.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, March 26, 2009

தாடியுடன் பள்ளிக்குச் சென்ற முஸ்லிம் மாணவன் பள்ளியிலிருந்து நீக்கம்!

தாடியுடன் பள்ளிக்குச் சென்ற முஸ்லிம் மாணவன் பள்ளியிலிருந்து நீக்கம்
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி, மார்ச் 26: தாடி வளர்த்ததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவன் வழக்கு தொடர்ந்துள்ளான்.

மத்திய பிரதேசத்தில் உள்ள நிர்மலா கான்வென்ட் மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவன் முகமது சலீம். தனது மத வழக்கப்படி தாடியுடன் பள்ளிக்கு சென்றான். ஆனால், அந்த பள்ளி விதிமுறைப்படி மாணவர்கள் தாடி வளர்க்கக் கூடாது. அதை மீறி சலீம் தாடியுடன் சென்றதால் பள்ளியை விட்டு நிர்வாகம் அவனை நீக்கியது.

அதை எதிர்த்து சலீம் தொடர்ந்த வழக்கை விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், பள்ளியின் விதிமுறைகளுக்கு கட்டுப்படும்படி கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சலீம் செய்துள்ள மேல்முறையீடு மனு வருமாறு;

தாடி வளர்ப்பது முஸ்லிம் மத நம்பிக்கை. நான் தாடி வளர்க்கக் கூடாது என்று கூறுவது எனது மத உரிமையை, அடிப்படை உரிமையை பறிப்பதாகும். பள்ளியின் விதிமுறைகள் அறிவுப்பூர்வமாகவும், ஏற்க கூடியதாகவும் இருக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு அவரவர் மத வழக்கத்தை கடைப்பிடிக்க உரிமை வழங்குகிறது. எனவே, பள்ளியின் விதிமுறையை செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் சலீம் கூறியுள்ளான்.

இதை விசாரித் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச், சலீம் படிக்கும் பள்ளி அரசு உதவி பெறுகிறதா? என்பதை அறிந்து வரும்படி கூறி விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

No comments: