2002 இல் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு இதுவரை நிவாரண உதவி அளிக்காமல் இருப்பதா? குஜராத் மோடி (பா.ஜ.க.,) அரசுக்கு பன்னாட்டுப் பொது மன்னிப்பு அமைப்பு கண்டனம்
புதுடில்லி, மே 24- 'உலக மக்கள் உரிமை'' எனும் தலைப்பில் 2007 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் பன்னாட்டுப் பொது மன்னிப்பு அமைப்பு, குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் இன்னமும் வழங்கப் படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது.
குஜராத்தில் நிகழ்ந்த கொடுமை 2002 இல் ஏற்பட்ட கலவ ரத்தில் பல்லாஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்; பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள்; பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இதுவரை நிவாரணம் அளிக்கப்பட வில்லை. மறுவாழ்வு தரும் செயல்கள் மிகமிகத் தாமதமான முறையில் நடக்கின்றன. குஜராத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள்; வாடகைக்கு வீடுகூடக் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கான இடம் பெயர்ந்த முஸ்லிம் குடும்பங்கள் மனிதர்கள் வாழ முடியாத இடங்களில் வசிக்கின்றனர். அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ஒன்றிரண்டு வழக்குகள் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், முடிக்கப்பட்ட வழக்குகளில் 1,594 வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி மீண்டும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. கொடுஞ்செயல்களில் ஈடுபட்ட 41 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
பா.ஜ. கட்சிக்குத் தொடர்பு
'முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்த வன்முறையாளர்களுக்கும், அன்றைய ஆளுங் கட்சித் தலைவர்களுக்கும் இடையே நடந்த செல் பேசிப் பேச்சுகள் தொடர்பான ஆதாரங்கள் நிறையவே தற்போது கிடைத்துள்ளன. இந்து மத வெறிக் கட்சியான பா.ஜ. கட்சிக்கு இக்கலவரங்களில் உள்ள தொடர்புக்கு அத்தாட்சி கிடைத்துள்ளது.'' மேற்கண்டவாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மதக்காரர்கள், அதாவது இந்து மதக்காரர்கள் மட்டுமே இந்தியாவில் இருக்கவேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் குஜராத்தின் நரேந்திர மோடியின் பா.ஜ. கட்சி அரசு தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment