தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
“திருவாருர் மாவட்டம், திருவிடச்சேரியில் 05.09.2010 அன்று சமூக விரோதிகள் நடத்தியுள்ள வன்முறை வெறியாட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
சமூக விரோதிகள் திருவிடச்சேரி ஜமாத் தலைவரையும் அவரது மைத்துனரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதும், முஸ்லிம் அல்லாத சகோதர சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் படுகாயப்படுத்தி இருப்பதும் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் இத்தகைய துப்பாக்கி கலாச்சாரத்தை அணுவளவும் சகிக்க முடியாது.
வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீதும், வெளியூரிலிருந்து வந்த அடியாட்கள் மீதும், வன்முறையாளர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக வலியுறுத்துகிறது.
வன்முறையில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தமுமுக தனது ஆழ்ந்த இரங்கலையும் பிரார்த்தனைகளையும் தெரிவிக்கிறது.
மேற்கண்டவாறு தமுமுக தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1 comment:
பேராசிரியரே, என்ன இது! பட்டும் படாமலுமா பேசீருக்கீக!! ஒ, அதானே .... "எலெக்சன்" .... வரப்போவுதுல்லே. அதான் அடக்கி வாசிக்கீரியளா. நடந்த சம்பவத்தை போட்டு உடைச்சி, தைரியமா - சம்பந்த பட்டவர்களை - சாடி இருக்கலாமுல்லே.
Post a Comment