.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, April 30, 2007

இணையத்தில் ஆட்டம் போடும் பார்ப்பணர்கள்.

நவீன தொழில் நுட்பங்களையும் எருவாக்கி, தன் கோர முகங்களை பூமியைப் பொத்துக் கொண்டு காட்டுகிறது என்பதுதான் உண்மை.

நவீன தொழில் நுட்பங்கள் தலை எடுத்தால் பழைமைக் கோட்டைகள் தவிடு பொடியாகி விடும் என்று பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு. ஆனால் பார்ப்பனியம் என்னும் பார்த்தீனியம் நவீன தொழில் நுட்பங்களையும் எருவாக்கி, தன் கோர முகங்களை பூமியைப் பொத்துக் கொண்டு காட்டுகிறது என்பதுதான் உண்மை.

நமது தொலைக்காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம். அது அறிவியலின், விஞ்ஞானத்தின் அரிய நன்கொடை தானே? ஆனால் அந்த அறிவியல் கருவி எவற்றிற்குப் பயன்படுகிறது?மூடத்தனத்துக்கும், முற்றி அழுகிப் போன பார்ப்பனீயச் சமாச்சாரங்களுக்கும் தானே மகுடி வாசிக்கின்றன?
எத்தனையோ நூறு கல் தொலைவில் நடக்கும் ஒரு கோயில் குட முழுக்கில் பார்ப்பான் ஓதும் சமஸ்கிருத மந்திரங்களை எவ்வளவுத் தொழில் நுட்பத்துடன் ஒளி பரப்புகிறார்கள்.அதே நேரத்தில் திராவிடர் கழகமோ, பகுத்தறிவாளர் கழகமோ ஒரு அறிவியல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யட்டும்; மந்திரமல்ல - எல்லாமே தந்திரம்தான் என்கிற செயல் விளக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யட்டும்; இந்த அறிவியல் தொலைக்காட்சிகள் அந்தப் பக்கமே தலை வைத்துப் படுப்பதுண்டா?
அறிவு நாணயமற்ற கேவலங்களை மக்கள் மத்தியில் ஆரியம் உற்பத்தி செய்கிறது. ஒழுக்கக் கேட்டை வளர்ப்பதுதான் அதன் உதிரத்தில் உதிர்த்திருக்கும் குணாம்சமாகும்.ஏடுகள் என்கிற ஊடகங்களை இந்தக் கூட்டம் தன் நுனி விரல்களில் வைத்திருந்தது. இப்பொழுது இளம் தமிழர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தி வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்கள். ஊடகத்தின் முதலாளிகள் பார்ப்பனர்களாக இருந்தும் எழுத்துத் துறையில் நம் தமிழர்கள் தங்கள் கை வரிசை களைக் காட்ட ஆரம்பித்தவுடன் பார்ப்பனர்கள் நவீன களமான இணைய தளத்திற்கு (WebSite) தாவித் குவித்து விட்டனர்.
அமெரிக்காவில், அர்ஜன்டைனாவில் பணியாற்றும் கணினி தொழில் நுட்பம் தெரிந்த பார்ப்பனர்கள்கூட இத்தகைய இணைய தளங்களில் புகுந்து விளை யாடுகிறார்கள். தங்கள் ஆத்திரச் சாக்கடைகளை வெளியிடும் சாளரங்களாக இந்த இணையதளங்களைப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.திராவிடர் இயக்கம் தந்தை பெரியார், தமிழர் தலை வர் வீரமணி, டாக்டர் கலைஞர், தமிழின உணர்வு, பகுத்தறிவுச் சித்தாந்தங்கள்தான் இவர்களின் எதிர்ப்பு இலக்கு.அறிவார்ந்த முறையில் விவாதித்தால்கூட வரவேற்கலாம். எல்லாம் நாலாந்தர நடை, மலத்தில் தோய்த்த சிந்தனைகள் - இவற்றை வழிய வழிய திறந்து விடுகிறார்கள்.Blog Spot என்னும் இணையதளம் மூலமாக உலக அளவில் தமிழிலேயே தங்கள் கழிசடைச் சரக்குகளைக் கொட்டித் தீர்க்கிறார்கள். எந்த அளவுக்கு கீழ்த்தரத்தின் நாற்றத்தைச் சுவைக்கிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு.தலைப்பு: மாமா பெரியாரும் - சிலையான சிகாமணிகளும் என்பதாகும். பாருங்கள்.``கண்ணகியுடன் விளையாடிய ஜெயா, சொந்த செலவில் உலகப் பொது மறை என்று கூறயியலாத ஒரு கருமாந்திரத்தை இயற்றித் தொலைத்த வள்ளுவருக்குச் சிலை வைத்து பராமரித்து வரும் கருணாநிதி என தமிழ்நாட்டில் பசி, பட்டினி, வறுமை என முக்கிய பிரச்சினைகள் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி முன்னிறுத்தப்பட்டு, சற்று அடங்கிக் கிடந்த சிலைகள் மறுபடியும் தங்கள் அட்டகாசத்தை துவக்கியிருக் கின்றன’’ என்றெல்லாம் எழுதி வருகின்றன.
திருவள்ளுவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கருமாந்திரத்தை எழுதியவர் என்று குறிப்பிடுகின்றனர் - இன்னும் எழுத்தால் எழுதத் தகுதியற்ற கருமாந்திரங்கள் ஏராளம் உண்டு.இப்பொழுதுதான் நம் தோழர்களும் பதிலடி கொடுக்கக் களத்தில் குதித்து இருக்கின்றனர். விடாத கருப்பாகத் தொடர்ந்து கொண்டும் இருக்கின்றன.ஊடகங்களில் ஒரு தலைகீழ் புரட்சி ஏற்பட்டு வருகிறது. நமது எழுத்தாளர்கள் காகிதங்களில் வடிப்பதை இடம் மாற்றி இணைய தளங்களில் வீறுடன் நுழைந்தாக வேண்டும்.
விஞ்ஞான வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாவிட்டால் நாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுவோம்.பார்ப்பனர்களின் பித்தலாட்டம் எந்த எல்லைக்குச் சென்றிருக்கிறது? பார்ப்பனர்களின் காமக் களியாட்ட மைதானமான இந்து மதம் பற்றியும், அதன் செல்லரித்துப் போன `சித்தாந்தங்களையும்’ உரச ஆரம்பித்தால், அப்படி எழுதிடும் எழுத்தாளரின் பெயரில் ஒரே ஒரு எழுத்து மாற்றி முன்பு எழுதிய கருத்துகளுக்கு முரணாக பல கட்டுரைகளை வெளியாடுகிறார்கள். படிக்கின்றவர்கள் இந்த இருவரும் ஒருவர்தான் என்று குழம்பிப் போய், முதலில் இப்படி சொன்னவர் - இப்படி மாறுகிறார் - இவர் திருந்தி விட்டார் - பார்ப்பனீயத்துக் கிடத்திட்ட வெற்றி என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக் கிட முயலுகிறார்கள் - பார்ப்பனர்களின் பித்தலாட் டத்துக்கு அயோக்கியத்தனத்துக்கு, வஞ்சகத்திற்கு எந்த எல்லையும் கிடையாது போலும்! வஞ்சகநாதா போற்றி வன்கணநாதா போற்றிஎன்று ஆரியத்தைப் பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயையில் படம் பிடித்தாரே - அந்த ஆரியம் ஒரு துரும்பின் மூக்கு முனை அளவுகூட இன்னும் திருந்திய பாடில்லை என்பதற்கு அடையாளமே இந்த இணையதளப் பித்தலாட்டங்களில் அவர்கள் நீராடும் சாக்கடைத்தனமாகும்.இதற்கெல்லாம் இணையதளம் பயன்படும் என்று இதனை உருவாக்கியவர்கள் கனவிலும் நினைத் திருக்க மாட்டார்கள்.
உலகத்திலேயே கிரிமினலாக இருப்பதற்கென்றே பிறவி எடுத்ததாக நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது - அதுதான் பார்ப்பனர்கள் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்லவா - அதனால்தான் அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். குற்றப் பார்ப்பரையினர் பார்ப்பனர்கள் என்று ஒரு முறை பெரியார் சொன்னதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

இக்கட்டுரை ''விடுதலை'' தினசரியில் பிரசுரமானது.
http://viduthalai.com/20070428/snews01.htm

Tuesday, April 24, 2007

நீதியின் குரல்

நீதியின் குரல் இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒலிக்கும்...