.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, March 18, 2009

தோல்வியே வெற்றியின் முதல் படி! ம.ம.க தயங்குவது ஏன்?

தோல்வியே வெற்றியின் முதல் படி!
தமிழகத்தில் ஒருகோடி வாக்காளர்களைக் கொண்ட மிகப் பெரும் சமுதாயம் ஒட்டு மொத்தமாக வாக்களிக்க தயாராக இருக்கும் போது தனித்து போட்டியிட மனித நேய மக்கள் கட்சி தயங்குவது ஏன்?

-அபூ அஜ்மல்
சவூதி அரேபியா


தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தனக்கென்று ஒரு பெயரை வைத்துக் கொண்டாலும் அந்தந்த தொகுதியில் சாதி வாக்குகளின் அடிப்படையிலேயே வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

சாதி அரசியல் பெருகிவிட்ட அரசியல் களத்தில் தமிழக முஸ்லிம்களின் மாபெரும் மக்கள் இயக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகம் கழகத்தின் அரசியல் பிரிவான ம.ம.க அனைவருக்கும் வாசலை திறந்து வைத்துள்ளோம் என்று அறிவித்திருப்பதன் மூலம் தனது தேர்தல் நிலைபாட்டில் எதையோ விட்டுக் கொடுப்பது போல் சமுதாய ஆர்வளர்கள் கருதுகிறார்கள்.

தொகுதி பங்கீட்டில் திமுக சரியாகாவிட்டால் நரேந்திர மோடியை அழைத்து விருந்து வைக்கும் அதிமுகவுடன் கூட்டணி என்ற நிலைபாடு சமதாயத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதவில்லை.

ம.ம.க வைப் பொருத்தவரை எத்தனை தொகுதிகள் கிடைத்தது என்பதை விட எத்தனை வாக்குகளைப் பெற்றோம் என்பது தான் இப்போது அரசியல் களத்தில் நாம் காட்ட விருக்கும் பலம்.

1991ம் ஆண்டு பா.ம.க துவங்கியபோது தனித்தே போட்டியிட்டார்கள் அப்போது அந்தக் கட்சியை அரசியல் களத்தில் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அந்தத் தேர்தலில் பன்ருட்டி ராமச்சந்தரன் மட்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை யானையில் ஊர்வலமாக சட்டமன்ற அழைத்து வந்தபோது கூட இவர்கள் எதிர்கால அரசியலில் ஒரு புதிய சரித்திரம் எழுதப்போகிறார்கள் என்று யாரும் நினைக்கவில்லை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் மட்டும் இருக்கும் இவர்களின் நிலை இன்று தேசிய கட்சியே தனது கூட்டணியுடன் அவர்களும் கண்டிப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்று திமுகவுக்கு கட்டளையிடுமளக்கு வளர்ந்துள்ளார்கள் வளத்துக் கொண்டார்கள்.

ஆனால் முஸ்லிம் சமுதாயத்தைப் பொருத்தவரை அப்படி இல்லை நாட்டின் அரசியல் நிலைமையை தீர்மானிப்பவர்களாக நாம் இருக்கின்றோம். டந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி தாம்பரத்தில் நடைபெற்ற ம.ம.க துவக்கவிழா மாநாட்டில் தமிழக முஸ்லிம்கள் லட்சக்கணக்கில் கலந்து கொண்டு இந்த சமுதாயகத்தின் அரசியல் களத்தை நிறைவு செய்யும் மிகப் பெரும் பொருப்பை ம.ம.க விடம் ஒப்படைத்துச் சென்றுள்ளார்கள்.

சமுதாய நலன் கருதி நல்ல முடிவுகள் எடுக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை அதே நேரம் சமுதாயத்தின் தன்மானம் காக்கப்பட வேண்டும் ஒரு சீட் கலாச்சாரம் பிப்ரவரி 7 அன்றே முடிவுரை எழுதப்பட்டுவிட்டது.

ம.ம.க இந்த தேர்தலுக்கு குழந்தையாக இருக்கலாம் ஆனால் அது மிகப் பெரும் சமுதாயத்தின் குழந்தை இந்த மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு தனது சமுதாயத்தின் பலத்தை அரசியல் களத்தில் காட்ட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தோல்வி‍யையே சந்தித்தாலும் அது சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றிதான் காரணம் ஒட்டு மொத்த முஸ்லிம் ஓட்டுக்கள் பிரியும் போது அரசியல் களத்தில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பார்வையாளர்கள் மட்டுல்ல அரசியல் வாதிகளும் தெரிந்து கொள்வார்கள். அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இது உதவியாக இருக்கும்.

மற்ற அரசியல் கட்சிகளைப் போல் நமக்கு வாக்கு சேகரிக்க ‍ மேடைகள் தேவையில்லை வெள்ளிக்கிழமை ஜூம்மா பிரசங்கமே போதும் அயல்நாட்டில் பணியாற்றும் நம் சகோரர்கள் தனது குடும்பங்களை ம.ம.கவுக்கு ஓட்டுபோடச் சொல்லி இப்போதை பிரச்சாரத்தை துவங்கி விட்டார்கள் 1கோடி வாக்காளர்களைக் கொண்ட மிகப் பெரும் சமுதாயம் ஒட்டு மொத்தமாக வாக்களிக்க தயாராக இருக்கும் போது தனித்து போட்டியிட மனித நேய மக்கள் கட்சி தயங்குவது ஏன்?

No comments: