.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, September 10, 2008

துக்ளக் இதழில் காதர் மொய்தீன் விஷமத்தனமும் சமுதாய வேதனையும்..



நன்றி: இந்திய தேசிய மக்கள் கட்சி on September 9th, 2008


துக்ளக் இதழில் காதர் மொய்தீன் விஷமத்தனமும் சமுதாய வேதனையும்..
அறிவை பறைசாற்றிய மார்க்கத்தில் அருள்மறை குர்ஆன் இறங்கிய ரமலான் மாதத்தில் இளமையின் வேகமும், முதுமையின் ஞானமும் இல்லாத தலைவர்கள். “ஆம்“ பேராசிரியர்கள் அல்ல பேருக்கு ஆசிரியர்கள். செம்பறி ஆடுகளாய் முட்டிக்கொள்கிறார்கள். குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும். நையாண்டி “சோ“ துக்ளக் இதழ் சிரிக்கிறது. தகுதியற்றவர்களை, தலைவர்களாக ஆக்கினால் அவர்கள் சொல்லும் செயலும் தகுதியற்றவர்கள் என்று காண்பித்துவிடுவதை போன்று சமுதாய சந்தையில் பொறுப்பற்ற முறையில் காதர் மொய்தீன் பழி சொல்லி புழுதி வாரி இறைத்திருக்கிறார்.

நடுநிலைபோல் நரித்தனம் செய்து நஞ்சு வைக்கும் வஞ்சக எதிரியின் கூடாரத்திற்கு ஆம் துக்ளக் பத்திரிக்கைக்கு ஒற்றர் வேலையை கச்சிதமாய் செய்திருக்கிறார். துரோகிகளை இ°லாம் காணாதது அல்ல. ராமனையோ, ராவணனையோ ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்வது காதர் மொய்தீன் நம்பிக்கை சுதந்திரம். ஆனால் அரசியல் சார்ப்பற்று மதம் கடந்து மனித நேய பணியாற்றும் த.மு.மு.காவை தமிழ்நாட்டின் தீவிரவாத “லஷ்க்கரே-யி“தைய்பா என்று இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை வாசித்திருப்பது கண்டனத்திற்குரியது. வழி சொல்வதற்கு வக்கற்று வீண்பழி சொல்லியிருக்கிறார். ஆயிரக்கணக்கான தொண்டர்களின் அறப்பணியை பாராட்டி உங்கள் தொண்டு தொடரட்டும் என்று இரண்டு ஆம்புலன்சை டாக்டர் கலைஞர் வழங்கியதை மறந்து விட்டு, தி.மு.க. கூடாரத்தில் பதவி சுகத்தில் குளிர் காய்ந்து கொண்டு, பொய் பேசுவதற்கே எனக்கு வாய் இருக்கிறது என்று வாய்சவடால் விட்டு இருக்கிறார். “பாவம்“ என்ன பேசுவது என்றே தெரியாமல் உளறியிருக்கிறார்.

அரசியலில் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். கருத்து முரண்பாடுகள் கூட இருக்கலாம். அபாண்டமாக த.மு.மு.காவை காஷ்மீர் தீவிரவாத இயக்கத்தோடு இணைத்து பேசியிருப்பது. சமுதாய துரோகிகளின் பட்டியலில் தன்னையும் இணைத்துள்ளார். எங்கே எது நடந்தாலும் முஸ்லீம்கள் மேல் பழியை போடும் இந்த காலகட்டத்தில் உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருப்பதால் வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ, என்று புரியாமல் தமிழக முஸ்லீம்கள் மேல் தீவிரவாத முத்திரை குத்தியிருக்கிறார். காயிதே மில்லத் சமுதாயத்திற்கு ஒளி கொடுத்து வழிகாட்டினார். மில்லத் என்று பெயர் வைத்துக்கொண்டு சமுதாயத்தின் விழி பரித்து வழிகெடுக்கிறார். கடல் இருக்கும் வரைக்கும் அலைகள் இருக்கும். காதர் மொய்தீன் போன்ற கருத்து குருடர்கள் இருக்கும் வரை சமுதாயம் சந்தி சிரிக்கும்.


அதோ ராமகோபாலனும் காதர் மொய்தீனும் வாழ்க என்று குரல் கேட்கிறது. இஸ்லாமிய சகோதரர்களே கிளிஞ்சல்களை கடல் தூக்கி வீசுவது போன்று காலம் இவர்களை தூக்கி வீசும். சமுதாயம் கடந்த காலத்தை நினைவில் கொள்ளட்டும். தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது ஆன்றோர் மொழி சகோதரர்களே நீங்கள் முஸ்லீம்கள் சத்தியத்திற்கு சான்று பகருங்கள்.

No comments: