.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, May 20, 2007

இராமன் பாலம் புளுகு இனி எடுபடாது!

இராமன் பாலம் புளுகு இனி எடுபடாது!
சேதுகால்வாயில் கப்பலைக் கலைஞர் தொடங்கி வைக்கத்தான் போகிறார்சென்னை பொதுக்கூட்டத்தில் கீ வீரமணி ஆதாரத்துடன் விளக்கம்
சென்னை, மே 19- சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நிறை வேற்றி முதல் கப்பலை கலைஞர் அவர்கள் தொடங்கி வைக்கத்தான் போகிறார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சேது சமுத்திர திட்டம் பாதுகாப்புக் குழு அமைப்பின் சார்பில் 16.5.2007 அன்று சென்னை - அமைந்தகரை - புல்லாரெட்டி அவென்யூவில் ``சேது சமுத்திர திட்டமும் - ராமன் பாலமும்’’ என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
உலகில் எகிப்து நாட்டில் நைல் நதியில் கட்டப்பட்ட வளைவுப் பாலம் (கி.மு. 2650 ஆவணப்படி) முதன் முதலாக மெனிஸ் மன்னரால் கட்டப் பட்ட பாலம். மனிதன் முதன் முதலில்கட்டிய பாலம்இந்த ஆதாரத்தை எதிலி ருந்து நாங்கள் எடுத்துச் சொல் லுகிறோம். என்றால் சிவில் எஞ்சினியரிங் துறையிலே The History of the Bridges என்ற பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட தகவல் உங்கள் முன் னாலே வைக்கப்படுகிறது.

கி.மு. 2650 ஆண்டுகள் என்று சொன்னால் இப்போதைய கணக்குப்படி நீங்கள் சேர்த்துப் பார்த்தால் இந்த முதல் பாலம் கட்டப்பட்டது வெறும் 4657 ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்டது. இதுதான் மனிதன் முதன் முதலாகப் பாலம் கட்ட ஆரம்பித்ததே.

அணில் பாலம் கட்டியது என்று அவர்கள் சொன்னால், அணில் முதுகில் இருக்கிற கோடுகள் பற்றியும் கேள்விகள் எழத்தான் செய்யும். அது வேறு செய்தி. ஆனால், கட்டிய பாலம் என்பது அறிவியல் பூர்வமான செய்தி. நம்பிக்கை என்ற அடிப்படையில் அல்ல. அறிவியல், கட்டடவியல். அந்த அடிப்படையிலே கட்டப் பட்ட பாலம். கண் முன்னால் காணக்கூடிய பாலம். சரி இது முதல் பாலம் எகிப்து நாட்டிலே.இரண்டாவது பாலம் எப்பொழுது கட்டப்பட்டது?இரண்டாவது பாலம் ஆசிய நாட்டிலே எங்கே கட் டப்பட்டது என்ற கேள்விக்கு விடை என்னவென்றால் சீனா வில் பீஜிங்குக்குத் தெற்கே கற்களால் கட்டப்பட்ட சாவ் சோ பாலம். இது எப்பொழுது அங்கே கட்டப்பட்டதென்றால் (கி.பி. 600) 1407 ஆண்டு களுக்கு முன்னால் கட்டப் பட்டது. (இதன் நீளம் 37.6 மீட்டர். உயரம் 7.2 மீட்டர். சாலை அகலம் 9 மீட்டர்.)இந்தியாவில் எப்பொழுதுபாலம் கட்டப்பட்டது? அதேபோல இந்தியாவில் அய்தராபாத்தில் முசி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புராதன புல் பாலம்தான் மிகப் பழை மையான இந்தியப் பாலம்.

இது எப்பொழுது கட்டப் பட்டதென்றால் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 400 ஆண்டுகளுக்கு முன்னால் தான் கட்டப்பட்டது. இவ்வளவுதான் பாலம். அப்புறம் எதற்கு ஓலம்? தந்தை பெரியார் அவர்கள் எழுதி யதை `முரசொலி’யிலே கலைஞர் அவர்கள் எடுத்துப் போட் டிருக்கின்றார்கள். தந்தை பெரியார் அவர்கள் `இராமாயண ஆராய்ச்சி’ என்ற நூலில் எழுதியிருக்கின்றார்.

இராமாயணம்நடந்த கதையா?``இராமாயணம் நடந்த கதையா? வால்மீகியின் கற் பனையில் உதித்த கதை’’ என்று சொன்னார். சகோதரர் சுப. வீரபாண்டியன் அவர்கள் சொன்ன மாதிரி ராஜாஜியே இந்தக் கருத்தைத்தான் கூறியி ருக்கின்றார். வால்மீகி இராமாயணம் கற்பனை. தந்தை பெரி யார் அவர்கள் இராமாயணத் தைப்பற்றி சொன்ன செய்தி.`புராணப் புளுகர்கள் மத வெறியர்கள் ராமாயணம் எப்போது நடந்தது என்று புளுகுகிறார்கள். திரேதா யுகத்தில் நடந்தது என்று எழுதி வைத்திருக்கிறார்கள். திரேதா யுகம் என்பது எத்தனை ஆண்டுகளை உள்ளடக்கியது? (இராமயாணப் பிரசங்கிகள் என்ன சொல்லுகிறார்கள்? திரேதாயுகத்தில் நடந்தது என்று சொல்லுகிறார்கள்).
திரேதா யுகம் என்பது எத்தனை ஆண்டுகளை உள்ளடக்கிய யுகம்? 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள் கொண்ட யுகமாம். அந்தக் கணக்கிலும் ஏறுக்கு மாறாக எக்குத்தப்பா புராணப் புளுகர்கள் கற்பனையை வானத்தை முட்டுமளவு விரித்-திருப்பதை பெரியார் கீழ்க்-கண்ட கேள்வி மூலம் அம்ப லப்படுத்தியிருக்கிறார். ராமா யணம் திரேதா யுகத்தில் நடந்தது என்கிறீர்கள். அந்தத் திரேதாயுகத்திற்கு 13 லட்சம் ஆண்டுகள் என்கிறீர்கள்; ஆனால், ராமாயணம் நடந்த போது ராவணன் 50 லட்சம் ஆண்டுகள் ஆட்சி நடத்தி னான், அது என்ன கணக்கு என்று பெரியார் கேட்கிறார்.

திரேதாயுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள் என்று சொல்லுகின்றார்கள். ராமர் பாலம் 17 லட்சத்திற்கு முன்னால் இருந்தது என்று கதை அளக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அண்டப்புளுகு.
இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லைபொதுவாக இந்தப் புளுகும் கந்தப் புராணத்திலும் இல்லை என்று சொல்லிச் சொல்லித் தான் பழக்கம். கந்தப் புராணமே புளுகுக்கே அத்தாரிட்டி என்பதால்தான் அந்தப் பழ மொழி வந்திருக்கிறது போலி ருக்கிறது. ஆகவே அவர்களைப் பொறுத்த வரையிலே இதை யும் தாண்டிப் புளுகியிருக்கி றார்கள். திரேதா யுகமோ 13 லட்சம். இராமாயணமே அதில் ஒரு பகுதி என்றால், இராமாயண கதையில் ராவ ணன் 50 லட்சம் ஆண்டுகள் ஆட்சி நடத்தினான் என்றால் இது அறிவுக்குப் பொருத்தமா? அப்புறம் ஏன் இராமன் பாலம், 17 லட்சம் ஆண்டுக ளுக்கு முன் கட்டப்பட்டது என்று புளுக மாட்டான்? ஆகவே இந்த மக்கள் சிந்திக்க மாட்டார்கள் என்று நினைத்து, இப்படிப்பட்ட கற்பனை களை சொல்லிக் கொண் டிருக்கின்றார்கள்.
தந்தை பெரியார்பாதுகாத்து வைத்தார்அது மட்டுமல்ல, இந்த நூல் தந்தை பெரியார் அவர் களால் பாதுகாத்து வைக்கப் பட்ட ஒரு அற்புதமான நூல். 1928-லே வால்மீகி இராமா யணத்தை சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்த்த சி.ஆர். சீனிவாச அய்யங்கார் எழுதிய ``இதர இராமாய ணங்கள்’’ என்பது இந்த நூலினுடைய பெயர். இதை புரட்டினால் அப்ப டியே ஏடு, ஏடாக உடைந்து போகும். வால்மீகி இராமா யணம், துளசிதாஸ் இராமாய ணம், கம்ப இராமாயணம் என்ற இப்படித்தான் இராமா யணத்தைப் பற்றிக் கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் இராமாயணத்தைப்பற்றி படிக்கின்ற, பிரசங்கம் செய் கிறவர்களுக்கே தெரியாத அள வுக்குப் படித்தவர்கள் நாங்கள். திராவிட இயக்கத்தவர்கள்.``இதர இராமாயணங்கள்’’ஆகவே எங்களுக்குத் தெளி வாகத் தெரியும். ``இதர இராமா யணங்கள்’’ என்று சொல்லக் கூடிய இந்த நூலிலே யவன இராமாயணம் இருக்கிறது. கிறிஸ்தவ இராமாயணம் உண்டு. ரோமானியர் இராமாயணம் உண்டு. அதேபோல பவுத்த இராமாயணம் உண்டு. இவை இத்தனையும் இதிலே தொகுக்கப்பட்டிருக் கிறது. இந்த நூலில் 75 ஆம் பக்கத்தில் பவுத்த இராமாய ணம் இருக்கிறது. இது ஒரு கற்பனை என்பதற்கு அடையாளத்திற்காக சொல்லு கின்றேன். எனவே இராமர் பாலம் என்று கூறுவதற்கு அர்த்தமே இல்லை. வெறும் நம்பிக்கை என்று சொல்லி இந்த மக்களை மடையர்களாக ஆக்கலாம் என்று நினைக்காதீர்கள்.

இராமர் பாலம் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் கட் டப்பட்டது என்று சொன் னால் மனிதன் காட்டுமிராண்டி காலத்தில்கூட அப்படி இருந்திருக்க முடியாது. பவுத்த இராமாயணத்தில்ஒரு கருத்துபவுத்த இராமாயணத்திலே ஒரு கருத்து இருக்கிற பகுதியை எடுத்துச் சொல்லுகின் றேன். இந்த நூல் 1928-லே `சுதேசமித்திரன்’ பதிப்பு அச் சிட்ட நூல். இந்த நூலிலிருந்து எடுத்துச் சொல்லுகின்றோம்.``முன்னொரு காலத்தில் காசி தேசத்தை ஆண்டு வந்த தசரத சக்ரவர்த்தி தீமைகளை விளக்கி நன்மை போன்ற ராஜ்ய பரி பாலனம் செய்துவந்தார். அவனுக்கு பதினாயிரம் பத்தினிகள் இங்கே சுப. வீரபாண்டியன் அவர்கள்கூட சொன்னார்கள். தசரதனுக்கு ஆயிரம் மனைவிகள். ராமனுக்கு ஒரு மனைவி’’ (எத்தனை புரட்டுகள் என்பதைப் பற்றிச் சொன் னார்கள்). தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள் என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். தந்தை பெரியார் அவர்கள் அந்த காலத்திலும் ஒவ்வொரு கூட் டத்திலும் நகைச்சுவையோடு சொல்லுவார். அந்த காலத்தில் மக்கள் தொகை இருபதாயிரம் இருந்தாலே ஒரு முனிசிபாலிட்டி, அப்படியானால், தசரதன் மூன்று முனிசிபாலிட்டி வைத் திருந்திருக்கிறான். ஒரு மனைவியை சந்தித்து மீண்டும் அந்த மனைவியை சந்திப்பதற்கு எத்தனை வருடங் கள் ஆகும் என்று பொதுக் கூட்டத்தில் கேள்வி கேட்பார்.

இராமனுடைய தங்கைசீதை``தசரதனுக்கு பதினாயிரம் பத்தினிகள். அவர்களில் மூத்த வளும், ராணியுமாய் இருந்த வள் இரண்டு புத்திரர்களை யும், ஒரு புத்திரியையும் பெற்றாள் (இரண்டு ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை). மூத்த குமாரனுக்கு இராம பண்டிதர் என்றும், இளையவனுக்கு லட்சுமணன் என்றும், குமாரிக்கு சீதை என்றும் பெயரிட்டார்கள். எனவே, இந்த இராமாயணப்படி இராமனுடைய மனைவி அல்ல சீதை. இந்த கதைப்படி சீதை ராமனுடைய தங்கை. அதுதான் பவுத்த இராமாயணம். ஆகவே, நீங்கள் இப்படி பிரச்சாரம் செய்ய ஆரம்பித் தால் இராமாயணத்தை நாங் கள் தெருத் தெருவாக கிழித் தெறியக் கூடிய சூழ்நிலையை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்று பொருள் (பலத்த கைதட்டல்). ராமன் பாலம் பிரச்சினையை சுருட்டி வைத்துவிடுங்கள்ஆகவேதான் சொல்லுகிறோம், இந்த இராமன் பாலம் பிரச்சினையை சுருட்டி வைத்து விடுங்கள். இனிமேல் இராமன் பாலம் பிரச்சினையே கிடை யாது. கடலில், மணல் திட்டுகள் தான் இருக்கின்றன. நாசாவி லேயே சொல்லிவிட்டார்கள் என்று சொல்லுகிறார்கள். வரலாற்றை மாற்றியவர்கள்நாசாவிலே என்ன சொல்லி யிருக்கின்றார்கள்? இணைய தளத்திலே ஒரு கற்பனையான செய்தியை உருவாக்கினர். ஆரியர்கள் வெளியே இருந்து வந்தவர்கள். மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரிகத்தில் திராவிடர்கள் இருந்தார்கள். அவர்கள் காளை மாட்டை வளர்த் தார்கள். திராவிடர்களுடைய சின்னமான காளை மாட்டு சின்னத்தையே மாற்றி ஆரியர் களுடைய குதிரையை சின்ன மாக வைத்து வரலாற்றையே மாற்றி விட்டார்கள். அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் ஆளைப் பிடித்து வரலாற்றையே மாற்றிக் காட்டியவர்கள். அவர்கள் காளை மாட்டு சின்னத்தை மாற்றி குதிரை சின்னமாக மாற்றியவர்கள்.

நாங்கள் வெளியிட்டிருக் கின்ற `சேது சமுத்திர திட்டமும் - ராமன் பாலமும்’ என்ற நூலில் ஒரு செய்தியை வெளி யிட்டிருக்கின்றோம்.`எதுதான் நிஜம்?’பக்கம் 23 இல் `எதுதான் நிஜம்?’ என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருக் கின்றோம். அய்.நா.,வின் முன் னாள் ஆலோசகர், கடலியலா ளர் மறவன் புலவு க. சச்சிதானந்தன் அவர்கள் இந்த ஆதம் பாலத்தைப்பற்றி ஒரு அற்புத மான கருத்தை வெளியிட்டார்கள். எப்படி கடலில் திட்டுகள் உருவாயின?``ஆற்று முகத்துவாரத்தில் நீர் வரத்து குறைந்த காலங் களில் திட்டுகள் ஏற்படுவ துண்டு. ஆற்றில் கலந்து வரும் மணல் தங்கும் வேகத்தைவிட குறைவான நீரோட்ட வேகம் இருந்தால் இத்தகைய திட்டு கள் உருவாவது இயல்பு. இது போன்ற திட்டு ஆழம் குறைந்த கடல்களிலும் உருவாகின்றன. அலையின் வேகம், கடல் மேற் பரப்பு, நீரோட்ட வேகம் குறை வாக உள்ள நேரங்களில் மணல் தரையில் சேர்ந்து, திட்டுகளா கின்றன. வேகமாக நீர் ஓடி னாலோ, அலை அடித்தாலோ கலங்கியிருக்கின்ற சேற்று மணல் நீரோடு சேர்ந்தோடும். நீரின் வேகம் குறைவாக இருந் தால் சேற்று மணல் நிலத்தில் தங்கி திட்டுகளாகும்.

எதிரெதிர் நீரோட்ட விளைவுவங்காள விரிகுடாவில் கார்த்திகை - தை மாதங்களில் வலசை நீரோட்ட காலத்தில் கங்கையின் வெள்ளம் வண்ட லுடன் சேர்ந்து இலங்கைக் கரையோரம் வரை கலங்கி வரும். இடசை நீரோட்டக் காலத்தில் (வைகாசி, ஆவணி) அரபிக் கடலிலிருந்து வங்காள விரிகுடாவுக்கு பாக் நீரிணை வழியாக வண்டல் மணல் கலந்த நீர் பயணிக்கும், எதி ரெதிர் நீரோட்டங்கள் நிகழ் வதால், பாக் நீரிணையின் இரு எல்லைகளிலும் திட்டுகள் இருக்கின்றன.

எப்படி மனிதனால் மணல் திட்டு அமைக்க முடியும்?இவை வடக்கே கோடியக் கரையிலிருந்து தெற்கே யாழ்ப் பாணம் வரை நீளும் மணல் திட்டும், மேற்கே தனுஷ்கோடி யிலிருந்து கிழக்கே தலைமன் னார் வரை நீளும் மணல் திட்டும் ஆகும். அத்தகைய ஒரு திட்டு மனிதனால் அமைக்கப் பட்டவை என்று கூறுவது அதீத கற்பனை. புவியியல் நிகழ்வுகளுக்கு கற்பனை வள மூட்டிய உலகம் முழுவது முள்ள பல எடுத்துக்காட்டு களுள் இதுவும் ஒன்று. தெற்கே உள்ள மணல் திட்டுகளை ராமன் கட்டியிருந்தால், வடக்கே உள்ள மணல் திட்டுக்களை யார் கட்டியது?’’ என்று கேள்வி கேட்டுள்ளார்.சேதுகால்வாய் திட்டம் நிறைவேறிவிடுமோ?எனவே, சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் எங்கே நடந்து விடுமோ? நிறைவேறி விடுமோ? என்று நினைக்கின்ற காரணத்தால், பொய்யான, கற்பனையை அள்ளி விடுகின் றார்கள்.கடைசியாக ஒன்றை சொல் லுகின்றேன்.ஜெயலலிதா எங்கே முகத்தை வைத்துக் கொள்வார்?இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற் றக் கழகம் அதனுடைய பொதுச்செயலாளர் ஜெயல லிதா எதிர்க்கிறாரே, அவர்க ளுடைய தேர்தல் அறிக்கை யிலே என்ன சொல்லியிருக் கின்றார்கள். ஆதம் பாலம் மணல் திட்டு, பவளப் பாறை என்றுதானே எழுதியிருக்கின் றார்கள்.அதற்கு நீங்கள் இப்பொ ழுது பின் வாங்க முடியுமா? மறுப்பு உண்டா என்று கேள்வி கேட்டால், அவர்கள் எங்கே தங்களுடைய முகத்தை வைத்துக் கொள்வார்கள்?தமிழர்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்ஆகவே, நண்பர்களே, தமிழ் நாட்டை, தமிழர்களை ஏமாற் றலாம் என்று நினைக்காதீர்கள்.

மீண்டும் சொல்லுகின்றோம். இது பெரியார் பிறந்த மண். அண்ணா ஆண்ட மண். காமராசர் ஆண்ட மண். கலைஞர் ஆண்டு கொண்டிருக்கின்ற மண். உங்கள் புரட்டுக்கதை நடக்காதுஎனவே, உங்களுடைய புரட்டுக்கதை நடக்காது, நடக் காது. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறும் . சேது கால்வாயில் முதல் கப்பலை கலைஞர்தான் தொடங்கி வைப் பார்கள் (பலத்த கைதட்டல்).இன்னும் கேட்டால், எங் களுக்கு நன்றாக நினைவிருக் கிறது. பெரியார் - அண்ணா கப்பல்சென்னையிலே அன்னை மணியம்மையார் அவர்களை யும், எங்களையும் அழைத்து பூம்புகார் கப்பல் கழகத்தின் சார்பாக பெரியார் - அண்ணா கப்பலைத் தொடங்கினார்கள். அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக மக்கள் நலப் பணியாற்றிக் கொண்டு வருபவர் நம்முடைய கலைஞர் அவர்கள். எனவே, இந்த கப்பலையும் தொடங்கி வைக்கக் கூடிய காட்சியை நாம் பார்க்கத்தான் போகிறோம்.தாக்கும் தடந்தோள்களும் உண்டுஎத்தனை தடைகளை எதிர்க் கட்சியும், மதவாத அமைப் பினரும் உருவாக்கினாலும் தடைக்கற்கள் ஆயிரம் உண் டென்றாலும், அதைத் தாங்கும் தடந்தோள்கள் எங்களுக்கு உண்டு.தாங்கும் தடந்தோள்கள் மட்டுமல்ல, தாக்கும் தடந் தோள்களும் உண்டு, உண்டு என்று சொல்லி, வாய்ப் பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடை பெறுகிறேன்.- இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.
நன்றி; விடுதலை நாளிதழ் 19-05-2007

No comments: