.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Saturday, July 25, 2009

ஆசிரியராக பணியாற்றுவோர் பி.எட்., படிக்க விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் பி.எட்., படிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இப்பல்கலை மூலம் 2009 - 11ம் கல்வி ஆண்டில், தற்போது பணியில் உள்ள 1000 ஆசிரியர்களுக்கு பி.எட்., கற்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு வருகிற அக். 25ம் தேதி நடக்க உள்ளது. தமிழ், தமிழ் இலக்கியம், ஆங்கிலம், கணிதம், பயன்பாட்டுக் கணிதம், இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், புவியியற்பியல், உயிர் இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், உயிர்வேதியியல், பயன்பாட்டு வேதியியல், விலங்கியல், தாவரவியல், தாவர உயிரியல், நுண்ணுயிரியல், சுற்றுச் சூழல் அறிவியல், உயிர் நுட்பவியல், வரலாறு, புவியியல், பயன்பாட்டு புவியியல், கணினி பயன்பாடு, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல், பொருளாதாரம், வணிகவியல், மனையியல் பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழக, மத்திய அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பிரைமரி, நர்சரி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக்., பள்ளிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாகவும், தற்போதும் பணியில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்கில் பணியாற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க இயலாது. ஆங்கிலம் வாயிலாகவே பாடங்கள் உள்ளன.

பி.எட்., விண்ணப்பங்களை, "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை கல்வி மைய அலுவலகத்தில் 10, கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், மதுரை-2' என்ற முகவரியிலும், மதுரை நகர் கல்வி மைய அலுவலகம், 36, மேலவடம்போக்கித் தெரு, மதுரை-1' என்ற முகவரியிலும் ரூ. 500 செலுத்தி நேரில் பெறலாம். தபாலில் பெற விரும்புவோர் ரூ. 550 மணியார்டர் மூலம் அனுப்பியும் பெறலாம். மேலும் விபரம் பெற, ஒருங்கிணைப்பாளரை 0452- 652 2013, 233 9974 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர் பாலன் தெரிவித்துள்ளார்.

Saturday, July 11, 2009

கம்ப்யூட்டருடன் பிஎட் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கல்வி அமைச்சர் தகவல்

சென்னை, ஜூலை 11- கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர்கள் பொன்னுசாமி, ராஜ்குமார், ஜி.கே.மணி (பாமக), எச். வசந்தகுமார் (காங்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூ), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்) ஆகியோர் கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்:
தமிழ்நாட்டில் 200 தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முழுவதும் அரசின் நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளது. மாநில அளவில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும்போது அந்த தீர்ப்புக்கு கண்டுப்பட வேண்டும்.

கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகமா னோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வேலைவாய்ப்பு துறை தரும் சீனியாரிட்டி அடிப்படையில்தான் பணி உத்தரவு பிறப்பிக்க முடியும்.

தற்போது உயர்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் நியமனத்தில் கம்ப் யூட்டர் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும் என்று உறுப்பினர்கள் கேட்டனர்.

வருங்காலங்களில் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Friday, May 29, 2009

வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு போகாமல் பள்ளி வளாகத்திலேயே பதிவு செய்யலாம்.

வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு போகாமல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை, பள்ளி வளாகத்திலேயே பதிவு செய்யலாம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை, மே.28 பத்தாம் வகுப்பில் தேர்வு பெற்றதை, வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு போகாமல் பள்ளி வளாகத்திலேயே மாணவர்கள் பதிவு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

8.22 லட்சம் மாணவர்கள்.....
இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜீவரத்தினம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது.

தமிழகத்தில் 2008-09 கல்வியாண்டில் பிளஸ்-2 வகுப்புத் தேர்வு எழுதி தேர்வு முடிவுகள் வெளியாகி சான்றிதழ்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இவர்கள் எந்தெந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவுகளை செய்யலாம் என்ற விபரம், அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டு, மாநிலம் முழுவதும் 100 மையங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

2008-09ம் கல்வியாண்டில் 8 லட்சத்து 22 ஆயிரத்து 272 மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வுகள் அண்மையில் வெளியாகி, விரைவில் மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்படவுள்ளது.

பள்ளி வளாகத்திலேயே பதிவு
இவர்கள், தாங்கள் தேர்ச்சி பெற்றதை பதிவு செய்வதற்காக, மாவட்டத் தலைநகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு செல்வதற்காக போக்குவரத்துச் செலவினையும், கால விரயத்தையும், கூட்ட நெரிசல் போன்ற இடர்பாடுகளையும் தவிர்க்கும் பொருட்டு மாணவர்களின் நலன் கருதி, இந்த ஆண்டு முதல், மாணவர்கள் தாங்கள் பயின்று மதிப்பெண் சான்று பெறும் பள்ளிகளின் வளாகத்திலேயே பதிவு செய்து கொள்ள கல்வித்துறையின் ஒத்துழைப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அவற்றுடன் மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று, மாற்றுச் சான்று ஆகியவற்றினை சரிபார்த்து, தலைமை ஆசிரியரின் முத்திரையுடன் கூடிய சான்றொப்பமிட்டு, பள்ளியின் மொத்த விண்ணப்பப் படிவங்களை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒரு வார காலத்துக்குள் வேலைவாய்ப்பு அடையாள அட்டைகள் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
மேற்கண்டவாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.