.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Saturday, July 18, 2009

வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடக்கும் என்பதற்கு அடுத்த ஆதாரம்


நாக்பூர்: "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மோசடி செய்ய முடியும். அது ஒன்றும் மோசடிகள் செய்ய முடியாத அளவுக்கு பாதுகாப்பானது அல்ல' என்று, ஐதரபாத்தை சேர்ந்த தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்குப் பின், மின்னணு வாக்குப்ப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அதன் நம்பகத்தன்மை பற்றியும் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், நெட் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்த ஹரி கே.பிரசாத் என்பவரும், "எலக்ஷன் குரூப்' என்ற அமைப்பைச் சேர்ந்த வி.வி.ராவ் என்பவரும் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: முன்பே புரோகிராம் செய்யப்பட்ட "சிப்'களைப் பொருத்துவதன் மூலம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடிகள் செய்ய முடியும். இந்த வகை "சிப்'கள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த "சிப்'களை ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தி விட்டால், பதிவாகும் ஓட்டுக்களில் 60 சதவீத ஓட்டுக்கள் ஒரு குறிப்பிட்ட கட்சி வேட்பாளருக்கு விழும்படி செய்ய முடியும். அதாவது பத்து ஓட்டுக்கள் பதிவானால், அதில் ஆறு ஓட்டுக்கள் குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு கிடைக்கும்படி செய்யலாம். இதுபோன்ற பிரச்னை இல்லாத, பாதுகாப்பான வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்க வேண்டும் எனில், இந்த இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தவறுகள் நிகழ்ந்தால் கண்டுபிடிக்கும் கருவியை உருவாக்க வேண்டும். ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்தவுடன், எவ்வளவு பணம் எடுக்கப்பட்டது எவ்வளவு பணம் மீதமுள்ளது என்பதை காட்ட ரசீது வருவது போல, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் தானாக ரசீது வரும் முறையை உருவாக்க வேண்டும் என்றனர்.

No comments: