.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, March 29, 2009

ம.ம.கவுடன் தொடர்ந்து பேசிக் கொண் டி ருக் கி றோம் திமுக அறிவிப்பு!

யார் யாருக்கு எந்தெந்த தொகு தி கள்?

சென்னை, மார்ச் 28: ""ஜன நா யக முற்போக்குக் கூட்ட ணி யி ல், யார் யாருக்கு எந்தெந்த தொகு தி கள் என்பது கு றி த்து இரண் டொரு நா ளி ல் பே சி மு டி வெ டுக்கப்படும்'' என்று கூட்ட ணி யி ன் தலைவரும், முதல்வருமான கருணா நி தி தெ ரி வி த்தார்.

ஜன நாயக முற்போக்குக் கூட் ட ணி யி ல் தொகு தி ப் பங் கீ ட்டை இறு தி செய்வதற்கான கூட்டம், தி முக தலைமை அலுவலகமான அண்ணா அ றி வாலயத் தி ல் ச னி க் கி ழமை நடைபெற்ற து. கூட்டத்துக்குப் பி ற கு, செய் தி யாள ர்க ளி ன் கேள் வி களுக்கு முதல்வர் கருணா நி தி அ ளி த்த ப தி ல்:

யார் யாருக்கு எந்தெந்த தொகு தி கள் என்று மு டி வு செய்யப்பட்டதா? அதுகு றி த்து, இரண்டொரு நா ளி ல் பே சி மு டி வெடுக்கப்ப டும்.

ம னி தநேய மக்கள் கட் சி பேச்சுவார்த்தைக்கு வர வி ல் லையே? அந்தக் கட் சி யைச் சேர்ந்த ஒருவர் வெ ளி நாடு சென்று வி ட் டார். அதனால், அந்தக் கட் சி யு டன் பேசவி ல்லை. தொடர்ந்து பேசிக் கொண் டி ருக் கி றோம்.

முஸ்லி ம் லீக் கட் சி த னி சி ன் ன த் தி ல் போட் டி யி டுமா? இதுபற் றி , தேர்தல் ஆணை யத்தை அணு கி கருத்துப் பெற வேண் டி யி ருக் கி ற து. தி முக வேட்பாள ர் பட் டி யல் எப்போது வெ ளி யி டப்படும்? பட் டி யல் தயாரான தும் வெ ளி யாகும்.

காங் கி ரஸூம், பு லி களை ஆத ரி க்கும் வி டுதலைச் சி றுத்தைக ளும் ஒரே அ ணி யி ல் இடம்பெ றுவது முரண்பாடாக இருக் கி ற தே? பு லி களுக்கும், அ தி முகவுக் கும் இடை யி ல் உள்ள முரண் பாட்டை வி டவா? அதை ஏன் அங்கே ( அ தி முக) கேட்க மாட் டேன் என் கி றீர்கள்? பாமக வெ ளி யே றி யதால், தி முக அ ணி வலுகுறை ந்ததாக எண்ணு கி றீர்களா? பாமக பற் றி குறை த்து எடை போடு கி றீர்கள் என்ற ôர் முதல் வர் கருணா நி தி .
நன்றி: திணமனி 29-03-2009

திமுக கூட்டணியில் சீட் உண்டா..? மனித நேய கட்சி 30ல் ஆலோசனை

திமுக கூட்டணியில் சீட் உண்டா..? மனித நேய கட்சி 30ல் ஆலோசனை
மார்ச் 29,2009,07:16 IST



திருநெல்வேலி : தி.மு.க.,கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி நீடிக்குமா அல்லது தனித்து போட்ியிடுமா என்பது குறித்து நாளை திங்கள்கிழமை கட்சியினர் ஆலோசனை மேற்கொள்கின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனித நேய மக்கள் கட்சி 2 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டது. இதுதொடர்பாக தி.மு.க.வினர் ம.ம.க.,நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியூரிலும், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வெளிநாட்டிலும் உள்ளனர். அவர்களிடம் தி.மு.க.,தரப்பில் ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி ஆகியோர் போனில் பேசினர். இதனிடையே முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு சீட் என அறிவிக்கப்பட்டு மனித நேய மக்கள் கட்சிக்கு சீட்கள் எதுவும் ஒதுக்கப்படாமல் பட்டியல் வெளியாகியுள்ளது. ஒரு வேளை தி.மு.க.,வின் 21 சீட்களில் ம.ம.க.,விற்கு உள்ஒதுக்கீட்டில் சீட் வழங்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஆனால் தி.மு.க.,சின்னத்தி ல் போட்டியிட ம.ம.க,வினர் தயக்கம்காட்டுவார்கள் என தெரிகிறது. எனவே தி.மு.க.,கூட்டணியில் 3 சீட், அதுவும் உள் ஒதுக்கீடு இல்லாமல் தங்களுக்கான சின்னத்தில் போட்டியிடுவது என்ற முடிவில் உள்ளனர். கட்சி நிர்வாகிகள் 30ம் தேதி திங்கட்கிழமை சென்னை திரும்புகின்றனர். அப்போது கூட்டணி குறித்து இறுதி பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

இந்நிலையில் மமக தலைமையின் அறிக்கை.

28.03.09 அன்று காலை தமுமுக தலைவருடன் ஆற்காடு வீராசாமியும், மாலையில் ஸ்டாலினும் தொலைபேசியில் பேசினர். எனினும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. திங்கட்கிழமை அடுத்த சுற்று பேச்சு வார்த்தை நடைபெறும். அது வரை பொறுமை காத்திருக்குமாறு கட்சி தொண்டர்களை மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கேட்டுக் கொள்கிறார்கள்.

சமுதாயத்தின் தன்மானம் முக்கியம் என்பதில் மனிதநேய மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது. எனவே ஒரு தொகுதியை ஏற்பதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை.


இறைவன் நாட்டப்படிதான் அனைத்தும் நடக்கும் என நம்புகிறோம்.

ம.ம.க தனித்து போட்டியிடும் வாய்பளித்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

மனிதநேய மக்கள் கட்சிக்கு திராவிடக் கட்சிகளின் கூட்டணியில் இடம் ஒதுக்காமல் தனித்து போட்டியிடும் வாய்ப்பை நல்கிய இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

எங்கள் சமுதாய பலத்தை நிரூபிக்க வாய்ப்பு நல்கிய கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிற்கு நன்றிகள் ஆயிரம்....

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மக்கள் செல்வாக்கின் பலம் தெரியாமல் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்காமல் தனது தொகுதி பட்டியலை வெளியிட்டதில் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

திமுக மற்றும் அதிமுக தொகுதி பட்டியலில் முஸ்லிம்களை முற்றிலுமாக புறக்கணித்ததற்கும், எங்களை தனித்து போட்டியிட்டு எங்கள் சமுதாயத்தின் பலத்தை அறிய வாய்ப்பு நல்கியதற்கும் முஸ்லிம் சமுதாயம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

திராவிடக் கட்சிகளின் தப்புக்கணக்கு - அதுவே முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றிக்கு வித்திட்டுள்ள ஆரம்பகணக்கு.

கலைஞர் அவர்களே! எங்களை தனிமைப் படுத்தியதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியுடன் நன்றி கூறிக்கொள்கிறோம். இதற்கான விலை கொடுக்க தாங்கள் முன் வரும் போது இன்ஷா அல்லாஹ் உங்கள் கைக்கு எட்டாத தூரத்திலிருப்போம் என்பதை இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறோம்.

Thursday, March 26, 2009

அரசியல் சுழற்சிகளை எதிர்கொள்வோம்... ம.ம.க அறிவிப்பு.

அரசியல் சுழற்சிகளை எதிர்கொள்வோம்...


கடந்த மார்ச் 20 அன்று சவூதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் தாயகத்திலிருந்தபடியே ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி தொலைபேசியில் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து...


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடை யோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகிறேன். பாசத்திற்குரிய மனிதநேய சொந்தங்களே... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)


தேசத்தின் எல்லைக் கோடுகள் பிரிந்தாலும், உணர்வுகளால் தாய் மண்ணோடு ஒன்றி வாழும் உங்களிடம் அலைபேசியில் விஞ்ஞான தொழில்நுட்பத்தின் உதவியில் பேசுவதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


இன்று வெள்ளிக்கிழமை. அரபு நாடுகள் எங்கும் விடுமுறை தினம். வாரம் முழுக்க உழைத்துவிட்டு இந்த ஒருநாள்தான் ஓய்வையும், மகிழ்ச்சியையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது. உங்களில் பலர், பலர் என்று சொல்வதை விட அனைவருமே இந்தியாவில் உள்ள உங்கள் பெற்றோரோடு, மனைவியோடு பிள்ளைகளோடு, உடன் பிறப்புகளோடு தொலைபேசியில் பேசி மகிழ்ந்திருப்பீர்கள். அவர்களது கரங்களைத் தொட்டுப் பிடித்து நெஞ்சார கட்டி மகிழ முடியாத வருத்தம் இருந்தாலும், குரலையாவது கேட்டு மகிழ முடிகிறதே என்ற ஒரு சிறு மகிழ்ச்சியில் இன்று திளைப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும், நன்றாகவே புரியும்.


காரணம் எனது குடும்பத்திலும் பெரும்பாலான ஆண்கள் வெளிநாடுகளில் வாழ்வதால் அதன் வலியை என்னால் உணர முடியும். இன்று ஜும்ஆ தொழுகையில் நீங்கள் உங்கள் உறவினர்களை சந்தித்திருப்பீர்கள். ஊர் செய்திகளை பரிமாறிக் கொண்டிருப்பீர்கள். நன்றாக மதியம் உறங்குவீர்கள். இப்படி வெள்ளிக்கிழமை விடுமுறையை நீங்கள் அனுபவிக்கும் இத்தருணத்தில், சமுதாய உணர்வோடு தாய்நாட்டின் மீதான நேசத்தோடு ஓரிடத்தில் எமது உரையை கேட்பதற்காக கூடியிருக்கிறீர்கள் என்றால், அதுதான் நமது கொள்கை உணர்வு. உணர்வு மட்டுமல்லாமல் நம்மை இணைக்கும் உறவும் அதுதான் என்றால் அது மிகையாகாது.


அன்பார்ந்த சொந்தங்களே... நமது தாய்க்கழகம் தமுமுக கடந்த 14 ஆண்டு காலமாக நம்மை பக்குவப் படுத்தி, அரசியல் எனும் பெருநதியில் நீச்சலடிக்க அனுப்பி வைத்திருக்கிறது. அது சாதாரண நீச்சல் அல்ல... எதிர்நீச் சல்.... அந்த எதிர்நீச்சலில் எப்படி நீந்தப் போகிறோம், எதையெல்லாம் எதிர்கொள்ளப் போகிறோம். அரசியல் சுழற்சிகளையும், சூழ்ச்சிகளையும் எப்படி தாக்குப்பிடிக் கப் போகிறோம் என்பதை நீங்களெல்லாம் கடல்தாண்டி கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள்.


குப்பைகள் நிறைந்து, முடை நாற்றமடிக்கும் அரசிய­ல் இறையருளால், ஈமானிய உறுதியோடு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் நாங்கள் களமிறங்கி யுள்ளோம். இன்று மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் மாபெரும் சக்தியாக உரு வெடுத்துள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்...)


கூட்டணியில் நாம் இடம்பெற்றால் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் 25 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை கூடுதல் வாக்குகளைப் பெற்று யாரும் வெற்றிபெற முடியும். சில தொகுதிகளில் 25 ஆயிரம், சில தொகுதி களில் 50 ஆயிரம், சில தொகுதிகளில் 75 ஆயிரம், சில தொகுதிகளில் 1 லட்சம் என நமது வாக்குகள் பரவிக் கிடக்கிறது. எட்டு தொகுதிகளில் இரண்டு லட்சம் தொடங்கி மூன்று லட்சம் வாக்குகள் வரை கொட்டிக் கிடக்கிறது.


இந்த வாக்கு வங்கியை முஸ்லிம்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் மற்ற கட்சிகள் ஆசை வார்த்தைகளை வீசியே அறுவடை செய்து கொண்டார்கள். நமது தோளில் ஏறி ஆட்சியைப் பிடித்தார்கள். அமைச்சர் பதவிகளை அடைந்தார்கள்.


நாமோ வாக்களித்தவுடன், வழக்கம் போல் நமது வேலையைப் பார்க்க போய்விட்டோம். இனி அது நடக்காது. பிறருக்காக தேர்தல் வேலைகளைப் பார்த்தோம். சொந்த காசை செலவழித்தோம். சுவர்களில் விளம்பரங் களை செய்வதற்காக சண்டை போட்டோம். வீட்டு வேலைகளை போட்டு விட்டு வெயி­ல் திரிந்தோம். வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தோம். தேர்தல் நாளன்று அடிதடிகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டோம்.


ஆனால், அதிகாரத்தை மட்டும் அடையாமல், அமைதியாக ஓரங்கட்டப்பட்டோம். அந்த பைத்தியக்காரத்தனத்திலிருந்து இப்போது விடுபட்டிருக்கிறோம்.


எங்களுக்கும் அரசியல் மரியாதை தேவை என எழுந்துவிட்டோம். எட்டு தொகுதிகளில் ஆறு தொகுதி களை அடையாளம் காட்டி, குறைந்தது மூன்று அல்லது இரண்டு தொகுதிகளாவது தாருங்கள் என கேட்கிறோம், அடம்பிடிக்கிறோம்.


இதை நமது கட்சியினரும், சமுதாய மக்களும், பிற இன மக்களும் வரவேற்கிறார்கள், பாராட்டுகிறார்கள். உறுதியாக நில்லுங்கள் என ஆதரவு தருகிறார்கள். நாம் நிலைகுலைய மாட்டோம். வஞ்சக சதிக்கு ப­யாக மாட்டோம்.


நாம் உறங்கும்போது மட்டுமே, நமது நெற்றியில் துப்பாக்கிகளை நீட்ட முடியும். அரசியலில் தூங்கும் போது கூட கால்களை ஆட்டிக் கொண்டே தூங்கினால் தான், பாதுகாப்பாகத் தூங்க முடியும். இல்லையென்றால், இறந்துவிட்டான் என்று கூறி அடக்கம் செய்து விடுவார் கள். அவ்வளவு மோசமானது அரசியல். அதுவும் தமிழக அரசியல் மிக மோசமானது.


எனவே நாம் ஒரு தொகுதியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்த­ல் ஏற்பதாக இல்லை. இன்னும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளோம். பொறுமை இழக்க மாட்டோம். வேறு வழியில்லை எனில், எதிர் வீட்டுக்காரரோடு பேசுவோம். அதுவும் திருப்தியில்லையெனில், தனித்துப் போட்டியிடுவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் நமது முழு ஒத்துழைப்பையும் காட்டும் வகையில் போட்டியிடுவோம்.


இதனால் நமக்கு இழப்பு வரும். ஆனால், நமது பலத்தை உணராமல் நம்மை மதிக்காதவர்களுக்குத்தான் 15 தொகுதிகளிலாவது பேரிழப்பு ஏற்படும் என்பதை எதிர்காலம் உணர்த்தப் போகிறது.


நாம் இப்போது வெற்றி பெறாவிட்டாலும், வாக்குகளை பிரிப்போம். அது எதிர்காலத்திற்கு உதவும். நமது பேரம் பேசும் வ­மை கூடும். காரணம் நமது கட்சி பொதுவானது. முஸ்லிம்களின் பின்புலத்தில் இயங்கினாலும், அது அனைத்து மத,இனி சாதி மக்களின் ஆதரவைப் பெற்றது. அனைவருக்கும் தொண்டாற்றக் கூடியது.


நமது தாய்க்கழகத்தின் சேவைகளால் ஈர்க்கப்பட்ட அனைத்து மத மக்களும் நமக்கு வாக்களிப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. எனவே அன்பார்ந்த சொந்தங்களே... நம்பிக்கைதான் வாழ்க்கை. அந்த நம்பிக் கையோடு எங்களுக்காக பிரார்த்தியுங்கள். தாயகத்தில் உள்ள உங்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த நம்பிக்கையை, செய்தியை தெரிவியுங்கள்.


அங்கே பணியாற்றிக் கொண்டிருக்கும், அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கும் சகோதர அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் நமது உறுதியை செய்தியைச் சொல்லுங்கள். அவர்களோடும் நட்பு பாராட்டுங்கள் என்று கூறி, நாடு விட்டு நாடு வாழும் நமக்கிடையே இந்த உரையாற்றும் வாய்ப்பைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறி நிறைவு செய்கிறேன். நன்றி

தாடியுடன் பள்ளிக்குச் சென்ற முஸ்லிம் மாணவன் பள்ளியிலிருந்து நீக்கம்!

தாடியுடன் பள்ளிக்குச் சென்ற முஸ்லிம் மாணவன் பள்ளியிலிருந்து நீக்கம்
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி, மார்ச் 26: தாடி வளர்த்ததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவன் வழக்கு தொடர்ந்துள்ளான்.

மத்திய பிரதேசத்தில் உள்ள நிர்மலா கான்வென்ட் மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவன் முகமது சலீம். தனது மத வழக்கப்படி தாடியுடன் பள்ளிக்கு சென்றான். ஆனால், அந்த பள்ளி விதிமுறைப்படி மாணவர்கள் தாடி வளர்க்கக் கூடாது. அதை மீறி சலீம் தாடியுடன் சென்றதால் பள்ளியை விட்டு நிர்வாகம் அவனை நீக்கியது.

அதை எதிர்த்து சலீம் தொடர்ந்த வழக்கை விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், பள்ளியின் விதிமுறைகளுக்கு கட்டுப்படும்படி கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சலீம் செய்துள்ள மேல்முறையீடு மனு வருமாறு;

தாடி வளர்ப்பது முஸ்லிம் மத நம்பிக்கை. நான் தாடி வளர்க்கக் கூடாது என்று கூறுவது எனது மத உரிமையை, அடிப்படை உரிமையை பறிப்பதாகும். பள்ளியின் விதிமுறைகள் அறிவுப்பூர்வமாகவும், ஏற்க கூடியதாகவும் இருக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு அவரவர் மத வழக்கத்தை கடைப்பிடிக்க உரிமை வழங்குகிறது. எனவே, பள்ளியின் விதிமுறையை செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் சலீம் கூறியுள்ளான்.

இதை விசாரித் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச், சலீம் படிக்கும் பள்ளி அரசு உதவி பெறுகிறதா? என்பதை அறிந்து வரும்படி கூறி விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Tuesday, March 24, 2009

முஸ்லிம் லீக் சகோதரர் ஹமீது ரஹ்மான் அவர்களுக்கு!

காயிதேமில்லத் பேரவையின் துணைச் செயலாளர் ஹமீது ரஹ்மான் அவர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ






.


கீழை S. முஜிபு ரஹ்மான்

முஸ்லிம் லீக் ன் இணைய தளத்தில் உங்களின் கடிதத்தை பார்த்தேன். ஒரு (தமுமுக) இணையதளத்தில் வெளியான கேள்வி பதில் தாங்களை பாதித்து பதில் கூற வைத்துள்ளதோ என்று கருதுகின்றேன்.

எனினும் எனக்கு தெரிந்த கருத்துகளை தாங்கள் முன் வைக்கின்றேன். கற்றரிந்தவர் தாங்கள் என்பதால் நியாயங்களை இன்ஷாஅல்லாஹ் தாங்களும் ஏற்றுக் கொள்ளலாம். தாங்களின் கடிதத்தின் படி சென்ற தேர்தலின் போது அது சமயத்தில் தான், தாங்கள் கூட்டணி பற்றி முடிவு செய்து அறிவித்தாக எழுதியுள்ளீர்கள். ஆனால் இந்த தேர்தலின் போது முன் கூட்டியே கூட்டணி பற்றி அறிவித்து விட்டதாக எழுதியுள்ளீர்கள். 100 ஆண்டு கால பாரம்பரிய கட்சியின் அனுபவம் இதில் மிளிர்வதாக தெரிகிறது. ஆனால் 50 ஆண்டுகளை தாண்டாத இந்திய முழுவதும் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் அனைத்தும் இன்று வரை தனது பழைய கூட்டணியையோ அல்லது புதிய கூட்டணியையோ முடிவு செய்யாத நிலையில் தான், தனது சமூக மக்களின் நலனை பற்றி தேசிய மற்றும் மாநில கட்சிகளிடம் பேசி வருதை தாங்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதே பாணியில் தான் தமுமுக வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியும் கூட்டணி பற்றி பேசி வருகிறது. இதில் இழிநிலை அரசியல் எங்கிருக்கிறது? சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதிதுவம் வழங்கபட வேண்டும் என்ற உரிமை போராட்டம் தான் முன் நிற்கிறது என்பதை தாங்களுக்கு தெரிவித்து கொள்ளுகின்றேன்.

கிடைத்த பதவிகளாக இருந்தாலும், கிடைக்கவிருக்கும் பதவிகளாக இருந்தாலும் தமுமுக அல்லது மமக வை பொறுத்தவரை இம்மையில் மக்களுக்கும், மறுமையில் அல்லாஹ{க்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற கவலையை உள்ளத்தில் கொண்டு பொறுப்பாக தான் பார்க்கின்றோம். பதவியாக ஒரு போதும் உள்ளதில் எண்ண மாட்டோம். இதே மனநிலையில் தான் தாங்களும், பாரம்பரிய மிக்க மேன்மை பொருந்திய தாங்களின் முஸ்லிம்லீக் அமைப்பினரும் பதவியை பார்ப்பார்கள் என்றே கருதுகின்றேன்.

அரசு பதவியில் (பொறுப்பில்) ஒட்டிக் கொண்டு என்று எழுதியுள்ளீர்கள். சமுதாயத்தின் நன்மையை கருதி மட்டுமே அரசு பதவிகளில் (பொறுப்புடன்) இருப்போம் என்பதில் தமுமுக மற்றும் மமக தெளிவாக இருக்கிறது. பதவியை காட்டினால் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம். எப்படிபட்ட பதவியை தந்தாலும் அது எங்களின் பொறுப்பை அதிகமாக்கியுள்ளதாக மட்டுமே கருதுவோம். உரிமைகளை கேட்க தயங்க மாட்டோம். பதவி என்பது எங்களை பொறுத்தவரை அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தான் என்பதில் தெளிவாக உள்ளோம். தமிழகத்தில் இருந்த சமுதாய அரசியல் கட்சிகள் நிறைவாக செயல்படும் என்று பதிமூன்று ஆண்டுகள் பொறுத்திருந்து பார்த்து விட்டு, அவைகளின் செயல்பாடு மக்களுக்கு திருப்திகரமாக இல்லாத காரணத்தால் சமுதாயத்தின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தமுமுக தனது அரசியல் பிரிவாக மமக வை தொடங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது என்பதை நாணயத்துடன் நியாயவான்கள் பேசிக் கொள்ளுவதை தாங்கள் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.

பதிமூன்று ஆண்டுகளாக நாம் யாரையும் உரசி பார்க்கும் எண்ணம் கொண்டதும் இல்லை. அப்படி எண்ணம் கொள்ளப் போவதுமில்லை. மனித சமுதாயத்தை வஞ்சிக்க நினைக்கும் பாஸிசத்தை எதிர்ப்போம். அது அவர்களுக்கு உரசலாக தெரியலாம். எப்படி நீங்கள் எங்களை விமர்சித்தாலும், ஒரு காலமும் முஸ்லிம் லீக்கை நாங்கள் அப்படி பட்ட பாஸிச பட்டியலில் சேர்க்க மாட்டோம். முஸ்லிம் லீக்கை பொறுத்தவரை எங்களின் பார்வை என்னவென்றால் எங்களின் வீரிய மிக்க மூத்தோர் பணியற்றிய போற்றுதலுக்குரிய அமைப்பு. கண்ணியமிக்க தலைவர்கள் பணியாற்றிய அமைப்பு. தற்போது சமுதாயத்தின் எதிர்பார்ப்பை இவ்வமைப்பு நிறைவேற்ற முடியாத பலகீன நிலையில் இருப்பதை நினைக்கும் போது உளமாறஎங்களுக்கும் வருத்தம் தான்.

கடந்த காலத்தின் போது முஸ்லிம்லீக்கோடு நல்லுறவுடன் இருக்கவே விரும்பியிருக்கின்றோம். எப்போதும் நல்லுறவை மட்டும் தான் விரும்புவோம்.

அதே சமயத்தில் சமுதாயத்தை ஏமாற்ற நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு நிச்சயமாக மென்மையானவர்களாக இருக்க மாட்டோம். ஏற்றுக் கொண்ட பொறுப்புகளுக்காக அல்லாஹ்விடம் குற்றம் பிடிக்கப்பட்டு விட கூடாது என்பதை மட்டுமே கவலையாக கொண்டு செயல்படுவோம். அறிவாளிகளுக்கும், ஆற்றல் மிக்கவர்களுக்கும் மறுமை நன்மைகளை பெற்று தரும் நல்ல களமாக தமுமுக மற்றும் மமக செயல்படும். உங்களின் தனிப்பட்ட ஆற்றலுக்கும் அல்லாஹ் நிறைவான நன்மைகளை தர துவாச் செய்கின்றோம்.

தமுமுக மற்றும் மமக வை நோக்கி நியாய உணர்வோடு வரும் உங்களின் ஒவ்வொரு விமர்சனத்துக்கும், அறிவுரைக்கும், கண்டத்துக்கும் அல்லாஹ{க்கு மட்டுமே பயந்தவர்களாக! அதன் முக்கியத்துவம் கருதி கவனத்தில் எடுத்துக் கொள்வோம். அதே சமயத்தில் அர்த்தமற்ற விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட நேரமில்லை. உங்களின் நன்முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற துவாச் செய்கின்றோம். எங்களின் நன்முயற்சிகள் வெற்றி பெற நீங்களும் துவாச் செய்யுங்கள்.

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான்.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு
கீழை S. முஜிபு ரஹ்மான்
தொடர்பு எண் : 050 5030882
UAE
_________________________________________

பரிதாபத்துக்குரியவர்கள் ஆழ்ந்த அனுதாபம்படுவது தங்களின் பலகீனத்தை மறைக்குமோ?


முஸ்லீக் இணையத்தில் வந்தவைக்கு பதில்
ஜேனா என்ற ஜெய்னுல்ஆப்தீன்
00919841624418
கீழக்கரை

அரசியல் ஆரோக்கியம் என்று கூறி பூசாரி, மடாதிபதி, சாமியார்கள், ஜோசியக்கார்கள் காலில் விழுவதும்,மதவெறிபிடித்த இந்துமுன்னனியின் கூட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துவதும் லீகின் புதுபரிணாமமா? அல்லது இயல்பு நிலையா? தவறுதலாக நடந்து விட்ட நிகழ்வாகவே கருதுவோம்.

அரசியலில் உள்ளடி வேலை, அரசியல் வியாபாரம் என்றெல்லாம் எழுதியுள்ளீர்கள். நீண்ட நாட்களாகஅதுபோன்ற அரசியலில் இருக்கும் தாங்களுக்கு மட்டுமே நன்றாக தெரிந்திருக்க முடியும். அப்படி பட்ட அரசியலுக்கு முற்று புள்ளி வைக்கத்தான் மமக வை கண்டுள்ளோம்.

சமுதாயம்! சமுதாயம்!! என்றுகூறிய உங்களின் பழைய உள்ளடி வேலையுடன் கூடிய வியாபாரம் பயன் தராமல் போய்விடுமோ என்ற பதட்டம் உங்களின் எழுத்துக்களில் தெரிகிறது. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அரசியலில் உரிய பிரதிநிதிதுவம் கொடுக்கப்படுகிறதா? அல்லது ஏமாற்றபடுகிறதா? அல்லாஹூவுக்கு பயந்து சொல்லுங்கள்.

கண்ணியிமிக்க காயிதே மில்லத்தின் திறனான முடிவுகளை கண்டு அதிர்ந்தார்கள் அன்றைய அரசியல்தலைவர்கள். கண்ணியமிக்க கயிதேமில்லத்தின் தியாகத்தை மட்டுமே சொல்லி கொண்டு, மறுப்பக்கத்தில் சமுதாயத்தின் எந்த எதிர்பார்ப்பையும் நிறைவேற்றாமல் வீறு நடை, பீடு நடை என்றால் அதை எற்றுக் கொள்ளும் ஏமாளி சமுதாயமாக இனியும் இருக்க மாட்டோம் என்பதை நடைமுறையில் நிருபித்து காட்டியது தான் மமக வின் தொடக்க விழா மாநாட்டில் கலந்து கொண்ட சமுதாய மக்களின்
அற்பணிப்பான பங்களிப்பு.

சிவப்பு விளக்கு வாகனத்தில் பவனி வருவதாக எழுதியுள்ளீர்கள். பல சகோதர துரோகத்திற்கு மத்தியில் அல்லாஹ{க்கு பயந்து சிவப்பு விளக்கு வாகனத்தின் அதிகாரத்தை சமுதாயத்தின் நன்மைக்காக மட்டும் உயிரையும் துச்சமன நினைத்து மிகத் துணிச்சலாக செயல்பட்டு வரும் எங்கள் பொதுச் செயலாளரின் ஆற்றல்மிக்க பணிக்கு சன்றிதழ்கள் பல இங்கு கிடைத்தாலும் மறுமையில் இறைவன் வலது கையில் தரும் நற்ச் சன்றிதழையே இலக்காக கொண்டுள்ளோம்.

தமுமுக வை தடை செய்ய ராமகோபலன் கூறியதாக சொல்லுகிறீர்கள். ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி, மற்றும் அனைத்து இந்துவா பாஸிச அமைப்புகளின் தலைமையகத்திலும் தமுமுகப் பற்றி பேசப்படுவது வழக்கமான ஒன்று. வட நாட்டு மேடைகளில் கூட தமுமுகப் பற்றி நரேந்திர மோடி பேசுகிறார்.

செயல்பாட்டுடன் இருக்கும் அமைப்புகளைப் பற்றி பேசுவார்கள். லீக்கை பற்றிய அவர்களின் பார்வையில் செயல்பாடுகள் இல்லாமல் போய்விட்ட தொண்டர்கள் இல்லாத அமைப்பு. அதை அழிப்பது பற்றியும் பேசுகிறார்களா? எங்களை பொறுத்தவரை முஸ்லிம்லீக் செயல்பாடுகள் அற்றநிலையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. முஸ்லிம்லீக் பிரதிநிதிகள் பாரளுமன்றத்திலும் முஸ்லிம் லீக் என்றே அழைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் பார்வையில் சமுதாயத்தின் அவா? முஸ்லிம்லீக்கிற்கு புது தெம்பு கொடுக்க தலைமை பொறுப்பை உங்களைப் போன்ற இளைஞர்கள் ஏற்று செயல்படுங்கள். ஆற்றல் மிக்க அமைப்பாக உருவாக்குங்கள். அதன் பின்பு அனைவருக்கும் அழைப்பு விடுங்கள். இல்லை என்றால் அறிவுக்கும், திறமைக்கும். ஆற்றலுக்கும், நேர்மைக்கும், தூய்மைக்கும், துணிச்சலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு இறையச்சம் என்ற கோட்பாட்டை கொண்டு செயல்பட்டு வரும் தமுமுக மற்றும் மமக வில் இணைந்து பணியாற்ற வாருங்கள் என்று அன்புடன் மறுமையின் இன்பம் காண அழைக்கின்றோம்.

மறுமையில் இன்பம் என்பது கனாகாண்பது இல்லை. நடக்கவிருக்கும் உண்மை. மறுமை வெற்றியை தரும் நேரான வழியில் செல்ல அல்லாஹ் அருள்புரியட்டும்.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு
ஜேனா என்ற ஜெய்னுல்ஆப்தீன்
00919841624418
கீழக்கரை

தமிழக ஓட்டல்களில் காக்க பிரியாணி 4 பேர் கைது!

தமிழக ஓட்டல்களில் காக்க பிரியாணி!
காக்கா சப்ளை செய்த 4 பேர் கைது!!

ஓட்டல்களில் காக்க பிரியாணி!
மோசடியாளர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

மார்ச் 23-கோவையில் சிக்கன் என்ற பெயரில் ஓட்டல்களில் காக்கா பிரியாணி சப்ளை ஜோராக நடந்து வந்துள்ளது. காக்கையை வேட்டையாடி ஓட்டல்களுக்கு சப்ளை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர்களிடம் விசாரணை நடக்கிறது.

கோவை மதுக்கரை பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சிக்கன் என்ற பெயரில் காக்கை பிரியாணி சப்ளை செய்யப்படுவதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. கோவை ரேஞ்சர் சவுந்தரராஜன், பாரஸ்டர் பழனிச்சாமி, நடராஜன் மற்றும் வனத்துறையினர் நேற்று மாலை மதுக்கரை-நீலம்பூர் பைபாஸ் ரோட்டில் சோதனை நடத்தினர். அப்போது 4 பேர் காக்கைகளை வேட்டையாடிக் கொண்டு இருந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது மதுரை மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி (20), சிறுமுகை ஆலாங்கொம்பை சேர்ந்த முத்துமாலை (25), உரிச்சான் (40), கிருஷ்ணன் (60) எனத் தெரியவந்தது. இவர்கள் காக்கைகளை வேட்டையாடி குறைந்த விலைக்கு அங்குள்ள ஓட்டல்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர். சில்லி சிக்கன், சில்லி பிரை என்ற பெயரில் அசைவ பிரியர்களுக்கு காக்கை இறைச்சி சப்ளை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. காக்கை பிரியாணியும் சிக்கன் பிரியாணி விலையில் ஜோராக விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

அவர்களிடம் இருந்து 25 காக்கைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். ஓட்டல்களுக்கு சப்ளை செய்வதற்காக அவற்றை அவர்கள் தோலுரித்து தயார் நிலையில் வைத்திருந்தனர். வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து அங்கேயே புதைத்தனர். 4 பேரும் கைது செய்யப்பட்டு, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

எந்தெந்த ஓட்டல்களுக்கு காக்கை சப்ளை செய்யப்பட்டு வந்தது என்பது பற்றியும், ஓட்டல் உரிமையாளர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. காக்கையை வேட்டையாடி ஓட்டல்களுக்கு விற்பனை செய்வோர் மீதும், சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...

வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள பெயர்கள் சேர்க்க...
March 23-2009

தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp சென்று உங்கள் மாவட்டம் மற்றும் தொகுதி விபரங்களை அளித்து உங்கள் பகுதியின் வாக்காளர் பட்டியளை பார்வையிட்டு பெயர் விடுபட்டிருந்தால் உடனடியாக வாக்காளர் பட்டியளில் ‍சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம்.

இணையத்திலேயே http://www.elections.tn.nic.in/forms.htm படிவங்கள் அணைத்தும் உள்ளன இணையிறக்கம் செய்து ‍கொள்ளவும்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு 10 நாள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் அளிக்கும் மனுக்களை பெற்று தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

இதனால் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி நெருங்கும் வரையில் வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயரைச் சேர்க்கலாம்.

குறிப்பாக: முஸ்லிம் வாக்காளர்கள் சமுதாய நலன்கருதி பெயர் சரிபாக்கும் விசயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அக்கரையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Wednesday, March 18, 2009

தோல்வியே வெற்றியின் முதல் படி! ம.ம.க தயங்குவது ஏன்?

தோல்வியே வெற்றியின் முதல் படி!
தமிழகத்தில் ஒருகோடி வாக்காளர்களைக் கொண்ட மிகப் பெரும் சமுதாயம் ஒட்டு மொத்தமாக வாக்களிக்க தயாராக இருக்கும் போது தனித்து போட்டியிட மனித நேய மக்கள் கட்சி தயங்குவது ஏன்?

-அபூ அஜ்மல்
சவூதி அரேபியா


தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தனக்கென்று ஒரு பெயரை வைத்துக் கொண்டாலும் அந்தந்த தொகுதியில் சாதி வாக்குகளின் அடிப்படையிலேயே வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

சாதி அரசியல் பெருகிவிட்ட அரசியல் களத்தில் தமிழக முஸ்லிம்களின் மாபெரும் மக்கள் இயக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகம் கழகத்தின் அரசியல் பிரிவான ம.ம.க அனைவருக்கும் வாசலை திறந்து வைத்துள்ளோம் என்று அறிவித்திருப்பதன் மூலம் தனது தேர்தல் நிலைபாட்டில் எதையோ விட்டுக் கொடுப்பது போல் சமுதாய ஆர்வளர்கள் கருதுகிறார்கள்.

தொகுதி பங்கீட்டில் திமுக சரியாகாவிட்டால் நரேந்திர மோடியை அழைத்து விருந்து வைக்கும் அதிமுகவுடன் கூட்டணி என்ற நிலைபாடு சமதாயத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதவில்லை.

ம.ம.க வைப் பொருத்தவரை எத்தனை தொகுதிகள் கிடைத்தது என்பதை விட எத்தனை வாக்குகளைப் பெற்றோம் என்பது தான் இப்போது அரசியல் களத்தில் நாம் காட்ட விருக்கும் பலம்.

1991ம் ஆண்டு பா.ம.க துவங்கியபோது தனித்தே போட்டியிட்டார்கள் அப்போது அந்தக் கட்சியை அரசியல் களத்தில் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அந்தத் தேர்தலில் பன்ருட்டி ராமச்சந்தரன் மட்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை யானையில் ஊர்வலமாக சட்டமன்ற அழைத்து வந்தபோது கூட இவர்கள் எதிர்கால அரசியலில் ஒரு புதிய சரித்திரம் எழுதப்போகிறார்கள் என்று யாரும் நினைக்கவில்லை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் மட்டும் இருக்கும் இவர்களின் நிலை இன்று தேசிய கட்சியே தனது கூட்டணியுடன் அவர்களும் கண்டிப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்று திமுகவுக்கு கட்டளையிடுமளக்கு வளர்ந்துள்ளார்கள் வளத்துக் கொண்டார்கள்.

ஆனால் முஸ்லிம் சமுதாயத்தைப் பொருத்தவரை அப்படி இல்லை நாட்டின் அரசியல் நிலைமையை தீர்மானிப்பவர்களாக நாம் இருக்கின்றோம். டந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி தாம்பரத்தில் நடைபெற்ற ம.ம.க துவக்கவிழா மாநாட்டில் தமிழக முஸ்லிம்கள் லட்சக்கணக்கில் கலந்து கொண்டு இந்த சமுதாயகத்தின் அரசியல் களத்தை நிறைவு செய்யும் மிகப் பெரும் பொருப்பை ம.ம.க விடம் ஒப்படைத்துச் சென்றுள்ளார்கள்.

சமுதாய நலன் கருதி நல்ல முடிவுகள் எடுக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை அதே நேரம் சமுதாயத்தின் தன்மானம் காக்கப்பட வேண்டும் ஒரு சீட் கலாச்சாரம் பிப்ரவரி 7 அன்றே முடிவுரை எழுதப்பட்டுவிட்டது.

ம.ம.க இந்த தேர்தலுக்கு குழந்தையாக இருக்கலாம் ஆனால் அது மிகப் பெரும் சமுதாயத்தின் குழந்தை இந்த மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு தனது சமுதாயத்தின் பலத்தை அரசியல் களத்தில் காட்ட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தோல்வி‍யையே சந்தித்தாலும் அது சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றிதான் காரணம் ஒட்டு மொத்த முஸ்லிம் ஓட்டுக்கள் பிரியும் போது அரசியல் களத்தில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பார்வையாளர்கள் மட்டுல்ல அரசியல் வாதிகளும் தெரிந்து கொள்வார்கள். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இது உதவியாக இருக்கும்.

மற்ற அரசியல் கட்சிகளைப் போல் நமக்கு வாக்கு சேகரிக்க ‍ மேடைகள் தேவையில்லை வெள்ளிக்கிழமை ஜூம்மா பிரசங்கமே போதும் அயல்நாட்டில் பணியாற்றும் நம் சகோரர்கள் தனது குடும்பங்களை ம.ம.கவுக்கு ஓட்டுபோடச் சொல்லி இப்போதை பிரச்சாரத்தை துவங்கி விட்டார்கள் 1கோடி வாக்காளர்களைக் கொண்ட மிகப் பெரும் சமுதாயம் ஒட்டு மொத்தமாக வாக்களிக்க தயாராக இருக்கும் போது தனித்து போட்டியிட மனித நேய மக்கள் கட்சி தயங்குவது ஏன்?

Tuesday, March 17, 2009

அரசியல் கூட்டணியும் முஸ்லிம்களும்...!

அரசியல் கூட்டணியும் முஸ்லிம்களும்...!

செவ்வாய், 17 மார்ச் 2009
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

ஊர்ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். முஸ்லிம்கள் பிளவுபட்டால் அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டம்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய/தமிழக முஸ்லிம்கள் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். மத்திய/மாநில ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டியவர்கள் பிறருக்காகக்கொடி பிடித்து கோஷம்போடப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்!

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் புதிதாகத் தோன்றியுள்ள சிலகட்சிகளும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. இதுவரையிலும் முஸ்லிம்களுக்கு ஒரேயொரு சீட்டைக் கொடுத்து என்றும் நிரந்தரமாக இதயத்தில் இடம் கொடுக்கும் ராஜதந்திரம் இனியும் எடுபட வாய்ப்பில்லை என்று அண்மையில் அரசியல் கட்சியாகப் பரிணமித்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவு (ம.ம.க) மாறுபட்ட சிந்தனை உறுதியுடன் இருக்கிறது.

"எங்காளுக்குக் கருப்பு செவப்பத் தவிர வேற கலரே தெரியாம இருந்துச்சி" என்று தொடங்கிய பழனி பாபாவிலிருந்து செல்லரிக்கத் தொடங்கிய திமுகவின் முஸ்லிம் அடிமைப் பத்திரம், ததஜவில் தொடர்ந்து, வியப்பூட்டும் வகையில் தற்போது த.மு.மு.கவின் கைமாறி இருக்கிறது என்பதை, அதன் தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ்வின் வெகுஅண்மைக்கால நேர்முக/ அறிக்கைகள் தெளிவு படுத்துகின்றன. 'உரிய மரியாதை' கிடைத்தால் அதிமுகவுடன் கூட்டணியமைத்தும் தேர்தலைச் சந்திக்கப் போவதாக மனித நேய மக்கள் கட்சி காய்நகர்த்தி வருகிறது.

திமுகவைப் பொருத்தவரையில் இத்தேர்தலில் காங்கிரஸுக்கு முன்பைவிட அதிகத்தொகுதிகளை வழங்கி மதிமுக,பாமக மற்றும் கம்யூனிஸ்டுகளின் வெற்றிடத்தைக் காங்கிரஸுக்குக் கொடுத்து மத்திய அரசை ஆட்டுவிக்கப் போதுமான குறைந்தபட்ச தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.

ஈழத்தமிழர் பிரச்சினையில் திமுகவின் முரண்பட்ட நிலைப்பாட்டால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்குக் கணிசமான இடங்கள் பறிபோகுமென எதிர்பார்க்கப்படுகிறது.எனவே காங்கிரஸுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் இருந்து தேமுதிகவுக்கு 4லிருந்து 6 தொகுதிகள்வர ஒதுக்கி, அடிக்கடி குடைச்சல் கொடுக்கும் பாமகவுக்கு செக் வைக்கப்படலாம் (பாமகவுக்கு அம்மா பக்கமிருந்தும் அழைப்பிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்).

திமுக=15, காங்கிரஸ்=12, காதர் முஹைதீன்=1, திருமாவளவன்=1 அல்லது 2, தேமுதிக=6லிருந்து 8 போக மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணிக்கு வரும் பட்சத்தில் அதிகபட்சம் 2 அல்லது 3 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில், மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணியை தவிர வேறுவழியில்லை என்ற உறுதியான நம்பிக்கையில் கலைஞர் அதிகபட்சம் 2 அல்லது 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று சொல்லக்கூடும். (15+12+1+2+7+3).

இதுபோக,"எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க எங்களின் கதவுதிறந்தே உள்ளது" என மனிதநேய மக்கள்கட்சி அறிவித்து அதிமுக அழைப்பையும் எதிர்பார்த்துள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஜெயலலிதா,மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 அல்லது 4 தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் என்றும் ஆசை காட்டியிருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.

அதிமுகவைப் பொருத்தவரை இத்தேர்தலில் இருபது சீட்டுகளை வைத்துக் கொண்டு, கம்யூனிஸ்டுகளுக்குத் தலா நான்கு தொகுதிகளும் மதிமுகவுக்கு 4-5 தொகுதிகளும் வழங்கக்கூடும். அன்புச்சகோதரி ஜெயலலிதாவின் அன்பு அழைப்பை ஏற்று, தமிழினத்திற்கு துரோகமிழைத்த திமுக-காங்கிரஸ் கூட்டனியைத் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் பாமக, அதிமுக கூட்டணிக்கு வந்தால் பாமகவுக்கு ஆறு தொகுதிகளையும் ஒதுக்கக்கூடும். மனிதநேய மக்கள்கட்சியும் அதிமுக கூட்டணிக்குள் வந்தால் மதிமுகவிடம் இருந்து (Mr.வைகோ! உங்கள் கட்சியில் முன்பிருந்த மூத்தத் தலைவர்கள் தற்போது இல்லையே....) அல்லது அதிமுகவுக்கான தொகுதிகளிலிருந்து 1-2 ஐச்சேர்த்து மூன்று தொகுதிகள்வரை முஸ்லிம்களுக்கு வழங்கக்கூடும்! (19+4+4+4+6+3).

இதுவரை ஒரேயொரு தொகுதியைப் பரிசாகப்பெற்று பாராளுமன்றத்தில் தமிழக முஸ்லிம்களின் குரலை ஒலித்த (?) கலாச்சாரத்தை மாற்றியமைத்து இம்முறை 4-6 தொகுதிகளில் கூட்டணியாக அல்லது தனித்து தேர்தலைச் சந்திக்கப்போவதாக மமக முனைப்புடன் உள்ளது. தனித்துப் போட்டியிட்டாலும் கூட்டணியாகப் போட்டியிட்டாலும் 'உள்குத்து' அரசியலுக்கு வெளியாட்களின் தேவை மமகவுக்கு இருக்காது. "தேர்தலில் போட்டியிட மாட்டோம்" என்று சொல்லிவந்த தமுமுக தற்போது அரசியல் சாக்கடையில் இறங்கிவிட்டதாக முன்னாள் சகாக்களின் 'இனிய' பிரச்சாரம் நடக்கலாம்.

போதாதென்று இந்திய தேசிய மக்கள் கட்சியும் பத்து இடங்களில் போட்டி இடப்போவதாகச் சொல்லி வருகிறார்கள். (சட்டமன்றத் தேர்தலுக்கே இ.தே.ம.க.வுக்குப் பத்து தொகுதிகள் அதிகம்!;-) முஸ்லிம்லீக்,மனிதநேய மக்கள் கட்சி,இந்திய தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் குறிவைத்துள்ள தொகுதிகளில் வேலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகியவை உள்ளன.எதிரெதிர் கூட்டனியாக அல்லது தனித்து நின்றால் வேலூரில் முஸ்லிம் வேட்பாளரை எதிர்த்து இன்னொரு முஸ்லிம் வேட்பாளரே போட்டியிடும் நிலை ஏற்படும்.(உள்ளதும் போச்சடா நொள்ளைக்கண்ணா!)

இருபத்தேழு லட்சம் (8%) வாக்காளர்களைக் கொண்டிருக்கும் தேமுதிகவை விட, தமிழக முஸ்லிம்கள் சற்று அதிகமாகவே உள்ளனர். அரசுப்பூர்வமற்ற புள்ளிவிபரப்படி 13-15 சதவீதம் அல்லது ஒருகோடிக்கும் மேலாக தமிழக முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். முஸ்லிம்கள் பிரிந்து நின்று பிறகட்சிக் கூட்டணிக்கு ஏங்கி,பரஸ்பரம் எதிர்த்து நிற்பதை விடுத்து, தமிழகத்திலுள்ள அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஓரணியாக தனித்துப் போட்டியிடலாம்.

தமிழகத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும் ஜாதிவாரி வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளர்களையே தொகுதிக்கேற்ப நிறுத்துகின்றனர். எந்தக் கட்சியில் இருந்தாலும் தன்ஜாதிக்காரர்களுக்குக் குரல்கொடுக்கும் சட்ட/நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியாகக் கிடைக்கிறார். தேர்தலில் வெற்றி பெறும்வரைதான் கட்சிக்காரர் வென்றபிறகு அந்தந்த ஜாதிக்காரராகவே நமது உறுப்பினர்கள் இருக்கிறார்கள்! இலட்சங்களாகப் பிரிந்துள்ள ஜாதிக்காரர்கள் தங்களுக்கென உறுப்பினரை பெறும்போது ஒருகோடிக்கும் அதிகமுள்ள முஸ்லிம்கள் ஓரணியில் நின்றால் அவர்களைவிட அதிகமாகவே உறுப்பினர்களைப்பெற முடியும்!

தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் 40-60 தொகுதிகள் 80,000க்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டுள்ளன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் மட்டும் 20-30 தொகுதிகள் தேறும்! பெரும்பாலான தேர்தலில் 20,000-30,000 வாக்காளர்களே வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள். சென்ற சட்டசபைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு புதிதாகப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்கள் அதிமுகவின் 8000-15000 வாக்குகளைப் பிரித்ததே காரணமென்பதை நினைவில் கொண்டால் வரும் தேர்தல்களில் முஸ்லிம்கள் ஓரணியில் நின்று வெற்றி/தோல்வியை நிர்ணயிக்க முடியும்!

எந்தக் கட்சியுடனும் கூட்டணியின்றி தனித்து நின்றாலும் 1-2 தொகுதிகளில் கொஞ்சம் சிரத்தை எடுத்து, திட்டமிட்டுத் தேர்தல் களப்பணியாற்றினால் முஸ்லிம்கள் வெல்லக் கூடிய சூழல் உள்ளது. தோற்றாலும் இவர்களுக்கு இழப்பில்லை. திமுக-அதிமுக யார் வென்றாலும் எதிரணியின் தோல்விக்கு முஸ்லிம்களே காரணம் என்பதை இணைந்து நின்று உணர்த்தினால் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்தத் தேர்தலிகளில் முஸ்லிம்கள் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து இருப்பார்கள்!

ஒற்றுமையாக ஓரணியில் நிற்க மற்றவர்களுக்கு இருக்கும் காரணங்களை விட 'முஸ்லிம்' என்ற காரணமே போதும்.முஸ்லிம் பெரும்பான்மையுள்ள அல்லது வெற்றி/தோல்வியை நிர்ணயிக்கத் தேவையான வாக்குகளைக் கொண்ட தொகுதிகளில் எந்தக் கட்சியும் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் கட்சியினரின் ஒட்டுக்களுடன் முஸ்லிம்களின் ஓட்டுக்களும் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும்.முஸ்லிம்களிடம் ஜாதிவாரி பிரிவினை இல்லையென்பதால் எந்தக்கட்சியின் வெற்றிக்கும் முஸ்லிம்கள் ஓட்டு அவசியமாகிறது. இதை அனைத்து அரசியல்கட்சிகளுமே உணர்ந்துள்ளன.

"இருவர் பிணங்கிக் கொள்ளும்போது அவர்களைச் சமாதானப் படுத்துபவரே சிறந்தவர்" என்ற ஒற்றுமை முழக்கம் முஸ்லிம்களைவிட வேறுயாருக்குப் பொருந்தும்? அல்லாஹ் அக்பர் என்றதும் ஓரணியாக தொழுகையில் நிற்க முடியும்போது உரிமைகளை வென்றெடுப்பதற்கும் ஓரணியில் நிற்கலாமே!

"வேதமாகிய அல்லாஹ்வின் கயிற்றை ஒற்றுமையாகப் பற்றிப்பிடியுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்...." (திருக்குர்ஆன் 003:103)


- நல்லடியார்!

Friday, March 13, 2009

தமிழகத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் மாவட்டங்களின் புள்ளி விபரம்.

மண்டிய இருள் கிழிக்கும் மக்களின் எழுச்சி! மாற்று அரசியலுக் கான மாபெரும் புரட்சி!! என்ற முழக்கத்தோடு களத்தில் புறப்பட்டிருக்கும் தமுமுக வின் மனித நேய மக்கள் கட்சி இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதன் முதலாக பலப் பாரிச்சை பார்க்கப் போகிறது வெற்றிக் கனிகளை பறித்து தன் சமுதாய மக்களுக்கு புகட்டி எட்டுத்திசையிலும் வெற்றிக் கொடி நாட்டிட இருகரம் ஏந்தி இறைவனிடம் துவாச் செய்கிறோம்.

அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு செய்வதில் முனைப்புக்காட்டிவரும் இவ் வேளையில் முஸ்லிம் சமுதாய மக்கள் அதிகமாக வாழும் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள நமது சமுதாய மக்கள் தொகையின் பட்டியலை வெளியிடலாம் என்று ஆசைப்பட்டேன் அதன் விபரங்களை மக்கள் பார்வைக்கும் குறிப்பிட்டுள்ள இந்த தொகுதிகளில் எறும்புகளைப் போன்று சுருசுருப்பாகவும் தேனிக்களைப் போல் கடினமாகவும் உழைக்கும் மனித நேய மக்கள் கட்சி தொண்டர்களுக்காகவும் தொகுத்து வழங்கி உள்ளேன்.


எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டுவரும் அரசியல் கட்சிகள் தமிழக மக்கள் தொகையில் பெருவாரியாக உள்ள முஸ்லீம் சமுதாய மக்களைக் கொண்ட அரசியல் கட்சிகளுக்கு ஒரு சீட்டு கொடுத்து வந்த திரவிடக் கட்சிகள் கடந்த காலங்களில் கிள்ளுக்கீரையை போல் பாவித்த நிலையை மாற்றி இந்த சமுதாயத்திற்குரிய பிரதிநிதித்துவத்தை முறையாக வழங்குவது தான் அவர்களது வெற்றிக்கு சிறந்தது என்று கூத்தாடிகளுக்கும், சாதி நாட்டமைகளுக்கும் சிகப்பு கம்பளம் விரிக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு சொல்லிக்கொள்கிறோம்.


தமிழக அரசு 2001 ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாய் வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிபரப்படி இதோ எங்கள் மக்கள் தொகையின் புள்ளி விபரக் கணக்குகள்.


இந்தக் கணக்கெடுப்பு எடுத்த ஆண்டு 2001

இந்தத்தேர்தல் சந்திக்கும் ஆண்டு 2009

சமுதாய வாரியாக மக்கள் தொகை கூடுதலை நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள்.

தமிழக மக்கள் தொகை மொத்தம்: 62405679

சாதிவாரியாக

மக்கள் தொகை விபரம்

இந்துக்கள்:

54985079

கிருஸ்தவர்கள்:

3785060

முஸ்லிம்கள்

3470647

Jains Population

83359

Buddhists Population

5393

Sikhs Population

9545

Others Population

7252

Religion not stated Population

59344

முஸ்லிம்கள் பெருவாரியாக உள்ள மாவட்டங்களின் விபரம்

மாவட்டம்

சாதிகளின் விபரம்

தொகை

சென்னை

Hindus Population

3573356


Muslims Population

379206


Christians Population

331261

மாவட்டம்

சாதிகளின் விபரம்

எண்னிக்கை

இராமநாதபுரம்

Hindus Population

928090


Muslims Population

174079


Christians Population

84092

மாவட்டம்

சாதிகளின் விபரம்

எண்னிக்கை

நாகபட்டிணம்

Hindus Population

1328144


Muslims Population

112753


Christians Population

45780

மாவட்டம்

சாதிகளின் விபரம்

எண்னிக்கை

தஞ்சை

Hindus Population

1925677


Muslims Population

163286


Christians Population

124945

மாவட்டம்

சாதிகளின் விபரம்

எண்னிக்கை

வேலூர்

Hindus Population

3016962


Muslims Population

350771


Christians Population

102477

மாவட்டம்

சாதிகளின் விபரம்

எண்னிக்கை

திருநெல்வேலி

Hindus Population

2172815


Muslims Population

252235


Christians Population

296578

இதில் குறிப்பிட்டுள்ள இந்து மக்கள் தொகையிலிருந்துதான் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமாக மற்றும் தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் கூறுபோட்டுக்கொள்ளவிருக்கின்றன.

ஆனால் இறைவனின் மாபெரும் அருளால் அவனது துணைகொண்டு முஸ்லிம், கிருஸ்தவ சிருபான்மை மக்களின் வாக்குகளை அப்படியே சிந்தாமல் சிதறாமல் ஒட்டு மொத்தமாக அள்ளும் அபரித சக்தியை தமுமுக வின் மனித நேய மக்கள் கட்சி பெற்றுள்ளது என்பதை திரவிட கட்சிகளுக்கு சொல்லிக் கொள்கிறோம்.

Tuesday, March 10, 2009

அமெரிக்கச் சீரழிவுக் கலாச்சாரத்தால் விழுங்க முடியாத ஒரே ஒரு கலாச்சாரம் இஸ்லாமியக் கலாச்சாரம்தான்

அமெரிக்கச் சீரழிவுக் கலாச்சாரத்தால் விழுங்க முடியாத ஒரே ஒரு கலாசாரம் இஸ்லாமியக் கலாசாரம்தான்

இந்தக் கட்டுரை உலக ''மனிதனே இசுலாத்தின் சாரம்" என்ற தலைப்பில் 10/03/2009 அன்று திணமனியில் சிறப்புக்கட்டுரை பகுதியில் வெளிவந்தவை.
அப்படியே தந்துள்ளோம்.
_____________________________________________________

மேற்கு ஆசியாவில் மெக்கா என்னும் நகரம் ஏற்கெனவே அறியப்பட்ட நகரம்தான். ஆனால் கி.பி. 570-ல் அங்கே நிகழ்ந்த **ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக் காரணமாயிற்று.** உலகம் முழுவதிலுமுள்ள கோடானுகோடி இஸ்லாமியர்கள் தாங்கள் பிறந்த நாடு, பிறந்த ஊர் எதுவாயினும் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை கபாஅவை முன்னிறுத்தி, அந்த நகரம் இருக்கும் திக்கு நோக்கித் தொழுகிறார்கள்! (காபா வரலாறும் அதன் சிறப்புக்களும் காண)

வாழ்நாளில் ஒருமுறையாவது அந்த நகரத்திற்குச் செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் ஐம்பெருங்கடமைகளில் ஒன்றாகும்.

உலகின் எந்தப் பகுதியிலுள்ள எந்த மண்ணும் ஒரு தன்மையானதுதான்! அதற்கென்று தனிப்பெருமையோ சிறுமையோ கிடையாது. அந்த மண்ணில் பிறக்கின்ற மனிதர்களைப் பொருத்து அது பெருமையோ சிறுமையோ அடைகிறது. நபிகள் நாயகத்தின் ஏற்றமிகு பிறப்பு மெக்கா மேன்மைப்படக் காரணமாயிற்று. அதேபோல் யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்துப் பெற்ற முப்பது வெள்ளிக் காசுகளை, தன்னுடைய இழிசெயலை எண்ணி மன உளைச்சலுக்கு உள்ளாகி, அவன் வீசி எறிந்த நிலம் "ரத்த நிலம்' ஆகிச் சிறுமைப்பட்டுவிட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) 63 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் பிந்தைய 23 ஆண்டுகள் இறைவாக்குகள் அவர் வழியாக இறங்கின.

இறைவாக்கினராக நபிகள் நாயகம் (ஸல்) இருப்பினும், அவர் தன்னைத் தெய்வநிலைக்குத் தூக்கிக்கொள்ள விழையவில்லை! தன்னை எளிய மனிதனாகவே பிறர் கருத வேண்டும் என்பதைத் தன்னைப் பின்பற்றுவோரிடம் சட்டமாக்கினார். இசுலாம் என்பதற்கு "ஒப்படைப்பு' என்பது பொருள். அது முழுச் சரணாகதி நிலை.

பொழுது புலர்வதற்கு முன்னால் தொடங்கி ஒவ்வொரு நாளும் இடைவெளிவிட்டு ஐந்துமுறை தொழுகைக்கு அழைக்கப்படுகிறது. பொதக்குடியிலும், கூத்தாநல்லூரிலும், வாலாஜாபேட்டையிலும், வங்கதேசத்திலும், இரானிலும், ஈராக்கிலும் ஒரேமாதிரியாக ஐந்துமுறை தொழுகை விளிகுரல் ஓரிடத்தில் கூடித் தொழுது இறையிடம் தம்மை ஒப்படைத்துக் கொள்ளுமாறு அழைக்கிறது.

இசுலாத்திற்கு ஐந்து கடமைகள் உண்டு என்று திருக்குரான் விதிக்கிறது.

முதற்கடமை - இறை நம்பிக்கை; இரண்டாவது கடமை - தொழுகை; மூன்றாவது கடமை - ஜக்காத்; நான்காவது கடமை - ரம்ஜான் நோன்பு; ஐந்தாவது கடமை - ஹஜ் யாத்திரை.

திருக்குரானில் அல்பாத்தியா என்று கூறப்படும் தோற்றுவாய்ப் பகுதியான விளக்கங்களை எவ்வளவு விரித்துச் சொன்னாலும், இன்னும் சொல்வதற்கு ஏதோ எஞ்சி நிற்பதுபோன்ற உணர்வே ஏற்படும்! இறைவன் அல்லா என்றழைக்கப்படுகிறான். "அல்லாகூ அக்பர்' என்னும் சொற்றொடர் இறைவனை மிகப்பெரியவன் என்று பறையறைந்து சொல்கிறது!

இசுலாத்தில் "இறை ஒருமை' இன்றியமையாதது. இறைவனை ஏகன் என்றும் அனேகன் என்றும் இருவேறு வகையாகத் திருவாசகம் கூறும். அதனுடைய பொருள் அவன் வரையறைக்குட்பட்டவனில்லை என்பதாகும். இது மாணிக்கவாசகர் என்னும் மனிதரின் கூற்று. இந்தக் கூற்றோடு உடன்படலாம்; மாறுபடலாம். எதுவும் குற்றமில்லை. மனிதன் கூறியதை மற்றொரு மனிதன் மறுப்பது இயல்பே! இந்து சமயம் நெகிழ்ச்சிப் போக்குடையது.

ஆனால் திருக்குரான் என்பது இறைவாக்கு! ஆகவே ஐயத்திற்கிடமான விவாதிக்கத்தக்க நிலை என்று குரானில் எதுவுமே இருக்க முடியாது. எல்லாமே தீர்மானமாகச் சொல்லப்பட்டவை! மாற்றம் செய்ய எந்த மாந்தனுக்கும் உரிமையில்லை. இசுலாம் கட்டிறுக்கமானது.

இன்றைய உலகமயமாக்கல் எல்லா நாகரிகங்களையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. சிலரைக் கொழுக்க வைத்துப் பலரை அன்னக்காவடிகளாக்கும் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையே அகிலத்தின் கொள்கையாகிவிட்டது. ஒரு மொழி, ஒரு கொடி, ஒரு பண்பாடு என்னும் நிலையை நோக்கி எல்லா நாடுகளும் தங்களின் தனித்தன்மையை இழக்குமாறு செய்யப்பட்டுத் தலைகீழாக இழுத்துச் செல்லப்படுகின்றன. முன்பு சோசலிசக் கோட்பாடு தடுத்து நிறுத்தி வைத்திருந்த அமெரிக்க சீரழிவுக் கலாசாரம் இன்று தடுப்பாரின்றித் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இன்னும் அமெரிக்கச் சீரழிவுக் கலாசாரத்தால் விழுங்க முடியாத ஒரே ஒரு கலாசாரம் இசுலாமியக் கலாசாரம்தான். அதற்குக் காரணம் அதனுடைய கட்டிறுக்கமான அமைப்புத்தான்.

நபிகள் பெருமகனார் எல்லாத் தட்பவெப்ப நிலைகளையும் தாங்குவதற்கும் எதிர்கொள்வதற்கும் தோதாக "உம்மா' என்கிற இசுலாமி சமூக அமைப்பை உருவாக்கியிருக்கிறார்!

அரபுத் தேசியத்தைக் கட்டியமைக்கப் புறப்பட்ட நபிகள் பெருமானார் கபாஅவிலிருந்து விக்கிரகங்களை விலக்கினாரே ஒழிய, கபாஅவை விலக்கவில்லை. கபாஅ என்னும் பழைய அரபு வேரிலிருந்து புதுமை படைத்தவர் நபிகள் பெருமானார்.

ஒருவன் இசுலாமியனாகத் திகழ்வதற்கு இறைநம்பிக்கை எப்படி இன்றியமையாததோ, அப்படியே இன்றியமையாதது கூடித் தொழுதல்.

தொழுகை விளிகுரல் தொழுகைக்கான நேரத்தை வரையறுத்து அழைப்பதன் நோக்கமே கூடித் தொழுதலின் இன்றியமையாமை காரணமாகவே! ஆகவே இசுலாத்தில் தொழுகை தனிமனித விவகாரமில்லை. அது சமூக உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

தொழுதால் போதாதா? கூடித்தான் தொழ வேண்டுமா என்று கேட்டால், இசுலாம் "ஆம்' என்று உறுதிபடக் கூறுகிறது.

தொழுதல் "உம்மாவோடு' தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. உம்மா என்பது சமூகம். அது ஒரு கொள்கை வழிப்பட்ட கூட்டத்தைக் குறிக்கிறது. இது நபிகள் பெருமானாரின் தனிப் பெருஞ்சிந்தனை! இஸ்தான்புல்லில் உள்ள இப்ராகிமோடு நம்முடைய இளையான்குடி புதூரில் உள்ள அப்துல்லாவும் இணைய முடிவதற்கு நபிகர் பெருமானார் உருவாக்கிய உம்மாதான் காரணம்! இசுலாத்தில் உம்மா முக்கியத்துவம் உடையது என்பதால் கூடித் தொழுதல் முக்கியத்துவமுடையதாகி விடுகிறது.

கடைசிக் கடமையான ஹஜ் யாத்திரையின் நோக்கமே இந்தச் சமூகக் கட்டமைப்பைக் கெட்டிப்படுத்துவதுதான்!

மெக்கா கபாஅவின் முன்னால் ஆப்பிரிக்கரும் சீனரும் இளையான்குடி புதூர் திராவிடரும் வளைகுடா நாட்டு அரேபியரும் டாக்காவைச் சேர்ந்த வங்காளியும் பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபியும் அருகருகே குனிந்தும், நிமிர்ந்தும், கைகளைச் சேர்த்தும், விரித்தும், துணியால் மூடப்பட்ட தலையோடு ஒரே மாதிரியாகத் தொழும்போது ராணுவ அணிவகுப்புத் தோற்றுவிடும் என்பது அழகியல் பார்வை! விரிந்து, பரந்த, சமூக உருவாக்கம் நபிகள் பெருமானாரின் சிந்தனையாக இருந்தது என்பது கருத்தியல் பார்வை!

அரபு தேசியத்திலிருந்து படிப்படியாக விரிந்து உலக சமுதாயத்தை நோக்கி வளர்கிறது நபிகள் பெருமானாரின் கூடித் தொழுதல் என்னும் கோட்பாடும், உம்மா உருவாக்கமும்!

இசுலாத்தின் மூன்றாவது கடமை ஜக்காத். ஒருவன் தன் வருவாயில் நாற்பதில் ஒரு பங்கை, அஃதாவது இரண்டரை விழுக்காட்டை ஏழைபாழைகளுக்கு வழங்குவது! இந்தத் தொகை ஒன்றும் அதிகமானதில்லை. யாருக்கும் இயலக்கூடியதுதான்!

ஒரு சமூகத்தில் சிலர் வசதியானவர்களாகவும், பலர் வறியவர்களாகவும் இருக்கும்போது, வறியவர்கள் இயல்பாக வாழ வழி செய்யப்படவில்லை என்றால் இவர்கள் வன்முறையாளர்களாக மாறுவதும் வழிப்பறியாளர்களாகக் கையோங்குவதும் தவிர்க்க இயலாததாகிவிடும். அத்தகைய சூழ்நிலையில் எந்த அரசும் வறியவர்களைக் கட்டுக்குள் வைக்க முடியாது!

ஆகவே உலகிலுள்ள எல்லா நெறியாளர்களும் கொடையைப் போற்றியிருக்கிறார்கள். "ஈத்துவக்கும் இன்பம்' என்று ஈகை பாராட்டி அதை ஊக்குவிப்பான் வள்ளுவன். வறியவர்கள் பெருவாரியாக இருக்கும் உலகில் ஈகை வறுமைக்குத் தீர்வாகாது எனினும், அது பேருந்துகளிலுள்ள அதிர்ச்சிதாங்கிபோல் செயல்படுவதால், வறியவர்கள் பொங்கி எழுந்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதில்லை.

இன்றைக்கு ஒரு கிலோ அரிசி ரூ. 38க்கு விற்கும் நிலையில் வறியவர்களுக்கு ஓர் அரசு ரேஷன் கடையில் கிலோ 1 ரூபாய்க்கு அரிசி போடுவது, வறியவர்களின்மீது கொண்ட பற்றினால் அல்ல; ஆட்சியிலிருக்கும் வசதிமிக்க கோமான்கள் தங்களையும் தங்களையொத்த வசதியானவர்களையும் கிளர்ச்சிகளிலிருந்து காத்துக்கொள்வதற்காகத்தான்!

எல்லாரும் கொடுப்பதைப் பாராட்டுகிறார்கள் எனினும் "ஈவார் மேல் நிற்கும் புகழ்' என்று வள்ளுவன் புகழாசை காட்டி கொடுக்கச் சொல்கிறான் என்றாலும், நபிகள் பெருமானார் ஜக்காத் என்று சொல்லப்படும் கொடையை இசுலாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக்கி அதைக் கட்டாயமாக்கிவிடுகிறார்.

ஜக்காத் கொடுக்காதவர்களின் நம்பிக்கையையோ தொழுகையையோ அல்லா ஏற்றுக்கொள்வதில்லை என்று நபிகள் பெருமானார் அடித்துக் கூறும்போது, ஏழைபாழைகளின்மீது அவர் கொண்டுள்ள பரிவு அல்லாவின்மீது கொண்டுள்ள அன்பையும் விஞ்சி நிற்கிறது!

நான் முதற்கடமையான கடவுள் நம்பிக்கை உடையவன்; இரண்டாவது கடமையான தொழுகையையும் தவறாது நிறைவேற்றுபவன் என்று ஒருவன் நபிகளிடம் சொன்னால், மூன்றாம் கடமையான ஈயும் குணம் உன்னிடம் இல்லை. ஆகவே அல்லா உன்னை ஏற்க மாட்டார் என்று தள்ளிவிடுகிறார்.

மூன்றாம் கடமைக்குள் முதலிரண்டு கடமைகளையும் அடக்கிய நபிகள் பெருமானாரின் சிந்தனை ஈடுஇணையற்ற அழகுடையது; ஒப்பற்றது; சமூக உய்வை நோக்கமாகக் கொண்டது!

தீர்ப்பு நாளன்று நீங்கள் செய்த நல்ல தீய செயல்களுக்குத் தக வெகுமதி அல்லது தண்டனை உண்டு என்று திருக்குரான் சொல்வது நாம் ஏற்கெனவே கேட்டறிந்த கோட்பாடுதான்!

ஆனால் செய்யத்தவறிய செயலுக்குக்கூடத் தீர்ப்புநாளில் தண்டனை உண்டு என்று நபிகள் சொல்வதும் "உங்களுக்கு இவ்வளவு வசதி இருந்தும், உங்கள் பக்கத்திலேயே ஆதரவற்றவர்கள் இருந்தும் அவர்களுக்கு ஏன் உதவவில்லை?' என்ற கேள்விக்குத் தீர்ப்பு நாளில் பதில் சொல்ல நேரிடும்' என்று சொல்வதும் நாம் கேட்டறியாத ஒப்பற்ற கோட்பாடு!

நான்காம் கடமை ரம்ஜான் நோன்பு. அந்த நோன்பு மாதம் முழுவதும் உண்ணாமலும், எதையும் அருந்தாமலும், இணைவிழைச்சு முதலியவற்றில் ஈடுபடாமலும் பகற்பொழுது முழுவதையும் கழிப்பது; தொழுவது!

பொதுவாகப் பண்டிகைகள் ஆட்டபாட்டம், விருந்து என்ற வகையில் கொண்டாடப்படும். ஆனால் பட்டினி கிடந்து பண்டிகை கொண்டாடு என்ற சிந்தனை இன்னொரு அழகிய சிந்தனை.

பட்டினி கிட; பசியை உணர்; பசித்தவனுக்குச் சோறுபோடு! இதுதான் நான்காம் கடமையின் உட்பொருள்.

ஒரு திருவிழாவைப் பட்டினித் திருவிழாவாக்கி, பட்டினிக்கு எதிராக இயக்கம் நடத்திய நபிகள் பெருமானாரின் உன்னதமான சிந்தனை உலகை உயர்த்தவல்லது.

ஐந்தாம் கடமையான ஹஜ் யாத்திரை உம்மாவோடு இணைத்து ஏற்கெனவே பேசப்பட்டிருக்கிறது!

இசுலாத்திற்கு ஏக இறைத்துவம் எனப்படும் இறை ஒருமை முக்கியம்! இறையச்சம் முக்கியம். இறைவனுக்கு இணை சொல்லக்கூடாது என்பது முக்கியம். தீர்ப்பு நாளில் நம்பிக்கை முக்கியம். ஐந்துவேளை தொழுகை முக்கியம். ஜக்காத் முக்கியம். உம்மா முக்கியம்

இன்னும் எத்தனையோ முக்கியங்கள் உண்டு. விரித்தால் விரிகடலெனப் பெருகும். ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு இஸ்லாமியர் உடன்பிறந்தோன் என்பதை வலுப்படுத்தவே ஹஜ் யாத்திரை. தனிச்சாதி, தனிக்குலம், தனி இனம் என்பதெல்லாம் தகர்ந்து போகும். தேசத்தின் எல்லைக் கோடுகள் தளர்ந்து போகும். தகர்ந்துதான் போகட்டுமே. அவற்றை இறைவனா போட்டான்?

1947-க்கு முன்பு நம்முடைய தேசபக்தி முழுப் பஞ்சாபையும், முழு வங்காளத்தையும் உள்ளடக்கியது. 1947-க்குப் பின் கிழக்கு வங்கத்தின்மீதும், பலுசிஸ்தான்மீதும் பற்றுக் காட்டுவது தேசபக்தி ஆகாது. நம்முடைய தேசபக்தி ஒச்சமுடையதுபோலும். ஒருகாலத்தில் விரிகிறது; பிறிதொரு காலத்தில் சுருங்குகிறது.

"யாதும் ஊரே; யாவருங் கேளிர்' என்னும் தமிழ்ச் சிந்தனை உலகு தழுவியது. நபிகள் பெருமானாரின் சிந்தனையும் உலக மனிதனின் உருவாக்கமே.

உலக மனிதனை உருவாக்குவது இன்னும் கற்பனாவாதமாகவே இருந்தாலும், இசுலாத்தின் முயற்சி அதுதான்.

உலக மனிதனே இசுலாத்தின் சாரம்.

**
இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள **ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக் காரணமாயிற்று.** என்ற தவறான தகவலுக்கான விளக்கம்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறக்கும் முன்பே அந்த நகரமும் அங்குள்ள காபா ஆலயமும் புனிதமானவைகளாகவே அப்போதுள்ள மக்கள் பயன்படுத்தி வந்தார்கள். மக்காவிலுள்ள காபா ஆலயம் முதல் மனிதனின் கரங்களால் கட்டப்பட்டவை அதன் பின் இபுறாஹீம் நபி (அலை) ஆப்ரகாம் என்று சொல்லக்கூடிய இறைத்தூதரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டவை என்று முஸ்லீம்கள் நம்புகிறோம். நபி ஸல் அவர்கள் அங்கிருந்த சிலைகளை அப்புறப்படுத்தினார்கள் இஸ்லாத்தை அதன் உண்மை வடிவில் சீரமைப்புச் ‍செய்தார்கள் இறைச் செய்தியை பெற்று மக்களுக்கு எடுத்துச் ‍சொல்லி நேர்வழிப்படுத்தினார்கள்.
அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)
எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறை வேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். (அல்குர்ஆன் 14:37) என இபுறாஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.
''தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)

அந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.) (அல்குர்ஆன் 2:127)

Monday, March 9, 2009

போதும் நிறுத்துங்கள் உங்கள் அரசியலை!

