.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, May 26, 2009

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு: ம.ம.க வ‍ை தொடர்ந்து பா.ம.கவும் குற்றச்சாட்டு

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு
மனிதநேய மக்கள் கட்சியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து
பா.ம.க செயல்முறை விளக்கத்துடன் குற்றச்சாட்டு .


நடந்து முடிந்த 15வது மக்களவை தேர்தலின்போது வாக்கு பதிவு இயந்திரத்தில் ஆளும்வர்கத்தினரால் தொழில்நுட்ப முறைகேடு செய்து ஜனநாயகப்படுகொலை நடந்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்ததோடு வரும் காலங்களில் இது போன்ற முறைகேடுகளை தவிர்க ஓட்டுச்சீட்டு முறையே வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது அதனைத் தொடர்ந்து.

25-05 அன்று பா.ம.க. தலைமை பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் பா.ம.க. தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் தோல்விக்கு முக்கிய காரணம் ஓட்டுப்பதிவு எந்திரங்களில் செய்யப்பட்ட தொழில்நுட்ப முறைகேடுகளே என்று குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக செயல்முறை விளக்கமும் செய்து காட்டப்பட்டது. சிறிய அளவில் தயாரிக்கப்பட்ட ஒரு மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தில் 4 சின்னங்கள் பொருத்தப்பட்டது. அதில் ஒரு சின்னத்துக்கு 20 ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் அதை எண்ணி பார்க்கும் போது பதிவு செய்யப்பட்ட சின்னத்துக்கு 12 வாக்குகளும், வேறொரு சின்னத்துக்கு 8 வாக்குகளும் பதிவாகி இருந்ததை பொதுக்குழுவில் காட்டினார்கள்.

இதேபோல் கம்ப்யூட்டர் முறையில் பல முறைகேடுகளை செய்ய முடியும் என்று செயல்முறை விளக்கத்தை சுட்டிக்காட்டி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

அதைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* ஆளும் கட்சியின் பணப்பலம், அதிகார துஷ்பிர யோகம், அதிக அளவில் நடந்தது கண்டிக்கத்தக்கது.

* தோல்வியை கண்டு பா.ம.க. சோர்ந்துவிடாது. இதை வெற்றிக்கு படிக்கட்டுகளாக மாற்றுவோம்.

* வாக்கு சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

* நடத்தப்பட்டுள்ள முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு ஏற்க வேண்டும். முறைகேடுகளுக்கு இடமில்லாத வகையில் வாக்குப்பதிவு செய்ய மாற்று வழிமுறைகளை ஆராய வேண்டும்.

* பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

* இலங்கையில் இனப்படுகொலை துரோகத்துக்கு இந்திய அரசு துணைப்போவதை கண்டிக்கிறோம் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அன்புமணி, வேலு, ஏ.கே.மூர்த்தி, காடுவெட்டி குரு, மாவட்ட செயலாளர்கள் கே.என். அசேகர், ஜெயராமன், தொழிற்சங்க செயலாளர் ஞானசேகரன் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments: