோம். ''சமீபத்துலதான் இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கேன். இதில் ஈடுபட்டிருக்கிற கிரிமினல்களை கூடிய சீக்கிரமே ஒழிச்சுக் கட்டுவேன். அதோடு, ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்யக்கூடிய திட்டங்களையும் இங்கே செயல்படுத்தி வருகிறோம். அடுத்த தலைமுறையாவது நல்ல கல்வியோடு நிமிரும்போது, கந்துவட்டி போன்ற ஆபத்தான வலையில் விழாமல் இருப்பார்கள். அதோடு, நல்ல தொரு வேலையில் அமர்ந்து தங்கள் குடும்பத்தை இன்னல்கள் இல்லாமல் காப்பாற்றுவார்கள். ஒரு விஷச் செடி யைப் பிடுங்குகிற அதேசமயம், ஒரு நல்ல மூலிகைச் செடியை வைக்கிற மாதிரி, ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ வசதியுள்ளவர்கள் தாராளமாக முன்வரவேண்டும்'' என்று தொலைநோக்கோடு பேசினார் ஐ.ஜி. அனைத்துக்கும் மேலாக, 'இரக்கமற்ற கந்து வட்டிக் கும்பல்களுக்கு அடைக் கலம் தரக்கூடாது என்று' அரசியல் கட்சித் தலைவர்கள் ஆணை போடுவது முக்கியம்! ஒளிய இடம் இல்லாவிட்டால் விஷப் பாம்புகளை அடித்துப் போடுவது காவல் துறைக்குப் பெரிய வேலையாக இருக்காது! நன்றி: ஜூவி | |
|
.
Showing posts with label கற்பழிப்பு. Show all posts
Showing posts with label கற்பழிப்பு. Show all posts
Saturday, March 20, 2010
கொங்கு மண்டலப் பகுதிகளில் கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி!
Sunday, July 26, 2009
காதல் என்ற பெயரில் நாசப்படுத்திய காதலன்.
'காதல்... காதல்... காதல். காதல் போயின் சாதல்... சாதல்... சாதல்' என்றான் பாரதி. கண்களால் காதல் செய்த காலம் போய், இன்று சதை களால் மட்டுமே காதல் செய்யுமளவுக்கு படுகேவல மான பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது! உண் மையாகக் காதல் செய்த ஒரு பெண், நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டாள் என்பதற்கு உதாரணம் இந்தக் கட்டுரை. இது வெறும் கட்டுரை மட்டுமல்ல... இளம்பெண்களுக்கு ஒரு எச்சரிக்கையும் கூட!
நன்றி: ஜூ.வி
மதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கல்லூரிப் படிப்பை முடித்த இவர், மதுரையிலுள்ள மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் தற்காலிக ஊழியர். தினமும் ஊரிலிருந்து மினி பஸ்ஸில் வரும்போது, அந்த பஸ் டிரைவர் மணிகண்டன் என்பவனிடம் காதல் ஏற்பட்டுள்ளது. ஒரு ஆண்டு கழித்துதான் மணிகண்டனுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை களும் இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிந்து அதிர்ச்சி யடைந்தார் மல்லிகா.ஆனால், அதற்குள் அவனிடம் அத்தனையும் இழந்திருக்கிறார் மல்லிகா.
இருந்தாலும், காதலித் ததற்காகத் தன்னையும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியிருக்கிறார். அதன் பின் நடந்ததை அழுது வீங்கிய கண்களுடன் திராணியில்லாத நிலையில் நம்மிடம் மருத்துவமனையில் பேசினார் அவர்.
''மணிகண்டன்தான் ஆரம் பத்துல என்னை காதலிக்கிறதா சொல்லி வலிய வலிய வந்தாரு. நான் மறுப்பு சொன்னாலும் என்னையறியாமல் என் மனசு அவரை காதலிக்க ஆரம்பிச்சுடுச்சு. நான் கே.கே.நகர் பக்கத்துல ஒரு ஆபீஸ்ல வேலை பாக்குறேன். வேலை முடிஞ்சதும் தினமும் சாயங்காலம் ஆறரை மணிக்கு அங்கிருக்கிற பூங்காவுல சந்திப்போம். அவர் ரொம்பப் பாசமா பழகுனதால், பல முறை அத்துமீறினார். 'கட்டிக்கப் போறவருதானே'னு நானும் அவரை எல்லாத்துக்கும் அனுமதிச்சிட்டேன். கல்யாணமானவர்னு உண்மை தெரிஞ்ச பின்னாடியும் அவரைப் பிரிய மனசில்லாம கட்டிக்கிட்டா அவரைத்தான் கட்டிக்குவேன்னு உறுதியா இருந்தேன்... ஆனா, படுபாவி இப்புடி என்னைச் சீரழிப்பான்னு கனவுலகூட நினைச்சுப் பார்க்கலையே...'' என்ற மல்லிகா, மேற்கொண்டு பேச முடியாமல் மயங்கி சரிந்தார்.

நர்ஸ் வந்து சோதிச்சு... மருந்தை கொடுக்க, அதை விழுங்கி சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்ட மல்லிகா தொடர்ந்தார். ''அவன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு மறுத்தாலும், எப்படியும் மனசை கரைச்சிடலாம்னு இருந்தேன். அன்னிக்கும் அப்படித்தான் கே.கே.நகர் பூங்காவுக்கு வான்னு கூப்பிட்டான். சாயங்காலம் ஏழு மணிக்கு போனேன். வழக்கமா சந்திக்குற மறைவான இடத்துல உட்கார்ந்துக் கிட்டோம். அவன் என்னை தொட்டான். ஆனா, இந்த முறை நான், 'என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னாடிதான் இனி தொடணும். அதை மீறி தொட்டா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது'ன்னு கடுமையா பேசுனேன். அப்ப அவன், 'நாளைக்கே வீட்டை விட்டு வெளியே வா. நாளை மறுநாள் கோயில்ல வச்சு கல்யாணம் பண்ணிக் கிறேன்'னு என் தலையிலடிச்சு சத்தியம் செஞ்சான். ரொம்ப சந்தோஷமடைஞ்சு, அன்னிக்கும் அவன் எதிர்பார்த்தபடியெல்லாம் நடந்துகிட்டேன்.
அடுத்த நாள் சாயங்காலம் ஆறரை மணிக்கு கொஞ்சம் டிரஸை மட்டும் எடுத்துக்கிட்டு போய், அதே பூங்காவுல அவனை சந்திச்சேன். நாளைக்கு நமக்கு கல்யாணம்னு சொல்லியே ரொம்ப நேரம் அவன் அனுபவிச்சான். திடீர்னு, 'கல்யாணத்துக்கு பசங்க ட்ரீட் கேட்டிருக்காங்க. அவங்களை வரச் சொல்லியிருக்கேன்'னு சொன்னான். அரைகுறை டிரசுல எனக்கு தூக்கிவாரிப் போட்டுருச்சு. கண்டபடி அவனை திட்டிட்டு, டிரஸை எடுத்துப் போட்டுக்கிட்டேன். 'உன் ஃபிரண்ட்ஸ் முன்னாடி எல்லாம் இந்த இடத்துல, என்னால் நிக்க முடியாது. நீ ட்ரீட்டை இன்னொரு நாளு கொடுத்துக்கோ. வா போகலாம்'னு நான் சொன்னபோது, மூணு ஆளுங்க வந்தாங்க.
நான் அமைதியா பெஞ்சு மேல உட்கார்ந்திருந்தேன். அப்ப மணிகண்டன் என்கிட்ட, 'நீ இங்கயே இரு. பக்கத்துல கடைக்குப் போய் பசங் களுக்கும் உனக்கும் சாப்பிட வாங்கிட்டு வர்றேன்'னு சொன்னான். நான் சொல்லச் சொல்ல கேட்காம வேகமா போயிட்டான். நான் இருட்டுல தனியா உட்கார்ந்திருக்கும்போதே மூணு பேர்ல ஒருத்தன் என்னை நெருங்கி வந்து அத்துமீறினான். அதிர்ச்சியடைஞ்ச நான், 'அவரு வந்தா உங்களை கொன்னுப்புடுவார்... கையை எடுடா...'ன்னேன். அதுக்கு இன்னொருத்தன், 'உன்னை அனுபவிக்க தலைக்கு ஐந்நூறு வாங்கியிருக்கான். அயிட்டம்தானேடி நீ... சத்தம் போடாம படு...'னு சொன்னப்பகூட, 'மணிகண்டன் அப்பிடி எல்லாம் செஞ்சிருக்க மாட்டான்'னு நம்பினேன். அதுக்குள்ள மூணு பேர்ல ஒருத்தன் என் வாயை அடைக்க... இன்னொருத்தன் டிரஸ்ஸை உருவி தொடையை அழுத்தி பிடிச்சான். இப்படி மாறி மாறி என்னை சீரழிச்சானுங்க... கொஞ்ச நேரத்துல அங்க மணிகண்டனும் வந்தான். எல்லாரும் மாறி, மாறி மிருகங்களைவிட மோசமா நடந்துகிட்டதை அவன் கண்ணாலேயே பார்த்தான்...'' என்றவரால் தொடர்ந்து பேசமுடியவில்லை.
மல்லிகா சார்பில் பேசிய உறவினர் ஒருவர், ''அரை மயக்கத்துல கிடந்தவளை அப்படியே தூக்கி பைக் நடுவுல உட்கார வெச்சுகிட்டு, வண்டியை மதுரை கல்லூரி பக்கம் விட்டிருக்கானுங்க. அப்ப நைட்டு பதினோரு மணிக்கு மேலயிருக்கும். பாலத்துக்கு நடுவுல வண்டியை நிப்பாட்டியிருக்காங்க. பாலத்துக்கு கீழே ரயில் தண்டவாளம் இருக்கு. ரயில் வர்றப்ப தண்டவாளத்துல போட்டிடலாம்ங்கிறதுதான் திட்டம். அந்த நேரம் ரயில் வரலை. உடனே, இவளை மேலேயிருந்து தண்டவாளத்துல போட்டுட்டு போயிட்டானுங்க.கீழே விழுந்ததுல மல்லிகாவோட ரெண்டு காலும் முறிஞ்சு, எலும்பெல்லாம் முறிஞ்சு போச்சு. அந்த நேரத்துலயும் அந்த பக்கமா போன ஒருத்தர் பார்த்துட்டுக் கொடுத்த தகவலால் மல்லிகாவை மீட்டோம். அப்பக்கூட அந்த பொண்ணு கௌரவத்தை விட்டுக் கொடுக்காம எங்ககிட்ட, 'தவறி விழுந்துட்டேன்'னுதான் சொன்னுச்சு. அதுக்கப்புறம், டாக்டர் சோதனையில அந்த பொண்ணை பலர் சேர்ந்து நாசம் பண்ணியிருக்கறது தெரிஞ்சுது. மார்பு முழுக்க பல்லால் கடிச்ச காயங்களும் இருந்துச்சு. இதெல்லாம் பார்த்துட்டு விசாரிச்சப்பதான், அந்தப் பொண்ணு எல்லா விஷயத்தையும் எங்க கிட்ட சொல்லி அழுதுச்சு...'' என்றார்.
இது குறித்து திலகர் திடல் உதவி கமிஷனரான கணேசனிடம் பேசினோம். ''ஆரம்பத்துல அந்தப் பொண்ணு சம்மதிக்காம மறுத்திருக்கு. 'மிரட்ட வும் மணிகண்டன் தன்னை நாசப்படுத்தி பாலத் திலிருந்து தள்ளிவிட்டுட்டான்'னு சொல்லிச்சு. மற்றபடி, உங்களுக்கு கிடைத்த தகவல்படி, மணிகண்டனோட நண்பர்கள் சிலரும் சேர்ந்து நாசப்படுத்தினாங்களான்னு தெரியலை. உடனே, விசாரிக்கிறோம். ஒரு வேளை நீங்க சொல்ற மாதிரி இருந்தா, அவங்க மேலயும் நடவடிக்கை எடுக்கிறேன்...'' என்றார்.
நன்றி: ஜூ.வி.
Thursday, May 10, 2007
பெண்களைப் புரட்டியெடுத்த போலீசார். இன்னொரு கொடியன்குளமான கூமாப்பட்டு.
பஞ்சபட்சி சாஸ்திரத்தின்படி, ஒரு கோழியால் கூமாப்பட்டி கிராமமே அல்லோலகல்லோலப்படப்போகிறது’ என்பதை எந்த ஜோதிடருமே சொல்லவில்லை போலிருக்கிறது. அங்கே ஒரு கோழியால் கோஷ்டிமோதல் உருவாகி, போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்து, தடியடியில் ஒரு பெண்ணும் பலியாகிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எழுபத்து மூன்று பேர் கைதாகி, ஏராளமான பெண்களும், குழந்தைகளும் போலீஸ் கையால் அடி, உதை வாங்கி... இத்தனைக்கும் காரணம் ஒரு கோழி.
போலீஸ் தடியடியில் பலியானதாகக் கூறப்படும் அறுபது வயது லட்சுமியை, கடந்த 4_ம் தேதி நாம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கெனவே சந்தித்துப் பேசியிருந்தோம். நாம் போயிருந்தபோது அவரால் பேசவே முடியவில்லை. ‘‘அவரை போலீஸார் அடித்து லத்தியால் நெஞ்சில் குத்தினாங்க!’’ என்றார் அருகில் இருந்தவர். அன்றிரவே லட்சுமி இறந்து போனார் என்று கேள்விப்பட்டதும் நமக்கே அதிர்ச்சி.
‘‘பொங்கல் வைத்துச் சாமி கும்பிடுவது தொடர்பாக அன்றைக்கு ராத்திரி காலனியில் கூட்டம் போட்டிருந்தோம். அப்போது மடமடவென்று போலீஸார் வந்து எங்களை ரவுண்ட் கட்டினாங்க. ‘அரிவாளோடு போய் தகராறு பண்ணத்தானே கூட்டம் போடுறீங்க!’ என்று மிரட்டி எல்லோரையும் கைது செய்யப் போனாங்க.
பத்தாவது படிக்கும் என் மகன் பகத்சிங்கை போலீஸார் இழுத்துப் போன போது ‘அவன் படிக்கிற பிள்ளை,விட்டிருங்கய்யா’ என்று நான் கெஞ்சினேன். என்னை எட்டி இடுப்பில் உதைத்த போலீஸ் அதிகாரி ‘அடிங்கடா’ என்று உத்தரவிட்டார்.
போலீஸார் கம்பாலும், துப்பாக்கியைத் திருப்பியும் ஆம்பிளை, பொம்பிளை அத்தனை பேரையும் விரட்டி விரட்டி அடிச்சாங்க.
ஆம்பிளைகள் எல்லாம் காட்டுக்குள் ஓடி விட்டதால், போலீஸாரின் கோபம் பெண்கள் மீது திரும்பியது. பெண்களின் இடுப்புக்குக் கீழே யாரிடமும் காட்ட முடியாத இடத்தில் அடித்தனர்.
போலீஸார் அடித்ததில் ஒரு பெண்ணுக்கு மூன்று மாத கர்ப்பம் கலைந்து விட்டது. அதோடு ராத்திரியிலும் வீடு வீடாகப் புகுந்து தொந்தரவு செய்தாங்க. இதெல்லாம் ராத்திரி இரண்டு மணி வரை நடந்திச்சு. உயிருக்குப் பயந்து இந்த ஊரில் இருக்கிறோம். காட்டுக்கு ஓடிப் போன எங்க வீட்டுக்காரங்க எப்போது திரும்பி வருவாங்கன்னு தெரியலை’’ என்றார் செல்வி. அப்போது அங்கு வந்த சித்திரவடிவு என்பவர், தனது தொடையில் ஏற்பட்ட காயத்தைக் காண்பித்தார்.
போலீஸ் வழக்குப் போட்டு விடுமோ என்ற பயத்தில், அடி வாங்கிய பெண்களில் பலர் சிகிச்சைக்கே செல்லவில்லை. பத்துக்கு மேற்பட்டோர் மட்டும் துணிந்து விருதுநகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். பல பெண்களை போலீஸார் மிரட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர விடாமல் செய்தது தனிக்கதை.
ஊருக்கு வெளியே நாம் சந்தித்த செல்வியின் கணவர் சடையன் ‘‘என் பையன் உள்பட ஒன்பது பையன்களை போலீஸார் பிடித்துப் போய் ஜெயிலில் அடைச்சிட்டாங்க’’ என்றார் கலக்கத்துடன்.
சமூகநீதி மாணவர் பேரவையின் மாநில அமைப்பாளரான சி. பாஸ்கரனிடம் பேசினோம்.
‘‘இது கொடியன்குளம் போல ஒரு மோசமான சம்பவம்!’’ என்று ஆரம்பித்தவர், ‘‘இரு தலித் பிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டது உண்மைதான். போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் அது ஓய்ந்து போய் விட்டது. இந்தப் பகுதி மக்கள் அரசு மற்றும் அதிகார வர்க்கத்துக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி வருபவர்கள். ஆகவே, அவர்களைப் பழிதீர்க்க இதை ஒரு நல்ல வாய்ப்பாக போலீஸார் பயன்படுத்தி, இரவில் வீடு புகுந்து தாக்கியிருக்கிறார்கள். மூடப்பட்டிருந்த வீட்டுக் கதவுகளை ஓங்கி உதைத்துத் திறந்து, அந்த இரவில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் அலறியடித்துக் கொண்டு ஓடியதைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள். ஒரு வயதுக் குழந்தை கர்ப்பிணிப்பெண் உள்பட பாரபட்சமில்லாமல் எல்லோருக்குமே அடி, உதை விழுந்திருக்கிறது. காயமடைந்த லட்சுமி இறந்துபோக, அவருடன் இருந்த அவரது மகனை சிறையில் போட்டிருக்கிறார்கள்.
இந்தத் தாக்குதலை நடத்திய போலீஸார் மீது அரசு நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார் பாஸ்கரன் சூடாக.
இந்தப் பிரச்னையில் கைதானவர்களை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜ்குமாரிடம் பேசினோம்.
‘‘கூமாப்பட்டி தகராறு இரவு ஏழு மணிக்கே முடிந்து போன நிலையில், போலீஸார் பத்தரை மணிக்கு மேல் வந்து கிராமத்தைப் பந்தாடியிருக்கிறார்கள்.
கூமாப்பட்டி உள்பட மூன்று தலித் கிராமங்களில் முந்நூறு போலீஸார் புகுந்து பெண்களின் சேலைகளை உருவியும், மர்ம உறுப்புகளில் அடித்தும் காயப்படுத்தியுள்ளனர். ‘அப்பாவிகளான எங்களைக் கைது செய்தால் தீக்குளிப்பேன்’ என்று மிரட்டிய முத்துலட்சுமி என்ற பெண்ணை உடனடியாகக் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்திருக்கிறார்கள். தவறிழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, நடந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும்’’ என்றார் அவர்.
‘‘கூமாப்பட்டியில் நடந்த இருபிரிவினருக்கிடையேயான மோதலின்போது, அம்மச்சியாபுரத்தில் இருந்து சுமார் ஐம்பது பேர் பெட்ரோல் குண்டுகளுடன் வந்ததாகவும், அவர்கள் நடத்திய கல்வீச்சில் மூன்று போலீஸார் காயமடைந்ததாகவும், அதன்பிறகுதான் போலீஸார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி நான்கு ரவுண்ட் சுட்டதாகவும் திருவில்லிபுத்தூர் தாசில்தார் பாலு என்பவர் கூறியதாக நாம் கேள்விப்பட்டோம்.
மாவட்ட எஸ்.பி. செந்தில்குமாரிடம் பேசினோம்.
‘‘நிலைமை இப்போது கட்டுக்குள் இருக்கிறது. ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். லட்சுமி என்ற மூதாட்டி எப்படி இறந்தார் என்பது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுக்குப் பிறகே தெரியவரும்!’’ என்றார் அவர்.
லட்சுமியின் உடலை வாங்க, அவரது உறவினர்கள் மறுத்து வரும் நிலையில், கடந்த 6_ம் தேதி அந்த உடல் இருந்த மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணக்கிடங்குக்குத் திடீரென வந்தார், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி.
‘‘தலித் பிரிவினருக்கிடையே ஏற்பட்ட லேசான தகராறு முடிந்து போன நிலையில், அன்றிரவு போலீஸார் வீடு வீடாகப் புகுந்து சுமார் நூறு பெண்களின் மார்பகம், மர்ம உறுப்பு போன்றவற்றைத் தாக்கியுள்ளனர். லட்சுமியின் மரணத்தை, கொலை வழக்காகப் பதிவு செய்யவேண்டும். இதில் தொடர்புடைய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். சம்பவம் நடந்து இத்தனை நாளாகியும் இன்னும் ஆர்.டி.ஓ. இந்தப் பக்கமே வரவில்லை. போராட்டம் வேண்டாம் என்று நாங்கள் நினைக்கிறோம். அந்தக் கட்டத்துக்கு அரசு எங்களைத் தள்ளிவிடக்கூடாது’’ என்றார் அவர்.
ஒரு கோழியால் ஏற்பட்ட தகராறில் மூன்று குக்கிராமங்கள் இப்படிக் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடப்பது பரிதாபம்தான்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் செல்லும் வழியில் கிருஷ்ணன் கோயில் என்ற ஊரிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் உள்வாங்கி இருக்கிறது கூமாப்பட்டி. தலித் மக்கள் கணிசமாக வாழும் கிராமம் இது. கடந்த 29_ம் தேதி இரவு ரமணி என்ற தலித் ஒருவர், மோட்டார் பைக்கில் அங்கு சென்றிருக்கிறார். அவரது பைக்கில் ஆனந்தம்மாள் என்பவரது கோழி அடிபட்டு இறந்து போனது. ஆனந்தம்மாளும், ரமணியும் தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர் என்று தலித்துகளின் இருவேறு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் இடையே வாய்த்தகராறு வலுக்க, விரைவில் அது இரு தரப்பினருக்கும் இடையில் அடிதடி, சொத்து நாசம் என்ற அளவுக்குப் பரிணாம வளர்ச்சியடைந்தது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்திருக்கிறார்கள். அதன் பிறகும் இருதரப்பினரும் முட்டி மோதிக்கொள்ள முயன்றபோது, போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, கூட்டத்தைக் கலைத்திருக்கிறார்கள்.
இந்தச் சம்பவத்தில் எழுபத்து மூன்று பேரைக் கைது செய்தது போலீஸ். அந்தக் கிராமத்தில் உள்ள தலித் ஆண்கள் எல்லோரும் எஸ்கேப் ஆகிவிட,
அதன்பிறகு ஒருவழியாக அமைதி ஏற்பட்டிருக்குமே என்றால், அதுதான் இல்லை. இந்தச் சம்பவத்துக்குப் பின் பலியான ஒரு பெண், போலீஸ் தடியடியால் பலியானதாகப் புகார்கள் எழும்ப, இரவோடிரவாக போலீஸார் இந்தக் கிராமத்துக்குள் புகுந்து, பெண்களையும், குழந்தைகளையும், போட்டுப் புரட்டி எடுத்ததாக மற்றொரு புகாரும் கிளம்பியுள்ளது.
அதன்பிறகு ஒருவழியாக அமைதி ஏற்பட்டிருக்குமே என்றால், அதுதான் இல்லை. இந்தச் சம்பவத்துக்குப் பின் பலியான ஒரு பெண், போலீஸ் தடியடியால் பலியானதாகப் புகார்கள் எழும்ப, இரவோடிரவாக போலீஸார் இந்தக் கிராமத்துக்குள் புகுந்து, பெண்களையும், குழந்தைகளையும், போட்டுப் புரட்டி எடுத்ததாக மற்றொரு புகாரும் கிளம்பியுள்ளது. போலீஸ் தடியடியில் பலியானதாகக் கூறப்படும் அறுபது வயது லட்சுமியை, கடந்த 4_ம் தேதி நாம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கெனவே சந்தித்துப் பேசியிருந்தோம். நாம் போயிருந்தபோது அவரால் பேசவே முடியவில்லை. ‘‘அவரை போலீஸார் அடித்து லத்தியால் நெஞ்சில் குத்தினாங்க!’’ என்றார் அருகில் இருந்தவர். அன்றிரவே லட்சுமி இறந்து போனார் என்று கேள்விப்பட்டதும் நமக்கே அதிர்ச்சி.
இதையடுத்து கூமாப்பட்டி, அதன் அருகே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அம்மச்சியாபுரம் கிராமங்களுக்கு நாம் சென்றோம். கிராமத்தின் நடுவே போலீஸ் வேன் நின்றது. ஆண்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே தென்பட்டது. லட்சுமியின் மரணத்தால் கிராமத்தில் ஒருவித பதற்றம் தொற்றிக் கொண்டிருந்தது. நம்மிடம் பேசவே கிராமத்தவர்கள் பயந்தார்கள்.
