.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, May 31, 2010

மங்களூர் விமான விபத்து விமானியே காரணம்! முதல் கட்ட ஆய்வில் தகவல்.


மங்களூரில் விபத்தில் சிக்கிய விமானத்தை தரையிறக்கும் முன், அது மிக அதிக வேகத்தில் பறந்ததால், அதை தரையிறக்க வேண்டாம் என்று விமானியிடம் துணை விமானி 2 முறை கூறியுள்ளார். ஆனால், அதைக் கேட்காமல் தரையிறக்கியதால் தான் விபத்து நடந்ததாகத் தெரிகிறது.

மங்களூர் விமான நிலையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. அதன் ஓடுதளமான ரன்வே ஒரு மலையின் மீது தான் அமைந்துள்ளது. ரன்வேயின் இரு முனைகளிலும மலைப் பள்ளத்தாக்குகள் உள்ளன. இதனால் இந்த ரன்வே, table-top runway என்று அழைக்கப்படுகிறது. இதில் விமானத்தை தரையிறக்க அதிக அனுபவம் வேண்டும்.

கடந்த 22ம் தேதி துபாயிலிருந்து இங்கு தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரன்வேயில் ஓடி, நிற்காமல், மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து வெடித்துச் சிதறி 158 பேர் பலியாயினர்.

அதன் கருப்புப் பெட்டி கைப்பற்றப்பட்டு இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் இந்த விமானத்தின் காக்பிட்டில், விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல், மங்களூர் விமான நிலைய தரைக்கப்பாட்டு மையத்திலும் பதிவாகியுள்ளது.

இந்த உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.

விமானத்தை தரையிறக்க இங்கிலாந்தைச் சேர்ந்த விமானியான கேப்டன் ஸ்லாட்கோ குளுசிகா முயன்றபோது, வேண்டாம் என்று தடுத்துள்ளார் துணை விமானியான அலுவாலியா. அப்போது விமானம் 800 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

விமானம் அதிக வேகத்தில் தரையிறங்க முயன்றதாலோ அல்லது உயரத்தை போதிய அளவுக்குக் குறைக்காமல் ரன்வேயை அடைய பைலட் முயன்றதாலோ அவரை அலுவாலியா தடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

இரண்டு முறை கேப்டனை தடுத்த அலுவாலியா, இன்னொரு முறை வானில் வட்டமடித்துவிட்டு தரையிறங்க முயற்சி்க்கலாம் என்று கூறியுள்ளது தரைக்கப்ப்டடு மையத்தில் பதிவாகியுள்ளது.

இவ்வளவு வேகத்தில் தரையிறக்கினால், விமானத்தை ரன்வேக்குள் நிறுத்துவது கடினம், அது மலையில் உருண்டுவிட வாய்ப்புள்ளதை உணர்ந்து அலுவாலியா, கேப்டனைத் தடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

ஆனால், அந்த கோரிக்கையை கேப்டன் நிராகரித்துவிட்டு விமானத்தை தரையிறக்கியபோது தான் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் ரன்வேயின் ஆரம்பத்திலேயே தரையிறங்காமல் 2,000 அடி தள்ளி தரையிறங்கியது. அப்போது விமானத்தை ரன்வேயில் நிறுத்த முடியாது என்பதை கேப்டன் உணர்ந்ததாலோ என்னவோ மீண்டும் டேக்-ஆப் செய்ய முயன்றுள்ளார்.

ஆனால், அதற்குள் டயர்கள் வெடித்து, விமானம் கட்டுப்பாட்டை இழந்துவிட, ரன்வேயைத் தாண்டி ஓடி, பள்ளத்தாக்கில் உருண்டுள்ளது.

விபத்துக்குள்ளான இந்த போயிங் 737 விமானத்தை தரையிறக்கிய 4,500 முதல் 5,000 அடி தூரத்திலேயே நிறுத்திவிட முடியும். 2,000 அடி தள்ளி இறங்கியிருந்தாலும் ரன்வேயில் மிச்சமிருந்த 6000 அடி தூரத்தில் அதை நிறுததியிருக்க முடியும். ஆனாலும், அதை ஏன் மீண்டும் டேக்-ஆப் செய்ய விமானிகள் முயன்றனர் என்பது கேள்வியாக உள்ளது.

மேலும் துணை விமானி அலுவாலியா ஏன் விமானத்தை தரையிறக்க வேண்டாம் என்று சொன்னார் என்பது கருப்புப் பெட்டியில் உள்ள தகவல்களை ஆய்வு செய்வதன் மூலமே துல்லியமாக அறிய முடியும் என்றும் விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.

மங்களூர் விமான நிலையத்தி்ற்கு கேப்டன் குளுசிகா 19 முறையும் துணை விமனியான அலுவாலியா 66 முறையும் விமானங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அலுவாலியா மங்களூரில் வசித்தவரும் ஆவார். இம்மாத இறுதியில் கேப்டனாக பதவி உயர்வு பெற இருந்தார். ஏர் இந்தியாவில் சேரும் முன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

அமெரிக்கா செல்லும் கருப்புப் பெட்டி:

இந் நிலையில் இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மிகுந்த சேதமடைந்துள்ளதால் அதிலிருந்து விவரங்களைப் பெற, அதை அமெரிக்காவில் உள்ள போயிங் விமான நிறுவன தலைமையகத்துக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

ரன்வே நீளம் அதிகரிப்பு:

இதற்கிடையே மங்களூர் விமான நிலையத்தின் ஓடுதளத்தின் நீளம் மேலும் 1000 அடி அதிகரிக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறியுள்ளார்.

8,000 அடி நீளமான இந்த ஓடுதளம் 9,000 அடியாக அதிகரிக்கப்படவுள்ளது.

டெல்லி விமான நிலைய அலட்சியம்: எரிபொருள் காலியாகி வானில் தவித்த விமானங்கள்!

விமானத்தில் எரிபொருள் காலியாகிவிட்ட நிலையிலும் 3 விமானங்களை வானில் வட்டமடிக்கவிட்டு பயணிகளின் உயிரோடு விளையாடியுள்ளது டெல்லி விமான நிலையம்.

மங்களூர் விமான விபத்து நடந்த சில நாட்களில் கடந்த புதன்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அன்றைய தினம் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சீனாவுக்குப் புறப்பட்டார். அதே போல இந்தியா வந்துள்ள துர்க்மேனிஸ்தான் அதிபர் பெர்டிமுன்ஹா மெடோவ் ஆக்ராவுக்குச் சென்றார். இருவரது சிறப்பு விமானங்களும் டெல்லி விமான நிலையத்தில் இருந்து கிளம்ப இருந்ததால், பாதுகாப்பு கருதி மற்ற அனைத்து விமானங்களும் கடைசி நேரத்தில் டெல்லியில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு, ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.

மும்பையில் இருந்து டெல்லி வந்த ஜெட்லைட் நிறுவன போயிங் 737 விமானம் (JLL 108), ஜெய்ப்பூருக்குத் திருப்பிவிடப்பட்டபோது அதில் போதுமான எரிபொருள் இல்லை. இருப்பினும் அந்த விமானம் ஜெய்ப்பூர் செல்ல உத்தரவிடப்பட்டது. இதையடுத்த அந்த விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியது. அப்போது அதில் வெறும் 3 நிமிட எரிபொருளே மிச்சமிருந்தது.

அதே போல மும்பையில் இருந்து டெல்லி வந்த கிங்பிஷ்ஷர் ஏர்பஸ் 330 விமானம் (IT 300) ஜெய்ப்பூரில் தரையிறங்கியபோது, அதில் அடுத்த 10 நிமிடம் மட்டுமே பறப்பதற்கான எரிபொருளே மிச்சமிருந்தது.

சென்னையிலிருந்து வந்த ஜெட் ஏர்வேஸ் (9W 2357) நிறுவனத்தின் போயிங் 737 விமானமும் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. அது தரையிறங்கும்போது அதில் 13 நிமிடம் பறப்பதற்கான எரிபொருளே மிச்சம் இருந்துள்ளது.

இந்த மூன்று விமானங்களிலும் 450 பயணிகள் இருந்தனர். இந்த மூன்று விமானங்களின் பைலட்டுகளும் இனிமேல் பறக்க முடியாது என்று எமர்ஜென்சி நிலையை அறிவித்த பிறகே, ஜெய்ப்பூரில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில் அன்றைய தினம் 11 விமானங்கள் சண்டீகர், லக்னெள, ஜெய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. மேலும் 20 விமானங்கள் தரையிறங்க முடியாமல் டெல்லியை சுமார் 1 மணி நேரம் சுற்றிக் கொண்டே இருந்தன.

காலை 9 மணிக்கு ஆரம்பித்த இந்த நெருக்கடி, பிரதீபாவும் மெடோவும் டெல்லியைவிட்டுக் கிளம்பிய 10 மணி வரை தொடர்ந்தது.

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அப்ரோச் ரேடார் எனப்படும், விமானங்களின் இயக்கத்தை கண்டறியும் ரேடார் இல்லை. விமானங்கள் தரும் தகவலை வைத்தே அவற்றின் வேகம், திசையை ஜெய்ப்பூர் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தால் அறிய முடியும்.

அத்தோடு அங்கு தூசிப் புயலும், வேகமான காற்றும் சேர்ந்து கொள்ள ஜெய்ப்பூரில் தரையிறங்க விமானங்கள் மிகவும் சிரமப்பட்டன.

இந்தத் தகவல்களை இந்த 3 விமானங்களின் பைலட்டுகளும் தரையிறங்கவுடன் புகாராகப் பதிவு செய்துள்ளனர். எரிபொருள் குறித்து கவலைப்படாமல் திடீரென விமானங்களை வேறிடத்துக்கு போகுமாறு கூறுவது, வானிலேயே சுற்றவிடுவது ஆகியவை குறித்து விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் flight safety report-ல் பதிவு செய்துள்ளனர்.

விஐபிக்கள் விமானங்கள் காரணமாக விமான நிலையம் மூடப்படுவது குறித்து முன்கூட்டியே தரப்படும் 'Notam' (notice to airmen) என்ற தகவல் டெல்லிக்கு வரும் வரை தரப்படவில்லை என்று பைலட்டுகள் புகார் கூறியுள்ளனர்.

ஆனால், விஐபிக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 'Notam' தகவல் தருவது நிறுத்தப்பட்டுவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக விஐபி விமானங்களுக்காக 3 நிமிடங்கள் மட்டுமே விமான நிலையம் மூடப்படும். ஆனால், கடந்த புதன்கிழமை ஆக்ராவில் நிலவிய மோசமன வானிலையால் துர்க்மேனி்ஸ்தான் அதிபரின் விமானம் கிளம்புவது தாமதமாகிவிட்டது. இதனால் தான் விமான நிலையம் 1 மணி நேரம் மூடப்பட்டது என்று கூறியுள்ளனர் அதிகாரிகள்.

Sunday, May 30, 2010

வருவாய்க்காக மக்களைக் கொல்லும் தமிழக அரசு

- தமிழ்மாணிக்கம்
நன்றி: தினமணி

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் டாஸ்மாக் மதுபானக் கடை அவசியமா என்பது குறித்து பொது விவாதம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசுக்கு அதிக வருவாய் தரும் பட்டியலில், டாஸ்மாக் மதுபான நிறுவனமே முன்னிலையில் உள்ளது.

நிதிநிலை அறிக்கையில், மொத்த வருவாய் ரூ. 63 ஆயிரம் கோடி, மொத்தச் செலவு ரூ. 66 ஆயிரம் கோடி, அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ரூ. 3 ஆயிரம் கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ. 16 ஆயிரம் கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதை எப்படிச் சமாளிக்க முடியும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அரசுக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் அதிக வருமானம் வருகிறது. அதை வைத்து பற்றாக்குறையைச் சமாளிப்போம் என்றார் அப்போதைய நிதித் துறைச் செயலர். அந்த அளவுக்கு டாஸ்மாக் நிறுவனம் வளர்ந்துள்ளது.

மேலும், அரசு செய்தி ஊடகங்களின் வழியாக பண்டிகைக் காலங்களில் மதுபான விற்பனை மூலம் பல ஆயிரம் கோடி வருமானம் என்றும், இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிடப் பல மடங்கு விற்பனை அதிகரித்துள்ளது என்றெல்லாம் செய்தி வெளியிட்டு மது குடிப்பவர்களை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

பல்வேறு கவர்ச்சித் திட்டங்களையும், இலவச அறிவிப்புகளையும் அறிவித்து வரும் மாநில அரசுக்கு கைகொடுப்பது மதுபான விற்பனைதான்.

தமிழகத்தில் சுமார் 12 ஆயிரம் ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 6 ஆயிரத்து 500 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட பெருநகரங்களில் ஒவ்வொரு வார்டிலும் இரண்டு அல்லது மூன்று மதுபானக் கடைகள் இருக்கின்றன.

நகராட்சி அளவிலான ஊர்களில் 7 அல்லது 8 என்ற ஒற்றை இலக்கத்திலும், கிராம ஊராட்சிகளை இணைக்கும் முக்கியச் சாலைகளில் ஒரு மதுபானக் கடை வீதம் தெருவெங்கும் கடைகள் உள்ளன.

அதிலும், நகரப் பகுதிகளின் மையத்தில் இந்தக் கடைகள் உள்ளன. கிராமங்களில் மிக முக்கியமான இடங்களிலேயே மதுபானக் கடை உள்ளது.

மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஊரின் கடைக்கோடியில் மதுக்கடை இருந்தாலும் தேடிச் சென்று குடிப்பார்கள். அதனால், பள்ளிகள், கோயில்கள் இருக்கும் இடங்களில் இந்தக் கடைகள் இருக்கக் கூடாது.

போக்குவரத்து இடையூறு மற்றும் இருசக்கர வாகன விபத்துகளுக்கும் பெரும்பாலும் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளே காரணமாகின்றன.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் அறிவித்து சோதனை செய்தால், இந்தக் கடையில் இப்போதுதான் குடித்துவிட்டு வருகிறேன். கடை நகரத்திற்குள் இருந்தால் எப்படி வாகனத்தில் செல்லாமல் இருக்க முடியும் என்றும் குடிப்பவர்கள் விவாதிக்கின்றனர்.

கடை மற்றும் பார் நடத்த அனுமதிப்பதால் வாடகை சற்று அதிகமாகக் கிடைக்கிறது. அதனால் கட்டட உரிமையாளர்களும் இதற்குச் சம்மதம் தெரிவிக்கின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், பன்னாங்கொம்பில் இருந்த டாஸ்மாக் மதுபானக் கடையை கட்டட உரிமையாளர் காலி செய்யச் சொன்னதால், அருகில் உள்ள காவல்காரன்பட்டிக்கு மதுபானக் கடையை மாற்றினர்.

கடையைத் திறக்க முற்பட்ட போது ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கடை முன் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அங்கு வந்த வட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பெண்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிமடுக்காமல், மறு நாளே மீண்டும் மதுபானக் கடையை அதே ஊரில் திறந்தனர். அப்போதும் பெண்கள் திரண்டு சாலை மறியல் செய்து கைதானார்கள்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று ஆட்சியரிடமும் மனு கொடுத்துவிட்டு திரும்பியுள்ளனர். ஆனாலும், அந்த ஊரிலிருந்து மதுக் கடை இன்னும் மாற்றப்படவில்லை. மது விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது.

நகரப் பகுதிகளில் அதிகரித்து வரும் மதுபானக் கடையைக் கட்டுப்படுத்த இயலாமல் போனாலும், கிராமப்புறங்களில் மதுபானக் கடை தேவையா என்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும். இதுதவிர, கிராமங்களில் கடை திறப்பதற்கு முன்பு கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டி மக்களின் ஒருமித்த கருத்து அடிப்படையில் கடைகளைத் திறக்க முயற்சிக்கலாம்.

அதைவிடுத்து, மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள கிராமங்களிலும்கூட விடாப் பிடியாக அரசு மதுபானக் கடைகளைத் திறக்கக் கூடாது. 1994-95-ம் ஆண்டு ரூ. 995.69 கோடியாக இருந்த மது விற்பனை 2009-2010-ம் ஆண்டில் ரூ. 13,720 கோடியாக அதிகரித்துள்ளதாக அரசு விளம்பரப்படுத்தி மகிழ்ச்சியடைவதைத் தவிர்த்து, கிராம மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுப்பது நல்லது.

உடனடியாக மதுபானங்களுக்குத் தடைவிதிக்க முடியாமல் போனாலும், படிப்படியாக கிராமப்புறங்களில் உள்ள மதுபானக் கடைகளுக்குத் தடை விதிக்கலாம்.

தொழில் துறை வளர்ச்சி, கிராமப் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பிற காரணிகளின் மூலம் வருவாயைப் பெருக்க அரசு முயற்சிக்க வேண்டும்.

அரசுக்கு வருவாய் தரும் நிறுவனம் என்பதால் மட்டுமே டாஸ்மாக் நிறுவனத்தை வளர்த்து விட முடியாது. அது கொஞ்சம், கொஞ்சமாக நமது மக்களை கொன்றுவிடும் என்பதையும் அரசு கவனத்தில் கொள்வது நல்லது.

Friday, May 28, 2010

மனித உயிர்கள் அத்தனை மலிவானதா?


- MH.கனி
ங்​க​ளூ​ரில் இருந்து எழு​கின்ற மரண ஓலம் ஓய்ந்​தா​லும்,​​ பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​க​ளில் தொட​ரும் துய​ரம்​தீர ஆண்​டு​கள் பல​வா​கும்.​ எண்​ணற்ற ஆசை​க​ளை​யும்,​​ கன​வு​க​ளை​யும் சுமந்து கொண்டு பறந்த 158 பேர் கண் இமைக்​கும் நேரத்​தில் உயிரிழந்த பரிதாபம் உல​கையே உலுக்​கு​கி​றது.​ எட்​டுப் பேரா​வது உயிர்​பி​ழைத்​த​னரே என்று சமா​தா​னப்​பட்​டுக் கொள்​ள​லாம்,​​ அவ்​வ​ளவே.​

விபத்து என்​பது தவிர்க்க இய​லாத ஒன்று என்​பது தெரிந்​த​து​தான்.​ விமா​னத்​தில் பறந்​த​தால் மட்​டுமே விபத்து ஏற்​ப​டும் என்​றும்,​​ ரயி​லில் பய​ணித்​த​தால் விபத்து ஏற்​பட்​டு​வி​டும் என்​றும் சொல்​லி​விட இய​லாது.​ நடந்து போகும்​போ​து​கூட விபத்து நேரி​ட​லாம்.​ சாலை​யில் செல்​லும் பேருந்தோ,​​ லாரியோ வீட்​டில் மோதிய சம்​ப​வங்​கள் ஏரா​ளம் உண்டு.​

ஆனால்,​​ விபத்து என்​பது மனி​த​னின் கவ​னக்​கு​றை​வாலோ அல்​லது தவ​றான நடை​மு​றை​யாலோ ஏற்​பட்​டி​ருந்​தால் அதை எப்​படி மன்​னிக்க முடி​யும்?​துபாயிலி​ருந்து மங்​க​ளூ​ருக்​குப் பறந்து வந்த விமா​னம் இயந்​தி​ரக் கோளாறு ஏற்​பட்டு வானத்​தில் வெடித்​துச் சிதறி இருந்​தால் அந்த விபத்தை நம்​மால் ஏற்​றுக்​கொள்ள முடி​யா​விட்​டா​லும் ஜீர​ணிக்க முடி​யும்.​ ஆனால்,​​ தவ​று​த​லா​கத் தரை​யி​றங்​கி​ய​தால் விபத்து ஏற்​பட்டு உயி​ரி​ழப்பு என்​பதை ஏற்​றுக்​கொள்ள முடி​ய​வில்லை.​விமான ஓட்​டி​யான கேப்​டன் குலு​சிகா,​​ சுமார் 10,200 மணி​நே​ரம் இது​வரை விமா​னத்​தில் பறந்த அனு​ப​வசாலி.​ இது​வரை 19 முறை மங்​க​ளூர் விமான நிலை​யத்​தில் விமா​னத்தை வெற்​றி​க​ர​மாக இறக்கி இருப்​ப​வர் அந்தக் கேப்​டன் குலு​சிகா என்றெல்லாம் சொல்கிறார்கள்.​ கடந்​த​வா​ரம்​கூட அதே விமான நிலையத்தில் தரை இறங்​கி​யிருக்கிறார்.​ விபத்துக்கு கார​ணம் அனு​ப​வ​மின்மை என்றோ,​​ அவ​ருக்கு இடம் புதிது என்றோ சொல்​லி​விட முடி​யாது.​ ஆனால் கண்டிப்பாக தவறு நடந்துள்ளது.

மங்களூர் விமான நிலையம் google map

விபத்து நடந்​த​போது தெளிந்த வானம் இருந்​தி​ருக்​கி​றது.​ மழை எது​வும் பெய்​யா​த​தால் விமா​னம் இறங்​கும் பாதை​யில் ஈரப்​பசை கொஞ்​ச​மும் கிடை​யாது.​ விபத்​துக்​குள்​ளான போயிங் 737 -​ 800 பத்​தி​ர​மாக இறங்​கு​வ​தற்கு மங்​க​ளூர் விமான நிலை​யத்​தில் 8,000 அடி நீள விமான ஓடு​பாதை தாரா​ள​மா​கப் போது​மா​னது.​ பிறகு ஏன் இந்த விபத்து நேர்ந்​தது?​

நாம் தேடியவரை நமக்குக் கிடைத்த தகவல்கள் நம்மை அதிர்ச்சி அடையச் செய்கிறது. சாதா​ர​ண​மாக,​​ விமான ஓடு​பா​தை​யில் ஆரம்​பத்தி​லி​ருந்து சுமார் 1,400 அடி முதல் 1,800 அடிக்​குள் விமா​னம் தரை​யைத் தொட்​டால் பிரச்னை ஏற்​பட வாய்ப்​பில்லை.​ ஆனால்,​​ இந்த விமா​னம் 3,000 அடி​யில்​தான் விமான தளத்​தில் இறங்​கித் தரை​யைத் தொட்​டது என்​கி​றார்​கள்.​ அதற்கு என்ன கார​ணம் என்​பதை விமா​னத்தி​லி​ருந்து கிடைக்கப் பெற்றிருக்கும் கருப்​புப் பெட்டி ஆய்வு செய்​யப்​பட்​டால் மட்​டுமே விடை கிடைக்​கும்.​
அது மட்டுமல்ல உயிர் தப்பியவர்கள் தொலைக்காட்சிகளுக்கு அளித்த நேர்கானலில் அவர்கள் கூறிய தகவல்கள் மேலும் நம்மை அதிர்ச்சி அடையச் செய்கின்றன விமானம் தரையை தொடும் முன் எதிலோ மோதியிருக்கிறது அதன் பின் தவறான ஓடு பாதையில் தரையை தொட்டதன் மூலம் பயங்கர சப்தத்துடன் டயர் வெடித்துள்ளது அந்த நேரத்தில் விமானத்தின் கதவுகள் திறந்து இருந்திருக்கிறது அதை பயன்படுத்தித்தான் உயிர் தப்பிய பயணிகள் வெளியே குதித்துள்ளார்கள் அதன் பின் சுவரில் மோதி அதைத் தாண்டி பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்துள்ளது.

இந்த நிலையில் தவறு எங்கு நிகழ்ந்துள்ளது?
முன்பு நடந்த சில சம்பவங்கள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.

பணியில் இருக்கும் நிலையிலேயே இந்திய விமானிகள் கேபினிலேயே தூங்கி விடுவது சம்பந்தமாக ஏற்கனவே விமான போக்குவரத்து இயக்ககம் எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

தூக்கத்தின் காரணமாக தரை இறங்க வேண்டிய இடத்தை விட்டு விட்டு மேலேயே சுற்றித்திரிந்த பல சம்பவங்களும் முன்பு நிகழ்ந்துள்ளன தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அலாரத்தை ஒளிக்கச் செய்து எழுப்பிய சம்பவங்களும் முன்பு பல நிகழ்ந்துள்ளன. இது போன்ற தூக்கம் மங்களூர் விமான விபத்திலும் நிகழ்திருந்தால்? மனித உயிர்கள் அத்தனை மலிவானதா?

மங்களூர் விமான விபத்​தின் காரணகாரி​யங்​கள் ஒரு​பு​றம் இருக்​கட்​டும்.​ இந்தியாவில் விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புத் தரம் எந்த அளவுக்கு மோசமாகவுள்ளது என்பது பற்றி இந்திய விமானிகள் கூட்டமைப்பின் (Federation of Indian Pilots) நிறுவனத் தலைவர் கேப்டன் எம்.ஆர். வாடியா சமீபத்தில் கடுமையாகச் சாடியிருந்தார். இந்​திய விமான நிலை​யங்​கள் பாது​காப்பு மற்றும் தரமானவையா? என்​ப​தே கேள்விக்குறியாக உள்ளது.

நமது விமான ஓட்​டி​கள் எந்த அள​வுக்கு அனு​ப​வ​சா​லி​கள் என்​ப​தை​யும் மறு​ப​ரி​சீ​லனை செய்ய வேண்​டிய கட்​டாயத்தில் உள்ளது அரசு.​ கடந்த 20 ஆண்​டு​க​ளாக,​​ சர்​வ​தே​சத் தரத்​தில் இந்​தியா முன்​னேற வேண்​டும் என்​கிற முனைப்​பில்,​​ வரை​முறை இல்​லாத வளர்ச்​சியை விமா​னப் போக்​கு​வ​ரத்​தில் ஏற்​பட நமது அரசு முனைந்​தது எந்த அள​வுக்​குப் புத்​தி​சா​லித்​த​னம் என்​ப​தை​யும் சீர்​தூக்கி ஆராய வேண்​டிய நேரம் இது.​

எண்​ணிக்​கை​யைக் கூட்ட வேண்​டும் என்​ப​தற்​கா​கத் தரத்​தைக் குறைக்க முய​லும் பேதை​மைத்​த​னம் தமி​ழக உயர்​கல்​வித் துறைக்கு மட்​டுமே உரித்​தா​னது என்று எண்​ணி​வி​ட​லா​காது.​ விமா​னத் துறை​யை​யும் பீடித்​தி​ருக்​கும் வியாதி இது​தான்.​ தனி​யார் துறையை ஊக்​கப்​ப​டுத்​தக் கணக்​கு​வ​ழக்கு இல்​லா​மல் அனு​மதி அள்ளி வழங்​கப்​ப​டு​கி​றது.​ வெளி​நா​டு​களி​லி​ருந்து பெறும் பழைய விமா​னங்​க​ளும்,​​ குத்​த​கைக்கு எடுக்​கப்​ப​டும் விமா​னங்​க​ளும்​கூ​டத் தனி​யா​ரால் பயன்​ப​டுத்​தப்​ப​டு​கின்​றன.​

விமான நிலை​யங்​க​ளும் சரி,​​ தேர்ந்த அனு​ப​வ​சா​லி​க​ளால் பரா​ம​ரிக்​கப்​ப​டு​கின்​ற​னவா என்​பது சந்​தே​கமே.​ சின்​னச் சின்ன நக​ரங்​க​ளில் விமான நிலை​யங்​கள் அமைப்​ப​தும்,​​ விமா​னப் போக்​கு​வ​ரத்து அதி​க​ரிக்​கப்​ப​டு​வ​தும் நல்​ல​து​தான்.​ அதே​நே​ரத்​தில்,​​ போதிய கட்​ட​மைப்பு வச​தி​க​ளும்,​​ திற​மை​யான தொழில்​நுட்​பம் தெரிந்த பணி​யா​ளர்​க​ளும் இருந்​தால்​தானே முறை​யாக அந்த விமான நிலை​யங்​கள் செயல்​பட முடி​யும்.​

விமா​னம் ஒவ்​வொரு முறை இறங்​கும்​போ​தும்,​​ சக்​க​ரங்​க​ளில் தேய்​மா​னத்​தால் விமான ஓடு​பா​தை​யில் ரப்​பர் துகள்​கள் தங்​கி​வி​டும்.​ அதை அவ்​வப்​போது அகற்​றிச் சுத்​தப்​ப​டுத்​தா​விட்​டால் அடுத்த விமா​னம் இறங்​கும்​போது,​​ சறுக்கி விபத்து ஏற்​பட ஏது​வா​கும்.​ இது​போல,​​ விமான நிலை​யத்​தில் இன்​னும் பல நுணுக்​க​மான பாது​காப்பு அம்​சங்​கள் உள்​ளனவா?.​ அவை முறை​யா​கக் கையா​ளப்​ப​டு​கின்​ற​னவா? என்​பது சந்​தே​க​மாக இருக்​கி​றது.​ கடந்த இரண்​டாண்​டு​க​ளாக உயிர்ச்​சே​தம் ஏற்​ப​ட​வில்​லையே தவிர,​​ விமா​ன​தள விபத்​து​கள் பல நடந்​தி​ருப்​பது செய்​தி​யாக்​கப்​ப​ட​வில்லை என்​ப​து​தான் உண்மை.​

விமான நிலை​யங்​க​ளைப் புதுப்​பிப்​ப​தற்​கும்,​​ புதிய விமான நிலை​யங்​களை அமைப்​ப​தற்​கும் பல்​லா​யி​ரம் கோடி ரூபாய்​களை வாரி இறைக்​கும் அரசு,​​ திற​மை​யான விமான ஓட்​டி​க​ளை​யும்,​​ விமான நிலை​யத் தொழில்​நுட்​பப் பணி​யா​ளர்​க​ளை​யும் உரு​வாக்​கு​வ​தில் முத​லில் ​ அக்​கறை காட்ட வேண்​டும்.​ மங்​க​ளூர் விமான விபத்து என்​பது ஓர் எச்​ச​ரிக்கை மணி,​​ அவ்​வ​ளவே.​ இதி​லி​ருந்து நாம் பாடம் படித்​தால் புத்​தி​சா​லி​கள்.​ இல்​லா​விட்​டால்?​ அப்​பா​விப் பய​ணி​களின் நிலை?? மனித உயிர்கள் அத்தனை மலிவானதா???

Thursday, May 27, 2010

விழாக்கள்! விருதுகள்! பொழுதுபோக்குகள்! பொறுப்பற்ற தமிழக அரசால் 13 ஆயிரம் கோடிகள் நஷ்டம்


சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அலட்சியப் போக்கினால் மக்கள் பணம் 13,207.6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டிருக்கிறது.


சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அலட்சியப் போக்கினால் மக்கள் பணம் 13,207.6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் 2007&08 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் சிவில் அறிக்கைகள் குறித்து மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை பல்வேறு அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

அறிக்கையின் முக்கிய அம்சங்களை அதன் தலைவர் நாகல்சாமி, துறை அதிகாரி ரஜினி ஆகியோர் புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளனர். அதன் முக்கிய அம்சங்கள் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

• 2007-08 ஆம் ஆண்டில், 4,545 கோடியாக இருந்த வருவாய் இருப்பு 2008&09&ல் 1452 கோடியாக குறைந்துவிட்டது. அதா வது தமிழக அரசின் ஊதாரித் தனங்களால் 3093 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது.

• முதலீடுக்காக பெற்ற வட்டி விகிதம் 0.50 சதவீதம் வாங்கிய இடத்துக்கு அரசு சார்பில் தண்ட வட்டி செலுத்திய தொகை மட்டும் கூடுதலாக 8.4 சதவீதமாகும்.

• பலதுறைகளில் & பல்வேறு திட்டங்களில் ஒதுக்கப்பட்ட நிதியில் 7,31,145 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை. அதாவது கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே செய்த தமிழக அரசு, அதை செயல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை.

34 மானிய திட்டங்களை அமல் படுத்துவதாகக் கூறி எடுத்துக் கொள்ளப்பட்ட நிதியில் கூட, வேலை நடக்கவில்லை. அதற்குரிய தொகையான 1,75,856 கோடி ரூபாய் அரசு கருவூலத்திற்கு திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. அந்தப் பணம் என்ன ஆனது? யார், யாருக்கு பிரிக்கப்பட்டது? அல்லது மீண்டும் ஒப்படைக்கப்படுமா? என் பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

• அரசு நடத்தும் சர்க்கரை ஆலைகளின் மூலம் மொத்தம் 1475 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பாம்! இயந்திர பழுது, இயந்திரங்களை கையாள்வதில் அலட்சியம், கரும்பு களை வேறு ஆலைகளுக்கு மாற்று தல், நவீன முறைகளைப் பின்பற் றாதது ஆகியவைதான் இதற்கு காரணம். 1475 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டால், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் விலை, உயர்வு, சர்க்கரை உற்பத்தி, நல்ல விற்பனை ஆகியவை சீராக்கப்பட்டிருக்கும். சர்க்கரை இறக்குமதிக்கும் அவசியம் ஏற் பட்டிருக்காது.

• நில ஆவணங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தில் 9.94 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை. இதில் சாஃப்ட்வேர் வசதிகள் செய்யப்படாததால், 8.21 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட கம்ப்யூட் டர்கள் பயன்படுத்தப்படவேயில்லையாம்.

2004-07-க்குள் மீனவர்களுக்கு இலவச வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டித் தருவதாக வாக்களிக்கப்பட்ட 10 ஆயிரம் வீடுகளில் ஆயிரம் வீடுகள் கூட இதுவரை கட்டிக் கொடுக்கப்படவில்லை.

• சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது தொடர்பான தவ றான நில மதிப்பீடு மூலம் 158.63 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆளுங்கட்சியினரின் ‘ரியல் எஸ் டேட்’ தொழிலுக்கு ‘உரம்‘ சேர்க்கும் நடவடிக்கைகளே முக்கியக்காரணம் என கூறப்படுகிறது.

• 11 மாவட்டங்களில் குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலத்தில் 1585 ஏக்கர் அரசு நிலம் பயிரிடப்படாத மலைப்பாங்கான பகுதியில் வழங் கப்பட்டதால், அது பயனில் லாமல் போயிருக்கிறது.

• 7 மாவட்டங்களில் சிறப்பு மருத்துவர்களின் சேவையைப் பெறவும், சுகாதார நிலையங்கள், சுகாதார துணை நிலையங்கள் ஆகியவற்றை தரம் உயர்த்தவும், இழந்த சேமிப்பு வசதி, விபத்து சிகிச்சைக்கான அறைகள், அறுவை சிகிச்சை அறைகள் போன்ற வசதிகளை வட்டார ஆரம்ப சுகா தார நிலையங்களில் அமைத் திட வழங்கப்பட்ட 62 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை. 2005&2009&ஆம் ஆண்டு களில் பார்வை குறை பாடுகளை சீராக்க 1 லட்சத்து, 89 ஆயிரத்து, 695 குழந்தைகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்படவில்லை.

சுருக்கமாக சொல்வதெனில் மக்களின் சுகாதார நலன் சுத்தமாக அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உண்மைகளை தமிழக அரசு மறுக்கவில்லை. மாறாக, சப்பைக்கட்டுக் கட்டுகிறது. எதற் கெடுத்தாலும் தமிழ கத்தை நம்பர் 1 மாநிலம் என தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு முதல் அமைச்சர் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப்போகிறார்?

வாரத்திற்கு 2 நாட்கள் பாராட்டு விழா, இரண்டு நாட்கள் விருது வழங்கும் விழா, 2 நாட்கள் சினிமா, கலை தொடர்பான நிகழ்ச்சிகள் என ‘ஜாலியாக’ இருப்பவர்கள் மக்கள் நலனைப் பற்றி எப்படி கவலைப்படுவார்கள்?

இதனைக் கண்காணிக்க வேண் டிய அமைச்சர்கள் முதல்வரின் நிகழ்ச்சிகளில் முன் வரிசையில் அமர்வதற்கு காட்டும் ஆர்வத் தையும், ‘கமிஷன்’ குறித்து பேசுவ தற்கு ஒதுக்கும் நேரத்தையும் இதில் ஏனோ காட்டுவதில்லை என்றும் இதனை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் மேலிடத்தை குளிர் விக்கும் வித்தைகளைப் புரிந்து கொண்டதால் அவர்களும் அலட்சி யமாக இருக்கிறார்கள் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலவசங்களில் மயங்கும் தமி ழக மக்கள்... கவர்ச்சி அரசிய லில் மதிமயங்கி, மக்களின் பணம் வீணடிக்கப்படும் அரசு நிர்வா கத்தின் அலட்சியத்திற்கு எதிராக பொங்கி எழ வேண்டும்.

நாட்டுக்குத் தேவை உறுதியான நிர்வாகத் திறன் கொண்டவர்கள் தானே தவிர கவர்ச்சி அரசியலை செய்யக்கூடியவர்கள் அல்ல.

-கதிரவன்

Wednesday, May 26, 2010

முஸ்லிம் மாணவிக்கு முதலிடம்

மாநகராட்சி பள்ளியில் படித்து மாநில முதலிடம் பிடித்த முஸ்லிம் மாணவி ஜாஸ்மின்

ஜாஸ்மின் ‍‍வெற்றிக் களிப்பில்


ஐ.ஏ.ஏஸ். தேர்வில் வெற்றிப் பெற்று நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே தனது இலட்சியம் என்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஜாஸ்மின் அவரிடம் வாழ்த்துக் கூறிய தமுமுக நிர்வாகிகளிடம் கூறினார்.


நெல்லை டவுண் அருகே உள்ள கல்லணையில் எம்.பி.எல் மாநகராட்சி பள்ளியில் படித்த இந்த மாணவியின் தந்தை சேக்தாவூது ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தாயார் நூர்ஜகான் இல்லத்தரசி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த எஸ் ஜாஸ்மின் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளார்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜாஸ்மினின் தந்தை சேக் தாவூத் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவரது தாய் நூர்ஜஹான்.

மாணவிஜாஸ்மினுக்கு இம்ரான் என்ற அண்ணனும், இர்பான் என்ற தம்பியும் உள்ளனர். இவர்களில் இம்ரான் கூலி வேலை செய்து வருகிறார். இர்பான் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஜாஸ்மினின் தந்தை ஷேக் தாவூத் மிகவும் கஷ்டப்பட்டே குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ரு7மாத வருமானமாக இருந்த போதிலும் தனது குழந்தைகள் படிப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். ஜாஸ்மின் சிறுவயதிலிருந்தே மிகவும் ஆர்வமாக படித்து வருகிறார்.

அவரது ஆர்வத்தை அறிந்து கொண்ட ஷேக் தாவூத்தனது மகளை அதிக செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் நெல்லை டவுணில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தனது குடும்ப நிலையை உணர்ந்த மாணவி ஜாஸ்மின் சிறந்த முறையில் படித்து அனைத்து வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.

மாணவி ஜாஸ்மின் முதல் வகுப்பிலிருந்து தற்போது வரை நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்து வந்தார். அந்த பள்ளியில் மொத்தம் 3,450 மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு படிக்கும் அனைத்து மாணவிகளும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பள்ளி தொடங்கியது முதல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மாநகராட்சி பள்ளி என்றாலும் நெல்லையில் உள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.


மாநில அளவில் சாதனை படைக்க கடினமாக படித்தேன். 498 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர் பார்த்தேன். சமூக அறிவியலில் 2 மதிப்பெண்கள் குறைந்து விட்டதால் அதனை பெற முடியவில்லை.

