.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, July 10, 2009

விடைத்தாள்கள் திருத்தியதில் ஆசிரியர்களின் அலச்சியப் போக்கு! கைது செய்து தண்டிக்குமா தமிழக அரசு?

விடைத்தாள்கள் திருத்தியதில் ஆசிரியர்களின் அலச்சியப் போக்கு! தவறுசெய்த ஆசிரியர்களை கைது செய்து தண்டிக்குமா தமிழக அரசு?

பிளஸ்2 விடைத்தாள் திருத்தியதில் ஆசிரியர்களின் மெத்தனப்போக்கு! விடைத்தாள் திருத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகள் ஒரு பாடத்தில் 22 மதிப்பெண் விடுபட்டதால் அதிர்ச்சி.

109 மதிப்பெண்கள் விடுபட்டுள்ள அதிர்ச்சித் தகவல்

பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு பிறகு, மறு மதிப்பீடு செய்த மாணவர்களுக்கு திருத்திய மதிப்பெண் பட்டியலை அரசு தேர்வுகள் துறை வழங்கி வருகிறது. அதன்படி 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களில், மாணவர்கள் சிலர் குறைந்தபட்சமாக 10 மதிப்பெண்கள் அதிகமாக பெற்றுள்ளனர். அதிகபட்சமாக ஒரு மாணவருக்கு 109 மதிப்பெண்கள் விடுபட்டுள்ளது தெரிய வந்தது. வணிகவியல் பாடத்தில் அவர் வெறும் 60 மதிப்பெண்கள் பெற்றதாக முதலில் மதிப்பெண் வழங்கப்பட்டது. மறுமதிப்பீட்டுக்கு பிறகு அவர் 169 மதிப்பெண்கள் பெற்றார்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்திய ஆசிரியரின் அலட்சியத்தால், சென்னை மாணவருக்கு 22 மதிப்பெண்கள் விடுபட்டுள்ளன. இதனால் கல்லூரியில் அந்த மாணவருக்கு சீட் கிடைக்கவில்லை.

சென்னை, கீழ்ப்பாக்கம் ரெசீனா மெட்ரிக். பள்ளியில் படித்த மாணவர் வி.சி.எஸ்.தீபக். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றார். மொழிப் பாடம் 164, ஆங்கிலம் 151, பொருளியல் 143, வணிகவியல் 142, கணக்கு பதிவியல் 129, வணிக கணிதம் 122 என மொத்தம் 851 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். எனினும், கணக்குப் பதிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு 129 கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து விடைத்தாள் நகல் கேட்டு பெற்றார். கணக்கு பதிவியல் விடைத்தாளின் 3 பக்கங்கள் திருத்தவே இல்லை என்பதைப் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் மறு மதிப்பீட்டுக்கு தீபக் விண்ணப்பித்தார். மறுமதிப்பீடு செய்யப்பட்ட பிறகு விடுபட்ட பகுதிக்கு 22 மதிப்பெண்கள் கிடைத்தன. அதன்படி மொத்த மதிப்பெண் 873 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில், சென்னை கல்லூரியில் பிகாம், பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் படிப்புகளில் சேர தீபக் விண்ணப்பித்து இருந்தார். 75 சதவீதம் மதிப்பெண் இல்லை என்று கூறிய கல்லூரி நிர்வாகம், தீபக் கேட்ட 2 படிப்புக்கும் இடம் கொடுக்காமல் அவரது விண்ணப்பத்தை நிறுத்தி வைத்தது. இதனால் தான் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காமல் தீபக் வேதனை அடைந்தார். மறு மதிப்பீட்டுக்கு பிறகு கிடைத்த 22 மதிப்பெண்களை காட்டி, சீட் வாங்க மாணவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், பணிக்கு வருவதற்கு முன்பே ஒரு விடைத்தாளுக்கு இவ்வளவு தொகை வழங்க வேண்டும். குறைத்துக் கொடுத்தால் பணிக்கு வரமாட்டோம் என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அதே நேரத்தில் மாணவர்களின் எதிர்காலம் தங்கள் கைகளில் உள்ளது என்பதை மட்டும் மறந்துவிடுகிறார்கள்.

பலவிதமான குடும்பச் சூழ்நிலையில் இரவு பகலாக கண்விழித்து மாணவர்கள் படிக்கின்றனர். பதற்றத்துடனேயே தேர்வு எழுதுகின்றனர். அதிக மதிப்பெண் பெற்றால்தான் நன்கொடை கொடுக்காமல் கல்லூரிகளில் இடம் வாங்க முடியும் என்ற விழிப்புணர்வு இப்போது மாணவர்களிடம் அதிகரித்துள்ளது.

அவர்களின் நம்பிக்கையில் மண்ணை போடும் விதமாக ஆசிரியர்கள் கவனக்குறைவாக விடைத்தாள் திருத்துகின்றனர். நகரங்களில் உள்ள மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறுவது, மறு கூட்டல் செய்வது, மறுமதிப்பீடு செய்வது போன்ற வசதிகளை பெற முடிகிறது. கிராமங்களில் உள்ள ஏழை மாணவர்கள் மறு மதிப்பீடு செய்ய முடியாமல் விட்டுவிட்டால், விடுபட்ட மதிப்பெண்களை அவர்கள் பெற முடியுமா என்ற கேள்வி எழுகிறது. மறு மதிப்பீடு கேட்பவர்களால்தான் விடுபட்ட மதிப்பெண்ணை பெறமுடியும் என்றால் மற்றவர்கள் நிலை என்ன?

கவனக்குறைவாக விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களை கண்டறிந்து பணியிடை நீக்கம் செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையில் விளையாடிய ஆசியர்கள் தண்டிக்கப்படவேண்டும். தேசத்திற்கு கிடைக்க வேண்டிய பல நல்ல திறமைசாலிகளின் திறமைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் கவனக்குறைவால் மாணவர்களின் எதிர்காலக் கனவு சிதைக்கப்பட்டுள்ளது. அனு விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம், சந்திராயன் திட்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை போன்றோர்களை உறுவாக்கிய தமிழகம் ஆசிரியர்களின் அலச்சியப் போக்கால் தேசம் நல்ல தலைமுறைகளை இழந்துவிடுமோ என்று நடுநிலையாளர்கள் அச்சப்படுகிறார்கள்.

தவறு செய்த ஆசிரியர்களை கண்டறிந்து தமிழக அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும். கவனக்குறைவாக விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்பது பொது மக்களின் கருத்து.

கடுமையன தண்டனைகளே எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை தடுக்கும். தண்டனைகளை தொலைக்காட்சி, அச்சு மற்றும் இணைய ஊடகங்கங்களின் மூலம் நாட்டு மக்கள் அறியச் செய்ய வேண்டும். அதுவே தேசபற்றுள்ளவர்களின் எதிர்பார்ப்பு. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன்வருமா?

2 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

M. Hussainghani. said...

ஒத்துழைப்புக்கு நன்றி