.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, April 17, 2009

ம.ம.க. தேர்தல் நிலைபாடு குறித்து மக்கள் எழுப்பும் ஐயங்கள்.

ம.ம.க. தேர்தல் நிலைபாடு குறித்து மக்கள் எழுப்பும் ஐயங்கள்
கேள்வி-பதில்களாக இங்கே தெளிவுபடுத்தப்படுகிறது

கேள்வி: ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டு பிற்காலத்தில் இரண்டு தொகுதி களை பேரம் பேசியிருக்கலாமே?

பதில்: வடமாவட்டங்களில் மட்டும் இருக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஒரு தொகுதியை மட்டும் கொடுத்திருந் தால் உங்கள் கருத்தை பரிசீலித் திருக்கலாம். அவர்களுக்கு இரண்டு கொடுத்தது நமக்கு மகிழ்ச்சிதான். அதே அளவு பங் கீட்டை தமிழகமெங்கும் 14 ஆண்டு கால மாய் வேரூன்றி, இன்று ம.ம.க.வாக மலர்ந் திருக்கும் நமக்கும் தந்திருக்கலாம். உபரியாக 14 தொகுதிகள் திமுகவிடம் இருந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிப்பதற் காகத்தான் ம.ம.க.வே தொடங்கப்பட் டுள்ளது. முந்தைய சமுதாயக் கட்சிகள் செய்த அதே தவறை நாமும் செய்யக் கூடாது. இன்று ஒரு தொகுதியை ஏற்றிருந் தால் இனி காலம் முழுக்க அதே அளவு டனேயே நமது அரசியல் முடிந்திருக்கும்.
இப்போது துணிச்சலாக நாம் எடுத்த முடிவு காரணமாக இப்போது நமக்கு சிறு இழப்பு என்றாலும், எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இன்றைய இழப்புகள்தான் நாளைய வெற்றிகள், இழக்கமால் எதையும் பெறமுடியாது என்பதை ஊசலாட்ட முன்னவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்

.
கேள்வி: பல்லாவரத்தில் நடந்த ம.ம.க. கூட்டத்தில் கலைஞரையும், திமுகவையும் தாக்கிப் பேசியதால் தாங்கள் கூட்டணியிலிருந்து கழற்றி விடப்பட்டதாக திமுகவினர் கூறுகிறார்களே...?


பதில்: முற்றிலும் தவறான செய்தி. நமது தலைமை நிர்வாகிகள் பேசும் பொதுக்கூட்டங்கள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுகின்றன. அதை யாருக்கு வேண்டுமானாலும் போட்டுக் காண்பிக்கிறோம். அப்படி பேசியதாக கூறுபவர்கள் அதனை நிறுபிக்கட்டும். இதுபோன்ற பொய்யான செய்திகளைக் கூறி, நம்மை வெளியே அனுப்பியதற்கு திமுக தரப்பு காரணங்களை கற்பிக்க முயல்கிறது. அவ்வளவுதான்.


கேள்வி: திமுக தரப்பு உங்களைக் கழற்றிவிட வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?


பதில்: மதுரை வக்ப் வாரிய கல்லூரியில் 9 பேராசிரியர்களின் இடத் தையும் முஸ்லிம் அல்லாத நண்பர்களுக்கு கொடுக்க வேண்டும் என அழகிரி தரப்பு கோரியது. அதை வக்ஃப் வாரிய தலைவராக இருந்த ஹைதர் அலி அவர் கள் அனுமதிக்கவில்லை. பல முக்கிய திமுக புள்ளிகளின் வக்ஃப் சொத்தை ஆக்கிரமித்திருந்தனர். அவையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக மீட்கப்பட்டன. மேலும் பல சொத்துக்கள் மீட்கப்படும் முயற்சிகளிலும் இருந்தன. இவைகள் முக்கியக் காரணங்களாக இருக்கலாம் என யூகிக்கிறோம். அடுத்து அடங்கி, ஒடுங்கிப் போகும் அரசியலில் சமுதாய நிலைப்பாட்டுக்காக நிமிர்ந்து நின்றது மற்றொரு காரணமாக இருக்கலாம்.


கேள்வி: திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய ஹைதர் அலி அவர்கள் வக்ப் வாரிய தலைவர் பதவியிலிருந்து விலகாமல் நீடித்திருக்கலாமே?


பதில்: யாரும் செய்யாத பல நல்ல விஷயங்களை வாரியத்தில் தொடங்கி வைத்துவிட்டு பாதியில் வெளியேறு கிறோமே என்ற கவலை நமக்கு இல்லை. இறைவன் எதை நாடுகிறானோ அதுதான் நடக்கும்.

பதவியில் நீடிக்க வாய்ப்புகள் இருந்தும் நமது நெறிமுறைகளின் அடிப்படையில் அவர் ராஜினாமா செய்தார். சமுதாய நலனுக்காகத்தான் வக்ப் வாரியத்தைப் பெற்றோம். சமுதாய மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித் துவத்திற்கு பங்கம் ஏற்படும் நிலையில் அதற்காகவே அதிலிருந்து வெளியேறினோம்.

தமுமுகவினருக்கு பதவி என்பது சேவை செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பு. அதுவே நமது லட்சியம் அல்ல. சமுதாய நலனை முன்னிறுத்தியே நமது அசைவு கள் இருக்கும் என்பதை சகோ. ஹைதர் அலி அவர்கள் மூலம் நிரூபித்திருக் கிறோம்.


கேள்வி: திமுக-அதிமுக அணி களின் பண பலத்திற்கு முன்னாள் உங்களால் வெற்றிபெற முடியுமா?

பதில்: இறைவன் மீது நம்பிக்கை வைத்து களமிறங்குகிறோம். நம்பிக்கை இல்லாவிடில் வாழ்க்கை இல்லை. வெற்றிகளை மட்டுமே கணக்கில் கொள் பவர்களுக்குத்தான் இதுபோன்ற பயம் வரும். நாமோ வெற்றிலிதோல்விகள் இரண்டையும் துணிச்சலோடு எதிர்பார்த்து இறங்குகிறோம். வெற்றி பெற்றால் பணி செய்வோம். தோல்வியடைந்தால் கிடைத்த வாக்குகளை பலப்படுத்தி அதை அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு எப்படி பயன்படுத்துவது என சிந்திப்போம். திமுக பல தோல்விகளுக்குப் பிறகு தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஒரு தேர்தலிலேயே ஜெயித்துவிட வேண்டும் என நினைப்பது அரசியலில் ஒருவகை மூடநம்பிக்கையாகும்.

கேள்வி: அதிமுகவோடு அதிகாரப் பூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தி னீர்களா?

பதில்: அதிகாரப்பூர்வ பேச்சுவார்த் தைகள் நடக்கவில்லை.

கேள்வி: வேலூரில் முஸ்லிம் லீக்கை எதிர்ப்பீர்களா?

பதில்: எல்லா கட்சிகளிலிருந்தும் பரவலாக முஸ்லிம்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான் நமது விருப்பம். வேலூரில் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு எதிராக நாம் வேட்பாளரை நிறுத்த மாட்டோம்.

கேள்வி: மத்திய சென்னை தொகுதியை ம.ம.க. கேட்டதற்கு கலைஞர் கடும் கோபம் அடைந் தாராமே? ம.ம.க.வை கூட்டணியில் இருந்து கை விட்டதற்கு இதுவும் ஒரு காரணமா?

பதில்: யாருக்கு எந்தத் தொகுதி என்று யாரும் யாருக்கும் பட்டா போட்டுக் கொடுத்துவிடவில்லை. முஸ்லிம்கள் நிறைந்த நாடாளுமன்றத் தொகுதி யாக மத்திய சென்னை அடை யாளம் காட்டப்பட்டுள்ளது. தொகுதி சீரமைப்புக் குப் பின்பு முன்பைவிட முஸ்லிம்களின் எண்ணிக்கை அங்கு கூடுதலாக உள்ளது. துறைமுகம், ஆயிரம் விளக்கு, எழும்பூர், சேப்பாக்கம்லி திருவல்லிக்கேணி போன்ற முஸ்லிம்கள் வெற்றி பெறும் சட்டமன்றத் தொகுதிகள் மத்திய சென்னையில் வருகிறது. நமது மக்களும், நமது கட்சி யின் பலமும் எங்கு இருக்கிறதோ அங்கு தான் நாம் போட்டி யிட முடியும்.


இசை வேளாளர்கள் நிறைந்த தொகுதியில் முஸ்லிம்கள் வெற்றி பெற முடியுமா? தலித்துகள் நிறைந்த சிதம்பரம் தொகுதி யில் பிராமணர்கள் வெற்றிபெற முடியுமா? வன்னியர்கள் நிறைந்த தர்மபுரியில் தேவர்கள் வெற்றிபெற முடியுமா? தேவர் கள் நிறைந்த மதுரை யில் நாடார்கள் வெற்றிபெற முடியுமா?


ஆனால், முஸ்லிம்கள் நிறைந்த மயிலாடுதுறையில் அய்யர் ஒருவர் வெற்றி பெற முடிகிறது. ராமநாதபுரத்தில் தேவர் ஒருவர் வெற்றிபெற முடிகிறது. மத்திய சென்னையில் பிராமணர் வெற்றிபெற முடிகிறது. இதை தவறென்று சொல்ல வில்லை. ஜனநாயகத்தில் இதுபோன்ற ஆரோக்கி யம் வளர வேண்டும். ஆனால், முஸ்லிம் களால் பிற இன மக்கள் நிறைந்த தொகுதி களில் வெற்றிபெற முடியுமா? என்பது ஒரு கேள்வி. போட்டியிட முடியுமா? என்பது மிகமுக்கிய கேள்வி.


இந்நிலையில்தான் சமுதாய மக்கள் நிறைந்த மத்திய சென்னையைக் கேட் டோம். ஏற்கனவே திமுகவின் முரசொலி மாறனை பலமுறையும், அவரது மகன் தயாநிதி மாறனை ஒருமுறையும் முஸ்லிம் கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்திருக் கிறார்கள். இம்முறை இத்தொகுதியை ம.ம.க.வுக்கு கேட்டது எப்படித் தவறாகும்?


ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, துறைமுகம் என முஸ்லிம்கள் நிறைந்த (சென்னை சட்ட மன்ற) தொகுதிகளில் கலைஞர், ஸ்டாலின் என அவரது குடும்பத்தினரும், பேரா. அன்பழகனும் மாறி மாறி வெற்றி பெற்றதை அவர்கள் மனசாட்சியோடு நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் மத்திய சென்னை யைக் கேட்டதே குற்றமாகக் கருதினால், முஸ்லிம்களின் தொகுதிகளை மட்டுமே குறிவைத்து போட்டியிட்டு அரசிய­ல் அனைத்தையும் பெற்றவர்கள் மீது நாம் எத்தனையோ விமர்சனங்களை வைக்க முடியும். பேரனின் தொகுதியைக் கேட்ட தற்காக தாத்தா கோபப்படுவதைப் பற்றி முஸ்லிம்களும், முஸ்லிம் அமைப்பு களும் நுட்பமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது.

No comments: