.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, June 19, 2008

பால்தாக்கரேவை கைது செய்! மத்திய அரசுக்கு தமுமுக வலியுறுத்தல்!!

பத்திரிகை அறிக்கை
பயங்கரவாதி பால்தாக்கரேவை கைது செய்!
மத்திய அரசுக்கு தமுமுக வலியுறுத்தல்!


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:


இந்து தற்கொலைப்படை அமைக்க வேண்டுமென்றும், இந்துத்துவாவினர் வெடிகுண்டு வைப்பதும், வெடிகுண்டு செய்வதும், நெஞ்சை தொடுகிறது என்று பயங்கரவாத கருத்துகளை வெளியிட்டுள்ள பால்தாக்கரேவை இன்னும் கைது செய்யாமல் இருப்பது இந்த தேசத்திற்கு இழிவாகும். எங்கெல்லாம் குண்டுகள் வைக்க வேண்டுமென்று தனது பயங்கரவாத படைக்கு பால்தாக்கரே வெளிப்படையாகவே ஆணையிட்டுள்ளார். இதற்கு பிறகும் அவர் மீது எந்த சட்டமும் பாயாமல் இருப்பது அரசின் கையாளாகத் தனத்தைக் காட்டுகிறது. பால் தாக்கரே உடனடியாக கைது செய்து மும்பை கலவர வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளுக்கும் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். இது போன்ற பயங்கரவாத பேச்சுக்களை அனுமதிப்பது ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஊறு விளைவிப்பதாகும்.


மகராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் சிவசேனாவினர் வெடிக்குண்டுகள் தயாரித்த போது அவை வெடித்து சிலர் இறந்தனர், சிலர் படுகாயமடைந்தனர். இதற்கு காரணம் முஸ்லிம்கள் தான் என்பதை ஜோடிக்கும் வகையில் அவ்விடத்தில் முஸ்லிம்கள் அணியும் உடைகள், தொப்பி, ஒட்டு தாடி, ஆகியற்றையும் சிவசேனாவினர் விட்டுச் சென்றனர். தற்போது பால்தாக்கரேவின் இந்தப் பேச்சைப் பார்க்கும் பொழுது மகராஷ்டிர மாநிலம் மாலேகான், ஆந்திர பிரதேசம் ஹைதராபாத்தின் மக்கா மஸ்ஜித், மற்றும் ஜெய்பூர் குண்டுவெடிப்புகளுக்கும் சிவசேனாவிற்கும் சம்பந்தம் இருக்குமோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.

விரும்பத்தகாத விளைவுகளுக்கு பால்தாக்கரே தன் பேச்சின் மூலம் விதை போட்டுள்ளார். பால்தாக்கரேயின் இந்த கண்டனத்திற்குரிய பேச்சிற்காக அவர் உடனே கைது செய்யப்பட வேண்டுமென தமுமுக வலியுறுத்துகிறது. இல்லையேல் மக்கள் சக்தியை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிவரும் என அரசை தமுமுக எச்சரிக்கிறது.

Source: http://www.tmmk.in/news/999848.htm

திரு(ந்)த்திக் கொண்ட மக்கள் தொலைக்காட்சிக்கு பாராட்டுக்கள்!


திரு(ந்)த்திக் கொண்ட மக்கள் தொலைக்காட்சிக்கு பாராட்டுக்கள்!

Tuesday, June 17, 2008

முரண்டு பிடிக்கும் மக்கள்(?) தொலைக்காட்சி


முரண்டு பிடிக்கும் மக்கள்(?) தொலைக்காட்சி!


மக்கள்(?) தொலைக்காட்சியில் வரும் செய்தியில் அன்னியச் செலவாணி மதிப்பு என்ற பகுதியில் வரும் அயல்நாட்டு நாணயங்களின் பெயர்களுக்கு அருகில் அந்தந்த நாட்டின் சரியான நாணயங்கள் காட்டப்பட்டுள்ளன ஆனால் சவூதி அரேபியாவின் சவூதி ரியால் என்ற இடத்தில் எதோ ஒரு நாட்டின் நாணயம் அடையாளமாகக் காட்டப்படுகின்றன.

மக்கள் தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் செய்திபிரிவிற்கு மின்-அஞ்சல் மூலம் சரியான நாணயத்தை அனுப்பி வைத்திருந்தும் அதை மாற்றிக் கொள்ள ஏனோ முன் வரவில்லை.

இதன் உள் நோக்கம் என்னவென்று புரிகிறதா? அந்த நாணயத்தில் பொரிக்கப்பட்டுள்ள வாசகத்தைப் படித்துப் பாருங்கள் புரியும்.2011ல் ஆட்சி கனவு காணும் மக்கள்(?) தொலைக்காட்சி தன் நிலையை மாற்றிக்கொள்ளட்டும்.