.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, November 19, 2008

டிச6 போராட்டம்: பகிரங்கக் கடிதம் எழுதியவர்களுக்கு விளக்கம்!

பகிரங்கக் கடிதம் எழுதியவர்களுக்கு ஒரு விளக்கம்


- பொறியாளர் ஷாநவாஸ்
செயலாளர்
தமுமுக - குவைத் மண்டலம்


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்


டிசம்பர் 6 போராட்டம் சமுதாயத் தலைவர்களுக்கு பகிரங்கக் கடிதம் என்றபெயரில் வந்த கடிதத்தையும் தடம் புரளுமா தமுமுக என்ற கடிதங்களையும்பார்த்தேன்.


சமுதாய ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டும் என்ற சகோதரரின்நல்லெண்ணத்திற்கு இறைவன் நற்கூலி வழங்குவானாக. ஆனால் டிசம்பர்போராட்டத்திற்காக வரலாற்று பின்னணியை அறியாமல் இந்தச் சகோதரர்களின்கடிதங்கள் அமைந்துள்ளன. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று தமிழகத்தில் ஜனநாயகஅடிப்படையில் முதன் முதலில் போராட்டம் அறிவித்தது தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக் கழகம் தான் என்பதை அனைவரும் அறிவர்.

பாபரி மஸ்ஜித்இடிக்கப்பட்டது டிசம்பர் 6 1992ல். இதன் பிறகு 1993லிலும் 1994லிலும்தமிழகம் தழுவிய அளவில் யாரும் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தவில்லை. தமுமுக வெகுமக்கள் இயக்கமாக 1995 ஆகஸ்ட் மாதம் பரிணமித்த பிறகு தான்தமிழகத்தில் டிசம்பர் 6 1995ல் மாநிலம் தழுவிய கதவடைப்பு மற்றும் ஆளுநர்மாளிகை நோக்கிப் பேரணி என்று அறிவித்தது. ஆண்டு தோறும் இந்தப்போராட்டங்களுக்கு 1998 வரை அரசு தடை விதித்தது. ஆயிரக்கணக்கான தமுமுகதொண்டர்கள் உட்படத் தமிழக முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்தியாவே தமிழகத்தைத்திரும்பி பார்த்தது.
இந்த இக்கட்டானகாலக்கட்டத்தில் தமிழகத்தில் பல முஸ்லிம் அரசியல் கட்சிகளும்அமைப்புகளும் இருந்த போதிலும் அவர்கள் டிசம்பர் 6 அன்று எவ்விதபோராட்டத்தையும் நடத்தவில்லை என்பதையும் இன்று அனைத்து அமைப்புகளும்ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று நாடும் சகோதரர்களின் கவனத்திற்குக்கொண்டு வரவிரும்புகிறேன்.
பாபரி மஸ்ஜித் தொடர்பாகத் தமிழக முஸ்லிம்களின்எழுச்சியை இனி கட்டுப்படுத்த முடியாது என்று தெரிந்த பிறகு 1999 முதல்தமிழகத்தில் டிசம்பர்ப் போராட்டத்திற்குத் தமிழக அரசு தடைச் செய்யவில்லை(தடைச் செய்யும் போராட்ட முறையை அமைப்புகள் அறிவித்த சந்தர்ப்பங்களைத்தவிர)தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய இந்தப் போராட்டங்கள் மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதைக் கண்டு தடை நீக்கப்பட்ட காலத்தில் தான்பிற அமைப்புகள் தமுமுகவின் முன்மாதிரியைப்பின்பற்றிப் போராட்டம் நடத்தமுன்வந்தன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2004ல் மார்க்கப்பணியைச் செய்யப் போகிறேன் என்று கூறி தமுமுகவை விட்டு விலகிச் சென்றசகோதரர். பி. ஜெய்னுல்லாபுதீன் தமுமுகவை பின்பற்றிக் கொடி உட்படஅனைத்தையும் காப்பி அடித்தது போல் டிசம்பர் போராட்டத்தையும் காப்பிஅடித்தார். ஒரு அமைப்பு இந்தப் போராட்டத்தை வீரியத்துடன் செய்யும் போதுஅதனை ஏன் மற்ற அமைப்புகள் காப்பி அடிக்க வேண்டும்.
ஒரு பணியைச் செய்ய ஒருஅமைப்பு போதும் என்று அவர் உதிர்த்த 'தத்துவத்தை' வழக்கம் போல அவரேமுறித்தார்.
சமுதாயத் தலைவர்களுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ள சகோதரர் டிசம்பர்ப்போராட்டத்தை வருட பாத்திஹா என்று கொச்சைப்படுத்தியுள்ளார். அறையில்உட்கார்ந்து கொண்டு இவ்வாறு மனம் போன போக்கில் எழுதி விடலாம்.
ஆனால் தமுமுக இந்தப் போராட்டத்தை அறிவித்ததின் ஒரு முக்கியமான நோக்கம் ஒருபாபரி மஸ்ஜிதை இழந்து விட்டோம். இன்னொரு இறையில்லத்தை இழப்பதற்குமுஸ்லிம் சமுதாயம் தயாரில்லை என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்துவதற்குத்தான். இந்தப் போராட்டம் அத்தகைய சிந்தனையை நிச்சயமாக எழுப்பியிருக்கிறதுதமிழகத்தில் மட்டும் போராடாமல் டெல்லி வரை சென்று தமுமுக போராடியுள்ளது.
சகோதரர். பி. ஜெய்னுல்லாபுதீன் விலகி 8 மாதம் கழித்து டிசம்பர் 6 2004அன்று தமிழகத்தில் இருந்து டெல்லிச் சென்று நாடாளுமன்ற வாசலில் தமுமுகபோராட்டம் நடத்தியது. வட இந்திய முஸ்லிம் தலைவர்கள் இந்தப் போராட்டத்தில்பங்குக் கொண்டு தமுமுகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
இந்தப் போராட்டம் நடந்த அன்று மாலை பிரதமரைச் தமுமுக தலைவர் தலைமையிலானகுழு சந்தித்துப் பேசியதால் தான் வாஜ்பேயி ஆட்சிக் காலத்தின் போது பாபரிமஸ்ஜித் இடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அத்வானி உள்ளிட்டோர்மீது சிபிஐ மீண்டும் வழக்குத் தாக்கல் செய்து அவர்கள் இன்று குற்றவாளிகூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
டெல்லியில் இந்தப் போராட்டம் நடைபெற்றபிறகு தான் அங்கும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் வீரியமாக போரட்டத்தைடிசம்பர் 6 அன்று நடத்துகிறார்கள்.
சென்ற ஆண்டு வி.ஹெச்.பிஅமைப்பினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதலும் நடைபெற்றது.
இலங்கை பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அரசியல் அமைப்புகள் ஒன்றாகப்போராடுகிறார்கள் என்று கூறுவதும் வட இந்தியர்கள் மராட்டியத்தில்தாக்கப்பட்டது தொடர்பாக லாலுவும் நித்தீசும் பாஸ்வானும் ஒன்றாகஇருக்கிறார்கள் என்று கூறுவதும் தவறு. பல முரண்பாடு அவர்களிடையேஏற்பட்டுள்ளதைச் சகோதரர் படிக்கவில்லைப் போலும்.
எடுத்துக் காட்டாக கடந்தநவம்பர் 17 அன்று இந்திய கம்னிஸ்ட் கட்சி கூட்டிய அனைத்துக் கட்சிகூட்டத்திற்கு வேறுபாடுகளை மறந்து தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும்கலந்துகொள்ளவில்லை. தனியாகப் பந்த் வேறு அறிவித்துள்ளார்கள். இதையெல்லாம்கவனத்தில் கொள்ளாமல் ஏதோ முஸ்லிம்களிடையில் மட்டும் தான் ஒற்றுமையில்லைபோலவும் அதற்கு அமைப்புகள் தனித்தனியாகப் போராட்டம் நடத்துவது தான்காரணம் என்றும் எழுதுவது பொருத்தமில்லை.
தமுமுக தமிழகத்தில் டிசம்பர் 6 அன்று நடத்தும் போராட்டம் வட இந்தியமுஸ்லிம்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.. இந்த ஆண்டு ஏன் ரயில் மறியல்போராட்டம். இதனால் பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துமே என்று ஒருகேள்வி இன்னொரு சகோதரர் எழுப்பியுள்ளார்.
இந்த ஆண்டு டிசம்பர் 6 என்பது மன்மோகன் சிங் அரசுக்குக் கடைசி ஆண்டு. பாபரி மஸ்ஜித் இடிப்புத் தொடர்பானவழக்கை விரைந்து நடத்தத் தவறியதற்காகவும், லிப்ரகான் கமிஷன் தன் பணியைமுடித்த பிறகும் 48 வது முறை அதற்கு ஆயுள் நீடிப்பு அளித்து அத்வானியைக்காப்பாற்றுவதையும் கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் ராவ் தந்தவாக்குறுதியை மற்றொரு காங்கிரஸ் பிரதமர் சிங் நிறைவேற்றத் தவறியதைக்கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது.
வருட பாத்திஹாவிற்கு வரும்கூட்டம் அல்ல நாங்கள். ஏசி ருமில் உட்கார்ந்து கொண்டு மேதாவித்தமானகருத்துகளை மட்டும் சொல்பவர்கள் அல்ல நாங்கள்.
எங்களுக்கு ஏற்பட்டஅநீதியைத் தட்டிக் கேட்கத் தியாகம் செய்யும் கூட்டம் நாங்கள் என்பதைஆட்சியாளர்களுக்கு எடுத்துரைப்பதற்காகத் தான் இந்தப் போராட்டம்.
மத்தியஅரசு என்ற செவிடன் காதில் சங்கு ஊதுவதற்கு ரயில் மறியல் போராட்டம் தான்உதவிடும். ஆனால் பொதுமக்களுக்கு எவ்வித இடையுறும் இல்லாத வகையில்,துளியும் வன்முறைக்கு இடம் கொடுக்காத வகையில் இந்தப் போராட்டம்நடைபெறும். சில போராட்ட வழிமுறைகளை எப்போதாவது ஒரு முறை அவசியம்தேவைப்படும் போது எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் ரயில் மறியல்போராட்டம் காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
இந்தப் போராட்டம் நடத்துவதற்காக எங்களைத் தடம் புரண்ட கழகம் என்று சகோதரர். பி. ஜெய்னுல்லாபுதீனைபின்பற்றி, சகோதரர் அழைப்பாரேயானால் அதனை ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில்அவர் எங்கள் மீது இந்த அவதுறு பட்டம் சூட்டுவது எங்களுக்கு மறுமையில்அல்லாஹ்விடம் நற்கூலியைப் பெற்றுத் தரும்.
பொதுவான விஷயங்களில் ஒன்றுச் சேர்ந்து போராடும் கோட்பாட்டிற்கு எதிரானது அல்ல தமுமுக. கடந்த காலங்களில் தமுமுகவே இதற்கான முன்முயற்சிகளைச் செய்துபோராடியுள்ளது.
தினமலருக்கு எதிரான போராட்டம் மற்றும் நரேந்திர மோடியின் சென்னை வருகையின் போது நடத்தப்பட்டபோராட்டம் இதற்கு ஒரு எடுத்த காட்டு.
இந்த டிசம்பர் 6 ரயில் மறியல்பேராட்டத்தையும் ஒருங்கிணைந்து நடத்த தமுமுக தயார். விருப்பமுள்ளஅமைப்புகள் தமுமுக தலைமையை வரும் நவம்பர் 24க்குள் தொடர்பு கொண்டால்அவ்வாறு செய்வதற்கும் தமுமுக தலைமை தயாராக உள்ளது என்று இம்மடல் மூலம்தெரிவிக்குமாறு தமுமுக தலைமை இசைவு தந்துள்ளது.
தமுமுக என்பது சமுதாய நலனை முன்நிறுத்தி செயல்படும் அமைப்பு. ஏட்டிக்குப்போட்டியாகச் செயல்படும் அமைப்பு அல்ல.
கள உண்மைகளை அறிந்துபுரிந்து இனி கருத்துச் சொல்லுங்கள் என்பது என் வேண்டுகோல்.

பொறியாளர் ஷாநவாஸ்
செயலாளர்
தமுமுக - குவைத் மண்டலம்
-----------------------------------------------------
இந்த அறிவிப்பு குறித்து கருத்துச் ‍சொல்பவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- Blog Editor
------------------------------------------------------

No comments: