.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, May 31, 2009

பிளஸ் 1 பிளஸ்2 வகுப்பில் சேரப்போகிறீர்களா? இலவச வகுப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு!

பிளஸ் 1 பிளஸ்2 வகுப்பில் சேரப்போகிறீர்களா?
இலவச வகுப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு!

மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில்பிளஸ் 1, பிளஸ் 2 சேரும் 50 மாணவ, மாணவிகளுக்கு, இலவச விடுதி வசதியுடன் கல்வி அளிக்கப்படும் என்று, மனிதநேய அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் சைதை துரைசாமி நடத்திவரும் மனிதநேய அறக்கட்ளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற அகில இந்திய அளவிலான தேர்வுகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அண்ணா பல்கலைக் கழகம், அரசு மருத்துவக் கல்லூரிகள் போன்ற புகழ் மிக்க கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும் வகையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கிலும், இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க 25 மாணவர்கள், 25 மாணவிகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் கல்வி அளிக்கவும், அவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கவும் சைதை துரைசாமி முன்வந்துள்ளார்.

இதில் சேர விரும்பும் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 85 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு புத்தகம் முதல் படிக்க தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள், பி.வி. கந்தசாமி, தாளாளர், சைதை சா. துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 71, பைபாஸ் ரோடு, மேலூர், மதுரை மாவட்டம் 625 106. (போன் 0452-3204545, செல் போன் 94430 49599) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது சந்திரபாபு நாயுடு பேச்சு.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது
தெலுங்கு தேச மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேச்சு


ஐதராபாத், மே.30 வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய வாய்ப்பு இருப்பதாக தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

தெலுங்கு தேச கட்சியின் 2 நாள் மாநாடு ஐதராபாத் நகரில் நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு பேசுகையில் கூறியதாவது:

இயந்திரங்களில் மோசடி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அதனால்தான் தேர்தலில் தெலுங்கு தேசம் தோற்று விட்டதாக கருதுகிறேன். அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகத்தில் இல்லை.

நான் வெற்றி பெற்ற குப்பம் தொகுதிக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற போது, ஒரு மூதாட்டி என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு, "வாக்குச்சீட்டுகள் மூலம் ஓட்டுப் போடும் முறை வந்தால்தான் நீ ஆட்சியை பிடிப்பாய். எனவே அடுத்த தேர்தலிலாவது அந்த நிலைமையை ஏற்படுத்திக் கொள்" என்றார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதோ மோசடி இருப்பதாகவும் அவர் கூறினார்.

நிபுணர்கள் குழு
எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய தேசிய அளவில் நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்க வேண்டும். மறைந்த தலைவர் என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதற்காக மத்திய அரசை வற்புறுத்துவோம்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

Saturday, May 30, 2009

அடி மட்டத்திலிருந்து உயர்ந்த மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் துணை முதல்வராக திமுகவின் பொருளாளரும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான சகோதரர் மு.க. ஸ்டாலின் அவர்களை அறிவித்த தமிழக முதல்வருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு, துணை முதல்வர் சகோதரர் ஸ்டாலின் அவர்களின் பணி சிறக்க நீதியின் குரல் சார்பாக எமது வாழ்த்துக்கையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

துணை முதல்வராக பொருப்பேற்றுள்ள மு.க ஸ்டாலினைப் பற்றி...
வாரிசாக திணிக்கப்பட்டவர் என்று மு.க.ஸ்டாலின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் அடுக்கினாலும் கூட அவரது வளர்ச்சி, சாதாரண திமுக தொண்டர்களைப் போன்றதுதான்.

அதே நேரத்தில் திமுக தலைவரின் மகன் என்பதால் அவருக்கு சில நேரங்களில் சிறப்பு சலுகைகளும் கிடைத்ததும் உண்மை.

1953ம் ஆண்டு கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஸ்டாலின். 2வது மகனுக்கு பட்டுக்கோட்டையாரின் நினைவாக அழகிரி எனப் பெயரிட்ட கருணாநிதி, 3வது மகனுக்கு ரஷ்யாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் நினைவாக ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார்.

ஒரு முறை, தனது குழந்தைகளுக்கு பெயர் சூட்டியதில் உள்ள உள்ளார்ந்த காரணத்தை விளக்கிய கருணாநிதி,

மூத்த மகனுக்கு அவருடைய தந்தை முத்துவேலரின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக முத்து என்று பெயரிட்டதாகவும், திராவிட இயக்கத்தின் கொள்கை வீரரான புதுக்கோட்டை அழகிரிசாமியின் நினைவாக இரண்டாவது மகனுக்கு "அழகிரி" எனப் பெயர் வைத்தாகவும், சோவியத் நாட்டின் புகழ்மிக்க தலைவரான ஜோசப் ஸ்டாலின் பெயரால் மூன்றாவது மகனுக்கு ஸ்டாலின் என வைத்ததாகவும், தமிழ் மொழியின்பால் கொண்டுள்ள பற்றின் காரணமாக கடைசி மகனுக்கு தமிழரசு எனப் பெயரிட்டு மகிழ்ந்ததாகவும் கூறினார்.

பள்ளியில் ஆரம்பித்த போராட்டம்...

ஸ்டாலினின் போராட்ட வாழ்க்கை பள்ளிப் பருவத்திலிருந்தே தொடங்கி விட்டது. சென்னை அண்ணா சாலையிலுள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் அவரைச் சேர்க்க விரும்பியபோது, பள்ளி அதிகாரிகள் புரட்சியாளரின் பெயரைக் கண்டு நடுக்கமுற்று அப்பள்ளியில் பையனைச் சேர்க்க வேண்டுமெனில் அவனுடைய பெயரை மாற்ற வேண்டுமென்று வலியுறுத்தினர்.

இந்த நிபந்தனையினைக் கேள்விப்பட்ட கருணாநிதி, பள்ளியைத் தான் மாற்ற வேண்டுமே தவிர ஸ்டாலினின் பெயரை மாற்ற முடியாது என்று கூறி விட்டார்.

இதையடுத்து ஸ்டாலின் அப்பள்ளியில் சேர முடியவில்லை. சேத்துப்பட்டிலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரி பள்ளியில் சேர்ந்தார்.

தந்தையின் அரசியல் பணிகள் காரணமாக இளம் வயதிலேயே ஸ்டாலினுக்கும் அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் திமுக உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

1967-1968ம் ஆண்டுகள் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தினார். கோபாலபுரம் இளைஞர் திமுக அமைப்பின் மூலமாக அந்த பகுதியில் இருக்கக் கூடிய மக்களுக்கு பொதுக் காரியங்களை ஆற்றினார்கள்.

மதுரையில் தொடங்கிய இளைஞரணி வாழ்க்கை...

இப்படிப் படிப்படியாக இளைஞரணி அமைப்பை வளர்த்து அதை அமைப்புரீதியாக 1980ம் ஆண்டு இளைஞரணி மதுரையிலே ஜான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டு அதற்குப்பிறகு 1980ம் ஆண்டு திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புகுழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியை கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.

மிசாவில் அடிபட்ட ஸ்டாலின்...

ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1975ம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு பயங்கர அடி உதை விழுந்தது.

சென்னை அண்ணா சாலையில் 28.1.1964ல் திமுகவுக்கென ஒரு இடம் வாங்கப்பட்டது. 15.6.1964 அன்று அது திமுக தலைமையகமாக அன்பகம் என்ற பெயரில் திறக்கப்பட்டது. நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் அண்ணா அதனை திறந்து வைத்தார்.

தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான அறிவாலயத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இளைஞர் அணியின் அலுவலகம் செயல்பட ஒரு இடம் தேவைப்பட்டது.

அறிவகத்தை ஒதுக்கித் தரும்படி தலைமைக் கழகத்திடம் இளைஞரணி கோரியது. இதுபோல திமுக தொழிலாளர் அணியும் தனது அலுவலகத்திற்காக அன்பகத்தைக் கோரியது.

அன்பழகன் வைத்த போட்டி...

புராணத்தில் ஒரு பழத்திற்காக போட்டியிட்ட பிள்ளையார் முருகனைப் போல ஒரு அலுவலகத்துக்கு இரண்டு அணிகளும் போட்டியிட்டதால் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், யார் முதலில் 10 லட்சம் ரூபாய் கட்சிக்கு நிதி தருகிறார்களோ அவர்களுக்குத்தான் அன்பகம் என ஒரு போட்டி வைத்தார்.


இதையடுத்து திமுக இளைஞரணிச் செயலாளரான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். காலை, மாலை கொடி கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சிகளிலும், இரவில் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு 100 ரூபாய், 200 ரூபாய் என வசூல் செய்து அதன் மூலம் 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்.

கட்சி மேலிடம் கேட்ட 10 லட்சத்திற்கும் மேலாக 1 லட்சத்தை வசூலித்து அதனை தலைமைக் கழகத்திடம் ஒப்படைத்து அன்பகத்தை இளைஞரணிக்கு பெற்றார்.

02.6.1988 அன்று அன்பகத்தில் இளைஞரணியின் தலைமை அலுவலகத்தை பேராசிரியர் அன்பழகன் தலைமையில் தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார்.

1990ல் நடந்த ஐம்பெரும்விழா பேரணியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியினர் ஒரு ராணுவம் போல் நடைபோட்டு வந்ததைக் கண்ட அன்றைய பிரதமர் வி.பி.சிங், இந்த இளைஞரனின் தலைமையில் இவ்வளவு பேர் கட்டுக்கோப்புடன் நடைபோட்டு வருகிறார்களே என அருகிலிருந்த கருணாநிதியிடம் கேட்க, திமுக இளைஞரணி செயலாளர்-என் மகன் ஸ்டாலின் என கருணாநிதி பதிலளித்தார்.

மேயரானார்...

அரசியலில் பல காலமாக ஈடுபட்டு வந்த போதிலும் கூட எடுத்த எடுப்பிலேயே பெரிய பதவி ஸ்டாலினைத் தேடி வந்து விடவில்லை.

இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு 'ஆசிட் டெஸ்ட்' வைப்பது போல சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை வழங்கினார் கருணாநிதி.

ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. கவுன்சிலர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.

ஆனால் முதல் முறையாக 1996ம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேயர் பதவியில் இருந்தபோது ஸ்டாலினுக்கு சென்னை மக்களிடையே பெருத்த வரவேற்பு கிடைத்தது. துப்புரவுப் பணிக்கு முன்னுரிமை அளித்தார்.

சிங்கப்பூரில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள பிரெஞ்சு நிறுவனமான ஓனிக்ஸ் நவீன முறைகளைப் பயன்படுத்தி குப்பைகளை அகற்றி வந்தது. சென்னையில் மூன்று மண்டலங்களில் துப்புரவுப் பணியை மேற்கொள்வதற்காக பகிரங்க ஒப்பந்த புள்ளி மூலம் இந்நிறுவனம் தெரிந்தெடுக்கப்பட்டது. இவ்வாறு சென்னை மாநகராட்சியே குப்பைகளை அகற்றுவதில் நவீன
முறைகளைப் பயன்படுத்திய முதல் மாநகராட்சியாகும்.

மேம்பாலங்கள்...

மேயராக இருந்து ஸ்டாலின் செய்த மிகப் பெரிய சாதனை சென்னை நகரில் சிறு சிறு மேம்பாலங்களைக் கட்டியதுதான். பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முறையாகத் திட்டமிட்ட பின்னர் தமிழ்நாடு அரசிடமிருந்து அனுமதி பெற்று 9 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

இதுதவிர 18 முக்கிய சந்திப்புகளில் பூங்காக்களும், நீரூற்றுகளும் அமைக்கப்பட்டன. 81 பூங்காக்கள் சுத்தப்படுத்தப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டன. ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான சென்னை மெரீனாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பெரம்பூரிலுள்ள ஆடு-மாடு இறைச்சிக்கூடம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் நவீன முறையில் பராமரிக்கப்பட்டது.

இத்தகைய சாதனைகளின் பலனாக 2001ம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெ பறித்த பதவி...

இருப்பினும் 2002ம் ஆண்டு ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியது.

இதன் காரணமாக, தனது எம்.எல்.ஏ. பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்.

முதல் முறையாக அமைச்சர்...

கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார் மு.க.ஸ்டாலின்.

இதுதான் முதன் முதலாக ஸ்டாலின் ஏற்ற அமைச்சர் பதவி.

ஆரம்பத்திலிருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார் ஸ்டாலின். இந்தத் தொகுதியை அதிமுகவிடமிருந்து தட்டிப் பறித்தவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1984ம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார் ஸ்டாலின்.

நாடகத்தில் ஆர்வம்...

தந்தையைப் போலவே ஸ்டாலினுக்கும் ஆரம்ப காலத்தில் நாடகங்களின் மீது ஈடுபாடு பிறந்தது. இதனால் நாடகத்திலும் நடித்தார். ஸ்டாலின் நடித்த முதல் நாடகம் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய "முரசே முழங்கு" என்ற நாடகமாகும். இந்நாடகம் கலைஞர் முன்னிலையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது.

இந்நாடகம் பல இடங்களிலும் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து அதன் வெற்றிவிழா திருவல்லிக்கேணியில் அதே மேடையில் நடத்தப்பட்டது.

இதேபோல, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என பல நாடகங்களில் நடித்துள்ளார் ஸ்டாலின்.

அத்தனையும் திராவிட இயக்கத்தின் கொள்கை விளக்க நாடங்கள் ஆகும்.

இந்த அனுபவமே பின்னாளில் குறிஞ்சி மலர், சூர்யா என டிவி நாடங்களிலும், ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் என இரு திரைப்படங்களிலும் நடிக்க தூண்டியது ஸ்டாலினை.

1993ம் ஆண்டில் இளைய சூரியன் என்ற தமிழ் வார இதழைத் தொடங்கி ஆசிரியருமானார். பல்வேறு தலைப்புகளில் அரசியல், திரைப்படச் செய்திகள், கதைகள் , கவிதைகள், வினா விடைகள் என அனைத்தும் அதில் இடம் பெற்றிருந்தன. 1994 ம் ஆண்டு வரை இளைய சூரியன் வெளிவந்தது.

தந்தையைப் போலவே எழுத்திலும் ஆர்வம் கொண்டவர் ஸ்டாலின். இதன் பயனாக முரசொலியில் 'உங்களில் ஒருவன்' எனும் தலைப்பில் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

நெல்லையில் இளைஞரணியின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதுதான் ஸ்டாலினின் அரசியல் மணி மகுடத்திற்கான முதல் அடிக்கல் எனலாம்.

சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் என்று உயர்ந்தார் ஸ்டாலின்.

அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளின் சூறாவளியை விட, திமுகவுக்குள்ளேயே வைகோ என்ற புயலை சமாளிக்கத்தான் ஸ்டாலின் பெரும் பாடுபட்டார்.

வைகோவின் விஸ்வரூப வளர்ச்சி ஸ்டாலின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என அப்போது கருதப்பட்டது. ஆனாலும் காலத்தின் கோலமாய், வைகோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஸ்டாலினுக்கான தடைக்கல் முற்றிலும் நீங்கியது.

வைகோவின் வெளியேற்றத்திற்குப் பின்னர்தான் ஸ்டாலின், திமுகவில் வேகமாக வளர்ந்தார் என்று கூடக் கூறலாம்.

இருப்பினும் சொந்த சகோதரரான மு.க.அழகிரி இன்னொரு சவாலாக உருவெடுக்கவே மீண்டும் திமுகவுக்குள் குழப்பம். ஆனால் இதையும் கூட கருணாநிதி படுசாதுரியமாக சமாளித்தார்.

இருவருக்கும் இடையில் நிலவிய பூசலை தணித்து, இருவரையும் சேர்ந்து செயல்பட வைத்தார். அவரவர் பணியை அவரே பிரித்துக் கொடுக்க, சகோதரர்கள் இருவரும் இப்போது இரட்டைக் குழல் துப்பாக்கி போல இணைந்து, இயைந்து செயல்பட்டு வருகின்றனர்.

40 வயதுக்கு மேல் மதிக்க முடியாத அளவுக்கு ஒரு டிரிம்மான தோற்றம் ஸ்டாலினுக்கு. பலரையும் வியப்படைய வைக்கும் விஷயம் இது. உடற்பயிற்சியை தினசரி தவறாமல் மேற்கொள்பவர் ஸ்டாலின்.

இதுதவிர கிரிக்கெட், கம்ப்யூட்டர் கேம்ஸ், பேட்மின்டன், செஸ், கேரம் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் கொண்டவர். தந்தையைப் போலவே கிரிக்கெட் மீது தனிப் பாசம் கொண்டவர்.

மு.க.ஸ்டாலினின் இன்றைய வளர்ச்சி துணை முதல்வர் என்ற நிலையில் இருந்தாலும் கூட அவரது அடுத்த விஸ்வரூபம் என்ன என்று சொல்லாமலேயே அனைவருக்கும் தெரியும்.

சென்னை மக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!

சென்னை மக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!
"வெளியூர் சென்றால், காவல் நிலையங்களில் தெரிவித்து விட்டு செல்லுங்கள்"


சென்னை, மே.30- சென்னை மக்களுக்கு காவல்துறை நேற்று முக்கியமான வேண்டுகோள் விடுத்தனர்.கோடை விடுமுறையை கொண்டாட வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள், அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

காவலாளி முகவரி
சென்னையில் நேற்று ஜெயின் கோவிலில் நடந்த கொள்ளை வழக்கில் காவலாளியே முக்கிய குற்றவாளி என்று தெரிய வந்துள்ளது. காவலாளியை கைது செய்ய காவல்துறைக்கு கோவில் நிர்வாகம் எந்தவித தகவல்களையும் சரிவர கூறவில்லை. காவலாளியின் பெயரை மட்டுமே சொன்னார்கள். அவரது வீட்டு முகவரி போன்ற எந்த தகவலும் அவர்களால் கூற முடிய வில்லை. விலை உயர்ந்த நகைகள் உள்ள கோவிலுக்கு காவலாளியாக ஒருவரை நியமிக்கும் போது, அவரை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் நேற்று இரவு வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

தனியார் நிறுவனங்கள், கோவில் நிர்வாகத்தினர் பாதுகாவலர்களை நியமிக்கும் போது, அவர்களை பற்றிய தகவல்களை தெரிந்து கொண்ட பிறகுதான், அவர்களை வேலைக்கு சேர்க்க வேண்டும். உரிய தகவல்களை தெரிந்து கொள்ள அருகில் உள்ள காவல் நிலையங்களை அணுகலாம். இதற்கு காவல் நிலையங்களுக்கு தனியாக கட்டணம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.

காவல் நிலையத்தில்

இதேபோல கோடை விடுமுறையை கொண்டாட, தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள், அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திரும்பி வரும்வரை பூட்டியுள்ள வீடுகள் உள்ள பகுதிகளில் போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும். பொது மக்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

துணை முதல்வரக மு.க ஸ்டாலின் மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து.

தமிழகத்தின் துணை முதல்வராக மு.க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை.


தமிழகத்தின் துணை முதல்வராக திமுகவின் பொருளாளரும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான சகோதரர் மு.க. ஸ்டாலின் அவர்களை அறிவித்த தமிழக முதல்வருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

சகோதரர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் துணை முதல்வராக சிறப்பாக பணியாற்றி, அரசு நிர்வாக பணிகளை சுறுசுறுப்பாக இயங்க வைத்து தமிழகத்திற்கு தொண்டாற்றிட வாழ்த்துகிறோம்.

Friday, May 29, 2009

வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு போகாமல் பள்ளி வளாகத்திலேயே பதிவு செய்யலாம்.

வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு போகாமல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை, பள்ளி வளாகத்திலேயே பதிவு செய்யலாம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை, மே.28 பத்தாம் வகுப்பில் தேர்வு பெற்றதை, வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு போகாமல் பள்ளி வளாகத்திலேயே மாணவர்கள் பதிவு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

8.22 லட்சம் மாணவர்கள்.....
இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜீவரத்தினம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது.

தமிழகத்தில் 2008-09 கல்வியாண்டில் பிளஸ்-2 வகுப்புத் தேர்வு எழுதி தேர்வு முடிவுகள் வெளியாகி சான்றிதழ்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இவர்கள் எந்தெந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவுகளை செய்யலாம் என்ற விபரம், அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டு, மாநிலம் முழுவதும் 100 மையங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

2008-09ம் கல்வியாண்டில் 8 லட்சத்து 22 ஆயிரத்து 272 மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வுகள் அண்மையில் வெளியாகி, விரைவில் மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்படவுள்ளது.

பள்ளி வளாகத்திலேயே பதிவு
இவர்கள், தாங்கள் தேர்ச்சி பெற்றதை பதிவு செய்வதற்காக, மாவட்டத் தலைநகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு செல்வதற்காக போக்குவரத்துச் செலவினையும், கால விரயத்தையும், கூட்ட நெரிசல் போன்ற இடர்பாடுகளையும் தவிர்க்கும் பொருட்டு மாணவர்களின் நலன் கருதி, இந்த ஆண்டு முதல், மாணவர்கள் தாங்கள் பயின்று மதிப்பெண் சான்று பெறும் பள்ளிகளின் வளாகத்திலேயே பதிவு செய்து கொள்ள கல்வித்துறையின் ஒத்துழைப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அவற்றுடன் மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று, மாற்றுச் சான்று ஆகியவற்றினை சரிபார்த்து, தலைமை ஆசிரியரின் முத்திரையுடன் கூடிய சான்றொப்பமிட்டு, பள்ளியின் மொத்த விண்ணப்பப் படிவங்களை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒரு வார காலத்துக்குள் வேலைவாய்ப்பு அடையாள அட்டைகள் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
மேற்கண்டவாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தவேண்டும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

மின்னணு வாக்குப்பதிவிற்கு பதிலாக, வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தவேண்டும்

ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.


சென்னை, மே.28 இனி நடைபெறும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவிற்கு பதிலாக பழைய முறைப்படி வாக்கு சீட்டுகள் முறையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 12 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. இதில் அ.தி.மு.க. மட்டும் 9 இடங்களை கைப்பற்றியது. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை ஆனால் தி.மு.க. கூட்டணி 28 இடங்களை பிடித்து வெற்றிபெற்றது.

பா.ம.க பொதுக்குழு கூட்டம்
கடந்த 25ம் தேதி நடைபெற்ற பா.ம.க பொதுக் குழுக் கூட்டத்திலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் நடைபெறு்ம் முறைகேடுகள் பற்றி செயல்முறை விளக்கத்துடன் குற்றம் சாட்டப்பட்டது. அடுத்து நடைபெறவிருக்கும் தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு தடை விதிக்கக்கோரி தேமுதிக மனுத்தாக்கல்.
27-5 அன்று தேமுதிக சார்பில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்குப் பதிவு இயந்திரத்தின் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மனிதநேய மக்கள் கட்சி.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதை முதலில் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டது மனிதநேய மக்கள் கட்சிதான். தமுமுகவின் பொதுச் செயலாளர் ஹைதர்அலி அவர்கள் தொலைக்காட்சி நேர்காணலின் மூலமும் விளக்கினார். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் தொடர்பு கொண்டு முறைகேடுகள் பற்றி எடுத்துரைத்தார். இன்று அனைத்து அரசியல் கட்சிகளும் மின்னணு வாக்குப் பதிவு இயந்தின் முறைகேடு பற்றி விழிப்படைந்துள்ளன அல்ஹம்மது லில்லாஹ்.


அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்
இந்த நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்கழகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், அவைத்தலைவர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா போயஸ்கார்டனில் இருந்து கார்மூலம் நேற்று மாலை 4 மணிக்கு தலைமைக் கழகம் வந்தார்.

ஜெயலலிதாவுக்கு வரவேற்பு
அவரை அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் வரவேற்று செயற்குழு நடைபெறும் இடத்திற்கு அழைத்து சென்றனர். ஜெயலலிதா அங்கு சென்றதும் செயற்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார்.

கட்சியில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி, தோல்விகள் குறித்தும் அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

வாக்குச் சீட்டுகள் தான் பயன்படுத்தப்பட வேண்டும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
தற்போது நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டதில் பெருமளவு முறைகேடுகள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டு உள்ளதை தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.

எனவே, இனி நடைபெறும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவிற்குப் பதிலாக, பழைய முறைப்படி காகித வாக்குச் சீட்டுகள் தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Thursday, May 28, 2009

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக சிறைத்துறைக்கு பெண் டி.ஐ.ஜி. நியமனம்

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக சிறைத்துறைக்கு பெண் டி.ஐ.ஜி. ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


பெண் டி.ஐ.ஜி. நியமனம்
தமிழகத்தில் திருச்சி, கடலூர், சென்னை புழல், வேலூர் ஆகிய இடங்களில் பெண்களுக்கான மத்திய சிறைகள் உள்ளன. அதோடு பெண் கைதிகளுக்கான 10 சப்&ஜெயில்களும் உள்ளன. இந்த சிறைகளில் சுமார் 855 பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பெண் கைதிகளின் சிறைகளுக்கு பெண் சூப்பிரண்டுகள் பணியில் உள்ளனர். ஆனால் பெண் டி.ஐ.ஜி.கள் யாரும் பணியில் இல்லை.

இந்தியாவில் எந்த மாநில சிறைத்துறையிலும் பெண் டி.ஐ.ஜி.க்கள் பதவி இல்லை. தமிழகத்தில் இந்த குறையை போக்குவதற்காக பெண் டி.ஐ.ஜி. ஒருவரை பணி நியமனம் செய்ய முதல் அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார். அவரது உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக சிறைத்துறைக்கு பெண் டி.ஐ.ஜி. ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறைத்துறை முதல் பெண் டி.ஐ.ஜி. என்ற பெருமையை பெற்றுள்ளவர் ராஜ சவுந்தரி. இவர், வேலூர் பெண்கள் ஜெயிலில் 12 ஆண்டுகள் சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளார். தற்போது டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழக சிறைத்துறையில் துணை ஜெயிலராக பணியில் சேர்ந்த இவர், படிப்படியாக பதவி உயர்வு பெற்று, தற்போது டி.ஐ.ஜி. அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார்.

திருவாரூரை சேர்ந்த இவரது கணவர் வங்கி அதிகாரியாக பணியாற்றுகிறார். இதற்கு முன்பு பெண்கள் ஜெயில்கள், ஆண் டி.ஐ.ஜி.களின் கட்டுப்பாட்டில் இருந்தன. இனிமேல் தமிழகத்தில் உள்ள 4 பெண்கள் மத்திய ஜெயில்களும் மற்றும் 10 பெண்கள் சப்&ஜெயில்களும், 11 இளம் சிறார் சிறைகளும் புதிய பெண் டி.ஐ.ஜி.யின் கட்டுப்பாட்டில் வரும்.

Wednesday, May 27, 2009

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல்.

மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை தொடர்ந்து!
ஓட்டுச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தும் அரசியல் கட்சிகள்!!


நடைபெற்ற 15வது மக்களவை தேர்தலில் ஆளுங்கட்சியினரின் பண பலம், படை பலம், அதோடு தொழில்நுட்ப முறைகேடுகள் என்று ஜனநாயகப் படு‍கொலைகள் படு ஜோராக அரங்கேறியது.

கடந்த தேர்தல் காலங்களில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள் ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் கோளறு என்றும் எந்தச் சின்னத்திற்கு போட்டாலும் ஒரே சின்னத்திற்கு பதிவாகிறதென்றும் அறிக்கைகள் விடுவார் அதோடு சரி... அந்த அறிக்கைகளை கிண்டல் செய்து பத்திரிக்கைகள் ‍"ஜெயலலிதாவின் அதே புலம்பல்கள்" என்று கட்டம் கட்டி செய்திகள் வெளியிடும் அதோடு முடிந்தது அந்த தொழில் நுட்ப தில்லுமுல்லுகள்.

அதே போன்று இப்போது நடைபெற்ற 15வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போதும் பத்திரிக்கையாளர்களுக்கு நேர்காணல் அளித்த ஜெயலலிதா புகார் தெரிவித்தார் ஆனாலும் அது பெரிய அளவில் கொண்டு செல்லப்படவில்லை.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருந்த மே 16ம் தேதி மாலை நமக்குக் கிடைத்த தகவல்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்தது. மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்களின் எண்ணிக்கையின் அளவை விட பல மடங்கு குறைவான வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவித்ததே அவர்களின் திருட்டுத் தனம் வெளியாக காரணமாகிவிட்டது. கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு "களாவாங்கத் தெரியாதவன் தலையாரி வீட்டில் களவாண்டான்" என்று.

உடனே மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமுமுகவின் தலைவருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ அவர்கள் "ஓட்டுச் சீட்டு முறையே மீண்டும் கொண்டுவரவேண்டும்" என்று அறிக்கை வெளியிட்டர்.

த.மு.மு.கவின் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று மின்அனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடைபெற்ற தொழில் நுட்ப மோசடிகளை மக்களுக்கு எடுத்து வைத்ததோடு பாதிக்கப்பட்ட அனைத்து கட்சித்தலைவர்களையும் தொடர்பு கொண்டு விழிப்புணர் ஏற்படுத்தினார் அதன் விளைவு நேற்று நடைபெற்ற பா.ம.க பொதுக்குழுவில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் நடைபெற்ற ‍தொழில் நுட்ப மோசடிகளை மருத்துவர் ராமதாஸ் செயல்முறை விளக்கத்துடன் பத்திரிக்கையாளர்களுக்கு காண்பித்தார்.

இன்று தேமுதிக சார்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

த‌மிழக‌த்‌தி‌ல
நடைபெஇரு‌க்கு‌மச‌ட்ட‌ம‌ன்ற‌த்து‌க்காஇடை‌த்தே‌ர்த‌லி‌ல் ‌மி‌ன்னணவா‌க்கு‌ப்ப‌திவஇயந்‌திர‌த்து‌க்கதடை ‌வி‌தி‌க்கோ‌ரியு‌ம், வா‌க்கு‌ச்‌சீ‌ட்டமுறமூல‌மதே‌ர்த‌லநட‌த்த‌ககோ‌ரியு‌மே.ு.‌ி.க. சா‌ர்‌பி‌லசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லமனு‌ததா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ே.ு.‌ி.க. தலைமை ‌நிலைய‌சசெயல‌ர் ‌ி.பா‌ர்‌த்தசார‌தி தா‌க்க‌லசெ‌ய்து‌ள்பொதுநமனு‌வி‌ல், '' நா‌ட்டி‌ன் 15வதம‌க்களவை‌ததே‌ர்த‌லத‌மிழக‌த்‌தி‌லே 13ஆ‌மதே‌திய‌ன்றநடைபெ‌ற்றது. இ‌தி‌லே.ு.‌ி.க. சா‌ர்‌பி‌ல் 40 தொகு‌திக‌ளிலு‌மவே‌ட்பாள‌ர்க‌ளபோ‌ட்டி‌யி‌‌ட்டன‌ர்.

தே‌ர்த‌லி‌னபோதம‌ி‌ன்னணவா‌க்கு‌ப்ப‌திவஇயந்‌திர‌மபய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டது. இ‌‌ந்இய‌ந்‌திர‌த்த‌ி‌லவா‌க்கு‌ப்ப‌தி‌வி‌னபோதமுறைகேடு‌களு‌ம், குளறுபடிகளு‌மநடைபெ‌ற்றது. கு‌‌றி‌ப்பாம‌த்‌திசெ‌ன்னதொகு‌தி‌யி‌லஎ‌ந்த ‌சி‌ன்ன‌த்தஅழு‌த்‌தினா‌லு‌மஆளு‌ங்க‌ட்‌சி வே‌ட்பாள‌ரி‌ன் ‌சி‌ன்ன‌த்த‌ி‌ற்கப‌‌திவசெ‌ய்யு‌மவகை‌யி‌லஇயந்‌திர‌ங்க‌ளி‌லமுறைகேடசெ‌ய்ய‌ப்‌ப‌ட்டிரு‌ந்தது.

இதேபோ‌ல் ‌விருதுநக‌ரதொகு‌தி‌யி‌ல் 25 ஆ‌யிர‌மவா‌க்குக‌ளஅ‌திகமாப‌திவானதக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌தி‌ண்டு‌க்க‌லதொகு‌தி‌யி‌லே.ு.‌ி.க. ‌சி‌ன்ன‌த்தஅழு‌த்து‌மபோதகா‌ங்‌கிர‌ஸ் ‌சி‌ன்ன‌த்த‌ி‌லலை‌டஎ‌ரி‌ந்தது. ப‌ல்வேறஇய‌ந்‌திர‌ங்க‌ளி‌ல் 5 வா‌க்கு‌க்கஒரவா‌க்கஆளு‌ங்க‌ட்‌சி ‌சி‌ன்ன‌த்து‌க்கு ‌ப‌திவாகு‌மவகை‌யிலு‌மஇயந்‌திர‌ங்க‌ளில் நிரல்கள் மா‌ற்‌றியமை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

இதேபோ‌லமா‌நில‌த்‌தி‌லஉ‌ள்ப‌பகு‌திக‌ளி‌ல் ‌மி‌ன்னணவா‌க்கு‌ப்ப‌திவஇயந்‌திர‌த்‌தி‌லகுளறுபடிகளு‌ம், முறைகேடுகளு‌மநடைபெ‌ற்றன. இ‌வ்வாறமுறைகேடுக‌‌ளக‌ண்டு‌பிடி‌க்க‌ப்‌ப‌ட்ஒ‌ட்டுமொ‌த்த ‌‌மி‌ன்னணவா‌க்கு‌ப்ப‌திவஇய‌ந்‌திர‌ங்க‌ளமா‌ற்ற‌ப்பட‌வி‌ல்லை. இதகு‌றி‌த்ததே‌ர்த‌லஆணைய‌த்‌திட‌மக‌ட்‌சிக‌ளபுகா‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர். இத‌ற்கதே‌ர்த‌லஆணைய‌மஎ‌‌ந்த‌விநடவடி‌க்கையு‌மஎடு‌க்க‌வி‌ல்லை.

எனவத‌மிழக‌த்த‌ி‌‌லநடைபெஇரு‌க்கு‌மச‌ட்டசபஇடை‌த்தே‌ர்த‌லி‌னபோது ‌மி‌ன்னணவா‌க்கு‌ப்ப‌திவஇயந்‌திர‌மபய‌ன்படு‌த்தடை ‌வி‌தி‌க்வே‌ண்டு‌ம். இ‌னி வரு‌மகால‌ங்க‌ளி‌லதே‌ர்த‌லி‌னபோதவா‌க்கு‌ச்‌சீ‌ட்டமுறமூல‌மதே‌ர்த‌லநட‌த்உ‌த்தர‌விவே‌ண்டு‌ம்'' எ‌ன்றமனு‌வி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்மனகோடை ‌விடுமுறைகால ‌நீ‌திப‌திக‌ள் ‌ி.தனபால‌ன், எ‌ம்.எ‌ம்.சு‌ந்தரே‌ஷஆ‌கியோ‌ரகொ‌ண்அம‌ர்வமு‌ன்பஇ‌ன்று ‌விசாரணை‌க்கவ‌ந்தது.

இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்து 3 வாரத்திற்குள் பதில்தரும்படி மத்திய அரசு, தலைமை தேர்தல் ஆணைய‌ர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு தா‌க்‌கீது அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tuesday, May 26, 2009

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு: ம.ம.க வ‍ை தொடர்ந்து பா.ம.கவும் குற்றச்சாட்டு

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு
மனிதநேய மக்கள் கட்சியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து
பா.ம.க செயல்முறை விளக்கத்துடன் குற்றச்சாட்டு .


நடந்து முடிந்த 15வது மக்களவை தேர்தலின்போது வாக்கு பதிவு இயந்திரத்தில் ஆளும்வர்கத்தினரால் தொழில்நுட்ப முறைகேடு செய்து ஜனநாயகப்படுகொலை நடந்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்ததோடு வரும் காலங்களில் இது போன்ற முறைகேடுகளை தவிர்க ஓட்டுச்சீட்டு முறையே வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது அதனைத் தொடர்ந்து.

25-05 அன்று பா.ம.க. தலைமை பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் பா.ம.க. தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் தோல்விக்கு முக்கிய காரணம் ஓட்டுப்பதிவு எந்திரங்களில் செய்யப்பட்ட தொழில்நுட்ப முறைகேடுகளே என்று குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக செயல்முறை விளக்கமும் செய்து காட்டப்பட்டது. சிறிய அளவில் தயாரிக்கப்பட்ட ஒரு மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தில் 4 சின்னங்கள் பொருத்தப்பட்டது. அதில் ஒரு சின்னத்துக்கு 20 ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் அதை எண்ணி பார்க்கும் போது பதிவு செய்யப்பட்ட சின்னத்துக்கு 12 வாக்குகளும், வேறொரு சின்னத்துக்கு 8 வாக்குகளும் பதிவாகி இருந்ததை பொதுக்குழுவில் காட்டினார்கள்.

இதேபோல் கம்ப்யூட்டர் முறையில் பல முறைகேடுகளை செய்ய முடியும் என்று செயல்முறை விளக்கத்தை சுட்டிக்காட்டி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

அதைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* ஆளும் கட்சியின் பணப்பலம், அதிகார துஷ்பிர யோகம், அதிக அளவில் நடந்தது கண்டிக்கத்தக்கது.

* தோல்வியை கண்டு பா.ம.க. சோர்ந்துவிடாது. இதை வெற்றிக்கு படிக்கட்டுகளாக மாற்றுவோம்.

* வாக்கு சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

* நடத்தப்பட்டுள்ள முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு ஏற்க வேண்டும். முறைகேடுகளுக்கு இடமில்லாத வகையில் வாக்குப்பதிவு செய்ய மாற்று வழிமுறைகளை ஆராய வேண்டும்.

* பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

* இலங்கையில் இனப்படுகொலை துரோகத்துக்கு இந்திய அரசு துணைப்போவதை கண்டிக்கிறோம் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அன்புமணி, வேலு, ஏ.கே.மூர்த்தி, காடுவெட்டி குரு, மாவட்ட செயலாளர்கள் கே.என். அசேகர், ஜெயராமன், தொழிற்சங்க செயலாளர் ஞானசேகரன் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Sunday, May 24, 2009

மத்திய அமைச்சர்கள் பற்றிய விபரம்

பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பற்றிய விபரம்

மன்மோகன் சிங்: 2வது முறையாக பிரதமராகியிருக்கும் இவர் நேருவுக்குப் பின்னர் தொடர்ந்து 2வது முறையாக பிரதமர் பதவிக்கு வந்த முதல் பிரதமர் இவர்தான். 1991ம் ஆண்டு முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார். மத்திய அரசின் வர்த்தகத் துறையின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர்.

திட்டக் கமிஷன் துணைத் தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். பஞ்சாப், கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்தவர்.

சிறந்த பொருளாதார மேதையாக பாராட்டப்படுபவர். நரசிம்மராவ்தான் இவரை தனது நிதியமைச்சராக நியமித்து இந்தியாவின் பொருளாதாரப் பாதையை மாற்றி அமைக்க முக்கிய காரணம்.

எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான மன்மோகன் சிங்குக்கு குர்சரன் கெளர் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

பிரணாப் முகர்ஜி: 73 வயதான பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தார். காங்கிரஸ் அமைச்சரவைகளில் பல்வேறு முக்கிய இலாகாக்களை வகித்து உள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் ‘ராஷ்டிரிய சமாஜ்வாடி என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். பிறகு அதை தாய் கட்சியான காங்கிரசுடன் இணைத்தார்.

சரத்பவார்: மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர். இது வரை போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வி அடையாதவர். 1999ல் சோனியாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி காங்கிரசில் இருந்து வெளியேறி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கியவர். ஆனால், 2004ல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததால் மத்திய அமைச்சரானார்.

ஏ.கே.அந்தோணி: எளிமையானவர், கை சுத்தமானவர் என்று அனைவராலும் பாராட்டப்படுபவர். கேரள முதல்வராக பதவி வகித்தவர்.

ப.சிதம்பரம்: தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் கானாடு காத்தானில் கடந்த 1945ம் ஆண்டு பிறந்த ப.சிதம்பரம் வக்கீலாக பணியாற்றியவர். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். கடந்த 1984ம் ஆண்டு முதல் 7 முறை சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானவர். மத்திய அமைச்சரவையில் நிதி மற்றும் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.

மம்தா பானர்ஜி: மேற்கு வங்க மாநிலத்தில் 1955ம் ஆண்டு பிறந்த மம்தா, கல்லூரியில் காலடி எடுத்த வைத்த காலத்திலேயே அரசியலிலும் காலடி வைத்தார்.

1979-80ல் மாநில காங்கிரஸ் மகளிரணி செயலாளராக இருந்தார். 1984ம் ஆண்டு ஜாதவ்போர் தொகுதியில் சோம்நாத் சட்டர்ஜியை தோற்கடித்த போதுதான் மம்தாவை எல்லாருக்கும் தெரிந்தது. நரசிம்மராவ் அரசில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை அமைச்சராக பணியாற்றினார். 1997ம் ஆண்டில் காங்கிரசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். கடந்த 1998, 99ம் ஆண்டு பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். வாஜ்பாய் அரசில் ரயில்வே அமைச்சராக இருந்தார்.

கிருஷ்ணா: 77 வயதான கிருஷ்ணா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். மைசூர் மகாராஷ்டிரா கல்லூரியில் பட்டம் பெற்ற அவர் பெங்களுர் அரசு சட்டக் கல்லூரியில் வக்கீல் பட்டம் பெற்றார். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேல் படிப்பு படித்தார். 1999 முதல் 2004 வரை கர்நாடக முதல்வராக இருந்தார். அப்போது காவிரி நடுவர் மன்ற ஆணையை நிறைவேற்ற தவறியதற்காக உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை பெற்றார். மகாராஷ்டிரா ஆளுநராகவும் பதவி வகித்து உள்ளார்.

குலாம் நபி ஆசாத்: காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் 1990ம் ஆண்டு நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகார அமைச்சராக இருந்தவர்.அப்போது 21 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவை அனைத்தையும் தோற்கடித்தவர் ஆசாத். காஷ்மீர் மாநில முதல்வராக இருந்தபோது, கூட்டணி கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவை வாபஸ் பெற்றதால் பதவியை ராஜினாமா செய்தார்.

சுசில் குமார் ஷிண்டே: மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர். சட்டம் பயின்ற இவர் அரசியலுக்கு வருவதற்கு முன் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.

வீரப்ப மொய்லி: 69 வயதாகும் வீரப்ப மொய்லி, கர்நாடக முதல்வராக கடந்த 1992 முதல் 95ம் ஆண்டு வரை இருந்தார். மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆய்வு செய்த கமிட்டியின் தலைவராக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இரண்டாவது நிர்வாக சீர்திருத்த கமிஷனின் தலைவராக இருந்த வீரப்ப மொய்லி, முதல் முறையாக மத்திய அமைச்சராகியுள்ளார்.

ஜெய்பால் ரெட்டி: ஆந்திர மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் மட்கல் கிராமத்தில் 1942ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி பிறந்தவர் ஜெய்பால் ரெட்டி. காங்கிரசில் சேர்ந்த அவர் 1969 முதல் 1984ம் ஆண்டு வரை 4 முறை கல்வாகுர்த்தி தொகுதி எம். எல்.ஏ. ஆக இருந்துள்ளார். 1997-98ம் ஆண்டில் ஐக்கிய முன்னணி அரசில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சராக பொறுப்பு வகித்தார். பிறகு மன்மோகன் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசில் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக பணியாற்றினார். மக்களவை தேர்தலில் ஆந்திர மாநிலம் செவலா தொகுதியில் போட்டியிட்டு தெலுங்கு தேசம் வேட்பாளரை 19,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.பி.யாகியுள்ளார்.

கமல்நாத்: தொடர்ந்து 8 வது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்நாத், இதற்கு முன் வர்த்தக துறை அமைச்சராக பதவி வகித்தார். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டவர். இதற்கு நிலம் எடுப்பதில் அரசுக்கு சிக்கல் எழுந்தபோதும் நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

வயலார் ரவி : கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 1937 ம் ஆண்டு பிறந்த வயலார் ரவி, மாணவப் பருவத்திலேயே அரசியலில் நுழைந்தார். 1967 ம் ஆண்டு கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1971 ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள சிறயங்கில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.1982 ம் ஆண்டு கேரள உள்துறை அமைச்சராக இருந்த அவர், முதல்வர் கருணாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1986 ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார்.
1994 மற்றும் 2003 ல் மாநிலங்களவை உறுப்பினரான அவர், மன்மோகன் அமைச்சரவையில் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.

மீரா குமார்: மறைந்த துணைப் பிரதமர் ஜகஜீவன்ராமின் மகள். 1973ம் ஆண்டில் ஐ.எப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். ராஜிவ் கேட்டு கொண்டதால் அரசியலில் நுழைந்தார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக இருந்தார்.கவிஞர், ஓவியர், விளையாட்டு வீராங்கனை, சமுக சேவகி என் பல தரப்பிலும் பெயர் பெற்ற மீரா குமாரின் கனவர் மஞ்சுள் குமார், உச்ச நீதிமன்ற வக்கீலாக உள்ளார்.

முரளி தியோரா: 72 வயதான முரளி தியோரா பெட்ரோலிய துறை அமைச்சராக பதவி வகித்தவர். சர்ச்சைக்குரிய அந்த இலாகாவை தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவி வகித்த முதல் மத்திய அமைச்சர் இவர்தான். காங்கிரசுக்கும் தொழிலதிபர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுபவர்.

கபில் சிபல்: சிறந்த சட்ட நிபுணரான கபில் சிபல், வக்கீல்தான் தனது தொழில் என்றும், அரசியல்வாதியானது விபத்து என்றும் அடிக்கடி கூறுவார். ஜெயலலிதா, லாலு பிரசாத் உட்பட பல முன்னணி அரசியல்வாதிகள் மீதான வழக்குகளில் அவர்களுக்கு சார்பாக வாடியுள்ளார். 1998ம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கபில் சிபல், 2004ம் ஆண்டு டெல்லி சாந்திசவுக் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பணியாற்றினார். இப்போது அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அம்பிகா சோனி: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அம்பிகா சோனிக்கு வயது 66 ஆகிறது. 1975ம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்த அவர், 1976 முதல்-88 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்கு மிக நெருக்கமானவராக இருந்த அம்பிகா சோனி, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். மன்மோகன் அமைச்சரவையில் சுற்றுலா அமைச்சராக இருந்தார்.

பி.கே. ஹான்டிக்: அசாம் மாநிலத்தை சேர்ந்த 74 வயது பிஜாய் கிருஷ்ணா ஹான்டிக். 1980ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.

1991 முதல் தொடர்ந்து 6வது முறையாக ஜோர்ஹாட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஐ.மு. கூட்டணி அமைச்சரவையில் முதல் முதலாக ராணுவ இணை அமைச்சர் ஆனார். 2006ம் ஆண்டு முதல் ரசாயனத் துறை இணை அமைச்சராக பணியாற்றிய அவரிடம் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.

ஆனந்த் சர்மா: 56 வயதான ஆனந்த் சர்மா, இமாசலப் பிரதேசத்தை சேர்ந்தவர். சட்டத்தில் பட்டம் பெற்றவர். மாணவர், இளைஞர் இயக்கங்களை முன்னின்று நடத்தியவர். மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். நீண்ட காலம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்தார். கடந்த அமைச்சரவையில் வெளியுறவு இணை அமைச்சராக பணியாற்றினார். இப்போது காபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்று உள்ளார்.

ஜோஷி: ராஜஸ்தான் மாநிலத்தில் 6 மாதத்துக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சொந்த தொகுதியான நத்வாராவில் போட்டியிட்டு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றவர் ஜோஷி. இப்போது நடந்த மக்களவை தேர்தலில் பில்வாரா தொகுதியில் போட்டியிட்டு 1.35 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ. வேட்பாளரை தோற்கடித்தார்.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் 59 வயது சி. பி. ஜோஷி ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர். ராஜஸ்தான் மாநிலத்தில் 1998ம் ஆண்டு கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கல்வி, கிராம வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்தவர்.

Saturday, May 23, 2009

எம்.பிக்களுக்கான சலுகைகள்

இந்தியாவில் மக்களவை தேர்தலில் வென்று மக்களவை உறுப்பினராவது என்பது ஒரு ஜாக்பாட் அடித்ததற்கு சமம் தான்.
மின்சாரம் இலவசம், தொலைபேசி இலவசம் என நினைத்த நேரத்தில் எல்லாம் கிடைக்கிறது. இம்முறை புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இந்த சொகுசு வாழ்க்கையில் மூழ்கிவிடாமல் மக்களையும் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்தியாவில் எம்.பி. பதவி கிடைப்பது என்றால், அதை விட வேறு ராஜபோக வாழ்க்கை ஏதுமில்லை என்றே சொல்லலாம்.

சமீபத்தில் 15வது நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 543 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்முறை சுமார் 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் புது முகங்களாக முதன் முறையாக நாடாளுமன்றம் செல்கின்றனர்.

இவர்கள் 543 பேருக்கும் நம் இந்திய அரசு வழங்கும் சலுகைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏராளமான சலுகைகளை கொட்டி கொடுக்கிறது.


இதோ அதன் பட்டியல்:

சம்பளம் மாதம் ரூ.16 ஆயிரம், நாடாளுமன்ற கூட்ட தொடருக்கான தினசரி படி ரூ.2 ஆயிரம், தொகுதிகளை பார்வையிட ஒரு நாள் படி ரூ. 20 ஆயிரம், அலுவலகம், உதவியாளர், தபால் செலவு மாதம் ரூ. 20 ஆயிரம் தரப்படுகிறது.

இதுதவிர இலவசமாக டெல்லி விமான பயணம், ரயில் பயணம், வருடத்திற்கு 34 முறை விமான மூலம் குடும்பத்தினரோடு இந்தியா முழுவதும் செல்லலாம்.

ரயிலிலும் இதே போல் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யலாம். 50 ஆயிரம் யூனிட் மின்சாரம், வீட்டிலும், அலுவலகத்திலும் தரைவழி தொலைபேசி ஆண்டுக்கு 50 ஆயிரம் இலவச போன் கால் பேசும் வசதி, 2 செல்போன்கள், மருத்துவ வசதி போன்றவைகள் உண்டு.

இந்தியாவிலுள்ள மத்திய அரசு துறைகளில் போர்டு உறுப்பினர் பதவிகள், இன்னும் பல்வேறு வசதிகள் புதியவர்களின் வரவுக்காக காத்திருக்கின்றன.

Sunday, May 17, 2009

தோல்வியே வெற்றியின் முதல் படி!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தோல்வியே வெற்றியின் முதல் படி!


நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொள்ளாதீர்கள் நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (அல்-குர்ஆன்)

நமது தாய்க்கழகமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், நம் முஸ்லிம் சமுதாயத்திற்காக பற்பல இன்னைகளையும், கரடுமுரடான பாதைகள் பலவற்றையும் கடந்து வந்து, கடந்த 14 ஆண்டுகளாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஒவ்வொரு துறையிலும் வெற்றி நடை போடுவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.

கல்வி விழிப்புணர்வு, பொதுநலசேவைகள், குருதிக்கொடைகள், உரிமைமீட்புப் போராட்டக்களங்கள் என்று நம் சமுதாய முன்னேற்றத்திற்காக நமது கழகம் ஆற்றிய அளப்பறிய தியாகங்களை தற்போது நினைவு கூறுமளவிற்கு எவரும் எளிதில் மறந்து விடக்கூடிய விஷயமன்று. தனது வெற்றிப்பயணங்களின் மற்றொரு மைல்கல்லான முஸ்லிம்களின் தன்னிகரற்ற சக்தியை அரசியல் களத்தில் நிலைநாட்டுவதற்காக, நமது சமுதாயத்தின் நீண்ட நாளைய உள்ளக்குமுறலை அரசியல் களத்திலும் மனிதநேய மக்கள் கட்சியாக பிரதிபளித்தது.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பொருளாதார சிக்கலுக்கிடையில், தமிழக அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு மத்தியில், முஸ்லிம்களின் கடந்த காலங்களைப் போல் திராவிடக்கட்சிகளிடம் ஒருசீட்டுக்காக மண்டியிட்டு மடிபிச்சைக் கேட்கும் அளவிற்கு இழிநிலையில் இல்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் அல்லாஹ்வின் துணையோடு, நம் சமுதாய அடலேறுகளின் அயராது உழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டு தனி அரசியில் களம் கண்டோம் - அல்ஹம்துலில்லாஹ்.

காரணம் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு இன்னல் என்றால் அது என் பிணத்தின் மீதுதான் நிகலும் என்ற புளித்துப்போன வீரவசனங்களை இச்சமுதாயம் இனியும் கேட்கத் தயாரில்லை என்பதை உணர்த்துவதற்காகவும்,

சட்டம் இயற்றும் அவைகளில் இடமில்லை என்றாலும் என் சவலைப்பிள்ளைகளுக்கு என் நெஞ்சத்தில் என்றும் இடமுண்டு என்ற பழைய பஞ்சாங்க பசப்பு வார்த்தைகளால் இனி முஸ்லிம்களை கோமாளிகளாக ஆக்கிட முடியாது என்பது நிரூபிப்பதற்காகவும்,

நமது சமுதாயத்தின் தன்மானம் காப்பதற்காக, திமுக, அதிமுக என்ற பணம் மற்றும் படை பலங்கள் பல கொண்ட கூட்டணிகளை எதிர்த்து 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் நாம் கால் பதித்தோம்.


ஜனநாயத்தை பணநாயகம் ஆட்சி புரியும் நம் தாய்த்திருநாட்டில், 2 மாதங்களில் ஒரு அரசியில் கட்சியை துவங்கி 3வது மாதத்தில் நாடளுமன்றம் செல்வது என்பது எட்டாக்கனி என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில், அராஜகமும் அடக்குமுறைகளும் அரங்கேறிய 2009 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிட்ட நான்கில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லையே என்ற எண்ணம் நம் சகோதரர்கள் பலருக்கு சோர்வை அளித்திருக்கலாம். அத்தகைய நல்ல உள்ளங்களுக்கு வல்ல அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான்.

அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே முழுமையாக அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:112)

நிச்சயமாக எவர்கள் ''எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன் 46:13)

அன்புச் சகோதரா! ''மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும''; என்ற தாரக மந்திரத்தை இலட்சியமாக உணர்த்தும் மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் நாம். நமது இலட்சியம், நமது கொள்கை, நமது இறுதி இலக்கு அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைப் பெற்று ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் என்ற உயரிய சுவர்க்கத்தை அடைவதுதானே தவிர வேறில்லை. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் கால் பதிப்பதென்பது மக்களுக்கு சேவை செய்யவும், பின்தங்கியுள்ள நம் முஸ்லிம் சமுதாயத்ததை முன்னேற்றப்பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கான ஒரு முயற்சியே அல்லாமல் வேறில்லை.

அன்புச் சகோதரா! என்று நாம் மனிதநேய மக்கள் கட்சி என்ற தனி அரசியல் களம் கண்டோமோ அன்றே தமிழக முஸ்லிம்கள் திராவிடக்கட்சிகளுக்கு அடிமைகளல்ல என்று நிரூபித்ததில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.

பணபலத்திற்கும், படைபலத்திற்கு இந்த சமுதாயம் அடங்கிவிடாது, மாறாக ஃபினிக்ஸ் பறவையை போல மரணத்திலிருந்து எதிர்நீச்சல் போடும் ஆற்றல் நமக்குண்டு என்பதை தமிழக அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்தலில் வெற்றி கண்டிருக்கிறோம்.

பதவி வெறிகொண்ட இத்திராவிடக் கட்சிகள் நம்பிரச்சாரத்தைக் கண்டு தோல்வி பயத்தால் நம்மை பேரம் பேசுமளவிற்கு, நம் சகோதரர்கள் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்துமளவிற்கு நம்மை கண்டு அஞ்சியதில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.

நாம் ஒரு கூட்டணியின் வெற்றிக்காக களம் இறங்கினால் 100 சதவிகித வெற்றிக்காக அவர்களக்காக உழைக்கவும் தெரியும், அதே நேரத்தில் அவர்கள் நம்மை கிள்ளுக் கீரையாக நினைத்தால் அவர்களையே எதிர்த்து களம் காணவும் முடியும் என்பதை உணர்த்தியதில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.

இதையெல்லாம் விட மேலாக, நம் சமுதாயம் மேலோங்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுக்காக மட்டுமே, தூய எண்ணத்தோடு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பாடுபட்டதற்கு, அயறாது உழைத்ததற்கு நாளை மறுமையிலே வல்ல அல்லாஹ்விடம் நற்கூலி பெறவிருப்பதை எண்ணித்தான் மிகவும் அகமகிழ்கிறோம்.

அன்புச் சகோதரா! இவ்வுலகில் வெற்றி தோல்லி என்பதெல்லாம் இறைவிசுவாசங்கொண்ட முஸ்லிம்களாகிய நமக்கு ஒரு பொருட்டல்ல. நாம் ஒரு விஷயத்தில் தோல்வியடைந்தால் நாம் தவறான நிலையில் இருக்கிறோம் என்பது பொருளல்ல. இதுதான் இஸ்லாம் நமக்குணர்த்தும் உன்னதமான பாடம்.

அல்லாஹ்வின் முழுபாதுகாப்பிலும், வஹியின் தொடர்பிலும் இருந்த அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உஹத் போர்க்களத்தில் தோல்வியடைந்தார்கள், அவர்கள் பற்கள் உடைக்கப்பட்டு அவர்களின் திருமுகம் கோரையாக்கப்பட்டது. இன்னும், இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக 13 ஆண்டுகள் மக்காவில் உழைத்த அண்ணலார் அவர்கள், இஸ்லாமிய அரசையோ, முஸ்லிம்களை பாதுக்ககாக்கும் கட்டமைப்பையோ உருவாக்க முடியவில்லை, இறுதியில் மக்காவை விட்டே அடித்து விரட்டப்பட்டார்கள்.

வெளிப்படையாக தோல்விபோன்று காட்சியளித்த அந்த சம்பவங்களை வைத்துக் கொண்டு இஸ்லாம் தவறான சிந்தாந்தம், முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை நிலை நாட்டுவதில் தோல்வியடைந்தார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா?(நவ்வூதுபில்லாஹ்). அவைகளெல்லாம் தோல்விகளல்ல. மாறாக பின்னர் வரவிருந்த பல வெற்றிகளை சுவைக்கும் அளவிற்கு முஸ்லிம்களை புடம் போட்ட தங்கங்களாக மாற்றிய அல்லாஹ்வின் சோதனைகள் அல்லவா அவைகள். இவ்வாறே முஸ்லிம்களாக நாம் பலவகையிலும் சோதிக்கப்படுவோம் என்று வல்ல இறைவன் தன் திருமறையில் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறான்.

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நன்மாராயங் கூறுவீராக!. பொறுமை உடையோராகிய அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 2: 155-157)

முஃமின்களே! உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறைவனிடம் பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்-குர்ஆன் 3: 186)


மக்களே! தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்பார்கள், நாம் மேற்குறிப்பிட்டது போன்று நாம் அடைந்திருக்கும் பல வெற்றிகளை வருகின்ற சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு படிக்கற்களாக மாற்றுவோம் - இன்ஷா அல்லாஹ். நம் சக முஸ்லிம் சகோதரர்களின் நிந்தனைகளை அலட்சியம் செய்வோம். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நம் சமுதாயமாக இருக்கட்டும். இனி தமிழக அரசியல் அரங்கின் நம் அடுத்த இலக்கு சட்டம் இயற்றும் அவையான தமிழ சட்டமன்றத்தை வெற்றி கொல்வதே. அதற்காக இன்றே உனது பணிகள் தொடரட்டும், வாழ்த்துகிறது மனிதநேய மக்கள் கட்சி.


முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (அல்-குர்ஆன் 3 : 200)

Friday, May 15, 2009

மத்திய சென்னை வன்முறை: காட்டிக் கொடுத்த சமுதாய துரோகிகள்.

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் கள்ள ஓட்டுப் போட வந்தவர்களை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் 6 பேர் மீது திமுக குண்டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.


சரியாக குறிபார்த்து தாக்குதல் நடந்ததின் பிண்ணனியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகளின் வழிகாட்டுதலில் இந்த கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற ஐஸ் ஹவுஸ் பகுதியின் பூத் ஏஜன்டாக த.த.ஜ வின் மாநில நிர்வாகி ஒருவர் இருந்துள்ளார். கள்ள ஓட்டுக்கள் அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் செ.ஹைதர் அலி ம.ம.க தொண்டர்களுடன் நிகழ்விடத்திற்கு வந்துள்ளார்.

எங்கு அடித்தால் கள்ள ஓட்டை சரியாக போட்டு முடிக்க முடியும் என்று சரியாக திட்டமிட்டு, வந்த வாகனத்தையும் வாகனத்தில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்களையும் அடையாளம் காட்டி தாக்குதல் நடத்த காட்டிக் கொடுத்துள்ளார் த.த.ஜ வின் மாநில நிர்வாகியான அந்த பூத் ஏ‍ஜென்ட்.

இயக்க வெறியின் காரணமாக ஒரு இஸ்லாமிய சகோதரனை காட்டிக் கொடுத்து மாற்று மதத்தவர்கள் கையினால் கொலைவெறி தாக்குதல் நடத்தி ரத்தம் சிந்த உடந்தையாக இருந்த த.த.ஜவினர் நாளைக்கு குஜராத்தை போல் ஒரு சம்பவம் தமிழ்நாட்டிலும் நடக்க இயக்க வெறியின் காரணமாக இஸ்லாமிய சகோதர சகோதரிகளையே இஸ்லாமிய விரோதிகளு்ககு காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

எனதருமை முஸ்லிம் சமுதாயமே! தனி மனித கருத்து வேருபாடின் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தை மாற்று மதத்தவர்களிடம் காட்டிக் கொடுத்து கருவறுக்கத் துடிக்கும் த.த.ஜவினரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

உன் நண்பனைக் காட்டு உன்னைப் பற்றிச் சொல்கி‍றேன் என்று சொல்வார்கள். ஒன்றாக பழகி, ஒன்றாக இருந்த நண்பர்களுத்தான் தெரியும் அவரின் பலமும் பலகீனமும் அதே நண்பர் எதிரணியில் இருந்தால் இவரின் ரகசிய செயல் திட்டங்கள் அனைத்தும் எதிரிக்கு இலகுவாக கிடைத்து விடும். வெல்வது எதிரி! கொல்வது ? நண்பனையா? இங்கே முஸ்லிம் சமுதாயம் சமுதாய துரோகிகளால் காட்டிக் கொடுத்து ரத்தம் சிந்தப்படுகிறது.

இவர்கள் நேர்வழி பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.

Thursday, May 14, 2009

மாநிலத்தில் 12ம் வகுப்பு தேர்சி பெற்ற மாணக்கர்களுக்கு ST கூரியரின் லட்சம் பரிசு மற்றும் கல்வி உதவி.

எஸ்.டி கூரியர் நிறுவனத்தின் கல்வி உதவி

12ம் வகுப்பில் மாநிலத்தில் தேர்ச்சி பெறும் முதல் 3 மாணவர்களுக்கு முறையே 1 லட்சம், 50 ஆயிரம் மற்றும் 25 ஆயிரம் ரொக்கப் பரிசுகளை வழங்குகிறது.


மேலும் அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், அந்தப் படிப்பைத் தொடர பொருளாதார வசதியின்றி தவிக்கும் மாணவ மாணவியர்கள் 10 பேரின் கல்விச் செலவை எஸ்.டி கூரியர் ஏற்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் மக்கள் சேவையில் எஸ்.டி குழுமம்
எஸ்.டி டிராவல்ஸ், எஸ்.டி கார்கோ மற்றும் எஸ்.டி கூரியர்.

Monday, May 11, 2009

மே 13 முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்!

மே 13 முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்!
- அபூ அப்தில்லாஹ்.
2009 மே 13 புதன்கிழமையன்று தமிழகம்; 39 புதுவை 1 ஆக 40 தொகுதிகளுக்குரிய மக் கள் சபை உறுப்பினர்களை (M.P.) தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதில் இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் தவறாது கலந்து தங்களின் விலை மதிப்பற்ற வாக்குகளை முறையாகப் பதிவு செய்வதே கடமையாகும். இந்த மண்ணின் மைந்தர்கள்- வந்தேறிகள் அல்ல என்பதை நிலை நாட்டுவதாகும்.
சில முஸ்லிம்கள் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பதோ, வாக்களிப்பதோ ஹராம்-கூடாது, தாக்கூத்திற்கு(ஷைத்தானுக்கு) துணை புரிவதாகும் எனக் கூறி முஸ்லிம்களை தவறான வழியில் இட்டுச் செல்ல முயல்கிறார்கள். அவர்கள் தங்களின் இந்த வாதத்தில் உண்மையாளர் களானால், இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுபட்டு நடப்பது, பல வகையான வரிகள் கட்டுவது, அரசு உறுதி அளித்து வெளியிடும் ரூபாய் நோட்டுகளை ஏற்று அவற்றைக் கொண்டு தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது, பல வகையான அரசு உரிமங்களைப் பெறுவது, வெளிநாடு செல்ல கடவுச் சீட்டு (Passport) பெறுவது இவை அனைத்தும் ஹராம் - கூடாது, தாக்கூத்திற்குத் துணை போகும் செயல்கள் எனக் கூற வேண்டும். ஆம்! அவர்களது கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் இந்த நாட்டில் இருக்கக் கூடாது. அவர்கள் கூறும் இறையாட்சி நடக்கும் இடம் தேடிச் சென்றுவிட வேண்டும். இது அவர்களால் முடியுமா? இறை யாட்சி நடக்கும் ஒரு நாடு உண்டா? இல்லையே!

முஸ்லிம்கள் முதலில் தங்கள் அளவில் இறையாட்சியை நிலைநாட்டி, 3:103 இறைக் கட்டளைப்படி அல்குர்ஆனை ஒன்றிணைந்து வலுவாகப் பற்றிப் பிடித்து ஓரணியில் இல்லை. இறைவனின் நேரடியான கட்டளைகளைப் புறக் கணித்து, மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு மக்களை வழி கெடுக்கும் புரோகித மவ்லவி களைப் பற்றிப் பிடித்து, அவர்களின் சுயநலக் கற்பனைகளை இறைவாக்காக ஏற்று நடக்கும் பரிதாப நிலையில் இருக்கிறார்கள் முஸ்லிம்கள். அதன் காரணமாக எண்ணற்றப் பிரிவுகளில் சிக்கிச் சீரழிகிறார்கள்.

முஸ்லிம்களின் சுய வாழ்க்கையிலேயே இறையாட்சி இல்லாத நிலையில், நாட்டில் இறையாட்சியை எப்படி ஏற்படுத்த முடியும்? 24:55ல் அல்லாஹ் கட்டளையிடுவது போல் புரோகித மவ்லவிகளைப் புறந்தள்ளி அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து முஸ்லிம்கள் ஒன்றுபடட்டும். ஆட்சி அதிகாரத்தை அல்லாஹ் நிச்சயம் தருவதாக வாக்களிக்கிறான்.

அதுவரை, மேலே சுட்டிக் காட்டிய அனைத் திலும்; நிர்பந்த நிலையில் முஸ்லிம்கள் செயலாற் றுவது போல், தேர்தலிலும் வேட்பாளர்களாக நிற்பதும், வாக்களிப்பதும் நிர்பந்த நிலையில் அவசியமாகும். அது கொண்டே முஸ்லிம்கள் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள், நாட்டுபற்று மிக்கவர்கள் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். சில பொறுப்பற்ற முஸ்லிம்கள், வாக்களிப்பது, வேட்பாளர்களாக நிற்பது ஹராம்-கூடாது, தாக்கூத்திற்கு (ஷைத்தானுக்கு) துணை போவதாகும் என்று பிதற்றித் திரிவதால்தான், காவி வகையறாக்கள் முஸ்லிம்கள் தேசப்பற்று அற்றவர்கள், பாகிஸ்தான் போன்ற அயல் முஸ்லிம் நாடுகளை நேசிப்பவர்கள் என பொய் யான செய்திகளை நாடு முழுவதும் பரப்ப வழி ஏற்படுகிறது. எனவே இப்படிப்பட்டவர்கள் தங்களில் இறையாட்சி ஏற்பட்டு, அல்குர்ஆனை பற்றிப் பிடித்து முஸ்லிம்கள் ஒன்றுபடுவதற்குரிய முயற்சிகளில் தீவிரமாக இறங்கட்டும். இப்படிப் பட்ட அர்த்தமற்ற பிதற்றல்களை விட்டுத் தள்ளட்டும்.

ஆயினும் வாக்களிக்கும் அனைத்து முஸ்லிம் களும், வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம்களும் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று செயல்பட்டு 3:110-ல் அல்லாஹ் கூறுவதுபோல் மாற்றாருக்கு நேர்வழிகாட்ட வேண்டும். வாக்களிக்கும் முஸ்லிம் கள் தங்களின் பொன்னான விலை மதிப்பற்ற வாக்குகளை 1000-க்கும் 5000-க்கும் விற்க ஒரு போதும் துணியக் கூடாது. அப்படி மக்களுக்குப் பணம் கொடுத்து அதன் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்கள், தாங்கள் செலவழித்ததைப் பன் மடங்காக பெருக்கி கோடி கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கத் துணிவார்களே அல்லாமல், மக்களுக்குத் தொண்டு செய்யவோ, சேவை செய்யவோ, முன்வரமாட்டார்கள் என்பதை முஸ்லிம் ஆண்களும், பெண்களும் மனதில் இருத் திக் கொள்ள வேண்டும். எனவே தங்கள் வாக்கு களை ஒருபோதும் பணத்திற்கு விற்கக் கூடாது.

அடுத்து வெற்றி பெறுபவருக்கே நமது வாக்கையும் அளிக்க வேண்டும் என்ற மூட எண்ணமும் கூடாது. பணம் கொடுத்து வாக்குகளை வாங்காமல், தொண்டு செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்களுக்கே முஸ்லிம்கள் தங்கள் வாக்கை அளிக்க வேண்டும். நாம் வாக்களிக்கும் வேட்பாளர் தோற்றாலும் பரவாயில்லை ; அதனால் மக்களுக்குத் தொண்டு செய்வதை விட்டு விட மாட்டார் என்ற அடிப்படையில் நல்லவர்களுக்கே, தொண்டு செய்பவர்களுக்கே நமது வாக்குகளை அளிக்க வேண்டும். தோற்பவர்களுக்கு வாக்களிக்க லாம். ஆனால் தொண்டைத் தொழிலாக்கிக் கோடிகோடியாக சுருட்டுகிறவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்க கூடாது.

நாம் வாக்களித்து அதன் மூலம் வெற்றி பெற்றுப் போகிறவர்கள் செய்யும் அநியாயங்கள், அட்டூழியங்கள் அனைத்திற்கும் நாமும் துணை போன குற்றத்திற்கு ஆளாக நேரிடும். அதனால் வாக்களிக்காமல் இருப்பதே சிறந்தது என சிலர் வாதிடலாம். இந்த எண்ணத்தில் நாம் வாக்களிக் கத் தவறினால், நமது வாக்கு கள்ள வாக்காக மாறி நிற்பவர்களில் ஆகக் கொடியவர்கள் தேர்வு பெறக்காரணமாகலாம். அதனால் வாக்களிக்காமல் இருந்து எந்தப் பாவத்தைத் தவிர்க்க எண்ணினோமோ அதை விடப் பெரும் பாவத்தை இரட்டிப் பாக அடைய நேரிடும் என்பதை இப்படிப்பட்ட எண்ணமுடையவர்கள் உணர வேண்டும்.

எனவே நிற்பவர்களில் குறைந்த தவறுடைய வர்களைப் பார்த்து நமது வாக்கைப் பதிவு செய்யலாம். அப்படிப்பட்டவர்களும் வேட்பாளர் களில் தென்படாவிட்டால், தேர்தல் அதிகாரியிடம் கூறி அதற்குரிய படிவத்தைப் பெற்று, வேட்பாளர் களில் யாரும் தகுதியானவர்கள் இல்லை. எனவே எனது வாக்கை யாருக்கும் அளிக்கவில்லை என பூர்த்தி செய்து கொடுத்து, முஸ்லிம்களின் வாக்குகள் கள்ள வாக்குகளாக மாறுவதைத் தடுக்கலாம். ஆக முஸ்லிம்கள் 100மூ தவறாது ஒவ்வொரு தொகுதியிலும் வாக்களித்துள்ளார் கள் என்ற சாதனையின் மூலம் ஆட்சியாளர்களின், அதிகாரிகளின் கவனத்தை முஸ்லிம் சமுதாயத் தின் பக்கம் திருப்ப முடியும். இது முஸ்லிம் ஆண், பெண் வாக்காளர்களின் கடமையாகும்.

அடுத்து முஸ்லிம் வேட்பாளர்கள், ஜாதி, மதம், இனம் என வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் தொண்டு, சேவை செய்யும் எண்ணத்துடனும், முஸ்லிம்களின் உரிமைகளை கட்டிக்காக்கும் குறிக்கோளுடனும், வேட்பாளர்களாக நிற்க வேண்டும். இன்று அரசியலைவிட ஆதாயம் தரும் வியாபாரம் வேறு ஒன்றுமில்லை; முதல் இல்லாமலேயே கோடி கோடியாகப் பொருள் ஈட்ட முடியும் என்ற தீய நோக்குடன் வேட்பாளர்களாக ஒரு போதும் நிற்கக் கூடாது. அற்ப உலக ஆதாயம் கருதி தொண்டைத் தொழிலாக்கி மக்கள் பணத்தை லஞ்சம் போன்ற தவறான வழிகளில் சுருட்ட முற்படுகிறவர்கள், தூய மார்க்கத்தை மதமாக்கி தொண்டைத் தொழிலாகக் கொண்ட புரோகித மவ்லவிகள் தங்கள் வயிறுகளில் நரக நெருப்பை நிரப்பிக் கொள்வது போல், இவர்களும் நரக நெருப்பையே தங்கள் வயிறுகளில் நிரப்பிக் கொள்கிறார்கள் (பார்க்க 2:174).

அது வட்டி, பன்றிக் கறி சாப்பிடுவதை விட மிகக் கொடிய ஹராம் என்பதை நினைத்து சதா அஞ்சிக் கொள்வார்களாக. ஆயினும் அன்று ஆட்சி செய்த கலீஃபாக்கள், கவர்னர்கள் அரசிடமிருந்து ஊதியம் பெற்றது போல், இவர் கள் அரசு கொடுக்கும் ஊதியத்தை அடைவதில் தவறில்லை. சேவை செய்யும் தூய நோக்குடன் மட்டுமே வேட்பாளர்களாக நிற்க வேண்டும்.

மக்களுக்கு உண்மையிலேயே சேவை மனப்பான்மையுடன் தொண்டு செய்தவர்கள் பிரபல கட்சிகளை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிவாகை சூடிய வரலாறெல் லாம் தமிழகத்தில் உண்டு. இதை முஸ்லிம் வேட்பாளர்கள் முன்மாதியாகக் கொள்ள வேண்டும்.

மற்ற வேட்பாளர்கள் கடைபிடிக்கும் சிலை களுக்கெல்லாம் மாலையிடுதல், கோவில், சர்ச், தர்கா, பள்ளி என ஏறி இறங்குவது, கண்டவர் களுக்கெல்லாம் கூழைக் கும்பிடு போடுதல், வணக்கம் செலுத்துவது, ஆரத்தி எடுக்க அனுமதிப்பது, பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது, இல்லாத சிறப்புகள் இருப்பதாக மற்றவர்கள் தங்களை புகழ்ந்து பேச வைப்பது, தேர்தல் வேலை செய்பவர்களுக்கு ஹராமான மது, சாராயம், கள்ளசாராயம் என வாங்கிக் கொடுத்து வேலை வாங்குவது, வாக்காளர் களுக்குப் பணம் கொடுப்பது இத்தியாதி, இத்தி யாதி செயல்களை ஒருபோதும் செய்ய முற்படக் கூடாது. மற்ற வேட்பாளர்களுக்கு 3:110 இறைக் கட்டளைப்படி ஓர் அழகிய முன்மாதிரியாகத் திகழ வேண்டும். மற்ற வேட்பாளர்கள் இவர்களைப் பார்த்து வெட்கித் தலை குனிய வேண்டும். இவர்களே உண்மையிலேயே தொண்டு செய்யும் உள்ளம் படைத்தவர்கள் என அவர்களின் உள் மனம் அவர்களை எச்சரிக்கும் நிலையில் முஸ்லிம் வேட்பாளர்கள் செயல்பட வேண்டும்.

தொண்டு செய்வது கொண்டு மட்டுமே, தொகுதி மக்களின் ஆகுமான தேவைகளை எவ்வித சுயலாபத்தையும் எதிர்பாராமல் செய்து கொடுப்பது கொண்டு மட்டுமே அந்த தொகுதி மக்களின் உள்ளங்களில் இடம் பிடிக்க வேண்டும். அந்த மக்கள் விரும்பியே இவரை முனைந்து வேட்பாளராக நிற்க வைக்கவும், வேலை செய்து வெற்றி பெறச் செய்யவும் கூடிய நிலையில் இவர்களின் சேவைகள் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் இஸ்லாமிய நெறி முறைகளை முறிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது. இப்படிப் பட்ட தூய எண்ணத்தோடு முஸ்லிம் வேட்பாளர் கள் செயல்பட்டால், முஸ்லிம்கள் மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாத தொகுதி மக்களும், தங்கள் இன வேட்பாளரை விட இவரை விரும்பி தேர்ந் தெடுக்கும் நிலை கண்டிப்பாக உண்டாகவே செய்யும்.

முஸ்லிம் வேட்பாளர்கள் மற்ற கட்சிகளில் இணைந்து அந்தக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படுவதின் மூலம் முஸ்லிம்களுக்கு சேவையாற்ற முடியும் என்பது அப்பட்டமான பொய்யே ஆகும். சுதந்திரம் கிடைத்த 1947-லிலிருந்து கடந்த 62 ஆண்டுகளாக முஸ்லிம்கள் பிற கட்சிகளால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதும், முஸ்லிம்கள் ஏமாந்த சோனகிரிகளாக இருக்கிறார்கள் என்பதுமே உண்மையாகும். அதற்காக அக்கட்சிகளை குறை சொல்லவும் முடியாது. நமது நாட்டில் ஜனநாயக ஆட்சிமுறை இருப்பதால் சிறுபான்மையினருக்கு நல்லது செய்து, அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வெறுப்புக்கும், கோபத்திற்கும் ஆளாகி, அதன் மூலம் அவர்களின் வாக்குகளை இழப்பதற்கு எந்தக் கட்சியும் முன் வருமா? ஒரு போதும் முன் வராது. வாய் இனிக்கப் பேசி முஸ்லிம்களை ஏமாற்றவும், அவர்களின் ஒற்றுமையை குலைக் கவும் சதி செய்வார்களே அல்லாமல், ஒரு போதும் முஸ்லிம்களுக்கு நல்லது செய்து, அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் ஆதரவை இழக்கத் துணிய மாட்டார்கள். அதுவும் முஸ்லிம்களைப் பற்றிய வெறுப்புணர்வு நாட்டு மக்களிடையே இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதி என தொடர்ந்து அவதூறுகள் பரப்பி வளர்க்கப் பட்டு வருவதால், எந்தக் கட்சியும் முஸ்லிம் களுக்கு நல்லது செய்ய ஒருபோதும் துணியாது. எனவே “தன் கையே தனக்குதவி” என்ற அடிப் படையில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து தனித்து நின்று தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதுவே முஸ்லிம்களின் நலனுக்கு நல்லது.

யாரெல்லாமோ, எந்த உருப்படியான கொள்கையோ, இலட்சியமோ இல்லாமல், வெறும் சீட்டுகளுக்காக மட்டும் கூட்டணி அமைக்கும் போது, ஒரே இறைவனையும், ஒரே தூதரையும், ஒரே குர்ஆனையும், தௌ;ளத் தெளிவான ஓரிறைக் கொள்கையையும், தௌ;ளத் தெளிவான வழிகாட்டலையும் பெற்றுள்ள, முஸ்லிம்கள் ஓரணியில் ஒன்றுபடுவதில் தயக்கம் ஏன்? அற்ப உலக ஆதாயமும், சுயநலமும் மட்டுமே ஒன்று சேரத் தடையாக இருக்கிறது. தங்களுடைய அற்ப உலக ஆதாயங்களையும், சுய நலப்; போக்கை யும் தலைவர்கள் தியாகம் செய்ய முன் வந்தால் முஸ்லிம் சமுதாய ஒற்றுமை எளிதாக ஏற்பட்டு விடும். மார்க்க விஷயத்தில், கொள்கைகளில் வேறுபட்டாலும் அவற்றின் உண்மை நிலையை நாளை மறுமையில் அவரவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அவற்றை காரணம் காட்டி சமுதாயத்தை இவ்வுலகில் பிளவு படுத்துவது கூடாது. அல்லாஹ்வே தனது தீர்ப்பளிக்கும் அதி காரத்தை மறுமைக்கென்று ஒத்தி வைத்;திருக்கும் நிலையில், அதைத் தங்கள் கையில் இவ்வுலகி லேயே எடுத்துக் கொள்வதைவிட கொடிய ஷிர்க், இணை வைக்கும் பாவச் செயல் பிறிதொன்று இல்லை என்பதை முஸ்லிம்களும், முஸ்லிம் அறி ஞர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். 21:92, 23:52 இறைக் கட்டளைகள்படி சமுதாய ஒற்றுமை காக்க முன் வந்தால் சமுதாய ஒற்றுமைக்கு வழி பிறக்கும்.

அந்த அடிப்படையில் பிரிந்து கிடக்கும் முஸ்லிம் கட்சிகள், கழகங்கள் அனைத்தும் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்பட்டால், குறைந்தது 5 அல்லது 4 தொகுதிகளை பிற கட்சிகளிடம் பேரம் பேசி பெற முடியும் என சென்ற இதழில் எழுதி இருந் தோம். முஸ்லிம் கட்சிகள், கழகங்கள் அப்படி யொரு தேர்தல் கூட்டணி அமைக்க முன் வர வில்லை. அதனால் 4,5 சீட்டுகள் கிடைப்பதற்குப் பதிலாக ஒரேயொரு சீடடு அதுவும் அவர்களின் சின்னத்திலேயே அவர்களின் கட்சியில் ஒருவராக போட்டியிட மட்டுமே வாய்ப்புக் கிட்டியது.

வெற்றி பெற்றாலும் அவரால் முஸ்லிம் சமுதாயத்திற்கு குறிப்பிடும் அளவுக்கு பலன் கிடைக்கப் போவதில்லை. சமுதாயப் பிரச்சினை களை துணிந்து மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் வாய்ப்பு இல்லை. அடக்கி மட்டுமே வாசிக்க முடியும். பிற கட்சிகள் மூலம் போட்டி யிட்டு தேர்ந்தெடுக்கப்படும் எந்த முஸ்லிமின் நிலையும் இதுதான். எனவே அவர்களுக்காக பெரும் பாடுபட்டு முஸ்லிம்கள் அவர்களை வெற்றி பெறச் செய்தாலும், முஸ்லிம் சமுதாயம் அத னால் பெரும் பலன் அடையப் போவதில்லை.

அதனால், பிற கட்சிகள் பின்னால் செல்லும் அவல நிலை மாற வேண்டும். “தன் கையே தனக்குதவி” என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி பாடுபட்டு அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். முஸ்லிம்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அனைத்தும் அப்படிப்பட்ட வேட்பாளர் களுக்கு விழுமானால் சில தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற முடியும். எக்காரணத்தைக் கொண்டும் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறக் கூடாது. ஒட்டுமொத்தமாக அந்த வேட்பாளர்களுக்கே விழ வேண்டும்.

ஆயினும் பிற கட்சிகள் முஸ்லிம்களின் இந்த ஒற்றுமையைக் குலைத்து சிதறச் செய்யவே பெரும்பாடு படுவார்கள். இதற்காக அவர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்களின் சமூக, கட்சி ஆதாயத்திற்காக அப்படிச் செயல்படு கிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் ஆசை வார்த் தைகளில் மயங்கி, கொடுக்கும் அற்பப் பதவி களுக்கு ஆசைப்பட்டு சமுதாயத்தைப் பிளவு படுத்த முற்படும் முஸ்லிம் பெயர் தாங்கிகளே குற்றவாளிகள். அவர்களுக்கு சமுதாய நலனை விட, அவர்களின் அற்ப உலக ஆதாயமே பெரிதாகத் தெரிகிறது. அப்படிப்பட்டவர்களாலேயே முஸ்லிம் சமுதாயம் அன்றிலிருந்து இன்று வரை சீரழிந்து வருகிறது. அவர்கள் சமுதாய தலைவர்களாக இருப்பதற்கே தகுதியற்றவர்கள். அப்படிப்பட்ட சுயநலப் பேர்வழிகளை தலைவர்களாக ஏற்று அவர்களுக்கு வெண் சாமரம் வீசும் போக்கை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். அவர்கள் பின்னால் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சுயநலத்திற்கும், அற்ப உலக ஆதாயத்திற்கும் முதலிடம் கொடுக்காமல், சமுதாய ஒற்றுமையையும், சமுதாய நலனையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்களை மட்டுமே வழிகாட்டிகளாக முஸ்லிம் சமுதாயம் ஏற்க வேண்டும்.

அப்போதே சமுதாயம் உருப்படும், மேம்படும். இவ்வுலக இன்னல்கள் மட்டுமாவது நீங்கும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் பிளவு படாமல் ஒன்றுபட்டு, பிற கட்சிகளில் நிற்பவர்களை ஓரங் கட்டி, முஸ்லிம் சமுதாயத்திற்கென்றே நிற்கும் முஸ்லிம்களுக்கே வாக்களிக்க வேண்டும். அவர்கள் சில சமயம் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், முஸ்லிம்கள் அனைவருடைய வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் 100மூ விழுவதால், தேர்தல் கமிஷனிடம் கட்சி அங்கீகார மும், குறிப்பிட்ட சின்னமும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்வரும் தேர்தலில் தவறாது தங்கள் வாக்குகளைச் செலுத்துவதோடு, நடக்க முடியாதவர்களையும் தூக்கிச் சென்று வாக்க ளிக்க உதவுமாறு கோரிக்கை வைக்கிறோம். முஸ்லிம்களின் 100% வாக்கும் பதிவாக வேண்டும். அதற்குரிய தீவிர முயற்சிகளில் முஸ்லிம்கள் முனைந்து ஈடுபட வேண்டும்.

கடந்த தேர்தலில் உயிரைக் கொடுத்துப் பாடுபட்டு, அம்மாவை ஆட்சியில் அமர்த்தப் போவதாக சூளுரைத்த ததஜ தலைமைப் புரோகிதர் இத்தேர்தலில் உயிரைக் கொடுத்து பாடுபட்டு முஸ்லிம்களுக்காக நிற்கும் முஸ்லிம் வேட்பாளர்களை டிபாஸிட் இழக்கச்செய்யப் போவதாக சூளுரைத்துள்ளார். சமுதாய நலனில் அக்கறை யுள்ள எந்த ஒரு முஸ்லிமும் இப்படி சூளுரைக்க முடியாது. அதற்காகக் கூறும் காரணமோ அதை விட நகைப்புக்குரியது. சுனாமி பணத்தை சுருட்டி விட்டார்களாம். இன்னும் பல மோசடிகளைச் செய்தார்களாம். கூறுவது யார்? உலக மகா பொய்யர் வாயிலிருந்து வெளி வருவது அனைத் தும் பொய்களே என்பதை 29.3.2009 தொண்டி விவாதத்திற்குப் பின்னர் அவர் பரப்பிவிட்ட பொய்களே போதிய சான்று. அது மட்டுமா? தமுமுக கழகத்திற்கென்று நன்கொடை கொடுப்பவர்கள் அதற்காகவே கொடுங்கள் என்று இவர் கைப்பட எழுதிய கடிதமே ஆதாரமாகவே இருக்கும் போது, அப்படிக் கூறி வசூலித்த நிதியிலிருந்து வாங்கிய கட்டிடங்களையும், உணர்வு வார இதழையும் சுருட்டிக் கொண்ட மகா யோக்கியர் இப்படிக் கூறுகிறார். ததஜ அமைப்புக்காக ஒருவர் கொடுத்த பெரும் மதிப் புள்ள சொத்தை, தனது பெயரிலேயே பதிவு செய்து கொண்ட இவர், நாளை ததஜவை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால், ததஜவுக்குரிய அந்தச் சொத்தை சுருட்ட மாட்டார் என்பது என்ன நிச்சயம்? அப்படிப்பட்ட யோக்கியர் இப்படிக் கூறுகிறார். இதே நபர் உணர்வு உரிமை 05 குரல் 06, அக். 20-26,2000 இதழின் 12-ம் பக் கம் கூறியுள்ளதைப் பாருங்கள்.

தமுமுக எனும் சமுதாயப் பேரியக்கம் இன்று அவசியத்திலும் அவசியம் என்பதை உங்களை விட நான் அதிகமாகவே நம்புகிறேன். இந்தக் கழகம் சிதறுண்டுவிட்டால் மீண்டும் இந்தச் சமுதாயத்தை ஒன்று திரட்டுவதற்கு எத்தனையோ ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் இக்கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நான் விலகுவதாக இல்லை.

தமுமுகவின் இன்றைய தலைமை நிர்வாகிகள் மீது நான் அதிருப்தியடைந்து ஒதுங்குவதாகவும் யாரும் நினைத்து விட வேண்டாம். இன்று இருக்கின்ற தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் உறுப்பினராக நான் இருப்பதே இதற்குச் சான்று.

மறுமையை முன்னிறுத்தி சமுதாயச் சீர்திருத் தத்துக்காக நானும் சேர்ந்து உருவாக்கிய தவ்ஹீது இயக்கத்தில் கூட, சுயநலனையும், பதவி மோகத்தையும், பணம் திரட்டும் குறிக் கோளையும் நான் காண்கிறேன். சம்பளம் இல்லாவிட்டால் அவர்கள் இப்பணியைச் செய்ய மாட்டார்கள் என்பதையும் உணர்கிறேன்.

ஆனால் உலகில் அடைய வேண்டிய உரிமைகளுக்காகத் துவக்கப்பட்ட தமுமுகவின் தலைமை நிர்வாகிகளிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நிலையை நான் காணவில்லை.

தமுமுகவின் தலைமை நிர்வாகிகளில் எவருக்கும் இப்பொறுப்பைச் செய்வதற்காக மாத ஊதியம் இல்லை.

கூட்டங்களில் பேசச் சென்றால் அதற்காகக் கட்டணம் கேட்பதில்லை.

எந்த நேரத்தில் கதவைத் தட்டினாலும் சொந்த வேலையைப் புறந்தள்ளிவிட்டு பிரச்சினைகளைத் தீர்க்கும் தியாக மனப் பான்மை.

எந்தப் பிரச்சனையை யாருக்கு முடித்துக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து எந்தப் பிரதி பலனையும் எதிர்பாராத தன்மை.

எத்தகைய மிரட்டலுக்கும் அடக்கு முறை களுக்கும் அஞ்சாத துணிவு.

கலவரத்தீ மூண்ட நேரத்திலும் உயிரைப் பணயம் வைத்துச் சென்று களப்பணியாற்றும் பாங்கு.

தங்களை முன்னிறுத்தாமல் கழகத்தை முன்னிறுத்தும் அடக்கம்.

எந்தவொரு பிரச்சனை குறித்தும் கலந்து ஆலோசித்து அல்லாஹ்வின் திருப்தியையே குறிக்கோளாகக் கொண்டு முடிவெடுத்தல்.

சிறை செல்லும் நிலை ஏற்பட்டால் தங்களை முதலில் நிறுத்திக் கொள்ளக் கூடிய பொறுப்புணர்வு.

உணர்வுகளைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்காமல் சமுதாயத்தால் தாங்கிக் கொள்ளக் கூடிய முடிவுகளை மேற்கொள்ளுதல்.

இப்படிச் சரியான தலைமைக்கு உரிய எல்லா பண்புகளையும் மாநில தலைமை நிர்வாகிகளிடம் நான் காண்கிறேன். தன்னலமற்ற இந்தத் தலைவர்களை வழங்கியதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.

இதன் பிறகும் வேறு காரணங்களை யாரேனும் கற்பித்தால் மறுமை நாளில் அவர் களுக்கு எதிராக நான் அல்லாஹ்விடம் முறையி டுவேன். உணர்வு அக்.20-262000 பக்கம் 12.

இப்போது, அன்று பீ.ஜை. சொன்னதை ஏற்பதா? அல்லது இன்று அவர் சொல்வதை ஏற்பதா? அதுவும் தமுமுகவின் மாநில அமைப்பாளர் மற்றும் அனைத்துப் பொறுப்புளிலிருந்தும் விலகும்போது, “மனம் திறந்த மடல்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆக்கத்திலுள்ள வரிகள் இவை. தமுமுக தலைவர்களைப் பற்றி யாரும் குறை கூறினால் நாளை மறுமையில் அல்லாஹ் விடம் முறையிடுவதாகவும் கூறியுள்ளார். அப்படியானால் நாளை மறுமையில் இவரைப் பற்றி இவரே அல்லாஹ்விடம் முறையிடப் போகிறாரா?

ஆம்! பீ.ஜை. கூறும் அனைத்திற்கும் ஆமாம் சாமி போட்டால், அளவுக்கு மீறிய மிதமிஞ்சிய தங்களிடமில்லாத சிறப்புகள் நிறைந்த வஞ்சகப் புகழுரைகள் எல்லாம் கிடைக்கும். அவரது வழிகெட்ட கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்தால், மறுப்புத் தெரிவிப்பவர்களுக்கு எதிராக அவர் களிடமில்லாத இழிகுணங்ளும், ஒழுக்கக் கேடுகளும் இருப்பதாக ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்களும், அவதூறுகளும் அரங்கேறும். இதுவே பீ.ஜையின் இரண்டு கோர முகங்கள்.

குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பது போல் பீ.ஜையின் பேச்சுக்களையும் கணக்கில் கொள்ளவே முடியாது; கூடாது. “இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று உலகம் முழுவதும்; உலா வரும் ஊனுயைப் பார்ப்பவர் கள், இவரது முன்னுக்குப் பின் முரணான பேச்சுக்களையும், மரத்துக்கு மரம் தாவும் குரங்குப் புத்தியையும், இதுவரை அடித்துள்ள அந்தர் பல்டிகளையும் தெரிந்து கொள்ள முடியும். இவரைவிட மானங்கெட்ட ஒருவர் இருக்க முடியாது என்பதும் தெரிய வரும். அவரது அறிவுரைகளை இறைவாக்காக எடுத்து நடப்பவர்கள் இவ்வுலகிலும் கேட்டை அனுபவிப் பார்கள். நாளை மறுமையிலும் நரகையே சென்றடைவார்கள் என்பதை 7:3, 33:21,36,66,67,68 இறை வக்குகளை சுயமாக நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் மறுக்க முடியாது.

இதுவரை நூற்றுக் கணக்கானவர் மீது அப்பட் டமான பொய்களையும், அவதூறுகளையும், அவரும், அவரது கைத்தடிகள், பக்தர்கள் மூலமும் உலகம் முழுவதும் பரப்பி இருக்கிறாரே, அவற்றில் ஒன்றையாவது உரிய ஆதாரங்களை எடுத்துக் காட்டி முறைப்படி நிரூபித்திருக்கிறாரா? இல்லையே! அவர் ஜமுக்காளத்தில் வடித் தெடுத்த பொய்யர், அயோக்கியர் எனும் போது முஸ்லிம் வேட்பாளர்களைப் பற்றி அவர் சொல்லுவதை எப்படி ஏற்பது?

ஒரு வாதத்திற்கு அவரது இந்தப் பொய்க் கூற்றை ஏற்பதாக இருந்தாலும், அவரது நடத்தை எப்படி இருக்க வேண்டும்? போட்டியிடும் எந்த வேட்பாளரையும் ஆதரித்து பிரசாரம் செய்யக் கூடாது. இவர் பிரசாரம் செய்ய களம் இறங்கும் வேட்பாளர்கள் அனைவரும், இவர் முஸ்லிம் வேட்பாளர்கள் பற்றி கூறும் குறைகளை விட்டும் தூய்மையாளர்களா? குறைகளைப் பட்டியலிட்டால் அனைத்திலும் முஸ்லிம் வேட்பாளர்களைவிட பல படிகள் மேலே அல்லவா அவர்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருவரையாவது முஸ்லிம் வேட்பாளர் களைவிட நல்லவர்கள் என பீ.ஜை.யால் நிலை நாட்ட முடியுமா? பின்னர் எந்த முகத்தோடு தேர்தல் பிரசார களத்தில் இறங்கி முஸ்லிம் சமுதாய முஸ்லிம் வேட்பாளர்களைத் தோற்கடிக்கப் போகிறார்? விளக்க முடியுமா? ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் அல்லாஹ்வையும், மறுமையையும், கேள்வி கணக்கையும் நம்புகிறவர்கள். அவர்கள் வாக்ளித்தபடி அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்யாமல், மக்கள் பணத்தை சுருட்டினால், இங்கு தப்பினாலும் அங்கு தப்ப முடியுமா? அவர் களை அல்லாஹ்வின் முன்னால் நிறுத்தி குற்றப்படுத்தி நட்ட ஈடாக அவர்களின் தொழுகை, நோன்பு, ஜகாத், நற்செயல்களில் ஈடு வாங்கிக் கொள்ள முடியுமே. அதற்கு மாறாக பீ.ஜை. முஸ்லிம் வேட்பாளர்களை தோற்கடிக்க களத்தில் இறங்கி பிரசாரம் செய்து மாற்றாரை வெற்றி பெறச் செய்தால், அவர்கள் பதவியில் செய்யும் அட்டூழியங்களுக்கு நாளை மறுமையில் நட்ட ஈடு பெற முடியுமா? வழி இருக்கிறதா? இல்லையே! அவர்களது சுமையின் ஒரு பங்கை இவரல்லவா சுமக்க வேண்டும்.

பின் எப்படி முஸ்லிம் சமுதாயத்திற்காக வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம்களை கடும் பிரசாரம் செய்து தோற்கடிப்பதாக பொதுக் குழுவில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். பீ.ஜை.யின் அற்ப உலக ஆதாய, சுயநல கோர முகம் தெரிகிறதா? இல்லையா?

ஆக, ததஜ தலைமைப் புரோகிதர் பீ.ஜை. யின் இப்படிப்பட்ட உளறல்களை குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்ற அடிப்படையில் தூக்கி குப்பைத் தொட்டிகளில் எறிந்துவிட்டு, பீ.ஜை.யின் கைத்தடிகளும், பக்தர்களும் முஸ்லிம் சமுதாயத்தின் நலனையே குறிக் கோளாகக் கொண்டு (பீ,ஜையின் நலனை அல்ல) 62 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத் தில் முதல் முதலாக முஸ்லிம் சமுதாயத் திற்கென்றே வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம் களை முழுமையாக ஆதரித்து தங்களின் பொன்னான வாக்குகளைச் செலுத்துவதோடு, முஸ்லிம்கள் அனைவரும் ஒருவர் கூட விடுபடா மல் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க முழு மூச்சாகப் பாடுபடுவதே அவர்களுக்கு அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுத் தரும். முஸ்லிம் சமுதாயத்திற்கு நலன் ஏற்பட்டு இழந்த உரிமைகளை மீட்கவும், இருக்கும் உரிமைகளை காக்கவும் வழி ஏற்படும் என்பதை உணர்வில் கொள்வார்களாக. பீ.ஜை.யின் சொந்த நலனை விட முஸ்லிம் சமுதாய நலன் கோடி கோடி மடங்கு மேலானது என்பதை அவரது ஆதர வாளர்கள் உணர்வார்களாக.

எனவே முஸ்லிம் சமுதாய மக்களே உங்களது மார்க்கக் கொள்கை கோட்பாடுகளை அல்லாஹ்வின் மறுமைத் தீர்;ப்புக்கென்று ஒத்தி வைத்துவிட்டு, இவ்வுலகில் மட்டிலுமாவது ஏற்றம் பெற, முஸ்லிம்களின் உரிமைகள் காக்கப்பட சிந்தாமல் சிதறாமல் முஸ்லிம் வாக்குகள் அனைத் தும் முஸ்லிம் சமுதாயத்திற் கென்றே நிற்கும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே கிடைக்க முழு மூச்சாகப் பாடுபடுங்கள். முஸ்லிம்கள் ஒன்று பட்டால் அல்லாஹ் வெற்றியைத் தருவான்.

அந்நஜாத் இதழிலிருந்து வாசகர்: இக்பால்
நன்றி :சத்தியமார்க்கம்.காம்