.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Saturday, July 18, 2009

வங்கிக் கணக்கு விவரம் : ஆன்-லைனில் கேட்டால் உஷார்


மும்பை : ஆன்-லைனில், உங்கள் வங்கிக்கணக்கு தொடர்பான எந்த ஒரு விவரமும், வங்கியே "இ - மெயிலில்' கேட்டாலும், வெப்சைட் மூலம் அறிவித்தாலும் உஷார்! உறுதி செய்து கொள்ளாமல் விவரம் தெரிவிக்க வேண்டாம். பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகளின் கூட்டமைப்பாக உள்ளது இந்திய வங்கிகள் சங்கம். இந்த சங்கத்துக்கு "இந்திய வங்கிகள் சங்கம்' என்ற பெயரில் வெப்சைட் உள்ளது. இதன் முகவரி http://www.iba.org.in/homepage.asp சமீபத்தில் இந்த வெப்சைட்டை போலவே போலி வெப்சைட்டை யாரோ உருவாக்கியுள்ளனர். இந்திய வங்கிகள் சங்க வெப்சைட் போலவே வடிவமைப்பு, விவரங்கள் அளித்திருந்தனர் இந்த போலி வெப்சைட்டில். மேலும், வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்புகளை வெளியிட்டனர் இந்த ஆன்-லைன் மோசடி ஆசாமிகள். "உங்கள் வங்கிக்கணக்கு விவரங்களை அனுப்பி வைக்கவும். சலுகைகள் காத்திருக்கின்றன' என்றெல்லாம் அதில் அறிவித்தனர். வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கு "யூசர் நேம்' மற்றும் பாஸ்வேர்டு போன்ற விவரங்களையும் கேட்டுள்ளனர். எப்படியோ, அதிகாரப்பூர்வ இந்திய வங்கிகள் சங்க வெப்சைட்டுக்கு இணைப்பை இந்த மோசடிக்கும்பல் உருவாக்கி இருந்ததால், வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. எனினும், அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்து, உடனடியாக இந்த மோசடி கண்டுபிடிக் கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. போலி வெப்சைட்டை செயல்படுத்தியது அமெரிக்காவில் உள்ள சிலர் தான். அவர்கள் திட்டமிட்டு இந்த மோசடியை செய்துள்ளனர் என்பது மட்டும் தெரிந்துள்ளது. இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீஸ் குழு விசாரித்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து தான் இந்த மோசடி செய்யப் பட்டுள்ளது என்பதால், அங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்பு கொள்ளப் பட்டுள்ளனர். எனினும், இதுவரை அந்த மர்ம ஆசாமிகள் பற்றிய விவரம் தெரியவில்லை.

No comments: