.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, April 21, 2009

மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் வேட்புமனு தாக்கல்.

மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் ஹைதர் அலி வேட்புமனு தாக்கல்.

ஏப்21: மனித நேய மக்கள் கட்சி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் ஹைதர்அலி போட்டியிடுகிறார். இவர் இன்று சென்னை மாநகராட்சியில் தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூக ஜனநாயக கூட்டணி சார்பில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறேன், அத்தொகுதியை வளம் பெற செய்ய நடவடிக்கை எடுப்பேன். இதுவரை இங்கு வெற்றி பெற்றவர்கள் தங்களை மட்டும் வளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

வெள்ள நிவாரண நிதி கூட அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வில்லை. அதிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. நான் வெற்றி பெற்றால் இது போன்ற குறைபாடுகள் களையப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் சமமாக மதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேட்புமனு தாக்கலின்போது, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திர பிரசாத், இரட்டை மலை சீனிவாசன் பேரவை தலைவர் நடராஜன், வக்கீல் சம்சுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக வேட்பாளர் ஹைதர் அலி ஆயிரக் கணக்காக கட்சி தொண்டர் களுடன் ராஜா அண்ணா மலை மன்றத்தில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் வரை திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்தார். பொருளாளர் ஆருண், அமைப்பு செயலாளர் ஜெயினுலாதீன், தலைமை நிலைய செயலாளர் இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments: