.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, November 30, 2008

இந்துத்துவ வெறியர்களின் வெடிகுண்டுக் கலாச்சாரம்!

இந்துத்துவ வெறியர்களின் வெடிகுண்டுக் கலாச்சாரம்

- சார்வாகன்

இந்துத்வ வெறியர்களின் வெடி குண்டுக் கலாச்சாரத்திற்குக் கைப்பூண் போன்ற சான்று, காந்தியார் கொலை. சநாதனத்துக்கு எதிரான கருத்துகளை காந்தியார் பேசினார் என்பது தானே இந்துத்துவ வெறியர்களின் கோபத் துக்கான காரணம்? பாகிஸ்தான் பிரிவினையை நேரு, பட்டேல், ராஜாஜி போன்றவர்களெல் லாம் ஏற்றுக் கொண்டு அவரிடம் தெரிவித் ததால், வேறு வழியின்றி காந்தியார் எதிர்க்க இயலவில்லை. பாகிஸ்தான் பிரிவினையைக் காட்டி காந்தியார் உயிருடன் இருக்கக் கூடாது எனத் தாம் முடிவு செய்ததாக நாதுராம் விநாயக் கோட்சே தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பது இட்டுக்கட்டிக் கூறப்பட்ட பொய்! பிரி வினையை ஆதரித்த மற்றவர்களுக்கு எந்த இடையூறும் யாராலும் ஏற்படுத்தப்படவில்லை. கூட்டுச் செயல், முடிவு என்ற வகையில் கண்டனம் கூடக் கிடையாது.

கோட்சேயின் ஞானகுரு விநாயக தாமோதர் சவர்க்கார் 1904-இல் ஆங்கிலேயர்களைக் கொல்வதற்காக உருவாக்கிய இயக்கம் அபிநவ் பாரத்! அது தான் இப்போது 2006-இல் அதே புனே நகரில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

1905-இல் ரசியாவின் ஜார் அலெக்சாண்டர் அந்நாட்டு மக்களுக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியதற்குக் காரணம் அவர்கள் நடத்திய ஆயுதம் ஏந்தியப் புரட்சி. இதைக் கண்ட பால் கங்காதர் திலக் (மராத்திப் பார்ப்பனர்) சொன்னது என்ன தெரியுமா? பிரார்த்தனை செய்வதால், ஒன்றும் ஆகாது; அயர்லாந்து, ஜப்பான், ரசியாவைப் பாருங்கள், அவர்கள் போல ஆயுதம் ஏந்துங்கள் என்றார்.

இந்த யோசனையை யார் கேட்டார்களோ இல்லையோ, இந்து மத உயர் ஜாதிக்காரர்கள், பார்ப்பனர்கள் கேட்டனர். திலகரே அவர்களின் தலைவர்தானே! வெற்றிலை பாக்குக் கடைக் காரனும், எண்ணெய்ச் செக்கு ஓட்டுபவனும் தேர்தலில் நிற்கலாமா? என்று கேட்ட பார்ப்பனப் பேஷ்வாப் பரம்பரையாயிற்றே!

இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியைப் போய்ப் பார்த்துப் பேசி அறிந்து வந்தவர்கள் இந்து மகாசபையினர். அவர்களைச் சேர்ந்த மூஞ்சேதான் போன்சலா மிலிட்டரி பள்ளியை நாசிக்கில் தொடங்கினவர். இவரும் இந்துத்வ வெறியர். ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தலைவர்களில் ஒருவர்.

இவர்களெல்லாம் உருவாக்கிய அபிநவ் பாரத் அமைப்பின் உறுதிமொழி நம் புனித மதத்தை அழிக்கும் மிலேச்சர்களான அந்நிய நாட்டு எதிரிகளின் இரத்தம் நம் மண்ணில் சிந்தச் செய்வோம் என்பதே! என்ன பொருள்? ஆங்கிலேயர்களைக் கொல்வோம்! ஏன்? அவர்கள் நம் மதத்தை அழிக்கிறார்கள்! கவனிக்க வேண்டும். சுதந்திரத் தாகம் அல்ல, காரணம்; சுயராஜ்யம் அல்ல குறிக்கோள்! மதவெறி! மதத்தைக் காக்க வேண்டும் என்னும் ஆவேசம்! அதுவே அவர்களின் இலட்சியம். இந்துத்வா என்ற சொல்லை 1920-இல் பயன்படுத்தியவர் ஆயிற்றே, சவர்க்கர்! இந்துஸ் தான், பாகிஸ்தான் என்று இரு நாட்டுக் கொள் கையை முதன் முதலில் எழுதிக் காட்டி இந்தியா பிரிக்கப்பட வேண்டும் என்கிற வித்தினை ஊன் றியவரே இவர்தானே! காரணம் இந்து மதவெறி அல்லாமல் வேறு ஒன்றும் கிடையாதே!

அதனால்தானே, இந்து மதப் பழக்கங்களின் அடிப்படையில், அந்நியர்களைக் கொல்வது பாபம் அல்ல, யாகம் போன்றது என்று வியாக்யானம் செய்து எழுதியது யுகாந்தர் எனும் இவர்களின் பிற்போக்கு ஏடு! அந்நியர் என்பது ஆங்கிலேயரை மட்டுமல்ல, இசுலாமி யர்களையும் உள்ளடக்கியது என்பது சொல்லா மலே விளங்குமே!

இந்த யாகம் செய்து யாகக் குண்டத்தில் மற்ற மதக்காரர்களைப் போட்டுப் பொசுக்குவ தற்காக, வெடிகுண்டு தயாரிப்பது என்பதைக் கற்றுக் கொள்வதற்காக, ரசியா நாட்டு வேதியி யல் பொறியாளரிடமிருந்து நூல்கள் வாங்கப் பட்டன. 1908-இல் எடின்பர்க் பல்கலைக் கழகப் பட்டம் பெற்ற பாண்டுரங்க பாபட் என்பார் இப்படிப்பட்ட நூல்களை வாங்கினார். செய் தார். வீசினார். மாட்டிக் கொண்டார். அலிப்பூர் குண்டு வெடிப்பில் கைதானார். ஆங்கிலேய மாஜிஸ்திரேட்டுக்குக் குறி வைத்து இரண்டு பெண்களைக் கொன்ற வழக்கு இது. இவர்களின் கதையே இதுதான், குறி வைத்தவர்களைக் கொல்லாமல் அப்பாவிகளைக் கொல்வார்கள் என்று ஒரு ஆய்வறிஞர் பதிவு செய்துள்ளார்.

புனேயும் கோயம்புத்தூரும் இந்தியாவில் பிளேக் எனும் கொள்ளை நோய்க்குப் பேர் போனவை. எலிகளால்தான் இந்நோய் பரப்பப் படுகிறது என்பதால் எலிகளைக் கொல்ல 1918-இல் அரசு நடவடிக்கைகளை எடுத்தது. எலி விநாயகனின் வாகனம் என்று இந்து மதக் கதையைக் காட்டி மக்களைத் தூண்டி, அந்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கொலை செய்ய வைத்தவர் திலக். கொலைகாரர்கள் சபேக்கர் சகோதரர்கள். இதற்காகத் தண்டனை பெற்றவர் திலக்.

திலகருக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விவரங்களை துர்காதாஸ் என்ற எழுத்தாளர் / ஆய்வாளர் குசடிஅ ஊரசணடி வடி சூநாசர யனே டிவாநசள என்ற தம் நூலின் 62-ஆம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஆனாலும் போன வாரம்கூட ஒருவர் இந்த உண்மையை மறைத்து மழுப்பி அவருக்குத் தேச பக்தத் திலகம் சூட்டும் முறையில் ராணி ஏட்டில் எழுதியுள்ளார்.

இப்படிப்பட்ட பின்புலத்தைக் கொண்ட இந்துமத வெறியர்கள்தான் இப்போது இசு லாமிய மக்கள் மீதான தம் மதவெறித் தாக் குதலைத் தொடர்ந்துள்ளனர். இதற்கு உதவி புரிய போர்ப்படையினரின் ஒத்தாசைகளை நாடியுள்ளனர். எளிதில் கிடைக்காத அரிய, அதிக ஆற்றல் மிக்க ஆர்டிஎக்ஸ் வெடிப் பொருள்களை ராணுவக்காரர்களிடமிருந்து பெற்று வெடிகுண்டு தயாரிக்கின்றனர். ஓய்வு பெற்ற ராணுவக்காரர்களும் மாட்டிக் கொண் டனர். பணியில் இருக்கும் ராணுவக்காரர்களும் பிடிபட்டுள்ளனர்.

இந்துக்களை ராணுவமயமாக்கு; ராணு வத்தை இந்து மயமாக்கு என்கிற ஆர்எஸ்எஸ்., இந்து மகா சபா, அபிநவ்பாரத், விஎச்பி அமைப்புகளின் கோஷத்திற்கு பா.ஜ.கட்சியும் ஆறு ஆண்டுக்கால ஆட்சியும் ஆதரவு அளித் ததன் விளைவு இது! நெற்றியில் சந்தனமும் குங்குமமும் வைத்துக் கொண்டு ராணுவத்தினர் எப்போது காட்சி அளித்தனர்? இப்போது அந்த நிலை இருக்கிறதே! மணிக்கட்டில் கறுப்பு, சிவப்புக் கயிறு கட்டிக் கொண்டுள்ள ராணுவ அதிகாரிகள் இருக்கிறார்களே! அதன் விளைவுதானே ராணுவக்காரர்கள் சதிச் செயலில் பங்கு பெற்றது!

2003-ஆம் ஆண்டிலிருந்தே இந்துத்வ வெறி யர்கள் வெடிகுண்டு செய்யத் தொடங்கி விட் டார்கள். 2006-இல் வெடிகுண்டு செய்யும் போது விபத்து ஏற்பட்டு நரேஷ் கொண்ட்வார், இமான்சு பான்சே எனும் இரண்டு பேர் இறந்தார்கள். மராட்டியத்தில் நானடட் எனும் நகரத்தில் இது நடந்தது. விசாரணையில் இவர்கள் இருவரும் 2006 ஏப்ரலில் நடந்த பர்பானி மசூதித் தாக்குதலுக்குக் காரணமான வர்கள் என்பது தெரிய வந்தது. பஜ்ரங்தளத்தைச் சேர்ந்தவர்கள்தான் 2003 ஏப்ரலில் புர்னா மற்றும் ஜல்னா நகரங்களில் மசூதிகளின் மீது நடந்த வெடிகுண்டுத் தாக்கு தலுக்குக் காரணமானவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

தெரிந்து என்ன பயன்? அவர்கள்மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன? ஒன்றும் இல்லை. எனவே அவர்களுக்குத் துணிவு கூடிவிட்டது. பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்து செய்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில்கூட, புனே நகரில் நடத்தப்படவிருந்த மகாபாரத நாட கத்தை நடத்தக் கூடாது என்று நாடகக் கொட் டகையை வெடிகுண்டு வீசித் தாக்கினார்கள், இந்து ஜன ஜாக்ரிதி சமிதி எனும் இந்துமத வெறி அமைப்பினர். மகாபாரதக் கதையொன்றைத் தழுவி (நக்கல்) அங்கத நடையில் தயாரிக்கப் பட்ட நாடகம். நம்மூர் சோ பார்ப்பனர் அந்தக் காலத்தில் நடத்திய நாடகம் போல! சகிப்புத் தன்மை இல்லாது, மதவெறி தலைதூக்கி நடத்தப்பட்ட தாக்குதல்.

மலேகான் குண்டு வெடிப்புக்காகக் கைது செய்யப்பட்டுள்ள மங்கேஷ் நிகாம் என்பவன் மதவெறிச் செயல்களை ஏற்கெனவே செய்தவன். ரத்னகிரியில் ஒரு குடும்பத்தினர் கிறித்துவ மதத்தைத் தழுவிய குற்றம் செய்தமைக்காக அவர்களின் வீட்டின்மீது வெடிகுண்டு வீசியவன் இந்த ஆள். இதற்காகக் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டவன். மீண்டும் வெடிகுண்டு வீசியிருக்கிறான். சிரங்கு பிடித்தகையும், இரும்பு பிடித்த கையும் என்பார்களே, அதுபோல வெடிகுண்டு வைத்த கை சும்மா இருக்காதோ!

உத்தரப்பிரதேசம் மாயாவதியின் மாநிலம். அங்கே, பஜ்ரங் தளத்துக்காரர்கள் ராஜீவ் மிஸ்ர மற்றும் பூபிந்தர்சிங் ஆகிய இரண்டு பேர் இந்த ஆண்டு அக்டோபரில் வெடிகுண்டு தயாரிக்கும் போது இறந்து போயினர். கான்பூரில் இந்நிகழ்ச்சி நடந்தது. வெடிகுண்டு செய்யும் எண்ணம் இந்துத்வ வெறியில் ஏற்படுகிறது. சரி. வசதி வாய்ப்புகள் எப்படிக் கிடைக்கின்றன? ராணுவம் தான் கைகொடுக்கிறது.

2006 செப்டம்பரில் குஜராத் மாநிலம் அகமது நகரில் பழைய இரும்பு வணிகரிடம் 196 கிலோ எடையுள்ள காக்டெயில் ராணுவ வெடிகுண்டு கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான விசாரணை தெரிவித்தது என்ன? 15 வருடங்களாக இந்தியாவில் நடந்த எல்லா வெடிகுண்டுச் சம்பவங்களுக்கும் தேவைப்படும் அளவுக்கு வெடிப் பொருள்களை வணிகர் சங்கர் ஷெல்கே விற்றிருக்கிறார். இவருக்கு அந்தப் பொருள்களை ராணுவமே விற்றிருக்கிறது. பழைய இரும்பு என்று விற்றிருக்கிறது. நாடு எங்கே போகிறது?

அதைவிடக் கொடுமை! இந்த ஷெல்கேயின் வணிகம்பற்றி விசாரணை செய்யப்பட்டது. உயர் சக்தி வாய்ந்த வெடிப் பொருள்களை இந்த ஆள் கள்ளச் சந்தையில், விற்றிருக்கிறார்; அம்மோனி யம் நைட்ரேட் கலந்த வெடிப் பொருள்களை வைத்துப் பயன்படுத்துவது தொல்லை என்பதால் இதனை வாங்கிப் பல தொழில் நிறுவனங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார்களாம்! இதற்கான நோய் நாடி நோய் முதல் நாடப்பட வேண் டாமா? இதைச் செய்யாததால்தானே நாடே சுடுகாடாகியுள்ளது?

ராணுவத்தை இந்து மயமாக்கி வெற்றி பெற்று விட்டனவா, மதவெறிச் சக்திகள்? பதிலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கோழி திருடியவனும் கூடச் சேர்ந்து குலவுவது போல், இத்தனைப் பயங்கரவாதத்திற்கும் காரணமான இந்துமதவெறி அமைப்புகள் என்ன கூக்குரலை எழுப்பி வந்துள்ளன? இன்றைக்கும் பாருங்கள், பா.ஜ. கட்சிச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் மலேகான் வெடிகுண்டுச் சதிகாரியை அப்பாவி என்கிறார். முசுலிம்களைப் பயங்கர வாதிகள் என்கிறார். என்னய்யா இது இரட்டை அளவுகோல் என்று இதழாளர் கேட்டால்; குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அப்பாவிதானே எனக் கேட்கிறார். இதே வாதம் இசுலாமியர்களுக்குப் பொருந்தாதா?

மக்களை இரண்டாக்கியவர்கள், இரட்டை நாக்குடன் பேசுகிறார்கள். திரிசூலம் தந்து கிறித்துவ, இசுலாமிய, மதச் சார்பற்றவர் ஆகிய மூவரையும் கொல்வதற்கு என்று பகிரங்கமாகப் பேசித் தீட்சை அளித்தவர்கள் இந்துக்கள் பயங்கரவாதிகளாக இருக்க மாட்டார்கள், சாத்வீகமானவர்கள் என்று பசப்புகிறார் வி.எச்.பி. தலைவர் பிரவீண் தொகாடியா. இவரேதான் முன்பு கூறினார், இந்துக்கள் வன்முறையில் இறங்கி ஆயுதம் ஏந்தலாம் என்பதற்கு அடையாளம் இந்துக் கடவுள்களின் கைகளில் ஆயுதங்கள் இருப்பது என்றார். திட்டம் போடும்போது ஒரு பேச்சு, திட்டம் போட்டு குட்டு உடைந்து மாட்டிக் கொண்டால் வேறு பேச்சு எனும் இரட்டை நாக்கு, இரட்டைப் போக்கு! இதுதான் இந்து மதம், இந்துத்வா!

வரலாற்று ஆய்வாளர் ஈஜின் டிசவுசா கூறியது போல, நாஜிப் பிரச்சாரத்தை மராத்திய, மும்பைப் பத்திரிகைகள் செய்தன, இட்லர் பாணியில் இந்து வீரர்களை உருவாக்கினர். முசோலினியின் பயிற்சியைப் பெற்று பாசிஸக் கட்சிகளை நடத்தி வருகின்றனர். இவர்களை அடியோடு அகற்றி அழித்தால்தான் மதவெறி பிடித்த அழிவுப் பாதையிலிருந்து இந்தியாவைக் காத்திட முடியும்.

நன்றி: விடுதலை

மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் மொசாத்-ஆர்.எஸ்.எஸ்

மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னணியில்
மொசாத்-ஆர்.எஸ்.எஸ்

- அமரேஷ் மிஸ்ரா

பயங்கரவாதத்தில் கூட்டணி?இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சியடைய வைத்த மும்பை தீவிரவாதத் தாக்குதலை இந்திய இராணுவத்தினரும் அதிரடிப்படையினரும் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்து அனைவரையும் நிம்மதியாக மூச்சு விட வைத்திருக்கும் சூழலில், தற்பொழுது அனைவரின் கவனமும் இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்களை குறித்து அறிந்து கொள்வதில் நிலை கொண்டுள்ளது.

முதலில் சிமியின் மற்றொரு பதிப்பான டெக்கான் முஹாஜிதீன் என்ற புதிய தீவிரவாத அமைப்பு தான் இத்தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியிலும் செயல்பட்டுள்ளது என எப்பொழுதும் போல் மேல்மட்டத்தில் ஹிந்த்துவாவின் ஆக்டோபஸ் கரங்களால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள பத்திரிக்கைகளால் வெளியிடப்பட்ட மின்மடலை நம்பி அலறிய இந்திய உளவுத்துறை பின்னர் படிப்படியாக, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ, லஷ்கரே தொய்பா, அல் காயிதா என ஊகங்களை வாரி வீசி வருகிறது.

இந்நிலையில் இத்தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் சம்பவ இடத்தில் நேரில் இருந்து அனைத்தையும் கவனித்த பிரபல பத்திரிக்கையாளரும் மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான டாக்டர். அமரீஷ் மிஸ்ரா, அமிழ்ந்துக் கிடக்கும் உண்மைகளின் முடிச்சுகளை அவரது ஆழ்ந்த ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வர முயல்கிறார். இந்திய உளவுத்துறையும் அரசும் வெறுமனே யூகங்களையும் பொய்ப் பிரச்சாரங்களையும் நம்பி எப்பொழுதும் போல் உண்மையான குற்றவாளிகளைக் கோட்டைவிடுவதை விடுத்து, நேர்மையாக இச்சந்தேகங்களின் பாலும் தனது கவனத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது நடுநிலையாளர்களின் விருப்பமாகும்.

இரண்டாயிரம் பக்கங்களையும் இரண்டு பாகங்களைக் கொண்ட டாக்டர். அமரீஷ் மிஸ்ரா அவர்களின் சமீபத்திய நூலான "War of Civilizations: India AD 1857" கடந்த மார்ச் 2008 இல் இந்திய துணை குடியரசுத் துணைத் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

திரு. அமரீஷ் மிஸ்ரா அவர்களின் சொற்களிலிருந்து....

டாக்டர். அம்ரீஷ் மிஸ்ரா

அதிகாலை நான்கு மணியாகி விட்டிருந்தது. மும்பையிலிருந்து செய்திகளைத் தொகுத்துக் கொண்டுள்ளேன்.

கண்களை மூடி சிறிது நேரம் ஓய்வெடுக்க முடியவில்லை. மும்பை பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிக்கியுள்ளது.

எவர்கள் மஹாத்மா காந்தியைக் கொன்றார்களோ, எவர்கள் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கினார்களோ அவர்களே 16 க்கும் மேற்பட்ட குழுக்களாக மும்பையின் தாஜ், ஓபராய் மற்றும் பல்வேறு உயர்தர ஹோட்டல்களை தன் வசப்படுத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முதல் முறையாக "எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் குற்றம் சாட்டப்படவில்லை!"

இந்தத் தாக்குதலில் மும்பை ATS துறையில் தலைமை அதிகாரி ஹேமந்த் கர்கரேவும் அதில் சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகளும் குறி வைத்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏன் இவர்கள் கொல்லப்பட வேண்டும்? காரணம் இருக்கிறது.


மாலேகான் வெடிகுண்டு வழக்கின் பின்னணியின் மூளையாக உள்ள பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்-பஜ்ரங்தள்-வி.ஹெச்.பி ஆகியோரின் கூட்டுச் சதியில் தொடர்புடைய பிரக்யா சிங், இராணுவ உயர் அதிகாரி புரோஹித் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுக் கொண்டும் விசாரணைகள் முழு வேகத்தில் முடுக்கி விடப்பட்டுக் கொண்டும் வரும் நேரமிது.

இவர்கள் அத்தனை பேரையும் கைது செய்தவர் போலீஸ் உயர் அதிகாரி கார்கரே!

இவர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதல் கார்கரேவின் மேலதிகாரிகள் உட்பல பல பேரின் அச்சுறுத்தலுக்கு ஆளானார் கார்கரே! எல்.கே அத்வானி மற்றும் பிஜேபி தலைவர்கள் உட்பட பல அரசியல்வாதிகள் இவரது தலைக்கு குறிவைத்தனர்.

மும்பையில் நிகழ்ந்த இந்த பயங்கரவாதத்தின் முதல் பலி - கார்கரே தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

மும்பையில் உள்ள யூதர்களின் ஒரே கட்டிடமான நரிமன் ஹவுஸில் இந்த கொடூரமான நிகழ்வு முதன் முதலில் நடந்தது. நரிமன் பகுதியில் வாழும் குஜராத்தி ஹிந்துக்கள் பலர் நரிமன் ஹவுஸில் நடந்த படுகொலையே முதன் முதலாக மும்பையில் நடந்த நிகழ்வு என்று கூறுவதை பல்வேறு தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே யூதர்களின் குடியிருப்பான இந்த நரிமன் ஹவுஸில் சந்தேகத்திற்கிடமான பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளதாக அவ்வப்போது கூறியுள்ளனர். ஆனால், அதனை ஒட்டிய எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

விளைவு? எண்ணிப்பார்க்க இயலா பயங்கரம் நடந்தே விட்டது.

ஆம்! இஸ்ரேலின் உளவு நிறுவனமான "மொஸாத்" இந்த ஒட்டுமொத்த பயங்கரவாதச் செயலுக்குக் காரணம் என்பது தெளிவாகி விட்டது. மும்பையில் நிகழ்ந்து வரும் இந்தத் தாக்குதலுக்கு மொஸாத்தும் அதன் கூலியாட்களும் இதன் பின்னணியில் உள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

உலகமே அதிர்ந்து நின்று நேரலை நிகழ்ச்சியில் வேடிக்கை பார்த்து வரும் இத்தனை பெரிய பயங்கரவாதத்தைத் திட்டமிடவும் நிகழ்த்திக் காட்டவும் சாதாரண தீவிரவாத அமைப்புகளால் முடியாது.

அதே வேளையில் இத்தகைய பெரிய பயங்கரவாதத்தை இந்தியாவின் மதவாத சக்தியின் துணையில்லாமலும் நடத்த முடியாது. இந்த பயங்கரவாதத்திற்குக் காரணமான...

பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்-பஜ்ரங்தள்-வி.ஹெச்.பி ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட வேண்டும்.

அத்வானி மற்றும் அவரது சகாக்கள் கைது செய்யப்பட வேண்டும்.

முன்னெச்சரிக்கையில்லா கையாலாகா சிவராஜ் பாட்டில் பதவி விலக வேண்டும். (இந்த கட்டுரை இணையேற்றம் செய்யும் போது சிவராஜ் பட்டில் மற்றும் எம்.கே நாராயணன் ஆகியோர் ராஜினாமா என்றும் உள்துறை அமைச்சராக பா.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ள தகவல்களை ஊடகங்களின் மூலம் காண முடிந்தது.)

இந்திய நாட்டில் இது ஒரு கறுப்பு நாட்கள். இது இந்தியர்களுக்கும் இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்களுக்கும் வெட்கக் கேடான நாட்கள். முஸ்லிம்களும் நடுநிலை ஹிந்துக்களும் இது நாள் வரை கூறி வந்த கூற்றுக்கள் உண்மை என்று மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸுடம் கூட்டுச் சேர்ந்து இஸ்ரேல் இந்தியாவை நிலை குலைய மட்டுமில்லை, முற்றிலுமாக அழித்தொழிக்க திட்டமிட்டுள்ளன. இஸ்ரேலுடனான உறவை இந்தியா உடனடியாக அறுத்தொழிக்க வேண்டும்.

வீரத் தியாகி கார்கரேவிற்கும் அவருடன் துணிச்சலாக ஹிந்துத்துவ பயங்கரத்தை உலகிற்கு வெளிப்படுத்திய அவரது ATS குழுவிற்கும் இந்தியர்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

உருது டைம்ஸ் இதழில் வெளியான புகைப்படத்தில் மொஸாத் மற்றும் எக்ஸ் மொஸாத் நபர்கள் இந்தியாவிற்கு வந்ததும் ஹிந்துத்துவா சாதுக்கள் பலரைச் சந்தித்து திட்டமிட்டதும் வெளியாகியுள்ளது. மிகப் பெரிய சதித்திட்டம் வீதிக்கு வந்துள்ளது.

இது உணர்ச்சி வசப்பட வேண்டிய நேரம் அல்ல. ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம், முக்கியமாக இந்தியாவிலுள்ள ஹிந்துக்களாகிய நாம்! காந்தியைக் கொன்ற கயவர்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளனர்.

தூய சனாதானக் கொள்கையைப் பின்பற்றக் கூடிய இந்துக்களாகிய நாம், தேசத்தின் மீது தூய பற்றுக் கொண்டவர்களாக உள்ளோம். இங்கே ஹிந்துத்துவாக்கள் செய்து கொண்டிருப்பது தேச விரோத செயல் என்பதை தாய் நாட்டை நேசிக்கும் நாம் முழுமையாகப் புரிந்து அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும். பிரக்யா சிங், அத்வானி போன்ற முழு நேர தேச விரோதிகளை இனம் காண வேண்டும். இவர்கள் அழிக்கப் பட வேண்டியவர்கள். ஹிந்துக்களில் இவர்கள் சார்பாக சிந்திப்பவர்கள், அதன் மூலம் விளையும் பாதகங்களை எண்ணிப் பார்க்கவேண்டும்.

இது ஒரு தேசியம் சார்ந்த கேள்வி!

நாட்டை சுடுகாடாக்கும் மதவெறிபிடித்த ஹிந்துத்துவாவுடன் இந்துக்கள் போரிட வேண்டும். தேவைப்பட்டால் இந்த இஸ்ரேலுடன் கை கோர்த்து நாட்டை நிர்மூலமாக்கும் இந்த நாச சக்திகளுடன் இந்துக்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் உள்நாட்டுப்போர் கூட நிகழ்த்தத் தயாராக வேண்டும்.


- அமரேஷ் மிஸ்ரா(+91-9250305699)

~~~~
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Thursday, November 27, 2008

புல்லட் புரூப் ஆடை அணிந்திருந்த கார்கரே, மிகத் துல்லியமாக நெஞ்சில் குறிவைத்துச் சுடப்பட்டது எப்படி?

புல்லட் புரூப் ஆடை அணிந்திருந்த கார்கரே, மிகத் துல்லியமாக நெஞ்சில் குறிவைத்துச் சுடப்பட்டது எப்படி?

மிக நேர்மையான அதிகாரியை நாடு இழந்துவிட்டது.

நேற்றைய தாக்குதலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஹேமந்த் கார்கரே ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் இடையே அவர் புல்லட் புரூப் ஆடை அணிவது தொலைகாட்சிகளில் செய்தியினூடே காட்டப்பட்டது. அவ்வாறெனில், புல்லட் புரூப் ஆடை அணிந்திருந்த கார்கரே, மிகத் துல்லியமாக நெஞ்சில் குறிவைத்துச் சுடப்பட்டது எப்படி?

மாலேகோன் போலி என்கவுண்டரின்போது, என்கவுண்டர்
ஸ்பெஷலிஸ்ட் மோகன் சந்த் ஷர்மா கொல்லப் பட்டதுபோல், காவல்துறையின் சில கறுப்பாடுகள் இந்த அதிரடி நடவடிக்கை நிகழ்வையும் பயன்படுத்திக் கொண்டு- கர்கரேயின் எதிரிகள் அவரைத் தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்று மனித நேய ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மும்பை 27/11/2008: மிக நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை மிகத் திறமையாக விசாரித்து வந்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே (54), நேற்று மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்திற்குப் பலியாகி விட்டார்.

தாஜ்மஹால் ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகளை அடக்கும் முயற்சியில் போலீஸ் படை இறங்கியபோது, தலையில் ஹெல்மட், மார்பில் புல்லட் புரூப் ஜாக்கெட்டுடன் நேரடியாக களம் இறங்கினார் ஹேமந்த் கர்கரே.

அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது மார்பில் 3 குண்டுகள் பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

கர்கரேவின் பெயர் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானது. அனைவருமே முஸ்லீம் தீவிரவாதிகள்தான் இந்த சம்பவத்திற்குக் காரணம் என நினைத்துக் கொண்டிருந்தபோது, இதில் இந்து தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்ற பயங்கர உண்மையை வெளிக்கொணர்ந்தது கர்கரே தலைமையிலான ஏ.டி.எம். குழு.

அதன்பின்னர் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் புரோஹித் என அடுத்தடுத்து அதிரடியான கைதுகள் நடந்தன. மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்களையும் ஏ.டி.எஸ். வெளியிட்டு வந்தது.

நேற்று காலையில் கூட பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூரை, போலீஸ் காவலில் அனுமதிக்க மும்பை கோர்ட் அனுமதிக்க மறுத்தது குறித்து கவலை தெரிவித்திருந்தார் கர்கரே.

பிரக்யா சிங்கை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால்தான் உண்மையான தகவல்கள் கிடைக்கும், விசாரணையும் விரைவாக நடக்கும் என அவர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று இரவே அவரது மூச்சை நிறுத்தி விட்டனர் தீவிரவாதிகள்.

1982ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தவர் கர்கரே. இந்திய அரசின் உளவுப் பிரிவான 'ரா' வில் முன்பு இருந்தவர். அப்போது ஆஸ்திரியாவில் 9 ஆண்டுகள் பணியாற்றினார்.

மிகவும் நேர்மையான, கட்டுப்பாடான, ஸ்ட்ரிக்ட்டான அதிகாரி என பெயரெடுத்தவர் கர்கரே.

இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் அவர் தனது ரா பணியை முடித்து விட்டு மகாராஷ்டிரா திரும்பினார். உடனடியாக அவரை மகாராஷ்டிர அரசு ஏ.டி.எஸ். தலைவராக நியமித்தது. இதைத் தொடர்ந்தே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

தானேவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும் கர்கரேதான் தீவிரமாக செயல்பட்டு துப்பு துலக்கினார். அதேபோல பான்வேல், வாஷி குண்டுவெடிப்புச் சம்பவங்களிலும் கர்கரே தலைமையிலான டீம்தான் துப்பு துலக்கியது.

ஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில்தான் கர்கரேவின் திறமை முழுமையாக வெளிப்பட்டது.

தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம், நாம் போலியான சாட்சியங்களை, ஆதாரங்களை உருவாக்கக் கூடாது. நமது கடமையை நாம் செய்வோம். நீதி்மன்றம் மற்றதை முடிவு செய்யட்டும் என்பாராம்.

கடைசியாக அவர் என்டிடிவிக்கு அவர் பேட்டியளித்தார். நேற்று அவர் அளித்த பேட்டியின்போது பிரக்யா சிங்கை துன்புறுத்தியதாக அத்வானி குற்றம் சாட்டுவது குறித்து கேட்டபோது, எங்கள் மீது புகார் கூறப்படும்போது அதைக் கேட்டு நாங்கள் வேதனைப்படுகிறோம். ஆனால், சாத்வி பிரக்யா சிங் எந்த வகையிலும் துன்புறுத்தப்படவில்லை.

சட்டவிதிப்படியே நாங்கள் செயல்படுகிறோம். கோர்ட் எப்போதெல்லாம் உத்தரவிடுகிறதோ அப்போதெல்லாம் நாங்கள் குற்றவாளிகளை முறைப்படி கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறோம். துன்புறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

கர்கரேவின் மரணம், மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே நிச்சயம் மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை.

விஜய் சலஸ்கர்

அதேபோல 75 கிரிமினல்களை சுட்டு வீழ்த்தி என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட் என பெயரெடுத்தவரான விஜய் சலேஸ்கரும் நேற்றைய சம்பவத்தில் கொல்லப்பட்டார்.

மும்பையை நடுங்க வைத்த பல குற்றவாளிகளையும், கிரிமனல்களையும் போட்டுத் தள்ளியவர் சலேஸ்கர். சில காலம் அமைதியாக இருந்து வந்த இவரது காவல்துறை வாழ்க்கை சமீபத்தில் மீண்டும் சூடு பிடித்தது.

சமீபத்தில்தான் குற்றப் பிரிவு, கடத்தல் தடுப்புப் பிரிவில் இவர் பணியில் சேர்ந்தார்.

அதேபோல கூடுதல் காவல்துறை ஆணையரான அசோக் காம்தேவும் நேற்று உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிர காவல்துறையில் முக்கியமான அதிகாரிகளில் இவரும் ஒருவர்.

ஒரே நாளில் மூன்று முக்கியமான காவல்துறை அதிகாரிகளை பறி கொடுத்து விட்டு மகாராஷ்டிர அரசும், காவல்துறையும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளன.

மும்பை பயங்கரவாத வெறியாட்டம் தமுமுக கடும் கண்டனம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்
பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை


நாட்டின் வர்த்தகத் தலைநகரமான மும்பையில் நேற்று இரவு முதற்கொண்டு தாஜ், ஓபராய், டிரைடன்ட் போன்ற நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. சுமார் 100 பேரை பலி கொண்டும், இரு நூறுக்கும் மேற்பட்டோரைப் படுகாயப் படுத்தியும் உள்ள இந்தக் கொடூர தாக்குதலை தமுமுக வன்மையாகக் கண்டிக்கிறது..


தாக்குதல் நடந்த ஒருசில நிமிடங்களில் டெக்கான் முஜாஹ்தீன் என்ற அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. தீவிரவாதத் தாக்குதல்களை தீர விசாரிக்காமல், கடந்த காலங்களில் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டது தான், உண்மைக் குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கும், விசாரணைகள் தேங்கி நிற்பதற்கும் காரணமாகும். காவி பயங்கரவாதத்தின் முகத்திரை கிழித்து வரும் இச்சூழலில் இப்பயங்கரவாதச் செயல் நடந்துள்ளதும் கவனிக்கத் தக்கதாகும்.


மாலேகான் குண்டு வெடிப்பு விசாரணைகளை சரியான திசையில் செலுத்தி, சங்பரிவார முக்கியப் புள்ளிகளை ஆதாரங்களோடு கைது செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த தீவிரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே இத்தாக்குதலில் கொல்லப் பட்டிருப்பது நியாயவான்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவம் உள்ளிட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை நேர்மையாக விசாரித்த ஓர் அதிகாரிக்கு நேர்ந்துள்ள முடிவு தேசத்தின் மனசாட்சியை உலுக்குகிறது. விஜய் சாலஷ்கர், அஷோக் காம்தே போன்ற காவல்துறை உயரதிகாரிகளும், 11 காவலர்களும் இத்தாக்குதலில் கொல்லப் பட்டிருப்பது பெரும் துயராகும்.


பயங்கரவாதச் செயல்களுக்கும், அதில் அப்பாவிகளைச் சிக்க வைக்கும் சதிகாரர்களுக்கும் எதிராக தேசம் தன் உறுதியைக் காட்ட வேண்டிய தருணம் இது. நாட்டு மக்கள் பயங்கரவாதிகளின் எதிர்பார்ப்புக்கு இடம் தந்து விடாமல், ஒன்று பட்டு நின்று, தேச விரோதிகளை முறியடிக்க வேண்டும் என தமுமுக கேட்டுக் கொள்கிறது. இப்படுபாதக காட்டுமிராண்டிச் செயலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளையும் சதிகாரர்களையும் கைது செய்து துரித நடவடிக்கை எடுக்க தமுமுக கோருகின்றது.


பயங்கரவாதிகளை துணிவுடன் எதிர்கொண்டு தன் இன்னுயிரையும் நீத்த காவல்துறை அதிகாரிகள், அப்பாவி பொது மக்களின் குடும்பத்தினருக்கு தமுமுக தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

Tuesday, November 25, 2008

தமிழக விஞ்ஞானிக்கு சவூதி இளவரசர் விருது.

தமிழக விஞ்ஞானிக்கு சவூதி இளவரசர் விருது.
விருதுபெற்ற டாக்டர் திரு. மாசிலாமணி அவர்களுக்கு எமது மனமார்ந்த பாரட்டுக்களும் வாழ்த்துகளும்
தமிழக விஞ்ஞானிக்கு சவூதி இளவரசர் விருது. புற்றுநோய் ஒரு கொடிய நோய் என்பது எல்லோருக்கும் தெரியும்.இந்த நோயின்கடுமையிலிருந்து தப்ப இரண்டே வழிகள் தான்.மு தலாவது நோய் வராதவாறு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது.இரண்டாவது, தப்பித் தவறி வந்தால் இதை துவக்கக் கட்டத்திலேயே கண்டறிவது.


இந்த முயற்சியில் உலகெங்கும் பல்வேறு விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் தொடர்ந்து முயன்று வருகிறார்கள்.இந்த ஓட்டப்பந்தயத்தில் டாக்டர்.வ.மாசிலாமணி என்ற தமிழக விஞ்ஞானி ஒரு அற்புத சாதனைப் படைத்து சவூதி இளவரசர் மேதகு நாயிஃபா ( Prince Naifa) அவர்களிடம் பரிசும் பட்டயமும் பெற்றுள்ளார்.பரிசுத் தொகை இந்திய மதிப்பில் ஆறரை லட்சம் ரூபாய்.அவருக்கும், அவருக்குத் துணையாக இருந்த மருத்துவர்கள்,விஞ்ஞானிகள்,ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் பாராட்டி ,பரிசுகள் வழங்கி ரியாத் சவூதி மன்னர் பல்கலைகழகம் 3-11-2008 அன்று விழா எடுத்து சிறப்பு செய்தது.அரபு நாடுகளில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்குக் கொடுக்கப்பட்ட முதல் கௌரவம் இது.முதன் முதலில் இதைப் பெற்றவர் ஒர் தமிழக விஞ்ஞானி. இந்தியாவும் - குறிப்பாய் தமிழகமும் பெருமைக் கொள்ள வேண்டிய விஷயம்.

அவர் அப்படி என்னதான் செய்தார்?

இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து அதில் உள்ள உயிர்மூலக் கூறுகளை லேசர் ஒளி மூலம் பகுத்தெடுத்தார். இதேபோல் அதிகாலையில் வரும் முதல் சிறுநீர்த்துளியின் மூலக் கூறுகளையும் பகுத்தெடுத்தார்.இவைகளை ஆய்வுக்குட்படுத்தி நோயற்றவர்களிடம் இல்லாத சில மூலக்கூறுகள் புற்றுநோய் உள்ளவர்களிடம் அளவுக்கு மீறி இருந்தன.இதைக் கொண்டு புதிதாக மாசிலா புற்றுநோய் ஆய்வு (Masila Cancer Diagnostic) என்ற புதியக் கருத்தமைவை (Technique)கொண்டுவந்தார் இதன் மூலம் வெறும் 5 மி.லி இரத்தமும் 5 மி.லி சிறுநீரும் கொண்டு ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறதா இல்லையா , இருந்து குணமாகி விட்டதா அல்லது மீண்டும் வந்திருக்கிறதா என்பன போன்ற பலவிஷயங்களை கணிக்கமுடியும்.இந்தப் புதிய முறை இந்திய மத்திய அரசின் ICMR ல் தர நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறையின் தொடர் ஆராய்ச்சிக் காரணமாகத்தான் நுரையீரல் புற்று நோய்க்கு மட்டும் தனித்துக் காட்டும் புது உயிர்மூலக்கூறு பற்றியும் கண்டுபிடித்தார்.இந்த முறையின் நம்பகத்தன்மை (Reliablity) 80% என்பதும் இதுவரையில் இத்தகைய்ய Biomarker நுரையீரல் புற்றுநோய்க்கு கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த புதிய முறையின் துணைக் கொண்டு நுரையீரல் புற்று நோயின் துவக்க நிலையைக் கண்டறிவது மட்டுமன்றி தொடர்ந்து பலகாலம் புகை பிடித்துக் கொண்டிருப்பவரில் யாருக்கு இந்நோய் வந்து கொண்டிருக்கிறது என்பதையும் நிர்ணயித்து எச்சரிக்கை மணி அடிக்க முடியும்.

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.

Sunday, November 23, 2008

முஸ்லிம்கள் அரசியலில் ஒன்றுபட்டால் மத்திய அரசை நிர்ணயிக்கலாம்!

உ.பி முஸ்லிம்கள் அரசியலில் ஒன்றுபட்டால் மத்திய அரசை நிர்ணயிக்கலாம்!

தேசிய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்திய தமுமுக தலைவரின் லக்னோ மாநாட்டு உரை!!


உ.பி. மாநிலம் லக்னோவில் முஸ்லிம் அரசியல் விழிப்புணர்வு பேரவையின் சார்பாக அரசியல் விழிப்புணர்வு மாநாடு கடந்த ஞாயிறு (நவம்பர் 9) அன்று நடைபெற்றது.


தமுமுக தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த உலமாக்கள், அறிஞர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், வழக்குரைஞர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் பங்குக் கொண்டார்கள்.


இந்த மாநாட்டில் தமுமுக தலைவர் ஆற்றிய தலைமை உரை.


முஸ்லிம் அரசியல் விழிப்புணர்வு பேரவையின் சார்பாக நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டில் பங்குக் கொண்டிருக்கும் நீங்கள் அனைவரும் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதசேத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த நான் தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 5.6 சதவிகிதம் மட்டுமே என்று 2001ல் எடுக்கப்பட்ட அரசு மக்கள்தொகை புள்ளிவிவரம் கூறுகின்றது.


இதே போல் உ.பி.யில் வாழும் முஸ்லிம்களின் மக்கள் தொகை 18.5 சதவிகிதமென அதே புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இந்தப் புள்ளிவிவரங்கள் அதிகாரபூர்வமானவை ஆனால் ஆதாரப்பூர்வமானவை என்று நான் கருதவில்லை. இதை விடக் கூடுதலாக முஸ்லிம்கள் தமிழகத்திலும், உ.பி.யிலும் வாழ்ந்து வருவது தான் உண்மை நிலை. இருப்பினும் தமிழகத்தை விடப் பன்மடங்கு அதிகமாக நீங்கள் உ.பி.யில் முஸ்லிம்களாக வாழ்ந்து வருகின்றீர்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மையாகும்.


இந்தியாவில் எண்ணிக்கை அடிப்படையில் உ.பி.யில் தான் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.


சதவிகித அடிப்படையில் பார்த்தால் அசாமிற்கு அடுத்த நிலையில் முஸ்லிம்கள் உ.பி.யில் தான் வாழ்ந்து வருகின்றார்கள். உ.பி.யின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு உத்தராஞ்சல் என்ற மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, உ.பி.யில் தலித்களுக்கு அடுத்த இடத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் தான் உள்ளார்கள்.


இந்த உண்மைகளை அறிந்த நாங்கள் உங்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறோம். உ.பி.யில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் 35 இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளார்கள். இதே போல் உ.பி.யில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் 130 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் தகுதியில் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்.


உண்மை நிலை இப்படியிருப்பினும் மிகப் பெரும் கைசேதமாக முஸ்லிம்களை விட மிகக் குறைவாக வெறும் 7 அல்லது 8 சதவிகிதம் உள்ள யாதவர்கள் அல்லது அதனை விடக் குறைவான சதவிகிதத்தில் உள்ள உயர்சாதியினரால் நமது ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிகின்றது நம்மால் வேடிக்கை தான் பார்க்க முடிகின்றது.


இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் உங்கள் மாநிலத்தில் 19 முதலமைச்சர்கள் இது வரை இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை என்பது தமிழகத்தில் வாழும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது.


இதற்குக் காரணம் நமக்கு மத்தியில் ஒன்றுபட்ட அரசியல் நிலைப்பாடு இல்லாதது தான். இங்கு உ.பி.யில் பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் 15க்கும் மேற்பட்டவை இருப்பதாகக் கேள்வி பட்டேன். ஆனால் நாடாளுமன்றத்தில் தற்போது உ..பி.யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இல்லை.


இதே போல் தற்சமயம் உ.பி. சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 56 உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்த முஸ்லிம் அரசியல் கட்சியின் பிரதிநிதியாக அமரவில்லை. இது எங்கள் உள்ளத்திற்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது.


இன்று முஸ்லிம்களின் பலத்த ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் செல்வி மாயவதியின் ஆட்சியில் பிரமாணர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் இன்று அவர்களது ஆதிக்கம் தான் உ.பி.யில் மிதமிஞ்சி நிற்கிறது.


மாயாவதியின் அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்த்தில் உள்ள 21 அமைச்சர்களில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் தான் இருக்கிறார். இந்த அவல நிலையை மாற்றி அமைக்க நீங்கள் திட்டமிட்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயமாகும்.


இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் எங்களது அனுபவத்தைப்பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.


1992 டிசம்பர் 6ல் உங்கள் மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் ஏற்பட்ட ரணங்கள் எங்கள் மாநிலத்தையும் பாதித்தன. பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு எதிர்ப்புக்காட்டுவதற்காகக் கோவையில் வீதிக்கு வந்து கருப்புக் கொடி கட்டியவர்கள் மீது தடா சட்டம் பாய்ந்தது.


அநீதிக்கு எதிராக ஒரு சுவரொட்டி ஒட்டுவதற்குக் கூட நாதியற்ற நிலையில் முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து வந்தது.


முஸ்லிம் அரசியல் கட்சித் தமிழகத்தில் இருந்தன. ஆனால் முஸ்லிம் சமுதாயத்தின் உள்ளக்குமுறல்களைக் கண்டுக்கொள்ளாமல் அவை பாராமுகமாகச் செயல்பட்டன.


இந்தச் சந்தர்ப்பத்தில் தான் 1995 ஆகஸ்ட் மாதம் நாங்கள் இழந்த உரிமைகளை மீட்பதற்கும், இருக்கும் உரிமையைக் காப்பதற்கும் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினோம்.