இறந்து போன லட்சுமியின் மகள் பொன்மாடத்தி, மகன் மாடசாமி ஆகியோரிடம் பேசினோம்.
இறந்து போன லட்சுமியின் மகள் பொன்மாடத்தி, மகன் மாடசாமி ஆகியோரிடம் பேசினோம்.
‘‘எங்க தம்பி முத்து மாடனை போலீஸார் அடிச்சு
இழுத்துக்கிட்டுப் போகும்போது, கம்பு ஊன்றி நடக்கும் எங்க அம்மா அதைத் தடுக்கப் பார்த்திருக்காங்க. போலீஸார் எங்க அம்மாவைக் கீழே தள்ளி அடிச்சிருக்காங்க. சம்பவத்தன்று நாங்க ஊரில் இல்லை. எங்க அம்மா இறந்த பிறகுதான், அவங்க ஆஸ்பத்திரியில் இறந்த விஷயமே எங்களுக்குத் தெரிய வந்தது!’’ என்றனர் அவர்கள் வேதனையுடன்.
அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த மகளிர் மன்றத் தலைவி செல்வி, நம்மிடம் பேச முன் வந்தார்.
இழுத்துக்கிட்டுப் போகும்போது, கம்பு ஊன்றி நடக்கும் எங்க அம்மா அதைத் தடுக்கப் பார்த்திருக்காங்க. போலீஸார் எங்க அம்மாவைக் கீழே தள்ளி அடிச்சிருக்காங்க. சம்பவத்தன்று நாங்க ஊரில் இல்லை. எங்க அம்மா இறந்த பிறகுதான், அவங்க ஆஸ்பத்திரியில் இறந்த விஷயமே எங்களுக்குத் தெரிய வந்தது!’’ என்றனர் அவர்கள் வேதனையுடன்.அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த மகளிர் மன்றத் தலைவி செல்வி, நம்மிடம் பேச முன் வந்தார்.
‘‘பொங்கல் வைத்துச் சாமி கும்பிடுவது தொடர்பாக அன்றைக்கு ராத்திரி காலனியில் கூட்டம் போட்டிருந்தோம். அப்போது மடமடவென்று போலீஸார் வந்து எங்களை ரவுண்ட் கட்டினாங்க. ‘அரிவாளோடு போய் தகராறு பண்ணத்தானே கூட்டம் போடுறீங்க!’ என்று மிரட்டி எல்லோரையும் கைது செய்யப் போனாங்க.
பத்தாவது படிக்கும் என் மகன் பகத்சிங்கை போலீஸார் இழுத்துப் போன போது ‘அவன் படிக்கிற பிள்ளை,விட்டிருங்கய்யா’ என்று நான் கெஞ்சினேன். என்னை எட்டி இடுப்பில் உதைத்த போலீஸ் அதிகாரி ‘அடிங்கடா’ என்று உத்தரவிட்டார்.
போலீஸார் கம்பாலும், துப்பாக்கியைத் திருப்பியும் ஆம்பிளை, பொம்பிளை அத்தனை பேரையும் விரட்டி விரட்டி அடிச்சாங்க.
ஆம்பிளைகள் எல்லாம் காட்டுக்குள் ஓடி விட்டதால், போலீஸாரின் கோபம் பெண்கள் மீது திரும்பியது. பெண்களின் இடுப்புக்குக் கீழே யாரிடமும் காட்ட முடியாத இடத்தில் அடித்தனர்.
போலீஸார் அடித்ததில் ஒரு பெண்ணுக்கு மூன்று மாத கர்ப்பம் கலைந்து விட்டது. அதோடு ராத்திரியிலும் வீடு வீடாகப் புகுந்து தொந்தரவு செய்தாங்க. இதெல்லாம் ராத்திரி இரண்டு மணி வரை நடந்திச்சு. உயிருக்குப் பயந்து இந்த ஊரில் இருக்கிறோம். காட்டுக்கு ஓடிப் போன எங்க வீட்டுக்காரங்க எப்போது திரும்பி வருவாங்கன்னு தெரியலை’’ என்றார் செல்வி. அப்போது அங்கு வந்த சித்திரவடிவு என்பவர், தனது தொடையில் ஏற்பட்ட காயத்தைக் காண்பித்தார்.
போலீஸ் வழக்குப் போட்டு விடுமோ என்ற பயத்தில், அடி வாங்கிய பெண்களில் பலர் சிகிச்சைக்கே செல்லவில்லை. பத்துக்கு மேற்பட்டோர் மட்டும் துணிந்து விருதுநகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். பல பெண்களை போலீஸார் மிரட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர விடாமல் செய்தது தனிக்கதை.
ஊருக்கு வெளியே நாம் சந்தித்த செல்வியின் கணவர் சடையன் ‘‘என் பையன் உள்பட ஒன்பது பையன்களை போலீஸார் பிடித்துப் போய் ஜெயிலில் அடைச்சிட்டாங்க’’ என்றார் கலக்கத்துடன்.
சமூகநீதி மாணவர் பேரவையின் மாநில அமைப்பாளரான சி. பாஸ்கரனிடம் பேசினோம்.
