.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, July 26, 2009

காதல் என்ற பெயரில் நாசப்படுத்திய காதலன்.

'காதல்... காதல்... காதல். காதல் போயின் சாதல்... சாதல்... சாதல்' என்றான் பாரதி. கண்களால் காதல் செய்த காலம் போய், இன்று சதை களால் மட்டுமே காதல் செய்யுமளவுக்கு படுகேவல மான பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது! உண் மையாகக் காதல் செய்த ஒரு பெண், நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டாள் என்பதற்கு உதாரணம் இந்தக் கட்டுரை. இது வெறும் கட்டுரை மட்டுமல்ல... இளம்பெண்களுக்கு ஒரு எச்சரிக்கையும் கூட!

நன்றி: ஜூ.வி

மதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கல்லூரிப் படிப்பை முடித்த இவர், மதுரையிலுள்ள மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் தற்காலிக ஊழியர். தினமும் ஊரிலிருந்து மினி பஸ்ஸில் வரும்போது, அந்த பஸ் டிரைவர் மணிகண்டன் என்பவனிடம் காதல் ஏற்பட்டுள்ளது. ஒரு ஆண்டு கழித்துதான் மணிகண்டனுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை களும் இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிந்து அதிர்ச்சி யடைந்தார் மல்லிகா.

ஆனால், அதற்குள் அவனிடம் அத்தனையும் இழந்திருக்கிறார் மல்லிகா.


இருந்தாலும், காதலித் ததற்காகத் தன்னையும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியிருக்கிறார். அதன் பின் நடந்ததை அழுது வீங்கிய கண்களுடன் திராணியில்லாத நிலையில் நம்மிடம் மருத்துவமனையில் பேசினார் அவர்.

''மணிகண்டன்தான் ஆரம் பத்துல என்னை காதலிக்கிறதா சொல்லி வலிய வலிய வந்தாரு. நான் மறுப்பு சொன்னாலும் என்னையறியாமல் என் மனசு அவரை காதலிக்க ஆரம்பிச்சுடுச்சு. நான் கே.கே.நகர் பக்கத்துல ஒரு ஆபீஸ்ல வேலை பாக்குறேன். வேலை முடிஞ்சதும் தினமும் சாயங்காலம் ஆறரை மணிக்கு அங்கிருக்கிற பூங்காவுல சந்திப்போம். அவர் ரொம்பப் பாசமா பழகுனதால், பல முறை அத்துமீறினார். 'கட்டிக்கப் போறவருதானே'னு நானும் அவரை எல்லாத்துக்கும் அனுமதிச்சிட்டேன். கல்யாணமானவர்னு உண்மை தெரிஞ்ச பின்னாடியும் அவரைப் பிரிய மனசில்லாம கட்டிக்கிட்டா அவரைத்தான் கட்டிக்குவேன்னு உறுதியா இருந்தேன்... ஆனா, படுபாவி இப்புடி என்னைச் சீரழிப்பான்னு கனவுலகூட நினைச்சுப் பார்க்கலையே...'' என்ற மல்லிகா, மேற்கொண்டு பேச முடியாமல் மயங்கி சரிந்தார்.


நர்ஸ் வந்து சோதிச்சு... மருந்தை கொடுக்க, அதை விழுங்கி சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்ட மல்லிகா தொடர்ந்தார். ''அவன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு மறுத்தாலும், எப்படியும் மனசை கரைச்சிடலாம்னு இருந்தேன். அன்னிக்கும் அப்படித்தான் கே.கே.நகர் பூங்காவுக்கு வான்னு கூப்பிட்டான். சாயங்காலம் ஏழு மணிக்கு போனேன். வழக்கமா சந்திக்குற மறைவான இடத்துல உட்கார்ந்துக் கிட்டோம். அவன் என்னை தொட்டான். ஆனா, இந்த முறை நான், 'என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னாடிதான் இனி தொடணும். அதை மீறி தொட்டா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது'ன்னு கடுமையா பேசுனேன். அப்ப அவன், 'நாளைக்கே வீட்டை விட்டு வெளியே வா. நாளை மறுநாள் கோயில்ல வச்சு கல்யாணம் பண்ணிக் கிறேன்'னு என் தலையிலடிச்சு சத்தியம் செஞ்சான். ரொம்ப சந்தோஷமடைஞ்சு, அன்னிக்கும் அவன் எதிர்பார்த்தபடியெல்லாம் நடந்துகிட்டேன்.

அடுத்த நாள் சாயங்காலம் ஆறரை மணிக்கு கொஞ்சம் டிரஸை மட்டும் எடுத்துக்கிட்டு போய், அதே பூங்காவுல அவனை சந்திச்சேன். நாளைக்கு நமக்கு கல்யாணம்னு சொல்லியே ரொம்ப நேரம் அவன் அனுபவிச்சான். திடீர்னு, 'கல்யாணத்துக்கு பசங்க ட்ரீட் கேட்டிருக்காங்க. அவங்களை வரச் சொல்லியிருக்கேன்'னு சொன்னான். அரைகுறை டிரசுல எனக்கு தூக்கிவாரிப் போட்டுருச்சு. கண்டபடி அவனை திட்டிட்டு, டிரஸை எடுத்துப் போட்டுக்கிட்டேன். 'உன் ஃபிரண்ட்ஸ் முன்னாடி எல்லாம் இந்த இடத்துல, என்னால் நிக்க முடியாது. நீ ட்ரீட்டை இன்னொரு நாளு கொடுத்துக்கோ. வா போகலாம்'னு நான் சொன்னபோது, மூணு ஆளுங்க வந்தாங்க.

நான் அமைதியா பெஞ்சு மேல உட்கார்ந்திருந்தேன். அப்ப மணிகண்டன் என்கிட்ட, 'நீ இங்கயே இரு. பக்கத்துல கடைக்குப் போய் பசங் களுக்கும் உனக்கும் சாப்பிட வாங்கிட்டு வர்றேன்'னு சொன்னான். நான் சொல்லச் சொல்ல கேட்காம வேகமா போயிட்டான். நான் இருட்டுல தனியா உட்கார்ந்திருக்கும்போதே மூணு பேர்ல ஒருத்தன் என்னை நெருங்கி வந்து அத்துமீறினான். அதிர்ச்சியடைஞ்ச நான், 'அவரு வந்தா உங்களை கொன்னுப்புடுவார்... கையை எடுடா...'ன்னேன். அதுக்கு இன்னொருத்தன், 'உன்னை அனுபவிக்க தலைக்கு ஐந்நூறு வாங்கியிருக்கான். அயிட்டம்தானேடி நீ... சத்தம் போடாம படு...'னு சொன்னப்பகூட, 'மணிகண்டன் அப்பிடி எல்லாம் செஞ்சிருக்க மாட்டான்'னு நம்பினேன். அதுக்குள்ள மூணு பேர்ல ஒருத்தன் என் வாயை அடைக்க... இன்னொருத்தன் டிரஸ்ஸை உருவி தொடையை அழுத்தி பிடிச்சான். இப்படி மாறி மாறி என்னை சீரழிச்சானுங்க... கொஞ்ச நேரத்துல அங்க மணிகண்டனும் வந்தான். எல்லாரும் மாறி, மாறி மிருகங்களைவிட மோசமா நடந்துகிட்டதை அவன் கண்ணாலேயே பார்த்தான்...'' என்றவரால் தொடர்ந்து பேசமுடியவில்லை.

மல்லிகா சார்பில் பேசிய உறவினர் ஒருவர், ''அரை மயக்கத்துல கிடந்தவளை அப்படியே தூக்கி பைக் நடுவுல உட்கார வெச்சுகிட்டு, வண்டியை மதுரை கல்லூரி பக்கம் விட்டிருக்கானுங்க. அப்ப நைட்டு பதினோரு மணிக்கு மேலயிருக்கும். பாலத்துக்கு நடுவுல வண்டியை நிப்பாட்டியிருக்காங்க. பாலத்துக்கு கீழே ரயில் தண்டவாளம் இருக்கு. ரயில் வர்றப்ப தண்டவாளத்துல போட்டிடலாம்ங்கிறதுதான் திட்டம். அந்த நேரம் ரயில் வரலை. உடனே, இவளை மேலேயிருந்து தண்டவாளத்துல போட்டுட்டு போயிட்டானுங்க.

கீழே விழுந்ததுல மல்லிகாவோட ரெண்டு காலும் முறிஞ்சு, எலும்பெல்லாம் முறிஞ்சு போச்சு. அந்த நேரத்துலயும் அந்த பக்கமா போன ஒருத்தர் பார்த்துட்டுக் கொடுத்த தகவலால் மல்லிகாவை மீட்டோம். அப்பக்கூட அந்த பொண்ணு கௌரவத்தை விட்டுக் கொடுக்காம எங்ககிட்ட, 'தவறி விழுந்துட்டேன்'னுதான் சொன்னுச்சு. அதுக்கப்புறம், டாக்டர் சோதனையில அந்த பொண்ணை பலர் சேர்ந்து நாசம் பண்ணியிருக்கறது தெரிஞ்சுது. மார்பு முழுக்க பல்லால் கடிச்ச காயங்களும் இருந்துச்சு. இதெல்லாம் பார்த்துட்டு விசாரிச்சப்பதான், அந்தப் பொண்ணு எல்லா விஷயத்தையும் எங்க கிட்ட சொல்லி அழுதுச்சு...'' என்றார்.

இது குறித்து திலகர் திடல் உதவி கமிஷனரான கணேசனிடம் பேசினோம். ''ஆரம்பத்துல அந்தப் பொண்ணு சம்மதிக்காம மறுத்திருக்கு. 'மிரட்ட வும் மணிகண்டன் தன்னை நாசப்படுத்தி பாலத் திலிருந்து தள்ளிவிட்டுட்டான்'னு சொல்லிச்சு. மற்றபடி, உங்களுக்கு கிடைத்த தகவல்படி, மணிகண்டனோட நண்பர்கள் சிலரும் சேர்ந்து நாசப்படுத்தினாங்களான்னு தெரியலை. உடனே, விசாரிக்கிறோம். ஒரு வேளை நீங்க சொல்ற மாதிரி இருந்தா, அவங்க மேலயும் நடவடிக்கை எடுக்கிறேன்...'' என்றார்.
நன்றி: ஜூ.வி.

6 comments:

கானா பிரபா said...

:( கொடுமை

M. Hussainghani. said...

இளம்பெண்கள் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது காலத்தின் கட்டயாம். இதில் (கவனத்தில்) பெற்றோர்களின் பங்கு அதிகம் உள்ளது.

துபாய் ராஜா said...

பயங்கரம்.

கட்டுபாடில்லாத கண்மூடித்தனமான காதலின் விளைவு.

நிகழ்காலத்தில்... said...

இதற்குப் பெயர் காதல் அல்ல

காமம்தான்.,

நம் சமுதாய அமைப்பில் பெண்ணுக்கே
இழப்பு

இதை பெண்கள் புரிந்து கொண்டால்
காதல் காமம் இன்றி அடக்கி வாசிக்கப்பட்டு உண்மையாக இருக்கும்

kindly remove word verification

M. Hussainghani. said...

\\kindly remove word verification
//

சகோதரர் அவர்களின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு word verification நீக்கப்பட்டுள்ளது.

- நன்றி

Unknown said...

கொடுமை...