தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது.ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர்.தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது..
Friday, October 26, 2007
ரத்த வெறிபிடித்த அத்வானி மற்றும் மோடி ஆகிய இருவரையும் கைது செய்வது எப்பொழுது?
தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது.ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர்.தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.இராமாயணத்தில் கூறப்படுவது இந்த இலங்கை அல்ல
மஞ்சை வசந்தன்
காலால் நடந்துதான் செல்லவேண்டும் என்ற சூழலில், காட்டில் திரிந்த இராமன், இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை.மேலும், இந்தியாவில் பல அரசுகள், பல மன்னர்களால் ஒவ்வொரு பகுதியும் ஆளப் பட்டு அந்தக் காலத்தில், ஒரு நாட்டைவிட்டு, மற்றொரு நாட்டிற்கு இராமன் முதலா னோர் வர வாய்ப்பும் இல்லை; வரவேண்டிய கட்டாயமும் இல்லை; வருவதும் கடினம். எனவே, அயோத்தியின் ஆளு கைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த காட்டில்தான் அவர் கள் வாழ்ந்திருக்க முடியும்.
5. பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்துவிட்டு வா! என்பதுதான் தசரதனின் கட் டளை. ஒரு அரசன் காட்டுக் குப் போ என்று கட்டளையிட்டால் என்ன அர்த்தம்? அவனது ஆளுகைக்கு உட் பட்ட காட்டுக்குப் போ என் பதுதானே? ஒரு அரசு - நாடு, காடு என்ற இருபெரும் பகுதி களை உடையது. மன்னர்கள் காடுகளுக்குச் சென்று வேட் டையாடுவர். முனிவர்கள் காடுகளுக்குச் சென்று தவம் மேற்கொள்வர் என்பதே மர பாகச் சொல்லப்படும் செய்தி. அதன் வழி நோக்கின், தசர தனின் ஆளுகைக்கு உட்பட்ட, அவனது நாட்டை ஒட்டியுள்ள காட்டிற்கு மரவுரி போன்ற தவக்கோலத்துடன் இராமன் சென்றான் என்பதுதானே பொருள். அப்படியாயின் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள தமிழகத்திற்கு எப்படி வரமுடியும்? ஏன் வரவேண் டும்? எனவே, இராமாயணத்தில் சொல்லப்படும் இலங்கை தென்னிலங்கை அல்ல அது வடக்கேயுள்ள இலங்கை என் பது உறுதி செய்யப்படுகிறது.
6. இராமாயணத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்களாகச் சொல்லப்படும் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன், மண்டோதரி, இந்திரஜித், சூர்ப்பநகா போன்ற பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் அல்ல. வட இலங்கையில் வாழ்ந்தவர்கள் என்பதாலே அவர்களுக்கு இப் பெயர்கள் இருந்தன. தென்னி லங்கையைச் சேர்ந்தவர்களா யின் அவர்கள் பெயர் தமிழில் இருந்திருக்கும். இதன் வழி நோக்கினும் இந்த இலங்கை யல்ல என்பது உறுதி.
7. காட்டில் இராமன் இருக்கும் இடத்திற்கு சூர்ப்பநகா சென்றாள், என்று இராமாயணத்தில் கூறப்படுகிறது. தென்னிலங்கையிலிருந்த சூர்ப் பநகா வடநாட்டிலுள்ள இராமனை எவ்வாறு அறிந் தாள்? எதற்காக வடநாட்டிற் குச் சென்றாள்? காரணமே இல்லை. அப்படியிருக்க தென் னிலங்கையிலிருந்து சூர்ப்பநகா சென்றதாகக் கூறுவது முற் றிலும் தவறு.
மேலும், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் பேசிய மொழி தமிழ். அப்படியிருக்க இவள் எப்படி வடநாட்டு இராமனுடன், லட்சுமணனுடன் பேசியிருக்க முடியும்? சவால் விட்டு வந்திருக்க முடி யும்? இராமன் லட்சுமணன் தமிழ் தெரியாதவர்களாயிற்றே! சுருக்கமாகச் சொன்னால் ஆயி ரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள இராமனைப் பற்றி சூர்ப்பநகா கேள்விப்பட் டிருக்கக் கூட வாய்ப்பில்லை!
8. வடநாட்டில் உள்ள காட் டில் மூக்கறு பட்டு மார்பறு பட்டு மீண்டும் தென்னிலங் கைக்கு வர எத்தனை மாதங்கள் ஆகும். தன் அண்ணன் இராவ ணனிடம் நடந்ததைச் சொல்லி, இராவணன் சீதையைக் கவர்ந்து வர வடநாட்டிற்குச் செல்ல எத்தனை மாதங்கள் ஆகியிருக்கும். பல மாதங்க ளுக்குப் பிறகே இராவணன் வடநாட்டைச் சென்றடைந்தி ருக்க முடியும். அந்த கால இடைவெளியில் இராமன், இலட்சுமணன், சீதை ஆகிய மூவரும் காட்டில் வேறு பகு திக்குச் சென்றிருப்பர். அப்படி யிருக்கையில் இராவணன் சீதையைக் கண்டு பிடித்து எப் படி தூக்கி வந்திருக்க முடியும்?
இவ்வளவும் நடக்க வேண்டும் என்றால், அயோத்திக்கு அருகில் அயல்நாடாயிருந்த வட இலங்கையில்தான் இவை நடந்திருக்க முடியும்.
சூர்ப்பநகை ராமனை அறி யவும், அவள் அவமானப்பட வும், அண்ணனிடம் உடனே வந்து சொல்லவும், அண்ணன் இராவணன் உடனே புறப் பட்டு போய் சீதையைக் கொண்டு வரவும், இராமன் உடனே தூது அனுப்பி விடுவிக்கக் கேட்டுக் கொள்ளவும் அருகிலுள்ள இலங்கையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம். தென்னிலங்கையிலிருந்து இத்தனை முறை போய்வர வாய்ப்பே இல்லை. எனவே, இராமாயணத்தில் சொல்லப் படுவது தென்னிலங்கையல்ல. என்பது உறுதியாகிறது.
9. சீதையைத் தூக்கிச் சென்ற இராவணன் வான்வழி யாகச் சென்றான், ஜடாயு எதிர்த்துப் போரிட்டது என் றெல்லாம் இராமாயணத்தில் சொல்லப்படுகிறது. அப்படி யாயின் அந்தக் காலத்திலே விமானம் இருந்திருந்தால், இராமன் இலங்கைக்குச் செல் லுகையில் விமானத்திலே சென் றிருக்கலாமே. ஏன் பாலம் கட்ட வேண்டும்?
அதுமட்டுமல்ல, இலங்கை யில் போர் முடிந்து இராமன் திரும்பும்போது அயோத்தியில் விமானத்தில் வந்தான் என்று சொல்லப்படுகிறது. அப்படி யாயின் போகும் போது விமா னத்தில்தானே போயிருக்க வேண்டும்? ஏன் பாலம் கட்ட வேண்டும்? அப்படியாயின் இராமர் பாலம் என்பதே கட்டுக்கதை அல்லவா?
10. சஞ்சீவி மலையையே தூக்கி வரக்கூடிய வலுப் படைத்த அனுமான் இருக்கும் போது இவர்கள் ஏன் பாலம் கட்ட வேண்டும்? இராமன், இலட்சுமணன் இவர்களை பல்லக்கில் அமரச் செய்து அப்படியே அலேக்காசு தூக்கிச் சென்று அனுமார் இலங்கையில் விட்டிருப்பாரே. அப்படியிருக்க பாலம் கட்டி னார்கள் என்றால், முட்டா ளைத் தவிர எவன் நம்புவான்?
11. இராமர் பாலங்கட்டிய போது குரங்குகள் மலை களைச் சுமந்து சென்று போட்டதாக இராமாயணம் சொல்கிறது. அப்படியாயின் இலங்கைக்கு எதிரிலுள்ள தமிழகக் கடலோரப் பகுதியில் அதாவது இராமேஸ்வரம் பகுதியில் மலைகள் இருக்க வேண்டும். ஆனால் இல் லையே! அப்படியிருக்க எப் படி மலைகளை பாறைகளை எடுத்துச் சென்று போட்டி ருக்க முடியும்?
எனவே, மலை சூழ்ந்த வட இந்தியாவிலுள்ள இலங்கை யில்தான் அது சாத்தியம். எனவே இராமாயணத்தில் குறிக்கப்படுவது இந்த இலங்கை அல்ல!
12. இராவணன் கைலாய மலையைத் தூக்கினான் என்று அவனது வல்லமையைப் பற்றிச் சொல்லப்படுகிறது. அப்படி யாயின் இராவணன் வட இந் தியாவில் வாழ்ந்தவன் என்பது உறுதியாகிறது. அப்படியாயின் இராமாயணத்தில் வருவது வட இந்தியாவிலுள்ள இலங்கை யேயன்றி தென்னிலங்கையல்ல!
13. மேலும் சேதுக் கால் வாய்ப் பகுதியிலுள்ள மணல் திட்டை தோண்டிப் பார்த்தால் 20 மீட்டர்களுக்கு மேல் மணலே செல்கிறது. பாறை களைக் கொண்டு பாலம் அமைந்திருந்தால் பாறைகள் அல்லவா வரவேண்டும். எனவே, இது இயற்கையான மணல் மேடு என்பது மலை மேல் விளக்காக விளங்குகிறது.
14. வால்மீகி இராமாய ணத்தில், இலங்கையில் போர் முடிந்த பின் நாடு திரும்பிய இராமன், தான் கட்டிய (பாலத்தை) அணையைத் தானே அழித்துவிட்டுச் சென் றதாகச் சொல்லப்படுகிறது. அப்படியிருக்க இராமன் கட் டிய பாலம் இன்னமும் இருக் கிறது என்பது மோசடியல் லவா?
இராமாயணத்தையும், இராமனையும் மக்கள் நம்புகி றார்கள் என்றால், இராமர் பாலமும் இன்னமும் இருக் கிறது என்று கூறுவது மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது அல் லவா? அப்படியாயின் இராமர் பாலம் இருக்கிறது; அதை இடிக்கக்கூடாது என்பவர்கள் தானே இராமனுக்கு எதிரான வர்கள்? விந்திய மலைப் பகுதி அல்லது மஹாநதிப் பகுதி களை ஆய்வு செய்தால், இராமாயணத்தில் குறிக்கப் படும் இலங்கையை அடை யாளங்காண முடியும். அமர்க் கண்ட் அல்லது சோட்டா நாக் பூர் பகுதியில்தான் இலங்கை இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் பலன் கூறுகின் றனர்.
அதுமட்டுமல்ல, கடல் பகுதியில் இராமர் பாலம் அமைக்கப்பட்டதாக இராமா யணம் அறிவிக்கவில்லை. கடல் பகுதியில் பாலம் அமைக்கவும் இயலாது.
எனவே, அயோத்தியின் ஆளுகைக்கு உட்பட்ட நாட் டின் அண்டை நாடாகவே இலங்கை இருந்திருக்க முடி யும். மாறாக, இந்தியாவின் தென்கோடியில் உள்ள தென் இலங்கையாக இருக்க வாய்ப்பே இல்லை.
மேற்கண்ட தடயங்களை ஒரு முறைக்கு பல முறை படித்தால் யாரும் இவ்வுண் மையை அய்யமற அறிந்து தெளிய முடியும்.
அப்படியிருக்க சம்பந்தமில் லாத தென் இலங்கையோடு இராமாயணத்தை முடிச்சுப் போட்டு, இயற்கையான மணல் திட்டை இராமர் பாலம் என்று வீண்சிக்கலை உருவாக்குவது, சுயநலமிகள் மற்றும் மத வெறியை ஊட்டி, மக்களை உசுப்பி, அதை வாக்காக மாற்றி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று அலையும் ஆதிக்கக் கூட்டத்தினரின் அடா வடிச் செயல்பாடாகும். இதற்கு உச்ச நீதிமன்றம் உடந்தையாகக் கூடாது என்பதே நீதியாளர் களின் எண்ணம். நாட்டின் நலன் விரும்புவோரின் நாட்ட மும் அதுவேயாகும்.
இல்லாத ஒரு கற்பனைக் காரணத்திற்காக ஒரு இணையற்ற திட்டத்தை முடக்காமல், தடை ஆணை விரைவில் நீக்கப்பட்டு, திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட அனைத்து மக்களும் துணை நிற்க வேண் டும். அதற்கு இக்கருத்துகள் தீவிரமாகப் பரப்பட்டு மக்க ளுக்கு தெளிவு உண்டாக்கப்பட வேண்டும் உண்மை விளக்கப் பட வேண்டும்.
நன்றி : விடுதலை
Thursday, October 25, 2007
''பூமாதேவி என்பது கோடானுகோடி மக்களின் நம்பிக்கை. எனவே, அதில் துளைபோட்டு குழாயை விடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை கொடுக்குமா?
இராமாயணத்தில் கூறப்படுவது இந்த இலங்கை அல்ல
- ''பூமாதேவி என்பது கோடானுகோடி மக்களின் நம்பிக்கை. எனவே, அதில் துளைபோட்டு குழாயை விடக்கூடாது என்று கூறமுடியுமா? அந்த நம்பிக்கையைத் தகர்த் துத்தானே பூமாதேவியைக் குடைகிறார்கள்! பூமாதேவி கோடிக்கணக்கானோரின் நம்பிக்கை. அது பூமி தெய்வம். எனவே, அதில் ஓட்டை போடக்கூடாது என்று ஒருவர் வழக்குப் போட்டால், உச்ச நீதிமன்றம் தடை கொடுக்குமா?''
மஞ்சை வசந்தன்
சேதுக் கால்வாய்த் திட்டம் நீண்ட நாளைய முயற்சி. செயல் திட்டம் கூடிவரும் வேளையில் மதவெறிக்கூட்டமும், சுயநலக் கூட்டமும் எதையெதையோ சொல்லி, எப்படியெப்படியோ எதிர்த்து, இறுதியில் அவர் களின் கடைசிப் புகலிடமாக உச்சநீதிமன்றத்தில் நின்று உருக்குலைக்கப்பார்க்கிறார்கள்.
இதற்கு, இராமர் பாலம் என்ற இல்லாத கற்பனை அவர்களின் கையாயுதம்; இரா மாயணம் அவர்களின் கவசம்; நம்பிக்கை என்று வாதிடுவது அவர்களின் வலிமை. நம்பிக்கை என்பது ஒரு வரின் தனிப்பட்டக் கருத்து அது உண்மையை உறுதி செய்ய உதவாது. அவன்தான் கொலை செய்தான் என்று ஒருவருக்கு நம்பிக்கையிருக் கலாம். அவரது நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தண்டனை வழங்க முடியுமா? என்று கேட்டால், பெருவாரியான மக்கள் நம்புகிறார்கள் - என்ற வாடிக்கையான வாதத்தை வைப்பார்கள். நாவரசு என்ற, அண்ணா மலைப் பல்கலைக் கழக மருத் துவ மாணவரை, ஜான் டேவிட் என்பவன்தான் கொலை செய் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை அனைவரும் நம்பினர். ஆனால், ஆதாரம் இல்லையென்று நீதி மன்றம் ஜான் டேவிட்டை விடுதலை செய்துவிட்டதே! அப்படியென்றால் நீதிமன்றத்திற்குத் தேவை ஆதாரமே யன்றி, நம்பிக்கையல்ல.
ஆனால் அவாள் வழக்கு என்று வந்துவிட்டால், ஆதாரம் எதுவும் தேவையில்லை சட்டம், நடைமுறை, விதிமுறை எதுவும் வேண்டாம்! மனுதர்ம காலந்தொட்டு, மக்களாட்சிக் காலம் வரை இதுதான் நிலை!
செத்துப்போன பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி (பெரியவாள்) கோமா நிலையில் இருந்தபோது நடந்த கனகாபிஷேகத்திற்கு வெளி நாட்டிலிருந்து தங்கம் வந்த போது அப்பெட்டியை எச் சோதனையும் செய்யாமல் அப்படியே அனுப்ப வேண்டு மென்று சுங்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இன்றளவும் அத்தங்கத்திற்கு கணக்கில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு இது தெரிந்தாலும் அது கண்டு கொள்ளாது. காரணம் இது அவாள் சமாச்சாரம்! ஆனால், குப்பனும் சுப்பனும் அரை பவுன் எடுத்து வந்தால், சுங்கத் துறை சுற்றி வளைத்து அவனைப் பங்கம் செய்து பத்திப் பத்தியாய் செய்தி வெளியிட்டு விடும்.
மசூதி இருக்கும் இடத்தில் தான் இராமர் பிறந்த இடம் இருக்கிறது என்பர். ஆதாரம் என்னவென்று கேட்டால், அது இந்துக்களின் நம்பிக்கை என்பர். மதுராவில் உள்ள மசூதியை இடிக்க வேண்டும் என்பர். ஏன் என்று கேட்டால், கண்ணன் பிறந்த சரியான இடம் மசூதிக் குள்தான் உள்ளது என்று காரணம் கூறுவார்கள். ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டால், ஆதாரம் எல்லாம் எதுவும் இல்லை, எங்கள் நம்பிக்கை என்பர்.
பாமர மனிதன்கூடப் பட் டென்று சொல்வான். இது பச்சை அயோக்கியத்தனம் என்று. ஆனால், நீதிமன்றங்களுக்கு மட்டும் அது நியாயமாகவே படுகிறது!
சிவபெருமான் தலையில் நிலவு இருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை. சிவன் இந்திய நாட்டுக் கடவுள், எனவே, நிலவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறினால், அமெரிக்கா, இரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒத்துக் கொள்ளுமா?
இந்திய நாட்டுக் கடவுள் திருமால், பூமியை ஒரு காலால் அளந்து தனக்கு உரிமை யாக்கிக் கொண்டார். ஆகாயத்தை இன்னொரு காலால் அளந்து உரிமையாக்கிக் கொண்டார். எனவே, ஆகாயம், பூமி இரண்டுமே இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தம், அதுவும் வைணவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடினால், உலக நாடுகள் ஒத்துக் கொள்ளுமா? குறிப்பாக சிவனை வணங்குகிறவர்கள் ஒத்துக் கொள்வார்களா?
பூமாதேவி என்பது கோடானுகோடி மக்களின் நம்பிக்கை. எனவே, அதில் துளைபோட்டு குழாயை விடக்கூடாது என்று கூறமுடியுமா? அந்த நம்பிக்கையைத் தகர்த் துத்தானே பூமாதேவியைக் குடைகிறார்கள்! பூமாதேவி கோடிக்கணக்கானோரின் நம்பிக்கை. அது பூமி தெய்வம். எனவே, அதில் ஓட்டை போடக்கூடாது என்று ஒருவர் வழக்குப் போட்டால், உச்ச நீதிமன்றம் தடை கொடுக்குமா?
இவையெல்லாம் பைத்தியக் காரத்தனம் என்றால், இராமர் பாலம் என்பது வெறும் நம்பிக் கையின் அடிப் படையிலானது, அதுவும், புதிதாய்ப்புனையப்பட்ட நம்பிக்கையிலானது என்னும் போது, அதற்கு மட்டும் என்ன தடையாணை? எந்த அடிப்படையில் தடை யாணை வழங்கப்படுகிறது?
அப்படியே நம்பிக்கை யென்று கொண்டாலும், இராமர் பாலம் என்பதும் இலங் கையென்பதும் வடஇந்தியா விலுள்ளதா? தென்னிந்தியா விலுள்ளதா? அதையே விளங் கிக் கொள்ளாமல் ஆர்ப்பாட்டம், அடாவடித்தனம் அன்றாடம் அரங்கேற்றுவது அசல் மோசடித்தனமல்லவா? இந்த இலங்கையா?
1. வடபுலத்தில் உள்ளது போலவே தென்புலத்திலும் (தமிழகத்திலும்) நகரங்கள் உண்டு.
வடக்கே காசி - தெற்கேயுள்ளது தென்காசி
வடக்கேயுள்ளது மதுரை - தெற்கேயுள்ளது தென்மதுரை.
வடக்கேயுள்ளது தான் இலங்கை- தெற்கேயுள்ளது தென்னிலங்கை.
தற்போது ஸ்ரீலங்கா என்று அழைக்கப்படும் பகுதிக்கு, தென்னிலங்கை என்றுதான் பெயரேதவிர இலங்கை என்பது அல்ல.
தமிழகத்தில் உள்ள மதுரை தென்மதுரைதான். மதுரை என்பது கண்ணன் பிறந்த பகுதிதான்.
தெற்கத்திக் கள்ளனடா தென்மதுரைப் பாண்டியன் டா என்ற திரைப்படப் பாடல் கூட இவ்வழக்கத்தை; இவ்வுண்மையை உறுதி செய்யப் போதிய சான்றாகும்.
அதுபோல்தான், நமக்கு அருகிலுள்ள இலங்கை தென்னிலங்கை என்றே நீண்ட நெடுங்காலமாக அழைக்கப் பட்டு வருகிறது.
இது தென்னிலங்கை என்றால், வடக்கேயுள்ளது இலங்கை என்பது உறுதியாகிறது.எனவே, இராமாயணத்தில் சொல்லப்படுவது வட இந்தியாவில் உள்ள இலங்கையே தவிர, இந்த இலங்கை இல்லை.
2. இலங்கைத் தீவு பின்னால் உருவானது.
இராமாயணம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இலங்கை தனித்தீவாக இல்லை. அது தமிழ்நாட்டைச் சேர்ந்த நிலப்பகுதியாகவே இருந்தது.
தாமிரபரணி ஆறு தென்னிலங்கை வரை ஓடியதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. இந்த இலங்கை யின் பழைய பெயர் தாமிரபரணி என்பதேயாகும். அசோகர் கல்வெட்டில் இந்த இலங்கையானது தாமிரபரணி என்றே குறிக்கப்பட்டுள்ளது. கிரேக்க மொழியில் அதை தாப்ரோபேன் என்று அழைத்தனர்.
ஆறு எங்குச் சென்று முடிகிறதோ அந்த இடத்தை வைத்து அந்த ஆற்றை அழைப்பது வழக்கில் உள்ளது. சிதம்பரம் வட்டத்தில், ஒரு வாய்க்கால் உடையூர் என்ற ஊரில் சென்று முடிவடைவதால் அதற்கு உடையூர் வாய்க்கால் என்றே பெயர் வழங்குகிறது.அதைப்போல், மற்றொரு வாய்க்கால் அரியகோஷ்டி என்ற ஊரில் சென்று முடி வடைவதால் அதற்கு அரிய கோஷ்டி வாய்க்கால் என்று பெயர் வழங்குகிறது.
அவ்வாறு தான், தாமிரபரணி என்ற பகுதியில் சென்று முடிவடைந்ததால் அந்த ஆறு தாமிரபரணி ஆறு என்று அழைக்கப்பட்டது. இலங்கையின் பழைய பெயர், தாமிரபரணி என்பதுதான் - என்பதை தாமிரபரணி ஆற்றின் பெயரே அய்யமின்றி விளக்கிக் கொண்டு இருக்கிறது. இலங்கை அப்போது தனித்தீவாக இல்லை யென்பதற்கும் இது அசைக்க முடியாத சான்றாகும்.
3. இராமாயணம் நடந்த தாகக் கூறப்படும் காலத்தில் இலங்கை, தமிழகத் தோடுதான் சேர்ந்திருந்தது என்கின்ற போது, குறுக்கே கடல் இருக்க வாய்ப்பில்லை. அதனால், அணைகட்ட (பாலங்கட்ட) வேண்டிய அவசியம் இல்லை. அணை கட்டியதாக இராமா யணம் கூறுவதால், இராமாய ணத்தில் கூறப்படும் இலங்கை இதுவல்ல் வடக்கே அணை கட்ட வேண்டிய அவசியச் சூழலில் இருந்த, வட இந்தியா வில் உள்ளது இலங்கை தான் என்பது உறுதியாகிறது.
4. இராமன் பிறந்த இடம் வடநாட்டில் உள்ள அயோத்தி என்னும்போது, இராமன் பாலம் அமைத்ததாகக் கூறப் படும் இலங்கை, வட இந்தியா வில் உள்ள இலங்கைதான் என்பது உறுதியாகிறது.
தொடரும்.....
நன்றி : விடுதலை 24-10-2007
Monday, August 20, 2007
அமெரிக்கப் படையெடுப்பும் ஆயிரக்கணக்கான ஈராக் விதவைகளும்!
கடந்த வருடம் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய கொடூரமான ஆயுதத்தாக்குதலில் தன் கணவரைப் பறிகொடுத்த ராணா ஜலீல் என்ற 38 வயது பெண், தன் குழந்தைகளைக் காப்பாற்ற தான் விபசாரியாக்கப்படுவோம் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
நான்கு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண் தன் குடும்பத்தின் உயிர் பிழைக்க ஒரு வேலை தேடி, கடந்த ஒருவருடமாக கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பின் நடைப்பிணங்கள் நடமாடும் சுடுகாடாய் காட்சியளிக்கும் ஈராக்கில் நிர்க்கதியான பெண்கள் அதிகரித்து வருவதால் வேலை வாய்ப்புக்கள் பெருமளவு குறைந்து விட்டது.
பசியால் துடிக்கும் தன் பிள்ளைகளைக் காப்பாற்ற எத்தகைய கடுமையானதொரு வேலையையும் செய்ய, தான் தயாரான போதிலும் வேலை கிடைக்காத ஒரே காரணத்தினால் பிச்சை எடுக்கும் கேவல நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் இவருக்குப் பிச்சையிட்டவர்கள் கூட இவரை நடத்திய விதம் மோசமானதாகவே இருந்தது. இவருக்கு வேலை தருவதாகவும் உதவி செய்வதாகவும், போலிவேஷம் போட்டு முன்வந்தவர்கள் மனதில் கீழ்த்தர எண்ணங்களே மிகைத்திருந்தன என்கிறார் இவர்.
சம்பாதித்துக் கொண்டிருந்த கணவர் இறந்த சில வாரங்களிலிலேயே இவரது குழந்தைகளின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதற்கு ஒரே காரணம் - பசியும் பட்டினியும் என்பதால் செய்வதறியாது மருத்துவர்கள் திருப்பியனுப்பி விட்டனர்.
நம்பிக்கையை முற்றிலும் இழந்த நிலையில் செய்வதறியாது விக்கித்து நின்ற நிலையில் தான் மிக மோசமான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த நாட்களை நினைவு கூர்ந்து கண்களில் நீர் பனிக்க அவர் கூறுகிறார்: ஆரம்பத்தில் இவை என் வாழ்க்கையின் மிகப் பயங்கரமான நாட்களாக இருந்தது. என்... என்... குழந்தைகள் பசியின் காரணத்தால் உயிருக்குப் போராடுவதைக் கண்டும் என்னால் இதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை"
இறை விசுவாசத்தையும், துடிக்கும் தன்மான உணர்வுகளையும் மீறி மனதில் ஏற்படுத்திய இரணத்தின் காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறினேன். அருகிலுள்ள சந்தைப் பகுதிக்கு சென்றேன். நான் இயற்கையாகவே அழகிய உருவம் கொண்டுள்ளதால் எனக்கு சிரமம் ஏதும் ஏற்படவில்லை. என்னுடன் ஒப்புக்கொண்ட நபருடன் நான் தனியறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது திடும் என்று அடி மனதில் எழுந்த அச்சத்தினால் அலறி ஓட முயன்றேன். ஆனால், அந்த நபர் என்னை விடவில்லை. பலவந்தப்படுத்தி என் கற்பை சூறையாடிவிட்டார். அவர் வீசி எறிந்த காசைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு நேராக கடைக்கு ஓடினேன்.
நம்பிக்கையிழந்த ஈராக்கிய விதவைகள்
ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பிற்குப் பிறகு பெருமளவில் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தில் பொதுமக்கள் அழிந்து கொண்டு வருகின்றனர். கடைவீதியில், பொதுவிடங்களில், பொதுமக்கள் குழுமியிருக்கும் இடங்களில் குண்டு வெடித்துக் கொண்டு இருப்பதனால் தினசரி எழுபது, எண்பது பேர் இறந்தனர் என்ற செய்தி எல்லாம் இப்போது வெகு இயல்பாக, கேட்டுக்கேட்டுப் பழகிப்போன சர்வ சாதாரண செய்தியாய் மாறிவருவதை எவரும் மறுக்க இயலாது.
அமெரிக்கப்படை ஈராக்கினுள் கால் வைப்பதற்கு முன்னர் வரை ஈராக்கில் விதவைப் பெண்களுக்கு, குறிப்பாக ஈரான் - ஈராக் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு அப்போதைய ஈராக்கிய அரசு வீடு, இலவசக் கல்வி, மற்றும் உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதனை முறையாகவும் கொடுத்து வந்திருந்தது.
அத்தகைய எவ்வித உதவியும் தற்போதைய பொம்மை அரசு வழங்குவதில்லை என்பதும் கொடுத்து வந்த உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஓரளவு வசதி வாய்ந்த விதவைகள் இதில் விதிவிலக்காக தப்பித்துக்கொள்கிறார்கள்.
பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் அரசு சாரா அமைப்பான OWFI சமர்ப்பித்துள்ள புள்ளி விபரப்படி, அமெரிக்க அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட ஈராக்கிய விதவைகளில் 15 % பெண்கள் தங்களின் குடும்பத்தினருக்காக வேலை தேடிப் போராடி வருவதாகவும், தற்காலிக திருமணமோ, விபச்சாரமோ செய்யும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் என்ற பெண்மணி அல்ஜஸீராவிற்கு அளித்த பேட்டியில், "ஈராக்கிய விதவைகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தே இதற்கான தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். ஆனால் குறுகிய காலகட்டத்திலேயே இப்பெண்களின் பரிதாப நிலைமையின் பயங்கரம் முகத்தில் அறைய ஆரம்பித்து விட்டது. எங்களால் விவரிக்க இயலாத அளவிற்கு இப்பிரச்னை பூதாகரமாக உருவாகியிருக்கிறது. ஈராக்கிய தெருக்களில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான விதவைகள் வேலை தேடியும், பிச்சை கேட்டும் அலைகின்றனர்.
கடந்த 2003ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நுழைந்த பிறகு, அங்கே நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும் அதில் 20% பெண்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல்கள் என்றும், NGO நிறுவனம் இத்தகவலை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார்.
பெரும்பாலான பெண்கள் ஈராக்கிற்கு வெளியில் கடத்திச் செல்லப்பட்டும் விபச்சார விடுதிகளில் விற்கப்பட்டும் இருக்கலாம் என்று OWFI நம்புவதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் மனிதத்தன்மையற்ற தாக்குதலில் கணவர்களை இழந்து பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள் (ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் மட்டும்) 350,000 விதவைப் பெண்கள் என்றும், நாட்டில் மொத்த விதவைகள் மட்டும் எட்டு மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர் என்றும் ஈராக்கின் பெண்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தெரிவிக்கிறது.
துயரமான வியாபாரம்
விதவைகளாக உள்ள இளம் வயது ஈராக்கிய பெண்கள் நிலை இப்படி எனில் அமெரிக்க அராஜகத்தில் உடல் உறுப்புக்களை இழந்து நடைப்பிணமாக வாழ்ந்து வரும் ஏழைக்குடும்பங்கள் தங்களுக்கான வாழ்வாதாரம் ஏதுமற்று தங்களது மகள்களையே விபச்சாரத்திற்காக சந்தையில் விற்கும் மிகக் கொடூரமான இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கொடுமை எத்தனை பேர் அறிவர்?
ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான அபூ அஹ்மத் என்பவர் குண்டுவீச்சில் தன் மனைவியை இழந்து தானும் ஊனமுடைந்தவர். தன்னுடைய குழந்தைகளுக்கு உணவளிக்கத் திறனற்று, கடும் அவதியுற்று, வெளிநாடுகளிலிருந்து விபச்சாரத்திற்காக பெண்களை விலைக்கு வாங்க வந்திருந்த நபர்களிடம், லினா என்ற தன் சொந்த மகளையே விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
என் மகள் லினாவிற்காக விபச்சார விடுதியினர் கொடுத்த தொகையைக் கொண்டு என் மற்ற மூன்று மகள்களையும் ஒரு மகனையும் ஒரு வேளை உணவாவது சிரமமின்றி உண்ண வைக்க முடியும் என்று அல்ஜஸீரா நிரூபர்களுக்கு கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.
அபூ அஹ்மத்தின் சூழலைக் கண்டு பரிதாபப்பட்டு(?) தாமே அவரை வற்புறுத்தி அணுகி உதவியதாக ஷாதா என்கின்ற விபச்சார விடுதியைச் சேர்ந்த தரகுப்பெண் அல்ஜஸீராவிற்கு பேட்டியளித்துள்ளார். இளம் விதவைகளை இனம் கண்டு அவர்களது ஏழ்மையை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி வருவதாகக் கூறும் இவர் இளம் பெண்கள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு மிக அதிக விலைக்கு சந்தையில் விற்கப்படும் பெரும் வியாபாரம் பற்றி விளக்கினார்.
வெளிநாடுகளுக்கு பலவந்தமாகக் கடத்தபடும் ஈராக்கிய பெண்கள்
OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் மேலும் கூறுகையில் லினாவைப் போன்ற அபலைப் பெண்கள் வறுமையின் காரணமாக ஐநூறு அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறார்கள்.
தந்தையை இழந்ததினால் தன் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகிப் போன சுஹா எனும் 17 வயது இளம்பெண், தன்னுடைய பெற்ற தாயினாலேயே விபச்சார விடுதியில் விற்கப்பட்டார். சுஹாவிடம் பேட்டி கண்ட அல்ஜஸீராவிடம் அவர் கூறியது:
தான் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு ஏமாற்றி விற்கப்பட்டதாகவும் சிரியா மற்றும் ஜோர்டானின் தலைநகரான அம்மானில் உள்ள பெரும்புள்ளி விலங்குகளுக்கு தினசரி உணவாவதாகவும் கூறியது உருக்கமாக இருந்தது. விபச்சாரக் கொடுமை தாங்கமுடியாமல் ஒரு நாள் விடுதியிலிருந்து தப்பித்து ஓடி சிரியாவிலுள்ள ஈராக்கிய தூதரகத்தில் தஞ்சம் புகுந்ததாகவும் கூறினார். தற்போது தனது அத்தையின் வீட்டில் பாதுகாப்பாய் தங்கியிருக்கும் சுஹா, சிரியாவின் விபச்சார விடுதியில் இருந்து தான் தப்பித்து ஈராக் திரும்பும் வரை தனக்கு உதவிய ஒரு ஈராக்கிய குடும்பத்திற்கு தான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் நினைவுகூர்ந்தார். தன்னைப் போன்றே பலப்பல பெண்கள் இத்துயரத்தில் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாக்தாத்தின் பெண்ணுரிமைச் சங்கத்தின் (WRA) செய்தித் தொடர்பாளரான மயாதா ஜூஹைர் என்ற பெண் பேசுகையில் ஈராக்கிய அரசு மற்றும் அரசு சாரா (NGO) அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து இளம் பெண்களைக் கடத்துவதையும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதையும் தடுக்க முயன்று வருகிறோம். அமெரிக்கப் படையெடுப்பினால் நாசமாகிப் போய் இருக்கும் ஈராக்கில், வறுமையில் நிர்க்கதியாய் நிற்கும் விதவைகளும், இளம் பெண்களும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவிலான உதவியும் போதுமான அளவிற்கு நிதியுதவியும், மனித வளமும் இல்லாமல் இப்பிரச்னையை எளிதாக தீர்க்க முடியாது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம்.
தனது மார்க்கத்திற்கு முரணான காரியங்களை செய்து கொண்டிருப்பதை, தான் நன்கு உணர்வதாகக் கூறுகிறார், தன் கணவரை ஒரு வெடி விபத்தில் இழந்திருக்கும் நிர்மீன் லத்தீஃப் என்ற 27 வயதான விதவைப் பெண். தனது நிலையை எடுத்துக்கூறி பொருளாதார உதவி செய்யுமாறு தனது உறவினர்களை எவ்வளவு வேண்டிக் கொண்டும் பலனின்றிப் போகவே, வேறு வழியே இன்றி விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் கூறியவை:
"எனக்குத் தெரிவதெல்லாம் பசியினால் என் கண்முன்னே துடித்து இறந்து கொண்டிருக்கும் என் குழந்தைகள்; என் குழந்தைகள் மட்டுமே!" என்கிறார் வெறித்த பார்வையுடன்.
அகத்தில் இறைநம்பிக்கையின் விளிம்பில் நின்றுகொண்டு மனதோடு கடும் போர் நடத்திக்கொண்டும், புறத்தில் வாழ வழியின்றித் துடிக்கும் இவரைப் போன்ற இலட்சக்கணக்கான பெண்களின் இந்த இழிநிலைக்கு, சர்வதேச அளவில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் இஸ்லாமிய சமுதாயம் என்ன பதில் வைத்திருக்கிறது?
Thursday, August 16, 2007
தென்காசி கொலை: இந்து முண்ணனி தலைவர் கைது.. தென்காசி கலவரத்திற்கு மதசாயம் பூசுவோர் மீது நடவடிக்கை: த.மு.மு.க. வற்புறுத்தல்
- கைது செய்யப்பட்ட சக்திபாண்டியன் தென்காசி நகர இந்து முன்னணி தலைவராக உள்ளார்.
- தென்காசி கலவரத்திற்கு மதசாயம் பூசுவோர் மீது நடவடிக்கை: த.மு.மு.க. வற்புறுத்தல்
தென்காசி சம்பவத்திற்கு மதசாயம் பூசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று த.மு.மு.க. வற்புறுத்தி உள்ளது.தென்காசியில் நடைபெற்ற படுகொலைகள் மத மோதல்கள் இல்லை. இதற்கு மத சாயம் பூசப்படுவதை த.மு.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயல்பு நிலை திரும்பியது: தென்காசியில் இன்று கடைகள் திறக்கப்பட்டன
6 பேர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து தென்காசியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. கடந்த 2 தினங்களாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. பாதுகாப்புடன் குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டன.
அசம்பாவிதத்தை தடுக்க நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சோகமும், பீதியும் கவ்வியிருந்த தென்காசியில் இப்பொழுது சற்று இயல்பு நிலை திரும்பி உள்ளது. இன்று கடைகள் திறக்கப்பட்டன. பஜாரில் மக்கள் கூட்டம் மிதமாக காணப்பட்டது. பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் வழக்கம் போல் சென்றனர். வேன், ஆட்டோக்களும் இயங்க தொடங்கின.
எனினும் ஒருவித அச்ச உணர்வு தென்காசி பகுதி மக்களிடையே தொற்றியுள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழக முதல்வருக்கு தமுமுக அவசரக் கடிதம்!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தமிழக முதல்வருக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்.''நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று காலையில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த ஆறு நபர்கள் உயிர் இழந்தது மிகுந்த வேதனையைத் தருகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் குமாரபாண்டியனைக் கொலை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டவர்களும், கடந்த மார்ச் மாதம் தமுமுக மாவட்டத் தலைவர் சேட் கானை கொலை செய்யும் நோக்கில் பயங்கரமாக தாக்கியவர்களும் சமீபத்தில் நிபந்தனை பிணையில் விடுதலையாகி வெüயே வந்துள்ளார்கள்.
சாதாரணமாக இதுபோல் நிபந்தனை பிணையில் வெüவருபவர்களுக்கு வெü மாவட்டங்கüல் தான் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்படும். தென்காசியில் தமுமுக மாவட்டத் தலைவர் தாக்கப்பட்ட பிறகு தென்காசியில் நடைபெற்ற சிறுசிறு சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கும் திருச்சியில்தான் நிபந்தனை பிணையில் கையொப்பமிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் குமாரபாண்டியன் கொலை மற்றும் சேட்கான் கொலை முயற்சியில் கைதாகி நிபந்தனைப் பிணையில் விடுதலை செய்யப் பட்டவர்களுக்கு மட்டும் தென்காசியில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து சேட்கானை தாக்கி பிணையில் வெüயில் வந்தவர்கள் தொடர்ந்து முஸ்லிம்களை பல்வேறு வகையில் வீதிகளில் வைத்து மிரட்டி வந்தனர். மாலை நேரங்கüல் சில முஸ்லிம் வீடுகள் மீது கல்வீச்சிலும் இறங்கினர். இவ்வாறு அவர்கள் தென்காசியில் தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்தி வருவது குறித்து நாங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு அவ்வப்போது புகார் களை அüத்து வந்துள்ளோம்.
நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் சேட்கானை மீண்டும் தாக்கி கொலை செய்வோம் என்று அவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மிரட்டி வருவது குறித்தும் காவல்துறையிடம் புகார் தெரிவித்தோம், இருதரப்பிலும் கைதாகி விடுதலை ஆனவர்கள் தொடர்ந்து தென்காசியில் இருப்பது சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் என்பதையும் நாம் முன்கூட்டியே தெரிவித்திருந்தோம், தென்காசி டி.,எஸ்,பி.யாக இருக்கும் மயில்வாகனனும், ஆய்வாளர் சந்திரசேகரனும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களது செயல்பாடுகüனால் பதட்டம் அதிகரிக்க காரணமாகவும் செயல்பட்டனர் என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
தென்காசியில் அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தென்காசியில் தொடர்ந்து அமைதி நிலவ தன்னாலான அனைத்து ஒத்துழைப்பு களையும் அரசுக்கு தரும் என்று உறுதி அüக்கிறோம்.
இக்கோஷ்டி மோதலுக்கு வித்திட்ட தென்காசி டி.எஸ்.பி. மயில்வாகனன் மற்றும் ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநேரத்தில் விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை தென்காசியில் பணியில் அமர்த்த வேண்டும். உயிரிழந்த முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அன்புடன் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.''
தென்காசியில் தாக்குதல் நடந்தது ஏன் - எப்படி?
இந்நிலையில் குமார பாண்டியன் கொலைக்கும் தமிழ்நாடு முஸ்லிம்
முன்னேற்றக் கழகத்திற்கும் பங்குண்டு சிலர் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டதால் இந்து முன்னணியினர் தமுமுகவின் நெல்லை மாவட்டத் தலைவர் தென்காசி மைதீன் சேட்கான் மீது கடந்த மார்ச் 2ம் தேதி கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் மயிரிழையில் மைதீன் சேட்கான் உயிர் தப்பினார். இத்தாக்குதலில் தொடர்புடையோர் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர்.
வழக்கில் கைது செய்யப்பட்டவர் களும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். குமாரபாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் தென்காசியில் தங்கியிருந்து காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஏற்கனவே திட்டமிட்டபடி இவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்த இந்து முன்னணியைச் சுமார் 40 பேர் கொண்ட கும்பல் பொதுமக்கள் அதிகளவில் புழங்கும் கூலைக்கடை மார்க்கெட்டில் உள்ள கன்னிமாரன்கோவிலும், மார்க்கெட்டில் வேறு சில பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருந்தது.இதைப் பயன்படுத்திக் கொண்டு தயாராக இருந்த மற்ற இந்து முன்னணியினர் முஸ்லிம்கள் சுதாரிப்பதற்குள் அவர்கள் மீது தாங்கள் நடத்த வைத்திருந்த அரிவாள்களைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் பஷீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனிடையே எதிர்தரப்பில் ஓரிருவர் தாங்கள் தற்காப்பிற்காக வைத்திருந்த ஆயுதங்கள் மூலம் பதிலடி தந்துள்ளனர். இதில் இந்து முன்னணியைச் சேர்ந்த சுரேந்திரன், செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோருக்கு வெட்டுக்காயம் விழுந்துள்ளது.
பாளையங்கோட்டை மருத்துவமனையில் இந்து முன்னணியினரும், ஹை கிரவுண்டு மருத்துவமனையில் மற்றொரு தரப்பும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உயிரிழந்த பஷீர், நாகூர் மீரான், ஹஸன் கனி ஆகியோரின் ஜனாஸாக்கள் நடுப்பேட்டை கபரஸ்தானில் செவ்வாய் இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் தமுமுக மாநிலச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி தலைமையில் நெல்லை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் தென்காசியில் முகாமிட்டுள்ளனர். கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் தென்காசியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி கோஷ்டி மோதலை தென்காசி டி.எஸ்.பி. மயில்வாகனனும், தென்காசி காவல் ஆய்வாளர் சந்திரசேகரனும் தடுத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அசட்டையாக இருந்ததன் காரணமாக இத்தாக்குதல் நடைபெறுவதற்கும், ஆறு பேர் உயிரிழப்பதற்கும் காரணமாக இருந்துள்ளனர். எனவே இவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் (கடித விவரம் தனியாக உள்ளது).
இச்சம்பவம் காரணமாக தென்காசியில் பதட்டம் நிலவுவதால் தென்காசி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. தென்காசிக்கு செல்லும் அனைத்தும் பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Thursday, June 21, 2007
10 வது படிக்கும் மகனை அறுவைசிகிச்சை செய்யவைத்த மருத்துவர்!

'சும்மாவா?... பிரசவம்ங்கிறது ஒரு பொண்ணுக்கு மறுஜென்மம் மாதிரி...' என்று வெளியில் காத்திருக்கும் பாட்டிகள், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அந்த ஆபரேஷன் தியேட்டருக்குள்... தன்னை நம்பி இரண்டு உயிர்களை ஒப்படைத்த குடும்பத்துக்கு அந்த டாக்டர் எந்தளவுக்கு உண்மையாக இருக்கிறார் என்பது தெரியுமா? தெரியாதுதான் என்றாலும், கடவுள் மேல் வைக்கும் நம்பிக்கைபோல் டாக்டர்கள் மீதும் நம்பிக்கை வைக்கிறார்கள் மக்கள்.ஆனால், அந்த ஒரு சம்பவத்தில், குறிப்பிட்ட அந்த டாக்டர் என்ன செய்தார் தெரியுமா? தான் தள்ளி நின்று கொண்டு பத்தாவது படிக்கும் தனது மகனை விட்டு அந்த அறுவை சிகிச்சையைச் செய்ய வைத்தார். செய்ய வைத்தது மட்டுமன்றி, அதனை வீடியோ எடுத்து வைத்தும் பெருமைப்பட்டிருக்கிறார் அந்த டாக்டர்.
டாக்டர் ஜெய்கிஷ் என்பவரும் உரையாற்ற வந்திருந்தார்கள். அதற்கு முன்னதாக, மணப்பாறையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன் என்பவர் தானும் ஒரு சி.டி.யைக் போட்டுக் காட்ட விரும்புவதாகத் தெரிவிக்கவே, அவர் சந்தித்த ஏதோ ஒரு புதிய கேஸ் போலும் என்று டாக்டர்கள் அனுமதித்தனர். வீடியோவும் ஓடியது.
எடுக்கப்பட்ட பின்னர், மீண்டும் கர்ப்பப்பை உள்ளே வைக்கப்பட்டு வயிறு தைத்து மூடப்படுகிறது. தொடர்ந்து இதைப் பார்த்த டாக்டர்களுக்கு ஒரே குழப்பம். 'இது மாதிரியான சிசேரியன்களை டாக்டர்கள் சாதாரணமாகச் செய்வார்களே, இதிலென்ன அதிசயம்?' என்ற கேள்வியோடு ஒருவரையருவர் பார்த்துக் கொண்டனர்.
செய்தது பத்தாவது வகுப்பு படிக்கும் என் மகன் திலீபன்' என்று அவர் பெருமையாகச் சொன்னபோது, அங்கிருந்த டாக்டர்களுக்கு அதிர்ச்சியோ, அதிர்ச்சி!பொதுவாக மருத்துவர்கள் தங்களது சிகிச்சையில் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால், ஒருவரையருவர் காட்டிக் கொடுப்பதில்லை. காரணம், தாங்கள் ஒரே துறையைச் சார்ந்தவர்கள் என்பது மட்டுமன்றி இந்தத் தொழில் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கெட்டுப் போய்விடக் கூடாது என்பதுதான். அதையும் மீறி இந்த விஷயம் கண்டனக் கடிதம் எழுதுமளவுக்குப் போனது எப்படி என்று மணப்பாறை ஐ.எம்.ஏ. உறுப்பினர்களாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சில மருத்துவர்களிடம் கேட்டோம். சி.டி.யில் தாங்கள் பார்த்ததை எல்லோருமே ஒப்புக் கொண்டனர். 'நாங்கள் ஏதாவது பேசினால் தொழில் போட்டியாலும் பொறாமையாலும் இப்படிப் பேசுகிறான் என்று சண்டைக்கு வருவார். அதனால் எங்க பேரைப் போடாதீங்க. விஷயத்தை மட்டும் கேளுங்க'' என்ற கண்டிஷனோடு சில மருத்துவர்கள் பேசினர்.
'அந்த மீட்டிங்கில் அவர் சி.டி. போட்டுக் காட்டியது உண்மை. அதைப் பார்த்து நாங்கள் அவரைக் கண்டிச்சதும் உண்மை. அதுக்கு அவர் கோபப்பட்டதும் உண்மை. முதலில் அவரைக் கண்டிச்சு விட்டுடலாம்னுதான் நெனைச்சோம். இவர் மேல நடவடிக்கை எடுத்தால் அது அந்தப் பையனோட எதிர்காலத்தையும் பாழாக்கிடும் என்பதாலேயே இனிமேல் இதுமாதிரி செய்யாதீங்கன்னு சொன்னோம். அதுக்கு அவர் 'நான் என்ன புளூஃபிலிம் சி.டி.யா காட்டினேன்? என் பையன் சிசேரியன் பண்ணுனதைத்தானே சிடியில காட்டுனேன்'னு சொல்லிட்டார்.
சரி! இந்தப் பிரச்னை பற்றி முருகேசன் என்னதான் சொல்கிறார் என்று தெரிந்து கொள்ள அவரைச் சந்தித்தோம். இரண்டு நாட்கள் அலைச்சலுக்குப் பின்னர் மணப்பாறையில் உள்ள மாண்ட்போர்ட் பள்ளியில் தனது மகன் திலீபன்ராஜை ப்ளஸ் ஒன் சேர்த்து விட்டு வந்த அவரைப் பிடித்தோம். 'இங்க லோக்கல்ல உள்ள ஐ.எம்.ஏ. மெம்பர்கள் பதவிப் போட்டியில் இப்படி என் மேல குறை சொல்லுறாங்க. நான் என் மகனுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே ட்ரெயினிங் குடுத்திருக்கேன். சாதனை பண்றதா நெனச்சுத்தான் பண்ணுனேன். லோக்கல் ஐ.எம்.ஏ.யில உள்ளவங்களுக்கு என் டெவலப்மெண்ட்டுல விருப்பம் இல்ல. பத்து வயசுப் பையன் கார் ஓட்டுறான். அமெரிக்காவுல பதினைந்து வயசுப் பையன் டாக்டர் பட்டம் வாங்குறான். பொதுமக்கள், மருத்துவ அமைப்புகள் ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்காட்டியும் நான் என் மகனுக்கு ட்ரெயினிங் குடுத்திருக்கேன். அவன் சிசேரியன் செய்யும் திறமையுள்ளவன் என்பது உண்மைதான்.
நல்லமுறையில் மகப்பேறு முடியும் என்று நம்பி, இவரைத் தேடி வந்தவர்களுக்கு ஒரு கத்துக்குட்டிப் பையனை வைத்து இவர் சிசேரியன்கள் செய்தது அந்த கர்ப்பிணிகளுக்கும், உறவினர்களுக்கும் தெரிந்தால் என்ன நடக்கும்? மற்றவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சாதனைகள் செய்யப் போக, இவரோ மற்றவர்களின் உயிரைப் பணயம் வைத்து தன் மகனை சாதனையாளராக்கி இருக்கிறார். அந்த நிலையில் ஓர் அசாதாரண சூழ்நிலை உருவாகி, தாயின் உயிருக்கோ அல்லது குழந்தையின் உயிருக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருந்தால், இவரும் சர்வ சாதாரணமாக பில்லைப் போட்டு பணத்தை வாங்கிக் கொண்டு பிணத்தை ஒப்படைத்திருப்பார். சம்பந்தப்பட்ட உறவினர்களும் 'டாக்டர் நல்ல டாக்டர்தான், விதி முடிஞ்சு போச்சு. என்ன பண்றது?'' என்று புலம்பிக் கொண்டே வீட்டுக்குப் போயிருப்பார்கள். இது போன்ற டாக்டர்களை என்ன செய்வது?
Thursday, June 14, 2007
Dark Underside of Iraqi Refugee Crisis
refugee crisis is the indelible scarring of millions of Iraqi children, alarming numbers of whom have witnessed gruesome violence and have had close family members murdered, a new report from World Vision finds.The dark underside of the world's fastest growing refugee crisis is the indelible scarring of millions of Iraqi children, alarming numbers of whom have witnessed gruesome violence and have had close family members murdered, a new report from World Vision finds.The report, Trapped! The Disappearing Hopes of Iraqi Refugee Children, found 43 per cent of children surveyed in Amman, Jordan witnessed violence in Iraq, and 39 per cent said they lost someone close through violence.
Tragically, both children in Iraq and refugee children in neighbouring countries do not receive basic medical care, not to mention specialized support to deal with trauma.
But the structured classroom environment is a powerful place for helping children work out stress and trauma, a major point of the report that calls for immediate access to education for all of the 200,000 Iraqi refugee children in Jordan.
'These children have been kidnapped and held for ransom, witnessed brutal home invasions, suicide bombings and murders. Now refugee life offers them little option but to go to work as child labourers, exposing them to the threat of deportation,' said Ashley Clements, author of the report.Understandably, 25 per cent of the Iraqi refugee children World Vision surveyed did not feel safe in their Jordanian homes. This is a combination of past experiences, lack of refugee status, which leaves the entire family unsure, and the absence of healthy routines like going to school, the report says.
World Vision was told only 14,000 to 20,000 of Iraqi children in Jordan attend schools. Most families fled with little or nothing and while they were solid middle class at home, in Jordan they don't have enough to feed themselves let alone pay private school fees. With no official refugee status, their children have no right to attend Jordanian schools.Schools and other infrastructure in Jordan are already overburdened.
கொலைநகரமாகும் தலைநகரம்!
ஜூன் 11, 2007
சென்னை நகரில் கடந்த சில நாட்களாக படுகொலைகள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. ஓரிரு நாட்களில் மட்டும் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் 24 மணி நேரத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் டி.பி.சத்திரம் பகுதியில், நேற்று சப் இன்ஸ்பெக்டரின் மகனை பட்டப் பகலில் நடு ரோட்டில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்துள்ளனர்.
டி.பி.சத்திரம் பரமேஸ்வரன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரன். இவர் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஆவார். தனது மகன் முருகன், 6 மகள்களுடன் அடுக்கு மாடிக் குடியிருப்பைக் கட்டி அதில் வசித்து வருகிறார்.
முருகனின் மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு சந்தோஷ், ஆகாஷ் என இரு மகன்கள் உள்ளனர். முருகனுக்கு பல சமூக விரோதிகளுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவரைப் பழி வாங்க பலரும் அப்பகுதியில் காத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இப்பகுதியில் முன்பு நடந்த ஒரு ரவுடி கொலையில் முருகனுக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் வெள்ளை ரவி என்பவர் கொல்லப்பட்டார். அவர், முருகனின் நண்பர் எனக் கூறப்படுகிறது. இதற்குப் பழி வாங்கும் விதமாக பிரேம்குமார் என்பவர் கடத்திச் சென்று கொல்லப்பட்டார்.
பிரேம்குமார் கொலைக்கு முருகன்தான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரைப் பழிவாங்க பிரேம்குமாரின் கூட்டாளிகள் முயற்சித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை தனது பைக்கில் வீட்டிலிருந்து கிளம்பினார் முருகன். அப்போது நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல் முருகனை சுற்றி வளைத்தது. இதையடுத்து பைக்கை விட்டு இறங்கி ஓடினார் முருகன். ஆனால் அந்தக் கும்பல் விடாமல் துரத்திச் சென்றது.
மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் பட்டப் பகலில் ரவுடிக் கும்பல் முருகனைத் துரத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முருகனை சுற்றி வளைத்து சரமாரியாக அந்தக் கும்பல் வெட்டித் தள்ளியது. இதில் முருகன் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
தனது தந்தை வெட்டிக் கொல்லப்பட்டதை முருகனின் மகன் ஆகாஷ் நேரில் பார்த்து விட்டு கூச்சல் போட்டுள்ளான். இதையடுத்து முருகனின் தாயார் பூபதி வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்தார்.
போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். முருகன் கொலையைத் தொடர்ந்து அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. பரபரப்பு நிலவியது.
கொலையாளிகளில் நரேஷ், சரவணன் ஆகியோரது அடையாளங்கள் தெரிய வந்துள்ளன. இவர்களும் இதே பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். மற்ற இருவரும் யார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர்களும் இதே பகுதியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
முருகனைக் கொன்றவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
2 நாள்களுக்கு முன்தான் ரவுடிகள் வேட்டையை சென்னை காவல்துறை தொடங்கியது. ஆனால் தொடங்கிய நாளிலேயே ஒரு படுகொலை நடந்துள்ளது சென்னை போலீஸாருக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.
தொடரும் படுகொலைகளால் சென்னை நகர மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.