ஒட்டுனர்களைக் கொல்லும் மர்மக் கும்பல்!
அச்சிறுப்பாக்கம் ஷாஜஹான்
http://tmmk.in/news/999607.htm
கடந்த 20.10.2008 அன்று மாலை 4.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி யில் வாடகைக் கார்கள் நிறுத்துமிடத்தில் செஞ்சியைச் சேர்ந்த முபாரக் என்ற இளைஞர் (வயது 22) டாட்டா சுமோ காரில் இருந்தார். அப்போது இருநபர்கள் அவரிடம் வந்தனர். தன்னை காவல் துறையைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். இங்குள்ள டி.எஸ்.பி. யுடைய மகன் ஓடிவிட்டார். அவரைத் தேடி (அவர் இருக்கு மிடம் தெரிந்து விட்டது) கொண்டு வர வேண்டும். கார் வாடகைக்கு வருமா? என்று கேட்ட தோடு, தின வாடகை ரூ.800 என்றும் எரிபொருள் நாங்கள் நிரப்பித் தருகிறோம் என்றும் பேசி முடித்து அங்கிருந்து சுமார் மாலை 5 மணிக்கு காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அதுசமயம் ஓட்டுநர் முபாரக்கின் சகோதரர் சாஹித் என்பவரும் அங்கு இருந்திருக்கிறார். இவர்கள் புறப்பட்டுச் சென்றதையும் அவர் பார்த்தார். வண்டி புறப்பட்டு போய்க் கொண்டிருந்த வழியிலிருந்து தனது வீட்டிற்கும் வண்டி உரிமையாளருக்கும் தகவலைச் சொல்லி பலமுறை போன் செய்திருக்கிறார். இறுதியாக இரவு 7.30 மணிக்கு ஓட்டுநர் முபாரக் தனது உரிமையளாருக்கு போன் செய்து ஓடிப் போன பெண்ணை இரவு 3 மணிக்கு மேல்தான் கொண்டு வர முடியும் என்றும் அதுவரை வண்டியை வந்தவாசிக்கு அருகாமையில் நிறுத்தி வைப்போம் என்றும் சொல்கிறார்கள், எனது செல் போனில் சார்ஜ் இல்லை. அதனால் இந்த தகவலை தங்களுக்குச் சொல்கிறேன். நாளைதான் நான் வரமுடியும் என்றும் சொல்கிறார். இதற்குப் பிறகு தொடர்பு இல்லை.
இந்நிலையில் 22.10.2008 அன்று வந்தவாசிக்கு அருகில் உள்ள தாழப் பள்ளம் என்ற இடத்தில் கிணற்றுடன் சேர்ந்த குளம் உள்ளது. அந்தக் குளத்தில் ஓர் ஆண்பிணம் மிதப்பதாக வந்தவாசி நகர காவல்துறைக்கு தகவல் தரப்பட்டு காவல்துறை சென்று பிணத்தை கைப் பற்றி பரிசோதனை செய்யும் பொழுது இஸ்லாமியர்களின் உடல் அடையாளங் கள் கண்டு உடனடியாக காவல்துறை அதிகாரிகள் வந்தவாசி தமுமுக மாவட்ட துணைச் செயலளாருக்கும் நகர நிர்வாகி களுக்கும் தகவல் தந்ததையடுத்து அவர்கள் விரைந்து சென்று பார்த்தனர். உடனடியாக அருகில் உள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவலைச் சொல்லி உங்கள் பகுதியில் யாரும் காணாமல் போய் இருக்கிறார்களா? என்று சொன்ன தின் பேரில் செஞ்சியில் உள்ள வாடகைக் கார் ஓட்டுநர் முபாரக் 20ம் தேதி போய்விட்டு 21ஆம் தேதி வரு வதாகச் சொன்னார். 22ஆம் தேதி வரை வரவில்லை என்ற கலக்கத்தில் அவர்கள் தேட தமுமுக செஞ்சி நகர நிர்வாகிகளால் இந்தத் தகவலை வெளியிட பதறியடித்துக் கொண்டு முபாரக்கின் பெற்றோர்கள் உறவினர்கள் தமுமுக நிர்வாகிகளை உதவிக்கு அழைத்துக் கொண்டு உட னடியாக வந்தவாசிக்கு விரைந்தனர். வந்தவாசி காவல்துறையால் கைப்பற்றப் பட்டு சவங்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த முபாரக்கின் சடலத்தைப் பார்த்த முபாரக் கின் உறவினர்கள் கதறி அழுதனர். தமுமுகவின் நகர நிர்வாகிகள் உறுப்பினர் கள் என பல நூறு பேர் ஒன்றாகத் திரண்டு முபாரக்கின் உடலைப் பெற்று உடலுடன் செஞ்சிக்குச் சென்று அடக்கம் செய்து நடந்த தகவலை தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்களுக்கு தெரியப் படுத்தப்படுத்தினர். அதன் பின்னர் பொதுச் செயலாளர் அவர்கள் மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.எம். ஜுனைத் அவர்களைத் தொடர்பு கொண்டு உடனடியாக சம்பவ இடங்களுக்குச் சென்று நிலைமையைக் கண்டறிய வேண்டுமென கேட்டுக் கொண்டதிற்கு இணங்க மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.எம். ஜுனைத், மக்கள் உரிமைச் செய்தியாளர் ஆகியோர் கடந்த 24.10.2008 அன்று காலை வந்தவாசி நகரத்துக்குச் சென்று காவல்துறை துணைக் கண்காணிப் பாளர், ஆய்வாளர் ஆகியோரை சந்தித்து காவல் துறை மேற்கொண்ட நட வடிக்கை தொடர்பாக கேட்டறிந்தனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு வந்தவாசி நகரத்தின் வாடகைக் கார் ஓட்டுநர் அன்சாரி என்பவரை இதேபோன்று காரை வாடகைக்குப் பேசி அழைத்துச் சென்று வந்தவாசிக்கு அருகில் உள்ள சாத்தனூர் சாலையில் கொலை செய்து விட்டு வண்டியை எடுத்துக் சென்று விட்டனர். இதேபோன்று அந்த சடலத்தையும் தண்ணீரில் மிதக்கவிட்டிருந்தனர். அந்தக் கொலையைச் செய்த நபர்கள் கடலூர் மாவட்டம் விருத்தாச் சலத்துக்கு அருகில் உள்ள கம்மா புரம் என்ற ஊரைச் சேர்ந்த வெங்கடரமணி என்பவனும் வந்த வாசிக்கு அருகில் உள்ள மருதாடு என்ற ஊரைச் சேர்ந்த முன்னாள் திமுக ஒன்றியச் செயலாளர் காசி விஸ்வநாதன் என்பவரின் மகன் செந்தில் குமார் என்பவனும் மேற்கண்ட கொலைக்கான குற்றவாளிகள் இவர்கள் இருவர் மீதும் கொலைக் குற்ற வழக்கு நடத்தப்பட்டு கடந்த 2007 ஆம் ஆண்டு இருவருக்கும் தலா 22 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டு இரு கொலைக் குற்றவாளிகளும் உயர்நீதி மன்றத்தில் மேல்முறை யீடு செய்து தற்போது ஜாமீனில் வெளிவந்துள் ளனர். இதையறிந்த வந்தவாசி காவல்துறை அதிகாரி கள் இருவரையும் கொண்டு வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.
குற்றவாளிகள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக வாக்கு மூலம் அளித்தனர். இந்நிலையில் 20ஆம் தேதி செஞ்சியில் கார் வாட கைக்கு எடுக்கும் போது உடனிருந்த கொலையான முபாரக்கின் சகோதரரை தமுமுக நிர்வாகிகளும் காவல்துறை யினரும் அழைத்து வந்து வேறொரு காவல் நிலையத்தில் இருந்த குற்றவாளி களைக் கொண்டு அடையாள அணி வகுப்பு நடத்தினார்கள். அவர் இவர்கள் அல்ல என்று சொல்லியதற்கு பிறகு வந்தவாசி நகர காவல் நிலையத்தில் நிறுத்தி முபாரக்கின் சகோதரரை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தினார்கள்.
செஞ்சியில் அவர்களை நன்றாக பார்த்திருந்த காரணத்தால் கொடிய குற்ற மிழைத்த குற்றவாளிகள் இருவரையும் முபாரக்கின் சகோதரர் சாஹித் மிக இலகுவாக அடையாளம் காட்டினார். அத்துடன் மட்டும் இல்லாமல் இக்கொடிய வர்களைக் கண்டவுடன் “அடப்பாவி களா - என் தம்பியை எப்படிடா கொன்றீர்கள்?’’ எனக் கதறியது நெஞ்சை உலுக்குவதாக இருந்ததாக போலீஸார் கூறினர்.
இந்நிலையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பிள்ளைநாயகம் தமுமுக மாவட்டத் துணைச் செயலாளரிடம் அதே தேதியில் அவன் சிதம்பரத்தில் இருந்ததாக ஒரு தகவல் உண்டு என்றும் காவல்துறையின் செயல்வேகம் சற்று தொய்வு அடைவது போன்றும் தெரிவ தாக தமுமுக மாவட்ட நிர்வாகிகள் கூறக் கேட்டோம். இச்செய்திகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதோடு உங்களுடைய செயல்பாடுகள் நீதிக்கு எதிராக இருக்கக்கூடாது என்றும் சட்டத்திற்கு முன்னால் குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும் அவ்வாறு செய் யத் தவறினால் ஜனநாயக ரீதியாக சட்டத்தின் முன் நீங்கள் நிறுத்தப்படுவீர் கள் என்ற அன்பு கலந்த எச்சரிக்கை விடுத்தார். உடனடியாக கொலையான முபாரக்கின் இல்லத்துக்கு சென்று அவருடைய பெற்றோர், உறவினர் வீட்டுக்குச் சென்று தமுமுக மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.எம்.ஜுனைத் மற்றும் நிர்வாகிகள் 22வயது வாலிபனை இழந்து தவிக்கும் முபாரக்கின் தாய் மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் சொல்லி விட்டு வந்தனர். இதில் குறிப்பிடத்தக்க சம்பவம் 2005லும் கொலை செய்யப் பட்டவர் முஸ்லிம் ஓட்டுநர்தான். 11.10.2008 அன்று கொலை செய்ய முயன்று தப்பித்து வந்தவரும் ஒரு முஸ்லிம் ஓட்டுநர்தான். 20.10.2008 அன்று கொலை செய்யப்பட்ட வரும் முஸ்லிம் ஓட்டுநர்தான். முஸ்லிம் என்றே இனம் கண்டு கொலை செய்யும் இம்மானுடக்கூட்டத்தின் மன்னிக்க முடியாத மாபாதகக் குற்றவாளிகள் சட்டத் தின் முன் தண்டிக்கப்பட்டு மகனை இழந்து துடிக்கும் ஒரு தாயின் கண்ணீர் துடைக்கப்படுமா? அல்லது காவல்துறையின் கரங்கள் கட்டப்பட்டு நீதிகள் மறுக் கப்பட்டு இது போன்று இனம்பார்த்து கொலை செய்து கொள்ளையடிக்கும் கூட்டங்களை வளரவிடுமா? என்ன செய்யப் போகிறது சட்டமும் தமிழக அரசும் என்பதை கண்டறியக் காத்திருப்போம்.
No comments:
Post a Comment