திமுக போட்டியிடவுள்ள 21 மக்களவை தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஒட்டு மொத்த 21 தொகுதியிலும் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்குக்கூட வாய்பளிக்காமல் முஸ்லிம் சமுதாயத்தை முழுமையாக புறக்கணித்துள்ள திமுகவுக்கு ததஜவின் ஆதரவு நிலை சமுதாய அக்கரையுடன் எடுக்கப்பட்ட நிலைபாடா? அல்லது தமுமுக எதிர்ப்பு நிலையிலிருந்து எடுக்கப்பட்ட நிலைபாடா? முஸ்லிம் சமுதாயம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளது.
வரூன்காந்தியின் வக்கிரமான பேச்சு. மோடி வகையராக்களின் முஸ்லிம்களை கருவறுக்கும் திட்டம். இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் உரிமையைக்கூட மதிக்காமல் தாடி வைப்பதும் புர்கா அனிவதும் தாலிபானிசம் என்று தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி. பொது சிவில் சட்டம் கொண்டுவர துடிக்கும் பாசிச சக்திகள் என்று முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டுமென்றும் முஸ்லிம்கள் எப்பொழுதும் அச்சுறுத்தலிலும் பயத்திலும் இந்த நாட்டில் வாழவேண்டும் என்று இவர்களுக்கெல்லாம் எந்த கொள்கை வழிகாட்டியது. முஸ்லிம்களை அடக்கி ஒடுக்குவதில் இந்துத்துவாவிற்கு இருக்கும் ஒற்றுமையை பாருங்கள்.
மறுமையை நம்பி வாழும் முஸ்லிம்களாகிய நம்மிடம் ஏன் இந்த ஒற்றுமை இல்லை. நாம் உங்களை ஒரு நடுநிலையுள்ள சமுதாயமாக ஆக்கியுள்ளோம் (2:143) என்று அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகிறான். ததஜ தலைவர்களே நடு நிலை என்றால் என்ன?
ஒரு தினகரனோ, தயாநிதியோ, பாலுவோ வெற்றிபெற்று அதிகாரத்தில் அமரும் போது அவர்களது தவறுகளை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா? களவாடிச் சென்ற உணர்வில் பக்கம் பக்கமாக சுட்டிக்காட்டி எழுத முடியுமா? மேடைதோரும் உங்களால் முழங்க முடியுமா? மாதக்கணக்கில் தொலைக்காட்சியில் பேச முடியுமா? உங்கள் மனசாட்சியை தொட்டு இறைவனுக்கு அஞ்சி பதில் சொல்லுங்கள்.
அதே இடத்தில் ஒரு அப்துல் காதரோ, அப்துல் ரஹ்மானோ, இபுறாகீமோ வெற்றி பெற்று அரசியல் அதிகாரத்தில் இருக்கும் போது உங்களது பேனாவிற்கும் நாவிற்கும் உள்ள வலிமையை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. உங்கள் ஸ்டைலில் சொல்வதாக இருந்தால் சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் உரிமையை சமுதாயம் அடைகிறது. முஸ்லிம் லீக் சகோதரர்களுடன் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குறை நிறைகளை சுட்டிக் காட்டுகிறோம் எழுதுகிறோம் அல்லவா? அவர்களும் அதற்கு பதிலளிக்கிறார்கள். அது போன்ற உரிமையை தினகரனிடமும் தயாநிதியிடமும் பாலுவிடமும் நீங்கள் பெற முடியுமா? கேட்க முடியுமா?
மனித நேய மக்கள் கட்சியில் இன்று வரை மக்களவை தேர்தல் பற்றிய நிலைபாடு எடுப்பதில் உள்ள தாமதம் ஒன்று (தவறு நிகழ்ந்துவிடக்கூடாதே என்று) இறைவனுக்கு அஞ்சுவதால் அடுத்து சமுதாயம் (நீங்கள் உட்பட) நாளைக்கு கேள்வி கேட்டுவிடக்கூடாதே என்ற அச்சம் காரணமாக நிதானமாய் முடிவெடுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. நிதானம் அல்லாஹ்வின் பன்பு அவசரம் ஷைத்தானின் பன்பு.
சமுதாய நலன் கருதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தனது நிலைபாட்டை மறு பரிசீலனை செய்யாவிட்டால் இப்போது எடுத்திருக்கும் உங்கள் முடிவிற்கு நாளை நீங்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லும் நிலையில் இருப்பீர்கள் என்பதை சொல்லிக் கொள்கிறோம். அது மட்டுமல்ல உங்கள் மீது சமுதாயம் வைத்திருக்கும் கொஞ்ச நம்பிக்கையையும் நீங்கள் இழக்க நேரிடும். ஒரு முஸ்லிம் சகோதரன் என்ற முறையில் உரிமையுடன் கோரிக்கை வைக்கிறேன்.
"ஜமாஅத்தை பற்றிக்கொள்ளுங்கள்; பிரிந்து செல்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன்; எவர் சொர்க்கத்தின் நறுமணத்தை நுகர விரும்புகிறாரோ அவர் ஜமாஅத்தை அவசியமாக்கிக்கொள்ளட்டும்" இவ்வாறு நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக உமர்رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதி ]
[ நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக உங்களிடையே சில தலைவர்கள் தோன்றுவார்கள்; அவர்களிடம் நல்லவற்றையும் காண்பீர்கள், தீயவற்றையும் காண்பீர்கள்.
யார் அவர்களின் தவறுகளை கண்டிக்கிறாரோ, அவர் தமது பொறுப்பிலிருந்து நீங்கிவிட்டார்.
யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் பாதுகாப்பு பெற்றார்.
யார் அவர்களது தீய செயல்களைப் பொருந்தி துணை செய்கிறாரோ அவர் நாசமடைந்தார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
உடன் சஹாபாக்கள் அவர்களிடம் கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் போர் செய்யலாமா?
என்று கேட்கப்பட்டதற்கு
அதற்கு "அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்வரை போர் செய்யக்கூடாது" என்று கூறினார்கள்.
அறிவிப்பாவர்: உம்முஸமா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: திர்மிதி, அஹ்மத் ]
"இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்." அல்குர்ஆன் 3:103
குர்ஆன் வசனங்களையும் நபி صلى الله عليه وسلم அவர்களின் பொன்மொழியினையும் சமுதாய மக்கள் இன்றைய நிலையில் நன்கு சிந்தித்து செயல்பட கடமைப்பட்டுள்ளோம்.
இன்றைய நமது சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து பல தலைவர்களின் பின்னால் அணி அணியாக நிற்பதும் அந்த தலைவர்கள் எதைச் சொன்னாலும் அது சரி என முடிவெடுக்கின்ற நிலையிலும் இருக்கின்றனர். அது சரியா? தவறா? என்றெல்லாம் சிந்தித்தும் பார்ப்பதில்லை.
"(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை உண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு." அல்குர்ஆன் 3:105
இத்தைகைய வசனங்கள் பிரிவை ஏற்படுத்திக்கொள்ளாமல் ஒன்று பட்ட சமுதாயமாகவே இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன. ஆதலால்தான் அல்லாஹ் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. 3:103 என்று தனது திருமறையை பற்றிப்பிடிக்க கூறுகிறான். இங்கு அல்குர்ஆனை அல்லாஹ் கயிற்றுக்கு உவமானமாகக் கூறுவதின் நோக்கம் பல தனித்தனி நார்கள் ஒன்றினைத்து கயிறாக உருமாறுவதைத்தான் "கயிறு" என்று நமக்கு எளிதான உரை நடையில் உணார்த்துகிறான்.
ஒன்றுபட்டால் ஆட்சி அதிகாரம் நம்மைத்தேடி நிச்சயம் வரும் என்று நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அல்லாஹ் நாடினால் நிச்சயம் நடக்கும். இதை விடுத்து பல குழுக்களாக செயல்படலாம் என முடிவெடுத்து செயல்பட நினைப்பவர்கள் திருமறையின் 3:103, 3:105 வசனங்களுக்கு பதில் கூறட்டும்!
1 comment:
//தமுமுக எதிர்ப்பு நிலையிலிருந்து எடுக்கப்பட்ட நிலைபாடா? முஸ்லிம் சமுதாயம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளது.//
அனபிற்குரியவர்களே!
சிந்தியுங்கள், நம் விரலைக்கொண்டு நம் கண்களையே குத்த கிளம்பிடாங்கையா, இது திட்டமிட்டே ததஜ எடுத்த தமுமுக எதிர்ப்பு நிலைபாடே.
கண்ணியம்பேணுங்கையா.
Post a Comment