.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, May 28, 2009

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக சிறைத்துறைக்கு பெண் டி.ஐ.ஜி. நியமனம்

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக சிறைத்துறைக்கு பெண் டி.ஐ.ஜி. ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


பெண் டி.ஐ.ஜி. நியமனம்
தமிழகத்தில் திருச்சி, கடலூர், சென்னை புழல், வேலூர் ஆகிய இடங்களில் பெண்களுக்கான மத்திய சிறைகள் உள்ளன. அதோடு பெண் கைதிகளுக்கான 10 சப்&ஜெயில்களும் உள்ளன. இந்த சிறைகளில் சுமார் 855 பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பெண் கைதிகளின் சிறைகளுக்கு பெண் சூப்பிரண்டுகள் பணியில் உள்ளனர். ஆனால் பெண் டி.ஐ.ஜி.கள் யாரும் பணியில் இல்லை.

இந்தியாவில் எந்த மாநில சிறைத்துறையிலும் பெண் டி.ஐ.ஜி.க்கள் பதவி இல்லை. தமிழகத்தில் இந்த குறையை போக்குவதற்காக பெண் டி.ஐ.ஜி. ஒருவரை பணி நியமனம் செய்ய முதல் அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார். அவரது உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக சிறைத்துறைக்கு பெண் டி.ஐ.ஜி. ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறைத்துறை முதல் பெண் டி.ஐ.ஜி. என்ற பெருமையை பெற்றுள்ளவர் ராஜ சவுந்தரி. இவர், வேலூர் பெண்கள் ஜெயிலில் 12 ஆண்டுகள் சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளார். தற்போது டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழக சிறைத்துறையில் துணை ஜெயிலராக பணியில் சேர்ந்த இவர், படிப்படியாக பதவி உயர்வு பெற்று, தற்போது டி.ஐ.ஜி. அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார்.

திருவாரூரை சேர்ந்த இவரது கணவர் வங்கி அதிகாரியாக பணியாற்றுகிறார். இதற்கு முன்பு பெண்கள் ஜெயில்கள், ஆண் டி.ஐ.ஜி.களின் கட்டுப்பாட்டில் இருந்தன. இனிமேல் தமிழகத்தில் உள்ள 4 பெண்கள் மத்திய ஜெயில்களும் மற்றும் 10 பெண்கள் சப்&ஜெயில்களும், 11 இளம் சிறார் சிறைகளும் புதிய பெண் டி.ஐ.ஜி.யின் கட்டுப்பாட்டில் வரும்.

No comments: