.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label புகார். Show all posts
Showing posts with label புகார். Show all posts

Sunday, July 26, 2009

பென்ஷனுக்காக போராட்டமா? ஜனாதிபதிக்கு இணையத்தின் மூலம் புகார் அனுப்பலாம்


புதுடெல்லி, ஜூலை 25- எவ்வளவோ போராடிப் பார்த்தும் பென்ஷன் கிடைக்கவில்லையா, ஜனாதிபதிக்கு உங்கள் புகார் மனுவை இணையதளம் மூலமாக நேரடியாக அனுப்பி வைக்கலாம். இந்த புகார்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க ஜனாதிபதி மாளிகை நடவடிக்கை எடுக்கும்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தகவல் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதனால், அவர் வசிக்கும் ராஷ்டிரபதி பவனில் காகிதங்களில் நடக்கும் வேலைகள் குறைத்து கொள்ளப்பட்டு கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இப்போது பொதுமக்கள் புகார்களை பெற்றுக் கொள்வதற்காக http://helpline.rb.nic.in/ என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தொடங்கி வைத்துள்ளார். ஏற்கனவே நாள்தோறும் சராசரியாக 400 புகார் மனுக்கள் ராஷ்டிரபதி பவனுக்கு வருகின்றன. இவற்றை பிரித்து உரிய துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறும், அதற்குரிய பதிலை அனுப்பி வைக்கும்படியும் அதிகாரிகள் கேட்டுக் கொள்வார்கள்.
இதுகுறித்து ஜனாதிபதியின் செயலாளர் கிறிஸ்டி பெர்னாண்டஸ் கூறியதாவது:
இணையதளம் பற்றி பொதுமக்களுக்கு தெரியவரும்போது, அவர்கள் இதை பயன்படுத்துவது அதிகரிக்கும். இப்போது காகிதத்தில் எழுதி அனுப்பப்படும் மனுக்களையும், கம்ப்யூட்டரில் பதிவு செய்து பிற துறைகளுக்கு அனுப்ப உள்ளோம். சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பியதோடு மட்டுமில்லாமல், புகார் கொடுத்தவருக்கு உரிய பதிவு எண்ணை கொடுக்கிறோம். ஒவ்வொரு 15 நாளுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஞாபகப்படுத்தி, சம்பந்தப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்கப்படுகிறது. தங்களுடைய எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்த நிலையில்தான், ஜனாதிபதிக்கு தங்கள் புகார்களை பொதுமக்கள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, May 10, 2009

தமிழகத்தில் எங்கிருந்தும் காவல் துறைக்கு புகார் தெரிவிக்க!

தமிழகத்தில் எங்கிருந்தும் புகார் தெரிவிக்க!
தானியங்கி கம்ப்யூட்டர்-தொலைபேசி சேவை
போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்தில் அறிமுகம்


சென்னை மைலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் நாள் முழுவதும் இயங்கும் தானியங்கி கணிணி வழி-தொலைபேசி மூலம் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமிழ்நாட்டின் எந்தப்பகுதிகளில் இருந்தும், எந்த நேரத்திலும் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழ்நாடு தவிர இதர மாநிலத்தில் உள்ள பொதுமக்களும் கூட இச்சேவையை பயன்படுத்தி உதவி கோரலாம்.

பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குறைகளை பதிவு செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். அத்தகைய புகார்கள் அல்லது குறைகள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுவதுடன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கும் தக்க அறிவுரை வழங்கப்படும்.

பி.எஸ்.என்.எல். தொலைபேசி- 044 28447200
டாடா இண்டிகாம் தொலைபேசி- 044 64555100, 64556100

(நேரடி அவசர உதவி தேவைப்படுவோர் எப்போதும் போல் 100 என்ற தொலைபேசியையும் பயன்படுத்தலாம்)
மேற்கண்ட தகவலை டி.ஜி.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.