.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, May 22, 2007

30 வயதுக்குட்பட்ட இளம்‍‍பெண்கள் வெளிநாட்டில் வேலைக்குச் செல்லத்தடை.

வெளிநாட்டில் வீட்டு வேலைக்குச் செல்லும் இளம்பெண்களுக்குத் தடை

புதுடில்லி, மே 21-- வெளிநாடு களுக்கு வீட்டு வேலைகளுக் கும் மருத்துவமனைகளில் நர்சுகளாக பணியாற்றவும் செல்லும் பெண்களின் எண் ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.ஆதாரப்பூர்வமாக ஒவ் வொரு ஆண்டும் 5.5 லட்சம் பேர் செல்வதாக தெரிவிக்கப் பட்டாலும், 10 லட்சம் பேர் வரை இதுபோன்ற பணி களுக்கு செல்கின்றனர்.

சில குறிப்பிட்ட நாடுகளில் இவர்கள் பாலியல் பலாத் காரத்துக்கு ஆட்படுகிறார்கள். குறைந்த சம்பளம் வாங்குவது, சரியான உணவு தர மறுப்பது, மனதளவில் துன்புறுத்தப்படு வது போன்றவற்றுக்கும் இவர் கள் ஆளாக்கப்படுகின்றனர். எனவே, 30 வயதுக்கு உட் பட்டோர் இதுபோன்ற வேலைகளுக்கு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்வதை மத்திய அரசு தடை செய்துள்ளது.

மத்திய அரசு தடை செய்துள்ள நாடுகள் வருமாறு:
சவுதி அரேபியா, பஹ்ரைன், அய்க்கிய அரபு எமிரேட், குவைத், கத்தார், ஓமன், மலேசியா, சிரியா, ஜோர்டான், ஆப்கானிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேசியா, ஈராக், புருனே, நைஜிரியா மற்றும் லிபியா.இந்த நாடுகளுக்கு இது போன்ற வேலைக்கு செல்லும் முன் குடியுரிமை அதிகாரி களின் ஒப்புதல் சான்றிதழ் பெறவேண்டும். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங் கப்படும்.

No comments: