வாடகை மனைவி! இதயத்தை நொறுக்கும் ஒளிப்பதிவு ஆதாரங்களுடன்....
பதறச் செய்யும் ஒரு விஷக் கலாச்சாரம்.
பதறச் செய்யும் ஒரு விஷக் கலாச்சாரம்.
திருச்சி, உறையூரில் குறுக லான தெருவில் இருக்கிறது, அந்த பழங்காலத்து வீடு..!
துருப்பிடித்த இரும்பு கிரில் கதவு... திறக்கும்போதே கிறீச்சிடுகிறது. அதைக் கேட்டதுமே உள் வாசல் கதவு மெதுவாய் திறக்கிறது.
ஏற்கெனவே சொல்லி வைத்திருந் ததால் அதிகம் அறிமுகப் பேச்சு இல்லை!
''வாங்க, வணக்கம்!'' என நம்மையும், நம்மை கூட்டிச் சென்ற தொழிலதிபரையும் கைகூப்பி வரவேற்கிறார், அந்தக் குடும்பத் தலைவி. வீட்டுக்குள் நுழைந்த சில மைக்ரோ செகண்டுகளில் நம் கண்கள் உள்ளே அளவெடுக்கின்றன.
எப்போதோ அடித்த டிஸ்டம்பர் பெயின்ட் பாதிக்குமேல் உதிர்ந்து வெளிறிய சுவர்கள்... ஒரு ஹால், இரண்டு படுக்கையறை, சமையலறை..! ஹாலில் நான்கு ஃபைபர் சேர்கள் கிடக்க, புத்தம் புது எல்.ஜி. டி.வி--யில் ஏதோ பாடல் காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
டி.வி.டி. பிளேயர், ஃபிரிஜ், வாஷிங் மெஷின் என்று மேல்நடுத்தர வர்க்கத்துக்கான வசதிகளைக் கொண் டிருந்தாலும், அது ஒரு வாடகை வீடு என்பதை முன்கூட்டியே நாம் அறிந்திருக்கிறோம். 'வீடு மட்டு மல்ல... நம்மை வரவேற்கும் அந்தக் குடும்பத் தலைவியே ஒரு வாடகை மனைவிதான்...' எனும்போது வாசகர்களுக்கு எப்படி தீயை மிதித்தாற்போல் இருக்கும் என்று புரிகிறது. விவகாரத்தை முதலில் கேள்விப்பட்டபோது அதே உணர்வு தான் நமக்கும்.
'மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறுவதாக நாம் இதுவரை கேள்விப்பட்டிருந்த அதே விபரீத கலாசாரம், தமிழ்நாட்டுக் குள் காலடி வைத்துவிட்டது' என்று கோவிந்தன் சொன்னபோது, முதலில் நாம் நம்பவில்லை. ஆனால், துளிகூட ஜீரணிக்க முடியாவிட்டாலும் உண்மை அதுதான்!
''ஒரு மாதம், இரண்டு மாதம் என்று தொழில் நிமித்தமாக ஊர் மாறி, மாநிலம் மாறி தமிழகம் வரும் பல தொழிலதிபர்களுக்கு 'விழிப்பு உணர்வு' கூடிப் போயிருக்கிறது. ஹெச்.ஐ.வி-க்கு இரையாவதற்கோ, தினம் தினம் ஒரு பெண்ணைத் தேடிப் போய்க் கொண்டிருக்கவோ அவர்களில் பலருக்கு இஷ்டமில்லை. அதுவும் தவிர, அழகான ஒரு குடும்பத்துக்குத் தலைவியா இருக்கிற பெண்களை - கௌரவமான ஒரு உத்தியோகம் பார்க்கிற நடுத்தர வயது இல்லத்தரசிகளை - மொத்தமாக சில நாட்கள் தங்களுக்கே தங்களுக்கு என்று வைத்துக் கொள்வதில் அவர்களுக்குத் தனியாக ஒரு கிக் இருக்கிறது. பேசிய அமவுன்ட்டை கொடுத்துவிடுகிறார்கள். இவர்களைச் 'சேர்த்து'விடுபவர்களையும் 'புரோக் கர்' என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது...'' என்று கோவிந்தன் கொடுத்த அறிமுகத் திலேயே, நம் தலை தட்டா மாலை சுற்றியது.
கோவிந்தன்..?
திருச்சியில் 'லைட் டிரஸ்ட்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் இவர்.
''மலைப்பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வேலைத் திட்டங்களில் ஈடுபடுவதுதான் எனது டிரஸ்டின் வேலை. இதற்காக வேலூர் மலைப் பகுதிகளில், சத்தியமங்கலம் மலைப் பகுதிகளில் என தமிழகத்தின் பல்வேறு மலைப்பிரதேசங்களிலும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி களுக்கு அடிக்கடி சென்று வருவது என் வழக்கம். அப்படி ஒருமுறை காஞ்சிபுரத்துக்கு சென்றபோதுதான் 'வாடகை மனைவி' என்ற பயங்கரத்தை முதலில் கேள்விப்பட்டேன். கணவர், குழந்தைகள், மற்றும் புகுந்த வீட்டுச் சொந்தங்களுடன் ஒரு சராசரி இல்லத்தரசியாகவே வாழும் சில பெண்கள், மாதக் கணக்கில் வேறொருவருக்கு மனைவி யாகப் போய் வாழ்ந்துவிட்டு, கான்ட்ராக்ட்(?) காலம் முடிந்தவுடன் பழையபடி தங்கள் வீட்டுக்கே வந்து சேர்ந்து, வழக்கமான குடும்ப வாழ்க்கையைத் தொடர்கிறார்கள் என்பதை சாட்சிகளுடன் உறுதி செய்துகொண்டபோது, கிட்டத்தட்ட நடுங்கிப் போய்விட்டேன்!
இந்த பயங்கரத்தின் அடி ஆழம் வரைக்கும் சென்று பார்க்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் எனது டிரஸ்ட் ஊழியர்கள் சிலருடன் களத்தில் இறங்கினேன். முதலில் காஞ்சிபுரத்தில் ஒரு புரோக்கரின் உதவியுடன் ஒரு வாடகை மனைவியை சந்தித்தோம். அந்தப் பெண்
காஞ்சிபுரம் பக்கமுள்ள ஒரு டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் லெக்சரராக இருந்தார். புரோக்கர், அந்தப் பெண்ணின் வீட்டுக்கே நேரடியாக என்னை அழைத்துச் சென்றார். குடும்பப்பாங்கான அழகும், அடக்கமும், லேசான மிரட்சியும் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அவர் வீட்டிலேயே போய், அவருடைய புகுந்த வீட்டு சொந்தங்களுக்கு மத்தியில் 'கான்ட் ராக்ட்'டுக்குப் பேச முடிந்தது.
வறுமைக்காக வழி தவறிப் போகிற பெண்களை நாம் பார்த் திருக்கிறோம். ஆனால், இந்தப் பெண்ணின் வீட்டு சூழலைப் பார்த்தபோது, நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தை நடத்துவதற்கு அங்கே எந்தக் குறையும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. என்னை அந்தப் பெண்ணிடம் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு புரோக்கர் கிளம்பி விட்டார். காபி கொண்டுவந்து கொடுத்தவர், எடுத்த எடுப்பிலேயே 'என்னைப் பிடிச்சிருக்கா?' என்று ஏதோ பெண் பார்க்க வந்தவரிடம் கேட்பதுபோல் விசாரிக்கவும்... தூக்கி வாரிப் போட்டது. மேற்கொண்டு பேசப் பேசத்தான் இந்த பகீர் கலாசாரத்தின் நெட்வொர்க் தமிழ் நாட்டில் எந்தளவுக்கு விரியத் தொடங்கியுள்ளது என்று புரிந்தது...'' -சொல்லி நிறுத்திய கோவிந்தன்...
''அதையெல்லாம் உங்களுக்கு விளக்கமாகச் சொல்கிறேன். அதற்கு முன், ஒரு கான்ட்ராக்ட் எப்படி முடிவாகிறது என்பதை நீங்களே கண்ணால் பார்த்துவிட்டு வாருங்கள். அப்போதுதான் இதன் முழுப் பரிமா ணத்தைப் புரிந்துகொள்ள முடியும்!'' என்று, சில ஏற்பாடுகள் செய்து நம்மை அனுப்பி வைத்தார்.
வாடகை மனைவிக்கான 'தேடலு டன்' திருச்சிக்கு வந்திருந்த ஒரு சென்னைத் தொழிலதிபருடன் ஏதோ 'மாப்பிள்ளைத் தோழன்' ரேஞ்சுக்கு நம்மையும் கோத்துவிட்டார் அவர். நம் வசம் உள்ள ரகசிய கேமராவில், ஒவ்வொரு நொடியும் காட்சிகளோடு சேர்ந்து பதிவாகிறது என்பது தொழில திபருக்குத் தெரியாது. முப்பது வயது மதிக்கத்தக்க அந்த குடும்பத் தலை வியும் அதை அறியார்!
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தலையெடுக்கத் தொடங்கியிருக்கும் ஒரு விபரீத விஷக் கலாசாரத்தின் சாட்சியாக அந்த வீட்டுக்குள் நடப் பதை வாசகர்கள் நம்மோடு சேர்ந்து அமைதியாகக் கவனிக்கவும். இன்னும் அதிர்ச்சிகரமான ஆதாரங்களுடன், பின்னணிகளை பிறகு பார்ப்போம் -
குடும்பத் தலைவி: (மெல்லிய குரலில்) வாங்க....உக்காருங்க....
தொழில் அதிபர்: வணக்கங்க!
குடும்பத் தலைவி: தண்ணீ குடிக்கிறீங் களா?
தொழில் அதிபர்: ம்....குடுங்க...
கு.த: இந்தாங்க.... (சமையலறைக்குச் சென்று தண்ணீர் கொண்டு வந்து தருகிறார்).
தொ.அ: தாங்க்ஸ்ங்க... நீங்களும் உக்கா ருங்க!
கு.த: இப்பதான் வர்றீங்களா?
தொ.அ: ஆமாம்... (ஒரு பெயரைச் சொல்லி) உள்ள வரமாட்டேன் னுட்டார். வாசல்லயே அப்படியே கிளம்பிட்டார்.
கு.த: ஆமாம்.... எப்பவுமே அவரு போயிடுவாரு....
தொ.அ: சொந்த வீடா இது...
கு.த: இல்லீங்க, வாடகை வீடு.
தொ.அ: உங்க பேருங்க..?
கு.த: (பெயரைச் சொல்கிறார்).
தொ.அ: நான் யாருன்னு சொன் னாரா?
கு.த: ம்....ஒண்ணும் சொல்லலை.
தொ.அ: என் பேரு ...... (சொல்கிறார்!). நான் சென்னை. மெடிக்கல் லைனுல இருக்கறேன். அடிக்கடி திருச்சி வருவேன்.
கு.த: ஓ, அப்படியா...
தொ.அ: மேரேஜ் ஆயிடுச்சா, உங்களுக்கு?
கு.த: ம்....ஆயிருச்சு.
தொ.அ: அப்படியா, ஹஸ்பெண்ட் என்ன பண்றாங்க?
கு.த: ஒரு பிரைவேட் கம்பெனியில ஒர்க் பண்றாங்க.
தொ.அ: என்னவா..?
கு.த: சும்மா... கம்பெனியில ஒர்க் பண்றார்...
தொ.அ: சரி, சரி.. குழந்தைங்க இருக் குதா..?
கு.த: ஒரு பையன்... ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான்.
தொ.அ: எத்தனை வருஷம் ஆச்சு கல்யாணமாகி?
கு.த: ஏழு, எட்டு வருஷம் ஆச்சு
தொ.அ: அவரு உங்களோட சொந்தக்கார பையனா?
கு.த: ஆமாம்...
தொ.அ: நீங்க வேற எங்கயும் ஒர்க் பண்றீங்களா?
கு.த: இல்லீங்க... நான் ஹவுஸ் ஒய்ஃப்தான்.
தொ.அ: வீட்டுலதான் இருக்கீங்க.... ம்... என்ன படிச்சிருக்கீங்க?
கு.த: (சின்ன தயக்கத்துடன்) டுவெல்த் வரைக்குந்தான்....
தொ.அ: ஏன்.... டிகிரி போக லையா?
கு.த: ம்ஹ§ம்... படிக்கலை!
தொ.அ: ............தான் சொன்னாரு, எனக்கு எல்லா மேட்டரும்...
கு.த: ம்ம்ம்ம்...
தொ.அ: நான் எப்ப திருச்சி வந்தா லும் எங்கயாவது போறதுண்டு! அதான் அவர்கிட்ட(?)கேட்டேன். அவர் சொன்னாரு... இந்த மாதிரி இருக்காங்கன்னு! உங்களுக்கும் ஒண்ணும் பிரச்னை இருக்கா துன்னு சொன்னார்! அதான் பார்க் கலாம்ன்னு வந்தேன். ஆல்ரெடி நாலஞ்சு டைம் அவரு ஆபீஸுக்கு நீங்க வந்துருக்கீங்க. அப்ப நான் அறிமுகப்படுத்திக்கலை. பேசலை... ஆனா உங்களைப் பார்த்திருக்கேன்.
கு.த: ஓ... அங்கேயே பார்த் திருக்கீங்களா..!
தொ.அ: ஆமாங்க. நீங்க எவ்ளோ வாங்கறீங்க?
கு.த: 25,000 ரூபாய்.
தொ.அ: மாசத்துக்கு தானே?
கு.த: ம்.. மாசத்துக்குதான்.
தொ.அ: ஓ.. நான் இப்ப 25,000 ரூபாய் குடுத்துட்டா, நான் சொல்ற அந்த ஒன்மன்த்துக்கு வேற எங்கயும் போக மாட்டீங்க தானே...?
கு.த: வேற எங்கயும் போக மாட்டேன்.
தொ.அ: எப்படிங்க.... நான் வீட்டுக்கு வரணுமா? இல்லாட்டி நீங்க வெளியே வருவீங்களா?
கு.த: வெளியவும் வருவேன். நீங்க வீட்டுக்கும் வரலாம். ஒண்ணும் பிரச் னையில்லை.
தொ.அ: வீட்டுக்குன்னா? வீட்டுல குழந்தை..?
கு.த: என்னைப் பொறுத்தவரைக்கும் குழந்தை இல்லாத நேரத்துலதான் வரமுடியும். ஏன்னா, பையன் ஸ்கூலுக்கு போயிடுவான். எயிட் டு ஃபோர் ஓ கிளாக் அவன் போயிடு வான். டியூஷனுக்கும் இடையில போயிடுவான். 4 மணிக்கு மேல, அந்த நேரத்துல ஆள் இல்லாத நேரத்துலயும் நீங்க வந்து போய்க்கலாம்.
தொ.அ: (நீண்ட மௌனத்துக்குப் பிறகு) ஓ!
கு.த: குழந்தை இல்லாத நேரம் போக, மத்தபடி வீட்டுக்காரர் இருக் கறப்பகூட வரலாம்.
தொ.அ: அப்படியா... வரலாமா? அவருக்குத் தெரியுமாங்க எல்லாம்?
கு.த: அவருக்குத் தெரி யுங்க.
தொ.அ: அவரு ஒண்ணும் சொல்ல மாட்டாரா?
கு.த: எல்லாம் அவருக்குத் தெரியும். ஒண்ணும் சொல்ல மாட்டாரு.
தொ.அ: என்னங்க சொல்றீங்க..? பிரச்னை எதுவும் வந்துறாதா? நான் இங்க இருக்கற நேரம் அவரு வந்து ஏதாவது ரசாபாசம் ஆகிடப் போகுது...
கு.த: இல்லை... இல்லை... அந்த ஒரு மாசத்துக்கு நீங்க 'பே' பண்ணிடறீங்க, இல்லையா...
தொ.அ: இந்த மாசத்துல ஆல்ரெடி யாரும் இருக்காங்களா?
கு.த: ம்.... இருக்காங்க.
தொ.அ: யாருன்னு தெரிஞ்சுக்க லாமா?
கு.த: அவரும் ஒரு கம்பெனி ஓனர்.
தொ.அ: திருச்சியா அல்லது வெளி யூரா?
கு.த: உள்ளூர்க்காரங்க எப்படி? வெளியூர்தாங்க.
தொ.அ: ஓஹோ... நான் வர்றப்பலாம் ஊட்டி, கொடைக்கானல்னு வேற ஊர்களுக்கும் போறதுண்டு. அங்கெல் லாம்கூட வருவீங்களா....?
கு.த: போலாங்க. எங்க ஃபேமிலியைப் பொறுத்தவரைக்கும் சனி, ஞாயிறு மட்டும்தான் வெளியூர் வருவேன். அந்த சமயத்துல பையனை வீட்டுக் காரர் பார்த்துப்பாரு...
தொ.அ: அப்படியே பண்ணிக்கலாம். ஒண்ணும் பிரச்னையில்லை. உங்களுக் குத் தெரிஞ்ச ஃபிரெண்ட்ஸ் வேற யாரும் இதேமாதிரி இருக்காங்களா?
கு.த: இருக்காங்க! அவங்க எல்.ஐ.சி-ல ஒர்க் பண்றாங்க. லெக்சரரா ஒர்க் பண்றவங்களும் இருக்காங்க. இ.பி-யில ஒர்க் பண்றவங்களும் இருக்காங்க. சொன்னாக்கா, பண்ணித் தரலாம்.
தொ.அ: அவங்கள்லாம் எவ்வளவு?
கு.த: எல்லாம் கொஞ்சம் பெரிய ஃபேமிலி பாருங்க. நல்லா இருப் பாங்க. ஐம்பதாயிரம் வரைக்கும் வாங்கறாங்க.
தொ.அ: அவங்க வீட்டுக்குல்லாம்கூட தெரியுமா?
கு.த: அதுங்களா... .ஒரு சிலர் வீட்டுல தெரியலாம். ஆனா, அவங்க ஹஸ்பெண்டுக்கு எந்த அளவுக்கு தெரியும்னு எனக்கு சரியாத் தெரியலை!
தொ.அ: ஆனா, வருவாங்கள்ல?
கு.த: ம்...
தொ.அ: எப்படி? வேலைக்குப் போனா எப்படி வருவாங்க?.
கு.த: எத்தனை நாள் வேணுமோ லீவு எடுத்துட்டு வருவாங்க!
தொ.அ: ஓ... ஓ... வேற பிரச்னை எதுவும் இருக்காதுல்ல?
கு.த: ஒரு பிரச்னையும் இருக்காது. நீங்க என்ன பிரச்னையைக் கேட் கறீங்க?
தொ.அ: இந்த ஹெச்.ஐ.வி... எய்ட்ஸ் அந்த மாதிரின்னு சொல்றாங்களே... ஒரே பயமா இருக்கு (சிரிக்கிறார்!).
கு.த: (பதிலுக்கு மெலிதாகச் சிரித்து) நாங்க ஃபேமிலி கேர்ள்ஸ்தானேங்க! அதனால ஒண்ணும் வராது! அதுமாதிரி கேக்கறாங்கனுதான், ஒருத்தர்கிட்டே அக்ரிமென்ட் தொடங்குறதுக்கு முன்னாடி நாங் களும்கூட ஃபிரெஷ்ஷா மெடிக்கல் டெஸ்ட் எடுத்துத் தந்துடறோம்.
தொ.அ: அதான்... அடுத்த மாசத்துக்கு இது பண்ணிக்கலாம்னுதான்... அன்னிக்கு ............கிட்ட 5,000 பணம் கொடுத்திருந்தேன், கொடுத் துட்டாரா?
கு.த: கொடுத்துட்டாரு.
தொ.அ: இதே வருஷத்துல மறுபடி வருவேங்க. அப்ப உங்க ஃபிரெண்ட் யாராவது அரேஞ்ச் பண்ணிக்கலாம்... (சிரிக்கிறார்).
கு.த: பார்த்துக்கலாம்ங்க. இல்லாட்டி அவர்கிட்டயே(?)கூட கேட்கலாம்.
தொ.அ: இந்த லெக்சரர் வேலை பாக்குறவங்க... (சட்டென்று) அது மாதிரி இல்லாட்டியும் காலேஜ் பொண்ணுங்க யாராவது இருக் காங்களா?
கு.த: காலேஜ் பொண்ணுங்களா? எனக்குத் தெரிஞ்சு காலேஜ் லெக் சரர்தான் இருக்காங்க....
தொ.அ: (மறுபடி) இந்த மாதிரி சின்னப் பொண்ணுங்க இல்லைன்றீங்க... ஆனா, இதுல பிரச்னை எதுவும் இருக்காதுல்ல..?
கு.த: இல்லீங்க... திருச்சியில அம்பது அறுபது பேர் இருக்காங்க....
தொ.அ: அவ்வளவு பேருங்களா?! எப்படி..? இவங்க எல்லாருக்குமே பேசி முடிக்கிறதுக்கு ஆள் இருக் காங்களா?
கு.த: ம்... இருக்காங்க. இப்ப உங்களை அறிமுகப்படுத்தி வெச்சாங்கள்ல... அவங்கள மாதிரி நிறைய பேர் இருக்காங்க.
தொ.அ: இவங்களுக்கு நீங்க ஏதாச்சும் பணம் தரணுமுங்களா...
கு.த: அவங்களே கமிஷன் மாதிரி எடுத்துப்பாங்க...
தொ.அ: பட்.. என்னிக்காவது இதெல்லாம் பிரச்சனைஆயிடாதா?
கு.த: அப்படி ஆகறதுக்கு சான்ஸ் இல்லை, ஏன்னா நாங்க எல்லாம் ஃபேமிலீல இருக்கோம் பாருங்க... அதனால யாருக்கும் இப்படினு தெரியாது. அதுவும் வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சு பண்றதால ஒண்ணும் பிரச்னையில்லை.
தொ.அ: அவரு எப்படிங்க அக்செப்ட் பண்றாரு, ஆச்சர்யமா இருக்கு!
கு.த: இல்லை.... தெரிஞ்சுதான், நாங்க ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணித்தான் இப்படி பண்றது.
தொ.அ: ஃபேமிலியில ஏதாச்சும் பெரிசா பணப் பிரச்னைங்களா?
கு.த: பிரச்னை இருக்கு. அவரு வாங்கற சம்பளம் எங்களுக்குப் பத்தாது. அதனால இந்த மாதிரி!
தொ.அ: அடுத்த குழந்தை எதுவும் பெத்துக்கலையா.....
கு.த: இல்லைங்க... பார்க்கலாம்.
தொ.அ: (சில நொடி அமைதி நிலவ) சரி... அதான் அடுத்த மாசத்துக்கு கன்ஃபார்ம் பண்ணிடலாம்னு...
கு.த: கண்டிப்பா வாங்க.
தொ.அ: இன்னும் 20,000 ரூபாய் தரணும், சரிங்களா?
கு.த: வரும்போது தாங்க!
தொ.அ: சரிங்க. அப்ப அடுத்த மாசத்துக்கு நீங்க வேற யாரையும் எடுத்துக்க வேணாம்.
கு.த: இல்லீங்க... பணம் வாங்கிட்டா அப்படிஎங்க குடும்பத்துல செய்ய மாட்டோம்!
தொ.அ: ஓகே, நான் கிளம் புறேன்...
கு.த: போய்ட்டு வாங்க..!
விக்கித்துப் போன நிலையிலேயே நாம் வெளியில் வருகிறோம். அடுத்தடுத்து நாம் சந்தித்த இன்னும் சில முகங்கள், அவர்களின் சுற்றுச் சூழல்கள்... தோரணைகள்...
அது ஒரு விசாரணை வெடி குண்டு!
- தொடர்வோம் அடுத்த இதழில்...
9 comments:
To voice of justice,
These kind of people destroy cultural manners and the whole Tamil community. I want to hang these kind of people and support whoever supports these Tamils.thanks.
இவர்கள் வடக்கை மனைவிகள் அல்ல.குத்தகைக்கு எடுக்கப்படும் விபச்சாரிகள்.
வெட்கக்கேடு!
டிவி விளம்பரத்தில் காட்டும் பொருள்களை
எல்லாம் வாங்கி அனுபவிக்க வேண்டும் என்ற தகுதிக்கு
மீறிய பேராசையே காரணம்.
//அதுவும் வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சு பண்றதால ஒண்ணும் பிரச்னையில்லை.//
இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு..... தொங்கலாம்....
படிக்கும்போதே பகீர்னு இருக்கேங்க... ஆத்தாடி. நம்ம எங்கே போய்கிட்டு இருக்கோம்??
This is not new. This has been happening for centuries and across all countries.
அய்யே இது நம்ம ஊருதான ஏன் சார் குண்டைத் தூக்கிப் போடுறிங்க. பயமா இருக்கு. அப்பா பணம் பாதாளம் வரை பாயும் சொல்றது சரிதான். கஷ்டமாக இருக்கின்றது.
பண்டைய காலம் முதல் விபச்சாரம் திருட்டு முதலிய மனிதனுகே உறிய வக்கிரம் அரங்கேரி வருகிறது தற்போது புதிய வழிமுறையில்
பயங்கரமான விஷ கலாச்சாரத்தின் ஊடுருவல்
Post a Comment