.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, November 7, 2008

மாலேகான் குண்டுவெடிப்பு: லெப்டினென்ட் கர்னல் கைது!

நாட்டின் பாதுகாப்பு துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் துணையோடு நாட்டை துண்டாடும் சதியில் இந்துத்துவா கும்பல்!
நாட்டின் அமைதியை சீர் குலைக்கும் இந்து தீவிரவாத அமைப்புகளை தடை செய்வது எப்போது?
ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக பணியாற்றி வரும் ஸ்ரீகாந்த் புரோஹித், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவம்:6 மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முதலில் தீவிரவாத பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் கைது செய்யப்பட்டார். அவருடன் முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யபப்பட்டனர்.இந்த நிலையில், ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக பணியாற்றி வரும் புரோஹித் என்பவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இவரையும் சேர்த்து கைதானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்ரீகாந்த் புரோஹித், ராணுவத்தில் அதிகாரியாக இருப்பதால் அவரை போலீஸார் முறைப்படி தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரியிருந்தனர். இதையடுத்து ராணுவம், புரோஹித்தை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸிடம் ஒப்படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புரோஹித் மூலம் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
புரோஹித் அபினவ் பாரத் என்ற அமைப்பை நிறுவியர் என்று கூறப்படுகிறது. இது ஒரு இந்து தீவிரவாத அமைப்பாகும்.
புரோஹித்துக்கும், ரமேஷ் உபாத்யாயாவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ரமேஷுக்கு, 5 எஸ்.எம்.எஸ்.களை புரோஹித் அனுப்பியுள்ளார். மேலும் செல்போன் எண்ணை மாற்றிக் கொள்ளும்படியும் அவர் ரமேஷை அறிவுறுத்தியுள்ளார்.
குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ராணுவத்தில் பணியாற்றி வரும் உயர் அதிகாரி ஒருவர் பிடிபட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

2 comments:

Anonymous said...

நாட்டில் எங்கே குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அரை மணிநேரத்தில் 'இது பாகிஸ்தான் சதி, இது பங்களாதேஷ் சதி, இது சிமி' என்று நாகூசாமல் ஒரு சார்புடன் எந்த முகாந்திரமும் இல்லாமல் எந்த விசாரணையுமில்லாமல் அம்மாநில போலிசார் கூறுவதும். உடனே கண் காது மூக்கு வைத்து முதல் பக்கத்தில் நான்கு நாளைக்கு 'முஸ்லிம் தீவிரவாதிகள் கைது திடுக்கிடும் தகவல்; பின்லேடனுடன் ஒன்றாக அமர்ந்து திட்டம் தீட்டியவர் கைது; அது இது என்று' பத்திரி்க்கை தர்மத்தை காலில் போட்டு மிதிக்கும் பத்திரிக்கைகள் எழுதுவதும் இத்தகைய பாரதூர விளைவை ஏற்படுத்தியிருக்கிறகது.

எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் முஸ்லிம்கள், தாடி வைத்தவர்கள் என்ற காரணத்திற்காக கைதுசெய்யப்படும் போது உண்மைக் குற்றவாளிகள் எளிதில் தப்பித்து விடுகின்றனர். இதுதான் இதுநாள் வரையிலும் நடந்து வரும் உண்மைகளாகும். இதனால் இந்த பயங்கரவாதிகள் சர்வசாதாரணமாக தங்கள் நாசவேலைகளை நிகழ்த்தி கொண்டு மக்களோடு மக்களாக நடமாடிக்கொண்டிருக்கின்றனர்.

பல சமயங்களில் கையும் களவுமாக வெடிகுண்டுகளுடனோ அல்லது அதை தயாரித்துக் கொண்டிருக்கும்போதோ சங்பரிவாரத்தினர் பிடிபட்ட போதும் அவர்களை கண்டும் காணாது போல் இருந்த போலிஸ், செய்திகளை உள்பக்கத்தில் சின்ன கட்டத்தில் வேண்டா வெறுப்புடன் வெளியிட்டு தங்கள் பத்திரி்க்கை தர்மத்தை நிலைநாட்டிய (தமிழக) பத்திரிக்கைகள் கொடுத்த ஊக்கத்தின் விளைவே இது.

ஒரு சாமானியனுக்கு தெரியும் இந்த அறிவு கூட இல்லாத மானங்கெட்ட மத்திய மாநில அரசுகள். வெட்டிச்சம்பளம் வாங்கும் உளவுத்துரையினர் முஸ்லிம்களையே வேட்டையாடி வருவது கண்டிக்கத் தக்கது.

இதை இந்துத் தீவிரவாதம் என்று இந்து மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள். இந்துத்துவா தீவிரவாதம் என்பதே சரி. இந்த தேசவிரோதிகள் ராணுவத்தில் இருந்தால் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பது வெறும் வெற்றுக்கோஷமாகிவிடும்.

சங்பரிவார வகையராக்களை உடனடியாக தேசவிரோதிகள் என்று அறிவித்து தடைசெய்ய வேண்டும். குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட்டால் ஒரே மாதத்தில் இந்தியா அமைதி தேசமாகிவிடு்ம்.

நீதியின் குரல் said...

//"இதை இந்துத் தீவிரவாதம் என்று இந்து மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள். இந்துத்துவா தீவிரவாதம் என்பதே சரி"// சகோ பரித் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
விமர்சனங்களில் இந்து தீவிரவாதம் என்ற சொல்‍லை பயன்படுத்தும்போது உங்களைப் போன்றே நமக்கும் அந்த நெருடல்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் ஒரு வலியை உணரும்போது தான் அதன் வேதனை தெரியும் தாங்கள் எழுதியுள்ள விமர்சனத்திலேயே பதிகள் உள்ளன. இது வரை குண்டு தயாரிப்பதும் அதை பயண்படுத்துவதும் முஸ்லீம்கள் தான் என்றும் தீவிரவாதம் என்றால் அது இஸ்லாமிய தீவிரவாதம் தான் என்றும் ஊடங்கள் மீண்டும் மீண்டும் அழுத்தி அழுத்தம் கொடுத்து ஊதி வந்தன. இப்போது அதே பதத்தை நாம் சொல்லும் போது ராமகோபாலன்களுக்கு வந்த வேதனைகளை குமுதத்தில் பார்த்தேன். இந்து தீவிரவாதம் என்ற சொல்லில் நமக்கு உடன்பாடில்லை ஆனால் அவர்களை திருத்த "இந்து தீவிரவாதம்" என்ற ‍சொல்லை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறோம். என் சமுதாயத்தைச் சொல்லும் போது ஒட்டுமொத்த சமுதாயமும் வெட்கிக் தலைகுணிந்ததே அதன் வலி அவர்களுக்கும் தெரியட்டும்.