.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Saturday, May 19, 2007

Bomb blast at Hyderabad Makkha Masjid ‍ஹைதராபாத் மக்கா மஜ்தில் குண்டு வெடிப்பு.

‍ஹைதராபாத் மக்கா மஜ்தில் குண்டு வெடிப்பு.
ஹைதராபாத் சார்மினார் பகுதியில் உள்ள 17ம் நூற்றான்டை சோர்ந்த புகழ்பெற்ற மக்க பள்ளியில் இன்று வெள்ளிக்கிழமை ஜீம்மா தொழுகையின்போது தீவிரவாதிகளால் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் இது வரை 5 பேர் கொல்லப்பட்டுள்னர் இன்னும் பலர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போரடியபடி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பள்ளியில் வெடிக்காத நிலையில் இருந்த இன்னும் இரன்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றி செயல் இழக்க செய்துள்ளனர்.

வழக்கமாக 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் தொழும் இந்த மஸ்ஜிதில் இன்று மதியம் சரியாக 1.25 இந்திய நேரத்திற்கு இந்த குண்டு வெடித்தள்ளது. இதில் காயமுற்றவர்களை தொழ வந்திருந்த மற்றவர்கள் அருகில் உள்ள உஸ்மானியா மருத்துவமனைக்கும் இன்னும் பல மருத்துவமனைகளுக்கும் தங்கள் வாகனங்களில் அழைத்து சென்று சேர்த்துள்னர்.


புகழ்பெற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த மஸ்ஜிதுக்கு போதிய பாதுகாப்பு வழங்காமல் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரை ஆத்திரத்தில் இருந்த முஸ்லிம்கள் கல்வீசி தாக்கினர் பதிலுக்கு காவல்துறையினரும் லத்தி சார்ஜீம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். மத்திய அரசு உடனடியாக சம்பவத்தை பற்றி விசாரனை செய்வதற்காக மத்திய புலனாய்வு குழு ஒன்றையும் மஹாராஸ்ட்டிர மாநில தீவிரவாத தடுப்பு காவல் பிரிவையும் அனுப்பி வைத்து உத்தரவிட்டுள்ளது.அந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உடனடியாக இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ.ஐந்து லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ 25000 மும் வழங்க உத்தரவிட்டுள்ளார் அவர் மேலும் இது பற்றி தெறிவிக்கையில் சமூக விரோத சக்திகளால் தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலானது நாட்டின் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை குழைப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் சட்ட ஒழுங்கு சீர்குழையாமல் இருப்பதற்காகவும் மத நல்லினக்கம் கெடாமல் இருப்பதற்காகவும் மாநிலமெங்கும் காவல்துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளத. அத்துடன் அன்டை மாநிலங்களான பெங்களுர், மும்பை, டெல்லி போன்ற நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு இவ்விவகாரத்தை கூர்ந்து கவணித்து வருவதாக மத்திய அரசின் உள்விவகாரத் துறை அமைச்சர் தெறிவித்துள்ளார்.

ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதை பற்றிய சில தகவல்கள் :

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த புகழ் பெற்ற பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும். கி.பி 1617 ம் ஆண்டு ஹைதராபாத்தின் 6வது சுல்த்தானான முகம்மத் கூலி குதுப் ஷா என்பவரால் மிர் ஃபைசுல்லா பைக் மற்றும் ரங்கையா சவுத்திரி ஆகியோரின் மேற்பார்வையில் இந்த பள்ளியின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படடன பின்னர் வந்த ஆட்சியாளர்களான அப்துல்லாஹ் குதுப் ஷா மற்றும் தானா ஷா ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும் தொடரப்பட்ட இந்த பள்ளியின் பணிகள் கி.பி 1694 ம் ஆண்டு மொகலாயச் சக்கரவாத்தி அவுரங்கசிப் அவர்களால் இப்பள்ளியின் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு தொழுகைக்காக திறக்கப்பட்டது.

புகழ்பெற்ற சார்மினாரில் இருந்து 100 அடி தொலை வில் உள்ள இந்த பள்ளியின் மத்தியில் உள்ள வளைவானது மக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டதால் இது மக்கா பள்ளி என்று அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள். இன்னும் இது 8000 ம் கொத்தனார்களை கொண்டு 77 வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டதாகும். இந்த பள்ளியின் உள் வளாகமானது 75 அடி உயர உயரமும் 220 அடி அகலமும் 180 அடி நீளமும் உடையதாக உள்ளது. இன்னும் பல புகழ் பெற்ற பல கட்டிடக்கலை சிறப்பம்சங்களையும் தன்னிடத்தே கொன்டதாக இந்த பள்ளி உள்ளது.இந்த பள்ளியைப் பற்றிய சரித்திர குறிப்புக்களில், இந்த பள்ளியின் நிர்மான வேலைகள் ஆரும்பமாகியபோது இதை ஆரம்பித்த சுல்த்தான் முகம்மது குதுப் ஷா அவர்கள் நாட்டில் உள்ள அனைத்து புகழ்பெற்ற மார்க்க அறிஞர்களையும் அழைத்து எவர் ஒரு தொழுகையைக் கூட விடாமல் இதுவரை தொழுதுள்ளாரோ அவர் வந்து இதற்காக அடிக்கல்லை நாட்டலாம் என்றபோது ஒருவரும் வரவில்லையாம் பின்னர் சுல்த்தான் முகம்மது குதுப் ஷா அவர்களே அந்த அடிக்கல்லைலை நாட்டிவிட்டு தான் தனது 12 ம் வயதில் இருந்து இதுவரை ஒரு தொழுகையை கூட விடவில்லை என்று கூறியதாக வரலாறுன்டு. மேலும் இது இந்தி அரசால் புராதான சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த பள்ளியில் தான் சமூக ஒற்றுமையை குழைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இதில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளை கைது செய்ய வேணடும்.

No comments: