.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, April 17, 2009

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் விபரம்.

மத்திய சென்னை, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, ராமநாதபுரம்
ஆகிய நான்கு தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டி!


பிப்ரவரி 7 அன்று மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப் பட்டு இரண்டே மாதங்களில் அசுர வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.


திமுக கூட்டணியிலிருந்து திட்டமிட்டு கழற்றி விடப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி, எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

இப்போது மயிலாடுதுறை, மத்திய சென்னை, ராமநாதபுரம், பொள்ளாச்சி என நான்கு தொகுதிகளில் போட்டியிடுவது என ம.ம.க. உயர்நிலைக்குழு அறிவித்திருக்கிறது.

பொருளாதார செலவுகளை கருத்தில் கொண்டு போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது.


இந்நிலையில் ம.ம.க.வின் தலைமை யில் பல கட்சிகள் கூட்டணி அமைக்க முன்வந்துள்ளன. பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


டாக்டர் ராமதாஸ் (பா.ம.க.) போன்ற தலைவர்கள், தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) டி.கே.ரங்க ராஜன் (மார்க்சிஸ்ட்), டி.ராஜேந்தர் (லட்சிய திமுக) போன்ற அரசியல் பிரபலங்களும் தமுமுக தலைமையகம் நோக்கி வருகை தந்தது ம.ம.க.வின் அரசியல் பலத்தை வெளிக்காட்டியுள்ளது.


காயிதே மில்லத்தின் காலத்திற்குப் பின்பு தமிழக முஸ்லிம்களின் அரசியல் எழுச்சியடைந்துள்ளது.


முஸ்லிம்களின் பின்னணியில் இயங்கும் ம.ம.க., பல்வேறு கட்சிகளுக்கு ''கூட்டணி தலைமை தாங்கும்'' அரசியல் தகுதியை இரண்டே மாதத்தில் பெற்றிருப் பது அரசியல் ஆச்சரியமாகும்.


ஒரு முஸ்லிம் பின்னணி கொண்ட கட்சிக்கு செய்தி ஊடகங்கள் தரும் முக்கியத்துவம் நம்மை மேலும் நம்பிக்கை யோடு செயல்படத் தூண்டுகிறது.


முஸ்லிம்களும், பிற மக்களும் ம.ம.க.வின் அரசியல் நகர்வை ஒவ்வொரு நாளும் கவனித்து வருகிறார்கள். நம்மை ஒழித்துக்கட்ட நினைத்தவர்கள் இப்போது நிலைகுலைந்து போயுள்ளார்கள். ம.ம.க.வின் எழுச்சி காரணமாக ஆளும் கூட்டணி 17 தொகுதிகளில் தோல் வியைத் தழுவும் என்ற உளவுத்துறை யின் அறிக்கை உண்மையாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

No comments: