.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label தேர்தல் ஆணையம். Show all posts
Showing posts with label தேர்தல் ஆணையம். Show all posts

Wednesday, July 28, 2010

S Y Quraishi appointed Chief Election Commissioner | இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக குரேஷி நியமனம்

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சஹாபுதீன் யாகூப் குரேஷி (63) நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையராக உள்ள நவீன் சாவ்லா, நாளை (ஜூலை 29) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தேர்தல் ஆணையராக உள்ள குரேஷி, தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வெளியிட்டார்.

மத்திய தலைமை தேர்தல் ஆணையராக இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் பதவியில் குரேஷி இரண்டு ஆண்டுகள் இருப்பார்.

1971ம் ஆண்டு ஐஏஎஸ் ஹரியாணா கேடர் அதிகாரியான குரேஷி மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

மத்திய அரசில் தேசிய எஸ்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கத்தின் டைரக்டர் ஜெனரல், தூர்தர்ஷன் டைரக்டர் ஜெனரல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குனர், மத்திய விளையாட்டுத்துறைச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

2006ம் ஆண்டில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

Saturday, July 18, 2009

வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடக்கும் என்பதற்கு அடுத்த ஆதாரம்


நாக்பூர்: "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மோசடி செய்ய முடியும். அது ஒன்றும் மோசடிகள் செய்ய முடியாத அளவுக்கு பாதுகாப்பானது அல்ல' என்று, ஐதரபாத்தை சேர்ந்த தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்குப் பின், மின்னணு வாக்குப்ப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அதன் நம்பகத்தன்மை பற்றியும் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், நெட் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்த ஹரி கே.பிரசாத் என்பவரும், "எலக்ஷன் குரூப்' என்ற அமைப்பைச் சேர்ந்த வி.வி.ராவ் என்பவரும் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: முன்பே புரோகிராம் செய்யப்பட்ட "சிப்'களைப் பொருத்துவதன் மூலம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடிகள் செய்ய முடியும். இந்த வகை "சிப்'கள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த "சிப்'களை ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தி விட்டால், பதிவாகும் ஓட்டுக்களில் 60 சதவீத ஓட்டுக்கள் ஒரு குறிப்பிட்ட கட்சி வேட்பாளருக்கு விழும்படி செய்ய முடியும். அதாவது பத்து ஓட்டுக்கள் பதிவானால், அதில் ஆறு ஓட்டுக்கள் குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு கிடைக்கும்படி செய்யலாம். இதுபோன்ற பிரச்னை இல்லாத, பாதுகாப்பான வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்க வேண்டும் எனில், இந்த இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தவறுகள் நிகழ்ந்தால் கண்டுபிடிக்கும் கருவியை உருவாக்க வேண்டும். ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்தவுடன், எவ்வளவு பணம் எடுக்கப்பட்டது எவ்வளவு பணம் மீதமுள்ளது என்பதை காட்ட ரசீது வருவது போல, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் தானாக ரசீது வரும் முறையை உருவாக்க வேண்டும் என்றனர்.

Tuesday, March 24, 2009

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...

வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள பெயர்கள் சேர்க்க...
March 23-2009

தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp சென்று உங்கள் மாவட்டம் மற்றும் தொகுதி விபரங்களை அளித்து உங்கள் பகுதியின் வாக்காளர் பட்டியளை பார்வையிட்டு பெயர் விடுபட்டிருந்தால் உடனடியாக வாக்காளர் பட்டியளில் ‍சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம்.

இணையத்திலேயே http://www.elections.tn.nic.in/forms.htm படிவங்கள் அணைத்தும் உள்ளன இணையிறக்கம் செய்து ‍கொள்ளவும்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு 10 நாள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் அளிக்கும் மனுக்களை பெற்று தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

இதனால் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி நெருங்கும் வரையில் வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயரைச் சேர்க்கலாம்.

குறிப்பாக: முஸ்லிம் வாக்காளர்கள் சமுதாய நலன்கருதி பெயர் சரிபாக்கும் விசயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அக்கரையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Thursday, June 14, 2007

4 தொகுதிகளில் வேட்பு மனு! ஜெ மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!

4 தொகுதிகளில் வேட்பு மனு!
ஜெ மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக பொதுச் செயாளர் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை, புவனகிரி, தர்மபுரி ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா.

இதுகுறித்து திமுக எம்பி குப்புசாமி தேர்தல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டபடி ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக் கூடாது. ஆனால் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை, புவனகிரி, தர்மபுரி ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தாம் ஏற்கனவே 2 தொகுதிகளில் போட்டியிடுவதை மறைத்துவிட்டுத் தான் 2 தொகுதிகளில் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் குப்புசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தை அனுகினார். அங்கு தாக்கல் செய்த மனுவில், நான் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

குப்புசாமியின் இந்த மனு 4 ஆண்டுகளாக நிலுவையிலிருந்தது. இதன் பின்னர் நீதிபதிகள் தர்மராவ், பழனிவேலு ஆகியோரை கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குப்புசாமி சார்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஜெயலலிதா சார்பில் ஜோதி, தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ராஜகோபால் ஆகியோர் ஆஜராயினர்.

இன்று இந்த வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. சட்டம் ஏழைக்களுக்கு மட்டுமல்ல சமுதாயத்திலுள்ள உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

இந்த வழக்கில் சட்டம் பொதுவானது என்ற கொள்கையை விட்டு விலகிச் சென்றுள்ளதாக தெரிகிறது.

2 தொகுதிகளுக்கு மேல் மனு தாக்கல் செய்த ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க மனுதாரர் புகார் கொடுத்துள்ளார். இந்த மனு மீதான குற்றசாட்டில் அடிப்படை முகாந்திரம் உள்ளது. 2 தொகுதிகளில் மனு தாக்கல் செய்ததை மறைத்து 4 தொகுதிகளில் மனு தாக்கல் செய்துள்ளது, சட்ட விதிகளை மீறுவதாக உள்ளது.

தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் கண்டும் காணாதது போல் வருத்தத்திற்குரியது. ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க கோரும் குப்புசாமி மனு மீது தேர்தல் ஆணையம் 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தனர்.