‘‘இது கொடியன்குளம் போல ஒரு மோசமான சம்பவம்!’’ என்று ஆரம்பித்தவர், ‘‘இரு தலித் பிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டது உண்மைதான். போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் அது ஓய்ந்து போய் விட்டது. இந்தப் பகுதி மக்கள் அரசு மற்றும் அதிகார வர்க்கத்துக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி வருபவர்கள். ஆகவே, அவர்களைப் பழிதீர்க்க இதை ஒரு நல்ல வாய்ப்பாக போலீஸார் பயன்படுத்தி, இரவில் வீடு புகுந்து தாக்கியிருக்கிறார்கள். மூடப்பட்டிருந்த வீட்டுக் கதவுகளை ஓங்கி உதைத்துத் திறந்து, அந்த இரவில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் அலறியடித்துக் கொண்டு ஓடியதைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள். ஒரு வயதுக் குழந்தை கர்ப்பிணிப்பெண் உள்பட பாரபட்சமில்லாமல் எல்லோருக்குமே அடி, உதை விழுந்திருக்கிறது. காயமடைந்த லட்சுமி இறந்துபோக, அவருடன் இருந்த அவரது மகனை சிறையில் போட்டிருக்கிறார்கள்.
இந்தத் தாக்குதலை நடத்திய போலீஸார் மீது அரசு நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார் பாஸ்கரன் சூடாக.
இந்தப் பிரச்னையில் கைதானவர்களை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜ்குமாரிடம் பேசினோம்.
‘‘கூமாப்பட்டி தகராறு இரவு ஏழு மணிக்கே முடிந்து போன நிலையில், போலீஸார் பத்தரை மணிக்கு மேல் வந்து கிராமத்தைப் பந்தாடியிருக்கிறார்கள்.
கூமாப்பட்டி உள்பட மூன்று தலித் கிராமங்களில் முந்நூறு போலீஸார் புகுந்து பெண்களின் சேலைகளை உருவியும், மர்ம உறுப்புகளில் அடித்தும் காயப்படுத்தியுள்ளனர். ‘அப்பாவிகளான எங்களைக் கைது செய்தால் தீக்குளிப்பேன்’ என்று மிரட்டிய முத்துலட்சுமி என்ற பெண்ணை உடனடியாகக் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்திருக்கிறார்கள். தவறிழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, நடந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும்’’ என்றார் அவர்.
‘‘கூமாப்பட்டியில் நடந்த இருபிரிவினருக்கிடையேயான மோதலின்போது, அம்மச்சியாபுரத்தில் இருந்து சுமார் ஐம்பது பேர் பெட்ரோல் குண்டுகளுடன் வந்ததாகவும், அவர்கள் நடத்திய கல்வீச்சில் மூன்று போலீஸார் காயமடைந்ததாகவும், அதன்பிறகுதான் போலீஸார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி நான்கு ரவுண்ட் சுட்டதாகவும் திருவில்லிபுத்தூர் தாசில்தார் பாலு என்பவர் கூறியதாக நாம் கேள்விப்பட்டோம்.
மாவட்ட எஸ்.பி. செந்தில்குமாரிடம் பேசினோம்.
‘‘நிலைமை இப்போது கட்டுக்குள் இருக்கிறது. ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். லட்சுமி என்ற மூதாட்டி எப்படி இறந்தார் என்பது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுக்குப் பிறகே தெரியவரும்!’’ என்றார் அவர்.
லட்சுமியின் உடலை வாங்க, அவரது உறவினர்கள் மறுத்து வரும் நிலையில், கடந்த 6_ம் தேதி அந்த உடல் இருந்த மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணக்கிடங்குக்குத் திடீரென வந்தார், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி.
‘‘தலித் பிரிவினருக்கிடையே ஏற்பட்ட லேசான தகராறு முடிந்து போன நிலையில், அன்றிரவு போலீஸார் வீடு வீடாகப் புகுந்து சுமார் நூறு பெண்களின் மார்பகம், மர்ம உறுப்பு போன்றவற்றைத் தாக்கியுள்ளனர். லட்சுமியின் மரணத்தை, கொலை வழக்காகப் பதிவு செய்யவேண்டும். இதில் தொடர்புடைய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். சம்பவம் நடந்து இத்தனை நாளாகியும் இன்னும் ஆர்.டி.ஓ. இந்தப் பக்கமே வரவில்லை. போராட்டம் வேண்டாம் என்று நாங்கள் நினைக்கிறோம். அந்தக் கட்டத்துக்கு அரசு எங்களைத் தள்ளிவிடக்கூடாது’’ என்றார் அவர்.
ஒரு கோழியால் ஏற்பட்ட தகராறில் மூன்று குக்கிராமங்கள் இப்படிக் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடப்பது பரிதாபம்தான்.
நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்.
Friday, May 4, 2007
குஜராத் எண்கவுண்டர்; அப்பாவி கெளசர் பீவி கற்பழித்துக் கொலை.
முஸ்லிம்களை விரட்டி விரட்டி எண்கவுண்டர்
அப்பாவி கெளசர் பீவி கற்பழித்துக் கொலை.
