முஸ்லிம்களை விரட்டி விரட்டி எண்கவுண்டர்
அப்பாவி கெளசர் பீவி கற்பழித்துக் கொலை.
சிபிஐயிடம் போகிறது போலி எண்கவுன்டர் விவகாரம்:சிக்கலில் நரேந்திர மோடி
அப்பாவி கெளசர் பீவி கற்பழித்துக் கொலை.
சிபிஐயிடம் போகிறது போலி எண்கவுன்டர் விவகாரம்:சிக்கலில் நரேந்திர மோடி

இந்த விசாரணையின் அதிகாரியாக இருந்த சிஐடி பிரிவு டிஐஜியான ரஜனீஷ் ராய் அனைத்து விவரங்களையும் புட்டுப் புட்டு வைத்துவிட்டார். சொராபுதீன் ஷேக் என்பவரையும், அவரது மனைவி கெளசர் பீபியையும் பஸ்சில் இருந்து கடத்திச் சென்ற வன்சாரா தலைமையிலான போலீஸ் படை ஷேக்கை
சுட்டுக் கொன்றது. இந்தக் கொலையை நேரில் பார்த்து விட்ட துள்சிராம் பிரஜாபதியும் சுட்டுக் கொன்றனர். அதைவிடக் கொடுமையாக ஷேக்கின் மனைவி கெளசர் பீபியை இரண்டு பண்ணை வீடுகளில் (இதில் ஒரு பண்ணை வீடு பாஜக எம்எல்ஏவுக்கு சொந்தமானது)வைத்து கற்பழித்து, கொலை செய்து உடலை எரித்து சாம்பலை தோட்டத்தில் விசிறியடித்துவிட்டனர்.

இந்த விவகாரங்களை வெளியில் கொண்டு வந்த டிஐஜி ரஜனீஷ் ராயை மாற்றிவிட்டார் நரேந்திர மோடி. இதனால் இந்த வழக்கில் இனிமேல் மேற்கொண்டு உண்மைகள் வெளியில் வர வாய்ப்பில்லை என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி பாலசுப்பிரமணியம் ஆகியோர் இரு வாரத்துக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு குஜராத் போலீசாருக்கு உத்தரவிட்டனர். இந்த சொராபுதீன் ஷேக் கிரனைட் கல் ஏற்றுமதியாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அவரைக் கொல்ல வன்சாரா அண்ட் கோவுக்கு கிரனைட் ஏற்றுமதி கும்பல் தான் பணம் தந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அவர்களிடம் பணம் வாங்கிய வன்சாரா, சொராபுதீனை பயங்கர தீவிரவாதியாக சித்தரித்து காலி செய்துள்ளார். இதில் மன்னிக்க முடியாத விஷயம் அவரது மனைவியான அப்பாவி கெளசர் பீபியையும் கற்பழித்து கொலை செய்தது தான்.
No comments:
Post a Comment