அனைத்து முஸ்லிம்களுக்காகவும் தமுமுக அப்போது முதல் செயல்பட்டு வருகின்றது.


தமுமுகவின் தொடர் போராட்டத்தின் விளைவாகத் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3,5 சதவிகிதம் தனி இடஒதுக்கீட்டைத் தற்போதைய திமுக அரசு வழங்கியுள்ளது. இதன் காரணமாகப் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியில் சென்ற ஆண்டை விடக் கூடுதல் மடங்கு முஸ்லிம் மாணவர்கள் இந்தத் தொழில் படிப்பில் சேருவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.


தமிழக பிரச்னையில் மட்டுமில்லாமல் அனைத்திந்திய அளவிலும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக நாங்கள் போராடி வருகிறோம். 2004 டிசம்பர் 6 அன்று நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தினோம்.


இந்தப் போராட்டத்தின் விளைவாகத் தான் வாஜ்பேயி ஆட்சியின் போது தள்ளுபடி செய்யப்பட்ட பாபரி மஸ்ஜிதை இடித்தற்கான அத்வானி உள்ளிட்டோர் மீது போடப்பட்ட வழக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.


இதே போல் அனைத்திந்திய அளவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கோரி மார்ச் 7, 2007ல் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தி அனைத்துச்சமுதாயத் தலைவர்களையும் ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்தினோம்.


அரசியல் நடவடிக்கைகள் மட்டுமின்றி சமூகங்களுக்கு இடையே பாலங்களை அமைப்பதற்காகப் பல்வேறு வகையான சமூகச் சேவைகளை தமுமுக செய்து வருகின்றது. இதன் முத்தாய்ப்பாக 50 அவசர ஊர்தி சேவை தமிழகம் சார்பாக அனைத்துச் சமுதாய மக்களுக்காகவும் நடத்தப்பட்டு வருகின்றது.

தற்போது தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையான தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் பதவியை எங்கள் அமைப்பிற்குத் தந்துள்ளது. எங்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவராக இருக்கின்றார்.


எத்தனை அரசியல் கட்சிகள் சமுதாயத்தின் பெயரால் இருந்த போதினும் தூய்மையான நோக்கத்துடன் மக்கள் சேவை செய்தால் சமுதாய மக்களை ஒருங்கிணைத்துச் சமுதாயத்திற்கான தேவைகளைப் பெறலாம் என்பதற்கு தமுமுகவின் அனுபவம் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்பதைப் பணிவுடன் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


திமுகவுடன் நாங்கள் நட்புடன் இருந்த போதினும் மத்தியில் ஆட்சி செய்யும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை நாங்கள் விமர்சிக்காமல் மவுனமாக இருந்ததில்லை.


தற்போதைய மன்மோகன் சிங் அரசு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு காற்றில் பறக்கவிட்டுள்ளது என்பதை நாங்கள் அம்பலப்படுத்தி வருகிறோம். மன்மோகன் சிங் அரசின் குறைந்த பட்சச் செயல் திட்டத்தில் சிறுபான்மையினருக்கு அனைத்திந்திய அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட மிஸ்ரா ஆணையம் தனது அறிக்கையை 2007 மே 22 அன்று சமர்பித்து விட்டது. ஆனால் மன்மோகன் சிங் அரசு இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் முஸ்லிம்களை ஏமாற்றி உள்ளது.


இதே போல் குறைந்த பட்சச் செயல் திட்டத்தில் பாலஸ்தீன மக்களுக்குச் சொந்த நாடு உருவாகப் பாடுபடுவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலஸ்தீன மக்களை அன்றாடம் கொன்று குவிக்கும் இஸ்ரேல் நாட்டின் உளவு செயற்கைக் கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்றது. பா.ஜ.க. இனி ராமர் கோவில் பெயரைச் சொல்லி மக்களிடம் செல்ல இயலாது. முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று அவர்களால் நாட்டு மக்களுக்கு ஆபத்து என்று கூறி வோட்டு வேட்டையாடப் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.


அந்தத் திட்டத்திற்கு உதவிடும் வகையில் தான் மன்மோகன் சிங் அரசின் செயற்பாடும் அமைந்துள்ளது.


தமிழகத்தில் தென்காசியில் குண்டு வெடித்தது. குண்டுகளை வைத்த இந்து முன்னணி தீவிரவாதிகள் தமிழகக் காவல்துறையினரால் கைதுச் செய்யப்பட்டார்கள்.


ஹைதராபாத் மக்கா பள்ளிவாசலில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட ரகக் குண்டுகள் தான் தென்காசியிலும் பயன்படுத்தப்பட்டன என்று தமிழகக் காவல்துறை தெரிவித்தது.


நாம் தமுமுக சார்பாகத் தென்காசி குண்டுவெடிப்பில் இருந்து பாடம் படித்து நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்குகளை மறுவிசாரணை செய்யக் கோரிக்கை வைத்தோம்.


மத்திய அரசு மவுனமாக இருந்தது. நான்டெட், மாலேகவ்ன் (2006), மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டன.


ஆனால் அது மன்மோகன் சிங் அரசைப் போல் தூங்கிக் கொண்டிருந்தது. தற்போது மராட்டிய ஏடிஎஸ் காவல்துறை பல உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது. இதே பாணியில் முன்பே சிபிஐ விசாரணை செய்திருந்தால் டெல்லி, பெங்களூரு, அஹ்மதாபாத், ஜெய்பூர் குண்டு வெடிப்புகளை நூற்றுக்கணக்கான உயிர்களையும் காப்பாற்றியிருக்கலாம். இதனைச்செய்யத் தவறிய மன்மோகன் சிங் அரசை நாங்கள் கண்டித்து வருகிறோம்.


ஆனால் நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் 35 எம்.பி.க்கள் இருந்தும் அவர்கள் மவுனமாக அமர்ந்துள்ளார்கள். இன்று சங்பரிவார் பயங்கரவாதிகள் கைதுச் செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால் கைதுச் செய்யப்படுபவர்கள் அம்புகள் தான். அம்புகளை எய்தவர்களையும் கைதுச் செய்ய மன்மோகன் சிங் அரசு முன்வர வேண்டும்.


முஸ்லிம் சமுதாயத்தை வஞ்சிக்கும் இந்தப்போக்குச் சரி செய்யப்பட வேண்டுமெனில் உ,பி,யில் வாழும் நீங்கள் அரசியல் விழிப்புணர்வு மட்டுமில்லாமல் அரசியல் ரீதியாக ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமாகும்.


தீமைகளைத் தடுப்பது முஸ்லிம்களின் கடமையாகும். தீமைகள் என்பது வெறுமனே மது, விபச்சாரம், சூதாட்டம் மட்டுமில்லை. ஆட்சி அதிகாரத்தைத்தவறாகப் பயன்படுத்துவதும் தீமையாகும். எனவே அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி அதனை வேடிக்கை பார்ப்பது ஒரு முஸ்லிமிற்கு அழகு அல்ல.


இது கூட்டணி ஆட்சி காலம். உ.பி, யில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் நாம் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அடுத்த ஆட்சி உங்கள் தயவில் தான் அமையும். இந்த நிலை ஏற்பட நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.


இன்று இந்தியாவில் அரசியல் கட்சிகளை அமைப்பது எளிதானது. எனவே எத்தனை முஸ்லிம் அரசியல் கட்சிகள் சுயநலனுக்காக ஆரம்பிக்கப்பட்டாலும் மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள், ஆனால் தூய்மையான எண்ணத்துடன் ஆலிம்கள், அறிஞர்கள் நிரம்பிய உ.பி.யில் நீங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் உத்தரபிரதேச ஆட்சியை மட்டுமில்லை, இந்தியாவின் ஆட்சியையும் நிர்ணயிக்கக் கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள்..


எங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும் என்று தமிழக முஸ்லிம்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்து விடைபெறுகிறேன்.

Wednesday, November 19, 2008

டிச6 போராட்டம்: பகிரங்கக் கடிதம் எழுதியவர்களுக்கு விளக்கம்!

பகிரங்கக் கடிதம் எழுதியவர்களுக்கு ஒரு விளக்கம்


- பொறியாளர் ஷாநவாஸ்
செயலாளர்
தமுமுக - குவைத் மண்டலம்


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்


டிசம்பர் 6 போராட்டம் சமுதாயத் தலைவர்களுக்கு பகிரங்கக் கடிதம் என்றபெயரில் வந்த கடிதத்தையும் தடம் புரளுமா தமுமுக என்ற கடிதங்களையும்பார்த்தேன்.


சமுதாய ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டும் என்ற சகோதரரின்நல்லெண்ணத்திற்கு இறைவன் நற்கூலி வழங்குவானாக. ஆனால் டிசம்பர்போராட்டத்திற்காக வரலாற்று பின்னணியை அறியாமல் இந்தச் சகோதரர்களின்கடிதங்கள் அமைந்துள்ளன. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று தமிழகத்தில் ஜனநாயகஅடிப்படையில் முதன் முதலில் போராட்டம் அறிவித்தது தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக் கழகம் தான் என்பதை அனைவரும் அறிவர்.

பாபரி மஸ்ஜித்இடிக்கப்பட்டது டிசம்பர் 6 1992ல். இதன் பிறகு 1993லிலும் 1994லிலும்தமிழகம் தழுவிய அளவில் யாரும் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தவில்லை. தமுமுக வெகுமக்கள் இயக்கமாக 1995 ஆகஸ்ட் மாதம் பரிணமித்த பிறகு தான்தமிழகத்தில் டிசம்பர் 6 1995ல் மாநிலம் தழுவிய கதவடைப்பு மற்றும் ஆளுநர்மாளிகை நோக்கிப் பேரணி என்று அறிவித்தது. ஆண்டு தோறும் இந்தப்போராட்டங்களுக்கு 1998 வரை அரசு தடை விதித்தது. ஆயிரக்கணக்கான தமுமுகதொண்டர்கள் உட்படத் தமிழக முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்தியாவே தமிழகத்தைத்திரும்பி பார்த்தது.
இந்த இக்கட்டானகாலக்கட்டத்தில் தமிழகத்தில் பல முஸ்லிம் அரசியல் கட்சிகளும்அமைப்புகளும் இருந்த போதிலும் அவர்கள் டிசம்பர் 6 அன்று எவ்விதபோராட்டத்தையும் நடத்தவில்லை என்பதையும் இன்று அனைத்து அமைப்புகளும்ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று நாடும் சகோதரர்களின் கவனத்திற்குக்கொண்டு வரவிரும்புகிறேன்.
பாபரி மஸ்ஜித் தொடர்பாகத் தமிழக முஸ்லிம்களின்எழுச்சியை இனி கட்டுப்படுத்த முடியாது என்று தெரிந்த பிறகு 1999 முதல்தமிழகத்தில் டிசம்பர்ப் போராட்டத்திற்குத் தமிழக அரசு தடைச் செய்யவில்லை(தடைச் செய்யும் போராட்ட முறையை அமைப்புகள் அறிவித்த சந்தர்ப்பங்களைத்தவிர)தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய இந்தப் போராட்டங்கள் மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதைக் கண்டு தடை நீக்கப்பட்ட காலத்தில் தான்பிற அமைப்புகள் தமுமுகவின் முன்மாதிரியைப்பின்பற்றிப் போராட்டம் நடத்தமுன்வந்தன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2004ல் மார்க்கப்பணியைச் செய்யப் போகிறேன் என்று கூறி தமுமுகவை விட்டு விலகிச் சென்றசகோதரர். பி. ஜெய்னுல்லாபுதீன் தமுமுகவை பின்பற்றிக் கொடி உட்படஅனைத்தையும் காப்பி அடித்தது போல் டிசம்பர் போராட்டத்தையும் காப்பிஅடித்தார். ஒரு அமைப்பு இந்தப் போராட்டத்தை வீரியத்துடன் செய்யும் போதுஅதனை ஏன் மற்ற அமைப்புகள் காப்பி அடிக்க வேண்டும்.
ஒரு பணியைச் செய்ய ஒருஅமைப்பு போதும் என்று அவர் உதிர்த்த 'தத்துவத்தை' வழக்கம் போல அவரேமுறித்தார்.
சமுதாயத் தலைவர்களுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ள சகோதரர் டிசம்பர்ப்போராட்டத்தை வருட பாத்திஹா என்று கொச்சைப்படுத்தியுள்ளார். அறையில்உட்கார்ந்து கொண்டு இவ்வாறு மனம் போன போக்கில் எழுதி விடலாம்.
ஆனால் தமுமுக இந்தப் போராட்டத்தை அறிவித்ததின் ஒரு முக்கியமான நோக்கம் ஒருபாபரி மஸ்ஜிதை இழந்து விட்டோம். இன்னொரு இறையில்லத்தை இழப்பதற்குமுஸ்லிம் சமுதாயம் தயாரில்லை என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்துவதற்குத்தான். இந்தப் போராட்டம் அத்தகைய சிந்தனையை நிச்சயமாக எழுப்பியிருக்கிறதுதமிழகத்தில் மட்டும் போராடாமல் டெல்லி வரை சென்று தமுமுக போராடியுள்ளது.
சகோதரர். பி. ஜெய்னுல்லாபுதீன் விலகி 8 மாதம் கழித்து டிசம்பர் 6 2004அன்று தமிழகத்தில் இருந்து டெல்லிச் சென்று நாடாளுமன்ற வாசலில் தமுமுகபோராட்டம் நடத்தியது. வட இந்திய முஸ்லிம் தலைவர்கள் இந்தப் போராட்டத்தில்பங்குக் கொண்டு தமுமுகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
இந்தப் போராட்டம் நடந்த அன்று மாலை பிரதமரைச் தமுமுக தலைவர் தலைமையிலானகுழு சந்தித்துப் பேசியதால் தான் வாஜ்பேயி ஆட்சிக் காலத்தின் போது பாபரிமஸ்ஜித் இடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அத்வானி உள்ளிட்டோர்மீது சிபிஐ மீண்டும் வழக்குத் தாக்கல் செய்து அவர்கள் இன்று குற்றவாளிகூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
டெல்லியில் இந்தப் போராட்டம் நடைபெற்றபிறகு தான் அங்கும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் வீரியமாக போரட்டத்தைடிசம்பர் 6 அன்று நடத்துகிறார்கள்.
சென்ற ஆண்டு வி.ஹெச்.பிஅமைப்பினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதலும் நடைபெற்றது.
இலங்கை பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அரசியல் அமைப்புகள் ஒன்றாகப்போராடுகிறார்கள் என்று கூறுவதும் வட இந்தியர்கள் மராட்டியத்தில்தாக்கப்பட்டது தொடர்பாக லாலுவும் நித்தீசும் பாஸ்வானும் ஒன்றாகஇருக்கிறார்கள் என்று கூறுவதும் தவறு. பல முரண்பாடு அவர்களிடையேஏற்பட்டுள்ளதைச் சகோதரர் படிக்கவில்லைப் போலும்.
எடுத்துக் காட்டாக கடந்தநவம்பர் 17 அன்று இந்திய கம்னிஸ்ட் கட்சி கூட்டிய அனைத்துக் கட்சிகூட்டத்திற்கு வேறுபாடுகளை மறந்து தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும்கலந்துகொள்ளவில்லை. தனியாகப் பந்த் வேறு அறிவித்துள்ளார்கள். இதையெல்லாம்கவனத்தில் கொள்ளாமல் ஏதோ முஸ்லிம்களிடையில் மட்டும் தான் ஒற்றுமையில்லைபோலவும் அதற்கு அமைப்புகள் தனித்தனியாகப் போராட்டம் நடத்துவது தான்காரணம் என்றும் எழுதுவது பொருத்தமில்லை.
தமுமுக தமிழகத்தில் டிசம்பர் 6 அன்று நடத்தும் போராட்டம் வட இந்தியமுஸ்லிம்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.. இந்த ஆண்டு ஏன் ரயில் மறியல்போராட்டம். இதனால் பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துமே என்று ஒருகேள்வி இன்னொரு சகோதரர் எழுப்பியுள்ளார்.
இந்த ஆண்டு டிசம்பர் 6 என்பது மன்மோகன் சிங் அரசுக்குக் கடைசி ஆண்டு. பாபரி மஸ்ஜித் இடிப்புத் தொடர்பானவழக்கை விரைந்து நடத்தத் தவறியதற்காகவும், லிப்ரகான் கமிஷன் தன் பணியைமுடித்த பிறகும் 48 வது முறை அதற்கு ஆயுள் நீடிப்பு அளித்து அத்வானியைக்காப்பாற்றுவதையும் கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் ராவ் தந்தவாக்குறுதியை மற்றொரு காங்கிரஸ் பிரதமர் சிங் நிறைவேற்றத் தவறியதைக்கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது.
வருட பாத்திஹாவிற்கு வரும்கூட்டம் அல்ல நாங்கள். ஏசி ருமில் உட்கார்ந்து கொண்டு மேதாவித்தமானகருத்துகளை மட்டும் சொல்பவர்கள் அல்ல நாங்கள்.
எங்களுக்கு ஏற்பட்டஅநீதியைத் தட்டிக் கேட்கத் தியாகம் செய்யும் கூட்டம் நாங்கள் என்பதைஆட்சியாளர்களுக்கு எடுத்துரைப்பதற்காகத் தான் இந்தப் போராட்டம்.
மத்தியஅரசு என்ற செவிடன் காதில் சங்கு ஊதுவதற்கு ரயில் மறியல் போராட்டம் தான்உதவிடும். ஆனால் பொதுமக்களுக்கு எவ்வித இடையுறும் இல்லாத வகையில்,துளியும் வன்முறைக்கு இடம் கொடுக்காத வகையில் இந்தப் போராட்டம்நடைபெறும். சில போராட்ட வழிமுறைகளை எப்போதாவது ஒரு முறை அவசியம்தேவைப்படும் போது எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் ரயில் மறியல்போராட்டம் காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
இந்தப் போராட்டம் நடத்துவதற்காக எங்களைத் தடம் புரண்ட கழகம் என்று சகோதரர். பி. ஜெய்னுல்லாபுதீனைபின்பற்றி, சகோதரர் அழைப்பாரேயானால் அதனை ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில்அவர் எங்கள் மீது இந்த அவதுறு பட்டம் சூட்டுவது எங்களுக்கு மறுமையில்அல்லாஹ்விடம் நற்கூலியைப் பெற்றுத் தரும்.
பொதுவான விஷயங்களில் ஒன்றுச் சேர்ந்து போராடும் கோட்பாட்டிற்கு எதிரானது அல்ல தமுமுக. கடந்த காலங்களில் தமுமுகவே இதற்கான முன்முயற்சிகளைச் செய்துபோராடியுள்ளது.
தினமலருக்கு எதிரான போராட்டம் மற்றும் நரேந்திர மோடியின் சென்னை வருகையின் போது நடத்தப்பட்டபோராட்டம் இதற்கு ஒரு எடுத்த காட்டு.
இந்த டிசம்பர் 6 ரயில் மறியல்பேராட்டத்தையும் ஒருங்கிணைந்து நடத்த தமுமுக தயார். விருப்பமுள்ளஅமைப்புகள் தமுமுக தலைமையை வரும் நவம்பர் 24க்குள் தொடர்பு கொண்டால்அவ்வாறு செய்வதற்கும் தமுமுக தலைமை தயாராக உள்ளது என்று இம்மடல் மூலம்தெரிவிக்குமாறு தமுமுக தலைமை இசைவு தந்துள்ளது.
தமுமுக என்பது சமுதாய நலனை முன்நிறுத்தி செயல்படும் அமைப்பு. ஏட்டிக்குப்போட்டியாகச் செயல்படும் அமைப்பு அல்ல.
கள உண்மைகளை அறிந்துபுரிந்து இனி கருத்துச் சொல்லுங்கள் என்பது என் வேண்டுகோல்.

பொறியாளர் ஷாநவாஸ்
செயலாளர்
தமுமுக - குவைத் மண்டலம்
-----------------------------------------------------
இந்த அறிவிப்பு குறித்து கருத்துச் ‍சொல்பவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- Blog Editor
------------------------------------------------------

Monday, November 17, 2008

பட்டாசு வெடிப்பும் முஸ்லிம்களின் நிலையும்.

பட்டாசு வெடிப்பும் முஸ்லிம்களின் நிலையும்.
------------------------------------------------------------

முஸ்லிம் சமுதாயமே சிந்திப்பீர்!


பட்டாசு வெடிக்கிறோம் என்ற பெயரில் கண்முன்‍னே பல லட்சம் ரூபாய்களை தீயில் பணச்சாம்பலாக்கிறோம்!


ஆதமுடைய மக்களே வீண்விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் வீண்விரயம் செய்வோர்களை அல்லாஹ் ஒரு போதும் நேசிப்பதில்லை. நிச்சயமாக விரயம்செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாவார்கள். (அல்-குர்ஆன் 7:31 & 17:27)


சமுதாயமே சிந்திப்பீர்!


பட்டாசு வெடிப்பதால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி பிறருக்கு துன்பமாக அமையலாமா?


முஸ்லிம்களில் சிறந்தவர் தன் கரத்தாலும், நாவாலும் பிறருக்கு துன்பம் தராதவரே. (நபிமொழி)


தகவல் பதிவு: JAQH, மாணவர் அணி, கோட்டை கிளை, கோவை.

Saturday, November 15, 2008

கலாச்சாரா சீரழிவிற்கு சட்ட அங்கீகாரம் தேடும் அன்புமணி ராமதாஸ்.

"ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க, இந்தியாவில் சட்டம் கொண்டு வருவோம்"
நடுவன் சுகாதாரா துறை அமைச்சர் அன்புமணி.


ஒரு பக்கம் தமிழ்மொழி, பண்பாடு, கலைகள் என்கிறார்கள். அவைகளுக்கெல்லாம் தாங்கள்தான் இன்றைய காவலர்கள் என்கிறார்கள். இன்னொரு பக்கம் சமூக நியாயங்களையே சவக்குழிக்கு அனுப்பும் வாதங்களை முன் வைக்கிறார்கள்.
~~~~~---~~~~~


நன்றி: குமுதம் ரிப்போர்டர்
-சோலை
ண்மையில் மெக்சிக்கோ நாட்டில் எய்ட்ஸ் ஒழிப்பு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க, இந்தியாவில் சட்டம் கொண்டு வருவோம் என்று அந்த மாநாட்டில் அவர் பேசியதாக திடுக்கிடும் செய்தி வந்தது.

ஆணும் ஆணும் சேர்ந்து குடும்பம் நடத்தலாம். பெண்ணும் பெண்ணும் சேர்ந்து கல்யாணம் செய்து கொள்ளலாம். இந்த வக்கிர உறவிற்குப் பெயர்தான் ஓரினச் சேர்க்கை என்பதாகும்.

இதற்கு ஒரு தமிழ் மகன் ஆதரவா? எண்ணிப் பார்க்கவே இதயம் நடுங்கியது. ஆணும் ஆணும் குடும்பம் நடத்தலாம். பெண்ணும் பெண்ணும் குடித்தனம் நடத்தலாம். இது என்ன கொடுமை? அப்படியானால் குடும்ப உறவுகள், மரபுகள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போக வேண்டுமா?

ஓரினச் சேர்க்கையை தமிழ்ச் சமுதாயம் அங்கீகரித்ததாகவோ ஆதரித்ததாகவோ எந்த இலக்கியத்திலும் எந்தத் தமிழ்க் கல்வெட்டிலும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் டெல்லி ஆங்கிலத் தொலைக்காட்சியைத் தற்செயலாகத் திருப்பினோம். அதிலும் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக மத்திய சுகாதார அமைச்சகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாக தகவல் தந்தனர்.

ஓரினச் சேர்க்கை என்ற அநாகரிகத்திற்கு ஆட்பட்டு விட்ட ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன்மீது மத்திய அரசின் கருத்தை உயர்நீதிமன்றம் கேட்டது.


`ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் மனுத் தாக்கல் செய்திருக்கிறது.

ஆனால், அன்புமணி ராமதாசின் மத்திய சுகாதாரத்துறை, `ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க வேண்டும்' என்று மனுத் தாக்கல் செய்திருக்கிறது.

விரும்பிய ஓர் ஆணும் இன்னொரு ஆணும் குடும்ப வாழ்க்கை நடத்தினால் அவர்களுக்குத் தண்டனை தரக் கூடாது என்பதுதான் உயர்நீதி மன்றத்தை நாடிய ஓரினச் சேர்க்கையாளரின் கோரிக்கை. ஆஹா! அற்புதம்! அது வேதங்கள் கொள்கை கோட்பாடு என்று அன்புமணி ராமதாசின் மத்திய சுகாதாரத்துறை மனுத்தாக்கல் செய்திருக்கிறது.

ஆனால், ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம் என்று உள்துறை தாக்கல் செய்த மனு கூறுகிறது. நல்லவேளை அந்தத் துறைக்கு சீழ்பிடித்த சிந்தனைகள் உதயமாகவில்லை.

`தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் ரகசியமாக மறைமுகக் குடித்தனம் நடத்துகின்றனர். அவர்களுக்கு சுதந்திரம் அளித்து விட்டால் பகிரங்கமாக வாழ்வார்கள். அப்படி வாழும் போது எய்ட்ஸ் நோய் வர வாய்ப்பில்லை. மறைமுக உறவுகள் அந்த நோய் பரவுவதற்கு வழிவகுக்கும்' என்பது மத்திய சுகாதாரத் துறையின் வாதம்.

ஓரினச் சேர்க்கை என்பது இந்திய கலாசாரச் சீரழிவின் உச்சகட்டம். அதனை அனுமதிப்பது என்பது தமிழ்ப் பண்பாட்டிற்கு விதிக்கப்படும் மரணதண்டனை.

முன்னர் ரஷ்யா சென்றிருந்தோம். மாஸ்கோ வானொலி தமிழ் ஒலிபரப்பில் சகோதரர் மணிவர்மா பணி செய்து கொண்டிருந்தார். அவர் கார்வண்ண கரியமேனியன். அவரை சோவியத் சகோதரி காதலித்து மணம் புரிந்து கொண்டார். அவர் ஆப்பிள் நிற அழகி. அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது, `எப்படி அம்மா இவரைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டீர்கள்?' என்று கேட்டோம். கலகலவெனச் சிரிப்பலைகள் எழுந்தன.

அந்தச் சகோதரி சொன்னார். `நான் தமிழ் கற்றவள். தமிழர் பண்பாடு தெரிந்தவள். அந்தப் பண்பாடு வேறு எங்கும் இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் உயர்ந்த பண்பாடாகும். அந்தப் பண்பாட்டை மணந்திருக்கிறேன்!' என்றார் அந்தச் சுந்தரி.

நாம் எவ்வளவு பெரிய நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் என்பது அப்போதுதான் என் மூளையில் உறைத்தது. ஆனால் இங்கே அன்புமணிகள் அதிய ராகம் பாடுகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் புகைப்படத்தோடு ஒரு செய்தி வந்தது. வயது முதிர்ந்த ஜெர்மன் தம்பதியர் ராமேசுவரம் வந்தார்கள். ஆலயம் சென்றார்கள். தமிழர் பண்பாட்டின்படி இதுவரை வாழ்ந்திருக்கிறோம். மீண்டும் எங்களுக்குத் தமிழர் மண முறைப்படி திருமணம் நடத்துங்கள் என்று அவர்கள் கோரினர். மணவிழாவும் நடந்தது.

இந்தியாவில் எத்தனையோ தேசிய இனங்கள் இருக்கின்றன. அதில் தமிழ் மண்ணின் திருமண முறைதான் தலைசிறந்தது என்பது அந்த ஜெர்மன் தம்பதியர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

நமது குடும்ப உறவுகள் - மண முறைகள் இன்று நேற்று தோன்றியது அல்ல. சிந்துவெளி நாகரிகம் கண்ட எம் மூதாதையர் தந்த சீதனம்தான் உலகம் மெச்சும் நமது உறவுமுறைகள். அந்த உறவின் ஒவ்வொரு அம்சமும் அர்த்தம் பொதிந்தவை. இன்றுவரை அந்த நாகரிகத்தின் ஈரவரிகள் உலர்ந்து போகவில்லை. காலவெள்ளத்தில் நமது குடும்ப உறவுகள் கரைந்து போனதில்லை.

ஆனால் இன்றைக்கு அந்தப் பண்பாட்டிற்கே கல்லறை எழுப்பத் துடிக்கிறார்கள். மேலைநாடுகளின் வக்கிர மனிதர்கள் வளர்க்கும் விபரீத உறவுகளுக்கு இங்கே அங்கீகாரம் தேடுகிறார்கள். வேரில் வெந்நீர் ஊற்றப் பார்க்கிறார்கள்.

லட்சம் பேருக்கு அதிகபட்சம் ஐம்பது பேர் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள். நாங்கள் இப்படித்தான் வாழ்வோம். எங்களை சமூகம் அங்கீகரிக்க வேண்டும். சட்டத்தைத் திருத்துங்கள் என்று மேலைநாடுகளில் மைதானங்களிலும் பூங்காக்களிலும் அவர்கள் கட்டிப் புரள்கிறார்கள். அவர்களுக்காக வாதாட அடகுபோன சிலரும் இருக்கிறார்கள்.

மிருகங்களில் ஓரினச் சேர்க்கை உண்டா? இல்லை. பறவைகளில் ஓரினச் சேர்க்கை உண்டா? இல்லை. ஆனால் குப்பைமேட்டு மனிதர்கள் சிலர் அந்தக் கொடுமையான வாழ்க்கை நடத்துவோம் என்கிறார்கள்.

அவர்களுக்கு எங்கிருந்து எப்படிப் பணம் கொட்டுகிறது என்றே தெரியவில்லை. செல்வந்தர்களில் அந்தப் பழக்கம் உள்ளவர்கள் மேலைநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள்தான் சிம்மாசனங்களையே வளைக்க முதலீடு செய்கிறார்கள் என்கிறார்கள்.

ஆனால் இந்தப் பழம் பெரும் பூமி அத்தகைய அநாகரிகச் சட்டங்களை அண்ட விட்டதில்லை. நமது சட்டம் என்ன சொல்கிறது? ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 397வது சட்டப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று கூறுகிறது.

ஆனால் அந்தத் தண்டனையை ரத்து செய்து அந்த அநாகரிக உறவை அங்கீகரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறுகிறார். அண்மையில் சென்னை வந்த அவர், ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு பிரதமரைச் சந்திப்பேன். கோரிக்கை மனுக் கொடுப்பேன் என்றார்.

ஓரினச் சேர்க்கையை அனுமதித்த பின்னரும் எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோய் பரவாது என்பதற்கு அவர் என்ன உத்தரவாதம் தருகிறார்?பால்வினை நோய் பரவுவதற்கு ஓரினச் சேர்க்கை ஒரு காரணம் என்றால், அதனைத் தடுப்பதற்குத்தானே வழிவகை காண வேண்டும்? அதற்குப் பதிலாக அந்தக் கலாசாரச் சீரழிவை அங்கீகரித்தால் போதும் என்கிறார் அன்புமணி ராமதாஸ்.

ஒரு பக்கம் புகைபிடித்தால் 500 ரூபாய் வரை அபராதம் என்கிறார். இன்னொரு பக்கம் மானக்கேடான ஓரினச் சேர்க்கைக்கு விதிக்கும் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்கிறார். இப்படி வேடிக்கை மனிதர்கள் விநோதத் தீர்ப்பு எழுதுகிறார்கள்.

சென்ற வாரம் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜை நிருபர்கள் சந்தித்தனர். `ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்குமா' என்று கேட்டனர். `கர்மம் கர்மம்' என்றார் அவர். `பின்னர் ஏன் அதற்காக வாதாடுகிறார்கள்' என்று கேட்டனர்.

`எனக்கு வயதாகிப் போய் விட்டது. அவர்களையே கேளுங்கள்' என்றார் பரத்வாஜ்.

ஒரு பக்கம் தமிழ்மொழி, பண்பாடு, கலைகள் என்கிறார்கள். அவைகளுக்கெல்லாம் தாங்கள்தான் இன்றைய காவலர்கள் என்கிறார்கள். இன்னொரு பக்கம் சமூக நியாயங்களையே சவக்குழிக்கு அனுப்பும் வாதங்களை முன் வைக்கிறார்கள். அதிசய ராகம் பாடுகிறார்கள்.

Friday, November 14, 2008

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காத காவல் அதிகாரி.

சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதலைத் தடுக்கத் தவறிய காவல் துறை!

ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்களுடன் அங்கிருந்த காவல் அதிகாரி எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?


என் நெஞ்சு எரிகிறது! அறிஞர் அண்ணா சொன்னது இது. 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி இரவு, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது நடந்த கொடுமை அது.


தஞ்சை தரணியில் கீழ் வெண்மணி கிராமத்தில் கூடுதலாக கூலி கேட்டுப் போராடிய ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களை, அவர்கள் குடிசை வீட்டில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தபோது தீ வைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.அந்தச் செய்தி கேட்டு முகம் கருத்து, வெட்கத்தால் நாணி, தலை குனிந்த முதலமைச்சர் அண்ணா கீழ் வெண்மணி நோக்கி புறப்படத் தயாராக இருந்தபோது அவரிடம் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் அந்நிகழ்வு குறித்து கருத்துக் கேட்டார்.


வெறுமையுடன் அவரைப் பார்த்த அண்ணா, “எனது ஆட்சியிலா இது நடைபெறுகிறது? என் நெஞ்சு எரிகிறது” என்று கூறினார் என்று அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை அருகில் இருந்து பார்த்த மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறியதைக் கேட்டுள்ளோம். அந்த நிலைதான் நமது நாட்டு மக்கள் பலருக்கும் இன்று ஏற்பட்டிருக்கும்.


சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடந்த அந்த மோதலை, கீழே விழுந்து கிடக்கும் மாணவரை நான்கைந்து பேர் கொலை வெறியுடன் கட்டையால் அடிப்பதை, அதற்கு முன்னர் அடிப்பட்டுக் கிடந்த அந்த மாணவர் அடிபடும் தனது சக மாணவரைக் காப்பாற்ற கத்தியை எடுத்துக் கொண்டு பாய்வதை... நாள் முழுவதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அந்த காட்சிகளை, பத்திரிக்கைகளில் வெளியான அந்தப் புகைப்படங்களை, மருத்துவமனையில் கட்டுடன் சிகிச்சை பெற்றுவரும் அந்த மாணவர்களின் படங்களை பார்‌ப்போர் நெஞ்சமெல்லாம் - அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணாவிற்கு ஏற்பட்டது போலவே - பதறியிருக்கும்.


படிக்கச் சென்ற மாணவர்கள், அதுவும் சட்டம் படிக்கச் சென்ற மாணவர்கள், தாங்கள் அடிக்க வேண்டிய மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு வெளியே வருவதற்காக கட்டை, கம்பி, மண் வெட்டி ஆகியவற்றுடன் காத்திருந்த காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமின்றி, இரண்டு மாணவர்களைப் மற்ற பல மாணவர்கள் கொலை வெறியோடு தாக்குவதையும் எவ்வித பதற்றமும் இன்றி பார்த்துக்கொண்டிருந்த காட்சியையும் கண்ணுற்ற மக்களுக்கு உள்ளபடியே நெஞ்சு பற்றி எரிந்திருக்கும்.


ஒரு போர்‌க்களம் போல மாணவர்கள் அடித்துக் கொண்டு சாகிற நிலையிலும், யாருக்கோ வந்த விருந்து போல கவலைப்படாமல் தனது அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த சட்டக் கல்லூரியின் முதல்வரின் நடத்தை, அவர் என்ன கல்லூரி முதல்வரா அல்லது அடிதடிக் கூட்டத்தின் தலைவரா என்று கேள்வியையும் எழுப்பியிருக்கும்.


பிரச்சனை ஏற்படப்போகிறது என்று தெரிந்தும், ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்களுடன் அங்கிருந்த காவல் அதிகாரி எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று தெரியவில்லை. தடுப்பு நடவடிக்கை எடுக்காத ஒரு காவல் அதிகாரி அத்தனை காவலர்களுடன் எதற்காக ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பிருந்தே அங்கு இருந்ததார் என்பதும் புரியவில்லை.


கல்லூரி முதல்வர் புகார் தரும் வரை நடவடிக்கை எதையும் எடுக்கப் போவதில்லை என்று முடிவோடு இருந்த அந்த காவல் அதிகாரி, எதற்காக தனது படையினருடன் அங்கு வந்து காத்திருக்க வேண்டும்? திரைப்படத்தில் கூட இப்படியொரு காட்சியைக் காணாத மக்களுக்கு காவல் துறையினரின் நடவடிக்கை மிகவும் வினோதமாகத் தெரிகிறது.


இதைப்பற்றி பேசிய மற்ற மாணவர்கள், இதையெல்லாம் முன்பே தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். எனவே, கல்லூரி நிர்வாகம் முதல் காவல் துறை வரை தடுத்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வை, நடக்க விட்டுவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.


தலைவர்களைக் கேவலப்படுத்திய மாணவர்கள்! நடந்த வன்முறை நம்மை பதறச் செய்தது என்றால், இந்த நிகழ்வுகளுக்கான காரணம் நம்மை வெட்கித் தலைகுனியச் செய்வதாக உள்ளது.

இக்கல்லூரி மாணவர்கள் சிலர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியை கொண்டாடுவதற்கு அச்சடித்த அழைப்பிதழில், தாங்கள் படிக்கும் கல்லூரியின் பெயரில் உள்ள ‘டாக்டர் அம்பேத்கர்’ பெயரை தவிர்த்திருத்தனராம்.


அவரது பெயரை ஏன் தவிர்த்தீர்கள் என்று மற்ற சில மாணவர்கள் கேட்க, சாதி ரீதியாக அவர்களுக்குள் புகைச்சல் ஏற்ப்பட்டதாம். அதுவே இந்த அளவிற்கு ஒரு காட்டுமிராண்டித்தனத்திற்கு வித்திட்டுள்ளது என்று கூறுகின்றனர்.


இது ஒன்றும் புதிதல்ல. தமிழ்நாட்டின் பல கிராமங்களில் இன்று நேற்றல்ல, அரை நூற்றாண்டுக் காலமாக நடந்துவரும் மோதல் நாம் அறியாததல்ல. கிராமத்தில் வாழும் மக்களுக்கு படிப்பறிவிருக்காது, சிந்திக்கவும் தெரியாது, சிந்திக்க நேரமும் இருக்காது.


ஆனால் மாணவர்களுக்கு? அதுவும் சட்டம் படிக்கவந்த மாணவர்களுக்கு தெரியாதா இவ்விரு தலைவர்களும் யாரென்று? இதுதான் வருத்தமளிக்கும் ஆச்சரியம்.


நமது நாட்டின் சட்ட மேதை, நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்தவர், இன்றளவும் இந்த அளவிற்கு நாம் ஒரு ஜனநாயகத்தைப் பெற்று, கருத்துரிமை சுதந்திரம் பெற்று உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக திகழ்கிறோம் என்றால் அதற்கு காரணமானவர்களில் ஒருவர் பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் என்பது கூட புரியாதா? தெரியாதா?


தான் சார்ந்த சமூகம், உடலுழைப்பின் மூலம் சமூக வாழ்விற்கு தனது பங்களிப்பை முழுமையாக செலுத்திய பின்பும் உரிமை மறுக்கப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக ஒடுக்கப்படுவது ஏன் என்று குரல் எழுப்பி, அதற்காக தன் வாழ் நாள் முழுவதும் போராடி, அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியத்தை மற்றத் தலைவர்களுக்கும் புரியவைத்து, இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் ஜனநாயகத்தை அவர்களும் நுகரச் செய்ய வழி செய்தவரல்லவா அம்பேத்கர்? அவருடைய பெயரை தவிர்ப்பதற்கு சட்டம் பயிலும் மாணவர்களுக்கு எப்படி மனம் வருகிறது? பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆழமான கருத்தாடல்களை படித்தவர்களா இவர்கள்? அப்படித் தெரியவில்லை.


சாதியத்தின் பிடி அந்த அளவி்ற்கு இவர்களுடைய சிந்தனையை கட்டிப்போட்டிருக்கிறது என்றால், இப்படிப்பட்ட மாணவர்கள் எப்படி நாளை நீதிமன்றங்களில் நியாயத்தைப் பெற்றுத் தருவார்கள்? அம்பேத்கரைத் தவிர்த்துவிட்டு இந்த நாட்டில் சட்டம் ஏது? சட்டத்தின் ஆட்சி ஏது? இந்த இரண்டு தலைவர்களும் ஏதோ சாதியத்திற்காகப் போராடி உயிரைத் துறந்தவர்கள் போலல்வா இருக்கிறது இவர்களின் வெறியும் செயலும்.


சரி அம்பேத்கர் பெயரைத் தவிர்த்தவர்களை எதிர்த்துப் புறப்பட்ட அந்த மாணவர்கள் யாராவது அவருடைய நூல்களை ஓரளவிற்காவது படித்திருப்பார்களா? படித்திருந்தால் இந்தச் சமூகத்தில் புறையோடிப் போயிருக்கும் இந்த சாதிய அசிங்கத்தை சிந்தனையாலும், ஒருமித்த செயலாலும் துடைத்தெறிய முயன்றிருப்பார்களே? இப்படி கட்டையை தூக்கிக்கொண்டு காத்திருந்து அடிப்பதில் கவனத்தை செலுத்தியிருக்க மாட்டார்களே? இந்தத் தேசத்தின் எதிர்காலத்திற்காக வாழ்ந்த இரண்டு மாபெரும் தலைவர்களை சாதியத் தலைவர்களாக்கி, அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு சிறுமைபடுத்தும் சில அரசியல், சமூதாய அமைப்புகளைப் போல, மாணவர்களும் நடந்துகொண்டிருப்பது நம்மை வெட்கித் தலை குனியச் செய்கிறது.


விலகுமா இந்த சாதிய மாயை? தெளியுமா நமது சமூக சிந்தனை?

Tuesday, November 11, 2008

மாலேகான், கான்பூர் குண்டு வெடிப்புகளுக்கு இந்து தீவிரவாதிகளின் தொடர்பு காவல்துறையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவும் உறுதி செய்துள்ளன.

மாலேகான், கான்பூர் குண்டு வெடிப்புகளுக்கு இந்துத்துவா தீவிரவாதிகளின் தொடர்பை உ.பி காவல்துறையும், அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவும் உறுதி செய்துள்ளன.
---~~~---
1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின்னர் நடந்த பல்வேறு மத ரீதியான குற்றச் செயல்களில் பூபேந்தர் சிங்கிற்கு என்ற இந்து தீவிரவாதிக்கு தொடர்பு இருந்தது மட்டுமின்றி, விஸ்வ ஹிந்து பரிஷத், துர்கா வாஹினி, சிவசேனையின் ராஷ்ட்ரிய முக்தி வாஹினி ஆகிய இயக்கங்களுடன் பூபேந்தருக்கு தொடர்பு இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
---~~~---
ராட்டிய மாநிலம் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்களுக்கும், கான்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட இரண்டு பேருக்கும் தொடர்பு உள்ளதை உத்தரப் பிரதேச காவல்துறையும், அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவும் உறுதி செய்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி கான்பூர் நகரத்தில், ராஜீவ் நகர் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பஜ்ரங் தள் இயக்கத்தை சேர்ந்த பூபேந்தர் சிங் சோப்ரா, ராஜீவ் மிஸ்ரா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர்.அவர்கள் உயிரிழந்த இடத்தில் இருந்து ஏராளமான அளவிற்கு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
வெடி குண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தபோது அது வெடித்து அவர்கள் உயிரிழந்தது என்று உறுதி செய்யப்பட்டது.இந்த நிலையில், மாலேகான் குண்டு வெடிப்பில் நேரடி தொடர்புடையவராக கைது செய்யப்பட்டிருக்கும் பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாகூர் உள்ளிட்ட கும்பலிற்கு, மராட்டியத்தையும் தாண்டி இந்து மதத் தீவிரவாதிகளிடம் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அது மட்டுமின்றி, மிக முக்கியமாக, மாலேகானில் வெடித்த குண்டுகளும், கான்பூரில் வெடித்த குண்டுகளும் ஒரே வகையைச் சேர்ந்தவையாக இருக்கிறது என்று தடவியல் துறை உறுதி செய்துள்ளதாக உ.பி. காவல் துறை தெரிவித்துள்ளது. ஆனால் குண்டு வெடிப்பில் இறந்த இருவருடன் தொடர்புடையவர்கள் பற்றி எந்த ஆதாரமும் உ.பி. காவல் துறைக்கு கிட்டவில்லை.
1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின்னர் நடந்த பல்வேறு மத ரீதியான குற்றச் செயல்களில் பூபேந்தர் சிங்கிற்கு தொடர்பு இருந்தது மட்டுமின்றி, விஸ்வ ஹிந்து பரிஷத், துர்கா வாஹினி, சிவசேனையின் ராஷ்ட்ரிய முக்தி வாஹினி ஆகிய இயக்கங்களுடன் பூபேந்தருக்கு தொடர்பு இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
மாலேகான் தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து ஆராய்ந்துவரும் மராட்டியத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல் பிரிவினருடன் தொடர்பு கொண்டு செயலாற்றி வருவதாக தெரிவித்த உ.பி. காவல் துறையினர், கான்பூரில் கொல்லப்பட்ட பூபேந்திரின் செல் பேசியை ஆராய்ந்தபோது இந்து மத தீவிரவாதிகளுடன் அவருக்கு பரவலான தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.“எங்களுடைய விசாரணையின் ஒரே இலக்கு என்னவெனில், பிரக்யா சிங் தாக்கூருக்கும் பூபேந்தருக்கும் தொடர்பு இருந்ததா என்பதை உறுதிசெய்வதே” என்று உ.பி. பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை துணை அமைச்சராக உள்ள சிறீபிரகாஷ் ஜெய்ஸ்வால் வெற்றி பெற்றத் தொகுதி கான்பூர் என்பதால், இந்த வழக்கில் மத்திய அரசின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

ஓபாமாவின் இந்திய ஆலோசகர் சோனால் ஆர்எஸ்எஸுடன் தொடர்பா?

ஓபாமாவின் இந்திய ஆலோசகர் சோனால் ஆர்எஸ்எஸுடன் தொடர்பா?


நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தியப் பெண்மணி சோனால் சிங்குக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் இருப்பதாக, 3 இந்திய அமெரிக்க அமைப்புகள் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனஆனால், தனக்கு ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது அபத்தமானது. இது பிரிவினை அரசியல் என்று சோனால் ஷா மறுத்துள்ளார்.


சோனால் ஷாவின் குடும்பம் குஜராத்தைச் சேர்ந்ததாகும். இவரது குடும்பத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் நல்ல தொடர்புண்டு.


இந் நிலையில் அமெரிக்காவின் இனப்படுகொலைக்கு எதிரான இந்திய கூட்டமைப்பு, இந்திய-அமெரிக்க பல் சமூக கூட்டமைப்பு, மதச்சார்பற்ற மற்றும் ஒற்றுமைக்கான இந்திய அமைப்பு ஆகிய 3 அமைப்புகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள சோனால் ஷா, தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை ஊக்குவிக்கும், தூண்டி விடும் அமைப்பாகும்.


எனவே இந்த நியமனம் எங்களுக்கு அதிருப்தியை அளிக்கிறது. இதுகுறித்து பிற இந்திய அமெரிக்க அமைப்புகளுடன் நாங்கள் ஆலோசனை நடத்தவுள்ளோம்.தனக்கு வி.எச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுடன் உள்ள தொடர்புகள் குறித்து சோனால் ஷா தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


அமெரிக்க அதிகார வட்டத்திற்குள் இந்துத்வா சக்திகள் ஊடுறுவ முயற்சிப்பது குறித்து அமெரிக்க அரசியல்வாதிகளிடமும், பொருளாதார நிபுணர்களிடமும் எடுத்துக் கூறவுள்ளோம். இதற்கான பிரசாரத்திலும் நாங்கள் ஈடுபடவுள்ளோம்.


தீவிரவாத, மதவாத போக்குடைய அமைப்புகளுடன் தொடர்புடைய இந்தியர்கள் அமெரிக்க அதிகார வட்டத்திற்குள் வந்து விடாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு சக இந்திய - அமெரிக்க அமைப்புகளை கேட்டுக் கொள்கிறோம்.சோனால் ஷாவை நியமித்தது ஓபாமாவின் தவறல்ல. மாறாக நாம் சரியான முறையில் விழிப்புணர்வுடன் இல்லாததே அதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இனப் படுகொலைக்கு எதிரான இந்தியக் கூட்டமைப்பு கொடுத்த எதிர்ப்புக் குரலைத் தொடர்ந்துதான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு கடந்த 2005ம் ஆண்டு விசா வழங்க மறுத்தது என்பது நினைவிருக்கலாம்.


புஷ் நிர்வாகத்திடமிருந்து ஓபாமாவிடம் நிர்வாகப் பொறுப்புகளை மாற்றுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவில், சோனால் சிங்கும் இடம் பெற்றுள்ளார் என்பது குறி்ப்பிடத்தக்கது.


ஆர்எஸ்எஸுடன் தொடர்பில்லை: சோனால் மறுப்பு


இதற்கிடையே தனக்கு ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற இந்துத்வா அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது அபத்தமானது. இது பிரிவினை அரசியல் என்று சோனால் ஷா கூறியுள்ளார்.அவர் கூறுகையில், எனது தனிப்பட்ட அரசியல் கொள்கைகளும், வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளின் கொள்கைகளும் வேறு வேறானவை. அதுபோன்ற எந்த அமைப்பின் கொள்கைகளுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்திய அரசியலுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. தொடர்புபடுத்தும் நோக்கமும் எனக்கு இல்லை.


குஜராத் பூகம்ப நிவாரணப் பணிகளில் பிற மனிதாபிமான அமைப்புகள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நான் சேவையாற்றியுள்ளேன். அதற்காகப் பெருமைப்படுகிறேன்.


பிரிவினைவாத அரசியலை நான் ஒருபோதும் ஆதரித்ததில்லை. அதை வெறுக்கிறேன். மதவாத, இனவாத, வன்முறையைத் தூண்டும் அரசியலுக்கு நான் எப்போதும் எதிராகவே இருந்துள்ளேன். மதங்களையும், இனத்தையும் அரசியல் கருவியாக பயன்படுத்துவதை நான் விரும்பியதில்லை.


எனக்கும், இந்துத்வா அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுவது வதந்திகளே ஆகும். ஆதாரமற்ற புகார்கள் இவை.


2001ம் ஆண்டு ஏற்பட்ட குஜராத் பூகம்பத்தைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நான் செயல்பட்டேன். அதை பெருமையாகவே கருதுகிறேன்.


இன்டிகார்ப்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் என்ற முறையில் எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை பெருமையாகவே கருதுகிறேன்.


இதைத் தவிர்த்த இந்துத்வா அமைப்புகளின் எந்த வகையான கொள்கைகளையும் நான் ஆதரித்ததில்லை. பின்பற்றியதில்லை. ஒருபோதும் அவர்களுக்கு இணக்கமாக இருந்ததில்லை.


அதிபராக ஓபாமா தேர்வாகியிருப்பதால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அதிகார மாற்றப் பணிகளில் நான் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளேன்.ஒரு இந்திய- அமெரிக்கராக, ஓபாமா - பிடன் அதிகார மாற்ற ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருப்பதை கெளரவமாக கருதுகிறேன். அதிபரால் நியமிக்கப்பட்ட குழுவில் இடம் பெறுவது என்பது மிகவும் சந்தோஷமானது. அதுபோன்ற சமயத்தில் இதுபோன்ற வதந்திகள் எழுவது இயற்கைதான் என்று சோனால் ஷா கூறியுள்ளார்.

ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பிலும் இந்து தீவிரவாத கும்பல்!

ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பிலும் சங்கும்பலுக்கு தொடர்பு!
இந்து தீவிரவாத பெண் சாமியார் சிக்குகிறார்!!நன்றி: http://www.tmmk.in/news/999577.htm


மாலேகான் குண்டுவெடிப்பு தொடர் பாக குற்றம்சாட்டப்பட்ட பெண் பயங்க ரவாதி பிரக்யாசிங் மற்றும் ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னல் புரோஹிதர் என்ற அதிகாரி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் சிலரும் சதிச்செயலில் தொடர்பு டையவர்களாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இந்தியாவை பரபரப்பில் ஆழ்த்தின.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படை மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில தீவிரவாத தடுப்புப் படையினரும் இவர் களை கண்காணித்தே தீரவேண்டிய நிலைக்கு அவர்களின் பயங்கரவாதச் செயல்களின் விளைவு இருந்தது. சங் பரிவார் சதிவலைப் பின்னல்கள் இந்தியா முழுவதும் பரவி நாட்டையே அபாயத்தில் கொண்டு சென்றுள்ளதாக நடுநிலை யாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியான பெண் சாமி யாரை ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரிக்க விரும்பு வதாக ஆந்திர மாநில காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஹிந்துத்துவ பயங்கரவாத ஆக்டோபஸ் கரங்கள் இந்தியா முழுவதும் நீண்டுள்ள தகவல்கள் நாட் டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடிப்பு நிகழ்ந் தது. ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் தொழுகை செய்யும் அந்தப் பள்ளி வாசலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த் தியது, அதில் பலர் பலியானார்கள். பதற்றம் அடைந்த மக்கள் அங்கு மிங்கும் ஓடினர். ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடக்க காவல்துறை கொடூரமான முறைகளைக் கையாண் டது. முஸ்லிம் இளைஞர்கள் மூர்க்கத் தனமாக தாக்கப்பட்டனர். குண்டுவெடிப் பில் இறந்தவர்களை விட அதிகமாக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்த வர்களே அதிகம் என்ற நிலை ஏற்பட்ட தால் மனித உரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளிவாசலில் குண்டுவெடித்தால் என்ன? அதற்கும் முஸ்லிம் இளைஞர் களைத்தான் வளைத்துப் பிடிப்போம், ஏனெனில் சொந்த வீட்டில், ஏன் தனக்குத் தானே குண்டு வைத்துக் கொள்ளும் கோமா ளிக் கிறுக்கர்களா கவே முஸ்லிம் களைக் கருதுகி றோம் என சொல்லா மல் சொல்லும் வித மாக முஸ்லிம் களைத் துன்புறுத் தும் கொடுமையையும் ஆந்திர காவல் துறையினர் நிகழ்த்தினார்கள். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அறி வித்த டாக்டர் ராஜசேகர ரெட்டியின் இமேஜ் பொடிப் பொடியாய் நொறுங் கியது. குஜராத் இனப் படுகொலையை தவிர்த்து விட்டுப் பார்த்தால் முஸ்லிம் களைக் கருவறுக்கும் வேலைகளை செய்வதில் இந்திய மாநிலங் களிலேயே முதலிடத்தை மகாராஷ்டிர மாநில அரசும், இரண்டாவது இடத்தை ஆந்திராவும் பெற்று விட்ட தாக அன்றே மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருந் தனர். உண்மை அறியும் குழுவினரைக் கூட கைது செய்து கொடுமை செய்யும் அளவுக்கு ஆந்திர அரசின் மூர்க்கத் தனம் இருந்தது. ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு செல்லும் போக்கு உண்மைக் குற்ற வாளிகளைக் கண்டுபிடிக்கும் நோக்கத்து டன் இல்லை என நடு நிலையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில் முஸ்லிம்கள் நிறைந்த மாலேகானில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. பள்ளிவாசல் களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. முஸ்லிம்கள் அதிகமாக பலியான நிகழ் விலும் கூட முஸ்லிம்களை பலிகடா வாக்கிய கொடூரங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து மக்களின் நம்பிக்கை தகர்ந் தது. இந்த நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சங்பரிவார் பயங்கரவாதி பெண் சாமியார் பிரக்யாசிங் மற்றும் முன்னாள், இந்நாள் ராணுவ அதிகாரிகளின் கைவரிசை இருப்ப தாக செய்திகள் வெளிவரத் தொடங்கி யதை அடுத்து மகாராஷ்டிர மாநில தீவிர வாத தடுப்புப் படையின் அதிரடி புலனாய்வின் சிக்கிய சங்கும்பல் தீவிர விசா ரணை வளையத்தில் சிக்கியது.

அதனைத் தொடர்ந்து ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப் பிலும் இந்த காவி பயங்கரவாதிகளின் தொடர்பு இருக்கலாம் என பூர்வாங்க சந் தேகத்தை ஆந்திர காவல்துறை எழுப்பியதோடு, அது குறித்த விசாரணையிலும் குதித்திருக்கிறது. இதற்காக பெண் சாமியார் பிரக்யா சிங் விசாரிக்கப்படுவார் என ஆந்திர காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இது குறித்து மும்பை சென்று மகாராஷ்டிர காவல்துறை அதிகாரிகளை சந்தித்து புலனாய்வு குறித்து தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியா கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பெண் சாமியார் உள்ளிட்ட சங்பயங்கரவாதிகள் ஆந்திர காவல்துறையினரால் விசாரிக்கப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கிடுக்கிப் பிடிக்குள் வி.ஹெச்.பி.

மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக சங்பரி வார் சதிகாரர்கள் தொடர்ந்து சிக்கிவரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் மகாராஷ்டிர மாநில காவல் துறையினர் தீவிர புலனாய்வில் இறங்கியிருப்பதாக தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தெரிவித்திருக்கிறார். முன்னாள் ராணுவ புல்லுருவி குல்கர்னியுடன் குஜராத் மாநில விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களுடனான சதித் தொடர்பு குறித்தும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்ததை யடுத்து குஜராத் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் தீவிர விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். மாவட்ட அலுவலகத்தில் குண்டு வெடிப்பு

நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் சங்கும்பலை அரசு தடை செய்வது எப்போது?
வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். மாவட்ட அலுவலகத்தில் குண்டு வெடிப்பு!
தேச துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஆர்.எஸ்.எஸ். இந்து தீவிரவாத அமைப்பை இந்திய அரசு உடனே தடை செய்ய வேண்டும்.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் செருவாஞ்சேரியில் உள்ள ஆர்.எஸ்எஸ். மாவட்ட அலுவலகத்தில் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த‍ நேரத்தில் குண்டு வெடித்து பிரதீப், திலீபன் என்ற இரண்டு இந்து தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் சங்கும்பலை அரசு தடை செய்வது எப்போது?

Monday, November 10, 2008

போதைக்காக பாம்புக்கடி: விபரீத மரணங்களுக்கு முன் தடுத்துநிறுத்துமா தமிழகஅரசு?

போதைக்காக உயிரை பணயம் வைக்கும் பாம்புக்கடி பயங்கரம்!

விபரீத மரணங்களுக்கு முன் தடுத்துநிறுத்துமா தமிழகஅரசு?

`ஸ்..ஸ்... ஸ்...' சீற்றத்துடன் அந்தக் குட்டிப் பாம்பு நாக்கை நீட்டி உதட்டை முத்தமிடத் துடிக்கிறது... ஒவ்வொரு முறை சீறும் பொழுதும் விஷம் துளித் துளியாய், அரிசி போன்ற அதன் பற்களில் நுனியில் தேங்குகிறது.
நன்றி: குமுதம் 12/11/2008


பாம்பைக் கையில் பிடித்திருப்பவர் கொஞ்ச நேரம் அதன் போக்கில் வளைய, நெளிய விட்டுவிட்டு, சட்டென தன் இருவிரல்களுக்கிடையில் அதன் தலையை கிடுக்கிப்போல் இறுக்கிப் பிடிக்கிறார். பாம்பின் உடம்பும் வாலும் கைகளில் பின்னிப் பிணைய, கருநிற நாக்கு எதிரில் இருப்பவரின் உதட்டை மோப்பம் பிடிக்கிறது.


பாம்பைக் கையில் பிடித்திருப்பவர், ``பார்ட்டி... பைட்டுக்கு ரெடியா?'' என்று கேட்க, எதிரில் இருப்பவர் சில வினாடிகள் இமைக்காமல் அந்தப் பாம்பையே வெறிக்கப் பார்க்கிறார். பின் மெல்ல தன் கீழ் உதட்டை இடதுகையால் கீழ் நோக்கி இழுக்க, உட்புற உதட்டின் மென்மையான பகுதியில் சடக்கென ஒரு கடி. குட்டிப்பாம்பு குறி வைத்து அந்த இடத்தில் தன் பற்களை பதிய வைத்ததும் பார்த்துக்கொண்டிருந்த நமக்கு குப்பென வியர்த்தது.


கடிபட்டவர் கண்களை மூடி, சுவரோரம் கால்களை நீட்டி சாய்கிறார். முத்து முத்தாய் முகத்தில் வியர்வைத் துளிர்க்க, கைகளும் கால்களும் தளர்ந்து போகிறது. தலைக்கேறிய விஷம் மூளை நரம்புகளின் முடிச்சுகளை அறுத்தெறிய மரணத்திற்கு மிக நெருக்கத்தில் சென்ற இதயம், சில வினாடி நின்று பின் சீராகத் துடிக்கிறது... துவண்டு விழுந்த தலை கொஞ்சம் நிமிர்கிறது. நமக்குப் போன உயிர் திரும்பி வந்தது.


``எல்லாம் ரெண்டு நிமிஷத்துல சரியாகிடும்'' என்று பதட்டமில்லாமல் சொல்லிய பாம்புக்காரர், பக்கவாட்டில் துளைகள் போடப்பட்ட ஒரு டிஃபன் கேரியரில் அந்தப் பாம்பை விட்டார். ஒன்றரையடி நீளமே இருந்த அந்த விஷப்பாம்பு அதில் சுருண்டுப் படுத்துக்கொண்டது.அவர் சொன்னது மாதிரியே கடிபட்டவர் ஐந்து நிமிடங்களில் ஒரு பரவசமானப் புன்னகையுடன் நம்மை நிமிர்ந்து பார்த்தார். தள்ளாட்டமின்றி எழுந்து நின்றவர் பர்ஸில் இருந்து 2500 ரூபாயை எடுத்து பாம்புக்காரரிடம் கொடுக்க, பாம்பைக் கொண்டு வந்தவர் பணத்துடன் புறப்படத் தயாரானார். அதற்குள் வெளியில் மழை பிடிக்க, தயங்கி நின்ற அவரிடம் அப்பாவியாய் பேச்சைக் கொடுக்க, அவரும் சில தகவல்களைக் கக்கினார்.


``ச்சும்மா ஊசி குத்தினா மாதிரி இருக்கும். அப்புறம் தேள் கொட்டிய விறுவிறுப்பு ரெண்டு நிமிஷம் இருக்கும். உடம்பெல்லாம் கொஞ்ச நேரம் அனல் பறக்கும். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஐஸ் கட்டி மாதிரி ஒரு குளுமை தெரியும்... அப்புறம் குஷிதான். ரெண்டு நாளைக்கு இந்தப் போதை தலைக்கேறி நிற்கும். ளி.ஞி (ஓவர்டோஸ்) ஆயிடுச்சின்னா மட்டும் உசிர் போயிடும்! பிரவுன் சுகர், ஹெராயின் இப்படி எந்த போதையும் ஏறாதவர்கள்தான் இந்த பைட்டுக்கு வருவாங்க.


நானும் போதைக்கு அடிமையாகி பைட் போட்டுக்க வந்தவன்தான். அப்புறம் இந்தப் பாம்புகளுக்குச் சொந்தக்காரர் ஆண்ட்ரூஸ்கிட்ட வேலைக்குச் சேர்ந்துட்டேன். அவர் வெளிநாட்டுக்காரர். அஞ்சாறு பாம்பு வச்சிருக்கிறார். ஒரு பாம்போட விலை 25000 ரூபாய்க்கு மேல... `பிளாக் மாம்பா'ன்னு இந்தப் பாம்பைச் சொல்வாரு. ஒவ்வொரு பாம்புக்கும் ஒரு கண்ணாடித் தொட்டி வச்சு வளர்க்கிறார். கறையான், பூரான், புழு, பூச்சி இதான் சாப்பாடு.


முதல்ல இந்தப் பாம்பை வெளிநாட்டுல இருந்துதான் கொண்டு வந்தாங்க. ஆனா இப்போ இங்குள்ள காட்டுல பிடிக்கறதா சொல்றாங்க. ஒரு பாம்பை வச்சு ஒரு நாளைக்கு ரெண்டு மூணு பைட் போடலாம். அவ்வளவுதான். ஒரு பாம்பு சாதாரணமா எட்டு வருஷம் இருக்கும். பைட் போட்டா ஒன்றரை வருஷத்துல செத்துரும். இது குட்டிப் பாம்பு, பெரிய பாம்பு எட்டடி இருக்கும். குட்டிப் பாம்பு விஷம்தான் ராஜபோதை. பெரிசு கடிச்சா மேல போயிட வேண்டியதுதான்'' என்று முட்டி வலிக்கு தைலம் விற்பவர் மாதிரி சரளமாகச் சொல்லிவிட்டு பைக்கில் பறந்துவிட்டார்.


சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் ஒதுக்குப்புறமான இடங்களில் வீடுகளை வாடகை எடுத்து கஸ்டமர்களை அங்கு வரச்சொல்லி இந்த ஸ்நேக் பைட் பரவலாக நடக்கிறதாம்.


நாம் பார்த்தபோது பைட் போட்ட விக்கி, இரண்டு வருஷமாக இதைச் செய்து வருகிறாராம். அவரைப் போல் இந்தப் பழக்கத்திற்கு அடிமையான அவரது நண்பர்கள் பதினான்கு பேர் இதனாலேயே இறந்தும்விட்டார்களாம். ``ஆனாலும் என்னால் விடமுடியவில்லை!'' என்று அப்பாவியாகச் சொல்லும் விக்கி பார்ப்பது டிரைவர் வேலைதானாம்.


``போதை வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் இப்படி பாம்பின் விஷத்தோடு விளையாடுவது உயிருக்கு ஆபத்தானது. செய்யவே கூடாது! சிறிது விஷம்கூட சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளையும் செயலிழக்கச் செய்யும் ஆபத்து உண்டு'' என்கிறார் பொது மருத்துவர் விஜயலட்சுமி.


சின்னதா சிகரெட்டில் ஆரம்பிக்கும் போதை கடைசியாக விஷத்தில் போய் நிற்கும் இந்த விபரீதத்தை நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த மரணக் கடிக்காக பணக்கார வீட்டுப் பிள்ளைகள் முதல் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் வரை இளைஞர்கள் பலியாகிறார்கள் என்றதும் உறைந்த ரத்தம் ஓடவே இல்லை! .


இந்த பாம்புக்கடி போதையை உரிய முறையில் தமிழக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் விஷச்சாராய மரணத்திற்கு அடுத்து விஷகடி மரணங்கள் அதிகரிக்கும் என்பதை அரசுக்கு எச்சரிக்கையுடன் சொல்லி வைக்கிறோம்.பாம்புச்சரக்கு!


இது ஒருபுறமிருக்க மேலைநாடுகளில் ``பாம்பு மது'' என்ற புதிய சமாசாரம் பரவி வருகிறது. அதாவது ஒரு பாட்டிலில் ஒரு விஷப்பாம்பை உள்ளே போட்டுவிடுவார்கள். அந்த பாட்டிலில் விஸ்கி அல்லது பிராந்தி போன்ற மதுவை நிரப்பி அப்படியே மூடி வைத்துவிடுவார்கள். அந்தப் பாம்பு இறந்து அது மதுவில் ஊற அந்தப் பாம்பின் விஷமும் மதுவில் ஊறிவிடும். இப்படி பல மாதங்கள் ஊற வைப்பார்கள். இப்படி பாம்பில் ஊற வைக்கப்பட்ட மதுவின் விலை ஒரு லிட்டருக்கு நமது இந்திய மதிப்பின்படி ஐம்பதாயிரம் ரூபாய்!