பெரிய பள்ளியில் படித்தால்தான் சாதிக்க முடியும் என்றனர். ஆனால் எங்கள் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை இறைவனின் கிருபையால் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எனக்கு ஊக்கமளித்தார்கள். மற்ற பள்ளிகளை போல எங்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் போதே 10-ம் வகுப்பு பாடங்களை தொடங்குவது கிடையாது. தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பேன். அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்து விடுவேன். இரவு 1 மணி வரை படிப்பேன்.இவர் செய்தியாளர்களிடம்,காலையில் 5 மணிக்கு எழுந்து படிக்கத் தெடங்குவேன். டியூஷன் படித்தது கிடையாது. படித்ததை எழுதிபார்த்தது எனக்கு பயனுள்ளதாக இருந்தது என்று கூறினார். நான் 498 மதிப்பெண்கள் வரும் என எதிர்பார்த்தேன் என்றும் அவர் கூறினார்.

மாணவி ஜாஸ்மின் தமிழில் 98 ஆங்கிலத்தில் 99 கணிதத்தில் 100 அறிவியலில் 100 சமூக அறிவியலில் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல்; ஆகிய மூன்று பாடங்களில் மாநில அளவில் அதிகபட்ச மதிப்பெண்களை பெற்று ஜாஸ்மின் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பார்க்க மாட்டேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆசைபடுகிறேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் முடித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்.

மாணவி ஜாஸ்மின் குறித்து அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் கூறியதாவது:-

எங்கள் பள்ளி தொடர்ந்து பல சாதனைகள் படைத்து வருகிறது. இந்த முறை மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. இதற்கு எங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பே முக்கிய காரணம். மாணவி ஜாஸ்மின் மிகவும் அமைதியானவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் மிகவும் கவனமாக படிப்பார். இதனால் வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.

கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் எங்களது பள்ளி நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தது. எங்கள் பள்ளி தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு முன்பிருந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் கடுமையான அடித்தளம் இட்டு சென்றதால் எங்கள் பள்ளி சாதித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி ஜாஸ்மினின் தந்தை ஷேக்தாவூத் கூறியதாவது:-

நான் கடந்த 17 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். எனது மகள் ஜாஸ்மின் எல்.கே.ஜி.யில் இருந்தே நன்கு படிப்பாள். முதலாம் வகுப்பில் இருந்து கல்லணை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறாள். மற்ற பள்ளிகளை விட இந்த பள்ளியில் சிறந்த முறையில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

நான் பெரிய அளவில் படிக்காததால் எனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வைத்து வருகிறேன். அதற்கு ஏற்றாற்போல் மகள் ஜாஸ்மின் சிறப்பாக படித்து வருகிறாள். அவள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதால் அவள் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம்.

தினமும் பள்ளி முடிந்து மாலையில் வீடு வந்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுவாள். அதிகமாக டி.வி. பார்க்க மாட்டாள். பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் டி.வி. பார்க்கும் பழக்கத்தை விட்டு விட்டாள். டியூஷனுக்கு எங்கும் செல்லவில்லை. அன்றைய பாடங்களை அன்றே படித்து வந்ததால் சாதனை படைத்துள்ளார். அவளது விருப்பப்படி படிக்க வைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது வரை இல்லாத அளவிற்கு அரசுப்பள்ளியில் படித்து மாநிலத்தில் முதலிடம் பெற்று மாணவி ஜாஸ்மின் சாதனை படைத்திருக்கிறார் என்பது பெருமைபட வேண்டிய செய்தியாகும். இவரது வெற்றியை அடுத்து இந்தப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் அளவிலா மகிழ்ச்சியில் திகைத்து போயினர். டியூசன் படிக்காமல், கான்வென்ட் பள்ளியில் படிக்காமல் கடுமையான உழைப்பு மூலம் சாதனை படைக்க இயலும் என்பதற்கு மாணவி ஜாஸ்மின் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
நெல்லை டவுண் முஸ்லிம் மாணவி மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார் என்ற செய்தி வந்தவுடன் முதலில் அவருக்கு தமுமுக மாவட்டத் தலைவர் மைதீன் பாருக். மாவட்டச் ‍செயலாளர் உஸ்மான் கான் ம.ம.க. மாவட்ட பொருளாளர் ரசுல் மைதீன்ஈ நெல்லை டவுண் தமுமுக துணைத் தலைவர் தலைமையில் ஜமால். சுல்தான், நசீர், அபபக்கர், சேக், வாகித் உட்பட ஏராளமான தமுமுகவினர் நேரில் வாழ்த்துத் தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர்.

தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி மற்றும் துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி ஆகியோர் தொலைப்பேசி மூலம் மாணவி ஜாஸ்மினை வாழ்த்தினர்.


மாநிலத்தில் மூன்றாவது இடம் பெற்ற பத்து மாணவர்களில் ஒருவர் நஸ்ரின் பாத்திமா
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 493 மார்க்குகள் பெற்று 10 மாணவ மாணவிகள் 3 வது இடத்தை பிடித்துள்ளனர். இவர்களில் செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ள ஆரணியில் படித்த முஸ்லிம் மாணவி நசுரின்பாத்திமாவும் ஒருவர்

தேர்ச்சி விகிதம்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதில் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவர்கள் 79. 4 சதவீதமும் மாணவிகள் 85. 5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 60 சதவீதத்திற்கு மேலாக 4 லட்சத்து 17 ஆயிரத்து 371 மாணவ, மாணவிகள் மார்க்குகள் பெற்றுள்ளனர். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மார்க்குகளை 2 ஆயிரத்து 399 பேர் பெற்றுள்ளனர்.


ஓ.எஸ்.எல்.சி., தேர்வு பள்ளப்பட்டி யு.எச். ஒரியண்டல் அரபி பெண்கள் பள்ளி முதலிடம்
ஓ.எஸ்.எல்.சி., தேர்வு வாரியத்தில் , தேர்வு எழுதியவர்களில் கரூர் பள்ளப்பட்டி யு.எச்., ஓரியன்டல் அராபிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் 3 இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவி பமீதா பாணு, ஜயினப் சஹானஜ் ஆகியோர் 500க்கு 476 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 2ம் இடத்தை 473 மார்க்குகள் பெற்று நசிஹா பெற்றுள்ளார். 3ம் இடத்தை 472 மார்க்குள் பெற்று சுகைனா பாத்திமா, முகமது ரெய்ஹான் ஆகியோர் பெற்றுள்ளனர்.

சிறப்பு உடனடி தேர்வு ஜுலை 1ம் தேதி

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேசன் பரீட்சையில் தோல்வி அடைந்தவர்களுக்கு சிறப்பு உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜுலை 1ம் தேதி தொடங்கி ஜுலை 9ம் தேதி முடிவடைகிறது. மெட்ரிக்குலேசன் தேர்வு ஜுன் 29ம்தேதி தொடங்கி ஜுலை 9ம்தேதி முடிகிறது. ஓ.எஸ்.எல்.சி. தேர்வு ஜுன் 30ம் தேதி தொடங்கி ஜுலை 9ம் தேதி முடிகிறது. ஆங்கிலோ இந்தியன் தேர்வு ஜுன் 29ம் தேதி தொடங்கி ஜுலை 9ம் தேதி முடிகிறது. மறுகூட்டலுக்கான விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்படுகிறது. மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றன. மே 31ம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும்.

Monday, May 24, 2010

பெண்களே! எச்சரிக்கை....

னிமேல் நீ என்னில் பாதி... புயல் - வெயில் - மழை... பாலை - சோலை இவை எல்லாம் ஒன்றாக நாம் கடப்போம்!'' என்று சினிமாக் களில் தருகிற வாக்குறுதிகள் மாதிரியே, திருநெல்வேலி அருகில் இருக்கும் தோப்புவிளை

கிராமத்து தேவால யத்தில் மேரிசுதாவுக்கு வாக்குறுதி அளித்தார் ரீகன். கல்யாணமாகி சென்னைக்கு அவரோடு வாழ வந்த கொஞ்ச நாளிலேயே, மிகமிக விபரீதமான வினோதமான ஒரு காமுகனுக்கு தான் வாழ்க்கைப்பட்டிருக்கிறோம் என்று மேரிசுதாவுக்குப் புரிந்துபோனது.

தப்பான புருஷனின் பர்ஸை அவனுக்குத் தெரியா மல் துழாவினால் என்ன கிடைக்கும்? சில சமயம் பாக்கெட்டுக்குள் கைவிட்டால் என்ன கிடைக்கும்? ரீகன் தன் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க்கில் மேரிசுதா தேடிக் கண்டடைந்தது எல்லாமே அசிங்கம், அருவருப்பு, வக்கிரத்தின் உச்சம்! புகைப்படங்கள், ஆடியோ - வீடியோ பதிவுகளில் அடுத் தடுத்து பல பெண்களோடு ரீகன் இருந்த காட்சிகள் எல்லாமே 'உவ்வே' ரகம்!

தனியொரு நபர் இத்தனைப் பெண்களோடு இப்படி சல்லாபம் செய்யவும், சுற்றித்திரியவும், அவர்களோடு தான் இருந்த அந்தரங்க காட்சிகளை அடுக்கடுக்காக பதிவு செய்யவும், ஒரு கட்டத்தில் பிரச்னை முற்றிப்போனால் அவர்களை சினிமாட்டிக் வில்லனாக மிரட்டி பதிவு செய்துகொள்ளவும் எப்படித்தான் முடிந்ததோ... என்று அதிரவைக்கும் அளவுக்கு இருந்தன மேரிசுதா நம் முன் கொண்டுவந்து கொட்டிய ஆதாரங்கள்.

பட்டப்பகலில், வெட்டவெளியில், சற்று தூரத்திலேயே சாதாரணமாக மக்கள் நடமாட்டம் இருக்க... அந்தக் கடற்கரையில் அதிரவைக்கும் போஸில் ஒரு பெண்ணை எப்படித்தான் சம்மதிக்க வைத்து படமெடுத்தார்களோ என்று நினைக்கும்போதே நடுக்கம் கண்டது நமக்கு.

''எனக்கு முன்னால எத்தனைப் பேர் உன்னைத் தொட்டான்? ஒளிவு மறைவு இல்லாம ஒழுங்காகச் சொல்லிடு... நான் உன்னை விட்டுடறேன்!'' என்று ஆரம் பித்து, அந்தப் பெண்ணின் வாயாலேயே வரிசையாக சில ஆண்களின் பெயர்களை வாங்குகிறது அந்த 'மெஸ்மரிச' குரல்!

''இது என் புருஷன் ரீகன் குரலேதாங்க. நடுராத்திரியில் வீடியோவில் அசிங்கப் படத்தை ஓடவிட்டுட்டு, அதுல வர்றமாதிரி எல்லாம் என்னை கோ ஆபரேட் பண்ண சொல்லுவான் அந்தப்பாவி. மறுத்தால் கடுமையா அடி உதைதான். நான் ஒரு பக்கம் கதறி அழுதுக்கிட்டு இருக்கும்போதே, யாராச்சும் ஒரு பொண்ணுக்கு போன் போட்டு அவளோட தான் எப்படி எல்லாம் இருந் தேன்னு அவ வாயாலேயே படிப்படியா சொல்லச் சொல்லுவான். வேண்டாத பொண்ணுங்களை தன் வழியிலிருந்து விலக்குறதுக்கு கடுமையா மிரட்டுவான். அதையெல்லாம் செல்போன்ல எதுக்குத்தான் பதிவு செஞ்சி வெச்சிக்கிட்டானோ? ஆனா, இன்னிக்கு அவன்கிட்ட இருந்து விடுதலை வாங்க அதுதான் எனக்கு உதவப் போகுது!'' என்று சொல்லி கண்களை துடைத்துக்கொள்கிறார் மேரிசுதா.

''எனக்கும் ரீகனுக்கும் கல்யாணமான புதுசுலேயே படுக்கை அறையில் செல்போனை வெச்சு நாங்க ஒண்ணா இருக்கிறதை படம் பிடிக்க ஆரம்பிச்சான். நான் தடுத்தா, 'ப்ளீஸ் சுதா... உன்னோட ஞாபகம் வர்றப்ப பார்த்துக்கிறதுக்குத்தான்(?) இதெல்லாம்' அப்ப டின்னு கெஞ்சுவான். இருந்தாலும் அவன் அசந்திருக்கிற நேரம் பார்த்து அந்தப் படத்தை எல்லாம் நான் தேடித்தேடி அழிச்சிக்கிட்டே இருந்தேன். என்னோட மூணரை வயசு பையன் ரிக்காடோ என் வயித்துல இருந்த சமயம், பிரசவத்துக்காக தாய் வீடு போய் வந்தேன். திரும்பி வந்தப்பதான் பெட்ரூமில் புதுசா அந்த கம்ப்யூட்டர் இருந்தது. ராத்திரிப் பொழுது ஆனாலே அசிங்கப்படங்களை அதுல ஓடவிட்டு பார்க்கிறது, எதையெதையோ செல்போனில் இருந்து எடுத்து அதில் சேகரிக்கிறதுன்னு பாதிநேரம் அதே வேலையா இருப்பான்.

அடுத்தடுத்து அவனோட வக்கிரம் கூடிப்போய் வெவ்வேற பெண்களோட என் எதிரிலேயே கேவலமா பேச ஆரம்பிச்சப்பதான், ரீகனோட அம்மாக்கிட்ட விஷ யத்தைச் சொல்லி கதறி அழுதேன். 'ஆம்பிளைன்னா அப்படித்தான். களைச்சு வீட்டுக்கு வர்ற ஆம்பிளைக்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கிறதுதான் நல்ல பொம் பளைக்கு அழகு' அப்படின்னு எகத்தாளமா அவங்கப் பேசினாங்க. வீட்டுக்குள்ள சண்டை முத்துனப்ப, 'விருப் பம் இருந்தா இரு... இல்லாட்டி தற்கொலை பண்ணி செத்துப்போ' அப்படின்னு சொல்லி ரீகன் என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டான். அவங்க அப்பாக்கிட்ட இதையெல்லாம் எடுத்துச் சொல்லவே முடியாது. ஏன்னா யாரும் இல்லாத நேரத்துல தற்செயலா தடுக்கி விழுற மாதிரி என் மேல விழுறது... 'நீ ரொம்ப அழகா இருக்கே' அப்படின்னு வயசுக்கு தகாம இளிக்கிறது... இப்படி என் மாமனாரே தனி டார்ச்சர் கொடுத்தாரு.

சொந்தமா தொழில் தொடங்கப் போறேன்னு சொல்லி, என் நகைகளை வாங்கி அடகு வெச்சான் ரீகன். மேற்கொண்டு பணத்தை எங்க வீட்டுல கேட்டு வாங்கிட்டு வரச்சொல்லி அடிச்சான். தாங்கமுடியாம காவல் நிலையத்துல புகார் கொடுத்தேன். போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து 'திருந்திடறதா' எழுதிக் கொடுத்து ஜாமீன்ல போனவன்தான் இப்ப எங்கே இருக்கான்னு தெரியலை...'' என்று ஒருமையிலேயே கணவனைப்பற்றி கொட்டி முடித்தார் மேரிசுதா.

அதற்கெல்லாம் முன்பாக வீட்டுக்கே சில பெண்களைக் கூட்டிவந்து அவர்கள் எதிரிலும் தன்னை ரீகன் அவமானப்படுத்தியதாக சொல்லும் இவர், புகுந்த வீட்டைவிட்டு புறப்படுவதற்கு முன்பு அந்த கம்ப்யூட்டரில் இருந்து 'ஹார்டு டிஸ்க்'கை எப்படியோ கழற்றிக்கொண்டு வந்ததுதான் க்ளைமாக்ஸ். குவியல் குவியலாக நாம் விவரித்த காட்சிகளை எல்லாம் அதிலிருந்து எடுத்து சி.டி. போட்டு நீட்டினார் - சங்கடத்தோடு!

தான் சேகரித்த சில மொபைல் நம்பர்களை நம்மிடம் கொடுத்தவர், ''இவங்க எல்லாம் ரீகனோட மிரட்டலுக்கு ஆளான பெண்கள். பேசிப் பாருங்க!'' என்று சொன்னார். அவர்களில் சிலரை தொடர்புகொண்டு பேசி, நேரிலும் சந்தித்தோம்.

''காலேஜில் படிக்கிறப்ப என் ஃப்ரெண்டு மூலமா ரீகன் அறிமுகம். சாக்லெட், சுடிதார்னு வாங்கிக் கொடுத்து அசத்தினான். அவன்கிட்ட ஒரு தடவை பேசிட்டா, அப்புறம் விலகவே முடியாது. ஏதேதோ சொல்லி ஈ.சி.ஆர். ரோட்டில் ஒரு ரிசார்ட்டுக்கு கூட்டிப்போனான். கடலில் குளிச்சிட்டு அறைக்குள் உடைமாற்றும் போது எல்லாத்தையும் படம் பிடிச்சிட்டான். சென்டிமென்ட்டா ஏதேதோ சொல்லி என்னை சமாதானப்படுத்தினான். அவன் பேச்சில் மயங்கி பலதடவை என்னை இழந்திருக்கிறேன். அப்பல்லாம் அவன் செல்போனில் படம் எடுக்கிற விஷயம் எனக்கு பெரிசா தெரியலை. என்னோட வேறொரு பாய் ஃப்ரெண்ட் அந்த செல்போன் காட்சிகளைப்பற்றி விவரமா சொன்னப்பத்தான் ரீகனோட விஷமம் எனக்குப் புரிய ஆரம்பிச்சது.

'இப்போ உன் பாய் ஃப்ரெண்டுக்கு தெரிஞ்ச விஷயம் உலகம் முழுக்க தெரியப் போகுது. இன்டர்நெட்டுல போட்டு எல்லாருக்கும் மஜா கொடுக்கலாமா?' அப்படின்னு முற்றிலும் வேறொரு முகத்தோட ரீகன் பேச ஆரம்பிச்சான். தன்னோட அக்கவுன்ட்ல பணம் போடச்சொல்லி பயங்கரமா மிரட்ட ஆரம்பிச்சான்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் எனக்கு கல்யாணம் ஆச்சு. ரீகன் என்னை காதலிச்சுருக்கான் என்கிற விஷயத்தை மட்டும் அவரே கண்டுபிடிச்சிட்டார். பெருந்தன்மையோட என்னோட வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கார். ஆனா, எந்த நிமிஷமும் தன்னிடம் இருக்கிற வீடியோ, போட்டோக்களை அனுப்பி என் வாழ்க்கையை சீரழிச்சிருவானோன்னுபயமா இருக்கு'' என்று சொல்லி கதறி அழுத அந்தப் பெண்ணின் அடையாளங்கள் இங்கே மறைக்கப்படுகின்றன. மேரிசுதா கொண்டு வந்த வீடியோ காட்சிகளில் இவரோடு ரீகன் அப்பட்டமாக படுக்கை அறையில்!

இன்னொரு இளம்பெண்ணோ, ''முதலில் செல்போனில்தான் எனக்கு அறிமுகம் ஆனான். மூணு மாசம் நாகரிகமா பேசிட்டிருந்தான். ஒருநாள் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டுக்கு நேரில் வரச்சொல்லி பார்த்தான். அதற்கு அப்புறம் என் அழகை வர்ணிச்சு உருகி மருகினான்!'' என்றதோடு, எப்படியெல்லாம் சென்டி மென்ட்டாக ரீகன் தன்னை வளைத்தான் என்பதை படபடப்பும் பரிதவிப்புமாக வர்ணித்தார். தன் சம்மதத்தோடே அத்துமீறி, அந்தக் காட்சிகளையும் படம் பிடித்துக் கொண்ட விவரங்களையும் சொன்னார். ''இன்னும் எனக்கு கல்யாணம் ஆகலை. என் குடும்பத் துக்கும் விஷயம் தெரியாது. தெரிஞ்சா நான் உயிரோட இருக்க முடியாது!'' என்று கதற ஆரம்பித்து விட்டார்.

ரீகன் தலைமறைவான பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தாரும் உட்கார்ந்து பஞ்சாயத்து பேசியதில்... ஸ்டாம்ப் பத்திரத்தில் ரீகனின் பெற்றோர் நீளமாக ஓர் உறுதிமொழி எழுதிக் கொடுத்து இருக்கிறார்கள் மேரிசுதாவுக்கு. திருமணத்தின்போது கொண்டுவந்த பணம், நகை ஆகியவற்றை திருப்பிக் கொடுப்பதாகவும்... குழந்தை ரிக்காடோவின் எதிர் கால பாதுகாப்புக்கு தனியாக ஒரு தொகை கொடுப்பதாகவும், அதில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால், ''இந்த உறுதிமொழிப் பத்திரமே வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து ப்ளாக்மெயில் செய்துதான் எழுதி வாங்கப்பட்டது!'' என்று போலீஸில் ரீகனின் பெற்றோர் புகார் கொடுக்க... மேரிசுதாவையும் தேடுகிறது போலீஸ்.

ரீகனை நாம் போனில் தொடர்பு கொண்டபோது, ''ஹலோ... ஹல்லல்லோ... ஹல்லல்லல்லோ...'' என்றெல்லாம் செமத்தியாக லந்து அடித்தது எதிர்முனை. மறுமுறை தொடர்பு கொண்டால், ''நீங்கள் தொடர்புகொண்ட நபர் செம காண்டில் இருக்கிறார்!'' என்றது குரல். ஆடியோ பதிவுகளில் இருந்த அதே குரல்தான்! இன்னொரு முறை பக்கத்திலிருந்த பெண்ணிடம் போனைக் கொடுத்து விசாரிக்கச் சொன்னது. அந்தப் பெண்ணும் 'ஹலோ' சொல்லிவிட்டு கட் செய்தார்.

ரீகனின் தந்தை ஜேம்ஸை நாம் தொடர்பு கொண் டோம். ''ஜாமீன் எடுத்து எங்கள் மகனை கூட்டிவந்தோம். அப்புறம் எங்கே போனான், என்ன ஆனான் என்று தெரியாது. உங்கள் காதுக்கு வந்ததை விசாரித்து எழுதிக்கொள்ளுங்கள்!'' என்றார் அவர். ஆபாச ஆதாரங்கள்பற்றி கேட்டதற்கு, ''நான் அதில் எதையும் பார்க்கவில்லை. ஆனால், அப்படி இருப்பதாகச் சொல்லி மிரட்டித்தான் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள்!'' என்று மட்டும் சொல்லி லைனை கட் செய்தார் ஜேம்ஸ்.

இது மேரிசுதா என்ற ஒரே ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அடுத்து என்னாகுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்திருக் கிறார்கள், அவசரப்பட்டு ரீகனிடம் தங்களை இழந்து விட்ட இன்னும் பல பெண்கள்.

'பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்களே முன்வந்து புகார் செய்தபின்னரே ரீகன் மீது நடவடிக்கை எடுக்க முடியும்' என்று காவல்துறையினர் காரணம் காட்டிவிடாமல், விரைந்து செயல்பட்டு கணவன் - மனைவி இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தியே தீரவேண்டும்.

- த.கதிரவன்
நன்றி: ஜூவி

இந்தியாவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பின் தரம் மிகவும் மோசம் : நிபுணர் கருத்து

விலை மதிப்பற்ற மனித உயிர்களை பாதுகாக்க
விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புத் தரத்தை உயர்த்த இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமா?

இந்தியாவில் விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புத் தரம் மிக மிக மோசமாகவுள்ளது என்று இந்திய விமானிகள் கூட்டமைப்பின் (Federation of Indian Pilots) நிறுவனத் தலைவர் கேப்டன் எம்.ஆர். வாடியா கடுமையாக சாடியுள்ளார்.

மங்களூரு விமான விபத்தில் 159 பேர் பலியான துயரச் சம்பவம் தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில், "விமானப் பாதுகாப்பு அமைப்பின் புள்ளி விவரத்தின்படி, உலக அளவில் இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் விமான விபத்து ஏற்படுகிறது.

நம்மிடம் இன்னமும் விமானப் போக்குவரத்து பாதுகாப்புக்கென பிரத்யேகமான சிறப்பு நிபுணர்கள் இல்லாதது கவலைக்குரியது.

விமானப் போக்குவரத்து துறை இயக்குனரகத்திடம் (Directorate General of Civil Aviation) தான் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

எல்லா நாடுகளிலும் விமானப் பாதுகாப்புக்கென தனி வாரியம் உண்டு. ஆனால், அதிக எண்ணிக்கையில் விபத்து நடக்கும் நம் நாட்டில் விமானப் பாதுகாப்புக்கென தனி அமைப்பு ஏதுமில்லை. அரசால் அமைக்கப்பட்ட பல கமிஷன்கள் பரிந்துரைத்தும் கூட இதுவரை அப்படியொரு தனி வாரியத்தை அமைக்கும் திட்டம் அரசுக்கு இல்லை.

இந்தியாவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பில் தரமில்லை என்பதற்கு மங்களூர் நிகழ்வு மற்றுமோர் உதாரணம். இனியாவது, அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்," என்றார் எம்.ஆர். வாடியா.

Friday, May 21, 2010

குணங்குடி ஹனிபா விடுதலை

13 ஆண்டுகள் ரயில் குண்டு வழக்கில் சிறையில் வாடிய குணங்குடி ஹனிபா மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் மீது போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று அனைவரையும் விடுதலைச் செய்தது. எல்லா புகழும் இறைவனுக்கே

Sunday, May 16, 2010

நாட்டின் நான்காவது தூணில் இணைய விருப்பமா?

நாட்டின் நான்காவது தூணில் இணைய விருப்பமா?
செந்தில், ஐஸ்வர்யா, வினோத்

'மீடியா!' - இந்த மந்திரச் சொல்லுக்குத் தலை வணங்காத உலகத் தலைவர்கள் கிடையாது. ஊடகங்கள்... உலக உருண்டையை உங்கள் உள்ளங்கையில் சுழலவைக்கும் சக்தி படைத்தவை. 24 மணி நேரத்துக்கு ஒரு முறை செய்தித்தாள் படித்து நிலவரம் அறிந்த காலம் கரைந்தோடி, 24 மணி நேரத்தின் ஒவ்வொரு நொடியிலும் அப்டேட் தகவல்கள் தீண்டிக்கொண்டே இருக்கும் காலம் இது. முழுக்க முழுக்க இளைஞர் சக்தியினை நம்பியிருக்கும் துறை இது. ஊடகவியலாளர் பொறுப்புக்குத் தக்க தங்களை வடிவமைத்துக்கொள்பவர்களுக்கு சர்வதேசத் தளங்களில் இயங்கும் வாய்ப்புகூடக் கைக்கெட்டும் தூரத்தில்தான். அவற்றை எட்டிப் பிடிப்பதற்கான வழிவகைகள் இதோ...

இந்தியாவில் ஊடகத் துறையை மூன்று வகையாகப் பிரிக்கலாம். பத்திரிகை, எலெக்ட்ரானிக் மீடியா மற்றும் நியூ மீடியா (சைபர்) ஆகியன.

தினசரிகள், வார, மாத இதழ்கள் போன்றவை பத்திரிகைப் பிரிவில் அடங்கும். அறிவியல் முதல் அரசியல் வரை அனைத்து உலக இயக்கங்களையும் செய்தியாக்க நல்ல எழுத்தாற்றல் அவசியம். மகாத்மா காந்தி முதல் 'எக்ஸ்பிரஸ்' கோயங்கா வரை அனைவரும் பத்திரிகையாளர்களாக இருந்தவர்களே. கருத்துச் சுதந்திரத்தை முன்னெடுத்துச் செல்வதில் இதழியலுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குல்தீப் நய்யார், தெஹல்கா தருண் தேஜ்பால் போன்றவர்கள் இத்துறையின் முக்கிய ஆளுமைகள்.

நிருபர், உதவி ஆசிரியர், தலைமை நிருபர், பொறுப்பாசிரியர், செய்தி ஆசிரியர், நிர்வாக ஆசிரியர், இணை ஆசிரியர், ஆசிரியர் எனத் திறமை மற்றும் அனுபவத்துக்கு ஏற்றாற்போல் இதில் பணியிடங்கள் உண்டு. தவிர, 'ஃப்ரீலான்சர்' என்னும் சுதந்திரப் பத்திரிகையாளராகவும் வர முடியும்.

எலெக்ட்ரானிக் மீடியாவில் தொலைக்காட்சி, வானொலி போன்றவை அடங்கும். டி.ஆர்.பி. ரேட்டிங் போட்டி காரணமாக, யார் முதலில் செய்தி வெளியிடுகிறார்கள் என்ற வேகத்துடன் கேமராவும் கையுமாகப் பரபரப்பாக இருக்க வேண்டும். கொஞ்சம் கலை ஆர்வமும், கேமரா பற்றிய தொழில்நுட்பங்களும் அறிந்தவர்களுக்கு இதில் சிவப்புக் கம்பள வரவேற்பு. கரன் தப்பர், ப்ரணாய் ராய், பர்கா தத் போன்றவர்கள் எலெக்ட்ரானிக் மீடியா ஐகான்கள்.

மூன்றாவது வகை, நியூ மீடியா அல்லது சைபர் மீடியா என்று சொல்லப்படும் இணையதளத்தை அடிப்படையாகக்கொண்டது. இத்துறையின் வளர்ச்சி தற்போது ஆரம்பகட்ட நிலையில்தான் இருக்கிறது. ஆனால், சூப்பர்ஸானிக் வேகத்தில் அடுத்த ஐந்தே ஆண்டுகளில் ஒவ்வொரு வீடு, செல்போனையும் ஊடுருவும் வல்லமைகொண்ட துறை இது. இவை தவிர்த்து, ஓவியம் வரையக்கூடிய திறமை உள்ளவர்கள் பத்திரிகைகளில் இல்லஸ்ட்ரேட்டர்களாகவோ, லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்களாகவோ செயல்படலாம். அனிமேஷன், சவுண்ட் இன்ஜினீயரிங், ஆர்ட் டைரக்ஷன் என மீடியா தொடர்பான பின்னணி வேலைவாய்ப்புகள் தனிக் கடல்.

சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவரான ரவீந்திரன் கோபாலன், ஊடகத் துறையில் முத்திரை பதிக்க அத்துறை பற்றிய கல்வி அறிவு அவசியம் என்கிறார். ''கடந்த 200 ஆண்டுகளாக ஊடகத் துறை, அதன் பிரத்யேகப் படிப்புகளின் அவசியத்தை உணராமல், வெறும் எழுத்தாற்றலையே நம்பி முன்னேறி வந்துள்ளது. கொஞ்சம் எழுத்துத் திறமை இருந்தால், ஊடகத் துறையில் ஓர் அடிப்படை வேலைவாய்ப்பைப் பெறலாம் என்பதுதான் இங்கே நிலைமை. ஜர்னலிசம் என்பதைப் பொதுப்படையாக வைத்துக்கொண்டால்கூட, அதிலேயே விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் என்று பல பிரிவுகள் இருக்கின்றன. இவற்றில் நாம் விரும்பும் ஏதேனும் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அந்தத் துறைபற்றிய அனைத்து விவரங்களையும் பள்ளி அல்லது கல்லூரியின் ஆரம்ப நாள் முதலே அறிந்துவைத்திருப்பது, அதில் சிறப்புக் கவனம் செலுத்தும் பத்திரிகையில் இன்டர்ன்ஷிப் செய்வது போன்ற பயிற்சிகள் உங்களுக்குச் சிறப்புத் தகுதி அளிக்கும். அதாவது, ஒருவர் ஊடகம் தொடர்பான துறையில் பொருளாதாரம்தான் தனது விருப்பம் என்று தீர்மானித்தால், அதிலேயே ஸ்டாக் மார்க்கெட், ஃபினான்ஷியல் ஜர்னலிசம், ஃபினான்ஷியல் பாலிசி ஜர்னலிசம், பட்ஜெட் ஜர்னலிசம் என ஏகப்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் உங்களுக்கு ஃபிட் ஆகும் ஏதேனும் ஒன்றிரண்டு துறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி நுணுக்கமான அறிவை வளர்த்துக்கொள்வது, தொலைநோக்குப் பார்வையில் நல்ல பலனைத் தரும். பொதுஅறிவு ஒரு செய்தியாளருக்கு அவசியம். சாதாரணமாகக் கண்முன் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றை முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தோடு அணுகத் தெரிந்திருக்க வேண்டும். சமூகம் குறித்த அக்கறையும், பொறுப்பு உணர்ச்சியும் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள். இவற்றைப் பயிற்சியால் பெற முடியாது. இயல்பிலேயே சமூகம் குறித்த அக்கறை இருக்கும் சென்சிடிவ்வான மனிதர்கள்தான் ஊடகத் துறையில் சோபிக்க முடியும். சிம்பிளாகச் சொல்வதென்றால், ஜர்னலிசம் பற்றி நான்கு சுவர்களுக்குள் ரொம்பவே சிறப்பாகப் பாடம் நடத்திச் சொல்லிக் கொடுக்க முடியும். ஆனால், ஒரு நல்ல ஜர்னலிஸ்ட் நிச்சயம் நான்கு சுவர்களுக்குள் உருவாவது இல்லை!'' என்கிறார் ரவீந்திரன்.

கல்வித் தகுதி அவசியம் என்றாலும், இன்று மீடியா துறையில் இருப்பவர்களில் 70 சதவிகிதம் பேர் மீடியா தொடர்பான முறையான பட்டங்கள் ஏதும் பெறாதவர்கள்தான். பல்கலைக்கழகப் பட்டம் அவசியம் என்றாலும், திறமையே இங்கு பிரதானம். அதே சமயம் திறமைசாலிகள் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்புகளுடன் இருந்தால், அவர்களின் மதிப்பு இருமடங்காக எகிறும்.

''ஒரு நல்ல ஜர்னலிஸ்ட்டுக்கு அவசியம் இருக்க வேண்டிய தகுதிகள் இரண்டு. ஒன்று, சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னை அப்டேட் செய்துகொள்வது. இன்னொன்று, எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும் என்ற உந்துதலும், சமூக அக்கறையும் நிரம்பியிருப்பது!'' என்கிறார் ஏஷியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரியின் டீன் பிந்து பாஸ்கர். மேலும், தொடர்பவர், ''அரசியல் நிகழ்வுகளை, அரசின் பார்வையில் இருந்து மட்டும் அணுகாமல், பலரின் கண்ணோட்டங்களில் இருந்து அணுகத் தேவையான மன முதிர்ச்சியையும் ஒரு ஜர்னலிஸ்ட் வளர்த்துக்கொள்ள வேண்டும். பொருளாதாரம், சமூக அமைப்புகள் பற்றிய ஆழ்ந்த அறிவு இன்றைய சூழ்நிலையில் இன்றியமையாதது. தகவல் தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி என்று எல்லா விஷயங்களைப்பற்றியும் ஓரளவு தெரிந்துவைத்திருப்பது முக்கியம். ஏனென்றால், 'எனக்கு இந்த விஷயம்பற்றி எதுவும் தெரியாது' என்ற பதிலைக் கூறக் கூடாத இருவர், ஆசிரியரும் செய்தியாளரும்தான்.

கம்யூனிகேஷன் ஸ்கில், மக்களைச் சந்திப்பதில் ஆர்வம், அவர்களுடைய பிரச்னைகள் குறித்த அக்கறை ஆகியவை ஒரு செய்தியாளருக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டிய சாஃப்ட்ஸ்கில்ஸ். இவற்றோடு எழுத்துத் திறமையும் அவசியம். ஆங்கில அறிவு, ஒன்றுக்கும் மேற்பட்ட வட்டார மொழிகளில் பேசும் திறமை ஆகியவையும் ப்ளஸ் பாயின்ட்களாக அமையும். ஆர்வமும் திறமையும் இருப்பவர்கள் மீடியாத் துறையின் 'மோஸ்ட் வான்டட்' பட்டியலில் எப்போதும் இடம் பிடிப்பார்கள்!'' என்று நம்பிக்கை தருகிறார் பிந்து பாஸ்கர்.

என்ன, உலகத்தைச் சுழலவைக்கத் தயாரா?

----------------------------------------------------------

டி.சுரேஷ்குமார்,
டைம்ஸ் ஆஃப் இந்தியா, அசிஸ்டென்ட் எடிட்டர்.

''1996-ல் பி.காம் முடிச்சுட்டு மீடியாவுக்கு வந்தேன். திரும்பிப் பார்க்க நேரம் இல்லாம ஓடிட்டே இருக்கேன். குற்றம் சாட்டப்பட்டவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பை, 'மனித உரிமைக்குக் கிடைத்த வெற்றி' என்று டெக்கான் கிரானிக்கலும், 'இந்தத் தீர்ப்பு போலீஸ் விசாரணைக்குப் பெரும் பின்னடைவு' என்று ஹிந்து பத்திரிகையும் எழுதியிருந்தன. அனைத்துப் பத்திரிகை நிருபர்களும் ஒரே இடத்தில் இருந்து சேகரித்த செய்திதான் அது. இருந்தாலும், கருத்துக்கள், கோணங்கள் மாறுபடுகின்றன. ஒரு செய்தியை எந்த அளவுக்கு விஸ்தார மான அலசல் கோணத்தோடு அணுக வேண்டும் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம். பிரமாண்ட மேம்பாலங்கள், குளிர்சாதனப் பேருந்துகள், ஷாப்பிங் மால்கள், ஐ.டி வளாகங்கள் என மொத்தத் தமிழ்நாடும் சென்னையில்தான் அடங்கி இருக்கிறது என்ற குதிரைக் கடிவாள மனோபாவத்தை மனதில் இருத்திக்கொள் ளவே கூடாது. இரட்டைக் குவளைமுறை, கள்ளிப் பால் கொடூரம், இடைத் தேர்தல் கலாட்டா என சென்னையைத் தாண்டித்தான் தமிழகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது.

மிக முக்கியமாக, பத்திரிகையாளர் ஆக ஆசைப்படுபவர்கள் 24 மணி நேரமும் அலர்ட் ஆக இருக்க வேண்டும். அதிலும் கிட்டத்தட்ட அனைத்து செய்தி சேனல்களும் ஏதேனும் சார்பு நிலை எடுத்திருந்தால், சம்பவ இடத்தில் இருக்கும் செய்தியாளரால்தான் உண்மையான நிலையை உலகுக்கு எடுத்துரைக்க முடியும். நீங்கள் எப்போதும் உண்மை சொல்பவராக இருங்கள்!''


மீடியாவுக்குள் நுழைய,
நுழைந்த பிறகு...

பத்திரிகையாளராகவோ அல்லது ஒரு படைப்பாளியாகவோ வர விரும்பினால், முதலில் நீங்கள் நல்ல படிப்பாளியாக வேண்டும். நல்ல வாசிப்பு, நல்ல எழுத்தைத் தரும். எழுதி எழுதிப் பழகினால், இன்னும் சிறப்பாக எழுத முடியும். ஆகவே, படிப்பு மட்டுமல்ல... பயிற்சியும் முக்கியம்!

கேள்விப்படும் எந்த விஷயம்பற்றியும், 'ஏன்... எதற்கு... எப்படி?' என்று கேள்வி கேட்டு ஆராயும் ஆர்வத்தைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

எந்த மொழி மீடியாவில் சேர ஆசைப்பட்டாலும் ஆங்கிலம் அவசியம். இன்றே ஆங்கிலம் கற்கும் வேலையை ஆரம்பியுங்கள்.

தமிழில் ஒன்று, ஆங்கிலத்தில் ஒன்று என தினமும் இரண்டு செய்தித்தாள்களையேனும் முழுமையாகப் படியுங்கள். தவிர, எல்லா செய்தித்தாள்களிலும் தலைப்புச் செய்தியையாவது வாசியுங்கள்.

மீடியாவுக்கு வர ஆசைப்படுபவர்கள் முதலில் சின்னப் பத்திரிகை, சேனலில் சேர்ந்து நிறையக் கற்றுக்கொள்ளுங்கள். அங்கு உங்களுக்கு சர்வ சுதந்திரம் கிடைக்கும். பிறகு, பெரிய நிறுவனங்களை அணுகுங்கள்.

ஒரு செய்தியைப் பரபரப்புக்காக அணுகாமல், அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை ஆராயுங்கள். அரசு, போலீஸ் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதில் ஏதேனும் செய்தி கிடைக்குமா என்று தோண்டுங்கள்.

கருணாநிதி, ஜெயலலிதா, கமல், ரஜினியைப் பேட்டி எடுக்கும்போது எந்தளவுக்கு தயாரிப்புகளுடன் செல்வீர்களோ, சாமானியனின் பேட்டிக்கும் அதே முன்தயாரிப்புடன் செல்லுங்கள்.

எந்த இக்கட்டான சூழலிலும் உங்களை உழைப்பும் நேர்மையும்தான் காப்பாற்றும்!


சுசித்ரா,
ஆர்.ஜே,
ஹலோ எஃப்.எம்.

''ஆர்.ஜே. ஆவதற்கு நல்ல குரல்வளம் தேவைதான். ஆனால், அதைக் காட்டிலும் முக்கியமான தகுதி, நாம் என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது என்று அறிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு டிகிரி என்பது அடிப்படைத் தேவை. ஆனால், மொழி நடை, எந்த வகை நிகழ்ச்சியின் அமைப்புக்கும் உடனடியாகத் தன்னை செட் செய்துகொள்வது, அன்றைய நிகழ்வுகள், பொது அறிவுத் தகவல்களை அப்டேட் செய்வது எனப் பட்டப் படிப்பு சொல்லிக்கொடுக்காத பல தகுதிகளை வளர்த்துக் கொள்வது அவசியம்!''


சஞ்சய் பின்டோ,
எக்ஸிகியூட்டிவ் எடிட்டர்,
என்.டி.டி.வி-ஹிந்து சேனல்.

''நான் வரலாறு, அரசியல், சட்டம் படித்துவிட்டுச் சம்பந்தமே இல்லாமல் மீடியாவுக்குள் காலடி எடுத்துவைத்தவன். ஜர்னலிஸ்ட் ஆக ஆசை உள்ளவர்கள் விஸ்காம் படிக்கலாம். அல்லது வரலாறு, தமிழ், ஆங்கிலம் என எளிமையான கலைப் படிப்புகளைப் படித்துவிட்டு, மீடியா பெர்சன் ஆவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளலாம். ஒருவரைப் பேட்டி எடுக்கச் செல்லும்போது, அவர் இதுவரை சொல்லாத விஷயத்தை அவரிடம் இருந்து வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். பொதுவாக, ஆங்கில செய்திச் சேனல்களில் முறையான கல்வித் தகுதியுடன் வரும் ஃப்ரெஷ்ஷர்களுக்கு ஆரம்பத்தில் 25 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் தருவார்கள். மிக நல்ல அனுபவம் உள்ளவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். திறமையான 'மீடியா பெர்சன்' ஆகச் செயல்பட வேண்டும் என்ற ஆர்வத்துடன் வாருங்கள். அந்த ஆர்வம் உங்களை உயரத்துக்கு அழைத்துச் செல்லும்!''


கவிதா முரளிதரன்,
சீனியர் கரெஸ்பாண்டன்ட், தி வீக்.

''12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிகிறேன். விஸ்காம், ஜர்னலிசம்னு மீடியா சம்பந்தமான எந்தச் சிறப்புப் படிப்பும் நான் படிக்கலை. செய்தி சேகரிக்கச் செல்லும் கள அனுபவம்தான் இந்தத் துறையில் நம்மைத் தரம் உயர்த்திக்கொண்டே இருக்கும். தற்போதைய தமிழ், தெலுங்கு, கன்னடம் என எந்த மொழி மீடியாவில் நீங்கள் இயங்கிக்கொண்டு இருந்தாலும், ஆங்கிலப் புலமை உங்களுக்கு அவசியம். தினமும் விதவிதமான குணம்கொண்ட வித்தியாசமான மனிதர்கள்தான் நமது 'ஆபீஸ்' ஆக இருப்பார்கள். அவர்களைக் கோபப்படுத்தாத தொனியில் பேசி, நமக்குத் தேவையான தகவல்களை வாங்குவதில் அடங்கி இருக்கிறது சாமர்த்தியம். இதற்கு அநேகமாக எந்தப் பல்கலைக்கழகத்திலும் பாடத்திட்டம் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அனுபவமே ஆசான்!''

நன்றி: விகடன்

Saturday, May 15, 2010

வீடியோ காட்சி: மதக் கலவரம் ஏற்படுத்த 60 லட்சம் பீஸ் ஸ்ரீராம் சேனா தலைவரின் வீடியோ

பணத்திற்காக எந்தவிதமான மதக் கலவரத்தையும் நடத்தத் தயாராக இருப்பதாக ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் மாலிக் கூறியதை ரகசியக் கேமரா மூலம் படம் பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெஹல்கா ‍அதன் செய்தித் தொகுப்பை சன் நீயூஸ் தொலைக்காட்சியிலும் காண முடிந்தது அதன் வீடியோ.


Friday, May 14, 2010

மதக் கலவரம் ஏற்படுத்த 60 லட்சம் பீஸ் ஸ்ரீராம் சேனா தலைவர்

பெங்களூர்: பணத்திற்காக எந்தவிதமான மதக் கலவரத்தையும் நடத்தத் தயாராக இருப்பதாக ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் மாலிக் கூறியதை ரகசியக் கேமரா மூலம் படம் பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெஹல்கா.

கிட்டத்தட்ட ஒரு கூலிப்படைத் தலைவனைப் போல அதில் பேசியுள்ளார் முத்தலிக்.

47 வயதான முத்தலிக் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ஹக்கேரியில் பிறந்தவர். 1975ம் ஆண்டு 13 வயதாக இருந்தபோது ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்தார். 2004ம் ஆண்டு பஜ்ரங் தளத்தின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அரசியலில் நுழையத் துடித்த அவரை பாஜக தேர்தலில் புறக்கணித்து விட்டது. சீட் தரவில்லை. இதனால் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பஜ்ரங் தளத்தை விட்டுவெளியேறினார் முத்தலிக்.

பின்னர் கர்நாடக மாநில சிவசேனா தலைவராக நியமிக்கப்பட்டார்.அதே ஆண்டில் அதிலிருந்தும் விலகினார்.
பின்னர் 2006ம் ஆண்டு ராஷ்டிரிய இந்து சேனா என்ற அமைப்பைத் தொடங்கினார்.

கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் மத ரீதியான பதட்டத்தை ஏற்படுத்தினார். இவர் மீது மத கலவரங்களை தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடகத்தின் 11 மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன. மேலும் 3 மாவட்டங்களுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.

இந் நிலையில் தான் 2008ம் ஆண்டு ஸ்ரீராம் சேனாவைத் தொடங்கினார். மங்களூரில் பப் ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை ரோட்டில் உடைகள் கிழியக் கிழிய அடித்து வன்முறை வெறியாட்டம் நடத்தியது ஸ்ரீராம் சேனா.

இதையடுத்து இவருக்கு ஜட்டிகள் அனுப்பி பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இந் நிலையில் ரூ.60 லட்சம் பணம் கொடுத்தால் கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் வன்முறையை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கூறி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் முத்தலிக். இவரை அம்பலப்படுத்தியிருப்பது தெஹல்கா பத்திரிக்கையும், இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும்.

பெங்களூர் அல்லது மங்களூரில் கலவரத்தை ஏற்படுத்த தாங்கள் ஆட்களை திரட்டித் தருவதாக முத்தலிக்கும், அவரது அமைப்பின் தலைவர்களான பிரசாத் அட்டவார், பவானி ஆகியோரும் பேசியதை ரகசிய வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து அம்பலப்படுத்தியுள்ளன தெஹல்காவும், ஹெட்லைன்ஸ் டுடேவும்.

இந்து- முஸ்லீம் ஒற்றுமை குறித்த கண்காட்சியை நடத்தப் போவதாகவும், அதற்கு நல்ல பப்ளிசிட்டியை தேடித் தருமாறும் கூறி தெஹல்கா மற்றும் ஹெட்லைன்ஸ் டுடே சார்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் போல அனுப்ப்ப்பட்ட நிருபரிடம் கலவரத்தை ஏற்படுத்துவது குறித்து இந்த மூன்று பேரும் பேசியுள்ளனர்.

பெங்களூர் அல்லது மங்களூரில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள இடங்களில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறும், பிரபலமான முஸ்லீம் தலைவரை அழைக்குமாறும், அதில் தாங்கள் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அந்த மூன்று பேரும் கூறியுள்ளனர்.

இதற்காக ரூ. 60 லட்சம் செலவாகும் என்று முத்தலிக் கூறியுள்ளது அந்த வீடியோ பதிவில் உள்ளது.
முத்தலிக்கின் இந்தப் பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கணினி தமிழ் முன்னோடி உமர் தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம் அளிக்க வேண்டும் தமுமுக கோரிக்கை

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கணினி தமிழின் முன்னோடியான உமர் தம்பிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டி தமிழக முதல்வர் அவர்களுக்கு தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கடிதம் எழுதியுள்ளார். அதன் விபரம் வருமாறு.


உமர் தம்பி
ஓலைச் சுவடிகளில் உறைந்து கிடந்த தமிழ், பின் படிப்படியாக புத்தகங்களாக, பின்னர் கணினி மூலம் உலகெங்கும் வியாபித்திருக்கிறது. அதற்காக உழைத்த உமர் தம்பிக்காக இக்கோரிக்கை இக்கடிதம்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராமப்பட்டிணத்தில் ஜீன் 15, 1953ல் அப்துல் ஹமீது, ரொக்கையாவுக்கு மகனாய் பிறந்தவர் உமர் தம்பி.

முறையாக எந்த கல்லூரியிலும் கணினி தொழில் நுட்பத்தை பயிலாத உமர் அவர்கள், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார். 2001 ஆம் ஆண்டு துபாயில் இருந்து பணியில் விருப்ப ஓய்வு பெற்று தாயகம் வந்தார். தமிழகம் வந்து மென்பொருட்கள் தயாரித்துக் கொடுக்கும் பணியை செய்தார். பின்னர் தமிழ் கூறும் நல்லுலகம் கணினியிலும் தடம் பதிக்க ஆரம்பித்த அக்காலத்தில் தன்னையும் அதனுடன் இணைத்துக் கொண்டார்.

தேனீ இயங்கு எழுத்துரு

உலாவிகளில் ((Browser) செயல்படும் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பமான (WEFT) வெஃப்ட்-ஐ முதன் முதலாகத் தமிழில் அறிமுகம் செய்தார். அதைக் கொண்டு, தமிழ் எழுத்துரு கணினியில் நிறுவப்படாத போதும் கூடத் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களால் அமைந்த இணையத்தளங்களை மைக்ரோசாஃப்ட் உலாவிகளில் படிக்கும் வசதியை ஏற்படுத்த முடிந்தது.

தேனீ எழுத்துருவை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றி பல்வேறு இணையத் தளங்களில் அதை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார். இன்று தமிழிணைய உலகில் அனேகம் பேர் அந்த எழுத்துருவைப் பயன்படுத்தி வலைப்பதிவு செய்து வருகிறார்கள்.

உதாரணத்திற்கு www.murasoli.in முரசொலி இணையதளத்தை கணிணியில் வாசிப்பதென்றால் முரசொலி இணையதளத்தில் நிறுவப்பட்டிருக்கும் (Tamil Font) தமிழ் எழுத்துருவை பதிவிறக்கம் செய்த பின்னரே வாசிக்க முடியும். ஆனால் உமருடைய தேனி தமிழ் எழுத்துருவை பயன்படுத்தி எந்த இணையதளமாக இருந்தாலும் தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்தாமல் வாசிக்கலாம்.

தமிழ் இணைய அகராதி

கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து தமிழ் இணைய அகராதியைக் கொண்டு வந்தார் உமர் தம்பி.

உமர் தம்பி உருவாக்கிய செயலிகளும் கருவிகளும் :
1. AWC Phonetic Unicode Writer
2. Online RSS creator – can be used in offline as well
3. RSS செய்தியோடை உருவாக்கி
4. எண்களாக தெரியும் ஒருங்குறி எழுத்துக்களை படிப்பதற்கான செயலி
5. தமிழை ASCII வடிவில் டேட்டாபேஸில் சேமிக்கும் கருவி
6. எல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி
7. ஒருங்குறி மாற்றி
8. க்னூ (Linex) பொதுமக்கள் உரிம அடிப்படையில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள்
9. தேனீ ஒருங்குறி எழுத்துரு
10. வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு
11. வைகை இயங்கு எழுத்துரு
12. தமிழ் மின்னஞ்சல்
13. தமிழ் ஒருங்குறி Toolbar for உலாவி
14. Uniwriter (உலாவியில் Tools மெனுவில் சேர்க்கப்படும்)
15. தமிழா-எ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார்.

உமருக்கு ஏன் அங்கீகாரம்

சொற்ப பலன்களைக் கொண்ட மென்பொருள் நிரலிகளை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் யுனிகோட் எழுத்துருக்களும், பல மென்பொருள் நிரலிகளையும் உருவாக்கி எவ்வித பொருளாதார எதிர்ப்பார்ப்புமின்றி பொதுப் பயன்பாட்டுக்கு வைத்தவர் உமர் தம்பி. இளம் வயதிலிருந்து தம் தாய்மொழி தமிழ் மீது நல்ல பற்றுள்ளவராக இருந்து வந்துள்ளார் உமர். உமர் மறைந்தது, 2006 ஆம் ஆண்டு ஜூலை 12. மண்ணில் மறைந்தாலும் தமிழ்க் கணினி உலகம் இருக்கும் வரை பெருங்கொடையினை அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார், உமர்.

இணையத்தில் விரைவாக தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று உமர் எடுத்த முதல் முயற்சி தான் இன்று பல வகையான தமிழ் வலைப்பூ பதிவுகளுக்கும், தமிழ் கணினி தொழில் நுட்பத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை இணையப் பயன்பாட்டாளர்களாலும் தமிழ் இணைய அறிஞர்களாலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.

கணினியில் தமிழ் மொழி அதிவிரைவில் வளர்ச்சியடைவதற்கு உமர் தம்பி போன்றவர்களின் பங்களிப்பு மிக முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது. அதுபோல் உமரின் எழுத்துருக்கள், செயலிகள், கட்டுரைகள், கருத்துப் பரிமாற்றங்கள், அறிவுரைகள் அன்றும் இன்றும் தமிழ் இணையப் பயனார்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.

உமருக்கு உரிய அங்கீகாரம் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கிடைக்கப் பெற்றால் முதலில் மகிழ்ச்சி அடையப் போவது இணையத் தமிழ் மக்கள் தான்.

உமருக்கு அங்கீகாரம் கிடைக்கப்பட்டால், அது கணினித் தமிழில் சாதனைப் படைக்க எந்த அரசாங்கத்தின் உதவியின்றி தமிழுக்காக தன்னலமற்ற சேவைகள் செய்துவரும், செய்ய துடிக்கும் எத்தனையோ உமர் தம்பிகளை இவ்வுலகம் காணும். தமிழ் இணையத்தில் தனக்கேன்று தனித்துவத்துடன் திகழும், மென்மேலும் வளர்ச்சியடையும்.

நம் தாய்மொழி தமிழ்ச் செம்மொழியாக மட்டும் இல்லாமல், அதற்கு மேலும் இவ்வுலகில் பல அங்கீகாரங்களை பெறும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

அரசு உதவியின்றி தம் தாய்மொழி தமிழின் வளர்ச்சிக்கு பாடுபட்ட உமர் தம்பி போன்ற எண்ணற்ற தன்னார்வத் தமிழ் கணினி தொண்டர்களை கண்டறியப்பட வேண்டும், அவர்களுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

உமர் தம்பி பெயரில் விருதோ அல்லது உமர் தம்பி பெயரில் தமிழில் கணினி ஆய்வு செய்வோருக்கு கல்வி உதவித் தொகையோ அல்லது கணினித் தமிழ் ஆராய்ச்சி குழுவுக்கு பெயரோ அல்லது தமிழ்க் கணினி சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு துறைக்கு உமரின் பெயரையோ சூட்டினால், அது அவருக்கு செய்யும் கௌரவமாக இருக்கும்.

கோவையில் ஜீன் 23 முதல் தொடங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடைபெறவுள்ளது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் உமர் தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க செய்ய முத்தமிழறிர் ஆகிய நீங்கள் ஆணை பிறப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இணையக்கடலில் தமிழை மிகச் சுலபமாக பயணம் செய்ய உதவியவர்களில் முன்னணியில் இருந்த உமர் தம்பிக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகாரம் தர வேண்டும் என்பதே இன்று இணையத் தமிழர்களின் விலை மதிக்க முடியாத விருப்பமாக உள்ளது.

அப்படி ஓர் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றால், பெருமையடையப் போவது உமர் தம்பியல்ல... இணையத் தமிழே! இச்சாதனைக்கு வழிவகுத்திடுமாறு மீண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேற்கண்டவாறு தமுமுக தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Traffic violation: சவுதியில் வாகன ஓட்டுனரா நீங்கள்? கவனிக்கவும்.

சவூதி அரேபியவில் பணிபுரியம் நீங்கள் சொந்தமாக வாகனம் வைத்திருக்கிறீர்களா?
அல்லது வாகன ஓட்டுனரா?

நீங்கள் தெரிய வேண்டியவைகள் சில...

- எம். ஹூஸைன் கனி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

கடந்த சில தினங்களுக்கு முன் எனது அலுவலகத்தில் பணியாற்றும் சக பணியாளர்கள் சிலருக்கு ஒரே நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்கான அபராத தொகை விதிக்கப்பட்டு அலுவலக தொலைநகல் மற்றும் மின் அஞ்சல் முகவரிக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்று அதிர்ச்சி அடைந்தோம் காரணம் அந்த விதி மீறல் பற்றி அந்த வாகன ஓட்டுனருக்கு தெரிந்திருக்க வில்லை. அவர் வாகனத்தில் மிதமாகச் சென்றதாகச் சொன்னார் ஆனால் மெதுவாக (140 kmph க்கு மேல்) பறந்திருக்கிறார். அந்த வாகனம் அரசு துறைக்குச் சொந்தமான வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது ஆனாலும் விமுறைகளுக்குட்பட்டதல்லவா? உடனே துறையிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது துறைசார்ந்த பணிகளுக்கு வாகனங்களை பயன்படுத்து வோர் விதி முறைகளுக்குட்பட்டு வாகனங்களை ஓட்ட வேண்டும் மீறினால் அபராதத்தொகையை அவரது சம்பளத்திலிருந்து வெட்டப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உடனே நமது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் போக்குவரத்து கட்டுப்பாட்டு முறைகளை அதிநவீனமயமாக்கி உள்ளது அது போல் குற்றங்களுக்காக அபராதமும் கடுமையாக்கப்பட்டுள்ளது அது பற்றிய ஒரு பார்வை.

சவூதி அரேபியாவின் முக்கிய 8 நகரங்கள் போக்குவரத்து கண்கானிப்பு முறைகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது அதன் மூலம் போக்குவரத்து குற்றங்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில் அதிக வேகம் செல்லும் வாகனங்கள் அதி நவீன டிஜிட்டல் கேமராக்கள் மூலம் நீங்கள் எவ்வளவு விரைவாகச் சென்றாலும் உங்களது வாகனம் / நீங்கள் பயணித்த சாலை / தேதி- நேரம் ஆகியவைகளுடன் புகைப்படம் எடுக்கப்பட்டு உடனடியாக தேசிய தகவல் பாதுகாப்பு மைய கணனியில் தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்டு அந்த வாகன உரிமையாளரின் பெயரில் அபராத தொகை கணக்கீடு ‍செய்து உடனே அவரது கண்கில் அமலுக்கு வந்து விடும். அந்த அபராத தொகையை பதிவு செய்த ஒரு மாதத்திற்குள் கட்டத் தவறினால் அடுத்த மாதம் அபராத தண்டத் தொகையில் எது அதிகமோ அவை உங்களது கணக்கில் பதிவாகி விடும். அந்த தண்டத் தொகையை நீங்கள் கட்டியே தீர வேண்டும்.

நகரின் பிரதான சாலைகளில் வாகனங்களில் பறக்கும் நீங்கள் உங்கள் கண் முன்னே போக்குவரத்து காவலர் இல்லையே என்ற இறுமாப்பில் நீங்கள் வாகனங்களில் பறந்தால் அபராதம் நிச்சயம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நகர் முழுதும் SAHER என்று சொல்லக்கூடிய automated traffic control and management system uses the technology of digital cameras network linked with the National Information Center of Ministry of Interior தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அது போல் சிக்னல்களை (சிகப்பு விளக்கை) கடந்து செல்லும் வாகனங்களும் மேலே குறிப்பிட்டுள்ளது போல் வாகனத்தின் முன் பின் பக்கங்கள் மற்றும் ஓட்டுனரின் முகப்படத்துடன் புகைப்படம் எடுக்கப்பட்டு அபராதம் பதிவாகி விடும்.

இதில் முக்கியமாக தெரிய வேண்டிய விபரம்:

நகர் முழுதும் செயற்கைகோள் உதவியுடன் அதி நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது போக்குவரத்து விதி முறைகளை மீறுபவர் யாரும் தப்ப முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாகன பதிவு எண் பிளேட்டுகளில் "சிப்" பயன்படுத்தப்பட்டுள்ளது அவை எந்த நிலையிலும் காட்டிக் கொடுத்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும். தாங்கள் பணியாற்றும் கம்பெனியில் மக்கா செல்வதாக வாகனத்தை எடுத்து நீங்கள் ஜித்தா சென்று சுற்றித்திரிந்தால் மாட்டிக் கொள்வீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். வாகனங்கள் திருடு போய்விட்டால் அல்லது கடத்தப்படட்டால் GPS தொழில்நுட்பமுறையில் கண்டுபிடிப்பதற்காக இந்த நுட்பம் கையாளப்பட்டுள்ளது.

வாகன ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள அனைவரும் உங்களது தொடர்பு தகவல்களை உடனே பதிவு செய்து கொள்ளுங்கள் அதன் மூலம் உங்களுக்குத் தெரியமல் நடந்து விடும் அபராதம் மற்றும் தண்டத் தொகையிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். தகவல்களை பதிவு செய்துள்ளவர்கள் தங்களது விபரங்களை அறிய 01 2928888 என்ற எண்னுக்கு அழைத்து தெரிந்து கொள்ளவும் அல்லது SMS மூலம் உங்களது இக்காம எண்னை (உ.ம்) *56*1234567890* to STC 88993 or Mobily 625555 என்ற எண்னுக்கு SMS செய்து தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் தகவல்களை பதிவு செய்யவில்லையா? SMS மூலம் பதிவு செய்யது கொள்ளுங்கள் ஒரு SMS க்கு 2.5 சவுதி ரியால் கட்டணம்.

உங்கள் இக்காம எண்*வாகன ஓட்டுனர் உரிமம் காலாவதி நாள் *வாகன பதிவு (இஸ்திமாரா) காலாவதி நாள் * ஸ்பேஸ் இல்லாமல் காலாவதி தேதிகளை ஹிஜ்ரி வருட கணக்கில் குறிப்பிடவும் STC 888993 or Mobily 623333 என்ற எண்னுக்கு SMS செய்து பதிவு செய்து கொள்ளவும் SMS அனுப்பிய 24 மணி நேரத்திற்குள் உங்களுக்கு பதிவு செய்த தகவல் கிடைக்கப் பெறுவீர்கள்.

வாடகை வாகனத்தை எடுத்துச் செல்கிறீர்களா? அதற்கும் இதே விதி பொருந்தும் விதி முகைளை மீறி உங்கள் வாகனம் சென்ற அடுத்த வினாடியே வாடகை வாகன நிறுவனத்திற்கு SMS மற்றும் மின் அஞ்சல் மூலம் அபராத தகவல் சென்று விடும் அதற்கு நீங்களே பொருப்புதாரி என்பதை மறக்க வேண்டாம்.

கம்பெனி மற்றும் வீடுகளில் வாகனம் ஓட்டுபவர்களே உங்களின் மேலான கவனத்திற்கு!
ஒரு வீட்டில் / கம்பெனியில் பல வாகனங்கள் இருக்கக்கூடும் பல ஓட்டுனர்கள் சில நேரங்களில் வகனங்களை மாற்றி எடுத்து பயன்படுத்துவார்கள் அபராத தொகை வாகனத்தின் உரிமையாளர் பெயரில் வந்து விடும் அந்த தகவல்கள் உங்கள் கவனத்திற்கு வர காலதாமதம் ஆகலாம் அதனால் தண்டத் தொகை செலுத்த நேரிடும் தவறு செய்தது யார் என்று உங்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளன ஆகவே பல பேர் பயன்படுத்தும் வாகனம் என்றால் ஒவ்வொரு மாதமும் அட்டவனை போட்டு நீங்கள் வாகனத்தை எடுக்கும் தேதி மற்றும் நேரத்தை குறித்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு சரியாக மொழி தெரியாத காரணத்தால் தெளிவாக பேசி விளக்கத் தெரியாமலிருக்கலாம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

நகரின் முக்கிய சாலைகளில் வேகத்தின் விகிதம் வரையறுக்கப்பட்டுள்ளது அவைகள் முறையே 60, 70, 80 மற்றும் 120 kmph என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியாத்தில் நான்கு வழி விரைவுச் சாலையான King Fahad Express high way யிலும் ஒரே சாலையில் ஒவ்வொரு வழிக்கும் 120, 80, 60 என விதி உள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.

சாலையில் வாகனத்தை ‍செலுத்தும் முன் அந்தச் சாலையின் விதிமுறைகளை பின் பற்றிச் செல்வது உங்களுக்கும் உங்களை நேசிக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் உங்களைச் சார்ந்த சமுதாயத்திற்கும் நலம் பயக்கும்.

வல்ல ரஹ்மான் உங்கள் பயணத்தை இனிமையானதாக்கிட துவாச் செய்கிறேன்.