.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, May 21, 2007

Aadam Bridge: ராமன் பாலம் ஆதாரம் இருந்தால் சொல்லுங்களேன்!

ஆதாரம் இருந்தால் சொல்லுங்களேன்!


'ராமன் பாலத்தை, நடந்து செல்வதற்காகப் பல நூற்றாண்டுகளுக்கு முன் பயனபடுத்தியுள்ளனர் என்பதை நிரூபிக்க வரலாற்று ஆதாரங்கள் நிறையவே உள்ளன. இந்தப் பாலம் இயற்கையாக உருவானதல்ல என்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர் (எஸ். பத்ரி நாராயணனும் வி. சீனிவாசனும்)''கோயங்கா குடும்பத்துக் கணக்குப் பிள்ளை ஒருவர் மேற்காணும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்.

அவரைப் போலவே 'செட்டில்மென்ட் இலாகாவில்'' பணியாற்றிய ஒருவரும் இதே கருத்துகளுக்குச் சொந்தக்காரர் எனத் தம் பேட்டியின் மூலம் அறிவிக்கிறார். ஆதாரங்களை அவிழ்த்துக் கொட்டிவிட வேண்டியதுதானே! உலகின் முதல் பாலம் நைல்நதியில் கட்டப்பட்டது என்றும் கட்டி 4,657 ஆண்டுகள் ஆகின்றன என்றும் தி.க தலைவர் வீரமணி ஆதாரத்துடன் கூறினாரே! 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுக்கு முன் ராமன் கட்டினானா? என்றும் கேட்டாரே! பதில் கூறுங்களேன்!


மனிதன் உருவாகி 65 ஆயிரம் ஆண்டுகள்தான் ஆகின்றன. அவன் பாலம் கட்டி 5 ஆயிரம் ஆண்டுகளுக்குள் ஆகிறது. எப்படி இலட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன என்கிறீர்கள்? ஆதாம் பாலம் (ராமன் பாலம்) இயற்கையில் உருவாகிய மணல்மேடுதான்! மனிதன் கட்டியது என்பதற்கு பத்ரிநாராயணன் வலுவாக ஏதும் கூறவில்லையே! ராமன் கட்டினான் எனக் கூறவில்லையே!

காளைமாட்டைக் குதிரையாக்கிய என்.எஸ். ராஜாராம் போன்றவரான சீனிவாசன்கூட மணல்மேடுகள் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பினால் மட்டுமே ஏற்படக் கூடும் - இங்கே அப்படி ஏற்படவில்லை என்கிறார்.

Satellite Picture
12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால்தான் இந்தியமாக்கடல் ஏற்பட்டது என்றும் ஜெர்மனியும் பிரான்சும் சேர்ந்த பரப்பளவுள்ள பீடபூமி அழிந்து போனது என்றும் பனி ஆராய்ச்சிக் கப்பலில் சென்ற அறிவியலாளர்கள் கூறியதைச் செய்தித்தாள்கள் 6.5.2007இல் வெளியிட்டனவே, படிக்க வில்லையா? (படிக்க: டெக்கான் கிரானிகிள்)ஆதாரப் பூச்சாண்டியும், ஆராய்ச்சியாளரின் கருத்துப் பூச்சாண்டியும் கருகிப் போய்விட்டதால் மல்கோத்ரா மாதிரி 'நம்பிக்கை' என்று உச்சாடனம் பண்ணுங்கள் அறிவியல் அடிப்படையில் பேசுவது மாதிரிப் 'பாவ்லா' பண்ணாதீர்கள்! புண்ணாக்கி விடுவோம்!

சேதுக்கடல் கால்வாய்த் திட்டத்தை எதிர்ப்பவர்கள் - எந்தப் பெயரால் எதிர்த்தாலும் - தேசத் துரோகிகள்தான்! யாராக இருந்தாலும்..! சங்கரமடத் தலைவர்களாக இருந்தாலும்! அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்!

நன்றி: விடுதலை நாளிதழ் 20-05-2007

No comments: