தொடரும் காவல் துறையின் மனித உரிமை மீறல்!
தந்தை - மகன்களை நிர்வாணப்படுத்தி நீலாங்கரை காவல்துறையின் மனித உரிமை மீறல்!!
காவல் நிலையத்தை முற்றுகையிட்டது தமுமுக!!!
அநியாயமாக பாதிக்கப்பட்ட யூசுப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கவும், காவல் ஆய்வாளர் சேகர் பெர்னான்டோ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
அச்சிறுப்பாக்கம் ஷாஜஹான்
Source: http://tmmk.in/news/999624.htm
காஞ்சி மாவட்டம் கிழக்கு கடற் கரைச் சாலையில் உள்ளது பனையூர். நீலாங்கரை காவல் நிலை எல்லைக் குட்பட்ட இப்பகுதியின் தமுமுக கிளைத் தலைவராக இருப்பவர் யூசுப். இவரை யும் இவரது குடும்பத்தினரையும் பழிவாங்கும் நோக்கத்துடன் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து நிர்வாணப்படுத்தி மனித உரிமை மீறலை நிகழ்த்தியுள்ளார் நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் சேகர் பெர்னான்டோ.
யூசுப் அவரது தம்பி காதர் பாஷா ஆகியோருக்கும், யூசுபின் தந்தை தமீம்ஷா மற்றும் மற்ற தம்பிகள் முஜிபு, பரகத் ஆகியோருக்கும் இடையே தங்கள் சொந்த நிலம் தொடர்பான பிரச்சினை யில் யூசுபின் வீடு தாக்கப்பட்டது.
இதையறிந்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் சேகர் பெர்னான்டோ தனது நீண்ட நாள் கனவு நனவாக கிடைத்த வாய்ப்பாகக் கருதி இதை முழுமையாய் பயன்படுத்தி யூசுபையும் அவரது குடும்பத்தினரையும் கேவலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இப் பிரச்சினையில் தொடர்புடைய இரண்டு தரப்பினரும் காவல் நிலையம் சென்று புகார் அளிக்காத நிலையில், தானாகவே இப்பிரச்சினையில் தலையிட்டு காவலர் களை அனுப்பி இரண்டு தரப்பினரையும் தனித்தனியே காவல் நிலையத்திற்கு வரச் சொல்லியுள்ளார். அவர்களோ காவலர்களிடம், “நாங்களே எங்கள் பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள் வோம்’’ என்று சொல்லியுள்ளனர்.
இதையடுத்து ஆய்வாளர் சேகர் பெர்னான்டோ, உதவி ஆய்வாளர் மீனாட்சி சுந்தரத்தையும் சில போலீஸ் காரர்களையும் அனுப்பி இரண்டு தரப்பி னரையும் கட்டாயப்படுத்தி அழைத்து வரச் செய்துள்ளார். மாலை 5 மணிக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்களிடம், “இப்பிரச்சினை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்து விட்டது. ஆகவே நீங்கள் உங்கள் குடும்பத்தார் மீது புகார் கொடுங்கள். அதிகாரிகள் முன்னிலை யில் சமரசம் பேசி புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்’’ என வஞ்சக மாகப் பேசி புகார் பெற்றுள்ளார்.
மறுபுறமோ, “உங்கள் மீது யூசுப் புகார் அளித்துள்ளார், ஆகவே நீங்கள் அவர் மீது புகார் கொடுங்கள்’’ என்று கூற, அவர்களும் புகார் அளித்துள்ளார்கள். ஆனால் அப்புகாரைப் படித்த ஆய்வாளர், “இந்தப் புகார் வேண்டாம். நான் சொல் வது போல புகார் மனு எழுதுங்கள்’’ எனக்கூறி புகார் பெற்றுள்ளார் ஆய்வா ளர் சேகர் பெர்னான்டோ.
புகாரை வலியுறுத்தி பெற்ற ஆய் வாளர், இரண்டு தரப்பினரையும் “சமரசம் பேசலாம் வாருங்கள்’’ எனக்கூறி அழைக்கப்பட்ட இரண்டு தரப்பினரிட மும் இன்னும் சற்று நேரத்தில் துணை ஆணையர் வந்து விடுவார் எனக் கூறியே இரவு 12 மணி வரை காலம் கடத்தியுள்ளார். பிறகு யூசுபின் தந்தை யையும் தம்பிகளையும் ஒன்றுசேர நிர்வாணப்படுத்தியுள்ளார். இதையடுத்து யூசுப், “சார் இதெல்லாம் சரியல்ல, இதுபோல நீங்கள் ஈடுபடுவது நல்லதல்ல’’ எனக்கூற, “நீ மட்டும் என்னடா, நீயும் லுங்கியை அவுருடா’’ எனக்கூற அவரையும் நிர்வாணப்படுத்தி மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளார்.
இரவு 1 மணிக்கு மேல் காவல் நிலையம் வந்த துரைப்பாக்கம் சரக காவல் துணை ஆணையர் ராதாகிருஷ் ணன், ஆய்வாளர் பெர்னான்டோ இரு வரும் யூசுப் உட்பட அவரது குடும்பத் தினர் அனைவரின் மீதும் உடனடியாக இரவோடு இரவாக கடுமையான குற்றப் பிரிவுகளைக் கொண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
முஸ்லிம்கள் அனைவரும் ஈகைத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் சேகர் பெர் னான்டோ நிகழ்த்திய மனித உரிமை மீறல் அப்பகுதி முஸ்லிம்களிடம் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது.
பரங்கிமலை ஒன்றிய தமுமுக செயலாளர் ஜாகீர் இதுதொடர்பாக மாவட்டத் தலைவர் எம். மீரான் மொய்தீன், மாவட்டச் செயலாளர் யாக்கூப் ஆகியோரிடம் கூற, மனித உரிமை மீறல் நிகழ்த்திய சேகர் பெர்னான்டோவின் அராஜகத்தைக் கண்டித்து மேற்படி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பரங்கி மலை ஒன்றிய தமுமுக சார்பில் நீலாங்கரை காவல் நிலையம் முற்றுகைப் போராட் டத்தை அறிவிக்க, ஒரே நாளில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் பங்குகொண்டு கைதானார்கள்.
இதுதொடர்பாக மாவட்டத் தலைவர் எம். மீரான் மொய்தீன் அவர்கள் கூறுகையில், “இப்பகுதியில் தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களிடமும் அதிகார துஷ்பிரயோகத்தைக் கையாளும் நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் சேகர் பெர்னான்டோவிற்கு துரைப்பாக்கம் ஏ.சி. ராதாகிருஷ்ணன் துணை போகிறார். இது வன்மையாகக் கண்டிக்க த்தக்கது. அநியாயமாக பாதிக்கப்பட்ட யூசுப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கவும், சேகர் பெர்னான்டோ மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் கோரு கிறோம். அந்நடவடிக்கை எடுக்கும்வரை இன்ஷாஅல்லாஹ் மாநிலத் தலைமையின் ஆலோசனையுடன் விரைவில் மாவட்டம் தழுவிய அளவில் பெரும் போராட்டங்களை அறிவிப்போம்’’ என்றார்.
No comments:
Post a Comment