.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, March 24, 2010

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டக் காட்சிகள் -அதிர்ச்சி வீடியோ!

பக்தியின் பெயரால் மக்களை மாக்களாக மாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரமப் போலிச்சாமியார்களின் வரிசையில், கல்கி பகவான் என்ற பெயரில் விஜயகுமார் என்ற கல்கி விஜயகுமாரும் அவரின் மனைவியும் இணைகிறார்கள். அவர்கள் நடத்தும் ஆசிரமத்தில் ஆண்களும் பெண்களும் போதையில் பைத்தியங்களைப் போன்று நடமாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Download:
FLVMP43GP
Download:
FLVMP43GP

பாகம் - 1

சமீபத்தில் சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் போலிச் சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகளை வெளியிட்டுப் போலிச் சாமியார்களின் லீலைகளை வெளிச்சமிட்ட சன் தொலைக்காட்சியே இந்த ஒரு மணி நேரம் அடங்கிய வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Download:
FLVMP43GP
Download:
FLVMP43GP

பாகம் - 2

"நிஜம்" என்ற தன்னுடைய நிகழ்ச்சி ஒன்றில் கல்கி ஆசிரமத்தினுள் பக்தியின் பெயரால் நடக்கும் போதையாட்டத்தைத் தத்ரூபமாக சன் தொலைக்காட்சி படம்பிடித்து வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஆண்களும் பெண்களும் போதை பொருள் உட்கொண்டவர்களைப் போன்று சிரித்தும் அழுதும் தரையில் கிடந்து அழுது புரண்டும் நிர்வாணமாகவும் போதையாட்டம் போடும் காட்சிகள், மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

Download:
FLVMP43GP
Download:
FLVMP43GP

பாகம் - 3

பக்தி, கடவுள் நம்பிக்கை ஆகிய சாதாரண மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை முதலெடுக்கும் இத்தகைய போலிச் சாமியார்களின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

1 comment:

காஞ்சி பிலிம்ஸ் said...

இந்த வீடீயோவில் என்ன பொல்லாத அதிசயத்தைப் பார்த்தவிட்டீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை ?

இதற்கு முன் நீங்கள் ஜெயலலிதா அவரது மந்திரிகளும் மேடைகளில் இதை விட பல மடங்கு அளவிலான பயித்தியக்காரத்தனங்களை நடத்தியதை பார்த்ததில்லையா ?

அட அது போகட்டும் பெரியார் புகழ் பாடி அரசியலுக்கு வந்த கருணாநீதி, தன் மனைவி சாயிபாபா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியபோது கைகட்டி வாய்பொத்தி அடக்கமாக ரசித்தாரே, அதை விடவா இந்த வீடீயோவில் உள்ள பாமர மக்கள் செய்வது கேலிக்குறியாதாக ஆகிவிட்டது.