ஒரு நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதும், சட்டஒழுங்கு சீர்கெடாமல் பாதுகாப்பதும் அந்தந்த நாட்டிலுள்ள காவல்துறைகளின் கடமையாகும். தீமைகளை தடுத்து, குற்றவாளிகளை திருத்தி, மக்களின் தோழனாக அவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கவேணடும். அதற்குத்தான் அவர்களுக்கு காலவ்துறை என்று பெயரிடப்பட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து ஊதியம் வழங்கப்படுகிறது. தனது காக்கிச்சட்டை சீருடையயை அணிந்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு காவல்துறையினரும் இப்படித்தான் உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர்.
ஆனால் சமீபத்தில் நடந்த வேலூர் நிகழ்வுகள் தமிழகத்தின் காவல்துறையினர் தாங்கள் எடுத்த உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டுவிட்டு தனது கடமையை மறந்து, திட்டமிட்டே தமிழக அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கடந்த 01-09-2008அன்று திலமலர் நாளிதழின் கம்யூட்டர் மலரில் எங்கள் உயிரிலிலும் மேலான முஸ்லிம்களின் ஒப்பற்றத் தலைவர் இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் கேளிச்சித்திரத்தை வெளியிட்டு புனித ரமலான் மாதத்தின் முதல் நாளில் முஸ்லிம்களின் தன்மான உணர்வுகளை சீண்டிவிட்டது சங்பரிவார தினமலம்.
தமிழக முதல்வரே! அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழகத்தை விநாயகர்சதுர்த்தியின் நேரத்தை பயன்படுத்தி கலவர பூமியாக்க தினமலம் கும்பல் திட்டம் தீட்டியுள்ளதை உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காவல்துறை அறியாமல், கடந்த 2-08-2008 அன்று வேலூரில் தினமலம் கும்பலை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மக்கள் மீது கொலைவெறிதாக்குதல் நடத்தியுள்ளது தமிழக காவல்துறை.
ஆர்ப்பாட்டத்திற்கான காரணமென்ன? அவர்களது கோரிக்கை என்னவென்று கேட்காமல் கூட்டத்தை களைப்பதாகக் கூறி உரிமை கேட்டு ஜனநாயக வாழியில் போராடிய மக்கள் மீது தடியடி என்ற போர்வையில் தமிழக காவல்துறை கொலை வெறி தாக்குதல் நடத்தியதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.
களத்திலிருந்த காவல்துறை உயர் அதிகாரி அறிவுச்செல்வம் ஆர்ப்பாட்டத்திலிருந்த முஸ்லிம் தலைவர்களை தரைக்குறைவாக, கீழ்த்தரமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார்.
- சர்வதேசச் சமுதாயத்தின் மிகப் பெரும் தலைவர் எங்கள் உயிரிலிலும் (இந்த வார்த்தையை வெரும் சொல்லாகக் எண்ணிவிட வேண்டாம்) மேலான எங்கள் இறைத்தூதரை இழிவுபடுத்தி கேளிச் சித்திரம் வெளியிட்டு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வெகுண்டெலச் செய்து சட்டம் ஒழுங்கை சீர்குழைத்த தினமலம் கும்பலை கைது செய்வதை விட்டுவிட்டு ஜனநாயக ரீதியில் உரிமை கேட்ட மக்களை அடக்கி ஒடுக்குவது ஜனநாயக ஆட்சிக்கு அழகல்ல என்பதை எச்சரிக்கையுடன் சொல்லி வைக்கறோம்.
தினமலம் கும்பலை சில நிமிட நேரத்தில் எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமலல்ல அரசிடம் கோரிக்கை வைத்து ஆர்பாட்டம் நடத்தியது. பல ஆயிரக்கணக்கான மக்கள் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் ஆர்பாட்டத்திலிருந்தவர்கள் ஒரு சில அல்லது நூறு காவல்துறையின் லத்திக்கு அஞ்சி விட்டார்கள், அல்லது தோட்டாக்களுக்கு பயந்து விட்டார்கள் என்று காவல் துறையே நீங்கள் எண்ணிவிட வேண்டாம். நாங்கள் ஆட்சியாளர்களையும் சட்டத்தையும் மதிப்பவர்கள்.
காவல்துறை உயர் அதிகாரி அறிவுச் செல்வம், ஏ.டி.எஸ்பி. இராமதாசு, டி.எஸ்.பி. சரவணன் ஆகியோரின் தவறான நடவடிக்கையால் எங்கள் சகோதரர்கள் பலர் காவல்துறை கருப்புஆடுகளின் கொலைவெறித் தாக்குதலால் படுகாயமடைந்து மருத்துவமணையில் உள்ளனர் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
ஆட்சியாளர்களே! அரசியல்வாதிகளே! உங்களுக்கொன்றை சொல்லிக் கொள்கிறோம் உங்களை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து அழகு பார்ப்பது மக்களாச்சி நடத்துவதற்குத்தான் மக்களை ஆட்டிவைப்பதற்கல்ல.
சீண்டிப்பார்ப்பது, தூண்டிவிடுவது, உசுப்பிவடுவது இவைகளுக்கெல்லாம் மிகப் பெரிய விலைகொடுத்துள்ளதை கடந்த கால வரலாறுகள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. ஜப்பான் 1941ம் ஆண்டு (Pearl Harbor) ஹவாய் துறைமுகத்தை தவிடுபொடியாக்கி அமெரிக்காவை சீண்டியதன் விளைவு 1945 ஆகஸ்டு 6ம்நாள் ஹீரோசிமா நாகசாயிகள் நாசமாய்போன வரலாறுகள் மனித குலம் மறக்கமுடியாதவை.
