.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, March 29, 2009

திமுக கூட்டணியில் சீட் உண்டா..? மனித நேய கட்சி 30ல் ஆலோசனை

திமுக கூட்டணியில் சீட் உண்டா..? மனித நேய கட்சி 30ல் ஆலோசனை
மார்ச் 29,2009,07:16 IST



திருநெல்வேலி : தி.மு.க.,கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி நீடிக்குமா அல்லது தனித்து போட்ியிடுமா என்பது குறித்து நாளை திங்கள்கிழமை கட்சியினர் ஆலோசனை மேற்கொள்கின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனித நேய மக்கள் கட்சி 2 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டது. இதுதொடர்பாக தி.மு.க.வினர் ம.ம.க.,நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியூரிலும், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வெளிநாட்டிலும் உள்ளனர். அவர்களிடம் தி.மு.க.,தரப்பில் ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி ஆகியோர் போனில் பேசினர். இதனிடையே முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு சீட் என அறிவிக்கப்பட்டு மனித நேய மக்கள் கட்சிக்கு சீட்கள் எதுவும் ஒதுக்கப்படாமல் பட்டியல் வெளியாகியுள்ளது. ஒரு வேளை தி.மு.க.,வின் 21 சீட்களில் ம.ம.க.,விற்கு உள்ஒதுக்கீட்டில் சீட் வழங்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஆனால் தி.மு.க.,சின்னத்தி ல் போட்டியிட ம.ம.க,வினர் தயக்கம்காட்டுவார்கள் என தெரிகிறது. எனவே தி.மு.க.,கூட்டணியில் 3 சீட், அதுவும் உள் ஒதுக்கீடு இல்லாமல் தங்களுக்கான சின்னத்தில் போட்டியிடுவது என்ற முடிவில் உள்ளனர். கட்சி நிர்வாகிகள் 30ம் தேதி திங்கட்கிழமை சென்னை திரும்புகின்றனர். அப்போது கூட்டணி குறித்து இறுதி பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

இந்நிலையில் மமக தலைமையின் அறிக்கை.

28.03.09 அன்று காலை தமுமுக தலைவருடன் ஆற்காடு வீராசாமியும், மாலையில் ஸ்டாலினும் தொலைபேசியில் பேசினர். எனினும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. திங்கட்கிழமை அடுத்த சுற்று பேச்சு வார்த்தை நடைபெறும். அது வரை பொறுமை காத்திருக்குமாறு கட்சி தொண்டர்களை மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கேட்டுக் கொள்கிறார்கள்.

சமுதாயத்தின் தன்மானம் முக்கியம் என்பதில் மனிதநேய மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது. எனவே ஒரு தொகுதியை ஏற்பதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை.


இறைவன் நாட்டப்படிதான் அனைத்தும் நடக்கும் என நம்புகிறோம்.

No comments: