.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, May 29, 2007

மதசார்பற்ற நாடு இந்தியா?

மதசார்பற்ற நாடு இந்தியா?

மேலே நீங்கள் பார்க்கும் ஒளிப்படம், பாலக்காடு ரயில்வே கோட்டம் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு சேலம் ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து தற்காலிக அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.2 கோடியே 11 லட்சத்தில் சேலம் ரயில்வே பள்ளி கட்டிடம் பகுதியில் தற்காலிக அலுவலகம் கட்ட 27-05-07 அன்று பூமி பூஜை நடந்தது அப்போது எடுத்த இந்த ஒளிப்படம் 28-05 அன்று தினகரன் நாளிதழில் வெளிவந்துள்ளது.
மதசார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு ஒரு மதத்தினரின் மதச் சடங்கை அரசு நிகழ்ச்சியாக நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும் அயுதம் மற்றும் படைபலத்திலும் வளரும்நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறும் இந்திய இது போன்ற மூடநம்பிக்கைகளின் (பூஜை) மூலம் நாட்டைக்காப்பற்ற முடியும் என்று என்னுகிறார்களா?
இதோ செய்தி ஊடகங்களில் வந்த சில செய்தித் தொகுப்புகளைக் காண்போம்.
விடுதலை நாளிதழில் வந்த செய்தியை அப்படியே தருகிறோம்.
நரபலி மாதிரி - நாக்கு பலி காசியில் நடந்த மூடத்தனம்
வாரணாசி, மே 28- காசி புண்ணிய இடம். இங்கு செத்தால் நேரே கயிலாயம் போகலாம். அதற் காகவே அங்கே பரமசிவன் உட்கார்ந்திருக்கிறது. விசுவ நாதன் என்று இங்கே அதற்குப் பெயர். காசி விசுவநாதன் கோயில் பிரசித்தி பெற்றது. பக்தர்கள் இந்த லிங்கத்தைத் தொட்டுக் கும்பிடலாம். நம் ஊர் போலத் தீட்டெல்லாம் கிடையாது.அப்படிப்பட்ட கோயிலின் பக்கத்தில் ஒரு மசூதி உள்ளது. இங்கே செல்பவர் அங்கே போகக் கூடாது. அங்கே நுழை பவர் இங்கே வரக்கூடாது. இதைக் கண்காணிக்க ஏகப் பட்ட கட்டுக்காவல். நூற்றுக் கணக்கில் காவலர்கள் இருப் பார்கள். பக்தர்கள் கூட்டத்தை விடவும் இவர்களின் எண் ணிக்கைதான் கூடுதல்.கட்டுக்காவல் நிறைந்த இந்தக் கோயிலுக்கு ஒரு பெண் பக்தை வந்தார். வயது 55 இருக்கும். பெயர் செய்லிபாய். அவரது கணவனைச் சில நாள் களாகக் காணோமாம். அவ ரைக் கண்டுபிடித்துக் கொடுக் குமாறு கடவுளிடம் வேண்டிக் கொள்ள வந்தார். இந்தக் கடவுளையே காவலர்கள்தான் கட்டுக் காவலுடன் காப்பாற்றி வருகிறார்கள்.
இது எங்கே பக்தர்களைக் காப்பாற்றப் போகிறது? இந்தத் தெளிவான புத்தி இருந்தால் தான் பக்தி போய்விடுமே! புத்தி இல்லாததால்தானே பக்தியே வருகிறது!வெறுமனே வேண்டிக் கொண்டால் சாமி செய்யுமோ, செய்யாதோ என்ற நினைப்பில் பக்தை தன் நாக்கில் சிறு துண்டை நறுக்கி லிங்கத்தின் மேல் போட்டார். அக்கம்பக் கத்தில் இருந்த பக்தர்கள் கூச்சல் போடவே, பக்தையை மற்றவர்கள் தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தார்கள். துண்டான நாக்கைக் காணோம். எனவே, ஒட்ட வைக்க முடியாமல் காயத்திற்குச் சிகிச்சை செய்யப் பட்டு வருகிறது.இவ்வளவு கட்டுக் காவல் உள்ள காசி கோயிலுக்கு பிளேடு எடுத்துக்கொண்டு வந்தார் என்றால், என்ன காவல் லட்சணம் என்று விசாரணை நடந்து வருகிறது.காணாமல் போன கணவ னைக் கண்டுபிடித்துத் தா என்று கடவுளிடம் கேட்ட பக்தையின் துண்டிக்கப்பட்ட நாக்கையாவது கண்டுபிடித்துத் தரலாம் அல்லவா, காசி விசுவ நாதன்? ஊகும்... ஒன்றுக்கும் துப்பில்லாத கையாலாகாத காசிக் கடவுள்!
கடவுளைக் காப்பாற்ற அதிரடிப் படைபூரி ஜெகன்னாத் கோயிலுக்கு ஆபத்தாம்!
புவனேசுவர், மே 28- ஒரிசா மாநிலத்தில் பூரியில் உள்ள ஜெகன்னாத் கோயிலுக்குப் பெருத்த விளம்பரம் தருவார்கள். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து காட்டுவார்கள். அவர்களுக்குக் கிருஷ்ணன் ஆண்டவனாவது, மண்ணாவது? எல்லாம் அங்கிருக்கும் அம்மணச் சிற்பங்களைப் பார்ப்பார்கள். இந்தக் கோயிலின் தேரோட்டம் பார்க்க நிறைய மக்கள் கூடுவர். கடலோர ஊரான பூரியின் தெருக்களில் மணலின் ஊடே தேரை இழுப்பதே கடினம்தான். ஒன்றுக்கு இரண்டு உபத்திரவத்திற்கு மூன்று என்பார்களே, அதுபோல மூன்று தேர்கள். கிருஷ்ணன், சுபத்திரை, பலராமன் என்று மூன்று பொம்மைகளை வைத்து இழுப்பார்கள்.அப்படிப்பட்ட ஜெகன்னாத் கோயிலுக்குப் பயங்கரவாதிகளால் ஆபத்தாம். கோயிலைத் தாக்கும் அபாயம் உள்ளதாம். ஆகவே, அதிரடிப்படையை நிறுத்திக் கடவுளையும், கோயிலையும் காப்பாற்றுவது என்று காவல்துறைத் தலைவர் முடிவு செய்துள்ளார்.கடவுளுக்குச் சக்தி கிடையாதோ? கடவுளின் கையில் இருக்கும் சங்கு, சக்கரங்கள் எதற்கு? கதாயுதம் எதற்கு? காது குடையவா? பக்தர்கள் சிந்திக்கவேண்டும்.
கும்பாபிசேகத்திற்குக் கைமேல் பலன் முனீசுவரன் கோயிலில் கொள்ளை முனீசுவரனின் மூஞ்சியை உடைத்தனர்!
கமுதி, மே 28- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கருத்தறிவான் எனும் கிராமம். அங்கே சிறீதர்ம முனீசுவரன் - சிறீராஜகாளி கோயில் உண்டு. இந்த மாதம் 21 ஆம் தேதி இந்தக் கோயிலுக்குக் கும்பாபி சேகம் நடத்தப்பட்டதாம். புதுக் கருக்கு கலையாமல் கடவுள் பொம்மைகள் இருக் கும்போதே கும்பாபிசேகம் நடந்த நான்காம் நாள் ஒரு நிகழ்ச்சி நடந்து சாமியின் சக்தி யைச் சந்தி சிரிக்க வைத்து விட்டது.25 ஆம் தேதி இரவு கோயி லில் ஒரு கும்பல் புகுந்து சாமி பொம்மைகளை உடைத்து விட்டது. அத்தோடு நிற்காமல், சாமிகளின் தலையில் இருந்த மணிமுடி (கிரீடம்)யை எடுத் துச் சென்றுவிட்டது. கண் களில் பதிக்கப்பட்டிருந்த கண் மலர்களைப் பெயர்த்து எடுத் துப் போய்விட்டது. தங்க, வெள்ளி நகைகளைக் கொள்ளை அடித்துக் கொண்டு போய் விட்டது.முனீசுவரன் கோபக்கார சாமி என்று கதை அளப்பார் கள். அதற்கே இந்தக் கதி! முனீசுவரன் என்ன செய்தது? அடிவாங்கிக் கொண்டு அழக் கூட முடியாமல் கிடக்கிறது.முனீசுவரனின் சம்சாரமோ ராஜகாளி! காளியே கோபக் காரக் கடவுள் என்று கதை! அதன் கதையும் கந்தலாகி விட்டது.கையாலாகாத கடவுள் களின் சொத்துகளைத் திரும் பப் பெறுவதற்காகக் காவல் துறையிடம் முறையீடு செய்யப் பட்டுள்ளதாம். பக்கத்து ஊரான அரியமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர்மீது சந்தேகம் இருப்பதாகப் புகாரில் கூறப் பட்டுள்ளதாம்! கடவுள்களின் மீதே கைவைத்த ``பலே கில்லாடி’’யைத் தேடி விசாரணை நடைபெறுகிறதாம்! கடவுள் யோக்கியதை தினமும் சந்தி சிரிக்கிறது!

1 comment:

Unknown said...

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த இணையத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. சேகரித்த செய்திகள் சிறப்பானவை. - அன்புடன் அஅ லாலி