ஆட்சிக்கு வரும் ஒவ்வொறு ஆட்சியாளர்களும் முஸ்லிம்களை குறிவைப்பதையே தனது கொள்கைகளாகக் கொண்டுள்ளனர் இதில் யாரும் விதிவிலக்காக எங்களுக்கு தெரியவில்லை.
முஸ்லிம்களை சீண்டிய தினமலம் இன்று பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன அதல் முதல் அடி அமீரகத்தில் அதன் இணையத்தளம் தடைசெய்யப்பட்டுள்ளதாகும். எங்கள் அடுத்த இலக்கு என்ன என்பதை, காரியத்தை கட்சிதமாக முடித்துவிட்டு உலகிற்கு அறிவிப்போம்.
காலங்காலமாக முஸ்லிம்களை மட்டுமே பழிவாங்க துடிக்கும் ஆட்சியாளர்களே! தமிழக அரசியலில் முஸ்லிம்களுக்கு நீண்ட அனுபவம் உண்டு என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள். ஜாதி அரசியல் மலிந்து விட்ட தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை ஜாதிகள் உள்ளன என்று நாம் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. ஆனால் முஸ்லிம் வாக்குகளுக்கு ஜாதிகள் இல்லை என்பதை சுட்டிக்காட்ட கடமைப் பட்டுள்ளோம்.
1946ல் நடந்த பொதுத் தேர்தலில் பிரிக்கப்படாத சென்னை மகாணத்தில் 29 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட வரலாறு இந்த சமுதாயத்திற்கு உண்டு 1953ல் இராஜியின் மந்திரி சபைக்கு ஆதரவளித்து அவரது ஆட்சியைக் காப்பாற்றிய பெருமையும், 1954ல் குடியாத்தம் தேர்தலில் காமராசரை ஆதரித்து அவரை வெற்றிபெறச் செய்ததிலும், 1962ல் முதன் முதலாக திமுகவுடன் கூட்டணி வைத்து 50சீட்டுக்களை திமுகவுக்கு பெற்றுக் கொடுத்த பெருமையும் எங்கள் சமுதாயத்திற்கு உண்டு.
சட்டையைக் கிழித்தும், மண்டையை உடைத்தும், பாட்டில்களை வீசியும் ரகலை செய்யும் சென்னை மாநகராச்சி மாமன்றதை கண்னியத்தோடு 1965 ல் துணை மேயர் பொருப்பு வகித்தும், 1967ல் மேயர் பொருப்பு வகித்தும் அந்த மாமன்றத்தை கண்ணியத்தோடு வழிநடத்திய பெருமை இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு உண்டு என்பதை தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை மறந்தவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.
சமீபத்தில் தமிழக வாக்காளர் பட்டியலை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். அதில் மாவட்ட வாரியாக தொகுதிகளை பிரித்தெடுத்து அதில் முஸ்லிம் வாக்காளர்களை மட்டும் இணம்கண்டு பார்த்த போது நம பலத்தைக் கண்டு உண்மையில் நாம் அதிர்ந்தேவிட்டோம்.
இதோ நாங்கள் இணங்கண்டு புறப்பட்டு விட்டோம். முதல்வர் அவர்களே குறித்துக் கொள்ளுங்கள்! தமிழகத்தின் அடுத்த ஆட்சியாளர் முஸ்லிம் சமுதாயம் யார் முகத்தின் முன் விரலை காட்டுகிறதோ அவர் தான் ஆட்சியாளர். தமிழக சட்டமன்றத்தின் மொத்தத் தொகுதியில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்களின் கைவசம் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உளவுத்துறையினரை அழைத்து சரியான புள்ளிவிபரத்தை உங்களுக்குத் தருமாறு ஆணையிட்டுப்பாருங்கள்.
தமிழக முதல்வரே! உரிமைக்காகப் போராடும் எம் முஸ்லிம் மக்களை நோக்கி உங்கள் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை இனியும் தனது லத்தியை சுழற்றினால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதற்கு நீங்கள் தகுந்த விலைகொடுக்க வேண்டியிருக்கும். உங்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த தன் உயிரைப் பணையம் வைத்து களப்பணியாற்றிய எம் முஸ்லிம் சமுதாயத்திற்கு உங்களை வீட்டுக்கு அனுப்பத் தெரியாது என்று நினைத்துவிடாதீர்கள். காலச்சக்கரம் சுழலக்கூடியது என்பதை மறந்துவிடாதீர்கள்.
எங்களுக்கு பிரச்சார மேடைகளோ, வாகனங்களோ தேவையில்லை. அடுத்த ஆட்சியாளர்களை தீர்மானிக்க, இருந்த இடத்திலிருந்துகொண்டு செய்திகளை கொண்டு சேர்க்க எங்களால் முடியும். அத்தகைய வலிமையை அல்லாஹ் எங்களுக்கு வழங்கியிருக்கிறான் என்பதை அடக்கத்துடன் தெரிவிக்கிறோம்.
எனவே மாண்பு மிகு தமிழக முதவர் அவர்களே வேலூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுங்கள் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுங்கள் அல்லது முஸ்லிம்கள் அடுத்த தேர்தலில் பாடம் புகட்ட தயாராகி வருகிறார்கள்.
No comments:
Post a Comment