போதும் நிறுத்துங்கள் உங்கள் அரசியலை!

இலங்கைத் தமிழர்களின் பிரச்னை என்ன என்று புரியாத அரசியல் கட்சியோ, தலைவர்களோ தமிழ்நாட்டில் இல்லை. அரசி யல்வாதிகள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள், அரசு ஊழியர்கள், பத் திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என்று சகல தரப்பினரும் அவர்க ளுடைய வேதனையை அறிந்தவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆயி னும் ஒருங்கிணைந்த, உறுதியான, முதிர்ச்சியான நடவடிக்கைகள் இல்லாததால் இலங்கைத் தமிழர்களும் பராதீனப்பட்டு அவர்களு டைய பிரச்னையும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது

தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய, திராவிட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், தமிழ்நாட்டு வழக்கறிஞர்களும், திரைப்படத்துறையி னரும் இந்த நேரத்திலாவது சிறிது ஆத்ம பரிசோதனை செய்ய வேண் டும். இதுவரை தாங்கள் நடத்திய கிளர்ச்சிகள், உண்ணாவிரதங்கள், முழு அடைப்புகள், இயற்றிய தீர்மானங்கள் போன்றவற்றுக்கு உருப் படியான பலன் ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா? மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால் இதை காங்கிரஸ் கட்சிக் கும் அதன் கூட்டணிக்கும் எதிராகப் பயன்படுத்த ஒரு சில அமைப்பு கள் தீவிரம் காட்டுவதாகத் தெரிகிறது. இலங்கைப் பிரச்னையைத் தமிழ்நாட்டு தமிழர்கள் கையாளும்விதம் இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவே போய்க்கொண்டிருக்கிறது என்பதை யாருமே இப்போதாவது உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை

இனி எந்த அரசியல் கட்சியும், சமுதாய இயக்கமும் இதைத் தங்க ளுடைய தனியுரிமைப் பிரச்னையாகக் கையில் எடுக்கக் கூடாது. தமி ழர்களுடைய முழு அக்கறையும் ஆதரவும் தேவைப்படும் இப் பிரச் னையைத் தீர்க்க தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த அரசு அதிகாரிகள், ராஜதந்திரிகள், பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், தன் னார்வத் தொண்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும்

சர்வதேச அரங்கில் இப்பிரச்னையைக் கொண்டு செல்ல அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் ஆற்ற வேண்டிய செயல்களை உடனே தொடங்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குத் தேவைப் படும் உணவு, உடை, மருந்து போன்ற அவசியப் பொருள்களைத் திரட்டி அதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமும், உற்ற தன் னார்வத் தொண்டு அமைப்புகள் மூலமும் முறையாக வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்

தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் உள்ள இலங்கைத் தமிழர்க ளின் குழந்தைகள் நல்ல கல்வியைப் பெற எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டும்
இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வசித்துவரும் பகுதிக ளான வடக்கு, கிழக்கு ஆகியவற்றின் தனித்தன்மையைக் காப்பதி லும், அங்கு மற்ற இனத்தவரைக் குடியமர்த்தாமல் தடுப்பதிலும் அக் கறை எடுக்க வேண்டும். தமிழர்களுக்குச் சம உரிமை, அந்தஸ்து வழங்கி தமிழர் பகுதிகளில் அமைதி ஏற்பட இந்திய அரசின் மூலம் இலங்கை அரசுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டும்
விடுதலைப் புலிகளையும், இலங்கை அரசையும் அவர்களுக்கு உற்ற நண்பர்கள் மூலம் மீண்டும் அணுகி உடனடியாகப் போர் நிறுத் தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதைவிடுத்து தமிழ்நாட்டில் அறிக்கைப் போர் நடத்துவதும், சுவ ரொட்டி விளம்பரங்கள் செய்வதும், வழிநடைப் பயண இயக்கம் மேற் கொள்வதும், போட்டி உண்ணாவிரதங்கள் நடத்துவதும் நமக்குள் மேலும் பிளவைத்தான் ஏற்படுத்துமே தவிர, பிரச்னை தீர இம்மியள வும் உதவாது. சில நாள்களுக்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இந்தப் பிரச்னையில் முழு அமைதி காப்பதுகூட நல்லது என்று தோன் றுகிறது

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நார்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழர் களும் துபை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்க ளும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆலோசனை களையும் கேட்டு, சர்வதேச அரங்கில் தமிழர்கள் ஒற்றுமையுள்ள ஓர் அணியாகச் சென்று முறையிட்டு ஈழத் தமிழ் இனத்தைக் காப்பது தான் விவேகமாக இருக்கும். வெற்று கூச்சல்களால் இந்தப் பிரச்னை தீராது

வழக்கறிஞர்கள், மாணவர்கள் என்று சகல தரப்பினரும் உணர்ச்சி பூர்வமாகச் சிந்திப்பதைக் கைவிட்டு அறிவூபூர்வமாக சர்வதேச அரங் கில் காய்களை நகர்த்துவதே இலங்கைத் தமிழ் இனத்தைக் காப்பதற் குப் பெரிதும் உதவும். உடனடியாகப் போர் நிறுத்தம்; சர்வதேச அளவி லான சமரசத் தீர்வு - இதற்கு வழிகோலுவதுதான் புத்திசாலித்தனம்

ஈழத் தமிழர்களுடன் தொப்புள்கொடி உறவு ஏதும் இல்லாத நார்வே நாட்டவர்கள் காட்டிய அளவுக்காவது உண்மையான அக்கறையுடன் நாம் செயல்பட்டிருக்கிறோமா என்று தமிழ்நாட்டு அரசியல் தலைவர் கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டால் வெட்கித் தலைகு னிய வேண்டியிருக்கும் என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே உங்களுக்கு ஒரு வேண்டுகோள், ""போதும் நிறுத்துங்கள்'' உங்கள் அரசியலை!

Tuesday, March 3, 2009

மனித நேய மக்கள் கட்சி 6தொகுதிகளில் போட்டி

மனித நேய மக்கள் கட்சி 6தொகுதிகளில் போட்டி
த மு மு க மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் அறிவிப்பு



கோவை-மார்ச்-3
மனித நேய மக்கள் கட்சி வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆறு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர்அலி, மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் அப்துல் சமத், பொருளாளர் ஹாரூண் ரஷீத் ஆகியோர் இன்று கோவையில் நிருபர்களிடம் கூறினார்கள்.

மனித நேய மக்கள் கட்சி பிப்ரவரி 7ம் தேதி துவங்கப்பட்டது. முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுக் கட்சியாக இருந்தாலும், த.மு.மு.க.வின் முழுக் கட்டுபாட்டில் இயங்கும். மனித நேய மக்கள் கட்சிக்கு மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதற்காக தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகிறது.

முதல் கட்டமாக தஞ்சை, மதுரை, மண்டலங்களில் கலந்தாய்வு முடிந்து விட்டது. இன்று கோவையில் நடைபெற்றது. நாளை சென்னை மண்டலத்தில் கலந்தாய்வு நடைபெறும். இன்னும் ஓரிரு நாட்களில் 32 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை, வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சை, திருநெல்வேலி அல்லது தென்காசி தனி ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். ஏதேனும் அரசியல் கட்சிகள் சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எழுத்துப் பூர்வமாக வாக்குறுதி அளித்தால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம்.

இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி நிலவரம் மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

சென்னை உயர்நீதிமன்றம் மோதல் சம்பவம் துர்பாக்கியமான செயல். அப்பாவி மக்கள், காவல்துறையையும், நீதித்துறையையும் நம்பித்தான் இருக்கிறார்கள். அவர்களே பகிங்கரமாக மோதிக் கொள்வது வேதனையானது. மருத்துவனை நோயாளிக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் மறுத்தது போல் இச்செயல்கள் உள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ராணுவ நடவடிக்கையின் மூலம், இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. இவ்வாறாகக் கூறினார்கள். இந்த பேட்டியின் போது மாநிலச் செயலாளர், கோவை உம்மர், மாவட்டத் தலைவர் பஷீர், மாவட்டச் செயலாளர் அமீர், மாவட்ட பொருளாளர் கபீர் ஆகியோர் உடனிருந்தார்கள். பின்னர், த.மு.மு.க. மர்க்கஸில் இன்று பகல் 12.00 மணியளவில் மனித நேய மக்கள் கட்சியின் மேற்கு மண்டலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழுவில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை நியமித்தல் சம்பந்தமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார்கள்.

செய்தி.புகைப்படம்: கோவை தங்கப்பா

Monday, March 2, 2009

ரியாத் இந்திய பன்னாட்டு பள்ளியில் வ‌ரும் க‌ல்வி ஆண்டு முத‌ல் தமிழ்ப்பாடம் சேர்க்கப்படவுள்ளது.

ரியாத் இந்திய பன்னாட்டு பள்ளியில் வ‌ரும் க‌ல்வி ஆண்டு முத‌ல் இன்ஷா அல்லாஹ் தமிழ்ப்பாடம் சேர்க்கப்படவுள்ளது.

ரியாத் இந்திய பன்னாட்டு பொது பள்ளியில் (Indian International Public School, Riyadh ) வ‌ரும் க‌ல்வி ஆண்டு முத‌ல் த‌மிழ்ப் பாட‌மும் மொழிப்பாட‌மாக‌ சேர்க்க‌ப்ப‌ட்டுள்ள‌து. தொடக்கத்தில் மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளுக்கும், பின்னர் மற்ற வகுப்பினருக்கும் தமிழ்ப்பாடம் சேர்க்கப்படவுள்ளது.

தமிழ்ப்பாடத்தை பாடத்திட்டத்தில் சேர்த்தமைக்காக ரியாத் தமிழ்ச் சங்கம் பள்ளியின் தாளாளருக்கும், மேலான்மை குழுவினருக்கும், பள்ளியின் முதல்வருக்கும் பெருநன்றிகளைத் பள்ளி மாண‌வ‌ர்க‌ளின் பெற்றோர்க‌ள் தெரிவித்துக் கொண்டுள்ள‌ன‌ர்.

பாடத்திட்டத்தில் தமிழைச் சேர்க்க அரும்பாடுபட்ட தமிழார்வம் கொண்ட அனைத்து பெற்றோருக்கும், அவர்களுக்கு உறுதுணையாக நின்ற ரியாத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் சவுதி தமிழ்ச் சங்கத்திற்கும் ரியாத் தமிழ்ச் சங்கம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.