சிபிஐயிடம் போகிறது போலி எண்கவுன்டர் விவகாரம்:சிக்கலில் நரேந்திர மோடி
அப்பாவி கெளசர் பீவி கற்பழித்துக் கொலை.
சிபிஐயிடம் போகிறது போலி எண்கவுன்டர் விவகாரம்:சிக்கலில் நரேந்திர மோடி
மே 03, 2007 டெல்லி: குஜராத் போலி எண்கவுண்டர்கள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. மதக் கலவரத்தை தூண்டிவிட்டு அதில் அரசியல் குளிர் காயும் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் பாஜக அரசு இப்போது பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது. தீவிரவாதிகள் என்ற பெயரில் முஸ்லீம்களை விரட்டி விரட்டி எண்கவுண்டர் செய்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த வழக்கில் வன்சாரா உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் இந்த அதிகாரிகளைக் காக்க முயன்றார் மோடி. ஆனால், சிபிஐ விசாரணை வரும் என்ற நிலை உருவானதால், தனது மாநில சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணையின் அதிகாரியாக இருந்த சிஐடி பிரிவு டிஐஜியான ரஜனீஷ் ராய் அனைத்து விவரங்களையும் புட்டுப் புட்டு வைத்துவிட்டார். சொராபுதீன் ஷேக் என்பவரையும், அவரது மனைவி கெளசர் பீபியையும் பஸ்சில் இருந்து கடத்திச் சென்ற வன்சாரா தலைமையிலான போலீஸ் படை ஷேக்கை
சுட்டுக் கொன்றது. இந்தக் கொலையை நேரில் பார்த்து விட்ட துள்சிராம் பிரஜாபதியும் சுட்டுக் கொன்றனர். அதைவிடக் கொடுமையாக ஷேக்கின் மனைவி கெளசர் பீபியை இரண்டு பண்ணை வீடுகளில் (இதில் ஒரு பண்ணை வீடு பாஜக எம்எல்ஏவுக்கு சொந்தமானது)வைத்து கற்பழித்து, கொலை செய்து உடலை எரித்து சாம்பலை தோட்டத்தில் விசிறியடித்துவிட்டனர்.
சுட்டுக் கொன்றது. இந்தக் கொலையை நேரில் பார்த்து விட்ட துள்சிராம் பிரஜாபதியும் சுட்டுக் கொன்றனர். அதைவிடக் கொடுமையாக ஷேக்கின் மனைவி கெளசர் பீபியை இரண்டு பண்ணை வீடுகளில் (இதில் ஒரு பண்ணை வீடு பாஜக எம்எல்ஏவுக்கு சொந்தமானது)வைத்து கற்பழித்து, கொலை செய்து உடலை எரித்து சாம்பலை தோட்டத்தில் விசிறியடித்துவிட்டனர். இந்த விவகாரங்களை வெளியில் கொண்டு வந்த டிஐஜி ரஜனீஷ் ராயை மாற்றிவிட்டார் நரேந்திர மோடி. இதனால் இந்த வழக்கில் இனிமேல் மேற்கொண்டு உண்மைகள் வெளியில் வர வாய்ப்பில்லை என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி பாலசுப்பிரமணியம் ஆகியோர் இரு வாரத்துக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு குஜராத் போலீசாருக்கு உத்தரவிட்டனர். இந்த சொராபுதீன் ஷேக் கிரனைட் கல் ஏற்றுமதியாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அவரைக் கொல்ல வன்சாரா அண்ட் கோவுக்கு கிரனைட் ஏற்றுமதி கும்பல் தான் பணம் தந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அவர்களிடம் பணம் வாங்கிய வன்சாரா, சொராபுதீனை பயங்கர தீவிரவாதியாக சித்தரித்து காலி செய்துள்ளார். இதில் மன்னிக்க முடியாத விஷயம் அவரது மனைவியான அப்பாவி கெளசர் பீபியையும் கற்பழித்து கொலை செய்தது தான்.
Subscribe to:
Posts (Atom)
''விவசாயிகளுக்கு விதைப்புல தொடங்கி அறுவடை வரைக்கும் காசு நீட்டுறது கந்து வட்டிப் பேர்வழிங்க தான். இங்கே 'மைக்ரோ'ல ஆரம்பிச்சு 'மேக்ரோ' வரைக்கும் வட்டி பிசினஸ் சக்கைப்போடு போடுது. நாள் வட்டி, வார வட்டின்னு பல டைப். இதுல ஒரு தவணை கட்டத் தவறினாலே, வட்டி குட்டி போடும்.
ரூவாய்க்கும் சேர்த்து வட்டி போட்டுருவாங்க. 1,000 ரூவா கடன் வாங்கியிருந்தா... மாசம் 3,000 ரூவா வட்டி மட்டுமே கட்டியாகணும். கடனைத் திருப்பிக் கொடுக்கலைன்னா, கடன் கொடுத்த ஆளு பொழுது சாய்ஞ்சா கடைக்காரரோட
பணம் கொடுத்துட்டு கட்ட முடியாதவங்க வீட்டுக்கு போய் உட்கார்ந்துக்குவாங்க.