.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, September 17, 2008

காவல்துறையே நடத்திய முத்துப்பேட்டைகலவரம்

காவல்துறையே நடத்திய முத்துப்பேட்டைகலவரம்

Source: http://www.tmmk.in/


தமிழக அமைதியைக் குலைத்து வரும் இந்து முன்னணி உள்பட சங்பரிவார் கும்பலுக்கு திருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒரு முக்கிய குறியாகும். விநாயகர் ஊர்வலம் என்ற போர்வையில் இந்து முன்னணி பாஜக வெறிக்கும்பல் நடத்திவரும் கலவர பேரணியில் முஸ்லிம்கள் பெரும்பான் மையாக வாழும் முத்துப் பேட்டை பலமுறை பாதிக்கப் பட்டுள்ளது. பதற்றத்திற்குள் ளாகியுள்ளது.

இந்து முன்னணி கும்பல் நடத்தும் வெறி ஊர்வலத் தின் நோக்கமே முஸ்லிம் பகுதி களை ரணகளமாக்குவது தான். இதை பல்வேறு இடங் களில் பல்லாண்டு காலமாகச் செய்து வருகிறார்கள். முஸ்லிம்கள் மட்டுமே வாழும் பகுதிகள் மற்றும் முஸ்லிம்கள் மிகப் பெரும்பான் மையாக வாழும் பகுதிகளில், ஆபாச மாகவும், வெறித்தன மாகவும் கோஷ மிட்டு சண்டைக்கு இழுப்பது, பள்ளி வாசல்களுக்கு அருகே தொழுகை நேரத்தில் மிகமிக மெதுவாகக் கடப்பது, பயங்கர சப்தத்தோடு தாரை தப்பட்டை களை அடிப்பது, பட்டாசுகளை வெடிப்பது ஆகியவை இந்த வெறிக் கும்பலில் இழிசெயல்களில் சில ஆகும்.


`துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியக் கட்டு’, `பத்து பைசா முறுக்கு, பள்ளிவாசலை நொறுக்கு’ `பாபரின் பிள்ளை களே பாகிஸ்தானுக்கு ஓடுங் களே` என்பன போன்ற வெறிக்கூச்சல்களை எழுப்பி முஸ்லிம்களை சீண்டுவது இவர்களின் வழக்கம். காவிக் கும்பலின் கலவரப் பேரணியில் இடம் பெறும் கயவர்கள் பள்ளிவாசலில் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது தொழுவோர் மீது செருப்புகளை வீசிச் செல்வதும் உண்டு.


மேற்கண்ட சம்பவங்களைக் காலங் காலமாய் பொறுத்துப் பொறுத்து பொறு மையின் விளிம்புக்கே போன முத்துப் பேட்டை முஸ்லிம்கள், விநாயகர் ஊர் வலம் என்ற பெயரில் சங்பரிவார் கும்பல் நடத்தும் வெறிப் பேரணியை மாற்றுப் பாதையில் நடத்துமாறு கடந்த சில ஆண்டுகளாகவே முறையிட்டு வருகின்றனர்.


முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் இதற்காக பல தீர்மானங்களை நிறை வேற்றிவிட்டது. கடந்த ஆண்டு மாற்றுப் பாதை குறித்து அரசால் தமுமுகவுக்கு வாக்கு தரப்பட்டு பிறகு மாவட்ட காவல் துறையால் அது மீறப்பட்டது. இந்த ஆண்டு வெறி ஊர்வலத்தை மிகுந்த வீரியத்துடன் நடத்தி முஸ்லிம்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சங்கும்பல் மும்முர மாக களத்தில் இறங்கியுள்ளது. இதை யறிந்த முஸ்லிம்கள் தரப்பு காவல் துறையிடம் முறையிட்டு மன்றாடி யுள்ளது. பிரச்சினை மிகுந்த பகுதிகல் ஊர்வலப் பாதையை மாற்றியமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் உண்டு என உயர் நீதிமன்றம் வெயிட்டுள்ள ஆணை (எண் 22286/2008WP) கூறுகிறது.

ஆயினும் காவல் துறை செவிசாய்த்த பாடில்லை. முத்துப்பேட்டையின் அமைதி யைக் குலைப்பதில் முதலிடத்தில் இருப் பவர் பாஜக மாவட்டத் தலைவராக இருக்கும் கறுப்பு () முருகானந்தம். திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் சிங், கறுப்புக்கு ஒரு உறுப்பு போலவே செயல் படுகிறார் என்று குற்றம்சாட்டுகின்ற னர் முத்துப்பேட்டை முஸ்லிம்கள்.

முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கும் பழைய பேருந்து நிலைய பகுதி, புதுத் தெரு, கிட்டங்கித் தெரு, பட்டுக்கோட்டை ரோடு, மதரஸா தெரு, தெற்குத் தெரு, பேட்டை ரோடு, அரபுசாஹிப் தெரு ஆகிய தெருக் களின் வழியாகத்தான் ஊர்வலம் நடத்துவோம் என சங்கும்பல் இறுமாப் போடு பேச, மாற்றுப் பாதை இருக்கும் போது முஸ்லிம் பகுதிக்குள் நுழைந்து கலவரம் விளைவிப்பதை நாங்கள் ஏற்க முடியாது என முஸ்லிம்கள் உறுதியாக கூறியுள்ளனர். காவல்துறை முஸ்லிம்களின் கோரிக்கையை காற்றில் பறக்கவிட்டது.
பாஜக மாவட்டத் தலைவர் கறுப்பு () முருகானந்தம், ராஜேந்திரன் உள்ளிட் டோர் தலைமையில் பாஜக மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா வெறி யுரையோடு செப்.11, 2008 மதியம் 3 மணிக்கு இந்து முன்னணியின் கலவர ஊர்வலம் தொடங்கியது.


ஏற்கனவே, 2007ல் இவர்கள் பள்ளி வாசலில் செருப்பு வீச்சு நடத்தி யுள்ளதால், இம்முறை தற்காப்புக்காக முத்துப்பேட்டை முஸ்லிம்கள் புதுப்பள்ளி வாசலில் கூடியுள்ளனர். பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கூடுவதை அறிந்த காவல் துறை பள்ளிவாசலை சுற்றி வளைத்து நிறுத்தப்பட்டது.
சூழ்நிலைகள் பதற்றமாகிக் கொண்டே போக பள்ளிவாசலை ஊர்வலக் கும்பல் தாக்கலாம் என அஞ்சிய ஜமாஅத்தினர் முஸ்லிம்களை பள்ளிவாசலுக்குள் வருமாறு அறிவிப்பு விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து எஸ்.பி. அமித்குமார் சிங், திருத்துறைப் பூண்டி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பள்ளிவாச லுக்குள் நுழைந்து அங்கிருந்தோரிடம் எச்சரிக்கை விடுக்கும் தொணியில் பேசத் தொடங்கினர். பள்ளிவாசலுக்கு அருகே வந்து வெறிக் கும்பல் கலவரம் தூண்டுவதை ஏற்க முடியாது என்பதில் முஸ்லிம்கள் உறுதிகாட்ட, சாலை மறியல் செய்வீர்களா? செய்து கொள் ளுங்கள்என்று முஸ்லிம்களுக் குப் பாதை காட்டிவிட்டு, `அட்டாக்என்று காவல்படைக்கும் ஆணையிட்டுள்ளார் எஸ்.பி. முன்னதாக பள்ளிவாசலில் கூடியிருந்த கூட்டத்திருந்து யாரோ ஒரு விஷமி வெளிப்புறம் நோக்கி, கல் வீசியுள்ளார். அது காவி மனத்தோடு வந்திருந்த காவல் படைக்கு முஸ்லிம்களைத் தாக்கப் பெரும் ஆயுதமாகப் பயன்பட்டுள்ளது.


காவிவெறிக் கும்பலிடம் இருந்த வெறி காவல்துறையிடம் இடம்மாறியதோ என்னவோ? திடீரென பள்ளிவாசலை சூறையாட ஆரம்பித்துள்ளனர். பள்ளி வாசலின் கண்ணாடிகளை லத்திகளால் அடித்து உடைத்துள்ளனர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததில் காவல் துறையினரின் லத்திகளே உடைந்து போயுள்ளன. உடைந்த லத்திகளை அங்குள்ளோர் எடுத்துவைத்துள்ளனர். அந்த அளவுக்கு வெறி அவர்களின் தலைக்கேறியிருக்கிறது.


எஸ்.பி. நிறுத்துமாறு சொல்லியும் கூட லத்திகளின் சுழற்சி நிற்கவில்லை. நோன்பாளிகளான முஸ்லிம்கள் கொடு மையாக வதை செய்யப்பட்டுள்ளனர். தொழுகையில் இருந்த நிலையில், தமுமுக முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ஹுமாயூன் கபீர் தாக்கப்பட்டு, பல் உடைக்கப்பட்டு இரத்தக் காயப் படுத்தப்பட்டுள்ளார்.


  • இந்து முன்னணி கும்பல் எதைச் செய்ய விரும்பியதோ, அதை முத்துப் பேட்டையில் காவல்துறை மிகச் சிறப்பாக(?) செய்து அவர்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது.


செய்தியறிந்த தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி இருவரும் உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு போலிஸார் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டதைக் கடுமையாக் கண்டித்தனர். கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர். இல்லையேல் திருவாரூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் தமுமுக எனது தலைமையில் போராட்டம் நடத்தும் என்று பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி எச்சரிக்கை விடுத்தார். பின்னர் கைது செய்யப்பட்ட 35 பேரில் 19 பேரை உடனே விடுவித்தனர்.


பூட்சு கால்களோடு பள்ளிவாசலுக்குள் தொழுமிடத்திற்கு நுழைந்த காவல்துறை கண்ணில் பட்டவர்களை யெல்லாம் கைது செய்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந் துள்ளது. முத்துப்பேட்டையில் அத்து மீறிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கலவர ஊர்வலத் திற்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர் பார்ப்பு.

No comments: